11. (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).11

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 11

1851ல் நிலத்தை ஆக்கிரமித்த வெள்ளையருக்கு கூலி வேலைக்கு ஆட்கள் பஞ்சம் வந்ததாம். பிரித்தானியாவில் இருந்து குற்றவாளிகளை நாடு கடத்தி அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு வந்தனராம். குற்றவாளிகள் நிலமாக அவுஸ்திரேலியா மாறியதாம். குற்றவாளிகளால் உருமாறிய தேசம் இது என்கின்றனர். இது வாசித்து அறிந்த தகவல்.
சுற்றுலா முடிந்த பின்னர் வந்து சாப்பிட்டோம். அதன் பின் வாடி வீட்டிற்குப் (அறைக்கு ) போய் சமைப்பதா!…..மறுபடி ” கொப் ஓன் கொப் ஓப்ஃ ” பணம் கட்டி காலையில் ஏறிய பேருந்தில் ஏறிச் சுற்றினோம். ஓம்! 3 தடவை கன்பரா சிற்றி வலம் – நகர வலம் வந்தோம். மனதில் கன்பரா பாடமாகிவிட்டது.
கன்பரா சென்ரர் பெரிய மால் மாதிரி. அதனுள் யெர்மனிய அல்டியும் இருந்தது பாருங்கள்

img_00261

img_01001-jpg-can

கன்பரா சென்ரர் நடக்கும் தெருவிலொரு சிலை

. பழைய பார்லிமென்ட் கட்டிடம்,

img_00791-jpg-can

நஷனல் மியூசியம்,

img_00831-jpg-can

சீன தூதுவராலயம் பாருங்கள்

img_04921-jpg-can
உயர்ஸ்தானிகராலயங்கள் அதாவது வெளிநாட்டுத் தூதுவரலயங்கள் எல்லாம் அடுத்தடுத்து அருகருகாக மிக மிக அழகாக அவரவர் பாணியில் கட்டப்பட்டு கண்கவரும் விதத்தில் கன்பராவில். உள்ளது சிறப்போ சிறப்பு. National Gallary க்கு முன்புறம் வித்தியாசமான கலை வடிவம் பியேர்ஸ் .

img_00781-jpg-can
பேருந்தில் சுற்றிய நேரங்கள் தவிர மற்றப் பொழுதுகளில் நாய் நடை, பேய் நடை தான். சாப்பிடும் போது எனக்கு இனி போதும் என்றால், ” சாப்பிடு!…சாப்பிடு நடக்க வேண்டுமல்லவா! ” என்பார் இவர். நடந்தது போதுமென்று கால்கள்    கெஞ்சியது.  கணவரிடம் கூறினேன் அறைக்குப் போனால் இரவு சாப்பிட திரும்ப வர முடியாது சாப்பாடு வாங்கிக் கொண்டு போவோம் என்று. முதலே பீட்சா கடை பார்த்து வைத்தோம். அவுஸ்திரேலியா வந்து இன்னும் பீட்சா சாப்பிடவில்லை. என்னோடு சேர்ந்து அவரும் மரக்கறி பீட்சா தான் வாங்கிக் கொண்டு அறைக்குப் போனோம். மந்திரா வாடிவீட்டைப் பாருங்கள் yellow.

img_01061-jpg-can

img_04701-jpg-can

யன்னலூடாக கறுப்பு மலை, அயின்ஸ்லி மலை தெரிகிறது.

img_01161-jpg-can

img_04601-jpg-can24

உலகத்திலேயே உனக்குப் பிடித்தமானது எது என்று என்னைக் கேட்டால் என் கணவருடன் ஊருலா போவது என்பேன். ஆனால் என்ன!.. சேர்ந்து இணையாக நடக்காமல் விடு விடென முன்னே ஓடுவார். ” என்னையும் கொஞ்சம் பாருங்களேன் ”   என்பேன். மறந்து போய் ஓடி நடுவில் நினைவு வந்து பக்கமாகப் பார்த்து மெதுவாகுவார் நான் வந்து சேரும் வரை. எனக்குச் சிரிப்பான சிரிப்புத் தான். சில வேளைகளில் ஆளை விடாமல் கையைக் கொளுவுவேன். அப்போது ஓட முடியாது தானே.! பேசாமல் குளப்பாமல் வருவார்.

அருமையாகக் குளித்து ஆறுதலாக தளர்வான ஆடையணிந்து உணவருந்தி நாளை காலை 9 மணிக்கு சிட்னி பயணமாவது என்று திட்டமிட்டோம்.
பீட்சா சப்பிட்டபடி படமும்,

img_01241

img_01251-jpg-can

அறைகளையும் படம் எடுத்தேன். கணவருக்குப் படம் எடுப்பதில் ஆர்வமில்லை. ஆனால் என்னை அதை எடு இதை எடு என்று நன்கு தூண்டுவார்.
பாத்திரங்கள,     ஆடை கழுவும் யந்திரம், மின்சார கேத்தல், சமையலறை பாத்திரங்கள் என்று நாமே சமைக்கும் வசதியுடைய குடித்தன வாடி வீடு மந்திரா.
யார் சமைப்பது!…
ஆக காலையில் இவர் எழுந்ததும் ஒரு கிண்ணம் சுடு நீர் குடிப்பார். அது மட்டும் சுட வைத்தோம்    அதையே ஆற வைத்து போத்தலில் ஊற்றிக் குடித்தோம் பணம் கொடுத்து வாங்காமல்.
நேரத்தோடு படுத்ததால் காலையில் நேரத்தோடு விழித்திட்டோம். எழுந்து தயாராகி அறையைப் பாரம் கொடுத்துப் புறப்பட்டோம்,

img_01141-jpg-can

கன்பரா பயணம் முடிகிறது. டென்மார்க் வீடு வந்து பல விவரங்களை கூகிளில் பார்த்த போது முருகன் கோவிலை எப்படி தவற விட்டோம் என்று குறை இருந்தது.
மிகுதியை அடுத்த பதிவு 12ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
11- 2016

ainslie-canberra

 

 

10. (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).10

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 10

கன்பரா தலைநகர நிர்வாகம் சார்ந்த நாடு. நாடாளுமன்ற வீடு என்கின்றனர். 1908ம் ஆண்டு இது அவுஸ்திரேலியாத் தலைநகரமாக ஆகலாமென்ற எண்ணம் உருவானது. 1913ல் இதைத் திட்டமிட்டு உருவாக்கத் தொடங்கினர், அதாவது இது திட்டமிட்டு உருவான நகரம். மெல்பேர்ணிலிருந்து 650 கி.மீட்டர் வடகிழக்கில் உள்ளது.

1927ல் கன்பெரா தலைநகராக அறிவிக்கப் பட்டது. கன்பரா நாடாளுமன்றத்தை 1988ல் ஆஸ்திரேலிய இராணி இரண்டாம் எலிசபெத் திறந்து வைத்தாராம்.
1788ல் வெள்ளையர் வந்து அவுஸ்திரேலியாவில் இறங்கிய போதே 8 இலட்சம் பழங்குடியினர் அங்கு வாழ்ந்துள்ளனர். 250 தனி மொழிகள் இருந்ததாம். முர்ரே ஆற்றுப் பகுதியில் குடியேறினராம். 1824ல் தானாம் வெள்ளையர் கன்பெராவில் குடியேறினராம். கறுப்பு மலையில் (black mountian ) நிலம் வாங்கி மேய்ச்சல் மந்தைகள் ஆரம்பித்து ஊரை உருவாக்கினார்களாம்.

img_00621-jpg-can

img_00572-jpg-can

கறுப்பு மலை பற்றிப் பின்னரும் பார்ப்போம்.
கன்பெராவில் மக்கள் பரவலாக வாழ்கின்றனர். ஒரு தனி வட்டாரத்தில் பிறநாட்டு உயர் ஸ்தானிகர் ஆலயங்கள், தூதரகங்கள், உயர் நீதிமன்றம்,

img_04771-jpg-can

img_00531-jpg-can

முதலாம் இரண்டாம் உலகப் போரில் இறந்த வீரர்களுக்கு நினைவிடங்கள்,

img_00591-jpg-can

Parliment (new)

img_00601-jpg-can

பல்கலைக் கழகம்,

img_00881-jpg-can

நாணயம் உருவாக்கும் இடம், கலை சினிமா ஓவியத்திற்குரிய இடங்கள் எனப் பல உள்ளன. சுமார் 3½ இலட்சம் மக்கள் வசிக்கின்றனராம். பழங்குடி மக்கள் மொழியில் கம்பீரா என்றால் ஒன்று கூடுமிடமாம். அதனால் பின்னர் இதை வெள்ளையர்கள் கன்பரா என்று பெயராக்கினராம்.
உயரமான மலை கறுப்பு மலை தான் மேற்குக் கன்பராவில் 812 மீட்டர் (2664 அடி) உயரம் பேர்லி கிறிபெஃன் குளத்தின் கரையில் உள்ளது. மொலொன்கோ என்ற ஆறு இதை மறித்து குளமாக்கியுள்ளனர்.   11கி.மீட்டர் நீளம், சராசரி 4 கி.மீட்டர் ஆழம், 1.2 கி.மீட்டர் அகலம் உள்ளது இந்தக் குளம். சுற்றி வர தேசிய கலறி (சித்திர கூடம்), மியூசியம் (காட்சிச்சாலை) நூலகம், சர்வகலாசாலை என்று அனைத்தும் உள்ளது. மலை உச்சியில் ரெல் ஸ்ரா கோபுரம் உள்ளது.

img_1587-1

 

1980ல் இதை திறந்தார்கள். மின்சாரம் வானொலி அனைத்தும் இயங்குகிறது. கறுப்பு மலையில் 100 வகைப் பறவைகளும், 500 வகைத் தாவரங்களும், 5000 வகை பூச்சிகளும் வாழ்கின்றனவாம். அருகில் சிவப்பு மலை என்றும் உள்ளதாம். முன்பிருந்தவர்களால்; அதன் சிவப்பு மண்ணின் காரணமாக சிவப்பு மலையெனப் பெயர் வந்ததாம்.

கன்பராவில் ஒரு பெரிய முருகன்  கோவிலும் உள்ளது.
எனது படக் கருவியில் காட் டிஸ்க் ல் இடம் முடிந்து விட்டது. இன்னும் நிறையப் படங்கள் எடுக்க இருக்கிறதே. சுற்றுலா முடிய சுப்பர் மாக்கெட் தேடினோம்.

5095879650_4_water-fountain-canberra-centre

கன்பரா சென்ரர் புகுந்தோம். புதிதாக ஒன்று வாங்கினோம்.

டென்மார்க்கில் பயணத்திற்கு முன்னர் நான் மசாஜ்க்குப் போய் வரும் போது எனது கை மணிக்கூடை விழுத்தி விட்;டேன். வந்த வழியில் உள்ள இடமெல்லாம் பெர்லின் அபுதாபியில் கூட மணிக்கூடு தேடினோம். வெள்ளி தங்க நிறம் கலந்த என் விருப்பத்திற்கமைய கிடைக்கவில்லை. இங்கும் தேடினோம். மலிவு விலையும் போட்டிருந்தனர். ஒன்று கிடைத்து வாங்கினோம்.

ca-watch

என்னையறியாமல் கையை நேரத்திற்காகப் பார்த்துப் பார்த்து ஏமாந்தேன் பல தடவை. இப்போது உண்மையில் மிக மகிழ்வாக இருந்தது ஒன்று கிடைத்தது. குழந்தைப் பிள்ளை போல மகிழ்ந்தேன் என்று கூறலாம். கன்பரா சென்ரர் அருகில் நடந்த  போது    ஒரு  படம்   உருவம்   வித்தியாச   கலை  வேலைப்பாடாக   இருந்தது.

img_00971-jpg-can
மணிக்கூடு வாங்கி அங்கு இருந்து நின்று என்று படங்கள் எடுத்த பின்னர்
” சிற்றி லூப்பில் சுற்றுவோமா! ” என்றார் கணவர். ” சுற்றலாமே ” என்று ஏறிச் சுற்றினோம். இந்தப் பேருந்து இலவசம். விசித்திரமாக 221 இலக்கம் போட்ட பெரிய கட்டிடம் ஒன்று கண்டோம். அது பல கந்தோர்கள் உள்ள கட்டிடம் என்று வாசித்து அறிந்தேன். பாருங்கள்.

img_00441
மிகுதியை அடுத்த பதிவு 11ல் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-2016

 

header_australia_canberra

9. (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்)9.

melbourne-star

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 9

உங்களிற்கு மெல்பேர்ண் நட்சத்திர வளையம் பற்றிக் கூறத் தவறிவிட்டேன். சில பல தடவை அதன் அருகோடு வாகனத்தில் சென்றோம். இறுதியாக டென்மார்க் வர விமான நிலையம் செல்லும் போது அதன் இரவு அழகைக் கண்டோம். இரவு ஒளி வெளிச்சம் மிக கவர்ச்சியாகக் கண் பறித்தது. மறுபக்கம் தம்பி மகன் இருந்தார். இரவு ஒளி ஜாலத்தை படம் எடுக்க முடியவில்லை.  ஒளி ஜாலம் கூகிள் படமாக இங்கு தருகிறேன். 

melbourne-attractions-the-southern-star-observation-wheel-melbourne-b5x8wr

southernstar1

120 அடி உயரம். 2008ல் திறந்தனர். உடனே 40 நாட்களால் தொழில் நுட்பக் கோளாறால் மூடினார்கள். பின்னும் பல தடவை திறப்பதும் மூடுவதுமாக இருந்துள்ளது. இதில் (சில்லில் கபினில் இருந்து) சுழரும் நேரம் அரை மணித்தியாலம். டிக்கட் வாங்க கியூ தான். டொக்லாண்ட் பகுதி நீர்அ ருகே உள்ளது.

சரி…..
இப்போது அல்பெரி நகரம் பற்றிச் சிறிது பார்ப்போம். இது முர்றே ஆற்றின் வடக்கில் உள்ளது.   இதில் முறே ஆறு அல்பெரி கன்பெரா காண்கிறீர்கள்.

canberra_murry-river

45,627 சனத் தொகை என்று கூறப்பட்டது இன்னும் சிறிது கூடுதலாக இப்போது ஏறியிருக்கும். மத்தியதரைக் கடல் சுவாத்தியம் என்று கூறப்பட்டுள்ளது.

img_04381-jpg-can-5

நிறைய வைன் தயாரிப்பிற்குப் பெயர் போனதாம். 1888ல் முதலாவது பாடசாலை கட்டப் பட்டதாம். கன்பெரா மெல்பேர்ணிற்கு நடுவில் உள்ள இடம்.
மாலை ஏழரை மணியளவில் கன்பெரா சென்றடைந்தோம். பேருந்து நிறுத்தத்திலேயே பெரிய அலுவலகம் உள்ளது 16ம் திகதி சிட்னி செல்லும் திட்டம். செல்வதற்குப் பேருந்து வசதியையும் பார்த்து வைத்தோம். தெரியாத புது இடத்தில் அது ஒரு பிரச்சனை முடிந்தது போல ஆறுதலாக இருந்தது. எங்கே எப்படி என்று முழுசத் தேவையில்லைப் பாருங்கோ!…..
சிட்னியில் தங்கையின் ஒரு மகளும் மகனும் உள்ளனர். மூன்றரை மணி நேரப் பேருந்துப் பயணமே.
சரி இனி நாம் இரண்டு இரவு கன்பராவில் தங்குவதற்குப் பதிவு முன்னதாகவே செய்யவில்லையாதலால் நடை தூரங்களில் தான் வாடி வீடு தேடினோம். முதலிரண்டில் இடமில்லை என்றனர். காரணம் பாராளுமன்றக் கூட்டமாம். 3 வதாக மந்திரா வாடி வீட்டில் இடம் கிடைத்தது. விலை அதிகம் தான். இரண்டு இரவிற்குப் பதிந்து குளித்து வெளியே சாப்பிடக் கிளம்பினோம். களைப்பு தான் மழையும் தூறியபடியே இருந்தது. வேறு எங்கும் சுற்றவில்லை. சாப்பிட்டதும் வந்து விட்டோம். இரவு, மழைத் தூற்றல் இவரின் கையைப் பிடித்தபடி தாண்டித் தாண்டி வந்தோம். குப்பையோ, அருவருப்போ என்றபடி நடந்து வந்து சேர்ந்திட்டோம்.
இரவு நல்ல தூக்கம் கொண்டு எழுந்தோம்.
(15ம் திகதி. 2016 புரட்டாதி ) காலையில் பார்த்தால் பாதைகள் துப்புரவாக அழகாக இருந்தது. இரவு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.
பேருந்துக் கந்தோரிலேயே நல்ல வசதியான உணவகம் சிறிது நடை தூரத்தில் இருந்தது. சான்விச் பால் தேநீருடன் காலையுணவு முடித்தோம். நகரச் சுற்றுலாவை அனுபவிக்க பயணச் சீட்டுப் பெற்றுத் தொடர்ந்தோம். மாலை வரை எத்தனை தடவையும் இதில் சுற்றலாம். இதில் ஏறிச் சுற்றும் போது ” சிற்றி லூப் ” என்று இன்னொரு பேருந்து இலவசமாக ஓடியது. ஏறிச் சுற்றலாம் என்றும் கண்டோம் . canberra center

img_00431

போரில் இறந்தவர்கள் நினைவிடம். முழு சரித்திரம்,  உருவங்கள்,  ஆயுதங்கள் என்று பல உள்ளே காணலாம்

img_00541-jpg-can

மெல்பெர்ண் போன்று இங்கு வானளாவிய கட்டிடங்கள் குறைவு. நெருக்கடியற்ற இடைவெளிகளுடன் அமைந்திருந்தது. அமைதியாக, இயற்கை அழகுடன் நகரம் காட்சியானது. சிறிது குளிராக இருந்தது.

கன்பெரா புதிய பாராளுமன்றக் கட்டிடம் கீழே காண்பது
மிகுதி அடுத்த பதிவு 10ல் காணுங்கள்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
17-11- 2016
download

8.அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 8

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 8

காப்டன் குக் அவுஸ்திரேலியாவைக் கண்டு பிடித்தார் என்பது அச்சடித்த கதை. யாரா நதிக்கரையில் தான் மெலபேர்ண் நகரம் உள்ளது. பல தடவை அந்த நதிப் பாலத்தினூடாகப் பயணித்தோம்.

img_03781

img_04111

யாரா மலையிலிருந்து யாரா நதி வருகிறதாம்.

travel-map-yarra

பாதிப் பகுதிக்கு மேல் பாலைவன நாடு. அவுஸ்திரேலியா மேய்ச்சல் நாடு தான் புல்வெளி நாடு என்பதால் ஆடு, மாடு பெருகியபடியே தான் உள்ளன. பல கோடிக் கணக்கில் மாடுகள் இறைச்சிக்கும் பாலுக்காகவும் உள்ளன. குயீன்ஸ்லாந்திற்கு அடுத்தபடியாக விக்டோரியா மாநிலத்தில் நிறைய மாடுகள் உள்ளன. இறைச்சியை சுயதேவை போக ஏற்றுமதி செய்கின்றது.
மிகப் பெரிய இரும்பு உற்பத்தி உள்ளது. நிலக்கரி, செம்பு, ஈயம் உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. முன்பு கம்பளி உரோமத்திற்குப் பெயர் போனது. இப்போது அதன் சந்தை நிலை குறைந்துள்ளதாம்.
1823ல் மிகப்பெரிய தங்க வேட்டை ஆரம்பித்தது. 1850 லிருந்து உலகம் முழுதும் தங்க வேட்டைக்காக அவுஸ்திரேலியாவிற்குப் படையெடுத்ததாம். அதனாலேயே மிகப் பெரிய சனப் பெருக்கம் ஏற்பட்டதாம். அதனால் நாடும் முன்னேறியதாம். விக்டோரியா மாகாணம் தங்கத்திற்கு முக்கிய இடமானது. மெல்பேர்ண் நகரம் தங்க வேட்டைக் காலத்திலே தான் பெரிய நகரமானது. தங்கம் பதுக்கி வைத்த களஞ்சிய இடமாக இருந்தது. பலராட் எனும் நகரம் மிகப் பிரபலமானது 1850களில். இன்றும் தங்கம் அங்கு எடுக்கிறார்களாம். சுற்றுலா மக்களிற்காகவும் தங்கம் எடுக்கும் முறைகள் சுரங்கங்கள் சென்று பார்வையிட முடியும். மெல்பேர்ணிலிருந்து ஒரு மணி நேரப் பயணமே.

shire-map2

படத்தைப் பாருங்கள். இவை சிறிய தகவல்கள்.

img_04001

இங்கு காணுவது நஷனல் கலறி ஒப்ஃ விக்டோரியா.(National gallery of victoriya ) கட்டிடம்.
இனி பயணத்திற்கு வருவோம்.
காலை 8.00 மணிக்கும், பகல் 12க்கும், மாலை அதாவது இரவு 10க்கும் பேருந்து கன்பராவுக்குச் செல்ல இருந்தது. நாம் 14ம் திகதி-8-2016 புதன் கிழமை பகல் 12 மணிக்குக் கன்பரா செல்லும் பேருந்து எடுக்க நேரத்தோடு புறப்பட்டோம். தங்கை கணவர், புதுப் பொண்ணு மாப்பிள்ளையுடன் முதலில் மெல்பேர்ண் வக்ரதுண்டா விநாயகர் கோவிலுக்குப் போனோம்.

img_04261
1992ல் கோயில் உருவானது. 2013ல் புதிய மண்டபமும் தேர் வெள்ளோட்டமும் நடத்தினார்களாம்.

p4050242

Ethu   maddum   google photo.

இந்தப் பெயரை கூகிளில் தேடினால் படங்கள் விபரங்கள் காணலாம். அங்கு தொழுகை முடிய புறப்பட்டோம். மெல்பேர்ண் நடுப் பட்டினம் செல்ல 45 நிமிடங்கள் மகிழுந்துக்கு எடுக்கும்.
” சவுதேண் குறொஸ்” பேருந்து நிலையத்தினுள் வந்து மாப்பிள்ளை எங்களை பேருந்தில் ஏற்றி விட்டார்.

e114_5856

மனைவியார் தெருவில் வாகனத்தை உருட்டி நேரத்தைப் போக்கினார் தரிப்பிடப் பிரச்சனையின்றி.

கன்பரா செல்லும் பேருந்தில் சாரதி வரிசையின்றி மற்றப் பகுதி முதலிரு இருக்கையையும் பாய்ந்து பிடித்தாச்சு – படம் பிடிக்க வசதியாக.

img_04301-jpg-canbara

காலையுணவு சாப்பிட்டது தான் பகலுணவின்றி பயணித்தோம். கடற்கரையோடு வாகனம் ஓடலாம் என்று ஊகித்தோம் அது தவறாகிப் போனது ஏமாற்றமே
வெட்டவெளிப்புற்தரையும் செம்மறி ஆடுகள், மாடுகள், குதிரைகள் என்று மேய்ந்த படியிருந்த காட்சிகள் பசுமை போர்த்தி கண்ணுக்குக் குளிர்மையாக இருந்தது.

img_04311-jpg-can-2

img_04341-jpg-can3
அவுஸ்திரேலியா நாட்டுப் புறங்கள் இலண்டன் போலத் தான். புல்வெளிப் பிரதேசம் என்றும் அவுஸ்திரேலியாவைக் கூறுவதுமுண்டு.
கன்பரா செல்லும் பேருந்துப் பயணத்தில் கலங்கலாக ஒரு ஆறு நடுவில் தென்பட்டது. இது முர்றே ( ) ஆறாக இருக்கலாம்.
பின்னர் 3 மணி நேரத்தால் வெட்ட வெளிப் பிரதேசம் மாறி,   தூரத்தில் ஒரு கிராமம் மாதிரித் தென்பட்டது. அது அல்பெரி நகரம் தான். 4 மணிக்கு அல்பெரி புகையிரத நிலையத்தில் ஆட்களை ஏற்ற வண்டி நின்றது.

img_04431-jpg-can-9

img_04441-jpg-canbe-10

யாரும் ஏறவும் இல்லை இறங்கவுமில்லை. இன்னும் சிறிது தூரத்தில் வடக்கு அல்பேரியில் சாப்பிட நிற்பாட்டினார் சாரதி.
அப்பாடா எமக்குக் கொலைப் பசி. அவர்கள் வழக்கமாகச் சாப்பிடும் இடத்தில். ஓடிப் போய் சாப்பிட்டோம்.

albury-north

This one is google photo

img_04501-jpg-can-15

img_04541-jpg-can-18

பின்னர் ஒன்றிரண்டு படங்கள் எடுத்தோம்.

இனி அடுத்த பதிவு 9 ல் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
ஐப்பசி 2016.

ssssssss-c

7. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 7

img_03031
(பெடரேசன் சதுக்க வாசல் 2 பேருந்து தயாராக உள்ளது. ஏறினால் மெலபேர்ண் சுற்றலாம்.)

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 7

 

மெல்பேர்ண் நகரம் சுற்றிப்பார்த்தல்…..
என்ன!.. மழைத் தூற்றலாக இருந்தது. எடுத்த படங்கள் மழைத்துளிகளுடன் இருந்தது. அதனால் எங்கும் இறங்கிச் சுற்றவில்லை. வாகனத்திலேயே விபரங்களை ஒலி பெருக்கி மூலம் அறிந்தோம்.
ஆம் வாகனத்தில் ஏறும் போதே காதில் வைத்துக் கேட்க மின்சார இணைப்பு தருகிறார்கள். எந்த மொழியில் தேவையோ அதற்குரிய இலக்கங்களை அழுத்திக் கேட்கலாம்

img_01761
வானெட்டும் கட்டிடங்கள் மலைப்பாக இருந்தது. ” அமெரிக்காவும் இப்படித் தான் இருக்குமோ ” என்றேன் இவரிடம்.
பல்கலைக் கழக வைத்தியசாலைக் கட்டடம்,

(எனது படம் மழைத்துளியோடு எடுத்தது. அடுத்து வருவது கூகிள் படம்.)img_03121

medical-building

கிங்ஸ் டொமைன்ஸ் பாக், குவீன்ஸ் விக்டோரியா பூங்கா பூக்கள் கடிகாரம்,

img_03991

img_04161-jpg-floral-clock

google photo   of flora clock 25561615-the-floral-clock-and-the-statue-of-king-edward-vii-in-the-queen-victoria-gardens-in-melbourne-in-aus

and fountain   walker-fountain-kings-domain-melbourne-water-featu

கான்சர் வைத்தியசாலைக் கட்டிடம்,  உலகில் அதிக தோல் கான்சர் அவுஸ்திரேலியாவில் தானாம்.  மிக அழகான கட்டிடம். முழுதாக என்னால் எடுக்க முடியவில்லை ஆதலால் இதுவும் கூகிள் படமே.

comprehensive-cancer-center

நாற்சதுர விளையாட்டிடம் ஸ்ரேடியம்  ஏஏஎம்  பாக் என்று கூறும் இடம்.

img_04221

This is my photo and down google....AAMI park   (Melbourne Rectangular Stadium)

1024px-aamipark

பாராளுமன்றம் என்று விசேட இடங்களை விபரித்தபடி பயணம் தொடர்ந்தது.

img_04191

இப்படி மரத்தைக் கண்டதும் தென்னை பனை என்று மனம் ஏமாந்தது. 

எங்கு இறங்கிப் பார்க்க விருப்பமோ அங்கு இறங்கிப் பார்த்து அடுத்த அதே இன வாகனம் நிற்கும் தரிப்பிடத்தில் பயணச் சீட்டைக் காட்டி ஏற முடியும்.

எமக்கு உள் நாட்டிற்குள் விமானப் பயணம் செய்ய சிறு பயணப் பெட்டி ஒன்று (traveling bag) வாங்க வேண்டிய தேவையாக இருந்தது.
வாகனச் சுற்றுலா முடிய நாம் உணவு உண்டோம். சீஸ் பேகரும் மில்க் ஷேக்கும் தான். ஆம் ஆரோக்கியமற்ற உணவு தான். அவசரத்திற்கு வேறு வழியில்லை. சுற்று வட்டத்தில் கடை தேடிப் புகுந்தோம்.
மெல்பேர்ண் முடிய கன்பரா நகரம் செல்வது எமது திட்டம். ஆம் பேருந்தில் கன்பரா செல்லும் திட்டம்.
பேருந்து நிலையம் எங்குள்ளது என்று பயணப் பெட்டி வாங்கிய கடையிலேயே விசாரித்த போது ” சவுதேன் குறொஸ் ” க்குப் போக வேண்டும், டிராம் வண்டியில் பயணிப்பது உள் நகரத்தில் இலவசம். இந்தப் பக்கத்தால் போய் அந்தப் பக்கம் திரும்பி வருகிற டிராமில் ஏறுங்கள் 3வது தரிப்பிடத்தில் இறங்குங்கள் என்று அழகாகக் கூறினார்கள்.
இதன் படி துணிந்து ஏறிச் சரியாகப் போய் இறங்கி விசாரித்தோம். அழகாக விபரங்களை எழுதித் தொலை பேசி இலக்கத்துடன் தந்தனர்.

stores_located_in_southern_cross_station

stock-photo-melbourne-australia-november-ticket-office-and-woolworths-supermarket-at-southern-cross-336538412

திரும்பவும் அதே போல டிராம் ஏறிய இடம் வந்து சேர்ந்தோம். தெரியாத இடத்தில் இதை ஒரு சாதனை போலக் கருதி எங்களை நாங்களே மெச்சினோம்.
ஏன் கன்பராவுக்குப் பேருந்துப் பயணம்?…. புகையிரதம், விமானம் வேகமாகப் போகும் காட்சிகள் பார்ப்பது குறைவாகும். பேருந்தில் அழகாகப் பார்த்துப் போகலாம். ஆனால் கன்பராவிற்குப் பேருந்து 8 மணித்தியால ஓட்டம், பரவாயில்லை என்று முடிவெடுத்தோம்.
இப்போது தம்பி மகன் சுபோதனுக்கு தொலை பேசியில் கூறினோம் நாம் வீடு வரத் தயார் என்று. அவரும் வந்து கூட்டிப் போனார். நடுப் பட்டினம், வாகனம் நிறுத்தும் பிரச்சனையால் இந்த ஏற்பாடு.
சரி இரவாகுதே இரண்டுங் கெட்ட நேரம் இரவுணவு வாங்கிப் போவோம் என்று தம்பி மகனிடம் கூற சரி என்று றிச் மகால் (waymont)  உணவகம் சென்றோம்.  

rich-mahal

Enter a caption

(last 3 pics google)

என்ன வாங்கலாம் என்றால் செவ்வாய் கிழமைகளில் அப்பம் செய்வார்களாம் ஒருவர் சுட்டுக் கொண்டு நின்றார். அதை கொம்போ -1 கொம்பொ – 2 என்று பணிக்க (ஓடர் பண்ண) வேண்டுமாம். எடுத்துக் கொண்டு போவதாக கூறினோம். ஒரு முட்டை அப்பம், ஒரு பாலப்பம், ஒரு சும்மா அப்பமென தேவையான அளவு வாங்கிக் கொண்டு போனோம். கொம்போ என்றால் கொம்பினேசன் (எதோடு எது என்று) ஆக இருக்கும் என்றார் இவர்.
வீட்டிலே உணவு காத்திருந்தது. ஆயினும் அப்பம் மேலதிகமானது தான்.
அன்று நன்கு அலைச்சல் நடை…..நடை. இரவு நன்கு நித்திரை கொண்டு எழுந்தோம்.

மிகுதியை அடுத்த 8ம் பகுதியில் காண்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-10-2016.

AAMI park   (Melbourne Rectangular Stadium)

aamipark3

6. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 6

img_02591

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 6

அமரரான என் தங்கையின் இலங்கையில் வாழும் மகளின் மகன் தோழனாக நின்றார்.
திருமண மண்டபத்தில் முதலில் பால்சோறு, கட்டைச் சம்பல் என்று கூறுவோம் அதை மேலே தூவி சிறிது கிறீமும் விட்டுப் பரிமாறினார்கள்.

img_02581

சிறு வாழையிலைத் துண்டு வெட்டி அதன் மேல் தான் பால் சோறு ( கிரிபத்) புக்கை பரிமாறியிருந்தது. கேக் துண்டு போல நாற்கோணமாக வெட்டி வித்தியாசமாக இருந்தது. நல்ல சுவையாகவும் இருந்தது.

14359230_10153662383936403_8411760873378307168_n
தாலி கட்டி முடிந்தவுடன் திருமணப் பதிவும் நடந்தது. திருமணப் பதிவுகாரரும் ஒரு சிங்களப் பெண்மணி சின்னஞ் சிறுவர்களைக் கூப்பிட்டு மணமக்களோடு சுற்றி நிற்க வைத்து சின்ன ஒரு பேச்சு நடத்தி மோதிரம் மாற்றி எழுத்து நடத்தி முடித்தார் அது வித்தியாசமாக இருந்தது. இதன் படங்கள் தேடியபடி உள்ளேன். கிடைத்தால் பயணக் கதை இடை நடுவில் போடுவேன்.
எழுத்து முடிய…. கவனியுங்கள்!!…அதே கூறைச்சேலை பட்டு வேட்டியுடனேயே பென்னம் பெரிய திருமண கேக் ஒன்று வெட்டினார்கள் மணமக்கள்.

cake-2

குழுவாகப் படங்கள் எடுத்த பின்பு, படங்கள் எடுப்பவர்கள் மணமக்களைக் கடத்திக் கொண்டு போய் விட்டனர் வெளியே படம் எடுக்க என்று.

மாலை நாங்களும் வீடு வந்தோம்.
அடுத்த நாள் மெல்பேர்ண் நகரம் சுற்றிப் பார்க்க என்று தம்பி மகன் எங்களை மெல்பேர்ண் நடு பட்டினத்திற்குக்   கூ ட்டிப் போய் இறக்கி விட்டுimg_02941

வாகனத் தரிப்பிடம் தேடி அலைந்தார். நாங்கள் எமது வேலை முடிய மாலையில் தொலை பேசித் தகவல் தருவதாகக் கூறி எங்களை விட்டிட்டுப் போகச் சொன்னோம் அவருக்கும் வேலை என்பதால் போய்விட்டார்.

மெல்பேர்ண் நடு மையம் (பிஃளின்டேர்ஸ் தெரு) புகையிரத நிலையத்தின் முன்பு நிற்கிறோம். சுற்றி வர பெஃடரேசன் சதுக்கம். நின்ற இடத்திலிருந்து 2-3 படங்கள் தட்டினேன்.

img_02931

img_02971
” மெல்பேர்ண் விசிட்டேர்ஸ் சென்ரர் ” ஒரு வகையில் சொல்லப் போனால் ஊர் சுற்றுவோரின் தகவல் நிலையம் நீல நிறத்தில் ஒரு பக்கத்தில் எமது கண்ணில் தட்டுப் பட்டது. ” இதோ பாருங்கோப்பா உள்ளே போய் பார்ப்போம் ” என்று புகுந்தோம்.

img_02981
சிறிய இடமாக இருந்தது. படிக்கட்டு தெரிந்தது. படியால் கீழே இறங்கினோம் பரந்த இடத்தில் பல கந்தோர்கள், கழிவறை வசதி என்று இருந்தது. நகரம் சுற்றிப் பார்க்கும் பயணச் சீட்டு வாங்கினோம். ஒரே பயணச் சீட்டை ஒரு நாள் பாவிப்பது, 2 நாள் பாவிப்பது என்ற வகையில் வாங்க முடியும். நாம் ஒரு நாளுக்காக வாங்கினோம். நாளை பேருந்தில் கன்பரா நகரம் செல்வது எமது திட்டம். மேலே வந்து…..
பெடறேசன் சென்ரர் (சதுக்கம்) சிறிது தூரம் நடக்க ஒரு கட்டிடம். உள்ளே மிக அழகாக இருந்த கட்டிடத்தில்

img_03021

ஒரு பெரிய குழந்தை உருவம் தலை குப்புறத் தொங்கியது. அதைப் பார்த்துத் திகைத்து விட்டேன்… இஃதென்ன அநியாயம் என்று!… உடனே இதைப் படம் எடுத்தேன்.

img_02991

அதன் கீழே யோகா செய்தனர். ஏதோ குழந்தைகள் கொண்டாட்டத்திற்காகச் செய்தது என்று கூகிளில் தேடித் தேடித் தகவல் எடுத்தேன்.
விவரம் சிறிது படமாகப் போடுகிறேன் பாருங்கள்.

unavngivet-png-2

reynold

( எழுத்துகளுடன் உள்ள படங்கள் இரண்டும் கூகிள் படங்கள்)
மற்றவை எனது படங்கள்)
அடுத்து நகரம் சுற்றிப் பார்க்க மறுபடி நடந்து (சுற்றுலாவில் எமது நடைப் பயணமும் இங்கு தொடங்கியது) முதல் நின்ற இடத்திற்கு அருகில் இருந்த மாதா கோயில் அருகில் பேருந்தில் ஏறிச் சுற்றினோம்.( சிவப்புப் பேருந்து நிற்குது பாருங்கோ! . இது கூகிள் படம்)

image

சுற்றுதல் 45 நிமிடம், ஒரு மணி என்று இருக்கும். விரும்பிய இடத்தில் இறங்கி ஏறி எத்தனை தடவையும் சுற்றலாம்.

(சேச் படியில் நின்று எடுத்த புகையிரத நிலையப் படம் 2)

img_03081

img_03061

இத்துடன்  அடுத்த 7வது பதிவில் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-10- 2016

canada-nakatam

5. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் 5.

img_01541

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் 5.

 வெள்ளிக்கிழமை  மெல்பேர்ண் சிறீ சிவா விஷ்ணு கோயிலுக்குப் போனோம்.

img_01631

மாப்பிள்ளையின் தந்தையின் தங்கை வந்தார். அவருடன் நாங்கள்

img_01591

எல்லோருமாக இரண்டு வாகனத்தில் போனோம். அதிக தூரமில்லை. கோவிலில் கொடியேறியதால் விசேட பூசை நடந்து கொண்டிருந்தது.

img_01471
ஒரு சில படங்கள் தான் எடுத்தேன்.

img_01491
மெல்பேர்ண் சிவா விஷ்ணு கோயில் என்று கூகிளில் நிறையப் படங்கள் பாருங்கள். (எனக்கு இப்படிப் பார்த்து ஆராய மிகப் பிடிக்கும்).

img_01501

தரிசனம் முடிய கோயில் உணவகம் என்று போக அது மூடும் நேரமாச்சு என்று

img_01611

img_01601

வேறொரு அருகிலுள்ள இடம் சென்று எல்லோருமாக உணவருந்தினோம்.

ஒரு மகிழ்வான ஒன்று கூடலாக இருந்தது. மறக்க முடியாதது. நன்றி புவனாவிற்குச் சேரும். அவர் தான் உணவென்று அனைவரையும் அழைத்தார்.

img_01791
இந்த இடை நடுவில் ஒரு திருமண வாழ்த்துக் கவிதை ஏற்கெனவே எழுதி தம்பி மகனுக்கு மெயில் பண்ணி அதைச் சட்டம் இட தம்பி மகனுடன் திரிந்தோம். எழுத்தைச் சுற்றி நல்ல வேலைப்பாடுடன் சட்டமிடலாம் என்றால் ( மாதிரி கூட அச்சுக் கூடத்திற்கு மெயில் அனுப்பினோம்) ஏ4லும் பெரிதாக என்று செய்தும் முதலாளி வெள்ளி தங்கமென மினுக்கும் நிறத்தில் சட்டமிட்டு எம்மை மயக்கி விட்டார். ஓன்றும் செய்ய முடியவில்லை எந்த வேலைப் பாடுமின்றி அவர் பண்ணியபடியே வாங்கி வந்தோம்.

( பிரதீபன் சாந்தினி என்று பயணக் கதைக்கு முன்பு
நான்போட்ட 45வது வாழ்த்துப் பதிவு பாருங்கள் )     பின்பு  தம்பி மகன்

img_01991

இருக்குமிடம் சென்றோம். அது இன்னொரு மலையோடு சேர்ந்த அழகான இடமாக இருந்தது.

img_02051

222222
அவுஸ்திரேலியாவில் என்னைக் கவர்ந்தது வீடுகள். இது எவ்வளவு அழகான வீடு என்று வியக்க அடுத்த வீடு அதை விட அழகான அமைப்பாக இருந்தது. சரி மற்றதைப் பார்ப்போம் என்றால் அது இன்னும் மிகத் திறமாக இருந்தது. கொழும்பு 7 – சினமன் காடின் – கறுவாக்காடு போல பூந்தோட்டம் பச்சைப் பசேலென்று மாளிகை போன்ற அமைப்புடன் இருந்தது. என் கணவர் பகிடி   விட்டார் ” மாறிடுவோமா இங்கு! ” என்று.    ” எமது பென்சன் பணத்தை இங்கு தருவார்களானால் நாளைக்கே சம்மதம் ” என்றேன் நான். பணமில்லாமல்  எங்கே  என்ன செய்ய முடியும்!…. சொல்லுங்கள்!!…….

img_02081

img_02171
அடுத்து நெடு நெடு என்று சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்கள். சாம்பல் நிறமாகவும் அதன் தோற்றமும் வித்தியாசம் அழகு என்று என்னை வெகுவாகக் கவர்ந்தது. இறுதியில் அது யூகலிப்டஸ் மரங்கள் என்று அறிந்தேன். முற்றிய மரங்கள் வெடித்த பட்டைகளுடன் இருக்குமாம். சாலையோர மரங்கள் அரசாங்கக் கண்காணிப்பில் வளர்க்கும் முற்றாத மரங்கள். மிக மிக அழகு. அவ்வப்போது இந்த மரங்களின் படங்கள் தொடரும். இத்தோடு முடிந்து விடாது.
யூகலிப்டஸ் மிகவும் பயனுள்ள மரம். அதன் இலையிருந்து எண்ணெய் எடுக்கப் படுகிறதாம். இயற்கைச் சூழலில் இந்த எண்ணெய் ஆவியாகி சிறு சிறு துளிகளாகக் காற்றில் மிதக்கிறதால் சூரிய ஒளிபட்டு இவை நீல நிறமாகித் தெரியுமாம். சிட்னியின் மேற்குப் புற மலை (Blue mountaim ) நீல மலையெனப் பெயர் பெற்றது இதனால் தானாம்.
20  முதல் 50 மீட்டர் வரை இன்னும் சில 90 மீட்டர் வரையும் உயருமாம். இலை மிக கடினத் தன்மையானதும் உடைத்து விட்ட விரலாட்டம் நேர் குத்தாகத் தொங்கும். காற்றின் ஈரலிப்பு நீர் இலையூடாக மரத்திற்கே வடியுமாம்.

img_00821-jpg-can
நமது நாட்டில் டென்மார்க்கில் ஒரு மரம் அடர்ந்து வளருமானால் கிளைகளை நறுக்கித் தெருவை நிம்மதியாக இருக்க விடுவார்கள் – மின்சார இணைப்புகள் அவுஸ்திரேலியா போல மண்ணில் புதைத்தாலும். ஆனால் அங்கு தெருவிலும் வஞ்சகமின்றி மரக் கிளைகளை நன்கு படரவிட்டுள்ளனர். அழகான பெரிய மாடிக் கட்டடங்களை படமெடுக்க முடியாது மரங்கள் அழகாகப் படர்ந்துள்ளது. இது கவனிக்கப் பட்ட முக்கிய விடயமாக எனக்கு இருந்தது. இயற்கையை இயற்கையாக இருக்க விட்டுள்ளனர்.மிகப் பெரிய விடயம் இது என்பது எனது அபிப்பிராயம்.

.
அடுத்த நாள் 11ம் திகதி காலை 8 மணி மாப்பிள்ளைத் தோய வார்ப்பு என்றும் திருமணம் 9 மணி என்றும் மிக சிறப்பாக நடந்தது.

14572111_10154134039363742_1053643923_o

மாப்பிள்ளை பகுதியில் நாம் தெத்தம் பண்ண நின்றிருந்தோம். இலங்கையிலிருக்கும் தங்கை மகள் தோழியாக இருந்தார். சுமார் 300 பேருக்கும் மேலாக மக்கள்கூ  ட்டத்துடன் திருமணம் நடந்தது.

the-grand-on-princes-mulgrave-venues-event-spaces-8bab-300x0   img_9109-hdr

நல்ல ஒரு மண்டபம். 3 படங்கள் இங்கு காணுகிறீர்கள்.

the-grand-on-princes-mulgrave-venues-event-spaces-7c0d-300x0
மீதியை அடுத்த பகுதியில் 6ல் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
17-10-2016.

img_01571

4. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்

img_11531

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 4

பறவைகள் நேசன்
பறவைகள் காப்பாளன்
வீர பாண்டியன் விருமாண்டி.
           உறவுகளை விட்டு
           ஊர் விட்டு ஊர் வந்ததால்
            இவன் பறவைகள் நேசனாகினானோ!
பெரியம்மா உங்கள் வீட்டில் சோழா இருக்கிறார் ஆதலால் எனது பெயர் வீர பாண்டியன் விருமாண்டி என்று எழுதுங்கள் என்று வேண்டினார்     இந்தப் பறவைகள் நேசன். இவர் பறவைகள் காப்பாளன் என்றும் எமக்குத் தெரியவில்லை. இரு பரம்பரைகளில் யார் இப்படியான குணாதிசயமுடையவர் என்று பேசினோம். 
அப்பு ஆச்சி குஞ்சியப்பாவை மாட்டுத் தொழுவம் வைத்து மாடுகள் வளர்த்து தங்கள் தேவைக்குப் பால் எடுத்துப் பாவித்தனர். நாங்களும் பனை ஓலைகள் மாட்டிற்குக் கிழித்துக் கொடுத்த அனுபவங்கள் உண்டு.  ஆம் மாட்டிற்கு உணவாக தமது வளவுப் பனை மர ஓலைகள் வெட்டி எல்லாரும் சுற்றி வர இருந்து கிழிப்போம், ஈர்க்கு வேறாக ஓலை வேறாக. பின்   அதை வெட்டி மாடுகளிற்கு உணவாக்குதல்.
அங்கு வீட்டில் இறங்கியதும் கைக் குழந்தை குவா குவா என அழுவது போல சத்தம் அடிக்கடி கேட்டது. இது யாரடா1 என்ன குழந்தைச் சத்தம்! என்று கவனித்தபடி இருந்தேன். தங்கையின் பேரப் பிள்ளைகள்,   2 வயதுக்கு மேற்படவே இருந்தனர்.இப்படி அழ யாருமில்லை.
வீரபாண்டியன் விருமாண்டி நீலமும் பச்சையுமான மக்கவ் (macaw ) கொக்கட்டோ (cockatoo ) என்ற பெயருடையதும் அதற்குச் சோடியாக றெட் ஸ்காலெற் மக்கவ் ம் (red scarlet macaw) வைத்து வளர்க்கிறார். பெரிய அறை கூடு மாதிரி செய்து அதனுள் அவர்கள் உள்ளனர். அதிகாலை எழுந்து பழங்கள் வெட்டிப் போடுவார். இல்லாவிடில் உயிரை வாங்கி விடுவினம் கத்திக் கீச்சிட்டு.
நாம் படுத்த அறையோடு தான் அவர்களது (கிளிகளின்) அறை உள்ளது.

img_11551-jpg-kk

கண்ணாடி யன்னலில் சொண்டால் தட்டுவினம். திரையை விலக்கி குழந்தைகளோடு கதைப்பது போல கதைத்தேன்.   இவர்களது சத்தம் தான் ஆரம்பத்தில் நான் கேட்டுக் கவனித்த குவா குவா சத்தம்.
மத்திய, வடக்கு, தெற்கு அமெரிக்க, மெக்சிக்கோ பகுதிக்குரிய பறவைகள். கொட்டைகள், பழங்கள், பாஃம் மரப் பழங்கள், பூக்கள், விதைகளை உணவாக உண்ணும் பறவைகள். நீலம் பச்சை மக்கவ் 30 – 35 வருடங்கள் வாழுமாம். ஸகாலெட் சிவப்பு மஞ்சள் சராசரி 40 – 50 வருடமாம் சில 75 வருடமும் வாழுமாம். ஆச்சரியமாக உள்ளதல்லவா!
முயல் – இவர் தனிய உள்ளார். வித்தியாச முகம். நாம் பார்த்துப் பழகியது டென்மார்க் முகம் தானே. இவர் ஒல்லாந்து தேசத்தவர். கடந்த பகுதிப் படத்தைப் பாருங்கள்.

img_11181
கிளி வைத்திருந்தாராம் திறந்து விட்டாராம். கிளிகளிற்கு வெட்ட வெளியில் பழத்தட்டு நீர் என்று வைக்கிறார்.img_11241

 

ஊரில் மரத்தில் உள்ள கிளிகள் 3 இனங்கள் படத்தில் காண்கிறீர்கள்.

img_11131

1. சாம்பல், றோஸ் வெள்ளைக் கொண்டை

img_02901

2.பச்சை சிவப்பு மஞ்சள்,

img_02911

3. தனிய சாம்பல் சிவப்பு. நினைத்த நேரம் இவை

img_02851

வந்து கொண்டாட்டமாக உணவு உண்டு செல்கின்றன..

இதை விட புறா – நமது புறா மாதிரித் தெரியவில்லை சிறிது வித்தியாசம். படம் எடுக்க முடியவில்லை பறந்து விட்டன.
மக்பை ( ) என்று அசல் காகம் போல

img_11261

ஆனால் கறுப்பும் வெள்ளையும் கலந்தது. காகம் மாதிரி வருவது அது தானாம். படத்தில் காணுவீர்கள்.

img_11251
இங்கு இன ஒற்றுமையும் உண்டு சண்டையும் உண்டு. பார்ப்பது வேடிக்கை.
இப்படியாக குருவிகள் காப்பகம் போல – பார்த்துப் படம் எடுப்பது எனக்கு ஆர்வமாக இருந்தது. இரண்டு நீண்ட நீல இறகுகளும் டென்மார்க்கிற்குக் கொண்டு வந்தேன்,  வெற்றி, சோழாக்குக் கொடுங்கோ என்று தந்தார் வீரபாண்டியன் விருமாண்டி. 
(இது வீரபாண்டியன் விருமாண்டியின் ஆர்வமும் ஆசையும். )

மனைவியின் விருப்புமுமின்றி இருக்காதே. அவர் மனவியலில் மாஸ்டர் முடித்துத் தொடர்கிறார் வேலையுடன்.

அடுத்த பகுதி 5ல் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12 அக்டொபர் 2016.

3-3-2017…இப்போது ஏராளமான கொக்கட்டோ என்ற பறவைகள் இவரிடம் உணவு உண்ண வருகிறதாம் படங்கள் அனுப்பியிருந்தார் பாருங்கள். கொண்டை காக்கட்டூ (Sulphur crested cockatoo)

birds-4

birds-1

birds-2

birds-3

 

 

 

ssssssss-c

3. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 3

 

அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் மெல்பேர்ண் . மேலும் இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.
மெல்பேர்ண் அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா-பசிபிக் மண்டலத்தில் முன்னணி நிதி மையமாக விளங்குகின்றது
நியூசவுத் வேல்ஸ் பகுதியாக ஆவணி 30, 1835 இல் இந்த நகரம் நிறுவப்பட்டது.
1837இல் பிரித்தானிய குடியேற்றமாக அங்கீகரிக்கப்பட்டது. நியூ சவுத் வேல்சின் ஆளுநர் சேர் ரிச்சர்டு புர்கால் ‘மெல்பேர்ண்’ எனப் பெயரிடப்பட்டது. அந்நாளைய பிரித்தானியப் பிரதமர் மேல்பேர்ணின் இரண்டாவது வைகவுண்டு நினைவாக இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார்
மெல்பேர்ண், 1851 இல் புதியதாகப் பிரிக்கப்பட்டு உருவான விக்டோரியா குடியேற்றப்பகுதியின் தலைநகரமாயிற்று. 1850 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விக்டோரியாவின் தங்க வேட்டையின்போது மெல்பேர்ண் உலகின் மிகப்பெரிய, செல்வமிகு நகரங்களில் ஒன்றாக உருவானது. 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியக் கூட்டமைப்பிற்குப் பின் புதிய அவுஸ்திரேலியா நாட்டிற்கு 1927 வரை மெல்பேர்ண் தலைநகரமாக விளங்கியது.
பெருநகரப் பகுதிக்கும் மாநிலத்திற்கும் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கும் மெல்பேர்ண் வானூர்தி நிலையம்     துல்லாமரைன் வானூர்தி நிலையமாகும்.
இந்த விமான நிலையத்தில் தான் சென்று 8ம் திகதி மாலை 6மணிக்கு அவுஸ்திரேலியாவில் இறங்கினோம். ( நினைவு படுத்துகிறேன் 6ம் திகதி மாலை மூன்றே முக்காலுக்கு டென்மார்க்கில் விமானம் ஏறினோம்)

img_01121
45 நிமிடநேர இடைவெளியில் கட்டிடக் காட்டினூடாகத் தங்கை மகன் வீடு சென்றடைந்தோம்.

img_01151

மரங்கள் அடர்ந்திருந்தால் மரக்காடு என்போம். முழுவதும் கட்டிடமாக இருந்தால் வேறென்னவாம்!… கட்டிடக் காடு தானே!

img_01131

தங்கை மகன் மாப்பிள்ளை யுனிக் கட்டிட நிறவனத்தை நிர்வாகித்துச் சொந்தமாக நடத்துகிறார். அலுவலகம் வீட்டிலேயே உள்ளது.( UnikConstructions Pty LtdDirector/Builder · Melbourne, Australia)

கொழும்பு, சிட்னியிலிருந்து தங்கை மகள் குடும்பங்கள், மாப்பிள்ளையின் இரட்டையர் தம்பி சிட்னியிலிருந்து, தங்கை கணவர், மாமியார் இலங்கையிலிருந்து என்று உறவுகளின் தாலாட்டில் நாட்கள் விரிந்தது. 8ம் திகதி மாலை 6 மணி, வீடு செல்ல ஏழரை மணியானது. பேசி இரவுணவோடு அந்த நாள் முடிந்தது.
சிறு வயதில் பழகியவர்கள் வளர்ந்து பல வருடங்களின் பின் நெருக்கமாகக் காணும் போது வித்தியாச பரிமாணங்களில் தெரிந்தனர்.
முக்கியமாக மாப்பிள்ளை மிக நகைச்சுவையாக கவித்துவமாகப் பேசினார். வாழ்வின் அனுபவங்கள், சினிமா நகைச்சுவைகள் அவரை மாற்றியிருக்கலாம். நெருக்கமாகப் பழக சந்தர்ப்பம் கிடைக்காததால் அவரது பாணி எமக்குத் தெரியாமலும் இருந்திருக்கலாம்.
பாலி தீவுக்குப் போய் வந்து இரண்டு பெரிய கிளிகள் வளர்க்கிறார்.

collage-parot-2

 

 

ஒல்லாந்து தேசத்து முயல் ஒன்று வளர்க்கிறார்.

collage-rabit

கிளியும் வைத்திருந்தாராம் இப்போது இல்லை. ஆனால் நிறையக் கிளிகள் உள்ளது. என்ன ஆச்சரியமா!…….இன்னும் வரும்.

பகுதி 4ல் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-2016.

kutuvi-b

2. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 2

img_00771

அபுதாபி செல்லும் விமானத்தில் விமானப் பணிப் பெண் ஒருவர் இலங்கைப் பெண் போல மிகவும் சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தார் தனக்கு ஓய்வு கிடைத்த போது ஒடி வந்து பிந்து என்று எனது நெற்றிப் பொட்டைக் காட்டி ஆங்கிலத்தில் பேசினார் தான் பம்பாய் என்றார் நானும் இலங்கை என்று கூறினேன்.
தன் இனம் போன்ற ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் போது, பேசும் போது ஏற்படும் உணர்வே வித்தியாசமான உணர்வு தான். அபுதாபி வர அவளை வாழ்த்தி விட்டு இறங்கினோம்.
அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். தற்கால அபுதாபியின் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பனியாஸ் என்னும் பழங்குடிக் கூட்டமைப்பு உருவானதோடு தொடங்கியது. இது பின்னர் துபாய் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் துபாயும், அபுதாபியும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன.
இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன. அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன. (தகவல் விக்கிபீடியா)
ஆறு மணிநேரப் பயணத்தால் மாலை 6 மணிக்கு அபுதாபியில் இறங்கி உள்ளே செல்லும் போது தூரத்தில் தெரிந்த ஒரு வளைவான கட்டிடத்தைப் படம் எடுத்தேன்.

img_01001

நன்கு தெரியாத கட்டிடம் பின்னர் கூகிள் மூலம் பார்த்த போது மிக அழகான கட்டிடமாக இருந்தது.
அடுத்த விமானம் இரவு 10.50க்கு மெல்பேர்ண்க்குக் காத்திருந்தோம்.

img_00911

சிறு ஓடையான இடமாகவும் துப்பரவின்றியும் அழகின்றியும் இருந்தது. மக்கள் பரபரப்பாக நடப்புதும் தமது அடுத்த விமானம் பிடிக்கப் பறப்புதுமான இடம்.

img_00861

நடந்து நடந்து கடைகளைப் பார்த்தோம். கடைகளும் அவ்வளவு பிரமாதமாகக் கவரவில்லை. இரு இருக்கைகள் சேர்ந்த மாதிரி கண்டதும் அமர்ந்து ஆறியிருந்தோம். இடத்தைப் பறி கொடுக்காமல் இவர் இருக்க நான் சென்று எனக்கேற்ற உணவு பார்த்தேன்.

img_00891

மச்சம் சாப்பிடாதவள் நான். பின்பு வந்து கணவரிடம் கூற அவர் சென்று தனக்கும் எனக்குமாக உணவு வாங்கி வந்தார். இரவு உணவையும் உண்டோம். (மாலை ஆறரைக்கு இரவுணவு உண்ணும் பழக்கம் கொண்டவர்களாதலால்).

img_00921
பின் தங்கையின் பேரக் குழந்தைகளிற்கு இனிப்புகள் வாங்கினோம்.

img_00951

பின்னர் நாம் செல்லும் படலை இலக்கம் அறிந்து போனோம் அந்தப் பக்கம் பரந்த இடமாக இருந்தது.

img_00961

அழகு, அலங்காரம் குறைவாகவே இருந்தது. ஈச்ச மரம் ஒன்று செழிப்பமின்றியே இருந்தது.

img_00981

தமிழர் ஒருவர் தன் வேலையில் மிக அக்கறையாக கண்ணாடிகள் துடைத்தபடி இருந்தார்.

img_00941

எமது படலை இலக்கம் தெளிவின்றி இருந்ததால் அவரிடம் எந்தப் பக்கம் போக என்று கேட்டோம்.

img_00931
விமானம் 13 மணித்தியாலப் பயணம். நன்கு நித்திரை கொண்டோம்.
விமான நிலையத்திற்கு தம்பி மகனும் தங்கை மகனான மாப்பிள்ளையும் வந்திருந்தனர்.

img_01101
அடுத்த பதிவு 3ல் சந்திப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4 -புரட்டாதி 2016

canada-nakatam

Previous Older Entries Next Newer Entries