9. குதிரை ஆட்டம்.

இந்த முறை வெற்றி பற்றிய ஆக்கம் தான்.

இப்போதெல்லாம் எமது மகன் வீட்டுள்ளே போனதும் பேரன் வந்து எமது கையைப் பிடித்து வெளியே போக வரும்படி இழுப்பார். வெளியே உலாத்த மிக விருப்பம். நான் அவரோடு தனியே போனால் ஏதாவது ஓரு ராகத்தை ம்..ம் என்றோ. லாலலா என்றோ இழுத்தபடி செல்வென்  இது வழமை.

இவர் வீட்டில்  தானே விளையாடும் போது என்னைப்  போல இராகம் இழுப்பார்.  பெரிய அனுபவஸ்தர் போல  செய்வார்.

பாடல் கேட்டால் போதும் சுற்றிச் சுற்றி ஆடுவார். தலை சுற்றி விழுவார் உடனே எழுந்து மறுபடி தொடருவார். பாடலுக்குக் கை தட்டுவார்.

என்னிடம்  ”..சீச்சோ  சீச்சோ..”  என்பார் அதன் கருத்து சோபாவிலிருந்து அவரைக் காலில் வைத்து ஆட்டுவது.

Sea shore

up and Down

vethri going to the London town  (இதை மாற்றி மாற்றி வேறு இடங்கள் கூறிப் பாடுவதுண்டு.)

summer13 013P1050158

மரக் குதிரை ஆடுவார் அதற்கு ஓரு பாட்டு.

 

குதிரை ஆட்டம்.

 

ஆடுங்கோ ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ!

சிரித்து ஆடுங்கோ

சிவப்புக் குதிரை

மரக் குதிரை  (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ

 

முன்னும் சாய்ந்து

பின்னும் சாய்ந்து

இன்னும் வேகமாய்

உன்னி உன்னி ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ. (ஆடுங்கோ)

summer13 082

வெற்றிக்குட்டிக்கு நான் பாடும் பாட்டு. உடனே சிரித்து (here she goes Again)

எந்த நிலையிலிருந்தாலும் அதற்கேற்றமாதிரி ஆடுவார்.

”….வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி
      எண்ணிப் பார்! எண்ணிப் பார்!
      வண்ணம் பலவே வண்ணம் பலவே
      எண்ணம் கிளறுது!  எண்ணம் கிளறுது!…”’  

(ஆங்கில வரிகள் நாம் முன்பு சிறு வயதில் பாடியது. தமிழ் எனது வரிகள் தான்.)

இப்பொது பேரனுடன் இருக்கும் போது ஏதும் வாசித்தால் அவரும் வந்து வாசிப்பார். புத்தகம் கிழிப்பார்.

நான் பென்சிலும் பேப்பரும் கொடுத்து விட்டால் கீறுவார்.

P1050004

மிகவும் ஆனந்தப் படுவார். கை தட்டி உற்சாகப் படுத்துவேன்.

விரல்கள் கட்டுப் பாட்டிற்குள் இல்லாததால் நேர் கோடான கீறல்கள் தானே ஆரம்பம்.

vethriart

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-7-2013

 

baby-items

 

 

 

 

 

 

 

282.பாவலன் – பாவிதை.

vetha_poems

பாவலன் – பாவிதை.

 

கவிஞனை அழிக்க முடியாது –கவின்

கனவுகள் கலைக்க முடியாது – அவன்

பூமி வெடித்து முளைத்தது போல

பூக்கும் எழுதுகோற் போராளி.

 

மேலாடை களற்ற நிர்வாணமாகும்

காலாடக் கசியும் கருநாளம்.

நூலாடும் கருத்து சொல்லோவியம்

மேலாடி மனிதருள் தூவிடும்.

 

தஞ்சமென இதயத்துள் அடங்கா விதை

நெஞ்சத்து உணர்வின்  பா விதை.

அஞ்சித் தொழக் கை கூப்பாது

அஞ்சாது உலகிற்காய்ப் பூப்பது கவிதை.

 

உழுத நீலக் குருதியின் இழப்புத் தான்

எழுதும் இதயத்து கவிதை வண்ணம்.

பழுது பட்டதைத் திருத்தக் கூறியே

எழுது கோலினை எடுக்கிறான் கவிஞன்.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

13-2-2005.

 

imagesCADKKMCK

 

54. கவிதை பாருங்கள்(photo,poem)

Red-butterflies-1024x768-a

காரிய…..

காரிய சித்திக்குக் காரிய பாகம்
காரியப் படப் படாத பாடடைவார்.
காரியம் கை கூடியதும் மெல்லக்
காரியக் காரணியை ஒதுக்குதலானது
காரியவாதியின் சீரியத் திறமை தானோ!
கிரியாஊக்கத் துணையென்பது மனிதனின்
புரியாத் தன்னம்பிக்கைத் துணையன்றோ!

549608_417734041624809_178486376_n-mm
—-

 

imagesCADKKMCK

281. உறவுகள்.

5903_460026624091585_1240695061_n

உறவுகள்.

 

 

சேயாய் மனிதன் உறவினை

தாயின் மார்புத் தொடர்பினால்

மாய மோகன முறுவலால்

ஓயாத அணைப்பா லடைகிறான்.

தேயாத பெற்றவ ருறவால்

தரமாய்த் தகுதியா யுலவுகிறான்.

 

 

உறவுகளின் இணைப்பு  பெரும்

ஊட்டம் நிறை களிப்பு.

நறவு மிகு நம்பிக்கையாம்

சிறந்த நங்கூரப் பிணைப்பு.

சிறகுகளாக வாழ்க்கை வானில்

பிறக்கின்றவொரு மிதப்பு.

 

 

நன்மை, நேர்மை, நற்பண்புகள்

இன்ப உறவுத் திறவுகோல்கள்.

ஆபத்தில் தள்ளல், அந்தரமாக்கல்,

ஆறுதலளித்து அணைப்பதும் உறவுகள்.

உறவுகளின் முறையான அமைப்பு

வாழ்விற்கு வளமான செழிப்பு.

 

 

தேன் தமிழழோடு தமிழனுறவு

வீணென்று விலக்கல் உமிழ்வு.

உறவுகன் இறைவனோடென்பது

துறவு வாழ்வுப் பிணைப்பு.

துறவென்று உறவுகளை

அறுப்பதொரு வெளி நடப்பு.

 

 

   — (கவிதையில் சேர்க்காது மேலதிகமாக எழுதியது) —-

 

 

(ஊரிற்கு நல் மனிதன், நாரில் இணைக்கும் பூ

ஏருக்கொருவயல்,  தூரிற்குத் தன் மரம்

ஆவிற்குப் பசும் புல்,  பாவிற்குச் சேர் சந்தம்,

நாவிற்குத் தமிழென மேவும் சிரஞ்சீவியாய்க்

காலம்காலமாய்க் கவினுறு சீவிதப் பயன் உறவுகள்.)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

26-10-2004.

 

 

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

 

தொலைத்தவை எத்தனையோ!…9

untitled!…9

 (நான் வலையில் ” தொலைத்தவை எத்தனையோ ” தலைப்பில்
எழுதிய 8 அங்கத்தையும்  என் பெயருடன்
பண்கொம்.நெற்  (பண்கொம்.net) எனும் இணையம் வரிசையாகப் போட்டுள்ளது.
எம்மவர் ஆக்கங்கள் என்ற தலைப்பில் போட்டுள்ளனர்.
 சமூகம்- 9  தலைப்பிலிருந்து தொடங்குகிறது. 
இவர்களிற்கு மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவிக்கிறேன்.
ஐரோப்பாவில் மரங்கள் பூக்கள் கொட்டைகள் என்ற தலைப்பில்
கூகிளில் தேடிய போது இந்தத் தளமும் வந்தது.
உள்ளே சென்ற போது எனது ஆக்கம் அங்கு இருப்பதைக் கண்டு கொண்டேன்.
2013ல் எடுத்துப் போட்டள்ளனர். எனக்கு ஒரு தகவல் கூடத் தராதது தான் மனவருத்தம்.
அந்த ஆக்கத்தின் பின்னூட்டத்தில் கூட அறிவித்திருக்கலாம்.
THiruddu...
http://www.panncom.net/p/4567/4567
இனி ஆக்கத்திற்கு வாருங்கள்….

பன்னவேலை என்றால்……. …..

பனையின் குருத்தோலையை வெட்டி, விசிறியாக அதை விரித்து, நடுவிலிருந்து இரண்டாகப் பிரித்து வெட்டிய பின்னர் மறுபடி அதை விசிறியாக நிழலில்

3

கட்டித் தொங்கிய படி பல நாட்கள் காய வைத்து சுருக்கிக் கட்டி வைப்பார்.  இதை சார்வோலை என்று கூறுவதுண்டு. இவற்றைத் தேவக்கேற்றபடி மெல்லிது, அகலம் என்று வார்ந்து கொள்வர். அதாவது வார்வது என்பது ஒரு அருமையான  கலை.

இனி இதில் (பனையோலையில்) பெட்டி, தட்டு, கடகம், சுளகு, நீத்துப் பெட்டி என இன்னொரன்ன பல விடயங்கள் முடைய முடியும், பின்ன முடியும். இதையே பன்ன வேலை என்போம்.

இதை ஒரு கைப்பணியாக,  ஒரு பாடமாகக் கோப்பாய் நாவலர் பாடசாலையில் எமது அப்பப்பா தொடக்கி வைத்து, பலர் பயனடைந்தனர்.

பின்னர் கந்தர் மடத்திலும் ஒரு நிலையம் திறந்து பலர் பயனடைந்தனர்.

இவற்றை நான் பழகியது 3 – 4ம் வகுப்புகளிலிருந்து. ஆரம்பத்தில் வெறும் தட்டு பின்னிப் பழகி 

__1_~1  6

பின்னர் நீத்துப் பெட்டி செய்தோம். 

Neethuppetty

இதில் புட்டு அவிக்கலாம் – மா அவிக்கலாம்.

pittu3

பின்னர் சிறு பெட்டி, பனங்கட்டிக் குட்டான் போன்றும் செய்தோம்.

   palm_sugar   __1_~1

சின்னாச்சி வாத்தியார் கைவேலைக்குத் தலைமை வகித்தார். விசாலாட்சி ஆசிரியர், மாணிக்கம் ஆசிரியர் அனைவரும் (பெண்கள்) எமக்கு வகுப்புகளின் பிரகாரம்  பாடங்கள் எடுத்தனர். இவை பாடசாலையில் நடந்தவை.

வீட்டில் பச்சை நிற தென்னை ஓலைகள்,  கன்று மரங்களில் கைக்கெட்டிய உயரத்திலிருக்கும். அதைப் பிடுங்கிக் கண்ணிற்குக் கண்ணாடி

specks 

கை மணிக்கூடு

watch

காற்றாடி –

35987_148321151845363_100000024382553_479145_8125872_n

இதைப் பல அடுக்குகளாகச் செய்தால் கற்பூரக்கட்டிகள்.

பாம்பு’

snake.

என்று தம்பி தங்கைகளுடன், அயல் வீட்டுத் நண்பர்களுடன் செய்து விளையாடியவை பசுமை நினைவுகள்.

இன்றைய பிள்ளைகளிற்கு இந்த அனுபவங்கள் இல்லாதது. பெரும் குறை தான்.

வயதாலும், இட மாற்றத்தாலும் இவைகள் இன்று தொலைத்தவை தானே!

hheee211

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-7-2013

imagesCADKKMCK

28. என் தமிழ்.

thammmiil

படி!..படி!…

முத்தமிழ் படி எத்தவறுமற்றபடி

சொத்தையின்றி ஊன்றிப் படி!

முந்நூறு மொழிகள் குவிந்தாலும், குளறுபடி

எந்நூறையும் ஒதுக்கிப் படி!

 பண்டைத் தமிழாம் சங்கத் தமிழடி

தோண்டு! வேளையின்றிப் படி!

வரிகள் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
13-7-2013.

*

வாசிப்பு  பற்றி இங்கும்  (இந்த இணைப்பிலும்) உண்டு

https://kovaikkavi.wordpress.com/2017/01/15/468-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*

https://kovaikkavi.wordpress.com/2017/04/25/492-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

*

green line-2

280. புனர்வாழ்வு.

8262387_orig

புனர்வாழ்வு.

புனர் வாழ்வொரு புனர் நிர்மாணம்

புது சென்மமோர் உதயவானம்

இருண்டவானிலோர் ஒளிச் சுடர்

வரண்ட மிடறு நனைக்கும் நீர்.

திரண்டு மண்ணில் வீழருவி நீர்.

திரண்டு பசுமையயைச் செழிப்பிக்கும் கார்

சிதைந்த ஓவியம் திருத்தும் சிற்பிகளாய்

அதைரிய மனதினூன்று கோல்களாய்

உதைபட்ட நெஞ்சிற்குதவும் கரங்களாய்

கதை கேட்டுக் கவலை தீர்க்கப்

புகைந்திடும் துன்பம் துடைப்போர்

புனர் வாழ்விற்காய்  பாடுபடுவோர்

.

வானத்துத் தேவதைகள் யாரை இரட்சிக்கும்!

வாழ்வைப் புனர்வாழ்வுக் குழு இரட்சிக்கும்.

வீழ்ந்தவர் நோயில் மருத்துவம் பெறவும்

சூழ்ந்திட்ட ஆபத்தில் கரம் கொடுக்கவும்

வாழ்ந்திட அடிப்படைத் தேவை அமைக்கவும்

வாழ்ந்திடக் குடிமனை அமைக்கவுமுதவும்.

குறைகேட்கும் போலியற்ற மனதோடு

கறையில்லாத் துறைமுக மனதோடு

நறையான புரிந்துணர்வுக் குணத்தோடு

நிறைந்தது மனிதநேய மக்கள் மனம்.

ஆலம் வீழுது போலது மண் தொடும்.

ஆதரவுக் கரமுயிர்களை வாழவைக்கும்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

11-7-2013

23-7-2013 செவ்வாய்க் கிழமை ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி (மலை 19.00 – 20.00) கவிதை நேரத்தில் இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

 

வேதாவின் மொழிகள். 22

orange-  ab

வேதாவின் மொழிகள். 22

கூலியுடை விளம்பர நுரை போலிகளின் கவர்ச்சி நிரை.

ஊழியின் முடிவு வரை தூளி கிளப்பும் மாயத்திரை.

(தூளி – தூசி) – 26-6-2004

உயர்ந்த உள்ளம்:- 22-5-2007

மரபு, சூழல், நல்ல வளர்ப்பால் பெறுவது.

நிறைந்த நற்பண்புகளால் நிறைகுடமாய்த் தழும்பாதது உயர்ந்த உள்ளம்.

தரத்தில் இறங்கிய உள்ளம் இருப்பதால் தான் உயர்ந்த உள்ளத்து அருமை தெரிகிறது.

உயர்ந்த உள்ளத்தோன் வாழ்நிலையும் உயர்ந்தது என்பது உறுதியற்றது.

வரிகளாக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

Swirl divider v2

49. மலைக்குழந்தை.

tibet

மலைக்குழந்தை.

 

 

நதி தானே தனக்கும்

குதித்து வழி சமைக்கும்.

சுதியுடன் கரை சமைக்கும்.

குதித்தோடும் நீர்ப் பாலம்.

நதி மலையின் தூதாம்.

 

வித்தையாடும் நீரின்  சலசலப்பு

தத்தோமென ஓடும் வியப்பு.

பொத்தெனப் பாய்தலும் மலைப்பு.

பொத்தவியலா அழகுச் சிரிப்பு.

தித்திக்கும் காட்சி வனப்பு.

 

ஆவினப் பால் நுரையாடை

மீனினம் நிறையோடை.

மானினம் நீரருந்து மோடை.

மானிட நாகரீக வாடை

மேனிலைக்கு வளர்த்த ஓடை.

 

மலையரசன் பட்டுச் சால்வையாம்

வனப்பெண் காற்சலங்கையாம்.

அலைச்சடுகுடு ஆடும் தெய்வீகம்.

விலையிலாக் கலைநிகர் கங்கை.

பூமிமார்பினற்புதப் புத்தோவியம்.

 

எத்தனை ஆச்சரிய முலகின்

அத்தனை உயிர்களிற்கும் வாழ்வீயும்

தத்துவப் பிறப்பு நதி

சத்துடை பன்முகப் பரிணாம

வித்துடை மலைக் குழந்தையே!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

4-7-2013.

(சுதி – இசைச் சுருதி)

(இக் கவிதை 9-7-2013 செவ்வாய்க் கிழமை மாலை (19.00-20.00) ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியில்

கவிதை பாடும் நேரத்தில் என்னால் வாசிக்கப் பட்டது.)

 

bar6_anm

21. வேதாவின் மொழிகள். 21.

akam

வேதாவின் மொழிகள். 21.

வாழ்க்கை என்பது பயிற்சி. தாழ்ந்திடா உடன்பாட்டுயர்ச்சி

வெற்றிப் படியின் முயற்சி.

வாழ்க்கை சிறந்த நூலகம். வாழ்க்கையொரு போராட்ட மைதானம்.

(வாழ்க்கையொரு சவால் மைதானம்.)

வாழ்க்கை:- முயற்சியின் தொகுப்பு. உறவுகளின் இணைப்பு. அனுபவ அணிவகுப்பு. நவரசக் கலகலப்பு.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ, டென்மார்க்.

2-7-2013

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

Previous Older Entries