440. முடி வழித்தல்

 

headshaving

 

பட வரி 40.
முடி வழித்தல்

***

பிறந்த முடி வழித்தலென்று
பிறந்த முப்பதாம் நாள்
சிறப்பாகத் துடக்குமுடி வழிப்பர்
மறக்காது சந்தனமிட்டுக் குளிர்விப்பார்.
குழந்தை கதறக் கதற
வழங்கும் வழக்கங்கள் கொடுமை!
புனித அறிவைப் பாவிக்கலாம்!
மனித வேண்டுதல்களிற்கு அளவில்லை!

***

மூட வழக்கமென்று இதற்கு 
மூடுவிழா வைத்தாலும்  பல 
தடவை வழித்தால் முடி
அடர்த்தியாக வளருமென்பதும் வழக்கு.
பொது உறவு கூடல்
இது சடங்கு என்று!
மாற்ற நினைத்தாலும் மாறாது
போற்றும் நிகழ்வு இது!

***

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
28-11-2015

summer-divider-clipart-divider2

439. எந்த உருவிது!

painted-goddess

 

படக்கவிதைப் போட்டி 38 மேகலா இராமமூர்த்தி வல்லமை

அடுத்து நாம் காணப்போவது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை!

”மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை” என்பார் திருமூலர். சிற்பியின் கலைப்படைப்பான சிலையைக் கடவுளாய்க் காண்பதும், கடவுளாய்க் காட்சியளிக்கும் சிலையானது சிற்பியின் கைவண்ணமேயன்றி வேறில்லை என்று முடிவுசெய்வதும் தனிமனிதனின் விருப்பந்தான். பார்வைக்கேற்றபடி காணும்பொருளும் தோற்றம் தருகின்றது. இந்த அரிய கருத்தை எளிய வரிகளில் விளக்கியிருக்கும் கவிதையொன்று என் கவனத்தைக் கவர்ந்தது.

‘’ பதினாறு கரங்களது விரித்து

பதித்த எந்த உருவிது!

பக்தியாய் வணங்குவதும் கலையிதுவென

பத்திரமாய் மதித்துச் செல்வதும்

பதுமையாய்ப் பார்த்து விலகுவதும்

பலரது மன எண்ணமாகுது.

வேலையற்றவர் வேலையிதுவென

சிலரது வேற்றுமை எண்ணமும் குவிகிறது.’’

***

( வேதா.இலங்காதிலகம். டென்மார்க் 14-11-15 )

இக்கவிதையை எழுதியிருக்கும் திருமிகு. வேதா. இலங்காதிலகத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

***

heart-line

438. கற்பனை உறவாளன்/ கண்கொள்ளாக் காட்சி.

12688178_181110228935225_3262069014588821019_n

 

கற்பனை உறவாளன்.

***

படுக்க வைத்து உருக்கொடுத்து
எடுப்பாக நிமிர வைப்பான் சிற்பி.
கடுப்பற்ற ஒரு படைப்புத் திறன்.
கொடுப்பனவு இவன் சாமியையே படைக்கிறான்.
கற்பனை உறவாளன் செய்வது மகா
விற்பனையற்ற கலை விருந்து உலகிற்கு.
***
ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-3-2016.
12799452_10207645419470726_4355963909732458776_n

கண்கொள்ளாக் காட்சி

***

வானம், உலகமே காணலாம் இங்கு
கானம் பாடிக் கண் மூடியிங்கு
மோனமாய்க் கடலும் கடல் வாழினங்களையும்
தானமாய் ஒரு கனவாய்க் காணுகிறேன்.
கவிழ்ந்தால் நீரினுள் திமிங்கிலம் உண்ணலாம்.
கப்பலின் உள்ளேயானால்கண்கொள்ளாக் காட்சி தானே!
***
ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-3-2016.
hearts-line-205qa1t

23. தாயும் தாரமும்

12803283_1004734142940773_4283166069184925070_n

 

தாரமென விதைக்கும் விதை
தாயென உருவாவது கதை.
சாரமிகு அனுபவ உபயமாய்
தாரமே தளிர்க்கிறாள் தாயாக.
தாரம் தாயெனும் பெண்கள்
ஆரம் வாழ்வினிரு கண்கள்.
கருவேந்தும் உவக சீவன்கள்
உருவாகிறார் அன்புத் தாயாய்.
***
பிறந்தகத்து முத்து தாரமாகிறாள்
புகுந்தகத்தில் கருவேந்தித் தாயாகிறாள்.
உடலளித்த தாரம் தாய்மைக்
கடலாகிறாள் தாய்மை வரத்தால்.
இல்லற வட்டத்தின் ஆரம்பம்
நல்லறமாக்க வரும் தாரம்
பல்லறமாகிறது முடிவுரை தாயாய்.
வல்லாண்மையானது தாயும் தாரமும்.
***
மகனைப் பிரசவிக்கும் தாய்
மகனை தத்துக் கொடுக்கிறாள்
செகம் போற்றுமொரு ஆணை
நிகரில்லாத் தந்தையாக்குகிறாள்
தாரம். தாரம் காதலின்றி வரண்டால்
கோரம் வாழ்வு பாலைவனம்.
ஈரம், காரம், சாரமிகு
தாரம் தாயும் வரங்கள்.
***
( வல்லாண்மை – பேராற்றல் )
lines-a

61. தெய்விகக் காதல்

12734154_10207515430461082_7693546037895988365_n

(போட்டிக்கு எழுதி 6ம் இடம் பெற்ற கவிதை.)
***
உய்தலிற்காய் உலகு வளர்தலிற்காய்
மெய்யாக உருவான இணைதலாய்
உய்யானம் காதலென அனுபவிப்போரும்
எய்யாமையாற் பலர் அவமதிப்போரும்.
***
மெய் உணர்ந்து மேவும்
தெய்விகக் காதல் உயர்வுடைத்தாம்.
ஓய்யாரக் காதல் நிலையாகாது
நெய்யென உருகி அழிவது.
***
உயிரோடுயிராய் பூவோடு நாராயிணைந்து
பயிராகும் நேசம் உயர்ந்தது.
உறுதியானது உயரழிவு வரை.
இறுகினால் இன்பமேயதன் கரை.
***
தேடலும் காதல் கனிந்த
ஊடலும், பாடலும், ஆடலும்
இரவிவர்மன் வரைந்த ஓவியமே
பிரபஞ்சம் மயக்கும் காவியமே.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-2-2016     (உய்யானம் – நந்தவனம். எய்யாமை – அறியாமை.                         ஓய்யாரம் – பகட்டு)
lines-b

437. தன்னம்பிக்கை

 

10393744_10206330765882408_6687521605342082469_n.jpg2

தன்னம்பிக்கை

***

தன் உறுதிப்பாடு, தன் விசுவாசம்,
தன் நம்பிக்கை தோல்வி தோற்பதாம்.
தன் சிறகுகளை நம்பிப் பறக்கும்
தன்னம்பிக்கைக்குக் குருவிகள் ஓர் எடுத்துக்காட்டு.
அறிவெனும் ஆயுதம் நன்கு தீட்டு.
குறியாக ஆகும் உன் காலெட்டு.
கதிரவன் கடமையைக் கருத்தாக எண்ணு.
கதியற்றவன் என்று யாருமில்லைக் கண்ணு.
***
தன்னம்பிக்கை யானையின் தும்பிக்கைக்குச் சமம்.
இன்னொரு கையாகி எண்ணம் பல கைகளாகும்.
குதித்தோடிக் காடுகள், தடைகள் தாண்டும்
நதியும் கருமத்தின் சிரத்தை பாடும்.
சோர்வை அகற்று! இலட்சியம் பெருக்கு!
பார்வையைச் சிகரத்திற்கு உயர்த்து! சாதனையாக்கு!
நெம்புகோலின் தரம் நம்பிக்கை வாழ்விற்கு.
சம்பிரதானம் (கொடை) வாழ்வை செயித்தேகலாம் வெற்றிபுரத்திற்கு.
***
அங்கீகாரம், அணைப்பு, அன்பு, பாசம்
நங்கூரமாகி நம்பிக்கைக் கொடி உயரும்.
அகங்காரம், வெறுப்பு, அலட்சியம், கோபம்
சங்காரம் செய்யும் நம்பிக்கை ஆணிவேரை.
இலையுதிர்க்கும் மரங்களின் பெரும் காத்திருப்பு
இலை துளிர்த்தலுக்காய் அழகிய பூத்திருப்பு
கலைமிகு எடுத்துக்காட்டு ஆறறிவு மனிதனுக்கு.
விலையாம் தன்னம்பிக்கை வளருங்கள் உயர்வுக்கு.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
17-2-2016
1925266_482063001917264_1313776901_n-p

436. தமிழர்களின் பழங்கலை.

12736466_960121290708737_181381344_n1

 

 

தமிழர்களின் பழங்கலை.

***

இரண்டாயிரம் வருடங்களின் முன்னரான கலை
புரண்டது கூத்தெனும் பெயரில் மாறுதலை-
நாட்டிய நாடகம், தெருக்கூத்து கதையில்
பாட்டு ஆடல், மேடையேற்றம் களரியில்.
வண்ண ஆடை, பின்னணி இசையிசைத்து
எண்ணும் விழிப்புணர்வுக் கருத்து, பக்தி
பரப்பும் சீர்திருத்தமாக. கோமாளியாதார யுக்தி.
உரப்பும் மனம் குரலின் சக்தி.
***
வாழ்வாதாரத்திற்குக் கூத்தாடும் வறுமை நிலை
தாழ்வு நிலைக்கின்று சினிமா கணனியலை.
கட்டாரி கையில் ஏந்தி ஆக்ரோசமோ!
கரடியை வனத்தில் கொல்லும் இராசாவோ!
சுவையாகப் பார்த்து இரசிக்குமொரு கூட்டம்
சபையாகத் தரையில் அமர்ந்தும் நின்றும்
ஒரு பொழுது போக்கும் உழைப்போர்
பெரும் ரசிகராய் ஆர்வமுடன் சுகிக்கிறார்.
***
வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20.2-2016.
***
வேதா – இவரின் பாணியே அலாதியானது. சிந்தையிலும் எழுத்திலும் ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கிறார்.
அன்புடன்
மதுமிதா (vallamai)
23.02.1016
ssssssss-b

Previous Older Entries