நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (16)

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (16)

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)

வீன பார்த்சாரதியை நிறுத்தி விட்டு, இத்தாலியை நோக்கி லிவோர்னோ பாதையை எடுத்து வரும் போது, பைசா நகரம் காட்டியது. அந்தப் பாதையில் போக இறங்கினோம். (அங்கம் 15ல் லிவர்னோ போகும் பாதையில் பைசா நகரம் படத்தில் காணக் கூடியதாக உள்ளது.)

சுற்றிச் சுழன்று பைசா நகரம் அடைந்தோம். ஆயினும் உள்ளே உள்ளே கிராமம் போல ஓடி ஓடி ஒரு சுற்று மதில் கட்டிடத்தின் முன் நின்று, உள்ளே புகுவதா விடுவதாவென யோசித்து, கணவர் இறங்கி விசாரித்தார். உள்ளே செல்ல வேண்டு மென்று அறிந்தோம். இதற்கிடையில் கோபுரம் தானே, எங்கே உயரமாக ஒன்றையும் காணோமே என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி வழியெல்லாம் நான் தேடியபடி இருந்தேன். உள்ளே புகுந்ததும் வட்டமான வெள்ளைக் கட்டிடமாக மாபிளினால் உருவான சாய்ந்த கோபுரம் தெரிந்தது.

        

னது கற்பனையில் அது மிக உயரமான கோபுரமாக இருக்கலாமோ என்று தான் இருந்தது. ஆனால் அது சாதாரணமான 8 மாடிக் கட்டிடமாக, ஆனாலும் அநியாயமாகச் சாய்ந்திருந்தது. மனம் கவரும் வெள்ளை நிறம், ஆடம்பரமாக இருந்தது.         

றோனா நதிக்கரையில் ரஸ்கனியில் ஒரு நகரம் பைசா ஆகும். நவீன பௌதிகவியலாளர், கலிலியே கலிலி பிறந்த இடமும் இதுவாகும்.

ரியாக வாகனம் நிறுத்துமிடம் தெரிந்து நிறுத்திவிட்டு, கவனிக்க!  இங்கு எந்தவித பிரச்சனையுமின்றி வாகனம் நிற்பாட்டினோம். 

முதலில் இடத்தை ஒரு கண்ணோட்டம் விடுவோம் என்று , நான் புகைப் படக்கருவியுடன் சென்று மளமளவென படங்களைச் சுட்டேன். சனக்கூட்டமாகவே இருந்தது, திருவிழாக் காலம் போல.                         

ன் கணவர் தங்குமிடம், நகரம் சுற்றிப் பார்த்தல் என்பவைகளைக் கவனித்தார்.

ங்களாதேஷ் இளைஞர்கள் பலர் வியாபாரம் செய்தபடி இருந்தனர். எம்மைக் கண்டதும் முகம் மலர்ந்து மிகவும் அன்பாகப் பேசினார்கள், தகவல்கள் தந்தனர். அந்த உணர்வு எமக்கு மிகப் பழக்கமான உணர்வு தான். நாடு விட்டுப் பிரிந்திருக்கும் உணர்வு தான் அது.

சுற்று வட்டத்தின் ஒரு கண்ணோட்டத்தின் பின், உள்ளே சிறிது நடை தூரத்தில், நாம் தங்கிட வாடி வீடு எடுத்தோம். இங்கு அறை எடுக்க எந்தவித சிரமமும் வந்திடவில்லை. மிகச் சுலபமாக இடம் கிடைத்தது. வாகனம் நிறுத்த  தங்கும் அறைக்கு முன்னாலேயே இடமும் கிடைத்தது.

திரும்ப வந்து வாகனத்துடன் போய் களைப்புத் தீர நீராடி, ஆடை மாற்றி, மறுபடியும் கோபுரம் பார்க்க வெளியே வந்தோம்.

புகையிரதப் பெட்டிகள் இரண்டை இணைத்தது போன்ற ஒரு வாகனத்தில் பைசா நகரம் சுற்றிப் பார்த்தோம். பலரைச் சேர்த்து, அது போதும் என்றதும் ஓடத் தொடங்குகிறார்கள்.  பைசா மிக நல்ல பழைய கால நகரமாக இருந்தது.

பைசா நகர மக்கள் மத்தித் தரைக்கடலில் 200 வருடங்களுக்கும் முன்னர் சிறந்த மாலுமிகளாக இருந்தனர். இவர்கள் யெருசலேம்,  catthago,   Ibiza, Makkarca, ஆபிரிக்கா, பெல்சியம், Britania, நோர்வே, ஸ்பெயின், மொறக்கோ இன்னும் பல நாடுகளைக் கைப்பற்றியிருந்தனர். இவர்களுக்கு ஒரு எதிரியாக Florance  நாடு இருந்தது. இவர்கள் தங்கள் செல்வ நிலையை உலகுக்குக் காட்டுவதற்காகவே இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தைக் கட்டினார்களாம்.

1. கிறிஸ்துவப் பிரதான கோயில்.
2. ஞானஸ்நானத் தொட்டில் கட்டிடம்.
3. ஞாபகர்த்தப் புதை குளி
4. பைசா சாய்ந்த கோபுரம்.

வை நான்கும் ஒன்றாக அருகருகே உள்ளன.
வெள்ளையடிக்கவே தேவையற்ற அத்தனை சுத்த வெள்ளை அழகுடன் இந்தக் கட்டிடங்கள் உள்ளன.         

மிகுதியை அடுத்த அங்கம்16ல் பார்ப்போம்.                                         

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
3-2-2007.

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம்…(15)

 

 

வீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம்…(15)

 

(பயண அனுபவங்களும், சரித்திரத் தகவல்களும் அமைந்தது.)


                                                 

18-8-06 காலை 9.00 மணிக்கு நீசின் Busby hotel ஐ விட்டு இத்தாலியின் ரோம் நகரம்  நோக்கிப் புறப்பட்டோம். இங்கிருந்து இரண்டு பாதையை இத்தாலிப்
பயணத்திற்குத் தெரிவு செய்யலாம்.

நீஸ் கடற்கரை பார்த்த ஆசையில், அழகில் எனது கணவர்   நாம் கடற்கரைத்
தெருவோரப் பாதையெடுத்துப் பயணிப்போம் என்றார்.

வீன பார்த்தசாரதியார் எத்தனை குறுக்கு வழியிருந்தாலும், எப்போதும் பெரும் தெருவை யொட்டியே தனது வழியை எமக்குக் காட்டுவார். அவரது பாதை Firenze வழியூடு செல்லும் பாதையான இத்தாலி நடு முதுகு ஊடாகச் செல்லும் பாதையாகும்.  ஆகையால் சரியான இடம் வரும் வரை அவர் உதவியை எடுத்து, அந்தப் பாதை கடற்கரை நோக்கிப் பிரியும் போது அவரை நிறுத்துவது என்று முடிவெடுத்தோம்.

நாம் இத்தாலி செல்லச் சுமார் 820 கி. மீட்டர் தூரம் ஓட்டம் காத்திருந்தது. இத்தாலியை நோக்கி ஓடத் தொடங்கவும், என் கணவர்  ”  சாய்ந்த கோபுரம் இத்தாலியில் தானே உள்ளது, அதையும் பார்க்கலாமே!” என்றார். எனது மூளையில் அது இருக்கும் சரியான பட்டினப் பெயர் வரச் சிறிது சிரமப்பட்டது. பெரிய ஐரோப்பாப் படத்தை உன்னிப்பாகப் பார்த்தேன். ஓடும் பாதையின் பட்டினங்களைப் பார்த்தபடி வர,  Genova,  Portofino,  Laspezia, Pisa என்றதும் உடனும் மூளையில் வெளிச்சமானது பைசாக் கோபுரம்.

பிறகென்ன! பைசா நகரம் நோக்கி ஓடினோம்.  ஃபையறென்ச பாதை காட்டிய போது, அதை விலக்கி லிவோர்னோ (Levorno) பாதையைப் பிடித்து ஓடினோம். எமது விருப்பப் படி கரையோரப் பயணமாகவே இருந்தது.

 

வெயில் கொழுத்திக் கொண்டு இருந்தது.             

த்தித் தரைக் கடலினுள் நீட்டியபடி, குதிக்காற் சப்பாத்துப் போல நீண்ட தீபகற்பமானது இத்தாலியாகும். கடலுக்குள் துருத்திக் கொண்டுள்ள உயர் மலைப்பகுதியே இந்தத் தீபகற்பமானதால், முழுவதும் கல்லு மலையே தான். கல்லு மலையைக் குடைந்து அரை வட்ட வடிவச் சுரங்கப் பாதைகள்,  சுரங்கப் பாதைகள் 1000, 1300மீட்டர், 1800 மீட்டர், என்று நீளமானவை.. அடிக்கடி வந்த வண்ணமே இருந்தது

  (சில சுரங்கப் பாதைகளை இங்க காண்கிறீர்கள்.)

   

கொண்டை ஊசி ( hair pin) வளைவுகள், பாம்பு வளைவுத் தெருக்களாக இருந்தது.

     

தெருவோரங்களில் அலரிப் பூக்கன்றுகள் நிறம் மாற்றி மாற்றி அழகுக்காக நட்டிருந்தனர். சுரங்கப் பாதை, வளைவாக உள்ளது என நாம் நிதானமாக வாகனம் ஓட்ட, அந்தப் பாதையில் பழக்கமானவர்கள் அடித்து அள்ளிக் கொண்டு ஓடினார்கள். நாம் விட்டுக் கொடுத்து, ஒதுங்கியே ஓடினோம்.

போட்டோபினோ (Portofino) நகரம் மிக அழகான வீடுகள், மலைக் காட்சிகளாக இருந்தது.
எனது சக ஊழியர்  ஒரு தடவை Portofino சென்றதாகக் கூறிய போது, எங்கே இந்த இடம் என்று எண்ணினேன். இப்போது புரிந்தது. எவ்வளவு அழகான இடமென்று! Portofino……..

 

டைவேளைகளில் உணவு, ஐஸ், தேனீர் என்று எடுத்த வேளையில் ஒரு நடுவயதானவர் எம்மோடு சிரித்துப் பேசி, நாம் நின்ற இடம் நெருங்கினார். எமது பேச்சில் நம்பிக்கை வந்த போது,  தன் கை முட்டியை விரித்து, இரண்டு சங்கிலியைக் காட்டி, ” நல்ல விலை”  என்று பேசினார். கறுப்புப் பண வியாபாரி போலும். ”  வேண்டாம் , நன்றி ” என்று கூறி நாம் நழுவி விட்டோம். 

 Viariggio வில், இன்னும் சில இடங்களிலும் ஈரோவாக தெரு வரிப் பணம் கட்டினோம். உணவு பஸ்ரா, பீசா, நூடில்ஸ் ஆகவே இருந்தது.                 

ருமையான  கடற்கரைக் காட்சிகளை இடைவேளையின் போது ரசித்தோம், பிள்ளைகளுடனும் பேசினோம்.  

 

—————மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.————                                                    
வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்
29-1-2007.                                                      

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (14)

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (14)

(பயண அனுபவங்களுடன், சரித்திரத் தகவல்களும் அமைந்தது)

நீஸ் நகரம் பிரான்சின் 5வது பெரிய நகரம். உலக மக்களைக் காந்தமாக இழுக்கும் நகரம்.  தேசப்படத்தில் நீஸ் நகரத்தை இங்கு காணுகிறீர்கள். படத்தில் கிளிக்கினால் பெரிதாகக் காணமுடியும்.

CrossroadsClassicalMed2010Map          

சிறந்த காலநிலை, கறுப்பு ஒலிவ் பழங்கள் இதை (cailettes) என்பார்கள், நல்ல காய்கறி, பழங்கள், பூக்கள், அழகிய கடற்கரை, சிறந்த வாடி வீடுகள் என்று பெயர் போன நகரம். இது மிகப் பழமை வாய்ந்த நகரம். 

(ஒலிவ் மரங்கள், தோட்டக் காட்சி.)———–(பூக்கடை)

   

400 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே mont boron  மலையடி வாரத்து லாசாட் (lazart) எனும் குகையில் மலையாடு, கலைமான், எருதுகள், யானைகளுடன் கூட்டாக, மனிதன் சுண்ணக்கல் ஆயுதங்களுடன் வாழ்ந்துள்ளான். 

(மவுண்ட் பறோன் மலையும், அங்கிருந்து நீஸ் கடற்கரையும், இறுதிப் படத்தில் மவுண்ட் பறோன் கடற்கரைக் காட்சியும் காண்கிறீர்கள்.)

  

ரேறா அமற்ரா (Tera amata) எனும் அருங்காட்சியகம் இதை அடையாளப் படுத்துகிறது. கி.மு 4வது நூற்றாண்டில் மாசிலாவில்(masilla)வில் இருந்த கிரேக்கர் இந்தக் காட்டுமிராண்டி மக்களு (baberians) டன் மோதி, மறக்க முடியாத வெற்றியைப் பெற்று  இந்த இடத்திற்கு நிக்கயா (Nikaia) எனும் பெயரைச் சூட்டினார்கள். இது கிரேக்கருக்கு முக்கிய இடமாகவும், இங்கு சில நூறு வியாபாரிகளே மாசிலாவின் அதிகாரத்தின் கீழே வாழ்ந்தார்கள்.

கி.பி 14ல் ரோமப் பேரரசு அதிகாரத்திற்கு வந்த போது சிமைஸ் cimiez மலையில் சிமினெலம் (cemenelam) எனும் பட்டினத்தைக் கட்டினார்கள்.  சிமைஸ் இப்போதும் நீசின் கால் வாசிப் பகுதியாக உள்ளது. 1543ல் துருக்கி இப் பட்டினத்தைப் பிடிக்க முயற்சித்துத் தோற்றுப் போனது. இதே வருடம் இங்கிலாந்து நீசைத் தாக்கிப்பிடித்து, நீசைத் தேசிய துறைமுகமாக்கியது. வியாபாரத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தது. இப்படியாக அனைவரும்  நிக்கயாவுக்காக அடிபட்டனர். இது பெரிய கதை. மிகக் குறுக்கியே இங்கு தருகிறேன்.                         

1860ல் சாடினிய தேச அரசனும், நெப்போலியன்-2ம் ஒரு உடன்படிக்கை செய்தார்கள்.                 
இதன்படி நிக்கயா பிரான்சுக்கு கையளிக்கப் பட்டது. அப்போது தான் நீஸ் எனும் இன்றைய பெயரும் இந் நகரத்திற்குச் சூட்டப்பட்டது.

நீஸ் சர்வதேச விமான நிலையம் பிரான்சில் 2வது பெரிய விமான நிலையமாக உள்ளது. 4இலட்சம் மக்கள் இங்கு வாழுகிறார்கள். தொழிற்துறை, விஞ்ஞானம், தொழில்நுட்ப ஆய்வுகளில் சிறந்த இடமாக நீஸ் உள்ளது. மொன்ற் பறோன் (mont Baron) மலையிலிருந்து  நீஸ் கடற்கரைக் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.( see picture )  எந்தப் பக்கம் நின்று கடற்கரையைப் பார்த்தாலும் கொள்ளை அழகு தான். அழகிய நீஸ் கடற்கரைக் காட்சித் தபால் அட்டைப் படங்கள் இங்கிருந்து தான் எடுத்ததோ எனும் எண்ணம் உருவாகும்.  

                                              

 டலில் குளிக்க முடியாதவருக்கு  குழாய் நீரில் குளிக்க வசதியும் உண்டு. தங்குமிட வசதிகள், உயர்தர வாடிவீட்டு வசதிகள் மிக அருமையானவை.

ரோமப் பேரரசு கட்டிய செமனல பட்டினமும் பார்த்தோம். இதன் புதிய பெயர் சிமியே எனப்படும். இரவு நேரமும் பகல் போல உயிருடையது.  நீசை விட்டுப் பிரிய மனமில்லைத் தான் இரண்டு இரவுகள் நீசில் தங்கினோம். எமது திட்டத்தின் பிரகாரம் நாம் வெளிக்கிட வேண்டும்.                                  

 18-8-06 காலை 9.00 மணிக்கு நாம் தங்கிய Busby hotel ஐ விட்டுப் புறப்பட்டோம்.
எந்தப் பக்கம் நோக்கிப் புறப்பட்டோம்?…………….

——–மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.———-

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-1-2007.

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (13)

 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (13)
(பயண அனுபவங்களுடன் சரித்திரத் தகவல்களுடனானது)
“”மலை கண்ட இடம், நதி கண்ட இடத்தில் மனிதன் கோயில் அமைத்திடுவானே!”” என்று என் கணவர் கூறிச் சிரித்தார்.

லூட்ஸ் கோயில் பெரிய கல்லின் மேலே தான் கட்டப்பட்டுள்ளது. மாதா காட்சியான இடத்தில் அவர் உருவச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.  குகை ஒரு அமைதியான காட்சி இடமாகவேயுள்ளது.

   

லூட்ஸ் கோயிலின் பக்கமாகச் சிறிது தூரம் சென்றால் 17 குளங்களாக, 6 பெண்களுக்காகவும், 11 ஆண்களுக்காகவும் உள்ளது என வாசித்தேன். ஆயினும் நாம் அதைப் பார்க்கவில்லை. காடுகளை, பல பச்சைகளைக் கழுவி வரும், இத்தனை அமிலங்களும் கொண்ட நீரில் மனிதன் அமிழ்ந்து இருப்பது, பல நோயைக் குணப்படுத்தும் சக்தி கொண்ட நீராடும் இடமாக அது இருக்கலாம்.

 

ங்கவீனர்கள், வலதுகுறைந்தவர்கள் குழுக்களாக வந்திருந்ததைக் காண முடிந்தது. லூட்ஸ் சிறு கிராமம் என்பதால், நாம் ஊர் சுற்றிப் பார்க்கும் எண்ணத்தை விட்டு, கோயில் தரிசனம் முடிய தங்குமிடம் வந்தோம்.

னது பெயரைக் கேள்விப்பட்டுள்ளதாக அடுத்த அறையில் தங்கியவர் கூறினார். கேள்விகள் கேட்டார். கடையிலும் தமிழ் வானொலி தான் கேட்டுக் கொண்டிருந்தது. இலண்டன் தமிழ் வானொலி பற்றிக் கூறினேன். “” அந்தக் குழந்தைப் பிள்ளைகள் வானொலி தானே? “” என்றார். இன்னும் இது பற்றிப் பேசினோம். இப்படிப் பேசிய பின்பு ஆவலாக இங்கு வந்து வானலையைக் கவனித்தேன், யாராது வானலைக்குப் புதிதாக வருகிறார்களா என்று. இப்படிப் பல தடவை ஏமாற்றமடைந்தும் உள்ளேன். இது புதிது அல்ல.

சுமார் 1.45 மணியளவில் நீஸ் நகரம் நோக்கிப் புறப்பட்டோம். அங்கு போய்ச் சேர சுமார் 870 கி.மீட்டர் ஓட்டம் காத்திருந்தது. ஒரே வேகமாக ஓடினோம். பசி, தாகம் என்ற போது நின்று சாந்தி செய்தோம். தெருவோரத்தில் நாபொனா என்ற இடம் மலைப் பிரதேசம், ஒரே கல்லு மலையாக ஆனால் அழகாக இருந்தது. டிநணநைசள  எனும் இடத்து வீடுகள் ஆடம்பரமான வீடுகளாக, கிட்டத்தட்ட இலங்கை வீடுகள் போன்ற அமைப்பில் இருந்தன. கடற்கரையோரங்கள் மிக மிக அழகாக இருந்தன. அழகு கொஞ்சி விளையாடியது. றூகாசினி தெரு மிக அழகான காட்சிக் கண்ணோட்டமாக இருந்தது.

ரவு 10 மணியளவில் நீஸ் நகரம் சென்றடைந்தோம். ஒரே பல்லவி தான், கார் நிறுத்த இடம், இரவு தங்க இடம் தேடுவது பிரம்மப் பிரயத்தனமாகவே இருந்தது. கோடை காலமாதலால் எல்லா இடமும் நிறைந்து வழிந்தது. ஆயினும் ஒரு ஆடம்பர தங்குமிடம், கார் நிறுத்தும் வசதியுடன் கிடைத்தது.

ரவு 1.00 மணிக்கு அறை கிடைத்துச் சென்று வழமை போல குளித்து, ஆறுதலாக கட்டிலில் சாய்ந்தோம்.

காலையில் தங்குமிடத்துக் காலையுணவுடன் கடற்கரையுலாப் போனோம். ஈச்ச மரம் போன்ற பாம் மரம், தென்னை மரம் போன்ற தோற்றமான மரங்களும், நிறைய மலர்களும் கண்களுக்கு வித்தியாசமாக இருந்தது.

ரே பூகோளத்தில் தான் இருக்கிறோம், இடத்திற்கு இடம் தான் எத்தனை மாறுபாடு!

த்தித் தரைக் கடல் பழவகைகளுக்குப் பெயர் போன இடம் என்று 10ம் வகுப்பில் பூமிசாத்திரத்தில் படித்தது நினைவிற்கு வந்தது. நீரில் இறங்கி மத்தித் தரைக் கடலில் கால்கள் புதைய அலையைப் பத்திரமாக ரசித்தேன். கணவர் இறங்கவே மாட்டேன் என்று விட்டார்.

சுற்றுலா செல்லும் புகைவண்டி எனக் கூறும் வாகனத்தில் ஏறி நீஸ் நகரைச் சுற்றிப் பார்த்தோம். முற்பகல் கழிந்து விட்டது. பிற்பகலில் திறந்த வெளி, இரண்டு தட்டுப் பேருந்தில், ஆங்;கில மொழி பெயர்ப்பை, காது ஒலி வாங்கியுடன் கேட்டபடி  மறுபடி, வேறு பாதையால் சுற்றிப் பார்த்தோம். இரண்டும் வித்தியாசமாகத்தான் இருந்தது. மகிழ்வாகவும் இருந்தது.

வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
16-1-2007.

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம்..(12)

 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம்..(12)

பயண அனுபவங்களும், சரித்திரத் தகவல்களுடனும் அமைந்தது.


பெனடிற்றா 1858ல் தனது 14வது வயதில் மலைக் குகையான மசபியெல்லாவில் (massabiella) மாதா கன்னி மேரியின் தரிசனத்தைக் கண்டார். அதுவும் 18 தடவை மாதா இவருக்குத் தரிசனம் கொடுத்துள்ளார். “” நான் உன்னை இவ்வுலகில் சந்தோசப்படுத்துவேன் என்று சத்தியம் செய்யமாட்டேன், அடுத்த வாழ்வில் சந்தோசப்படுத்துவேன்”” என்ற தனது வாக்குறுதியை மாதா நிறைவேற்றிவிட்டார்.

வருக்குக் கிடைத்த ஒன்பதாவது தரிசனத்தில் குகையிலுள்ள நீரூற்றை அருந்தும்படி மாதா வேண்டியுள்ளார். ஆனால் நீரூற்று காணப்படவில்லை.

வேறொரு தரிசனத்தில் காட்டப்பட்ட இடத்தில் பெனடிற்றா தோண்டிய போது, நீரூற்று பீறிட்டுக் கொண்டு வந்ததாம். அன்றிலிருந்து சுமார் 27 ஆயிரம் கலன் நீர் ஒவ்வொரு கிழமையும் வருகிறதாம். இந்த நீர் சோடியம் குளொறைட், லைம், மக்னீசியா பை காபனேற், சிலிக்கேற்ஸ் of  அலுமினியம், ஒக்சைட்  of  இரும்பு என்று பலவகை தாதுப்பொருட்கள் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தும் அற்புத சக்தி கொண்டதாக உள்ளதாம். முடவர்கள், அங்கவீனர்கள்,அனைவரும் அந்த நகரின் புனிதத்தை அறிந்து இங்கு வந்து குணப்பட்டுச் செல்கிறார்கள். அற்புதங்கள் நடக்கிறது என்றும் வாசித்தேன்.

இந்துக்களுக்குக் கங்கை, முஸ்லிம்களுக்கு மெக்கா போல, கத்தோலிக்கருக்கு லூட்ஸ் ஆக உள்ளது. தான் காட்சியளித்த இடத்தில் தேவாலயம் அமைக்குமாறு மாதா வேண்டினாராம். பெனடிற்றாவின் தேவ தரிசனத்தை வத்திக்கான் விசாரித்து, உறுதிப்படுத்தி, அன்றிலிருந்து லூட்ஸ் புனிதத் தலமாக ஆக்கப்பட்டதாம்.

பெனடிற்றா எனும் பெயர் பின்னர் பேர்னாடா என வழங்கப்பட்டது. 16-4-1879ல் இவர் மண்ணுலகை விட்டு மறைந்தார்.

பைறெனிஸ் மலைச்சாரலில் பவு எனும் ஆறும், கோயிலுக்கு அருகில் ஓடுகிறது.

   

குகையின் நீரூற்றைக் காணவும், மாதா தரிசனம் காட்டிய இடத்தைக் காணவும், நீண்ட நேர வரிசையில் காத்து நின்று  பார்த்தோம்.

க்கள் குகைச் சுவரை முத்தமிட்டும், நீர்த்துளியை ஏந்தியும் செல்கின்றனர். காட்சி தந்த மாதா உருவமே பிளாஸ்டிக்கில் உருவான போத்தலாகக் கடையில் வாங்கி, அதில் புனித நீரை ஏந்தி மக்கள் பயனடைகிறார்கள். உடலில் பூசுகிறார்கள், அருந்துகிறார்கள்.                                                         

கோயிலின் ஒரு பகுதியில் வித விதமான அளவுகளில் மெழுகுதிரி பற்ற வைக்கின்றனர்.

மலை மீது ஒரு இடம் மட்டும் உயரே ஏறிப் பார்த்தோம். அங்கு பூசை நடந்தது. இன்னும் எல்லா உயரமான இடங்கள் மீதும் நாங்கள் ஏறவில்லை.

கோயிலின் இரண்டாவது மாடியில் அன்னை மாதாவின் முடி தங்க நிறம் பூசப்பட்டு மிகப் பெரிதாகச் செய்து வைக்கப் பட்டுள்ளது. இது மிக வித்தியாசமாக எனக்குத் தென்பட்டது. மிக அழகாகவும் இருந்தது. ஆசையுடன், ஆவலுடன் அதை ரசித்தேன்.

         

தே போல நீரூற்று உள்ள இடப் பகுதியிலும் பல மெழுகு வர்த்திகள் பல அளவுகளில்  ஏற்றித், தட்டுத் தட்டாக மிக அழகாக இருந்தது. 3வயதுக் குழந்தை உயரத்திலும் மெழுகுவர்த்திகள் காணப்பட்டது.

கோயிலுக்கு முன்புறம் ஒரு பெரிய கோட்டை இருக்கிறது. அது பழைய அரசர்களின் கோட்டையாக இருக்கலாம். அது பற்றி அறிய முடியவில்லை.

கோயிலில் ஒரு சஞ்சிகை விற்பனைக்கு இருந்தது.  லூட்ஸ்- மகசீன் .கொம் www.lourds-magazine.com  இணைய முகவரியில் இந்த சஞ்சிகையை வாசிக்க முடியும்.                                                               

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
5-1-2007.

 

 

 
 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டரும் நாமும் (11).

 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டரும் நாமும் (11).
 

(பயண அனுபவங்களும், சரித்திரத் தகவல்களுடனுமானது. படங்களின் மேல் கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.)

 

 

ரவு 9.30க்கு லூட்ஸ்ஐ அடைந்தோம். சாதாரண நாளாக இருக்கும் என்று தான் எண்ணினோம், ஆனால் அது திருவிழா நாளாக இருந்தது. கால் வைக்க முடியாத சன நெரிசல். வாகனம் உருளுவதிலும் பார்க்க நாம் வேகமாக நடக்கலாம் போன்று தெரிந்தது.

     (இப்படித்தான் இரவு செகசோதியாகக் காட்சியளித்தது கோயில் முன்றல், நான் திகைத்துவிட்டேன்…என்ன இப்படி என)

 

ரிசை வரிசையாக எல்லா வாடி வீடுகளிலும் இடம் நிரம்பி வழிந்தது. ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை.

ன நெருக்கத்தில் வாகனத்தை விட்டிட்டுப் போனால், வாகன உதிரிப் பாகங்களைப் பிடுங்கிக் கொள்வார்கள் போல தெரிந்தது. நான் வாகனத்தைப் பார்த்தபடி இருக்கிறேன் என்று வாகனத்தில் இருக்க, கணவர் சென்று இடம் தேடினார்.

றுதியில் ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலி மூலம் கேள்விப் பட்ட தமிழ் விளம்பரம் கே.வி.ஆர் உணவகம் சென்று கேட்ட போது ஒரு அறை எமக்கு ஒதுக்கித் தந்தனர். சுமார் 11 மணி போல அங்கு சென்று முதலில் குளித்தோம்.  மேல் மாடியில் குளிக்கும் அறை. சின்னஞ் சிறு இடத்தையும் பாவித்து படிகள் அமைத்து மிகச் சிக்கனமாக அந்த வீடு கட்டப் பட்டிருந்தது. இரவு உணவாக பிட்டும், கணவருக்கு அசைவ உணவாகவும், எனக்கு சைவ உணவாகவும், குறிப்பிட்டபடியே தந்தனர். கடை பூட்டிய பின் சொந்தக்காரர் தனது வீட்டிற்கச் சென்று காலையில் தான் வருவார். பகலெல்லாம் கார் ஓடும் அலுப்பால் இரவு அருமையாக நித்திரை கொண்டோம்                                                                                    

காலையில் எழுந்து திரைச் சீலையை விலக்கிய போது கண் முன்னே பெரிய மலை அழகுறக் காட்சி தந்தது. தெற்கு பிரான்ஸ்  ஒரு புனித நகரமாகவும், சிறந்த வைன் க்கும் பெயர் போனது. நல்ல சூரிய வெளிச்சத்தை ஊக்கத்தோடு தேடுவோருக்கும் அது புனித இடமாக இருக்கிறது. பிறைக்கோடு போன்ற  பைறனீஸ்  மலையில் அமைந்த கிராமம் லூட்ஸ் ஆகும். நாம் பார்த்தது பைறனீஸ் மலைத் தொடர் தான். இதை 12ம் வகுப்புப் படிக்கும் போது பூமிசாத்திரத்தில், உலக வரை படத்தில் மண்ணிறக் கோடாக வரைந்தது ஞாபகத்திற்கு வந்தது.

ம்முடன் இன்னொருவரும் அடுத்த அறையில் தங்கியிருந்தார். காலை வணக்கம் கூறி ” தேனீர் குடிக்கிறீர்களா? ” என்றார். கணவர் அருந்தினார். எனக்குப் பால் தேனீர் தான் பிடிக்கும், நான் பிறகு அருந்துவதாகக் கூறிக் கோயிலுக்குப் புறப்பட்டோம். சிறு நடை தூரத்தில் தான் கோயிலும் இருந்தது. கோயில் உருவான விதம் பற்றியும் அந்தச் சகோதரர் கூறியிருந்தார்.

ரவு ஜே!…ஜே!  என இருந்த மக்கள் கூட்டம் மாயமாய் மறைந்து விட்டது. சாதாரண நாட்கள் போல அளவாக மக்கள் கூட்டம் இருந்தது.

பிரான்சியஸ் சவுபிறோஸ் –லுயிசா கஸ்ரறொட்  தம்பதிகளுக்குப் பிறந்த 6 பிள்ளைகளில் மூத்தவராக பெனடிட்ற்ரா  7-1-1844  ல் பிறந்தார்.

    

வர் பிறந்த 6 மாதத்தில் தாயார் மறுபடி கருவுற்றதால் மறியா அறவன்ற் எனும் பெண்ணுடன் பெனடிற்றா வளர்ந்தார். பெனடிற்றா சிறு வயதிலிருந்து மிகப் பலவீனமானவராக, ஆஸ்துமா நோயினாலும் அவதிப்பட்டார். படிப்பும் இவருக்கு ஏறவில்லை. தாயிடம் வருவது, நோய் வர, அதைக் கவனிப்பதற்காகவும், நல்ல உணவு பெறுவதற்காகவும் இடம் மாறி மாறி வளர்ந்தார். கன்னியாஸ்திரி மடத்திலும்,  ஆடு மேய்ப்பவராகவும் இருந்தார். இறை விசுவாசமும் இவருக்குப் படிப்பிக்கப்பட்டது. நோயினால் அவதிப்பட்ட இவர், நோயின் துன்பத்தையும் அனைத்தையும் மனதிற்குள்ளேயே தாங்கிக் கொண்டார்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
27-12-2006.

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 10.

 

 

   

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 10.

 பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனுமானது. படங்களின் மேல் கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.

கொழும்பு பம்பலப்பிட்டியில் மசாலா தோசை சாப்பிட்ட நினைவில் லாச்சப்பலில் அதைப் பதிவு செய்துவிட்டுக் காத்திருந்தோம். மசாலா தோசை வந்தது. ஆவலாகச் சாப்பிட்டோம்.  என்னே! கன்றாவி! பகல் சமைத்த கறிக் கலவை புளித்து மணந்தது. மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது, கறியை ஒதுக்கிவிட்டு, மணம் வராத பகுதியோடு சாப்பிட்டோம். நேரம் பிந்தியதால் வேறு உணவுக்கும் கட்டளையிட முடியவில்லை. பால் தேனீர் பதிவு செய்து அருந்திவிட்டு, வெளியே வந்தாலே போது மென்று எழுந்து வந்து விட்டோம். விமர்சனமும் கூறவில்லை. அன்றைய நாள் முடிந்தது.

ரவு நல்ல தூக்கம். காலையில் விழிப்பு வந்த போது விழித்து, இனி நாம் செல்ல வேண்டிய இடத்து முகவரியைக் கொடுத்துப் பார்த்தசாரதியைத் தயார்ப்படுத்தினோம்.                                      

காலைக் கடன்கள் முடிய, தங்கிய இடத்தின் காலையுணவைத் தவிர்த்து 9 மணியளவில்  கடைவீதி சென்று காலையுணவு அருந்தினோம். டென்மார்க்கிற்குக் கொண்டு போக, சமையலறைச் சரக்குச் சாமான்கள் வாங்கினோம். மகனுக்குத் தமிழ் பாடல் இறுவெட்டுகள் வாங்கினோம். அனைத்தும் எடுத்துச் சென்று, வாகனப் பிற்பகுதியில் பத்திரப்படுத்தினோம்.
 

சுமார் 10.50க்கு தங்குமிடத்துக் கணக்குகள் முடித்து லூட்ஸ் மாதா கோவில் நோக்கிப் புறப்பட்டோம்.
855 கிலோ மீட்டர் நாங்கள் ஓட வேண்டிய தூரம் என்று பார்த்தசாரதி காட்டியிருந்தார்  

டென்மார்க்கிலிருந்து வர 1227 கி.மீட்டர் இருந்தது. இது 855 என்ற போது சிறிது ஆறுதலாக இருந்தது.
வாகனம் செலுத்திய படி இடைவேளைகள் எடுக்கும் போது, அதில் பொதுத் தொலைபேசிப் பெட்டி வரும் போது பிள்ளைகளுடன்  பேசுவதுமாகச் சென்றோம். 12.15 மணியான போது போடுயக்ஸ் ஓலியன்ஸ்,  எனுமிடத்தில் வாகனம் ஓடும் போது நெடும் சாலை 4 வாகனங்கள் ஒரே நேரம் போகும் பாதைகளாக இருந்ததைக் கவனித்தோம். இது குறிப்பிடக் கூடியது தான். வேறு இடத்தில் இப்படி நாங்கள் காணவில்லை. துலூஸ்(ருலா)  நோக்கிப் போகும் போது தெரு மிக வளைவாக, பாம்பு வளைவாகச் சென்றது. ஒரே வேகத்தில் தான் வாகனங்கள் செல்ல வேண்டும். பின்னால் வருபவர்கள் தம்மை முன்னால் செல்ல விடும்படி ஒளியைப் பாய்ச்சித் தொல்லை தந்தபடியே இருந்தனர். விசேடமாக டென்மார்க் வாகனம் என்றதும் ஒரு நளினமாக இருந்திருக்கும் என்று எண்ணினோம்.
    

 

லைப் பகுதியானதால் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதி செல்லப் பாலங்கள். தலைக்கு மேலே பாலங்கள் வர அது இத்தாலி வெனிஸ் நகர நீர்ப் பாலங்களை நினைவு படுத்தியது. துலூஸ் – பாலங்களின் நகரம் என்றும் கூறலாம் போலத் தெரிந்தது. அலாசக்  எனும் கிராமத்தடியில் செல்லும் போது, அச்சு அசலாகக் கண்டி, நுவரெலியா மாதிரியே சுற்றிவர முன்புறக் காட்சிகள் இருந்தது.  

டிக்கடி தெரு வரிப்பணம் கட்டியபடியே இருந்தோம்.
 

சில இடங்களில் வெயில் அசல் வவுனியா போலவும் இருந்தது.  இங்கும் யாழ் நினைவு தானா என்கிறீர்களா? அது தானே உடலில் இரத்தமாக ஓடுகிறதே! மலைகளில் வீடுகள், தீப்பெட்டிகள் போலத் தென்பட்டன.
  

 

றொக்கமடுயர், பீச்மொன்ரற்    என்ற இடங்களில் வீடுகளின் அமைப்புகள் வித்தியாசமாகப், பழைய காலக் கிராமம் போலத் தெரிந்தது. கல்லு மலைகளாக, அதைக் குடைந்து அரை வட்டமாக வாகனம் செல்லப் பாதை அமைத்துத், தலைக்கு மேலும் வீடுகளாகத் தெரிந்தது. அதுவும் பாலங்களின் நகரம் தான்.
 

மொன்ரவுபான்  என்ற இடம் மலைகளின் அழகு நகரமாக, விவசாயப் பண்ணைகளாகக் காணப்பட்டது. இரவு 8.48 லும் இருட்டாகவில்லை, தெருவோரம் ஒரே காடாக, வானம் காட்டை முத்தமிட்டது. இரவு 9.30ற்கு லூட்சைச் சென்றடைந்தோம்.

     

———மிகுதியை அடுத்த அங்கம் 12ல் பார்ப்போம்……….

வேதா. இலங்காதிலகம்
ஓகஸ்,  டென்மார்க்.

16161859-ab

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 9

 

 நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 9

 (பயண அனுபவங்களும், சரித்திரத் தகவல்களுடனுமானது. படங்களின் மேல் கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.)

 

 பில் கோபுர ஒரு பக்க முடிவில் அரும் பெரும் காட்சியகமும்(மியூசியமும்) மறுபுற முடிவில் போர் வீரர், அதாவது மிலிட்டரி (எக்கோலா மிலிட்டரி) பாடசாலையும் உள்ளது.
 

கோபுரக் காட்சி அற்புதமானால், கோபுரத்து இரு பக்கமும் இந்த இரு கட்டிடங்களும் இன்னொரு அழகு போங்கள்!….இவைகள் அவசரத்தின் திட்டத்தில், ஒரு நாளில் ஓடி ஓடிப் பார்ப்பதல்ல, மிக ஆறுதலாக ரசித்துப் பார்க்க வேண்டிய இடங்கள் என்பது என் கருத்து. நாம் அவசரமாகப் பார்த்தோம்.
 

ந்தப் போர் வீரர் பாடசாலை 1700ன் நடுப் பகுதியில் கட்டப்பட்டதாம். 1784ல் நெப்போலியன் பொனப் பட்டாவும் இப் பாடசாலையில் தான் படித்து வெளியேறியுள்ளார்.

 
    

(ஈபில் கோபுரத்தினூடாக மிலிட்டரிப் பாடசாலை தெரியும் காட்சி.)

 வரது இளவயதுத் திறமைகள் இங்கு தான் உருவாகியதாம். அவரது மேலதிகாரிகள் ‘ அவரொரு சிறந்த கப்பலோட்டியாகத் திகழ்வார்’ என்று கூறினார்களாம்.
 

 பாடசாலை பெரிய பூங்காவுடன் அமைந்துள்ளது. இதன் மறுபுற முடிவு தான் ஈபில் கோபுரம். கோபுரத்து மறு பக்கம் அரும் பெரும் காட்சியகம். மனித உடலியற் (அனற்ரொமி) சாத்திரக் காட்சியகம் என்று ஒரு உல்லாசப் பயணி கூறினார். நாம் உள்ளே போகாததால்  அதன் விபரம் தெரியவில்லை.
நேரம் 7.30 ஆகியது.

     ( Hitler standing  )

னி நமது தங்குமிடம் செல்லலாம் என்று சென்று வாகனத்தில் அமர்ந்து, அறை முகவரியைக் கொடுத்தோம் பாதையைக் காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்தார் நவீனபார்த்த சாரதியார். சட்டலைட் சிக்னல் அவருக்குக் கிடைக்கவில்லைப் போலும். வாகனம் நிறுத்திய இடத்திலிருந்து மாறி வந்து கோபுரத்துப் பச்சைப் புல்வெளி முடியும் இடத்து ஓரத்தில் நிறுத்தி முயற்சித்தோம். இப்படி இவர் வேலை நிறுத்தம் செய்தால் எப்படி எமது இடத்திற்குச் செல்வது!
 

ற்பனை கன்னா பின்னாவென ஓடியது. வாகனக் கண்ணாடியை கீழே இறக்கி நவீன பார்த்தசாரதியை  வெளியே உயர்த்திப் பிடித்தபடி கூறுகிறேன் ‘எவனாவது ஓடி வந்து இதைப் பிடுங்கிக் கொண்டும் போகலாம்’…என்று. சட்டலைட் தொடர்புள்ள ஈபில் கோபுரத்தினடியில் சிக்னல் கிடைக்காது எமது வாகனம் நிற்கிறதே! இது மிக வேடிக்கை! என்று சிரிப்பு வேறு..வாகனம் நிறுத்த இடமில்லாத நேரங்களிலும், பார்த்தசாரதி வேலை நிறுத்தம் செய்த நேரங்களிலும், ஏன் சொந்த வாகனத்தைக் கொண்டு வந்தோம் என்று எண்ணியதுமுண்டு.

 ரியாக 8.30 மணிக்கு சிக்னல் வந்தது. அதாவது ஒரு மணி நேரம் பார்த்தசாரதி வேலை நிறுத்தம் செய்தார்.

 கோபுரத்தருகில் நாம் நின்றது மறக்க முடியாதது. உலக அற்புதத்தைச் சும்மா பார்த்திட்டு ஓடி வந்திடலாமா!

 

ல்ல வேளை பொலிஸ் அது..அதுவென வேறு பிரச்சனைகள் வரவில்லை. அது நிம்மதி தான். லாச்சப்பலை நோக்கிப் புறப்பட்டோம்.

 

ப்படியே சிறிது தூரம் வர ஒரு பெரிய சதுக்கம் வந்தது. நிறைந்த உல்லாசப் பயண மக்கள் கூட்டம். ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்தினோம்.

       

 

கீழே இறங்கி புகைப்படக் கருவியுடன் நடந்தோம். ஒரு சீனக் குடும்பம் தாங்கள் எல்லாம் பார்த்து முடிய, பாரிஸ் நகரப் படத்தை எம்மிடம் நீட்டி ‘இது வேண்டுமா?’ என்று கேட்டனர். ‘ஆமாம்’ என்று நன்றி கூறி வாங்கி, மள மளவென விரித்து நாங்கள் இப்போ எங்கே நிற்கிறோம் என்று பார்த்தோம். இது தான் கொன்கோட் சதுக்கம் என்று தெரிந்தது.

பாரிசில் மிகவும் பெரிய, சரித்திர சம்பந்தமான, விசேட சதுக்கம் இது.
இதன் ஆதிப் பெயர் லுயிஸ் 15இடம், அல்லது லுயிஸ் சதுக்கம் (பிளேஸ் லுயிஸ்எக்ஸ்.வி) என்று இருந்தது. சீன் நதியோடு அமைந்தது. அவென்யு டி சாம்ப்ஸ் இலுயிசீஸ் ஆரம்பத்தில் ருலறி காடின்சைப் பிரிக்கிறது. லுயிஸ் 16க்குப் பிறகு ஞாபகர்த்த நினைவாக அவரது உருவச் சிலையை இங்கு நாட்டுவதாக இருந்ததாம்.

———மிகுதியை அங்கம் 10ல் பார்ப்போம்.——

க்கம்   வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 8.

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 8.

 (பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்த …இது..படங்களின் மேல் கிளிக்கினால் பெஜீரிதாகப் பார்க்கலாம்.
.)

 லக அதிசய ஈபில் கோபுரத்தைக் கண்டதும், மேலே ஏறுவதில்லை என்று முடிவு எடுத்தோம். நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள், நிச்சயமாக ஒரு நாள் போதாது போல இருந்தது. நேரமோ 5.00 மணி பின் மாலையானது. சுற்றிப் பார்த்து, புகைப் படங்கள் எடுத்து, நீண்ட அழகிய புல்வெளியில் காலாற நடந்து, ரசித்து….என்று நேரம் வேகமாக ஓடியது.

      

 ந்தக் கோபுரம் 1889ல் உலகக் கண்காட்சிக்கு விடப்பட்டதாம். இரும்பின் ஆதாரத்துடன் மிகப் பெரிய பின்னற் தட்டி வேலைப்பாடுடன் உள்ளது. 700 திட்டங்களின்(டிசைன்களின்) போட்டியில் ஏகமனதாக இந்தத் திட்டம் தெரிவு செய்யப்பட்டதாம்.

 ங்கிலாந்து 7வது எட்வேட் இளவரசர் உத்தியோக பூர்வமாக 1889ல் இதைத் திறந்து வைத்தாராம். பிரெஞ்சுக் கட்டட அமைப்பு என்ஜினியர் அலெக்சான்டர் குஸ்டாவ் ஈபில் மற்றும் மவுறிஸ், கொச்சிலின், இமைல், நூகுயரும் – கட்டிடக் கலைஞராக (ஆக்கிடெக்ட் ஆக) ஸ்ரெபின், சவுவெஸ்ரார் ஆகியோரும் இதை உருவாக்கியுள்ளனர்.

 லராலும் மெச்சப்பட்ட இதன் உச்சியின் அன்ரீனாவை 1918ல் பிரெஞ்சு வானொலியும் 1957ல் பிரெஞ்சுத்  தொலைக் காட்சியும் பாவிக்கத் தொடங்கினர்.

 300 மீட்டர் உயரமும், 700 தொன் எடையும் கொண்ட கோபுரம் மிகச் சிறந்த அட்சர கேத்திர கணித முறைப்படி, காற்று, வேகம், கனம் என்பவற்றைத் தாங்கும் விதத்தில் அமைந்துள்ளது. இதன் நுனியின் அசைவு 4.75 இஞ்சுகள் அதாவது12 சென்ரி மீட்டருக்கு மேற்பட ஆடுவதில்லையாம்.
பாரீசின் அடையாளமாக  இது மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

 மூன்று மேடைகளாக அமைக்கப்பட்ட முதலாவது மேடை 57.63 மீட்டர் அளவு, அதாவது 189 அடியாகும். இக் கோபுர அசைவு, இதன் உச்சி முதலியவற்றைப் படிக்கும் அவதான நிலையமாகவும், உணவகம், பரந்த பக்கக் காட்சியினைத் தரும் ஸ்பேஸ் சினி பீல்ட்ம் அங்கு உள்ளது. தபால் நிலையம, விசேட ஈபில் கோபுர முத்திரையும் உள்ளது.

 தன் இரண்டாவது தட்டு 115.73 மீட்டர், அதாவது 379அடி 8 அங்குலமாகும். பாரீசின் பரந்த காட்சி, கடைகள், யூலியர்ஸ் வேர்ன உணவகமும் உள்ளது.

 மூன்றாவது தட்டு 276.13மீட்டர், அதாவது 905 அடி 11 இஞ்சுகளாகும். பாரீசின் சுற்று வட்ட இரவு-பகல் வியக்கும் காட்சி, கோபுர சரித்திரம் அறியும் வாய்ப்புடன் இன்னும் பல உண்டு.
அங்கிருந்து இரவில் கோபுர இரும்பு ஆரஞ்சு வர்ணத்தில் மிக அற்புதமாக இருக்கும் எனவும் வாசித்தோம்.

     

 இக்கோபுரம் பற்றிய சில சுவாரசியமான உண்மைகள்:

– இக் கோபுரத்தை 300 இரும்பு, உருக்குத் தொழிலாளர்கள் 2 வருடமாக உருவாக்கினார்களாம் (1997- 1889)
– கடையாணி தவிர்ந்த 15 ஆயிரம் இரும்புத் துண்டுகளும் 2.5 மில்லியன் கடையாணிகளும் பாவிக்கப்பட்டதாம்.
– 40 தொன் நிறக் கலவை (பெயின்ட்) பாவிக்கப்பட்டுள்ளதாம்.
– 1671 படிகள் நுனிவரை ஏறிப் போக உள்ளதாம்.
– ரெலிவிசன் அன்ரீனாவுடன் சேர்த்தால் இதன் உயரம்320.755 மீட்டர், அதாவது(1052அடி 4 இஞ்சி)யாகுமாம்.
– அடிப்பாகத்தில நிலஅளவு 2.54 ஏக்கர் ஆகும்.
– தை 26-1887 தொடங்கி பங்குனி 31- 1889 வரை கட்டப்பட்டது.
– 7.34 மில்லியன் கிலோ இரும்பு (8092.2தொன்) பாவிக்கப்பட்டுள்ளது.
– எலிவேட்டர் அமைப்பு மட்டும்946 கிலோ(1042.8 தொன்) நிறையாகும்.
– இதைக் கட்ட 7.8 மில்லியன் பிராங்க் செலவானதாம்.

மிகுதியை அடுத்த அங்கம் 9ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-11-2006.
 

pink-swirl-divider-1

நவீன பார்த்த சாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 7.

நவீன பார்த்த சாரதியெனும் நவிகேட்டருடன் நாம். 7.

( பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்த இது.படங்களின் மேல் கிளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்..)

நெப்பொலியனா!….. போதும்! என்றளவுக்கு மக்கள் மனநிலை உருவானது.

நெப்போலியன் ஃபொன்ரெயின்புளோவில் அதிகாரத்தைக் கைவிட்டு அரசன் என்ற பதத்துடன் சுயாதிபத்தியத் தீவு எல்பாவில், வருமானம் 6 கோடி பிராங்க் பணம் பிரெஞ்சு அரசு கொடுக்க, 10 மாதங்கள் இருந்தான்.  மறுபடி களவாக பிரான்சுக்கு ஓடி வந்தான்.
 

டை திரட்டித் தொடர்ந்த போரில் 1815ல் வெலிங்டன் பிரபுவிடம் வோட்டர்லூவில் தோற்றான். அரசைக் கைவிட்டு விலகும்படி வற்புறுத்தப் பட்டான். தனது மகன் நெப்போலியன்2 க்காக ஒத்துக் கொண்டான். அவனால் தப்பியோட முடியாததால் கப்டன் மெயிட்லான்டிடம் சரணடைந்தான்.
 

தென்னாபிரிக்காவிலிருந்து 1000மைல் தூரத்திலுள்ள சென்ற்.கெலேனா பாறைத் தீவிற்கு அட்மிறல் குக் பேர்னால் அழைத்துச் செல்லப்பட்டு 1815-10-16ல் விடப்பட்டான். ஒரு வருடத்திற்கும் மேலாக நோய் வாய்ப்பட்டு வைகாசி 5ல் 1821ல் இறந்தான்.

 துருப்புக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டான். 1840ல் அவனது மிகுதியான உடல் எச்சங்கள் பிரான்சுக்குக் கொண்டு வந்து ஹோட்டெல் டி இன்வலிட்ஸ்ல் வைக்கப்பட்டதாம். இன்னொரு இணையத் தளத்தில் ‘ லா மூசி டி எல் ஆமி ‘ பாரிசில் வைக்கப்பட்டதாகவும் வாசித்தேன். இவை சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களாகும். இரண்டு இடமும் ஒரே இடமாகவே இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
 

யுனைற்றெட் ஸ்ரேற்ஸ்ன் ஆமி அக்கடமி வெஸ்ற் போட்டில்   ‘ நெப்போலியனிக் மிலிட்டரித் தியறி ‘ என்ற பாடமும் இருக்கிறதாம்.
 

போர்த்துக்கல், வடக்கே எல்ப ஆறுவரை கைப்பற்றி, மிகுதி ஐரோப்பாவைக் கைப்பற்ற முடியாத மாமனிதன் நெப்போலியன் பற்றிச் சுருக்கமாக இது வரை பார்த்தோம்.

வெற்றி வளைவிலிருந்து 1.7 கி.மீட்டரில் ஈஃபில் கோபுரம் உள்ளது. இந்த வளைவு இருக்கும் இடத்திலும் பார்க்கத் தாழ்வான நிலத்திலே தான் கோபுரம் அமைந்துள்ளது. குவைபான்லியால் ஈஃபில் கோபுரத்தடியை வந்தடைந்து, வசதியான இடத்தில் வாகனத்தை நிறுத்தி, இறங்கி நடந்தோம்.

ஓ!…பிரமாண்டம்!…..வந்து சேர்ந்து விட்டோம் என்று மனம் மகிழ்ந்தது. முக்கியமாக என் கணவர் இங்கு (France) வர மிக ஆவல் கொண்டிருந்தார். அதனாலேயே இப் பயணம் முன்னெடுக்கப் பட்டது.

து ஒரு கட்டிடமல்ல.

ரும்பாலான பின்னல் தட்டி வேலைப்பாடாக இருந்ததும், அதன் நிறமும் (மண்ணிற செம்பு நிறமாக) பார்த்தவுடன் என்னை  ஏமாற்றமடைய வைத்தது. கோபுரத்தைப் பார்த்தும்

   

‘பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்’..பாடலும் ஜீன்ஸ் பிரசாந் ஐஸ்வர்யாராயுமே நினைவுக்கு  வந்தனர்…..என்ன!….சிரிப்பு வருகிறதா!…அப்படியே சிரித்தபடி ..இருங்கள்..                                                                                                                                                                                                                                                                                                                               

மிகுதியை   அடுத்த அங்கம் 8ல் பார்ப்போம்!…..

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-11-2006.
 
 

12965393-se

Previous Older Entries Next Newer Entries