146. அகிலம் விழிக்கட்டும்!..

 

அகிலம் விழிக்கட்டும்!..

 

நேரம் மார்கழி 31ஆக
ஆரவாரம்! ஆட்டம்!…பாட்டம்!…
திகிலும் பயமும் மக்களை
துகிலுரிக்கும் நாடகம்!…
முகிலாகக் கலையட்டும்!…
அகிலம் விழிக்கட்டும்!….

கண்ணீரின்றி, மக்கள் இன்பத்தில்
செந்நீர் துளிர்த்துப் பாயட்டும்!…
எண்ணங்கள் குளிர நிகழ்வுகள்
பின்னிக்கொண்டு வராவிடில்
புத்தம் புதிய ஆண்டு ஏன்
சத்தமிட்டு வருகிறது!!!!!

அகிலம் விழிக்கட்டும்!!!!!!…

 

31-12-2010

 

                                 

23. பெற்றோர் மாட்சி.

 

 

       

 பாச வரிகள்.

24-10-2004.
பாசமழையில் நனைந்து,
நேசக் கடலில் மிதந்து,
தாசனாக ஒவ்வொரு சீவனும்
நாசமாகாது உயர, வாசமான
தாய் தந்தையோடு வீசிய
நேசத்திற்கு உலகில் ஈடு ஏது!
24-2-2007.
தயத்திலிருந்து கற்பனை நிறம்
கூட்டி, பதியம் வைத்து வளர்த்தனர்.
தமது பெருநிதியமாகமனசில் கொலுசுகட்டி
எம்மை உருவாக்கியவர்கள்  எம்மினிய பெற்றவர்.
வரமாகப் போற்றி அவர்களைப் பாதுகாப்போம்.
2-7-2006.
காலம் முழுதும் அழியாத ஓவியங்கள்,
பாலத்தில் அன்பின் அடித்தூண்கள்.
பாலம் அமைக்கும் அறிவின் தூண்கள்.
சீலம் போதிக்கும் பெற்றோர் ஆசிரியர்கள்.
ஆலம் விழுதாக விழுதுவிடுமிவர்; நேசம்
தாலம்(பனை) போல உயரும் பாசவாசம்.

23-7-2006.

நாளும் கோளும் பார்த்து
நீளும் காலத்தில் உம்மை
தேளும் பூரானும் கூடத்
தோளில் மேயாது வளர்த்தார்.
ஆளுமவர் தூய அன்புச்
சரணாலயம் என்றும் நமதே.
7-8-2006.
நிலாவெனும் தண்மையான அன்பு
உலாவியது பெற்றவர் பாசத்திலே.
குலாவி மகிழுந்தோம் கலகலப்பாக.
குடும்பமெனும் நிலாமுற்றத்தில் இந்தக்
குடைபோன்ற குளிரன்பைக் கொடுப்போம்
வாரிசுகளுக்கு குளிர்நிலா முற்றமாக.
6-8-2006.
புன்னகையோடு வாழ்வை எதிர்நோக்கினால்
அந்நகை எனக்கும் வருமம்மா.
பொன்னகையால் தராத நிறைவு
இனிய மென்னகையால் வருமம்மா.
உன் புன்னகை ஒளியால் அப்பாவை,
எம்மைப் புளகம் செய்த காலம்
என் பிறந்த வீட்டுத் தேசம்.
15-7-2006.
மாண்புடன் நாம் வாழவென்று
மானசீகமாய் எமை வளர்த்தார்.
மாலுமியாகக் குடும்பத்தில் அப்பா.
மந்திரியாய் அருகில் அம்மா.
மாசில்லாத இவர்கள் பெயர்
மாட்சிமையடைய மாண்புடன் நாமும் வாழலாம்.

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                                           

 

 

145. மாயமந்திரங்களுடன் மலர்வாய் புத்தாண்டே!

 

மாயமந்திரங்களுடன் மலர்வாய் புத்தாண்டே!

 

பூம்பனி பொழிந்து ஒளியுடை அழகுக்
கம்பளம் விரித்தது வெண்மையாய்,
ஆகா! தோம் தன தீமென அம்சமாய்
அம்புவி புத்தாண்டை ஆனந்தமாய் வரவேற்கிறதோ!
நத்தார் மகிழ்வுடன் இணைந்து வருகிறாய்!
புத்தாண்டே வெற்றி ஆண்டாய் மலர்வாய்!
மெத்த மகிழ்வோடு மொத்த அதிட்டத்தையும்
சித்தம் குளிர அனைவருக்கும் தருவாய்!

நம் மண்ணின் பெறுமதிகள் சேதமாய்
நல் மனித உயிர்கள் அர்ப்பணமாய்
நாட்டளவில் மனம் இரணகளமாய் ஆகி
விட்டகன்றது பழைய ஆண்டுகள்.
கேள்விகளும், நிச்சயமற்ற தன்மையும், வெங்காயத்
தாள்களாக நசுங்கும் தமிழன் நிலையும்,
கோள் கூறிக் காட்டிக் கொடுத்தலும்
நீள் நடை போடுதல் நிறுத்தப்படட்டும்!

அடுத்தடுத்துத் துன்பங்களைப் புளிக்கப் புளிக்கக்
கொடுத்துத் தோசையாய்ப் புரட்டிப் புரட்டி
எடுத்து மீள் வாங்குவதை விட்டிடலாம்.
தடுக்கி விழுந்தால் சட்டென எழுகிறோமே!
வைப்பறையுள்ளே  பாவனை இல்லையெனத் தீர்மானித்து
கைக்குட்டைகளைக் கழுவி மடித்து வைத்து
மைவிழிகளில், மனங்களில் சோகங்களையினி  நிறுத்தி
கைகுலுக்கப் புத்தாண்டு மாயமந்திரங்களுடன் மலரட்டும்!

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
29-12-2010

அலைகள் .கொம் இணையத்தளத்தில் பிரசுரமானது.

http://www.alaikal.com/news/?p=53268

 

                              

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். (19)

 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். (19)
(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது.)

ன்றல்ல, இரண்டு, மூன்று சுற்றுலாப் பயணிகள் பேருந்து சென்ற் பீட்டேஸ் தேவாலயத்திற்கு அருகாக அரை வட்ட மடித்துச் சென்றதைக் கண்ட என் கணவர்,  ” இன்று களைத்து விட்டோம், இனி நடந்து திரிந்து இடங்கள் பார்க்க முடியாது, வா! பேருந்தில் ஏறி ரோம் நகரைச் சுற்றுவோம். பின்பு நாம் எதைப் பார்ப்பதென்று தீர்மானிப்போம்” …என்றார்.

    

நாம் பேருந்தில் ரோம் பார்க்கும் போது, நான் உங்களுக்கு வத்திக்கான் பற்றிச் சிறிது கூறுகிறேன்.               

16ம் நூற்றாண்டில் தான் வத்திக்கான் நகரம் அமைக்கப்பட்டதாம். ரோமின் மேற்குப்
புறத்தில் ரிபர் (triber) நதி அருகில் வத்திக்கான் மலையில் வத்திக்கான் நகரம் இருக்கிறது.    

      

4ம் நூற்றாண்டில் ரோம அரசன்  Nero “”சியக்கோ வத்திக்கானோ “” என்ற சேர்க்கஸ்
வைத்திருந்தானாம். அந்த இடத்திலேயே தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளதாம்
இது உலகில் மிக முக்கிய தேவாலயமும், ரோமன் கத்தோலிக்கத்தின் ஆன்மிகத் தலைமை யிடமுமாகும். இத் தேவாலயக் கோபுரத்தை ஆண்டவனின் கரம் என்று இணையத் தளத்தில் வருணிக்கப் பட்டுள்ளது.

கிறிஸ்து பிறப்பின் பின் 64ல் சித்திரவதையின் பின் புதைக்கப்பட்ட சென்ற் பீட்டரின் புதை குழியில், 4ம் நூற்றாண்டில் கி.பி. 326ல் அரசன் கொன்ஸ்ரான்தைன்  முதன் முதலில் ஒரு தேவாலயத்தைக் கட்டுவித்தானாம். “” கொன்ஸ்தாந்தி நோப்பிள் பஸ்லிக்கா””  என்று குறிப்பிடப்பட்ட இது மரத்தினால் வேயப்பட்ட கூரையுடையதாக இருந்ததாம். இன்று நாம் பார்த்து மகிழும் இந்த ஆடம்பரத் தேவாலயம் தான் முன்னர் மரத்தினால் வேயப்பட்டிருந்ததைச் சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள்.

   

old vatican—-

பின்னர் 1506 – 1615ல் போப் யூலியஸ் இதை மறு சீரமைக்க Bramante( பிறமன்ரா)  என்னும் கட்டிடக் கலைஞர் தலைமையில் ஒரு குழுவை  நியமித்தான். சிலுவை அமைப்பில், (குருசின்) நட்ட நடுவில் அந்த அழகிய கோபுரம் அமையக் கூடியதாக கட்டிடத்தை அமைத்து வெற்றி கண்டான். 130 வருடங்களுக்கு மேல்  எடுத்து அக் கட்டிடம் கட்டப்பட்டது. இது 23000 ச.மீட்டரும், 60,000 மனிதர் இருக்கக் கூடியதுமாகும்.

மிகப் பிரபலமான அக்காலக் கட்டிடக் கலைஞரான மைக்கல் ஏஞ்சலோ தான் மேற்குப் புறத்துக் குவிந்த கூரையை வரை படம் கீறிச் செய்தார். உலகத்தில் இதுவும் மிகப் பெரியதாகும். இது137 அடி அல்லது 42 மீட்டர் உட்புறக் குறுக்கு வட்டமும், 404அடி அல்லது 123மீட்டர், நடை பாதையிலிருந்து உயரமுமாகும். இதில் உள்ள பலிபீடத்தில் தான் பாப்பரசர் பூசை செய்வார். மைக்கலேஞ்சலோவிற்கு Fontana,  Porta,  ராபெல், அன்ரோனியோ சன்காலோ  என்பவர்கள் உதவியாக இருந்தார்கள்.

டேர்னோ முகப்புத் தோற்றத்தைக் கட்டினார். பேர்னினி என்பவர் இரட்டைக் கோபுரத்தை முன்புறச் சட்டமாக (பிரேம்) அமைத்தார். பின்னர் 1656லிருந்து 1667ல் தான் சென்ற் பீட்டேர்ஸ் சதுக்கமும் பேர்னினியால் கட்டப்பட்டது. 25.5 மீட்டர் நீளம் கொண்ட கற் தூண் (obelisk ) தேவாலயத்திற்கு முன்னரே சியக்கோ வத்திக்கானோவில் அமைக்கப்பட்டது. 1585ல் இப்போது இருக்கும் சதுக்கத்தின் நடுவிற்கு இது நகர்த்தப்பட்டதாம், சுவர்களின் மேலே 140 சொரூபங்கள் குரு பிரதானிகளாக, பாப்பரசர்கள், உறவினர்களென உள்ளது.

 துக்கத்திற்கு வரும் நிரந்தரமான வாசல் வழியை முசோலினி என்பவன் அமைத்தானாம். தேவாலயம் 45 பலிபீடங்களைக் கொண்டுள்ளது. கட்டிட நடுவில் குறுக்கே போகும் படிகள் கீழே பேர்னினி சிலைக்குக் கீழ்ப் புறமாகப், பல பிரபல பாப்பரசர்களைப் புதைத்த புதைகுழிக் குகை உள்ளது. பிரதான மண்டபத்தில் சென்ற் பீட்டரின் பாதத்தை முத்தமிட முடியும். இப்படிப் பல அற்புதங்கள் உள்ளன.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
23-2-2007.

144. முகமூடி.

 

 

                  

முகமூடி.

ழகிய முகத்திற்கு முகமூடியேன்!
பழகிய முகங்களை ஏமாற்றுவதேன்!
அழகாய்ப் புனையும் புனை பெயரும்
நிழலாய்ச் சுயம் மறைக்கும் முகமூடி!

பொங்கி வழியும் அன்பு மொழியும்
தங்க முலாம் பூசிய புன்னகையும்
தனித்துவ உண்மை மனிதம் மறைக்க
தடையாகும் சிலநேர முகமூடி தான்.

மௌன மொழியையும் ஒரு நேரத்தில்
யௌவன முகமூடியாக்குகிறான் மனிதன்.
திருடனுக்கும் பெரும் உதவி செய்யும்
அரும் பெரும் சொத்து முகமூடி.

லைப் பின்னலுடை தங்கம், வெள்ளி
வலைத் துணியால் முகம் மூடி
இலையாலே கன்னிமை மறைப்பதாய் மணவறைக்கு
சிலையாக நடப்பாள் புது மணமகள்.

க்கறையோடு இஸ்லாமியரிடும் முகமூடி
சிக்கல் இணைப்பாய் மேற்குலகக் கலாச்சாரத்தில்
எக்கச்சக்க முரண்பாட்டு விவாதங்கள் கிளப்புகிறது.
பக்க விளைவாய்ச் சமூகநிலைகளும் வழுக்குகிறது.

லைவேலை, கைவேலையென பிள்ளைகள்
காகிதக்கூழில் சுய முகமூடி செய்து
கண்கவர் வர்ணமிட்டு அலங்கரித்து
களித்து விளையாடுவார், கண்ணாமூச்சி ஆடுவார்.

ல்லவராய் முகமூடி போட்டு நாட்டில்
நயவஞ்சகம் செய்வோர் பலர் உளர்.
முகம் மூடி தன்னை மறைப்பது
அகம் மூடும் அவல நிலை தானோ!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-8-2008

http://www.vaarppu.com/padam_varikal.php?id=25

((இதே தலைப்பில் இன்னொரு கவிதை இணைப்பு இதோ!)):-  https://kovaikkavi.wordpress.com/2015/08/07/381-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

 

                                    

143. திருப்பம்….

 

திருப்பம்….

 

அன்பின்மையால் வதங்கி ஆர்த்தெழுந்து
ஆங்கார மூச்சு வாங்கி
வன்மத்தீயி லிதயம் பொசுங்கி
பாளம் பாளமாய் வெடித்து
வளமான அன்பைத் தூக்கிலேற்றுபவனிடம்
பழகிட அன்பு மொழியை
இளகிய இதமான அணுகுமுறையை
ஏப்படி எதிர் பார்க்க முடியும!

கருத்து நீரோடையென்று அசிங்க
மனக்கழிவுக் குழாய்கள் கொட்டும்
வார்த்தை விதைகள் வீழ்ந்து என்
வயலை நாசப்படுத்தல் ஏற்பற்றது.
என் வயலுக்குரிய நல் விதை
எதுவென்பது எனது தீர்மானம்.
அதுவொரு ஒளிப் பாதையின்
புதுக் கதிராய் விரியவேண்டும்.

நோய் மொழியாளர் விசிறும்
வாய்மொழி வலைகளில் வீழ்ந்து
திறமைசாலி தான்மட்டுமென்று மக்களை
திடுக்கிட வைப்பவனிடம் தம்மை நிர்வகிக்கும்
திறப்பைக் கொடுத்திடாத விழிப்புணர்வு தேவை
திடமான மனமுடை சமூகமொன்று
திருப்தியாய் உருவாக வேண்டுமானால்,
திருப்பமானது மக்களின் கரங்களிலே தான!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
சித்திரை 2009.

 

                                       

 

 

24. நாரணனும், வாரணனும் கூட…

நாரணனும், வாரணனும் கூட…

ந்து மகாசாகரமே உனக்கு உயர் தகவு
முந்திய பெருமையுடையவெம் முத்துத் தீவு.
சிந்தும் அலை தவழும் இலங்கைத் தீவு.
அந்தப் பெருமை நீ மறந்தனையோ!
கொந்தளித்து ஆக்ரோசக் கொலை வெறியோடு
சந்து பொந்திலும் நுழைந்து சர்வநாசமாக்கினாயே!

சுமத்திரா தீவின் சூலக அதிர்வசைவானது
சுமந்து ஆயிரத்தைந்நூறு கிலோ மீட்டரதை
சுருளாக விசிறும் சுனாமி அலையானது.
சுவடு பதித்துத் தன் சுயரூபம் காட்டியது.
சுற்றுப் புறக் கடலோர நகரங்களைச் சூறையாடியது.
பற்றிப் பிடித்து உயர்ப்பலி  கொண்டது.

தாரண ஆண்டு நத்தார் தின மறுநாளில்
பூரண நிலாவில் பொங்கிய சாகரத்தால்
சீரணமாகாத சம்பவத்தால் பல உடல்கள்
தோரணம், இறுதிக் கிரியையின்றிப் புதைகுழியுள்
நாரணனும் நாடகத்தை நடத்திய படியுள்ளான்.
வாரணனும் பார்த்தபடி வாளாவிருக்கிறான்.

காலி நகரத்தில் கனரக போர்த்தளம்
கனத்த பேச்சு வார்த்தை அடுக்குகள் ஆயத்தம்.
கடவுளுக்கும் பொறுக்கவில்லை, கடலே பொங்கி
காலிநகரையே கழுவித் துடைத்ததுவோ!
காற்றும் கடலும் நம் நண்பர்களானாலும்
வேற்று மனிதனாய் வேகத்தைக் காட்டியதே!

பா. ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-12-2004.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.
9-1-2005 ஓகுஸ் தியான சேரத்திலும் என்னால் வாசிக்கப்பட்ட கவிதையிது.)

https://kovaikkavi.wordpress.com/2014/12/26/60-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88/

samme kind poem :- https://kovaikkavi.wordpress.com/2011/03/12/231/

                                         

23. நீலத் திரை வீசி..

 

நீலத் திரை வீசி..

தாகம் தீர்த்துச் சுகம் தந்த தண்ணீரே!
பூகம்பத்திற்குத் துணையாகி ஊர் புகுந்தாயே!
நாகமென்ற சுனாமியாகி உயிர்களைத் தீண்டினாயே!
ஏகமும் வஞ்சனையின்றிச் சாகசம் காட்டினாயே!
             சிங்களர் தமிழர் ஒற்றுமையின்றித் தீவை
             சின்னா பின்னமாக்கும் ஒரு பெரும் குற்றம்.
             இலங்கை, மணிபல்லவம ;சொர்க்கதீவென மறந்து
             சிங்களம் தமிழென எதிரியாகும் பெரும் குற்றம்.
தண்ணீர் மூன்று முறை குற்றம் பொறுக்குமாம்
எண்ணாது ஒரே முறையில் எம்மைத் தண்டித்தாய்!
கண்ணியமாக நீயுமுன் கடமையைச் செய்யவில்லை.
வண்ண உலக வரைபட வரியையே மாற்றிவிட்டாய்.
              மஞ்சள் நீர் தெளித்துக் குற்றம் களைவார்
              மஞ்சனமாட்டி ஊர்க்குற்றம் களைந்தாயா!
              அஞ்சியலறி ஆசியர்கள் விதிர் விதிக்க
              நெஞ்சு பதற நிறையுயிர்களைக் காவுகொண்டதேன்!
வலைவீசி மீனினைப் பிடிப்பது போன்ற
நிலைபோல உனக்கொரு ஆசையெழுந்ததா?
வலையென நீலத்திரை வீசி மீன்களாக
நிலையான மக்களை, வாழ்விடத்தை வாரினாயா!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-12-2004.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.
இந்திய சிறு சஞ்சிகை ‘ உறவு’ லும் மாசி 2005ல் பிரசுரமானது.)

samme kind poem._
https://kovaikkavi.wordpress.com/2010/12/26/189-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f/

                                    

 

 

 

 

13. நவராத்திரி. – 1 -2

நவராத்திரி.  –  1

 

மூர்த்தியாகத் தேவியர்கள் மூலவராகும் இராத்திரி.
முச்சக்தி நாயகியரின் மூலமான இராத்திரி.
மும்மூன்று இராத்திரியாக முகிழ்வது நவராத்திரி.

ங்கல முதல் மூன்று மகோன்னத இராத்திரி.
மகிசாசுரமர்த்தனி துர்க்காவின் இராத்திரி.
மகாவீரம் மல்கிட மக்கள் துதிக்கும் இராத்திரி.

செல்வத்து அதிபதி செந்தாமரைச் செல்வியிடம்
செல்வம் யாசித்துச் சக்தி இசை பாடியும்
சேவிக்குமிரவுகள் நடு மூன்று இராத்திரி.

ல்வி கலைகளின் கர்த்தா கலைவாணியின்
கருணை கசியும் கடை மூன்று இராத்திரி.
காலத்திற்கும் ஆழவூன்றும் அறிவுக்கான இராத்திரி.

 ருத்தான வித்தியாரம்பம் கலைகளின் ஆராத்தி,
கடைநாள் விசயதசமியோடு களிப்புடன் பூர்த்தி.
கலைகொஞ்சும் நவரச அனுபவம் நவராத்திரி.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-10-2004.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Anthimaalai.web site:-     http://anthimaalai.blogspot.com/2011/10/1.html

 

                                         

 

 

                                             

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (18)

 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (18)

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்து)

ந்த பைசா சாய்ந்த கோபுரத்தை, 2வது உலகப் போரில, நாசிகள் அவதானிக்கும் நிலையமாக observation post  ராகப் பாவித்தார்களாம்.

ன்னொரு சோகம் என்ன வென்றால் 1392ல் பைசா நகரப் பரம எதிரியான புளோறன்சுக்கு இக் கோபுரம் விற்கப்பட்டதாம். பைசா மக்களும் புளோறன்சுக்கு அடிமைகளானார்களாம். இத்தோடு பைசா சரித்திரக் கதை முடிவடைந்ததாம்.

மது பெருவிரல் அளவிலிருந்து பல வித அளவுகளில் பைசாக் கோபுரமும், அதன் சுற்று வட்டக் கேபுரங்கள் அனைத்தும் உருவமாக அழகழகாக விற்கிறார்கள்.

 

நாம் பைசா நகரைச் சுற்றிப் பார்த்த போது  Arono நதிக்கரையில் திடீரென நமது புகைவண்டி வாகனம் ஏதோ பிழையாகி ஓட முடியாது நின்று விட்டது.

டடா! நாம் நடந்து போக வேண்டுமோ என எண்ணிக் காத்திருந்தோம். சாரதியார் இன்னொரு என்சின் பெட்டியைக் கொண்டு வந்து கொழுவினார். பின்னர் வண்டி யோராக ஓடியது.

ரவு ஒளியிலும் பகல் போல மிக அழகாக மக்கள் பரவி நின்றிருந்தனர்.
கடைகள் நமது ஊர் போல நடை பாதைக் கடைகளாக இருந்தது.

   

ழகிய கைப்பைகள் இருந்தது, அவை யானை விலை, குதிரை விலையாகத் தான் இருந்தது. வானில் தமது சாமான்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டு வானை நான்கு புறமும் திறந்து தட்டுகள் அடுக்கி, அதையே ஒரு கடை போல ஆக்கித் தமது பொருட்களை விற்கிறார்கள். இரவு கடை மூடும் போது சுத்தமாகத் துடைத்து விட்டது போல அந்த இடத்தை விட்டுத் தமது வாகனத்தில் சென்று விடுகிறார்கள். 

கூரையற்ற திறந்த வெளியில் பிசா கடைகள், சலாட், நூடில்ஸ் தான் உணவுகளாக இருந்தன. நன்றாகச் சுற்றிப் பார்த்த பின்பு இரவு உணவை அப்படி ஒரு கடையில் உண்டோம். பின்னும் சிறிது நடந்து திரிந்து விட்டுச் சிறு நடை தூரத்தில் உள்ள தங்குமிடம் சென்றோம்.

று நாள் காலை 9.30 க்கு ரோம் நோக்கிப் பயணமானோம்.

ப்படியே போய்க் கொண்டிருந்த போது நவீன பார்த்தசாரதி வழி காட்டியும், நாம் பாதையைத் தவற விட்டு விட்டோம் என்பது புரிந்தது. தொடர்ந்து ஓடித் தூரப் போய்விடாது, பக்கத்துப் பாதையில் இறங்கினோம். அப்படியே ஓடி ஒரு இடத்தில் நிறுத்தி விசாரித்த போது, அந்தப் பாதை வத்திக்கான் நோக்கிப் போவதாக அறிந்தோம்.  அது ரோமுக்கு அருகாமையான இடம் தான். பரவாயில்லை, அதுவும் போக வேண்டிய இடம் தானே என்று, அப்படியே வத்திக்கான் நோக்கி ஓடினோம்.

த்தாலிக் காலநிலை என் கணவருக்கு தொல்லை தந்தது. வியர்வை ஆறாகப் பெருகி கணவரது மேலாடை நனைந்தது.மேலாடையைக் களட்டிவிட்டு, பனியனோடு வாகனம் ஓட்டினார். அப்படியே ஓடி ஓடி வத்திக்கானை அடைந்தோம். தலை நிமிர்ந்த போது மேலே வத்திக்கானின் கோபுரம் பிரமாண்டமாகத் தெரிந்தது.

ரி, தங்குவதற்கு இடத்தைத் தேடினோம். 2, 3 இடங்கள் பார்த்தோம். இறுதியில் அருகிலேயே இருந்த ஆடம்பர வாடி வீட்டைத் தெரிவு செய்து, பொருட்களைக் கொண்டு போய் வைத்து விட்டு, நடை தூரத்தில் இருந்த வத்திக்கான் கோயிலை அடைந்தோம்.

ம்மாடி! பிரமாண்டமான கட்டிடங்கள்! இத்தாலியர் கட்டிடக் கலையில் தலை சிறந்தவர்கள் என்பது எள்ளளவும் சந்தேகமற நிரூபணமாய்த் தெரிந்தது. அதைவிட இது ஒருநாள், இரண்டு நாளில் பார்க்கும் இடமுமல்ல என்பதும் புரிந்தது.

டிக்கொரு தடவை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளும் அங்கு வட்டமடித்துச் சென்ற படியும் இருந்தது

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
17-2-2007.

Previous Older Entries