23. அங்கிங்கெனாதபடி…..

023

அங்கிங்கெனாதபடி…..

(ஒரு தடவை யெர்மன் ” பூவரசு”..இதழ் தந்த தலைப்பிற்கு எழுதிய கவிதை – 2004ல்)

 

அங்கிங்கெனாதபடி அண்ட சராசரமும்

தங்கித் துலங்கிடும் தங்க மயிலோனே முருகா!

 

பொங்கி விரவும் துணிவும்

மங்காது விரியும் புகழும்

தங்கிடும் பொருளும் உயர்வும்

கங்கையாய் என்னொடு கலக்க

மங்களமாய் அருள்வாய் இறைவா!

எங்கள் பரம்பொருளே முருகா!         (அங்கிங்கெனாதபடி)

 

பயமும் கவலையும் என்னுள்

சுயம்பு ஆகாது விலகிட

வியனுறு நம்பிக்கை உயர்ந்திட

பயனுறு நலம் பெருகிட

நயமுறு அறிவு வளர்ந்திட

நயம் தருவாய் முருகா!                   (அங்கிங்கெனாதபடி)

 

அன்பு, பண்பு உயர்ந்திட

இன்பம், திண்மை வளர்ந்திட

வன்மை வறுமை ஒழிந்திட

திருமிகு தாய்மண் இணைந்திட

திருப்தியாய் தமிழோடு வாழ்ந்திட

திருவருள் தருவாய் முருகா!.            (அங்கிங்கெனாதபடி)

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

12-12-2004

(விரவும்- கல, பொருந்து. சுயம்பு – தானாக உண்டானது.

வியனுறு-சிறப்பு, வியப்புடை. திண்மை- வலிமை, உறுதி.)

 

 

 

peacock-feather-line[2]b

44. மையல் மார்பு.

945855_504314762973090_173215489_n

மையல் மார்பு.

 

 

வஞ்சம் அற்று அள்ளியீவது.

கஞ்சமற்றுத் திரும்பப் பெறுவது.

தஞ்சமெனும் சிந்தனைச் சரணமது

நஞ்சற்று விரியும் காதலமுது.

 

மஞ்சுக்குள் ளேகும் மார்பி னுணர்கை

பிஞ்சு இளமைப் பஞ்சணை மென்மை.

அஞ்சு முணர்வுக் கைபிடியில் மார்பை

விஞ்சும் நிழற் குடைச் சிறகெனலாம்.

 

காதற் தேரோட்ட மைதானம், பொது

கூதலுணர்வுக் கிதமான இட மிது.

ஆதரவுக் கனவுச் சாய்விட மென்பது

ஆழ்ந்த பெருமூச்சு வாரியிறக்கும்  மார்பது.

 

படம் வரையு மாசைப் பலகையிது.

மடம், மலர் பஞ்சணைக்கு நிகரிது.

உடலுமுயிரு மிணைந்து  படரு மரங்கிது.

திடமான காதலிதயத் தடுப்புச் சுவரிது.

 

இடந்தரத் தழுவு மின்ப அணுக்கமது

படர்த்தும் நேச மேடை யிது

மையல் மார்பின் ஆழ மென்பது

மைத்தடங் கண்ணாளும் அறியாதது.

 

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

25-6-2013

 

(அணுக்கம் – நெருக்கம்)

 

lord_krishna

279. கொண்டாட்டம்! கொண்டாட்டம்!…

536178_414904491928653_1727899092_n

கொண்டாட்டம்!  கொண்டாட்டம்!…

பொங்கல், புது வருடம், தீபாவளித் திருநாளில்

பொங்கிய பால் சோறு, பட்சணப் பொதிகளுடன்

எங்கள் புத்தாடையை உறவினரிற்குக் காட்டுமார்வம்

எங்கள் சிறு வயதுக் கொண்டாட்டம்.

முற்றத்து மாமரப் பெருங்கொற்றக் குடை நிழலில்

முற்றிப் புடைத்த வேர் சிம்மாசனத்தில்

சுற்றிச் சொரியும் மாம்பூத் தூறலில்

நெற்றி மயிர் கோதும் தென்றலாற் கொண்டாட்டம்.

எழுத்துருக்கள் நூலுருவின் பரிணாமம் கொண்டாட்டம்.

இழுத்து வரும் பரபரப்பு இதயத்துள் வண்டாட்டம்.

அழுத்தும் நூல்விநியோக நிலைமை திண்டாட்டம்.

கொழுத்திடலாம் வாசிப்புச் சுடர் குன்றாட்டம்.

கானல் நீர் கண்டோடும் கன்றாட்டம்

காணாத உறவுத் தொடர்பு கொண்டாட்டம்

காரியம் நிறைவேறு மங்கீகாரம் கொண்டாட்டம்

நேரிய வாழ்முறையில் நித்தம் பல கொண்டாட்டம்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

22-10-2005.

(கொற்றம் – அரசியல்)

Ranjany Narayanan’s line:-

உங்கள் கவிதை படித்தால் எங்கள் மனங்களில் கொண்டாட்டம்!

floral-divider_9_lg236

15. நடிப்பற்ற கண்ணதாசன் வரிகள்.

1012648_394241854026106_678276515_n

நடிப்பற்ற கண்ணதாசன் வரிகள்.

(கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி.)

 

சிந்தை நிறை கருத்துகள்

உந்துதலாய் உலகிற்கீந்தவர்

இந்தியப் புலத்து முன்மாதிரி

சந்தப் பா வாரிதி.

 

கிண்ணம் நிறை வரிகள்

எண்ணம் கிளறும் எளிமை

கண்ணதாசன் கருவிலுதித்த

வண்ண வரிகளின் திறன்.

 

கவி வரித் தூறல்

புவியெங்கும் சாரல்

செவியெங்கும் பாடல்

குவிவது தமிழ் கதிர்.

 

ஓவியமானவன் அறிவு மாட்சி

காவியங்களாக விரியும் நீட்சி.

சாவிலும் மறையாப் பாவாட்சி

தூவுகிறது விசுவரூப ஆட்சி.

 

கேட்கக் கேட்க வளர்கிறது.

படிக்கப் படிக்கச் சுவைக்கிறது.

வடிக்க வடிக்கத் தூண்டுகிறது

நடிப்பற்ற கண்ணதாசன் வரிகள்.

 

உறங்காதவன் உன்னத வரிகள்

கிறங்க வைக்கிறது எம்மை.

நிறங்குணமுடை  வரிகளால்

யாரும் இறங்கமாட்டார் என்றும் தமிழில்.

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

20-6-2013

(நிறங்குணம் – இயல்புடைய)

 

sunburst

 

53. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 

374212_393374230759533_601523515_n[1]-a

 

 

தீண்டத் தகாத சினத்தை

நீண்ட காலமாய் கனத்து

பாண்டலாகத் தேக்கியுறவின்

மாண்பை உடைப்பதை நீக்கலாம்!

தோண்டத் தேண்ட எம்மை

மீண்டும் தாங்கும் நிலம்!

ஈண்டு மானிடம் மனிதம்

தாண்டி அருவருப்பின் விளிம்பில்!

(ஈண்டு – இவ்விடம். பாண்டல் – பூஞ்சணம் பிடித்து நாறல்)

 

 

one line

22. தூயவன் பாதம்.

lord-shiva-33h

தூயவன் பாதம்.

 

பிறைநிலவைச் சடையில் பின்னியவன்

நிறை கங்கையை உச்சியிலணிந்தவன்.

மறைமுதல்வன் பாம்பு மாலையாளன்

கறையான நீலகண்டம் அமைந்தவன்.  (பிறை)

நிலைகுலையும் நேரமென் நெஞ்சம்

அலையா தமைதி தரும் அமலன்!

உலையாதுலகோர் உயர்ந்து வாழ்ந்திட

விலையாகப் பக்தி மட்டும் விரும்புவான்.  (பிறை)

உமையொரு பாகமாயுலகை ஆள்பவன்.

இமைப் பொழுதுமென்னைத் தினமுமாள்பவன்

சுமையென பக்தனையெண்ணாத அற்புதன்.

நமையாளப் பற்றுவோம் தூயவன் பாதம்.  (பிறை)

 

(இலண்டன் தமிழ் வானொலியில் சகோதரர் சர்மா இசையமைத்துப் பாடியது.)

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

27-5-2005

unnamed

21. அல்லாவே அல்லாஹ்!

Ka%92aba%20The%20House%20Of%20Allah%203

அல்லாவே அல்லாஹ்!

 

 

அல்லாவே அல்லாஹ்! அன்பின் இரட்சகரே!

அல்லாவிற் கிணை யாரு மில்லையே!

அன்புடை மனிதருக்காய் பூமியை விரித்தீர்!

அகண்ட வானத்தை ஒரு முகடாக்கினீர்!    (அல்லாவே)

 

அனைத்தையும் எமக்காய் அன்புடன் படைத்தீர்!

அழகு வானத்தால் மழையைத் தந்தீர்!

அதனால் பயிர்கள் கனிகள் எழுந்தன.

அரிய உணவாக அவைகளை யாக்கினீர்!   (அல்லாவே)

 

அல்லாவே உமது கொடையை மறவோம்.

அரிய நேர்வழியில் பின் தொடர்வோம்.

அற்புத உண்மைகளைப் பொய்யுடன் இணைக்கோம்.

ஆத்ம சாந்திக்காய் உம்மைத்  தொழுவோம்….(அல்லாவே)

 

 

 

 

பா  ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

24-9-2005.

 

 

divider1

 

9. வெற்றி நடை…..

P1050028

*

வெற்றி நடை…..

*

தத்தக்கா பித்தக்கா தளிர் நடை.

தத்தக்கா பித்தக்கா தளர் நடை.

முத்தக்கா வெற்றியின் முதல் நடை.

தித்தக்கா தையா மழலை நடை.

*

பஞ்சுப் பாதம் மெல்லக் கடிதாக

அஞ்சும் மனம் சிறு தயக்கமாக

குஞ்சுப் பாதம் எடுக்குதே சிற்றடி!

விஞ்சும் அழகில் மனது மயங்குதடி!

*

நீயாவலாய் எடுக்கும் அடி

தீ மிதிக்கும் நடையடி!

ஏனித்தனை தயக்கமடி!

ஏணிப்படியாய் ஏறும் உலகமடி!

*

கோகுலம் சிரிக்கக் கோகுலக்கண்ணனாயெம்

ஆகுலம் விரட்டும் ஆயர்பாடியிவன்

நீ குலம் சிறக்க வந்தாய்!

நற்குலமகனாய் நடப்பாய்!

*

(ஆகுலம் – துன்பம், மனக்கலக்கம். குலம் – குடும்பம், வீடு)

*

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

4-6-2013

*

footprints-blog-photo

 

20. அழகன் முருகன்

Image5

அழகன் முருகன்

 

 

மாதொருபாகன் மைந்தன் முருகன்

மாபெரும் கோபத்தில் வன்முறை செய்தான்.

மாம்பழம் கையில் சேராத முருகன்

மயிலேறிப்  பழனிமலைக்குப் பறந்தான்.

 

தெய்வயானையைத் தேவியாய் கொண்டும்

தெய்வக் காதல் சிருங்கார வன்முறையில்,

தொந்தியப்பனைத் துணையாய் கொண்டும்,

தெய்வச்செயலாய் வள்ளியை மணந்தான்.

 

மகாதேவன் மாதொருபாகன்

மாதிருபாகமாய் மகனவன் நிற்கிறான்.

மக்கள் வணங்கும் மயில்வாகனனவன்

சிக்கல் தீர்க்கும் சிங்காரவேலன்.

 

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ் டென்மார்க்.

4-9-2005.

 

 

peacock-feather-line[2]b

 

 

278. அவலட்சண அருத்தம் அறியாது….

5059060-thirteen-singer-silhouettes-vector-illustration

இன்றைய காலத்தில் இளவயதினர் மேடையில் பாடுவதில் தமது திறமையை அபாரமாகக் காட்டி வருகிறார்கள். ஒருவரையொருவர் விஞ்சுவதாகத் திறமையைப் பகிருகிறார்கள். அவை மிக நன்றே. திறமையில் முன்னேறும் போது அறிந்தோ அறியாமலோ சில வேண்டத் தகாத விளைவுகளும் உருவாகத் தான் செய்கிறது. அப்படி என் மனதையுறுத்தியது…..

அவலட்சண அருத்தம் அறியாது….

மேடைப் பாடகர் பாடகிகளின்

பீடைக் கலாச்சாரமின்று

ஆடையுரித்ததாய் அசிங்கமாகிறது

இலட்சணமான குரல் மட்டுமல்ல

அவலட்சணமாகக் கைகளும் பாடுகிறது   (அவலட்சண)

குரலசைவின் பிரகாரப் படியாம்

தரமற்ற கையசைவால் பிரபலமாவாரோ!

அரமிட்டுச் சீவுகிறா ரழகை

குரங்குச் சேட்டையாய் விரிகிறது

விரசக் காட்சியாய் திரிகிறது.    (மேடைப்பாடகர்)

குருவிக்குத் தீனி போடுவதும்

அருவி நீரோட்டுவதும்,

வருவாயோ மாட்டாயோவென்பதும,

ஒருவரையறையில்லா வகையதுமாய்

பெருங் கலாட்டா அலட்சியமாய்!          (மேடைப்பாடகர்)

அழகாக ஆதியில் கண்டது

அளவோடு கையசைத்த ” எஸ்பியை”

அவரைப் பின் தொடர்ந்தவர்

அதிகப் பிரசங்கித் தனமானார்

அநாகரீகமாக அளவிலும் மீறுகிறார்

அந்தகோ! இன்னு மெப்படியாகுமோ!!!!!!    (அவலட்சண)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

31-5-2013.

72