397. வெள்ளைச்சிரிப்பு

11822703_1031009860272606_617664061545255814_n

சித்திரம் பேசுதடி-heading.

வெள்ளைச்சிரிப்பு

வெள்ளைச் சிரிப்பிலில்லைக் களங்கம்.
கள்ளருந்துவதாய் மயக்குது நிசம்.
கொள்ளையடிக்கும் உலகை நிசம்.
கிள்ளை மொழியுனதும் இனிக்கும்.
பிள்ளைச் சிரிப்பைப் பத்திரமாய்
சள்ளையற்றுலகம் பாதுகாப்புத் தருமா!
கொள்ளைக் கேள்விகள் என்னிடம்
நொள்ளை உலகைப் பார்த்து.

அத்துமீறலற்ற அழகுப் பெட்டகம்.
முத்துச் சிரிப்பு இது.
சத்து அழியாது காக்க
பத்தரைமாற்று மனிதர்கள் தேவை.
சுயநலம் நிறைந்து வெகு
பயம் கொண்ட உலகில்
தயவோடு நீ வாழத்
தகவு பல பெற்றிடுவாய்!

(சள்ளை – துன்பம், தொந்தரவு. நொள்ளை – குருடு)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-8-2015

vector_146.cdr

396. வா சினிமா நடிகையாகலாம்!…

11703187_1023018747738384_7658131148293038942_n

வா சினிமா நடிகையாகலாம்!…

இடையை ஏன் காட்டுகிறாய் பெண்ணே
கடை விரிக்கும் கால்களும் தெரியுதடி.
படையெடுப்பார் பலர் உன்னைப் பருக.
கடை போடடி கண்டாங்கிச் சேலையால்.
மடையாய்க் கொட்டும் நீர் அருகே
மலராய் விரிந்து அழகு காட்டுகிறாய்
பா கட்டியுன்னை நான் அடிக்க
பூ வெட்டி நீயென்னை அடிப்பாயா!

சில்லாய் உடையுதடி என் மனசு
பல்லிளிக்கும் உன் அரிவாள் காண்கையில்
நல்ல ஒப்பனை! நடிக்கத்தான் பொருத்தமடி!.
செல்லமே வா! சென்னைக்குப் போவோம்!
அல்லற்படாதே இந்த அரிவாள் கத்தியோடு.
சொல்லடி ஒரு சொல்லு முல்லையே
நல்ல சினிமா நடிகையாகலாம் வா!
தொல்லைகள் தீரும் வா பயணமாவோம்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-7-2015.

vector_146.cdr

395. வயோதிபக் கோலம்…

10521913_1022111664495759_5156956686421536759_n

வயோதிபக் கோலம்…

கோலமிடுகிறாய்! ஓவ்வொரு கோணமாய்
கோமளமாயும் உன்னை ரசித்தது
கோன்மை (அரசாட்சி) செய்த இளமையில்.
கோயிற்சிலை என்றும் நீயெனக்கு!
கோலமான இவ் வயோதிபம்
கோமாளித்தனம் செய்ய விடவில்லை
கோமாட்டியே! என்னிதயக் கோமளமே!
கோலமடி இந்தக் காமம்.

அருகில் வந்தாலும், பஞ்சணையிலும்
அணைக்கும் எண்ணம் மறைந்ததடி!
அசடு வழியச் சிரிக்கிறேனடி!
அருகிலிரு! அது போதும்!
கண்ணில் அன்பு வடிய
காதலுடன் பார்க்க முடியும்!
தொடும் ஆசை இல்லையடி!
தொதலே! வயோதிபம் உனக்குமன்றோ!

பிள்ளைகள் பேரர் கண்டோம்!
அள்ளியெடுத்த அருந்திய அமிர்தம்
கொள்ளையடித்த இளமை தொலைத்தோம்!
கொள்கலம் காய்ந்ததடி! காதல்
கள் கடைசித் துளிவரையே!
கொள்ளுப் பேரன் வரட்டும்
கொஞ்சி மகிழ்வோம் குடிசையில்
அஞ்சுகமே! அன்பில் குளிப்போம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-7-2015

stock-vector-cute-fun-and-colorful-simple-birds-with-lines-leaves-and-flourishes-perfect-wallpaper-or-border-79893292-oo

394. பொறாமை

19-1405748336-7-couple*

தடாகம் கவிதை

 பொறாமை

*

பிறரின் உயர்வால் பொறாமையுறாதவன்

கறளெனும் பொறாமை அற்றவன்.
பொறாமை துறவாமை பெருங்கேடு.
அறவேயதை அழித்தல் மேம்பாடு.
தாங்காத ஏற்காத மனம்
வீங்கிச் சாயும் பொறாமையால்.
ஆங்காரம் ஆவேச நெய்யில்
ஓங்காரமாய் எரியும் பொறாமை.

*

வட்டமிடும் மனவேற்றுமை ஆற்றாமை.
அட்டையாய் உதிரமுறுஞ்சும் பொறாமை
அட்டமத்துச் சனியாயூன்றும் நாட்டாமை.
கட்டணமின்றி அட்டணக்காலிடும் இயலாமை
ஈட்டியாய் வதைக்கும் மனதை.
ஊட்டும் நிறைந்த கசப்பை.
எட்ட வைக்கும் உறவை
ஓட்டகத் தலையே பொறாமை.

*

பொறாமை மானம் வெட்கம்
பாராமை மனதின் அசுத்தம்.
பொறுமைக் குளிர்ச் சாரல்
பொறாமைத் தீ தணிக்கும்.
பண்பற்ற குணமே ஏற்காமை
புண்ணாக்கும் ராஜாளி பொறாமை.
வீழ்த்தும் பொறாமையால் சிறப்பழிவது
வாழ்வமைச்சு எனும் அறமது.

*

பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

*

வேறு

5-7-2010 பொறாமை

பொறாமையால் பொங்கி
ஆற்றாமை அலையடிக்கும்
அலட்சியம் ஓரவஞ்சனை ஒருவனை
நீராட்டி நனைக்கிறது.
வாலாட்டும் கருமைகள்
கோலாட்டிக் கொலுவிருந்து
நூலாட்டும் போது மனிதன்
பொம்மலாட்டப் பாவையாகிறான்.
அப்போதும் தான் வென்றுவிட்டதாக
இறுமாந்து மகிழ்கிறான்.
அந்தோ! பரிதாபம்!

*

Samme  katu  Poraamai – another poem link ;.    

https://kovaikkavi.wordpress.com/2014/06/11/321-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/

**

*

mask-2

393. கூடேகும் வண்ணக் கோலம் + கலங்காது வாழ்வை….

11733407_861553573898843_2086625688_nபடவரி 21

கூடேகும் வண்ணக் கோலம்.

பட்டினப் பரபரப்பிலொரு மயங்கும் மாலை
பட்டு மாலை, படும் மாலை.
வெண் மணலில் காலடிச் சுவடு
வெண் மேகத்திலோ பறவைகளால்  முகடு!
பொத்தாது மனதை விரித்துப் பரப்பி
சித்தம் மகிழும் பெண்களும், பலரும்
இத்தனை சுதந்திரமாய் மொத்தப் பறவைகளும்
சத்தமிட்டு உணவு பொறுக்குமழகு கூடேக!

 

https://www.vallamai.com/?p=59490

Extra

மணலில் காலடிச் சுவடு வெயிலில்
தணலில் காலடி படும் வகயில்

உணலிற்குப் பலவகைச் சிற்றுண்டி கரையில்
இணக்கமுடன் உல்லாசச் சூழல் இங்கு.
(உணல் – உண்ணல். )

வரிகளாக்கம்.
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-7-2015

11802085_867732629947604_440588056_nபடம் 23 
கலங்காது வாழ்வை….

கூடை நிரம்பும் வரை வலையெறிதல்
கூடியுண்ண வைக்கும் குடும்பத்தை, இங்கு
கொட்டும் மழையானால் என்ன! தகிக்கும் 
கொடுமை வெயிலானால் என்ன! சாவுக்கும்
வாழ்விற்கும் நடக்கும் போராட்டமே வலையெறிதல்!
வீழ்ந்து அல்லலுறுவது பலர் வாழ்வு
இலங்கையர் இந்தியரென்று, எல்லை மீறுதலென்று
கலங்காது வாழ்வை சுகித்தல் என்றோ!

1 August, 2015,

https://www.vallamai.com/?p=60300

வரிகளாக்கம்.
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

lines-a

392. நாற்பத்தெட்டு ஆண்டுகள்.

11707623_10206229122624190_3643100454417632384_n

இலங்காதிலகம் – வேதநாயகாம்பாள்.

திருமண பந்தத்தில் நாற்பத்தெட்டு ஆண்டுகள்!

ஒருமித்த நெடுந் தூரப் பயணம்! மலைகள்

அருவிகள், பள்ளங்கள் கையிணைத்த வயணம்.

அருச்சனைப் பூக்கள் தூவுகிறோம் நன்றியில்.

நிலவொளி இசையோடாடும் நடையாய் வாழ்வு

கலவுதல் கலகம் இல்லாத வாழ்வு.

கலசம் நிறை அமுதான நேசம்

கலங்கரை விளக்காதல் காலத்தின் வாசம்.

பற்பல ரசமாக இல்லறம் பிறருக்கும்

நற்பொருள் காட்டல், அவசியம்! அற்புதம்!

பொற்பத இறை நல்லாசி எம்

கற்கண்டு வாழ்வின் நல் இணைப்பு.

நற்குண நிறை துணை, அழகு

சிற்பமாய் அறிவுடை மக்கள், பேரர்

பொற்குவியலாய் நல்லாரோக்கியம், அமைதி

உற்சவமாக்கிய சிற்பரனுக்குக் கோடி நன்றி.

(சிற்பரன் – அறிவுக்கெட்டாத இறைவன்.வயணம் – நிலைமை.)

 

பா வானதி வேதா. இலங்காதிலகம்

டென்மார்க்

21-7-2015

1497644_711501292222838_685332466_n-ooo-ll

42. அலத்தத் (சூரியகாந்தி) தமிழ்!

unnamed

அலத்தத் (சூரியகாந்தி) தமிழ்!

அலட்சியங்களால் அலவு கொண்டாலும்
அலட்டிக் கொள்ளாது அம்பாக
அலத்தமாகச் செந்தமிழ் தெம்பாக          
அலங்கார வரிகள் ஓயவில்லை!!

கவி, பா மழை
புவியான மனம் நனைக்க
அவிழ்வது அமைதி ஆனந்தம்
குவிவது தமிழ் வாசம்!

நினைத்ததை மேடையில் கூறல்
நிகழ்ந்தது பதினொரு அகவையில்
நின்மல எழுச்சியது பெரும்
நிறைவுடை ஆக்கம் ஊக்கம்!

கர்வம் சுயநலம் நிறையுலகில்
சர்வசாதாரணச் சஞ்சாரம் கடிது
வர்ணம் பூசி வகையாய்
அர்ப்பணம் செய்யலாம் காலத்தை!

(அலவு – மனத்தடுமாற்றம், வருத்தம்; அலத்தம் – சூரியகாந்தி)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்:
டென்மார்க்.    9-8-2015

dividers

391. துணிவு.

SUKSESS

துணிவு.

*

இடைஞ்சலை எதிர்நோக்கித் தாங்கும் பாங்கு

 அடையும் மனித வரலாறு துணிவின் பங்கு.

 விடையோ பல பரிமாணங்கள், சாதனைப் புதுமைகள்.

 தடையற்ற உலக இயக்கக் காரணி துணிவாளர்கள்.

*

 

உடலாரோக்கியத்தால் பெறும் சாந்தம், உற்சாகம்

 கடல் போல் நம்பிக்கையின் ஆதிப் பிறப்பகம்.

 உடற் பலத்தில் வீரியக் குடை விரியும்.

 நடை போடும் மனப்பலம் துணிவு.

*

 

 துணிவின் அத்திவாரம் உண்மை, நேர்மை.

 துணிவான உடலுளத்தின் அபிவிருத்தி ஆளுமை.

 துணிவு முன்னிலை வகிக்கும் அச்சாரம்.

 துணிவு முயற்சி பயிற்சியிலாகும் வித்தாரம்.

*

 

தயக்கம் பலவீனம் துன்பத்தின் காரணம்.

 நயக்க முடிவெடுக்கும் அதிகாரம் சுயபூரணம்.

 அச்சம், பலவீனம் வெல்லுதல் துணிவு.

மெச்சும் கருத்துருவாக்கல், வெளிப்படுத்தல் துணிவு.

*

 

 தவறைத் தட்டிக் கேட்டல் துணிவு.

பிரச்சனைகள் சமாளிக்கும் திறன் துணிவு.

நல்லது, கெட்டது எடுத்துரைத்தல் துணிவு.

தம்பதிகளிற்குள் சமமான மதிப்பு துணிவு.

*

 

நேர்மைவாழ்வு மனம், உடலிற்குத் துணிவு.

சோம்பேறித்தன மற்றவர்கள் துணிவாளர்கள்.

தீமைகளைப் படைதிரட்டி எதிர்ப்பான் துணிவாளன்.

வாழ்வில் தடம்பதிப்பான் வல்லமையாளன், துணிவாளன்.

*

 

ஒழுக்க வாழ்வு துணிவிற்கு நற்பயிற்சி.

வழுக்காத துணிவின் நடுப்புள்ளி இதயம்.

அநியாயக் களை வளர்ந்து துணிவு

நியாயம் முடங்குதல் பெரும் குனிவு.

*

 

பா ஆக்கம் . வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

3-2-2014.

*

 

11223944_10206213712558948_5950246429026053381_n

 

*

samme heading:-

236. துணிவு.

 

lines-c

390. பாலைவனச்சோலை உன்னருகு!

11717174_858467787540755_455889006_n

பட வரி 20  
பாலைவனச்சோலை உன்னருகு!

பாரில் உயிர்கள் இயங்க
பாசம் காதல் பொதுவுங்க
மாக்கள் மனிதரும் உணர்வில்
மாற்றமில்லாச் சம தேடல்.
காதல் துறைமுகத்தில்  இணைகளுக்கு
காத்திரமான நங்கூரம் – அருகாமை
வயோதிபமும் வளரிளம் பருவமும்
வசமாக விரும்பும் வாசமிது.

சுதந்திர வனத்தில் இணையாமை
தந்திரமாய் இங்கடைத்தார் மானுடர்
கூண்டிற்குள் எம் பொழுதாயினும்
மீண்டதுன் அருகாமை ஆறுதல்
அடுத்த காட்சிக்கு முன்னர்
எடுக்குமுன் அருகாமை ஓய்வு
கொடுக்கட்டும் மகாபலம் எமக்கு
கொடுப்பனையிது பாலைவனச்சோலை உன்னருகு.

பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-7-2015

https://www.vallamai.com/?p=59504

lines-b

389. பார்வையில் தெரியாமலும் முகமூடி

11124265_850423111678556_1461065741_n

படக் கவிதை 19
பார்வையில் தெரியாமலும் முகமூடி

அகம் மூடிச் சிரிப்பு
முகம் மூடிப் பேச்சு
முன் பின் பேசுதல்
முகமூடி இதுவும் தான்.
கூன் ஒரு வகையில்
தூண் இது பொய்யருக்கு
சீண்டும்  பொய்க் கருவி
பகிடி(fun ) இது குழந்தைகளிற்கு.

கலை வெளிப்பாட்டுத் திறமை
தலை விரும்பிய வேடத்திற்கு
அலைவு மூடி நீதிக்கு
உலை வைக்கும் உண்மைக்கு.
திருட்டில் ஒட்டும் நண்பன்
உருட்டும் தலைக்கு சிந்தனை
இருட்டு பற்றி அக்கறையின்றி
வெருட்டென வெருட்டும் முகமூடி.

https://www.vallamai.com/?p=59286

பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
4-7-2015

(இதே தலைப்பில் இன்னொரு கவிதை இணைப்பு இதோ!) :-   https://kovaikkavi.wordpress.com/2010/12/28/191-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF/

 

mask-2

Previous Older Entries