414. விநாயக சதுர்த்தி.

12182061_908652885855578_1988822123_n

 

படம் 36
விநாயக சதுர்த்தி.

 

விரதம் முடிய, பார்வதியே
விரவல் செய்தார் கடலிலுன்னை.
பரதத்துவம் பாதத்தில் மிதிபடாமல்
சிரத்தையாயுன்னை நோன்பு இறுதியில்
பரவையில் போட கரைகிறாய்
பூமியில் அவதரித்த நாமிறுதியில் 
பூமிக்கேயென்ற தத்துவம் கூறும்
பூதல உருவாய்  நீயிங்கு!

 

பஞ்சமா பாதகங்களை மானுடம்
அஞ்சாது செய்வதை  தொலைக்க
நெஞ்சத்தால் உணர்ந்து கரைக்க
தஞ்சம் நீயென அடையாளமாகுகிறாய்.
தளர்வற்ற மாசறு மனம்
அளவற்று  நீள அருள்வாய்!
வளர்பிறைச் சதுர்த்தி ஆவணியில் 
வரம் தா ஆனைமுகத்தோனே!

 

( விரவல் – கலத்தல்.  பரதத்துவம் – பரம்பொருள்.  பரவை – கடல்.)

 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-10-2015.

https://www.vallamai.com/?p=63493

 

summer-divider-clipart-divider2

70. பிழைக்கும் கவித்துவம்…!

11923198_10206457900343490_7416856781895452082_n

 

பிழைக்கும் கவித்துவம்…!

 

நந்தவனப் பூ மெத்தையில் சிறு நதி ஓரத்தில்

சொந்தம் யாருமின்றி இயற்கையை மிக விரும்பி ரசித்தல்

 

வண்டுகள் ரீங்காரித்துப் பறக்க வண்ணத்துப் பூச்சிகளும் சிறகசைக்க,

கண்டிட முடியாத் தென்றலை உணர்ந்து குளிர்மையை ரசிக்க 

 

எவரமைத்தார் இந்த நந்தவனத்தை?! அருகினில் ஒரு இதம்

கவருகின்ற தென்னை மரச்சோலையும் பறவைகள் ஒலியும் பரவசம்!

 

பொல்லாக் காற்று இல்லாததால் தென்றலும் மெல்லிசைக் கடை

தொல்லையில்லா ரசனை! கவிதை பொங்கிட ஏது தடை?!

 

தலையசைத்த மலர்கள் வாசனையை இதயத்துள் மெதுவாகத் தூவின

தலை ஆட்டும் தென்னோலைகள் சில தேங்காய்கள் தந்தன

 

தனிமை இல்லையே! எங்கோ போனது! வண்டுகள் ஓசையும்

இனிமை சேர்க்கச் சோலைநிழல் காட்டியது கோலம்

 

குழலோசை ஒன்று குயிலோசையாய்த் தவழ மயக்கம் வந்தது

உழவுமழையாய் உள்ளத்தில் பொழிந்து அரங்கத்தில் அமருமுணர்வு கூட்டியது

 

ஆகா! அற்புதம்! என்னே இயற்கை! எழுதலாம் எழுதலாம்

சாகா வரிகள்! பிழைக்கும் கவிஞன் திறமை என்றும்!

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்

டென்மார்க்

 

ssssd

 

21. தட்டுங்கோ தட்டுங்கோ

mine 10 028

 

தட்டுங்கோ தட்டுங்கோ

தட்டுங்கோ தட்டுங்கோ தாளம்
கெட்டித்தனமாய்த் தட்டுங்கோ
பாட்டு பாடித் தட்டுங்கோ… …..(தட்டுங்கோ)

தட்டு ஒன்று ஒன்று
விட்டு ஒன்று ஒன்று
தட்டு இரண்டு என்றும் …………(தட்டுங்கோ)

மெல்ல தட்டித் தட்டி
வேகமாய் தட்டித் தட்டி
பாடி ஆட தட்டுங்கோ………….. (தட்டுங்கோ)

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-6-2015

download.png-kk

69. பச்சையின் முதுமை

vetha

பச்சையின் முதுமை

 

பச்சை வண்ணம் கண்களிற்கு உச்சமாய் அகம் குளிர்வித்துப்
பருவம் தந்த இலைகளிற்குப் பக்குவமான பங்கீடு முதுமை பருவத்தோடு அசைந்து ஆடிப் புருவமாய் மலர் அருகிலது
பருவ காலம் மாறிடக் கருகுதலான காம்பு கழன்றது.
leaf-border-23321698
 நிழல் குடையான இலையென்று நிலப் பாவாடையான நிலையின்று சருகு சரசரக்கவில்லை பழுத்து முருகு நிலம் போர்த்தியது
ஆல் வேலிங்கு இல்லை வீல் என்று அலறவில்லை
கால்கள் புதையும் அளவு கீழ் விழுந்தது முடிவு.
leaf-border-23321698
 இலையுதிர் காலம் விரித்தது இறகு நீளாது பனி
இறகுகளை மூடிடும் எருவாகி இசைவாகிப் பூமியோடு மண்ணாகும் நான்கு விதப் பருவங்களை நாம் ரசித்து வாழ்கிறோம்
நன்கொடையாம் இயற்கையின் அற்புத நயப்பாடான பரிசை அனுபவிப்போம்.
                                                                          leaf-border-23321698
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
2015 nov
leafline2

41. கலாகேந்திரா வெள்ளிவிழா

வெள்ளிவிழா வாழ்த்து

Enter a caption

எங்கள் நகர பெற்றோர் சங்கம் விழாவில் கையளித்த வாழ்த்து.
என்னால் எழுதப்பட்டது.

வெள்ளிவிழா வாழ்த்து

 

கலைத் திறன் வெளிப்படுத்தும்
கலை வளர்க்கும் நிலையம்
கலை பாதுகாக்கும் வலையம்
கலாகேந்திரா கலையகம்.

 

கலாதேவி சுமித்திரா சுகேந்திராவின்
கலா மோகம் மேகமாகி
கவின்மிகு கலாச்சார தூவலாகி
கல்வியாக ஈய்தல் ஆத்மதிருப்தி.

 

மன ஊக்கம் தாகமாகி
தினம் 1990 – 2015 நிறைவாகி
கனதியான 25 வருடங்கள்
மனதைத் தொட்டு உழைத்திட்டார்.

 

” வெள்ளிச் சலங்கை” குலுங்கும்
துள்ளச் சலங்கை குலுங்கும்
வெள்ளி விழா 14-11-2015
அள்ளித் தெளிக்கிறது ஆனந்தம்.

 

ஓகுஸ் தமிழ் பெற்றோர் சங்கம்.
ஓகோ என்று வாழ்த்துகிறது.
ஓங்காரமாய் வளர்க! வாழ்க!
கவினுடை கலாகேந்திரா கலையகம்.

 

வாழ்த்துவோர்
ஓகுஸ் தமிழ் பெற்றோர் சங்கம்.
14-11-2015

 

 

anjali-2

 

 

 

413. பணமுடக்கத் தேடல்

12170653_905971192790414_629550325_n

பட வரிகள் 35
பணமுடக்கத் தேடல்

 

லகல சிரிப்பாய் பணமும்
கலகலக்கட்டுமென சீன பொம்மையும்
கல்வி கலைகளோடு கைநிறைய
கவனமாய் கொலுவில் அலங்காரம்.

வேடிக்கை மனிதரை எண்ணி
கூடி வயிறு குலுங்க
நீடித்துச் சிரியுங்கள்! பணமுடக்கம்
ஓட தேடுவார் மனிதர் உங்களை.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-10-2015

https://www.vallamai.com/?p=63316

 

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

50. வெள்ளி விழா வாழ்த்து

unnamed (5)

வெள்ளிவிழா வாழ்த்து

இருண்மையழிக்கும் கலை நடனம்
இருபத்தைந்து வருட கடின உழைப்பு.
இருப்புப்பாதை கலாச்சார விழிப்பிற்கு
இருத்தியது இன்று வெள்ளிவிழாவாக
பழைமைப் பாரம்பரியம் பக்தி
இழைந்த பாதை இளையோருக்கும்
தழைதலான முதியோருக்கும் மகிழ்வாக்கும்
உழைத்துயர்ந்த வெள்ளி விழா.

கலாகேந்திராக் கலையகக் கோலாகலம்
விலாசமாக விரிகிறது டென்மார்க்கில்
ஒன்றாக இணைந்த கூட்டுறவு
நன்றாக நீள வாழ்த்துகள்.
உபமானமற்ற கலாச்சார உதவி
உபயோகம் உயரத்தில் ஏற்றட்டும்.
சுமித்திரா சுகேந்திரா குழுவினருக்கு
சுபமான வெள்ளிவிழா வாழ்த்துகள்.

இலங்காதிலகம் – வேதா குடும்பத்தினர்
ஓகுஸ் – டென்மார்க்.
ஐப்பசி.2015

mine13 132

12219635_899344863436295_6490412055739859990_n

multi024

56. கன்னற் காதல்

58413_252084991594227_338192240_n

கன்னற் காதல்

தென்னஞ் சோலையிலே தென்றல் வீசுகையில்
கன்னம் குழிவிழவே காத்திருப்பாள் எனக்காக
உன்னை நினைக்கையிலே உள்ளம் இனிக்கையில்
என்னை மறக்கிறேன் பூத்திருக்கும் உனக்காக

சொன்ன சொல்லையே நினைவாகக் காத்திடுதல்
என்ற உணர்வென்றும் பவுத்திரக் காதலுக்கே
அன்றொரு நாளருவிக் கரையில் அந்த
உன்னருகு அனுபவம் இன்றும் இனிக்குது.

தென்றலின் சுகத்தில் குளிர் நீரிலமிழ்ந்து
ஒன்றாய் நனைந்தது எங்கள் பாதங்கள்.
இன்னல் கரைந்தது மின்னல் புகுந்தது.
பின்னும் கரங்களால் மனதில் இன்பமடி.

தென்னோலை காற்றிசையில் நடனம் ஆட
கன்னம் சிவந்திட பயத்தில் நீயங்கு
பின்னற் சடையைப் பின்னிப் பின்னி
அன்னையின் ஏச்சுக்கு அகத்தில் பயமானாய்.

என்னைப் பிரியாதென்றும் இணை சேர்ந்து
சின்ன மகனைச் சிற்பமாய் செதுக்குவோம்
அன்னமே பேதையேயென அகத்தில் எண்ணாதே
என்ன சொல்கிறாய்! இதற்குச் சம்மதமா!

மென்மையோ வன்மையோ உன் அன்பு
பன்னீர் தெளித்தலாய் என்னைக் களிப்பாட்ட
மன்னனும் இராணியுமாய் மகிழ்ந்து வாழ்வோம்.
இன்னமுத வாழ்வை என்றும் இளமையாக்குவோம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-10-2015.

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

44. பழுத்துக் கனிவதா!

12208428_10206885021301247_2818818089751784509_n

 பழுத்துக் கனிவதா!

குமிழ் குமிழாகக் குதிக்கிறது
தமிழ் குட்டி நதியாக
தமிழ் புரள வேண்டும்
கவிதை தரமாகத் தவழ்திட
வார்த்தைகளில் கஞ்சம் ஏது
கணத்தில் நேர்த்தியான வரட்சியுமாகும்.
வேர்க்க வைப்பதும் உண்டு
ஆயினும் ஈர்க்கும் வரியமையும்.
Superstar---5-Star-rating---Gold
அலட்சியம், உதாசீனம், ஆற்றாமை
தாண்டி இலட்சியத் தேரோடும்.
மலட்டாறு அல்ல தமிழ்!
சிறக்க புலமகள் அருள்வாள்.
எழுத்திற்கு அளவு தான்
என்ன! பழுத்துக் கனிவதா!
நீரோட்டத்தில்  பதமாகுமா தமிழ்
தானோட்டத்தில் உயர்ந்து உருளுமா!
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-11-2015
ssssd

412. ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

hindu-diwali-rangoli-art-snap

12196063_570298699789605_139786261933961444_n

ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

இந்த ஒளித் திருநாள்
சொந்தங்களோடு சேர்ந்து கொண்டாடும்
அந்த நம் நாடானால்
சிந்தும் மகிழ்வே வேறு!
நாட்காட்டி பார்த்து அன்றி
ஆட்களிடம் கேட்டு அறிந்த
மந்தாரப் புன்னகையுடைய ஒரு
அந்தரமான நாள் தானிது.
உறவுகள் ஒன்றாய் கூடி
திறப்போம் மகிழ்வுக் கதவை.
துறப்போம் கவலைகளை இன்று
சிறப்பு பெருக்குவோம் பட்சணங்களுடன்.
இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
அன்புடன் இனிய வாழ்த்துகள்.
இன்றெமை வாழ்த்தியவர்கள் வாழ்த்த வருவோருக்கும்
இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.
அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
9-11-2015
885940_415392761946867_6721516744376096952_o-b

Previous Older Entries