வேதாவின் மொழிகள். 13.

  

 

முனைப்பு, முயற்சி, ஊக்கம் எனும் மகாசக்திகளுக்கு முன் இலவசம், இரப்பு எனும் வார்த்தைகள் அர்த்தமற்றதாகிறது. கேலிக்குரியதாகிறது. கஷ்டப் படுங்கள் பலன் பெறுங்கள்.

யோதிபர்கள் பேருந்தில் நிற்கிறார்களே என்று கருணை காட்டி இங்கே அமருங்கள் என்று இருக்கையைக்  கொடுத்தால், நன்றியைக் கூறி, கொடுக்கும் இருக்கையை தன்னம்பிக்கையுடன் நிராகரிக்கிறார்களே, அந்த தன்னம்பிக்கை மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் வேண்டும்.

18-8-2004.
ண்ணம்:- 3 கருத்துகள் அடைப்புக் குறியுள்
ழு வண்ணம் (நிறம்) நிறை வானவில் வனப்பு.
எண்ணற்ற வண்ணம்(சிறப்பு) கொள் மனிதம் சிறப்பு.
கவிதையில் வண்ணம் (சந்தப் பாட்டு – பாவின் ஓசை) பெரும் சிறப்பு.
புதிய தலைமுறையினருக்கு மனித வண்ணம் (சாதி) வெறுப்பு.

அந்தி.   2-8-2004.
ந்தியில் சந்தி மதகில் குந்தி வம்பு
சிந்துதல் வாலிப இன்பம்.

ந்தி சந்தியில் செந்தில் குமரனை,
தொந்தி அப்பனை வந்தித்தல் அமைதி.

1-9-2004.
டு, ஓடு, இன்பத்தை நாடு. தமிழோடும் கூடு. இதை நாடுவதால் பீடு இல்லை. இதைச் சூடுவதால் பெறும் பெருமைக்கு உலகில் ஈடு இல்லை.
பகலும் இரவும் உங்கள் குழந்தையுடன் தமிழோடு ஈடுபடுங்கள். என்றுமே நீங்கள் வருத்தப் பட மாட்டீர்கள்.

20-1-2004.
மிஞ்சிய பணத்தால் பலரிங்கு பிறரை
வஞ்சித்து வாழ்வதும் ஒரு வாழ்வா?
கஞ்சி குடித்தாலும் வஞ்சியோடிணைந்து
நீதிக்கு அஞ்சி வாழ்வது சிறப்பு.

ட்டுக்கதையின்றி சிறுகதையாய், பெருங்கதையாய், உன் கதை, சுவாரசியக் கதையாக அமைய நல்ல விதை போடு! நல்ல வினை செய்து சுய வாழ்வை நல்ல கதையாக்கலாம்.

18-1-2004.
ரை கடந்த ஆசையால் மனிதம் கரைந்து போகும் நிலை உருவாகிடாது. ஆசைக்குக் கரை கட்டுதல் உலகக் கடலில் கரையேறும் வழியாகும்.

ருக்கு மட்டையால் கருப்பட்டி வெட்டலாம். கருங்காலியை, கருங்கல்லை வெட்டலாம் என்று கருவம் கொள்ளலாமோ? அறிவான மூளை வாள் போன்றது. ஆனால் கருவியும், கருத்தும், கரத்தோடு கலந்துறவாடினால் கருமம் வெற்றி பெறும் என்பார்கள்.

திரிகோண நண்பர்களின் திரிசமம் திரிபுபட்டது. சந்தேக நீர் பட்டு நட்பு திரிகையிலிட்டதாய் ஆகியது. புரிந்துணர்வு நெய்யிலிடும் நட்புத் திரியே என்றும் சுடர் விடும்.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

up loaded-  8-7-2011.

  

 

                          

 

 

 

 

 

வேதாவின் மொழிகள்.. 12

 

வேதாவின் மொழிகள். 12

ட்டுப்பாட்டில் வளர்ந்தவன் பிறர் கருத்தைக் கனம் பண்ணுவான்.

ண்பாடு கலாச்சாரம் போல சாதியமும் மனிதனில் ஊறியுள்ளது. எத்தனை பாடுபட்டாலும் சல்லி வேரைத்தான் அறுக்க முடியும், ஆணிவேரை யல்ல. தீ, குளிர், உயர்வு, தாழ்வு என்று கோசமிடுவதை விட அறிவைப் பெருக்கு! மனித நேயம் வளர்! மனிதனாக வாழு! உலகம் மதிக்கும்.

ங்கள் கருத்து விரும்பும் வலைத்தளக்காரர் தங்கள் கருத்தையும் எங்களுக்குத் தரலாமல்லவா? இது தானே ஒருவருக்கு ஒருவர் செய்யும் உதவி. இரு கரங்களும் தட்டினால் தானே சத்தம் ஒன்று பிறக்கும்! ஒரு கரத்தினால் விளைவது சுய பயிற்சி மட்டும் தானே!

13-8-2007.
லட்சியப் பொறி புகழ்ச்சியால் மட்டுமல்ல
இகழ்ச்சியாலும் கூட ஊதி எரியப்படும்.

னக்கு நீ நல்லவனாகு. அது தான்
உலகுக்கு நீ நல்லவனாகக் காட்டும் வழி.
ஆகவே இதற்கு மனதில் முதலில்
ஐயப்பாட்டை முற்றாக நீக்குங்கள்.
ஐயமற்ற சுதந்திரமே செயற்பாடு தரும்.

வாழ்த்தவில்லையானால்  உலகு வாயாரத்திட்டும்.
வாழ்த்தி விட்டாலோ வார்த்தையின் நீள அகலம் அளக்கும்.

ணவ மனப்பாங்கிலல்ல, அறிவு
பூணவா கொண்டு காலமுழுமையும்
மாணவ மனப்பாங்கில் கற்கலாம்(உயரலாம்)

2005ல்
சிபாரிசு, பந்தம் பிடித்தல், சாமரம் வீசுதல், ஒத்தடம் கொடுத்தல் என்பவை மூலம் பல இடங்களில் தரம் பிரிக்கப் படுகிறது. திறமையாளர் மௌனமாக இருந்தாலும் தரம் என்று பின் தள்ளப் படுகிறார்கள்.

9-8-2005.
ருவருப்பான அலட்சியம் விலக்க
பெருவிருப்பான கூட்டுறவு செழிக்க
கூறுபடாது மனிதம் வாழ்ந்திட
ஊறுபடாத சிந்தனை ஊற்றாய்
வேறுபாடின்றி விதைத்த வார்த்தை
‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’
இதை மதிக்காதவர்கள் அதைக்
குறுக்காகக் கிழித்து வீசலாம்,
கிறுக்குடன் தீயும் வைக்கலாம்.

பூமாலை, புகழ்மாலை காமாலைக் கண்ணாக்கினால்
பாமாலை படித்தென்ன! பரமனைத் துதித்தென்ன!

12-1-2005.
ண்ணோக்கி வளையாத முதுகு வேண்டும்.
திண்மையாய்ப் பீடு நடை நடக்க வேண்டும்.
எண்ணங்கள் மேல் நோக்கி உயர வேண்டும்.
வண்ணங்கள் மனம் கவர அமையவேண்டும்.
கண்கள் குளிர மனம் களிப்புற வேண்டும்.

ரிகள் ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.

uploaded on  15-5-2011.

 

                           

 

 

வேதாவின் மொழிகள். 11

  

 

கேணி  16-3-2005.
குழந்தையாக கேணியில் (தொட்டிலில்) ஆடி மகிழ்ந்து, ஆழமான கேணியில் (கிணற்றில்) நீர் எடுத்து அருந்தி , கோயிற் கேணியில் (குளம்) கால்கள் கழுவி இறைவனை வணங்கியும், வாழ்வுக் கேணியில் (அகழி) நாற்றமெடுக்கும் சகதியில் அகப்பட்டு நிற்கிறோம்.

மூப்பு.  21-3-2005.
மூப்பில் (முதுமையில்) இளமை வாழ்வு அனுபவக் கோப்பு மகிழ்வுடைத்து. மூப்பாக (பிடிவாதமாக) ஆற்றிய சாதனைகளும், மூப்புடன் (தலைமையுடன்)ஆக்கிய சாதனைகளும் பெருமை தரும்.

மரபு.  16-2-2006.
மரபு காலாதி காலமாக பின் பற்றுவதானாலும், மூட வழக்கங்களைக் காலத்திற் கேற்ப மாற்றலாம்.

பட்டு.  28-4 2004.
பட்டுப் போன மரம் படகாகிறது.
பட்டுப் போன மனிதன் பிணமாகிறான்.

பட்டும் பட்டும் மனிதர் வார்த்தைகளை
பட்டுப் பட்டென வீசி நல்ல இதயங்களைப்
பட்டுவிடச் செய்வது தொடர் கதை.

ஆட்டம். 5-5-2004.
புலம் பெயர் கலாச்சாரமும்,
எமது கலாச்சாரமும் இடிபட்டு
நல்ல பண்புகளைக் கூட
கடித்து ஆட்டம் காண வைக்கிறது.

திரு.  3-5 2004.
ஏதும் செய்வதறியாது யாருமே
திரு திருவென முழிக்கத்
தேவையில்லை. திருவள்ளுவர்
திருக்குறள் படித்தும் மக்கள் தம்
வாழ்வைத் திருத்த முடியும்.

ஈர்   17-5-2004.
ஈரடிக் குறளின் பயிற்சி மூளைக்கு.
ஈர்க்குமாறால் வரும் பயிற்சி உடலுக்கு.

வாசிப்பு.   6-3-2004.
வாசிப்பு வாசம் மிக சுகந்தமானது. அது என்னை ஆனந்த வாசியாக்குகிறது. எவ்வளவு வாசியான நிலைமை அது!.

வாசனை.
பூவோடு சேர்ந்த நாரும் வாசம் பெறுவது போல, நல்ல பழக்க வாசனையே மனிதருக்கு எப்போதும் தேவை. மீன் கடையருகிலிருந்த பூக்கடை போன்று கெட்ட வாசனையால் மனிதன் கேடு அடைகிறான்.

 

 வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                       

வேதாவின் மொழிகள். 10

வேதாவின் மொழிகள். 10

கண்களின் தரிசனமும், காதுகளின் ஒலியும் கருத்துடன் மனதில் பதியும். இனிய நல்ல காட்சிகளைப் பார்க்கவும், இதமான மனது மயக்கும் இனிய ஓசையை காது கேட்கவுமே மனித மனம் விரும்புகிறது. மாறாக இனிமையற்ற இசை, இதமற்ற வார்த்தைகள் அதிகார வார்க்க அரசாங்கத்தின் குண்டுகள் போல நம்முள் விழுகிறது. தம்மை விடச் சிறந்தவரில்லை என்று வீசும்  இவ்வகைக் குண்டுகள் மனித நேயத்தை நசுக்கும்  குண்டுகள் என்று மனிதன் உணரத் தவறுகிறான். மாறாக இக் குண்டு உலகைத் திருத்தும் என்று எண்ணுகிறானே!…..அந்த மனிதன் பாவம்!….

நல்ல செயல்களைச் செய்யும் போது வஞ்சகம், சூழ்ச்சி, தவறுகள், கெட்ட எண்ணங்கள், செயல்கள் என்ற நினைவுக் குமிழிகள் வராது நிச்சயமாகப் தவிர்க்க வேண்டும். செய்யும் குற்றங்களுக்குச் சமாதானம் கூறிச் சமாளிப்பது தவிர்க்கப் பட வேண்டும்.

உன்னைச் சந்தோசமாக வைத்துக் கொள்! உன்னைச் சுற்றியுள்ளவர்களைச் சந்தோசமாக வைத்துக் கொள்! அல்லது துன்பப் படுத்தாமலாவது இரு!

வாலிபத்து மிடுக்கை வயோதிபத்தில் அணைத்திட வசப்படுத்துவது உடற்பயிற்சி. நீரும் பழமும் மேலதிகமான செல்வம்.
 

திறமை என்பது திட்டத்துடன் பயணிப்பது, பயனடைவது. இதில் திருத்தமின்றேல் அது வெறும் அறுந்த பட்டம்.

அன்பைத் தரமனமில்லாத போது தான் ஆயிரம் காரணங்கள், கதைகள் வெளிவரும்.

தவறுகளைப் பூசி மெழுகுதல் ஒரு வகை.
தவறுகளைத் தவறென்று எடுத்துக் கூறித் தெளிவாக்குதல் இன்னொரு வகை.
தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஒரு வகை.
கண்டும் காணாமல் இருப்பது இன்னொரு வகை.
தவறைத் தவறென்று எத்தனை பேர் ஏற்றுக் கொள்ளத் திடமாக உள்ளனர்!

4-7-2004
உறவு அலை ஓயாத புரள்வு –அதில்
சிறகொடிந்த சரிவு பிரிவு.

’30-7-2004.
துன்பம் ஒரு புற்றுநோய்.
இன்பத்தை விழுங்கும் முதலைவாய்.
ஐம்புலனின் சக்தியை ஆட்டம் காண வைக்கும்
துன்பத்தில் இன்பம் காணுவர் சிலர்.
துன்பத்தை வெறுப்பார் சிலர்.
துன்பம் தரும் வாழ்வியல் பாடம் பல.
துன்பத்தின் பின் வரும் இன்பம் இனிமை.

நிசம் பேசுதல் சத்திய சோதனை.
நிசமாக வாழ்தல்  நெஞ்சுக்கு நிம்மதி.
நிசம் சிலருக்கு வேம்பாகக் கசக்கும்.

1. துன்பமென்று ஏதுமில்லை. நாம் எந்த விடயத்தை எப்படி எடுப்போம் என்பதிலேயே உள்ளது.
2. நிசம் என்பது சிலருக்கு நிசமாக இருக்கும். அதுவே சிலருக்கு நிழலாக இருக்கும்
—மகள் லாவண்யா—

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-3-2011.

 

                             

 

வேதாவின் மொழிகள். 9

 

 

27-8-2005.
நல்ல போதனைகள் ஆசிரியராகும். நம்பிக்கை மனதின் வைரமாகும்.
மூன்றாமவரில் பிழை சுமத்தும் தன்மை தோன்றா நிலையே தர்மம் நிலையூன்றிய நிலையாகும்.

19-8-2005.
மனதில் நீதி, நியாயம் துளிர்க்கும் போது, தொல்லைகள் மனிதனைத் தெளிவாக்கும். மனதில் அதர்மம் தளிர்த்துச் செழிக்கும் போது, தொல்லைகள் அவனை நொறுக்கி விடும்.

தூரத்தில் மின்னும் நட்சத்திரங்களுடன் வானம் அழகிய நீலமாகத் தெரிகிறது. மனிதரும் தூரத்திலிருக்கும் போது நட்சத்திரக் கூட்டத்தில் பிரமாதமாகத் தெரிவது போல இருப்பார்கள். வாழ்வில் மிக முக்கியமான அனுபவம், அவர்களை அருகில் சென்று பார்ப்பது. தூரத்திலிருந்து  தெரிய முடியாத அவர்களது சாரம், ஈரம், பாரங்களை அருகினில் காண முடியும். அது ஏமாற்றமாகவும் இருக்கலாம், பிரமாதமாகவும் இருக்கலாம். அவர்கள் மறுபகுதியைக் காணலாம்.

11-9-2005.
எதிர்காலம் தெரியாது வாழ்வைப் புதிராக எடுத்துக் கொள்கிறோம். கனவுக் கதிர், கற்பனைக் கதிரில் நிமிர்ந்து நிற்கிறோம். கலக்கங்களில் அதிர்ந்தும், பலவீன மனதைத் துணிந்து எதிர்த்தும், அனுபவங்களில் முதிர்ந்து, தெளிந்தும், தன்னம்பிக்கை ஒளியில் காலங்களை எதிர் கொள்கிறோம். அத்தனையும் அனுபவம் எனும் பதத்துடன் அடக்கமாகிறது.

அவசர அவிப்புப் படையல் சுவைப் பதம் இழக்கலாம். அவகாச தரப் படையல் அவைமுகம் காணலாம்.

கதமாகப் புலம்பும் வார்த்தையின் பலன், இதமாக மொழியும் வார்த்தையின்  கூர்மையை விடக் குறைவானதே.

கல்லு, பொல்லு, கத்தி, துவக்கினால் மட்டும் தான் வன்முறையல்ல. காரமான ஒரு சொல்லும் ஆயுதமே. முன்னது உடலையும், பின்னது உள்ளத்தையும் காயம் செய்யுமன்றோ!

18-8-2004.
அன்னம் விடு தூது, புறா விடு தூது, கடிதம் விடு தூது, இன்று கணனி விடு தூதாச்சு. எத்தனையோ திருமண இணைப்பு இயந்திரமாகக்  கணனி.

பிறர் பேச்சையும், செயலையும் கூட விழி விரித்துக் கவனித்திட வேண்டிய உலகமாச்சு இவ்வுலகம். அத்தனை அசுத்தங்கள் மலிந்து விட்டது மனிதன் மனதில்.

புலம் பெயர்ந்த நாட்டு மொழி தெரியாது விழிப்பது வடிகட்டிய முட்டாள் தனம். விழி விரிய மகிழ்வதற்கு, வாரிசுகளின் அறிவு விழியைத் திறப்பதற்கும், மொழி அறிவு மிக அத்தியாவசியமான ஒன்றாகிறது.

27-9-2004.
குத்தல்.
இதமின்றிப் பொருட்களால் மொத்தல்,
பதமின்றி கதைகளால் சுத்தல்,
நிதமும் வார்த்தைகளால் கொத்தல்
மதம் (கொள்கை) இல்லாத வதம்
இந்த வாழ்வு தவறு.

நெல்லுக் குத்தல் நல்ல தேகப் பயிற்சி.
பல்லுக் குத்தல் பல்லிற்கு அப்பியாசம்.
கைக்குத்தல் அரிசி தேகத்திற்கு ஆரோக்கியம்.
தசைகளில் மெல்லிய ஊசிக் குத்தலும் நல் வைத்தியம்
29-9-2004.
நாடி.
அன்பு மனதின் அணைப்பு விலகும் போது
நாடி விழுவது (மனோ தைரியம் விழுவது)
போன்ற உணர்வு வரும்.
13-10-2004
விண்.
எண்ணத்தின் விண்ணப்பம் அதன் முயற்சி.
திண்ணமான பயிற்சி முழு வெற்றியானால்
மண்ணில் அனைவரும்  விண்மீன்களென
சாதனையில் தண்ணொளி வீசிடலாம்.
7-12-2004.
கண்ணி.
கண்ணியம் பார்வையில், செயலில் இன்றி
கண்ணி போடுவோர் வாழ்வில் பலர்.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-2-2011.

                                                           

 
 

வேதாவின் மொழிகள். 8

 

வேதாவின் மொழிகள். 

நற்குணம், நற்செயல்களால் நல்ல புள்ளிகள் அதிகரிக்க, அதிகரிக்க உலக வாழ்வு எனும் தேர்தலில் வாக்குப் புள்ளிகள் அதிகரித்து வெற்றிக் கொடி ஏந்தலாம். அக அறிவின் உந்துதலும் இங்கு கூட்டு முயற்சி ஆகிறது.

ஒரு விடயத்தை நாம் பெரிதாக எடுப்பதும் அதைச் சிறிதாக எடுப்பதும் எமது மனதைப் பொறுத்தே உள்ளது. நிம்மதியில்லை நிம்மதியில்லை என்கிறோம். நிம்மதி எங்கும் போவதில்லை. அது எப்போதும் உரிய இடத்தில் தான் உள்ளது. எமது மனம் தான் அதை உருட்டுவதும், நிமிர்த்துவதுமாக உள்ளது.

மூன்று பிரபல குரங்குப் பொம்மைகளாக தீயதைப் பார்க்காதே! தீயதைப் பேசாதே! தீயதைக் கேட்காதே! என்று உள்ளதை நாமறிவோம். தீயதைப் பேசினால் என்ன வெந்தா போவோம் என்று கூறும் இடக்கு முடக்கு வாதிகளும் உள்ளனர். தீயதைப் பார்த்தாலும் கேட்டாலும் மனத்திடவாதிகளாக நாம் இருக்க வேண்டும்.

இயற்கையாக இயங்கும் இவ்வுலக வாழ்க்கை முறை, சட்ட திட்டங்களை அனுசரித்து நடக்க முடியாமை, இவைகளை ஏற்றுக் கொள்ள முடியாமையின் காரணம் மனித மனப் பலவீனம் தான். நிதானம், திடமற்ற மனமே உணர்வு மோதல்களில் சிக்குண்டு தவிக்கிறது. தவறைத் தவறென்று ஏற்கும் மனதிடம் இல்லாதவரை நம்புதல் உலகில் சாத்தியமாகுமா என்பது சிந்தனைக்குரியது.

பொது வாழ்வில் ஈடுபடுவோர் மனதில் மகிழ்வும் அமைதியும் தேவை. அவற்றை இழந்தவர்கள் பொது வாழ்வில் ஈடுபடும் போது பிறருக்கு அமைதியை, மகிழ்வைக் கொடுக்க முடிந்தால் ஈடுபடலாம். பிறர் வாழ்வைக் குழப்பி, அமைதியிழக்க வைப்பது பொது வாழ்க்கையல்ல.

கண்கள் எதைப் பார்க்கின்றனவோ அவை மனதில் பதிகின்றன. மனதினதும், கண்களினதும் தொடர்பு மிகப் பலமானது, தாக்கமானது. அதனால் தான் முன்னோர், பெரியவர்கள், அறிஞர்கள் ‘ நல்லதைப் பேசு! நல்லதைச் செய்! நல்லதைப் பார்!’ இவைகளால்  நல்லதைச் செய்து உயர்வாய் என்றனர் போலும்.

விழிப்புணர் வென்பது நீ என்ன செய்தாய், அவன் என்ன செய்தான், அடுத்த வீட்டுக்காரன் – எதிர்வீட்டுக்காரன் என்ன செய்தான் என்று உன் புலனைச் செலுத்தி, உரப்புதலில் உன் சக்தியை விரயமாக்குதலில் அல்ல. உன் பாதையில் கவனம் செலுத்தி மக்களின் சிந்தனையை  விழிக்க வைத்தலே விழிப்புணர்வாகும்.

கடன் கொடுப்பதும், கடன் வாங்கி ஒருவருக்குக் கடன் படுவதிலும் பார்க்க, திடமுடன் உழைத்துத் திருப்திகரமாக வாழ்வது மிக தித்திப்பானது. இதுவும் ஒரு வகை சுயகட்டுப்பாடு. இந்த வாழ்க்கை மிக சிரமமானது.

சிந்தனை தாறுமாறானால் பேசும் செயலும் தாறுமாறாகும் என்பது தானே வழமை. சிந்தனை ஏன் தாறுமாறாகிறது. மனிதன் பெறும் தாறுமாறான அனுபவங்கள் என்று தானே கொள்ள வேண்டும். ஆக நல்லதும் கெட்டதும் நம்மைச் சேர்ந்ததே. நாமே ஆக்குவதும் தேடுவதுமாகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற சொல் வழக்கும் உலகில் உள்ளதே!

வானம் போன்ற மனதால் வளம் பொங்கும் எண்ணங்களை எண்ணலாம். இதயம் சிரிக்க மேம்பாடான எண்ணங்களை எண்ணலாம். இவை புனிதமான நல்ல வாழ்வைப்பாட நல்ல இசையாகும். மரம்கொத்தி போல மனம் கொத்தினால் வாழ்வும் கொத்தப்படும்.

நல்லது எண்ணி, நல்லது பேசி நல்லது செய்யும் மனிதர்கள், தீயது எண்ணி தீயது பேசி தீயது செய்யும் மக்களோடு இணங்கமாட்டார்கள், ஒதுங்கிப் போவார்கள்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-2-2011

In Anthimaalai.com ;-        http://anthimaalai.blogspot.com/2011/06/blog-post_7607.html#comments

 

                                            

 

 

வேதாவின் மொழிகள். 7

  

 

 15-2-2004.

காயம்பட்ட மனதில் சாயம் போகும் அமைதி.

கதம்(சினம்) நம் அறிவை வதம் செய்கிறது. போதம்(ஞானம்) குறைவு படும் போது கதம் மத்தகத்தில்(தலை உச்சியல்) ஏறி நம்மைப் பதம் பார்க்க இடம் கொடுக்கிறோம். கதத்தால் நம் மதமும்(கொள்கையும்) அழிகிறது.

தமிழ் உரை (சொல், எழுத்தொலி, சொற் பொருளும் விளக்கமும்) தமிழ் உரை நடை (வாசகநடை) ஆகியன அன்னிய மொழியெனும் உரை கல்லில் உரசப்பட்டு, சிறுகச் சிறுக உரைவு படுதலை நாம் தடுத்தல் வேண்டும். எம் தமிழ் வாழவேண்டும்.

வாழ்க்கை மைதானத்தில், இல்லற பந்தயத்தில், இணக்கமின்மை, கயமை, பொய்மை, பொறாமை, மடமை எனும் மைகள் மையம் கொண்டால், பனிக்கால மையிருட்டான மையல் பொழுதாக, வாழ்வு மாட்சிமையிழந்து சிறுமையடையும்.  உண்மை, நேர்மை, பொறுமை கொண்ட வாழ்வு திண்மையாய் முழுமையடையும். சிறப்பில் முதன்மை அடையும்.  இது வாழ்வியலிலும் பொதுவான வழமையாகும்.

சிந்தனை.
ஆழ்மனதின் நீள்பயணம் சிந்தனை.
வீழ்ந்திடாது கட்டும்    முன்திட்டம் சிந்தனை.
உயர்வழிச் சிந்தனை உயர் ஏணி.
துயர்வழி நடத்தும் துர்ச்சிந்தனைப் பாணி.

சிறை.
எழுத்துச்சட்டம் அமைக்கும் கம்பிச் சிறை.
எழுகின்ற எண்ணம் அமைக்கும் மனச்சிறை.
அன்பால்அமையும் பூவிலங்குச் சிறை.
எல்லாமே ஒரு வகைச் சிறை தான்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

இடுகை. 12-1-2011.

 

                                   

 
 

வேதாவின் மொழிகள். 6

 

 

 

வேதாவின் மொழிகள்.6

29-5.2004.

1- வன்சொல்லின் வேகம் செவிப்பறையில் மோதி, முகத்தில் அறைவது போன்று உணர்வு தந்தாலும், பொறுமை யெனும் கற்பாறை அவ்வுணர்வை யடக்கி, அறிவுக் கண்ணைத் திறக்க வைக்கும்.

2- அடியடியாக வந்த பண்பாட்டை அடியொற்றி வாழ்வில் அடிச்சுவடு பதிப்பவரும், புதிய பாணியில் அடிவைத்துக் குடிபுக நினைப்பவரும் தேடுவது, எல்லோரும் தொட எண்ணும் நிம்மதி அடிவானம் தான்.

3- மங்கலச் சொற்களைப் பாவியுங்கள்! மங்கலச் செயல்களைப் பாவுங்கள்! பாவிகள் யாருமே உலகில் இல்லை. பாவி எனும் பதப் பாவிப்பை…..
     பா – பாட்டு.
     வி – அழகு    என்று பாவியுங்கள்.

4- குதிக்கும் உள்ளத்தின் ஆர்வம் குதிருக்குள் அடங்க வேண்டாம். குதிரை வேகமாகச் செயற் பட, மதிக்கின்ற ஊக்கமும், ஆதரவும் கொடுங்கள். அது மிதிக்கட்டையாகச் செயற்பட வைக்கும்.

5- கள்ளம் கபடற்ற சிறு மனதில் கள்ளத்தனம் புகுந்திட இடமின்றி உள்ளம் நிறை  அன்பு கொடுங்கள், ஆதரவு கொடுங்கள். அன்புக் கள்ளுண்ட வண்டாக குழந்தைகளை ஆக்குங்கள்.

6- ‘ குறை காணும் மனம் நிறைவு பெறாது.’ எண்ணங்களைப் பல வகையில் சிறை செய்து உறைய விடாதீர்கள். நல்ல துறையில் மனம் புகுத்தி இறை சிந்தனையையும் புகுத்துங்கள். அன்பு நறை வழிந்து நிறைந்து ஓடும்.

7- ‘ வில்லினிலிருந்து பறப்பட்ட நாணாக எழு!’ சுறுசுறுப்பு மிகு செயலிலும் சிந்தனையிலும், நரம்பில் குருதி ஓட்ட நகர்வு சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியமடையும். மெல்லென நகரும் செயல்கள், சிந்தனைகள் அனைத்திலும் ஒரு மந்த நிலையை உருவாக்கும்.

8- குறியற்ற நெறியற்ற வாழ்வு, தறிகெட்டுத் தரமிழந்து போகும்.

9- இல்லறச் சுழியில் மாட்டியசில பேதைகள் இற்றுவிட்ட மூளைச் சலவையால் வாடுகிறார்கள்.

10- மது போதையில் ஆடவன் மட்டுமல்ல, மாதுகளும் வீழ்ந்தால் , தாம் பெற்ற செல்வங்களை எப்படிக் கட்டுப்   படுத்துவதாம்!

11- ஒழுக்கத்தில் பத்திரமாக வாழாதவன் வாழ்வு
அழுக்காம் துன்பப் பள்ளத்தில் தாழ்வு.

அத்தி:-
அத்திவாரத் தமிழ் அழகாக ஊன்றினால் செந்தமிழ் மொழியெனும் அடுக்கு மாடிக் கட்டடம், உச்சி மாடிக் கட்டிடமாகவும் உன்னத நிலையடையவும் வாய்ப்பு உண்டு.

தேன் தமிழ் சீறியெழுந்து அத்திர வியூகம் (அம்பு வியூகம்) வகுத்தால் அது சுகந்த அத்திரமாகி (அம்பு) சுகமும் தரும். சுட்டெரித்துப்   பாயும் சக்தியும் பெறும். ஆயினும் நல்ல விளைச்சலுக்குப் பாயும் அத்திரம் பண்புடைத்து, பயன் பெரிது.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                          

 

 

வேதாவின் மொழிகள். 5

 

வேதாவின் மொழிகள்.5

 4-12-2005.
களைப்பாக இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் சோம்பலாக இருக்கிறீர்கள். வேலை செய்யும் உடலும் மனமும் எப்பொதும் உற்சாகத்துடனேயே இருக்கும்.

நாளை விடிவதும் எனக்காக. இன்றும் இதுவரையும் எனக்காக. இதை மறந்து தூங்குவது எதற்காகவோ! தூக்கத்தை விரட்டினால் சோம்பல் பறந்து விடும்.

உணர்ச்சி வெடிகுண்டாக இருப்பதிலும் உணர்ந்து வரைமுறைகளை மதித்தல், உணர்வுடன் அதைப் பின்பற்றுதலால் உடலும் மனமும் ஆரோக்கியமடையும்.

நம்பிக்கையுடையவன் பாதவடி உறுதியானது. அதி தீவிர நம்பிக்கை அறிவுடன் சேர்ந்தால் அசுர சாதனைக்கு வழி வகுக்கும். அறிவீனத்துடன் நம்பிக்கை சேர்ந்தால் நரக வேதனைக்கு வழி வகுக்கும்.

மூன்றாமவரில் பிழை சுமத்தும் தன்மை, முதுகு நாண் வளைந்த நிலைமை. அது முன்னேற்ற வழிக்கொரு கருமை.

ஒரு துளி நஞ்சும் பெரும் தீவினை தருதல் போல ஒரு கடும் வார்த்தைத் துளியும் முழு நாளையும் நஞ்சாக்கும்.

நம்பிக்கை பிறர் மீது உடைந்தாலும் தும்பிக்கையென நம் கையை நினைப்பது தெம்பினைத்தரும்.
மனச்சாட்சியை அடகுவைத்துச் சாயம் வெளுக்கும் மனிதர்கள், போராட்டத்தில் சீராடிக் குளிப்பதை வெறுப்பதில்லை.

பிழை விடும் போது அதை ஏற்றுக் கொள்ளாது சரித்திரக் கதைகளை உதவிக்குக்  கூறி சமாதானம் தேடுவது பிழையைச்,  சரியென நிருபிக்கும் ஒரு வழி தான்.
நீதியைப் பேசுபவரிடம் நீதி கேட்கலாம். பாதியை விழுங்குபனிடம் அதைப் பேசாமலேயே விடலாம்.

கேள்வி.

4-9-2005.
கேள்வியில் பிறப்பது நியாயங்கள்.
கேள்வியால் தொடர்கிறது ஆய்வுகள்.
கேள்வி எழாவிடில் நிலவும் மந்தநிலை.
கேள்வி கேட்கும் உரிமை யாவருக்கும் உண்டு.
கேள்வி கேட்பது அதிகார வர்க்கத்திற்குக் கசப்பு.
கேள்விப் புலனற்றவர் மொழி சைகை.
கேள்விப் புலனின் தீவிரம்
கண்பார்வை யற்றோருக்கென்று கேள்விப் பட்டதுண்டு.

வேண்டுகோள்.
2-10-2004.

வேண்டுகோள் என்பது விருப்பமாய் விடுவது.
வேண்டாத மனதையும் இளக வைப்பது.
பக்தனின் வேண்டுகோள் பக்தியானது.
பகைவனின் வேண்டுகோள் சூதானது.
பசப்பு வேண்டுகோள் ஆபத்தானது.
பஞ்சாயத்து வேண்டுகோள் நியாயமானது.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                       

வேதாவின் மொழிகள். 4

 

 

வேதாவின் மொழிகள்.

18-1-2005.
கண்ணில் மல்கும் கண்ணீர் துடைக்கக் கைக்குட்டை தேடும் வார்த்தைகளை விட்டு, எழுந்து முன்னோக்கிச் செல்ல உந்தும் வார்த்தைகளாகச் சிந்தனை வார்த்தைகளை இணைக்கலாம். ஊன்று கோல் பிடித்து எழுந்து கொள்ள வைக்கும் வார்த்தைகளாகவும்,  துள்ளி வரும் அழகிய பந்தாகவும் சிந்தனைகளைத் துள்ள வைக்கலாம். பச்சாதாபம் வழியாது பற்றி எழுந்திட உதவும்வர்த்தைகளாக அமைக்கலாம், சிந்திக்கலாம்.

23-8-2008.
நமது சாதாரண வாழ்வே கடும் முயற்சிகளுடன், தோல்விகளும், காயங்களுமாக அமையும் போது, உங்கள் கற்பனையில் கூட கண்ணீரைக், கவலையைத் தவிர்த்துக் கொள்ளுங்களேன்! சிந்தனையில் சுபிட்சம் வந்தால் நிச வாழ்விலும் அது ஒட்டிக் கொள்ளும். ஏற்றுக் கொள்கிறீர்களா!…
இப்படிச் செய்து பாருங்களேன்!…….

முயலின் சுறுசுறுப்பு மனித வெற்றி முழக்கத்திற்கு அததிவாரம்.

காப்பு.
இல்லறத் தோப்பில் இதயசுத்தம் காப்பு.
இன்ப மழலைக்கு கண்டிப்பு ஆப்பு.
ஆண்டவன் பாதத்து நூல் நம்பிக்கைக் காப்பு.
அநாதைக் குழந்தைக்கு காப்பகம் பெரும் காப்பு.

வரம்பு.
வரம்பின்றி வார்த்தைகளை உதிப்பது ஆபத்து.
வரம்பற்ற அன்னியக் கலாச்சாரத் தழுவலும்
வரம்புடைத்து வாழ்வுப் பாதையை மாற்றும்.

வரம்பினூடு வயல் நடுவே நடந்த நினைவு
அரும்பச் செய்கிறது ஆனந்த உணர்வு.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                        

Previous Older Entries Next Newer Entries