3. சிறு மழலை வினையூக்கம்.

chola-1 086

சிறு குழந்தைகள் ஒரு மாதக் குழந்தை பசிக்கு அழும்.
சிறுநீரால் நனைந்தவுடன் அழும். தூக்கம் வர அழும்.
உயிரெடுக்கும் அழுகை…ஏதோ பூச்சி கடித்தது போல.
இந்தத் தேவைகள் நிறைவடைய அமைதிச் சிரிப்பு. ஆனந்த விளையாட்டு.
மூத்த பேரன் வெற்றி வளர்ந்து வேற மாதிரி விளையாட்டு. இப்போது இரண்டாவது பேரன் சோழாவின் ரசனை இது.

சிறு மழலை வினையூக்கம்.

உங்கு உண்ணவும்
உச்சா போனாலும்
கண்ணயரவும் காட்டும்
கடிகாரம் அழுகையழுகை.
உயிரெடுக்கும் அழுகை- (அதன் அருத்தம்)
உடனே செய்!
உரியதைச்செய்!
உனக்குத் திருப்புவேனிதை!

”..சின்ன மூக்கு!
சின்னக் கைகள்!..”.
சொன்னார் வெற்றி.
வெற்றிரசனையொரு பக்கம்
சோழா ரசிப்பின்று.
இறுக்கியணைத்தால் மூடுமிமை.
இடைப்பஞ்சு அகற்ற
இதமான விளையாட்டு.

ஒருமாத நிறைவு
அருமை முறுவல்.
மன்மதச் சிரிப்பு!
என்ன விந்தை!
சின்னத் தேவதையழைப்போ!
என்ன காதலது!
மின்னுமுலக இணைப்பன்றோ
சின்ன மழலை வினையூக்கம்!

பா ஆக்கம் பா வானதி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

30-10-2014

baby-items

Advertisements

84. கவிதை பாருங்கள் – காதல் குன்றாத் தகைமை

316191_170152986407866_100002394972739_317520_590432677_n-øø,,,

காதல் குன்றாத் தகைமை

கடகடவென ஓடும் ஓட்ட வாழ்வில்
சடசடவென முறியும் இல்லற அமைதி
வெடவெடவென நடுங்கும் உறவு நெருக்கம்
தடதடவென ஆடும் நேசம் பாசம்.

படபடக்கும் மனதால் தினம் தினம்
தொடவிடாது நகரும் எரிச்சல் சினம்.
சிடுசிடுத்து வெடி வெடித்துக் குளப்பும்
கடுகடுப்பான சொற் குமிழ்கள் வளையங்கள்

எங்கு பார்த்தாலும் மழைக் காளான்களாய்ப்
பொங்கி வெடிக்கும் நவீன இணைகள்.
பங்கு கொண்டு சமரசம் செய்யவியலாத்
தொங்கு பாலமான புரிந்துணர்வுக் கனதி.

நான்கு தசாப்தங்களிற்கும் மேலான என்
தேன் கூட்டு வாழ்வில் பொறுக்கியது இந்த
நான்கு தர இரண்டு (8) பட வரிகள் ( photo poem)
வான் குருவியின் கூடாக உருப்பெற்றதிங்கு.

பா வானதி 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-10-2014.

2686814t0wzzlw0rl

35…பிழையறு!

2088870-12299-frame-of-fresh-fruits-and-berries-ææ

இதை இங்கு வாசித்தேன்.
அதை தங்களுடனும் பகிர்கிறேன்.
படவரிகளை நான் எழுதினேன்.
அது பற்றி வாசிக்கத் தேடிய போது இது கிடைத்தது.
அனுபவியுங்கள்.

http://selvamperumal.blogspot.dk/2011/11/pgsr-bahasa-tamil.html……

மொழிச் சிதைவை களையும் வழிமுறைகள் 

1.   தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தமிழாசிரியர்கள் மொழிப்பற்றினை தமிழ் மாணாக்கர்களிடம் விதைக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் பயிலாமல் தமிழ் மொழியைப் பிழையற பேசும் வண்ணம் புதிய குமுகாயம் இந் நாட்டில் உருவாக வேண்டும். தமிழ் மொழியின் தூய்மையான பேச்சைக் கேட்டு அனனத்து தமிழ் மக்களும் தமிழ் மொழியின் இனிமையை தங்கள் குழந்தைகள் அறிய முனைப்பு காட்ட வேண்டும். தமிழாசிரியர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் போதிக்காமல் தமிழ் மொழியை இனத்தின் அடையாளமாக போதிக்க வேண்டும். தமிழ் மொழி தன் ஊடே கொண்டிருக்கும் அற்புதங்களையும் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். ‘எழுத்தறித்தவன் இறைவன் ஆவான்’ எனும் திருமொழியை தமிழ் இனம் உணர தமிழாசிரியர்கள் பெரிதும் பங்காற்ற வேண்டும். மொழி அழிந்தால் இந்நாட்டில் தமிழ் இனம், கலை, கலாச்சாரம் அழியும் எனும் உணர்வை அனைவரும் உணர மொழிச்சிதைவைக் கண்டித்து தமிழாசிரியர்கள் ஊடகங்களில் கண்டணங்களைத் தெரிவிக்க வேண்டும். சிறந்த படைப்புகள் தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும், தமிழ் இணைய தளங்களிலும் உலா வர அதிக நாட்டமுடையவர்களாக தமிழாசிரியர்கள் இருக்க வேண்டும். செந்தமிழின் சிறப்புகளையும் தூய தமிழ் படைப்புகளையும் அனைவரும் கற்றுக் கொள்ள வழி வகுக்க வேண்டும். தூய தமிழில் அனைவரும் பேசும் முறையினை அறிமுகம் செய்திடல் வேண்டும்.  தமிழர்களிடையே தூய தமிழ் மொழிப் பற்றினை ஓங்கச் செய்வது தமிழாசிரியர்களின் தலையாய கடமையாகும்.  
  
2.   தமிழினம் மொழிச் சிதைவை உணராமல் கொடுந்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பகட்டான தமிழ் இனம் இந் நாட்டில் வாழ்ந்து பாடையிலேறும் முன் பண்பட்ட தமிழினமாக, மொழி வளம் கொண்டவர்களாக வாழ்ந்து வீழ்வது உத்தமம் எனும் நிலையை அடைய வேண்டும். இனமானம் கொண்ட குமுகாயம் மலர வேற்று மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நிறுத்திக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். வேற்று மொழி மோகமுடைய மனப்போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். செம்மொழிஎன்ற உயர் தனிச் சிறப்பைப் பெற்றுள்ள தமிழ்மொழி, புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மொழியாக நிலைத்து நிற்கவேண்டுமென்றால் தூய  தமிழில் தமிழ் படித்தவர்கள் தமிழில் பேச வேண்டும். இந்நிலை நீடித்தால்செம்மொழியாகிய தமிழ், காலப்போக்கில் இலக்கியவழக்கில் தனித் தமிழாகவும் பேச்சு வழக்கில்கலப்புமொழியாகவும் மாறித் தன் தனித்தன்மையைஇழந்துவிடும் என்பதை தமிழ் படித்தவர்களாவது உணர வேண்டும். …..(தொடர்கிறது……)……  

வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-10-2014

lotus-border

57. மழைத்தானம்.

rainforest

மழைத்தானம்.

வானம் பொத்தலாகிப் பொழியும் நீரை
தானமா யெமக்கு வானமே தருகிறதோ!
குழை கழுவி நீ கும்மியடிக்கிறாய்!
மழையே மழையே மகிழ்ந்து வருவாய்!
வெட்டவெளித் தூசி கழுவிக்
கிட்டே வா கடதாசிக் கப்பலிட!

விண்ணிலிருந்தி வழுவி நிலம் நாடும்
மண்ணிற் கொரு மணம் கூடும்.
கண்கள் கழுவிக் குளிர்மை தரும்
மழை, களைப்புப் போக்க நிலத்திற்கு
இழையிடும் – நீரினால் புத்துணர்வுச் சேதிக்கு
அழைப்பிடும், உடலுள உற்சாகத்திற்கும்.

றுக மூடிய வீட்டினுள் இன்பமாய்
இழுத்துப் போர்த்தித் துயிலலாம் வருவாய்!
உழவ னுள்ளம் உவகை யுணருது!
கிழவர்கள் குமரராய் ரசிக்கிறார் மகிழ்ந்து!
மழையில் நனைய மழலைகள் துடிக்கிறார்!
மதா பிதாவினர் தடுத்தாட் கொள்கிறார்!

த்தளம் கொட்டி மின்னலோடு வந்து
கைத்தலம் பற்றுவாய் பூமாதேவியை!
மின்னல் இடியால் மொத்த சீவன்களை
என்னமாய்க் கலக்குவாய்! அம்மம்மா பயங்கரம்!
அளவற்ற உன் பெருக்கினால் ஐயகோ!
அல்லோகல்லோலம் வெகு தாழ்வு இடங்களில்!

முதல் மழையில் நனையாதே! நனையாதே!
மூக்குச் சிந்தும் அவதி அவதி!
முக்காலமும் அம்மாவின் கார உரை.
அழகு மழையை ஆசைதீர ரசித்தேன்
அழகு வெள்ள நீரோட்டமங்கு தான்
அப்பப்பாவின் நாற்சார வீட்டில் தான்!

பா ஆக்கம்
பா வானதி வேதா இலங்காதிலகம்
டென்மார்க்.
23-10-2014.

மழை பற்றிய மேலும் எனது 3 இணைப்புகள் கீழே…
1.https://kovaikkavi.wordpress.com/2011/11/05/16-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/

2.https://kovaikkavi.wordpress.com/2013/12/14/54-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

3.https://kovaikkavi.wordpress.com/2010/07/25/24-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/

imagesCAX5K52V

340. தீபாவளி

10687492_863764480330989_2829004275275977502_o-aa

தீபாவளி

தீபாவளி !!!
தீப ஆவளி….ஏன்….!!!!!
ஆபதன் (தீயவன்) நரகாசுரன் அழிந்தானாம்!
ஆரவாரமான பெரும் கொண்டாட்டம்!

ஆயிரம் ஆபதன்(கள்) உலகிலே
ஆயினும் தீபாவளி கொண்டாட்டம்!
ஆனைநெருஞ்சியாய் அநியாயங்கள் புவியில்
ஆயினும் தீபாவளி கொண்டாட்டம்!

ஆன்றமையும் அமைதி நிலவட்டும்!
ஆன்மஞானம் மக்களுள் நிறையட்டும்!
ஆனந்திக்கலாம்! சிறப்பாய்க் கொண்டாடலாம்!
ஆக என் கருத்திது.

ஆண்டாண்டொழுகும் வழக்கு பழக்கம்
ஆயிரம் வர்த்தக இலாபநோக்கு
ஆதிக்க உரிமை விலகிடுமா!
ஆனந்தத் தீபாவளி நல்வாழ்த்துகள்!!

(ஆனைநெருஞ்சி – பெருநெருஞ்சி, முட்பூண்டுவகை.)

-பா வானதி-
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-10-2014

Deepam-Border-Kolam-1

34. தமிழ் வல்லாண்மை.

10494665_683233265086101_5352445299418082750_nff

தமிழ் வல்லாண்மை.

நறுமணத்தால் தன்னை அடையாளம் காட்டும் மல்லிகை.
பெறுமதி வரிகளால் சிம்மாசனமிடுவது தமிழ் வல்லமை.
வரிகளின் சுடரில் வையகம் பார்க்கும் சொல்லமைவு
வரிகளால் கவிஞன் தனக்காய் கவி இருக்கை செய்வான்.

விருப்பாய் மகிழ்வாய் மனம் தழுவி விரியும்
அருவருப்பில்லாத் தென்றல் இணையும் இன் வரிகள்
உருத்தாய் நர்த்தனமாடும் நங்கையின் நளின அழகாய்
கருத்தைக் கவர்ந்து கரும்பு பிழிந்த சாறாய்த்தமிழ்.

ஈன்ற பொழுதிருந்து மனிதமனம் மகா சமுத்திரம்.
தோன்றிடும் இலக்கண நோய்க்கு மருந்து இலக்கியம்.
ஆன்றோர் தமிழ் மனதைத் தொட்டுத் தூக்கிடும்.
ஊன்றிடும் காகித வயலில் எழுத்து விதைகள்.

புலவர் மரபுகள் புறம் தள்ளியும் இலக்கியக் களிரேறுவார்
பலமுகப் பரிமாணங்கள் தமிழ்ப் பாலருந்திக் காட்டுவார்.
அலசலாம் குறும்தொகை மொழியை தமிழ்வேர் ஆழந்தொட்டு
விலங்கிட்டுத் தோளேறி விரலால் புத்துலக வாயில் காட்டலாம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-10-2014.

Nyt billede

83. கவிதை பாருங்கள் – வந்து மடிக!+ இயலாமையின் அவலங்கள்.

555058_304450789696047_14248794_nkk

கொடுப்பது அன்பு நீதி நேர்மை.
எடுப்பது துன்பம், குளப்பம் சோதனை.
அடுத்தடுத்து வந்தாலும் அசையாது நெஞ்சம்
உடுப்பதே வாழ்வில் இவைகளே.
வந்து மடிக!

602947_342210105894788_1754728672_n-ææ

Big Blue Divider

Previous Older Entries