23. வேதாவின் மொழிகள்

அனல் மழை.

  *
 வானிலை அறிக்கை வாசிக்காமலேயே
மண்ணிலே அனல் மழை. மனம் நிறைய சூறாவளி.
ஊரெல்லாம் உள்ளமெல்லாம் ஊனையும் கரைக்கும் வேகம்.
*
12439183_1161780127165879_1780033917980574849_n-jpg-vv
*
underline
Advertisements

வேதாவின் மொழிகள். 22

orange-  ab

வேதாவின் மொழிகள். 22

கூலியுடை விளம்பர நுரை போலிகளின் கவர்ச்சி நிரை.

ஊழியின் முடிவு வரை தூளி கிளப்பும் மாயத்திரை.

(தூளி – தூசி) – 26-6-2004

உயர்ந்த உள்ளம்:- 22-5-2007

மரபு, சூழல், நல்ல வளர்ப்பால் பெறுவது.

நிறைந்த நற்பண்புகளால் நிறைகுடமாய்த் தழும்பாதது உயர்ந்த உள்ளம்.

தரத்தில் இறங்கிய உள்ளம் இருப்பதால் தான் உயர்ந்த உள்ளத்து அருமை தெரிகிறது.

உயர்ந்த உள்ளத்தோன் வாழ்நிலையும் உயர்ந்தது என்பது உறுதியற்றது.

வரிகளாக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

Swirl divider v2

21. வேதாவின் மொழிகள். 21.

akam

வேதாவின் மொழிகள். 21.

வாழ்க்கை என்பது பயிற்சி. தாழ்ந்திடா உடன்பாட்டுயர்ச்சி

வெற்றிப் படியின் முயற்சி.

வாழ்க்கை சிறந்த நூலகம். வாழ்க்கையொரு போராட்ட மைதானம்.

(வாழ்க்கையொரு சவால் மைதானம்.)

வாழ்க்கை:- முயற்சியின் தொகுப்பு. உறவுகளின் இணைப்பு. அனுபவ அணிவகுப்பு. நவரசக் கலகலப்பு.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ, டென்மார்க்.

2-7-2013

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

Advertisements

20. வேதாவின் மொழிகள்.

20. வேதாவின் மொழிகள்.

 

என் திறமை, என் தனித்துவம், என் வழி சிறப்பானது. பிறரோடு என்னை ஒப்பிட்டு என்னை நானே இகழ்வதில்லை.

 

குணம் காண முடிந்தவைகளே பிரச்சனைகள். குழம்பித் திரட்டுவது, திணறுவது நாம் தான். அதாவது இடையில் நானெனும் அகம்பாவம், யார் முதலில் குனிவது என்று பலவற்றைப் போட்டுக் குழப்புவது நாமே தான்.

 

 சிடுசிடுக்கும் வாழ்விலும் புன்னகை செய்யும் வாழ்வு புதையலைத் தரும்.

 

 அன்பு, அமைதி, இன்பமாய் வாழும் வாழ்வினால் வாழ்விற்கு மரியாதை, மதிப்புக் கிடைக்கிறது.

 

 எதிர்பார்ப்பு நிறைறோவிடில், ஏமாற்றம் நிறைவதால் நேசிப்பவரையும் வெறுக்கும் நிலை வருமோ!

 

 26-9-2004
நாணயமாக வாழ்வதை விட, இன்று நாணய மதிப்பு வாழ்வில் நயமாக பலரின் மதிப்பில் உயர்ந்துள்ளது.

 

 ஆர்ப்பரித்துப் புரளும் அலை மீது,
ஊர் எதிர்த்துக் கல்லெறிந்தாலும்
நேர் நின்று தானாகப் புரண்டு
பார் மீது மோதும் தன்னம்பிக்கை அலையாக நில்!

 23-2-2004
முறையற்ற தொடர்பு கறை பட வைக்கும்.
முறைகேடு தொடர்வது நிறைவற்ற மனதின்
குறைவான நிலைப்பாடாகும்..

23-2-2004
ஆயுள் பரியந்தம் பரிவு, பாசம், நேசத்தைப் பரிவர்த்தனை செய்து பரிசோதித்தலை
பரிச்சயமாக்கி வாழ்தல் ஒரு பரிசுத்தமான பரிபக்குவ நிலையாகிறது.
இதில் பரிபூரணத்தால் பரிமளித்தலும், பரிதாபமோ, பரிகாச நிலை பெறுதலுமோ அவரவருக்கு அளந்த பரிமாணப்படி நடக்கிறது.

6-12-2003.
மனம் நிறைந்து நகைக்கும் போது உடலில் தினம் பல நரம்புகள் இயங்கி ஒளி தரும்.
நகைச்சுவை தங்க நகைச்சுவையிலும் மிகைச் சுவை.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                         
 

Advertisements

வேதாவின் மொழிகள். 19.

வேதாவின் மொழிகள். 19.

மனம் – ஊனம் – மனிதம்.  5-6-2006.

மனித மனம் ஊனமடைவது
மனிதநேயம் இழக்கும் போது.
உடல் ஊனம் போன்று இதயத்
திடலும் நிலையற்றுப் போதல்.
வெல்லும் பகுத்தறிவு மனமும்
நல்ல பரம்பரை மனதாலுமே
நோய் குணப்பட முடியும்.

நேர்மை –வாய்மை –பாவம். 22-5-2006

வாய்மை தாய்மை போன்றது.
நேர்மையாக வாய்மை பேசல் சொர்க்கம்.
ஆயினும் அது இலைமறை காயானது.
நிலைமை இலைகளை விலக்கிப் பார்ப்பது போலவே இருக்கும்.

பொய்மை பாவமின்றித் துருத்திக் கொண்டு முன்னே நிற்கும்.

நேர்மையாக வாய்மை பேசுபவனுக்கு உலகில் சொற்ப இடம் இருப்பது போலவே தெரியும்.

தனிமை.

இனிதான ஒரு வழியில் மனம் ஒன்றிடில் தனிமையும் ஒரு வித இனிமையே. இன்ப இசை,
அமைதி வாசிப்பு,
ஓவியம் வரைதல்,
கவி புனைவும் இனிமையே.

கொடுமை.
விரக்தி மனதிற்குத் தனிமை கொடுமை.
விசன மனதிற்குத் தனிமை கொடுமை.
விரோத மனதிற்குத் தனிமை கொடுமை.
விளைவு வில்லங்கம் தந்திடும் உண்மை.

அமைதிக்கேடு.   26-9.2004.

அகம் நிறை தாய்நாடு
அகம்பாவத்தால் கேடு.
அடிவானத்தில் அமைதிக்கோடு
அந்தகாரத்தில் ஆனந்தமேடு.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-5-2012.

                               

 

 

Advertisements

வேதாவின் மொழிகள் 18.

வேதாவின்  மொழிகள் 18.

(சிந்தனைச்சாரல் என்பது பெயர் மாறி வேதாவின் மொழிகளாக.)

தவறுகளைத் தவறென்று கூறாமல்
உறவு வளர்க்க ஆசியிடுதல்
திறவுகோலாகும் தலைப் பாரத்திற்கு.
பிறகு வருந்துதல் தேவையற்றது.

சந்தேகம். (14-6.2006.)
சந்தேகப் புற்றுநோயிற்கு புரிந்துணர்வு
மின்சார சிகிச்சை தான் அத்தியாவசியம்.

அசையாத நம்பிக்கையும், ஆழ்ந்த அன்பும்
இருந்தால் சந்தேகம் வாலாட்ட முடியாது

சந்தேகமென்பது மஞ்சள் நிறக் கண்ணாடி
அணிந்து பார்ப்பது போன்ற நிலை தான்.

சில இடங்களில் புரிந்துணர்வு மின்சார சிகிச்சை கொடுத்தாலும்
சந்தேகப் புற்று நோய் மறுபடி வளர வாய்ப்புண்டு.

ஆதவன். (2-5-2006.)
சூரியக் கடமையுணர்வு விடாமுயற்சி
பாரிய நற்பயன்கள் தரும்.

நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
ஆதவனாய்ப் பயன் தரும்.

பிரதி பலன் கருதாத கொடை வள்ளல் ஆதவன்.
பிரதியுபகாரம் வேண்டுபவன் மனிதன்.

மறைந்தாலும் பேசப்படுவாய் ஆதவனாய்
நிறைந்த அன்பைக் கொடு.

எறிக்கும் நாற்பது பாகை ஆதவமும்
தெறிக்கும் நாற்றமுடைய வார்த்தையும் சமம்.

நல்லவை ஆதவன் பொற்கதிராகும்
அல்லாதவை கதிர் மறைக்கும் கருமேகம்.

24-8-2008.
ஙொய்!…ஙொய்!…என்று விரட்ட விரட்ட பறந்து உணவில் வந்தமர்ந்து அசிங்கம் சேர்க்கும் இலையானைத் தடுக்க ஒரு கொசு வலையோ ஒரு மூடியோ தேவைப் படுகிறது. அது போல நடக்கும் மனிதனுக்கு, அவன் தானாகத் தேடும் சுயகட்டுப்பாடு தான் ஒரு மூடியாகிறது, ஒரு வலையாகிறது.

தவறுகள் பற்றி:-
அநீதிகள் பற்றி அபிப்பிராயம் கூறுவது பல இடங்களில் அபாயகரமானது. சாதகமான அபிப்பிராயமே எங்கும் கைகளை விரித்து வரவேற்கப் படுகிறது. ஆக ஒரு வகையில் நடிப்பு வரவேற்கப் படுகிறது. இது எத்தனை பேருக்கு உடன்பாடாக உள்ளது!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(இவை இலண்டன் தமிழ் வானொலியிலும், வேறு இடங்களிலும் பாவிக்கப் பட்டவை)

 

                              

2012.

Advertisements

வேதாவின் மொழிகள். 17.

Art by  Vetha—

நெருங்கி நெருங்கித் தேனாகப் பேசுவார்கள். காரியம் பெற்றதும் கழன்று விடும் மனிதர்கள் யாரென நேரியதாகக் கூறுவதா! வீரியமாகக் கூறுவதா! அவர்கள் பாரிய சுயநலவாதிகள் தானே! வேறு எப்படிப் புரிந்து கொள்வது!

பிறரின் உபதேசம் பிடிக்காத போது பிறருக்கு உபதேசிப்பதை விட்டு விடுவது சரியாகும்.

ம்பிக்கை என்றதும் நான் இராணியாக வேண்டும் என்று நம்ப முடியுமா? நம்பிக்கை  கூட எமது வசதி, சூழல், வாழ்வு என்பவற்றோடு கூடி இயங்க வேண்டியது ஆகிறது. ஒவ்வொரு செயலாகச் செய்து வரும் போது நம்பிக்கை கூடியும், குறைந்தும் தன் வட்டத்தைத் தீர்மானிக்கிறது. மனதில் ஒரு குறிக்கோளை எண்ணி, அதனை நோக்கி நடப்பதும் நம்பிக்கையே.

எமது இயக்கம், திறமைக்கு ஏற்ப நம்பிக்கையை வளர்க்கலாம். அளவிற்கு மிஞ்சி நம்பிக்கையை வளர்ப்பது அசிங்கமாகவும் போகலாம்.
நம்பிக்கை நன்கு மனதில் ஊன்றும் போது தயக்கம், நாணம், ஏன் பயம் கூட விலகி விடுகிறது. என்னைப் பொறுத்த வரை நம்பிக்கையை நான் ஒரு அளவோடு தான் வளர்க்கிறேன். என்ன அளவு என்று கூறுதல் இயலாது. ஆனால் என்னால் முடியும், இது சரி வரும் என்ற கணிப்பீடுகளோடு நான் பயணிக்கிறேன். பிறரை நம்பி ஏமாந்த கதைகளுமுண்டு. ஆகாயத்தைத் தொட என்று குதிப்பதில்லை.

தெய்வ நம்பிக்கை போல எது துணை நிற்கும்! தெய்வம் கேட்கும், தெய்வம் தண்டிக்கும் என்பதை வாலிப முறுக்கில் ஏளனம் செய்தாலும், வயோதிபத்தில் யாவும் ஆடி முடிந்த பின் ஆயிரம் நவீனங்கள் வந்தாலும் கூட, மனிதர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.  நம் பாட்டா பாட்டி சொன்னவை தானே இறுதியில் சரியாகிறது. நாம் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையான தேயிலை றப்பர் தோட்டத்தில் வசித்தோம் (கணவர் பணி). நிறைய இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். அவர்கள் ஆற்றாமையின் போது ஒரு வசனம் கூறுவார்கள். ” அநியாயம் செய்தால் முனியாண்டி கேட்பான் ” என்று. பரம்பொருளின் பஞ்சாயத்தில் எதற்கும் பதமான தீர்ப்பு உண்டு.

வாழ்வு ஒரு வட்டம். ஒரு பக்கம் வெற்றி நந்தவனமாகப் பூத்துக் குலுங்கி மணம் வீசுகிறது ஏற்றமாக. வென்றவனிற்கு அனைத்தும் இலேசாகத் தோன்றுகிறது. மறுபக்கம் தோல்வி ஒரு நரகமாக, இறக்கமாகச் சுட்டெரிக்கிறது. பாலைவனமாகத் தெரிகிறது. தோற்றவனிற்கு யாவும் பிரமாண்டமாகக், கடினமாகத் தெரிகிறது.
சிலர் வெற்றியில் மயங்கி உலகை மறக்கிறார்.பின்னர் தோல்வியைத் தழுவுகிறார்.தோல்வி கண்டவனோ அடக்கமாக முயன்று முயன்று வெற்றியை எட்டுகிறான். இங்கு ஆணவம் செல்லுபடியாகாது. ” நான்” என்று ” வான்” பார்த்தால் மண்  தெரியாது போய் விடும். நடை பாதை சிக்கலாகி விடும். வெற்றியின் தலைக் கனத்தை ஏந்துவது ஆபத்தாகி விடும். தலைக் கனம் தெளிவான பார்வையை மறைத்து விடும். மானம் அவமானம் கூட , கண்ணிற்குத் தெரியாது மயக்கும்.

ல்வி மனிதனைப் பண்படுத்துகிறது. மனிதனைத் துலக்கிக் காட்டுகிறது. முழு மனிதனாக்குகிறது.

னப் பலமும் உளச் சுத்தமும் இருந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது. நீயே சிறந்தவனாகிறாய். முயற்சியால் வெற்றிகளைக் குவிக்க முடியும்.

ல்ல எண்ணம், கடும் முயற்சி, நல்ல வார்த்தைகள் போதும் மிகவும் கம்பீரமானவனாக வாழ.

 

க்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-1-2012.

                                 

Advertisements

Previous Older Entries