39. Well come 2015 and Best wishes to all. புதிய வருட 2015 உதய வாழ்த்து

2015. wish...

Well come 2015 and Best wishes to all.

புதிய வருட 2015 உதய வாழ்த்து

 

எண்ணக் கோலம் எடுப்பாக நாம்

பண்ணும் காரியம் சிறப்பாக வருக!

கிண்ணம் நிறைய வெற்றி நிறைந்து

நண்ண வேண்டும் புத்தாண்டு!

 

வண்ணக் கோலப் பொடியில் எம்

கண்கள் கவரும் புது மாதிரியில்

மண்ணில் வரவேற்கும் புது வருடம்

விண்ணிலிருந்து இறங்கிடாது பார்!

 

நாம் முயன்ற நற் காரியங்களிற்கு

நாமே நன்றி கூறி எல்லாத்

தவறுகளையும் உணர்ந்து மன்னிப்புக் கோரி

தந்த ஆதரவிற்கும் நன்றியிடுவோம்.

 

சனியும் சகலதும் விலகித் தெளிவாக

கனியட்டும் இனிக்கும் 2015 வருடம்.

பனி கூட குறைவாக வந்த

தனி ஆண்டாய் முடிகிறது.

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

31-12-2014.

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_

5. விரல்களை ஏன் யார் தந்தார்!..!…

cho11.2014 010cho11.2014 013

விரல்களை ஏன் யார் தந்தார்!..!…

கரங்கள் பறவையாய்ச் சிறகு விரித்தது
கால்கள் மிதிவண்டி போல மிதித்தது.

எல்லாம் முதல் மூன்று மாதத்திலே

வல்லவனாகிறேன் முத்திங்கள் முடிய.

 

வில்லாய்க் கரங்களை இன்று இணைப்பேன்

விரல்களைத் தொடுதல், சூப்புதல் சுவை!

விரல்கள் பத்தும் பின்னுதல் புதுமை!

விரல்களையேன் யார் தந்தார்!

 

முயற்சி முழுமையான என் முயற்சி!

முழுநேர வேலை இன்றெனக்கு இது!

மல்லாத்தல் மாறியிப்போ பக்கம் திரும்புகிறேன்.

எல்லா மகத்துவமும் முலைப்பாலுக்கே!…

 

முதல் நத்தார் 2014 சோழனிற்கு

முழு மனதாய் அப்பம்மா எனக்கு

தனது தொப்பி அணிவித்து படமெடுக்க

மனது வைத்தார் அப்பப்பா.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

7-12-2014

baby-items

60. ஆழிப்பேரலை

1334484544-song-than-500


(இன்று ஆழிப் பேரலை துன்ப நிகழ்வு நடந்த 10வது ஆண்டு நிறைவுப் பிரார்த்தனைகளும்,
ஆத்ம சாந்தி ஒன்று கூடல்களும் நடந்து வரும் போது அன்று ஒரு வருட நிறைவுக்காய் எழுதிய கவிதையை இங்கு பதிவு செய்கிறேன்.)

ஆழிப்பேரலை ஓராண்டு நிறைவு (க்கு எழுதியது)

ஆழிப் பேரலையின் ஆவேசத் தாண்டவம்
ஊழிப்பிரளயமான முதல் ஓராண்டுக் காலமது.
சோழியாக உருண்டது  பலர் வாழ்வு!
கீழிறங்கினர்இ சொத்து சுகம் இழந்தனர்.
விழிநீர் வழிய உறவிழந்தனர் பலர்
வழியேதுமின்றி இன்றும் துயரில் பலர்.
00
சொர்க்கம் எமது நாடு எனும் 
வர்க்கத் தரம் பேணப்பட்டு இன்று
நிர்க்கதியாக யாரும் இல்லை யென்ற
சர்க்கரைச் செய்தி பரவ வேண்டும்.
தீர்மானமுடன் அதிகார நிறுவனங்கள் தம்
அர்த்தமுடை சேவையை அர்ப்பணிக்க வேண்டும்.
00
நல்லதைச்  சொல்பவர் சொன்னபடியே இருக்க
பொல்லாததைச் செய்கிறவர் செய்தபடி இருந்தால்
பொழியும் நிலவின் குளிரெங்கே தெரியும்!
வழியும் காதல் மொழிகளில் விவாகரத்து ஆகும்!
களிபொங்கும் குயிலிசையிலும் கனல் பறக்காதோ!
வழியற்ற மனம் வக்கிர பாதையிலிறங்காதோ!
00
விழி மனமே! உன்னிலும் கீழ் நிலையாளரைக்
குழிக்குள் தள்ளாது கைகொடுத்து உதவு!
பழிக்காளாகாதே! அருகிருந்து அடுத்துக் கெடுக்காதே!
புதுவழி காண உதவும் பொதுநலப்பணத்தைபதுக்காதே!
புனர் வாழ்விற்குக் கை கொடு!
அதுவுன்னை மனிதநேய விழிப்புணர்வு மனிதனாக்கும்!
00

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.27-12-2005

00

வேறு:-

ஆண்டவன் கணக்கு இது

எறும்புகள் சேர்ந்த நெல்மணிகள்
அரும்பு விட்டு முளைத்தன.
விரும்பி வாழ்ந்த வீடுகள்
நெறுங்கி அழிந்தது சுனாமியால்
00
அறுவடைக்குக் காத்திருந்த வேளை
அடைமழை கதிர்களை நனைத்தது.
இசைவுபாடுகளை என்றும் அழிக்கும்
முரண்பாடுகள் முட்டி மொதும்.
00
முரண்பாடுகளில் கட்டி முடிக்கும்
அரணமனை தானே நம் வாழ்வு
ஆண்டவன் கணக்கு இதுவென்று
மீண்டவர் யார் கூறுவார்!
00
நீண்ட நெடும் பாதையில்
தாண்டும் தடை ஏராளம்
சீண்டும் தொல்லை தாராளம்
மாண்டிட வேண்டாம் மன ஆர்வம்
00

(இலண்டன் தமிழ் வானொலி வியாழன் கவிதை)
20-2-2005

தாரண வருடம் எழுதிய ஆழித்துன்பக் கவிதை

https://kovaikkavi.wordpress.com/2010/12/26/189-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/

Samme kind of:-        https://kovaikkavi.wordpress.com/2011/03/12/231/

imagesCAX5K52V

352. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

10410980_10204583833532991_5850128444846040123_n

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

(தென்னங்கீத்து ஊஞ்சலிலே ராகம் இணைத்து பாடிப்பாருங்கள்.)

 பின்னும் உடல் குளிரிலே

முன்னுரையிடும் புயற் காற்றிலே

இன்னும் வழுக்குமோ பாதை

சின்ன மனம் பதறுது

சின்ன மனம் பதறுது

 

பிள்ளை மனமாய் ஆவலுடன்

வெள்ளை நத்தார் வருமோவென

கொள்ளை எதிர்பார்ப்பு இவர்களிடம்

துள்ளுது தொலைக்காட்சியில் வார்த்தைகள்!

துள்ளுது தொலைக்காட்சியில் வார்த்தைகள்!

 

பெண்ணிழந்து வருந்தும் துணையாகி

வெண் மேகம் மங்கலாகிப்

பண் பாடுது அழுவதாகி

மண் பார்க்கக் குனியுது

மண் பார்க்கக் குனியுது

 

ஊசியிலை, பைன், ஓர்க்கிற்கு

தூசன்றோ பனி மூட்டம்!

கூசும் குளிரும் வழமையே! 

தேசுடை(ஒளி) பனியும் அழகே!

தேசுடை(ஒளி) பனியும் அழகே!

 

தேவன் பிறப்பு நாள்

தேங்கும் பனியிலெனும் விருப்பம்

தேவ கிறிஸ்துமஸ் நாளாகட்டும்!

தேவகிருபையுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

தேவகிருபையுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

23- 12- 2014

007_gltrcmasgarlbowsrt8988999911

 

351. மயிலழகா உன் ஒயிலழகா!

1601202_887703164603277_3057235329571767271_n (1)

மயிலழகா உன் ஒயிலழகா!

குயிலாகக் குரலெடுப்பாய் நிலவே
வெயிலில் வாடாத மலரே
மயிலழகா உன் ஒயிலழகா
எயிலின் (ஊர்) ஆராய்ச்சி இன்று!
மாந்தளிர் மேனியை ஏன்
மாந்துது (நுகர்தல்) ரோசாத் துகில்!
சாந்தமானவுன் பிரதி பிம்பம்
பாந்தமாக உள்ளதா நீரில்!

துயில் மறந்தேன் உன்னால்
துளைப்பொன்னாய்(புடமிட்டதங்கம்)தகதகக்கும் அழகு
துளைத்து (ஊடறுத்து) என்னைத் துவைக்கிறது.
துள்ளித் தழும்புகிறேன் தூயவளே!
அழகைப் பூவாளியால் ஊற்றிய
அங்கணன்(சிவன்) வைரக் கலைஞனே!
நீலவானின் நீலகந்திச் (மாணிக்க வகை) சிதறல்களாய்
நீ மின்னி ஒளிர்கிறாய்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-11-2014

Ha_3610png0002

16. காற்றாடி (காத்தாடி)

cho11-2014 102

காற்றாடி (காத்தாடி)

 காத்தாடி காத்தாடி காத்தாடி

ஆத்தாடி வெற்றியின் காத்தாடி!

சேர்த்தாடும் நிறங்கள் நான்கு.

சுற்றியாடுதே சுளன்றாடுதே அழகு.!

 

காற்றாடி காற்றாடி காற்றாடி 

வெற்றியின் காற்றாடி ஆத்தாடி!

காற்றாடி கண்ட பேராண்டி

ஏற்றாடி மகிழ்ந்தார் வெற்றி.

வற்றாத கற்பனை காற்றாடியாய்

ஊற்றாடும் என்றது ஒப்பனை.(உவமை)

கீற்றாடும் உந்தன் சிரிப்பு

தோற்றோட வைக்குமெம் கவலைகளை.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

30-11-2014

card31

350. கருத்துக் கோலங்கள்

10003475_704682586256859_451808268_n

கருத்துக் கோலங்கள்

ஒவ்வொரு ஆக்கத்திற்கும் கருத்திடுவார்.
ஒன்று விட்டொன்றிற்குக் கருத்திடுவார்.
ஒன்றிற்குக் கிழமையில் கருத்திடுவாள்.
ஒன்றிற்கு மாதத்தில் கருத்திடுவாள்.
ஒப்புக்கும் பலர்! மனமொத்து
ஒன்றிய சிலரெனப் பலரகம்!

நல்ல வரிகளின் ஈர்ப்பு
நடனம் மின்மினிச் சிலிர்ப்பு!
நகராது நாலு வரியிட
நத்தும் (விரும்பும்) மனக்கிளர்வு உண்மை.
தத்தும் தில்லுமுல்லு இங்கும்.
கொத்துது தமிழ் பாவம்!

கொள்ளைத் தவறுடை ஆக்கம்
அள்ளுது ஓகோ! கொடை!
வள்ளலாய்க் கருத்திடுங்கள் என்று
உள்ளகப் பெட்டியில் வேண்டுகோளாம்!
உள்ளறைச் சருகைச் சால்வை
எள்ளும் (ஏளன) போர்வைக் கலாச்சாரம்!

ஐவிரல் போன்று கிளியின்
ஐந்து நிறங்களாய்க் கோலம்
ஐந்து நாட்களும் தன்னாக்கமிட்டு
ஐக்கியமின்றி ஒதுங்கும் சிலர்.
ஐயப்பாடுண்டு இது ஏனென்று!
ஐசுவரியத் தமிழ் பெருகட்டும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-12-2014.

samme heading….https://kovaikkavi.wordpress.com/2011/03/09/230-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/

samme heading:-   https://kovaikkavi.wordpress.com/2016/02/18/431/

765536nduvjsuirm1

349. ஆணியிடட்டும் ஆழமாக…

527780_153197284815107_1622485494_n

ஆணியிடட்டும் ஆழமாக...

துயரத்தின் அடையாளங்களை அழித்தழித்து
துளிர்க்க நம்பிக்கை வார்த்து
துவளாது இறைவனை வேண்டியபடி
துளிர்க்கும் வாழ்விற்காகப் போராட்டம்.

வித்து பெற்றவர்கள் இணைவு
விலகாத உன் நினைவு
விடாது பிடிக்க ஆசை.
விலகாதே இணைந்திரு இன்பம்!

உறவு உறுதியான வேராக
உயிருக்குள் புகுந்தது இறுகி.
உலகு முடியும் வரையெம்
உணர்வோடு கலக்கக் களிப்போடிரு!.

ஆசை நிறைகின்ற வாழ்வு
ஆட வரம் நிறையட்டும்!
ஆணிப் பொன்னான உயிர்
ஆணியிடட்டும் ஆழமாக உலகில்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
17-12-2014

page_divider_2

348. அற்புதங்கள் நடக்கட்டும்!

7Murugan__2__

அற்புதங்கள் நடக்கட்டும்!

அற்புதங்கள் நடக்க இடம் கொடுங்கள்!

கற்பனையால் வாழ்வைப் புதைக்காது எம் 

உற்பத்தித் தலைவன் இறைவனை தியானியுங்கள்!.

முற்றுமாய் முயற்சியுங்கள்! அற்புதம் நடக்கட்டும்!

உயிர் தங்கிட ஊட்டச் சத்து!

உண்மை தங்கிட உள்ள சுத்தம்!

உன்னத வாழ்விற்கு  உண்மை உறவு!

என்பது மாறாது! முயற்சி அவசியம்!

எம் முடிவல்ல வாழ்வு! உயர்

எல்லையற்ற சக்தியின் இயக்கம்!

உங்களாலும் புரிய முடியாது! இயற்கை 

உங்களையும் வியக்க வைக்கும்! முயலுங்கள்!….

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

13-12-2014

484864_619464024775612_1645420173_n

33. புற்றுநோயை வென்றவள்.

images

புற்றுநோயை வென்றவள்.

அகில உலகமும் தெரிந்த டென்மார்க்கின் ஓப்பரா பாடல் பாடும் நட்சத்திரமும்

மகாராணியின் 70வது பிறந்த நாளிற்குப் பாட்டுப் பாடியவருமான

ரீனா கிபேக் 2010ல் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

மூக்குப் பிரியும் சுவரில் பெரியகட்டி உருவானது.

 கழுத்து தோள்பட்டை எலும்பு வரை அது பயணப்பட்டமாதிரி. 

அறுவை சிகிச்சை  

மேலும் பரவாது இருக்க கதிரியக்கச் சிகிச்சை, கீமோதெரப்பி என்றும்,

இனி அவர் பாட முடியாது என்ற நிலையும் வந்தது.

நுரையீரல்வரை நோய் பரவியது.  கதிரியக்கச் சிகிச்சை, கீமோ என்பவைகளால்

10 கிலோ எடை குறைந்தும், உணவு விழுங்க முடியாமலும் உடல் நோவினாலும் அவதிப்பட்டார்.

வைத்தியர்கள் கை விரித்து விட்டனர். அவர் இறந்து விடுவார் என்ற முடிவைக் கூறினார்கள்.

மிக மனம் சோர்ந்தார்.  கெயலிவ் வைத்தியசாலை வைத்தியரின் ஊக்கத்துடன்

மாறுபட்ட சிகிச்சையாக அதிக அளவு விட்டமின் சி திரவ நிலையாகவும்,

விட்டமின் டி3 டபிள் அளவாகவும், மீன் எண்ணெய். பழவகைகள், உடற்பயிற்சி பாடல் என்று

சுறுசுறுப்பாக இயக்கினார்கள். 

2011ல் ஸ்கான் செய்த போது புற்று நோயிற்கான எந்த அடையாளமும் அவரிடம் இருக்கவில்லை.

வைத்தியர்கள் ஆச்சரியப்பட்டனர். மறுபடி ஓப்பரா திரைகளில் பாடுகிறார்.

தன்னை ஊக்கப் படுத்திய வைத்தியரை மெச்சுகிறார்.

உடலில் நேயெதிர்ப்புச் சக்தியைக் (immunity) கூட்டினால் எந்த நோயையும் வெல்லலாம் என்பதற்கு

ரீனா கிபெக் சிறந்த உதாரணம்.

(B.T denish பத்திரிகையில் வந்த கட்டுரையின் சுருக்கம்.)

 

தமிழாக்கம் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

8-12-2014.

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

Previous Older Entries