7. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 7

img_03031
(பெடரேசன் சதுக்க வாசல் 2 பேருந்து தயாராக உள்ளது. ஏறினால் மெலபேர்ண் சுற்றலாம்.)

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 7

 

மெல்பேர்ண் நகரம் சுற்றிப்பார்த்தல்…..
என்ன!.. மழைத் தூற்றலாக இருந்தது. எடுத்த படங்கள் மழைத்துளிகளுடன் இருந்தது. அதனால் எங்கும் இறங்கிச் சுற்றவில்லை. வாகனத்திலேயே விபரங்களை ஒலி பெருக்கி மூலம் அறிந்தோம்.
ஆம் வாகனத்தில் ஏறும் போதே காதில் வைத்துக் கேட்க மின்சார இணைப்பு தருகிறார்கள். எந்த மொழியில் தேவையோ அதற்குரிய இலக்கங்களை அழுத்திக் கேட்கலாம்

img_01761
வானெட்டும் கட்டிடங்கள் மலைப்பாக இருந்தது. ” அமெரிக்காவும் இப்படித் தான் இருக்குமோ ” என்றேன் இவரிடம்.
பல்கலைக் கழக வைத்தியசாலைக் கட்டடம்,

(எனது படம் மழைத்துளியோடு எடுத்தது. அடுத்து வருவது கூகிள் படம்.)img_03121

medical-building

கிங்ஸ் டொமைன்ஸ் பாக், குவீன்ஸ் விக்டோரியா பூங்கா பூக்கள் கடிகாரம்,

img_03991

img_04161-jpg-floral-clock

google photo   of flora clock 25561615-the-floral-clock-and-the-statue-of-king-edward-vii-in-the-queen-victoria-gardens-in-melbourne-in-aus

and fountain   walker-fountain-kings-domain-melbourne-water-featu

கான்சர் வைத்தியசாலைக் கட்டிடம்,  உலகில் அதிக தோல் கான்சர் அவுஸ்திரேலியாவில் தானாம்.  மிக அழகான கட்டிடம். முழுதாக என்னால் எடுக்க முடியவில்லை ஆதலால் இதுவும் கூகிள் படமே.

comprehensive-cancer-center

நாற்சதுர விளையாட்டிடம் ஸ்ரேடியம்  ஏஏஎம்  பாக் என்று கூறும் இடம்.

img_04221

This is my photo and down google....AAMI park   (Melbourne Rectangular Stadium)

1024px-aamipark

பாராளுமன்றம் என்று விசேட இடங்களை விபரித்தபடி பயணம் தொடர்ந்தது.

img_04191

இப்படி மரத்தைக் கண்டதும் தென்னை பனை என்று மனம் ஏமாந்தது. 

எங்கு இறங்கிப் பார்க்க விருப்பமோ அங்கு இறங்கிப் பார்த்து அடுத்த அதே இன வாகனம் நிற்கும் தரிப்பிடத்தில் பயணச் சீட்டைக் காட்டி ஏற முடியும்.

எமக்கு உள் நாட்டிற்குள் விமானப் பயணம் செய்ய சிறு பயணப் பெட்டி ஒன்று (traveling bag) வாங்க வேண்டிய தேவையாக இருந்தது.
வாகனச் சுற்றுலா முடிய நாம் உணவு உண்டோம். சீஸ் பேகரும் மில்க் ஷேக்கும் தான். ஆம் ஆரோக்கியமற்ற உணவு தான். அவசரத்திற்கு வேறு வழியில்லை. சுற்று வட்டத்தில் கடை தேடிப் புகுந்தோம்.
மெல்பேர்ண் முடிய கன்பரா நகரம் செல்வது எமது திட்டம். ஆம் பேருந்தில் கன்பரா செல்லும் திட்டம்.
பேருந்து நிலையம் எங்குள்ளது என்று பயணப் பெட்டி வாங்கிய கடையிலேயே விசாரித்த போது ” சவுதேன் குறொஸ் ” க்குப் போக வேண்டும், டிராம் வண்டியில் பயணிப்பது உள் நகரத்தில் இலவசம். இந்தப் பக்கத்தால் போய் அந்தப் பக்கம் திரும்பி வருகிற டிராமில் ஏறுங்கள் 3வது தரிப்பிடத்தில் இறங்குங்கள் என்று அழகாகக் கூறினார்கள்.
இதன் படி துணிந்து ஏறிச் சரியாகப் போய் இறங்கி விசாரித்தோம். அழகாக விபரங்களை எழுதித் தொலை பேசி இலக்கத்துடன் தந்தனர்.

stores_located_in_southern_cross_station

stock-photo-melbourne-australia-november-ticket-office-and-woolworths-supermarket-at-southern-cross-336538412

திரும்பவும் அதே போல டிராம் ஏறிய இடம் வந்து சேர்ந்தோம். தெரியாத இடத்தில் இதை ஒரு சாதனை போலக் கருதி எங்களை நாங்களே மெச்சினோம்.
ஏன் கன்பராவுக்குப் பேருந்துப் பயணம்?…. புகையிரதம், விமானம் வேகமாகப் போகும் காட்சிகள் பார்ப்பது குறைவாகும். பேருந்தில் அழகாகப் பார்த்துப் போகலாம். ஆனால் கன்பராவிற்குப் பேருந்து 8 மணித்தியால ஓட்டம், பரவாயில்லை என்று முடிவெடுத்தோம்.
இப்போது தம்பி மகன் சுபோதனுக்கு தொலை பேசியில் கூறினோம் நாம் வீடு வரத் தயார் என்று. அவரும் வந்து கூட்டிப் போனார். நடுப் பட்டினம், வாகனம் நிறுத்தும் பிரச்சனையால் இந்த ஏற்பாடு.
சரி இரவாகுதே இரண்டுங் கெட்ட நேரம் இரவுணவு வாங்கிப் போவோம் என்று தம்பி மகனிடம் கூற சரி என்று றிச் மகால் (waymont)  உணவகம் சென்றோம்.  

rich-mahal

Enter a caption

(last 3 pics google)

என்ன வாங்கலாம் என்றால் செவ்வாய் கிழமைகளில் அப்பம் செய்வார்களாம் ஒருவர் சுட்டுக் கொண்டு நின்றார். அதை கொம்போ -1 கொம்பொ – 2 என்று பணிக்க (ஓடர் பண்ண) வேண்டுமாம். எடுத்துக் கொண்டு போவதாக கூறினோம். ஒரு முட்டை அப்பம், ஒரு பாலப்பம், ஒரு சும்மா அப்பமென தேவையான அளவு வாங்கிக் கொண்டு போனோம். கொம்போ என்றால் கொம்பினேசன் (எதோடு எது என்று) ஆக இருக்கும் என்றார் இவர்.
வீட்டிலே உணவு காத்திருந்தது. ஆயினும் அப்பம் மேலதிகமானது தான்.
அன்று நன்கு அலைச்சல் நடை…..நடை. இரவு நன்கு நித்திரை கொண்டு எழுந்தோம்.

மிகுதியை அடுத்த 8ம் பகுதியில் காண்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-10-2016.

AAMI park   (Melbourne Rectangular Stadium)

aamipark3

2. நான் பெற்ற விருதுகள்

 

4698127_orig-jpg-hh

 

தடாகம் கலை இலக்கிய வட்டம் உலகம் தழுவிய கவிதைப் போட்டி
மாதம் தோறும் நடத்துவார்கள்.
அதில் பங்கு பற்றி பெற்ற சிறப்புகள் இவை.
முன்பு பெற்றது ” கவியூற்று.”
அதன் பெயர் இப்போது ” கவினெழி”
என்று மாற்றினார்கள்.

12932819_10207960930878314_8540364630834742709_n

unnamed

unnamed-1

கவியூற்று
கவினெழி.
கவியருவி.
குழுவிற்கு மனமார்ந்த நன்றி.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.  29-10-2016.

retro-clipart-of-a-line-border-of-black-and-orange-diamonds-by-andy-nortnik-302

5. கண்ணதாசன் சான்றிதழ் 6

13723882_1751422235122551_619705988644798997_o

மனம் வலிக்கிறது.

முகிலோ அலையோவென மருள் காட்டும்
முடிவற்ற அழகிய வெளியது உலகில்.
துடிப்பு மகிழ்வுடன் மக்கள் உலாவ
துலங்கும் வானெல்லை காணா அழகு.

முத்தமிடுவது போலப் பாவனை காட்டி
முத்தமிடாத பிரமிக்கும் கடலும் வானும்
சங்கமிப்பதாய்க் காட்டும் மாய அழகு
பொங்கும் நைஸ் கடற்கரையழகு குலைந்தது.

பயங்கரவாதம் வேலி தாண்டித் தாங்கொணா
மனவலிகள் தருவது புதுமையல்ல சூரியன்
உதித்து மறையும் செயலாக ஆகிவிட்டது.
அழகு நைஸ்நகரில் நாமுமொருமுறை வலம்வந்தோம்.

பாரவண்டியை அதி வேகமாய்ச்  செலுத்தி
பாதகமாய் எண்பத்தி நான்கு உயிர்கள்
பிள்ளைகள் பெரியவர்களாக பலியெடுத்ததும் பலர்
படுகாயமுற்றதுமான தகவலால் மனம் வலிக்கிறது.

விழுந்திட நொண்டும் வகையாய் தமிழில்
எழுகின்றது பல எழுத்துப் பிழைகள்.
பழுது கண்டு மனம் வலிக்கிறது.
இழுக்குடை நிலை இது மாறட்டும்.

அழகு, இயற்கை, ஆனந்தக் கொண்டாட்டம்.,
பழகும் உடன் பிறப்புகளைப் பிரிந்தோம்
துழாவும் மன வலிகளுடன் மேற்கிலெமக்கு
பழகிவிட்ட பாழும் துன்ப விளையாட்டிது

சுற்றிலும் ஈட்டிகளாக வெற்றி ஏணிகளாக
நற்குணம் மாற்றும் குற்றுயிராகவும் ஆக்கும்
கற்றவனும் கல்லாதவனும் பெறும் சாகசமிது
குற்றிக் குதறி மனம் வலிக்கிறது

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-7-2016

2008-7-6_11638_flower_divider_13793720_42120324_std

1. நான் பெற்ற விருதுகள்.

14632817_1798499823748125_4523818041012046638_n-1

 

எனது எழுத்துலகப் பயணத்தில் பெற்ற விருதுகளை
இங்கு பதிவது இங்கு தேவையெனக் கருதுகிறேன்.
கண்ணதாசன் சான்றிதழ் காலக் கவிதைகளுடன்
தனி பதிவாக இங்கு பதிகிறேன். அதன் மூலம்
இறுதியாகப் பெற்ற விருதுடன் இப்பதிவைத் தொடங்குகிறேன்.

அங்கீகாரம்

(சங்காத்தம் – இணக்கம்)

வாழ்தலின் ஒரு அங்கம்.
தாழ்தலைத் தடுக்கும் அங்கீகாரம்.
ஆழ்தலை ஏந்தும் அங்குசம்.
இங்கிதமான கைப்பிடி முன்னோக்க.

எங்கும்  வசப்படாது ஏமாற்றும்.
தங்காதும் ஓடும் தரித்திரமாக.
கங்கை தான் திறமைக்கு.
கிங்கிணியான இன்பம் எட்டினால்.

வங்காள விரிகுடாவாகும் பலருக்கு.
பொங்கி வழிந்து ஓடும்.
சங்க காலம் முதல்
சங்கடம் தரும் புள்ளி.

சங்கரன் முதல் சாதாரணனும்
அங்கீகார சங்கமத்தில் ஐக்கியமாக
சங்கற்பமிடுவதே பெரும் யாகம்.
சங்காத்தம்  எம் திறனிலுண்டு.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-10-2016

oo

 

 

அன்று கவியுலகப் பூஞ்சோலையாக இருந்தது.

இன்று     (25-10-2016) தமிழமுது கவிச்சாரல் என்று

பெயர் மாறியவர்களிற்கு எழுதிய நன்றி வரிகள்.

 

line-png-3png

6. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 6

img_02591

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 6

அமரரான என் தங்கையின் இலங்கையில் வாழும் மகளின் மகன் தோழனாக நின்றார்.
திருமண மண்டபத்தில் முதலில் பால்சோறு, கட்டைச் சம்பல் என்று கூறுவோம் அதை மேலே தூவி சிறிது கிறீமும் விட்டுப் பரிமாறினார்கள்.

img_02581

சிறு வாழையிலைத் துண்டு வெட்டி அதன் மேல் தான் பால் சோறு ( கிரிபத்) புக்கை பரிமாறியிருந்தது. கேக் துண்டு போல நாற்கோணமாக வெட்டி வித்தியாசமாக இருந்தது. நல்ல சுவையாகவும் இருந்தது.

14359230_10153662383936403_8411760873378307168_n
தாலி கட்டி முடிந்தவுடன் திருமணப் பதிவும் நடந்தது. திருமணப் பதிவுகாரரும் ஒரு சிங்களப் பெண்மணி சின்னஞ் சிறுவர்களைக் கூப்பிட்டு மணமக்களோடு சுற்றி நிற்க வைத்து சின்ன ஒரு பேச்சு நடத்தி மோதிரம் மாற்றி எழுத்து நடத்தி முடித்தார் அது வித்தியாசமாக இருந்தது. இதன் படங்கள் தேடியபடி உள்ளேன். கிடைத்தால் பயணக் கதை இடை நடுவில் போடுவேன்.
எழுத்து முடிய…. கவனியுங்கள்!!…அதே கூறைச்சேலை பட்டு வேட்டியுடனேயே பென்னம் பெரிய திருமண கேக் ஒன்று வெட்டினார்கள் மணமக்கள்.

cake-2

குழுவாகப் படங்கள் எடுத்த பின்பு, படங்கள் எடுப்பவர்கள் மணமக்களைக் கடத்திக் கொண்டு போய் விட்டனர் வெளியே படம் எடுக்க என்று.

மாலை நாங்களும் வீடு வந்தோம்.
அடுத்த நாள் மெல்பேர்ண் நகரம் சுற்றிப் பார்க்க என்று தம்பி மகன் எங்களை மெல்பேர்ண் நடு பட்டினத்திற்குக்   கூ ட்டிப் போய் இறக்கி விட்டுimg_02941

வாகனத் தரிப்பிடம் தேடி அலைந்தார். நாங்கள் எமது வேலை முடிய மாலையில் தொலை பேசித் தகவல் தருவதாகக் கூறி எங்களை விட்டிட்டுப் போகச் சொன்னோம் அவருக்கும் வேலை என்பதால் போய்விட்டார்.

மெல்பேர்ண் நடு மையம் (பிஃளின்டேர்ஸ் தெரு) புகையிரத நிலையத்தின் முன்பு நிற்கிறோம். சுற்றி வர பெஃடரேசன் சதுக்கம். நின்ற இடத்திலிருந்து 2-3 படங்கள் தட்டினேன்.

img_02931

img_02971
” மெல்பேர்ண் விசிட்டேர்ஸ் சென்ரர் ” ஒரு வகையில் சொல்லப் போனால் ஊர் சுற்றுவோரின் தகவல் நிலையம் நீல நிறத்தில் ஒரு பக்கத்தில் எமது கண்ணில் தட்டுப் பட்டது. ” இதோ பாருங்கோப்பா உள்ளே போய் பார்ப்போம் ” என்று புகுந்தோம்.

img_02981
சிறிய இடமாக இருந்தது. படிக்கட்டு தெரிந்தது. படியால் கீழே இறங்கினோம் பரந்த இடத்தில் பல கந்தோர்கள், கழிவறை வசதி என்று இருந்தது. நகரம் சுற்றிப் பார்க்கும் பயணச் சீட்டு வாங்கினோம். ஒரே பயணச் சீட்டை ஒரு நாள் பாவிப்பது, 2 நாள் பாவிப்பது என்ற வகையில் வாங்க முடியும். நாம் ஒரு நாளுக்காக வாங்கினோம். நாளை பேருந்தில் கன்பரா நகரம் செல்வது எமது திட்டம். மேலே வந்து…..
பெடறேசன் சென்ரர் (சதுக்கம்) சிறிது தூரம் நடக்க ஒரு கட்டிடம். உள்ளே மிக அழகாக இருந்த கட்டிடத்தில்

img_03021

ஒரு பெரிய குழந்தை உருவம் தலை குப்புறத் தொங்கியது. அதைப் பார்த்துத் திகைத்து விட்டேன்… இஃதென்ன அநியாயம் என்று!… உடனே இதைப் படம் எடுத்தேன்.

img_02991

அதன் கீழே யோகா செய்தனர். ஏதோ குழந்தைகள் கொண்டாட்டத்திற்காகச் செய்தது என்று கூகிளில் தேடித் தேடித் தகவல் எடுத்தேன்.
விவரம் சிறிது படமாகப் போடுகிறேன் பாருங்கள்.

unavngivet-png-2

reynold

( எழுத்துகளுடன் உள்ள படங்கள் இரண்டும் கூகிள் படங்கள்)
மற்றவை எனது படங்கள்)
அடுத்து நகரம் சுற்றிப் பார்க்க மறுபடி நடந்து (சுற்றுலாவில் எமது நடைப் பயணமும் இங்கு தொடங்கியது) முதல் நின்ற இடத்திற்கு அருகில் இருந்த மாதா கோயில் அருகில் பேருந்தில் ஏறிச் சுற்றினோம்.( சிவப்புப் பேருந்து நிற்குது பாருங்கோ! . இது கூகிள் படம்)

image

சுற்றுதல் 45 நிமிடம், ஒரு மணி என்று இருக்கும். விரும்பிய இடத்தில் இறங்கி ஏறி எத்தனை தடவையும் சுற்றலாம்.

(சேச் படியில் நின்று எடுத்த புகையிரத நிலையப் படம் 2)

img_03081

img_03061

இத்துடன்  அடுத்த 7வது பதிவில் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-10- 2016

canada-nakatam

456. அன்பெனும் நதியிலே

62114_252088771593849_1470896617_n

அன்பெனும் நதியிலே

எத்தனை வருடங்களின் பின்னே
இலங்கை டென்மார்க் உறவுகள்
ஆனந்தமான அன்பெனும் நதியினிலே
அவுஸ்திரேலியாவில் திருமணத்திற்கான இணைவு.

வார்த்தைகளில் விபரிக்க முடியாத
வாஞ்சையான அன்பு உறவுகளை
வாழ்கவென மனம் வாழ்த்தியது
வாசமிகு அன்பெனும் நதியினிலே.

கணனியிலிருந்து விடுதலையாகிக் கவனமது
கரைந்து அன்புச் சேறாகியது.
மனச் சுவரில் சித்திரமாக்கியது
மகசூலிட்டது அன்பு நதி.

வாழ்வினுறுதிக்கு அன்பு வச்சிரம்.
வாத்தியமாகியும் இசை சேர்க்கும்.
வாரணமாகும் வாரி வழங்கினால்.
வானுயர் இனிமை அன்பு.

பற்றுங்கள் அன்பால் ஒற்றுங்கள்.
வற்றிடாத அன்பு நதியின்
உற்பத்தியூற்று தன்னம்பிக்கை முத்து
அற்புத விளைச்சல் தரும்.

அவம் அழிக்கும் அருட்சோதி.
அர்ப்பணமாக்கி எங்கும் சமர்ப்பியுங்கள்.
அன்பு நதி ஆர்வமூட்டும்.
வன்மமழியும் அன்பில் நீந்துங்கள்.

கவி ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-10-2016.

0066

4. கண்ணதாசன் சான்றிதழ்

13603261_1748417112089730_3740032208945390882_o

முதல் காதல்

*

( ஐந்தாவது கண்ணதாசன் .சிறப்புச் சான்றிதழ்
முதற் காதல்.)

சந்தம் துள்ளும் பதின்ம வயதில்
தந்தையின் நண்பர் மகனெனும் இனிய
பந்தத்தில் எம்மில்லத்தில் குடி புகுந்தார்.
விந்தையில்லை நேச வனத்துள் இயல்பாகவே நாம்.
தொய்யாத ஒழுக்கவியல் வேலியுள் காதல்
செய்யோனென இரகசியமாகச் சுடர் விட்டது.
மெய்யாக வெளியுலகிற்கு வெளிச்சமான போது
பெய்தது எதிர்க்கணைகள் எம்மில்லத்தில்.
எட்டுப் பிள்ளைகள் இவரின் தந்தை
சட்டென இதயம் நின்று விண்ணுலகேகினார்.
கட்டான குடும்பப் பொறுப்புகள். நிலையில்
கடமை கருதி தென்னிலங்கை சென்றார்.
குடும்பத்தில் மூத்த பிள்ளைகள் நாமிருவரும்.
கடிதம், பிரிவு காத்திருப்பாய் நீண்டது.
கடினமான ஏழு வருடங்கள் காதலாடினோம்.
கவிதையும் காதலுமப்போது பின்னிப் பிணைந்தது.

இலையாம் தேயிலை இறப்பர் தோட்டத்திலிவர் தொழில்.
மலையாய் நெஞ்சிலுயர்ந்த  அலை
நிலையானது கடிமணமாய். தெற்கிற்கு மாறினேன்.
தளிர்விட்டது குடும்பம் குழந்தைகள் பேரர்களாக.
முதற்காதல் முழுக் காதலாகி நர்த்தனமிடுகிறது:
முதுவேனில் வீணையுடன் இன்பக் கீர்த்தனமாகிறது.
மதுவிது குறையாத அன்புப் பாலமிது.
வலியது உண்மையான நடிப்பில்லையன்றேல் இனிப்பது.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-7-2016

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

 

Previous Older Entries