213. விடியல். (பாமாலிகை (கதம்பம்)

 

விடியல்.   

ருவாகும் ஒரு விடியலின் தேடல்
கருவாகும் கனவு விதையினால் கூடும்.
பெரு நம்பிக்கையில் காலூன்றும் எத்தனம்
ஒரு விடியலுக்காய் வெளிக்கும் கீழ்வானம்.
சுருளலை உருள்வின் பிரம்மப் பிரயத்தனம்
ஒரு விடியல் முயற்சிக்குப் பூரண இலக்கணம்.
ஆனந்த விடியலைத் தேடிடும் எதிர்பார்ப்பு
ஆழ்ந்த துயிலினால் கூடும் அமைதிப்பூ.

காய மழைத் துளிக்கு ஏங்கும் தவிப்பு
ஆட்படும் விளைநிலத்து விடியலின் காத்திருப்பு.
ஓட்டினைச் சன்னமாய் உடைக்கும் தவிப்பு
முட்டையுள் குஞ்சு விடியலிற்கு உயிர்ப்பு.
வான்கடலில் சந்திரனிற்கு விடியல் தேவையில்லை.
அவன் மந்திர விடியலே கருக்கிருட்டு வேளை தான்.
விண்ணிலே நட்சத்திரங்கள் விடியலைத் தேடி
கண் சிமிட்டி ஓடாது வான் தடாகத்தில்

ன்னைச் சுற்றியொரு ஒளி வட்டம் இயற்கையில்
பின்னும் உன் முயற்சியே பெரும் பங்கு பெறுவது.
ஈழத்து விடியலின் சுதந்திர முழுப் பாகம்
ஈடற்ற உயிர், உடமையின் பெரும் பாகம்.
ஈவிரக்கமின்றிக் கொள்ளையிடும் உயிரும் பொருளும்
ஈடேறும் விடியலின் பெரும்பாக விலையோ?
இணையற்ற சொர்க்கபுரி எமது நாட்டிற்கு
இது யாரிட்ட பெரும் சாபக்கேடோ?

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
14-12-2004

நெய்தல்.கொம் ல் பிரசுரமானது. 23-4-2008.

ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப் பெற்ற கவிதையுமாகும்.

trt…2-9-2014 மாலை 7 மணி கவிதை நேரத்தில் என்னால் வாசிக்கப்பட்டது.(தர்சன் அறிவிப்பாளர்)

                        

22 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. சண்முகம்
    அக் 23, 2011 @ 11:49:22

    அருமை

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 23, 2011 @ 14:14:18

      மிக்க நன்றி சகோதரரே .பார்த்தேன் இணைத்துள்ளீர்கள் . வருகைக்கும் வரியிடலுக்கும் கூட நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  2. nathnaveln
    அக் 23, 2011 @ 13:13:52

    அருமை

    மறுமொழி

  3. SUJATHA
    அக் 23, 2011 @ 20:05:05

    ஆகாய மழைத் துளிக்கு ஏங்கும் தவிப்பு
    ஆட்படும் விளைநிலத்து விடியலின் காத்திருப்பு.
    ஓட்டினைச் சன்னமாய் உடைக்கும் தவிப்பு
    முட்டையுள் குஞ்சு விடியலிற்கு உயிர்ப்பு.
    விடியலை நோக்கிய கவியும், கருத்தும் மிக நன்றாகவுள்ளது. பலமுறை வாசித்து ரசித்தேன் அருமை ”வேத” கவியுடன் கலந்த
    விடியல் பொழுது ஒரு இன்பம்!!!!!!

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 23, 2011 @ 21:20:20

      ஓ! சுஜாதா! ரசித்து வாசித்தீர்களா? பார்க்கவில்லையா 2004ல் எழுதிய கவிதை அது.’ அப்போதெல்லாம் நன்றாக எழுதியிருந்துள்ளேன் இப்ப படு சாதாரண வரிகளாக மிக எளிமையாக எழுதுகிறேன் எனக்கு அந்தப் பழைய பாணியே பிடிக்கிறது. என்னை மாற்றியது என் கணவர் தான். இது யாருக்கு விளங்கும் என்று கூறிக் கூறியே மாற்றி விட்டார்.

      நன்றி சுஜாதா உமது அன்பான வரவிற்கும், கருத்திற்கும். மிக மகிழ்ச்சியடைந்தேன்.
      ”…கவியுடன் கலந்த
      விடியல் பொழுது ஒரு இன்பம்!!!!!!..”…உண்மை தான்!

      இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  4. avainaayagan
    அக் 24, 2011 @ 01:25:55

    அருமையான கவிதை. விரைவில் விடியல் வந்திட வே வேண்டுகிறேன்

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 24, 2011 @ 06:44:18

      ஆம்! விரைவில் விடியல் வரட்டும்! உங்கள் அன்பான வரவிற்கும், கருத்திடலுக்கும் மிக மிக மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  5. Rajarajeswari
    அக் 24, 2011 @ 04:54:31

    உன்னைச் சுற்றியொரு ஒளி வட்டம் இயற்கையில்
    பின்னும் உன் முயற்சியே பெரும் பங்கு பெறுவது./

    அனைவரும் அழகான விடியல் தரிசிக்க பிரார்த்தனைகள்.

    மறுமொழி

  6. பழனிவேல்
    அக் 24, 2011 @ 05:26:16

    அருமையான படைப்பு…

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 24, 2011 @ 17:34:02

      மிக நன்றி சகோதரா. உங்கள் அன்பான வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகுந்த நன்றி.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  7. unmaivrumbi
    அக் 24, 2011 @ 08:27:34

    உருவாகும் ஒரு விடியலின் தேடல்
    கருவாகும் கனவு விதையினால் கூடும்.
    பெரு நம்பிக்கையில் காலூன்றும் எத்தனம்
    ஒரு விடியலுக்காய் வெளிக்கும் கீழ்வானம்.
    சுருளலை உருள்வின் பிரம்மப் பிரயத்தனம்
    ஒரு விடியல் முயற்சிக்குப் பூரண இலக்கணம்!
    ஆகா அனைத்தும் அருமையான வரிகள், வாழ்த்துக்க்கள் சகோதரி!

    தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    உண்மைவிரும்பி.
    மும்பை.

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 24, 2011 @ 17:36:19

      மிக்க நன்றி. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இதே தீபாவளி வாழ்த்துகள். அதே போல உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  8. ரமேஷ்
    அக் 25, 2011 @ 04:10:25

    தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரி .

    மறுமொழி

  9. cpsenthilkumar
    அக் 25, 2011 @ 04:19:57

    2 வது படம் டாப், கவிதை வரிகள் நல்லாருக்கு

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 25, 2011 @ 17:42:17

      மிக்க நன்றி சகோதரா. உங்கள் இனிய வருகைக்கும், கருதிற்கும் மகிழ்வடைந்தேன். நன்றியும் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  10. சாகம்பரி
    அக் 31, 2011 @ 14:32:23

    என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (1/11/11 -செவ்வாய் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      நவ் 03, 2011 @ 20:12:13

      மிக்க நன்றி சகோதரி. வலைச்சரம் வந்து கருத்திட்டேன். எனது முகநூலிலும் அதைப் போட்டேன். மிக மிக நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  11. vinothiny pathmanathan
    அக் 31, 2011 @ 14:53:08

    அருமையான படைப்பு…உங்களின் கவிதை வரிகளைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளுக்குப் பஞ்சம் .அன்புடன் வினோ

    மறுமொழி

    • Vetha ELangathilakam
      நவ் 03, 2011 @ 20:14:25

      அன்பின் விநோ மிக்க நன்றியடா. உமது அன்பான வருகைக்கும் கருத்திற்கும். நானும் மிக மகிழ்ந்தேன். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக