10. தொலைத்தவை எத்தனையோ!….

untitled

கார்த்திகை விளக்கீடு.

கார்த்திகை விளக்கீடு என்றதும் நாம் வளர்ந்த காலத்து வீட்டு நினைவுகள் தான் வரும். வீட்டில் அம்மா கார்த்திகை விளக்கீடு நெருங்கும் போது சொல்லுவா அடுப்பெரிக்க

slide62

தென்னம் பாளைகளை எடுக்காதீர்கள் என்று. அவைகள் மழைக்கு நனையாதவாறு கொட்டிலின் ஓரத்தில் தொங்கும் அசைவுகளில் அடுக்கப்பட்டிருக்கும்.

கொட்டில் என்பது பல வகையில் இருக்கும். எங்களது கொட்டில் வீட்டிற்கு அருகில் நான்கு பெரிய கொன்கிரீட் தூணில், இரண்டு பெரிய அறைகள் அளவில் மிக உயரமாக அமைத்து,

imagesca79ynp3download

தென்னங்கிடுகுகளால் வேயப்பட்டது. நான்கு பக்கமும் திறந்த வெளியாகவே இருக்கும். ஒரு மூலையில் ஆடு கட்டுவோம். நடுவில் மா இடிக்க, மா வறுக்க என்று பாவிப்போம். இதை கூலிக்கு ஆட்களும் வந்து செய்வர், நாங்களும் அவசர தேவைகளிற்கும் செய்வோம்.

இன்னொரு பக்கத்தில் ஒரு இரும்புக் கட்டில் இருக்கும். அப்பா பகல் சாப்பிட்டதும்

Tamil-Daily-News-Paper_5329096318

விசிறி எடுத்து விசிறியபடி அமர்ந்து வாசிப்பார். மெத்தையும் போட்டிருக்கும். அடிக்கடி கொட்டிலின் உள்ளேயே இது இடம் மாறும். அப்பா காற்று வாங்குவதற்காகத் தன் வசதிப்படி மாற்றுவார். நாங்களும் படுத்து விளையாடுவோம்.
இந்த இரும்புக் கட்டில் மடக்கி மடிக்கக் கூடியது. இங்குள்ள சம்மர் கட்டில் போன்றது.

விளக்கீடு நாளில் பகல் நேரத்தில் தென்னம் பாளைகளை இரண்டு அங்குல அளவில் கீறிக் கிழித்து அளவாக வெட்டி, ஒரு நுனியில் பழைய துணிகனைச் சுற்றிப் பந்தமாகக் கட்டி வைப்போம். எண்ணை ஊற்றிய சட்டியுள் இவை ஊறியபடி இருக்கும்.

unnamed
மாலை இருட்டாக இவைகளைப்பற்ற வைத்து வீட்டைச் சுற்றிய வளவில் எல்லா இடமும் வைப்போம். வீட்டுப் படலை முன்பு பெரிய வாழைமரக் குற்றி ஒன்று கொண்டு வந்து நிறுத்தி,

12140660_459175247619277_1197041099213372218_n           இதில் சிரட்டை மேலே தெரிகிறது. நாங்கள் அங்கு ஒரு குழி  செய்து அதனுள் சிரட்டை வைத்து என்ணெய் துணிகள் வைத்து எரிப்போம்.
அது பெரிதாக எரியும்.

வீடடில் உள்ள பாவிக்காத அத்தனை விளக்குகளும் புளி போட்டுத் துலக்கமாக மினுக்கிப் பற்ற வைக்கப்படும்.

2012-11-26 18.17.34large_293382
ஓடி ஓடி அப்பாவுடன் வளவெல்லாம் மழை ஈரத்தில் பந்தம் நடுவது மிக ஆர்வமாக இருக்கும். பாளையின் கூர்ப் பகுதி சுலபமாக மண்ணுள்ளே இறங்கும்.
images
எமது வீட்டு வேலை முடிய ஆச்சி வீடு சென்று பார்ப்போம். வீட்டுப் படலையில் நின்று, அந்து ஒழுங்கையில் மற்றவர்கள் வீட்டுப் பந்தங்களையும் பார்ப்போம்.
பின்னர் நாம் வளர ஒரு தடவை மாமா வீட்டில் பெரிய பெட்டி நிறைய கொழும்பிலிருந்து சிட்டிகள் வரவழைத்து

oil-lamp-512

வீட்டின் மேல் சுற்றிவர சிட்டி வைக்க மாமா, மாமி ஆயத்தப் படுத்தியதும் நினைவு வருகிறது.
இப்படியாக திருக்கார்த்திகை என்றால் எனது தொலைந்து போன நினைவுகள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-11-2013.

hheee211

61. கவிதை பாருங்கள்(photo,poem)

aaaa-bb

அன்பெனும் கழிநிலத்தில் நம்பி நாட்டுங்கள்
நன்கு முளைவிடும் நம்பிக்கை நாற்றுகள்.
வன்முறை வெந்நீரும், பலாத்கார வெளிப்பாடும்
நம்பிக்கை நாற்றை வெம்பிடச் செய்யும்.

last line

295. அறிவு அதிகமா! அறியாமையா!

General-Knowledge-_left

அறிவு அதிகமா! அறியாமையா!

காதலுக்கு உரமிடும் வெண்ணிலவில்
காலம் கழிக்கும் காலமிது.
கணனித் தகவல் குவிந்து அருகுகிறது.
கடவுள் கதைகள் கணக்கில் நழுவுகிறது.

பூசை புனஸ்காரங்கள் புரையேறுகிறது.
பூகோளம் விரல் நுனியில் அடங்குகிறது.
அன்பு, பாசம், கால் விலையாகி
அரை விலையாகி அத்துவானமாகிறது.

அவசர தேவைகள் அவசியமாகி
அப்பா, அம்மா அனாவசியமாகிறது.
அனர்த்தத்தை அறுதியிட முடியாத
அறிவு அதிகமா! அறியாமையிதுவா!

அறியமுடியாமை இதுவா!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-5-2002.

DecorativeLine1-2

294. நோயெனும் கருமை.

imagesCA7N1HL6

நோயெனும் கருமை.

இன்பச் சோலையாம் உலக வாழ்வது
இனிய மயக்கத்தில் மூழ்கும் போது
இருண்ட நிழலாய்ப் படர்ந்து மூடும்.
மருண்டு மனதை மலங்க வைக்கும்
மனித உடலை மருவும் நோய்
மனஅமைதியை உருவும் நோய்.

அறிவுக் கண் மலர் விரியாத
குறி யற்ற பலர் வாழ்வினிலும்
செறிந்த பரிவுப் போர்வை யற்ற
நெறி கெட்ட வாழ்வினிலும்
குறி வைக்கும் நோயொரு வேகத்தடை
முறியாத ”நான்”ஐ வளைக்கும் கொடை.

இயற்கையாணையின்றிப் பலர் பெறுவது.
செயற்கை நிழலாக சிலரில் குவிவது.
இடம் கொடுப்பதால் இணைந்து வருவது.
வடம் போட்டு மனிதனை மாற்றுவது
அடம் பிடித்துப் பலகாலம் நிற்பது.
தடம் பதித்துத் தளர்வாய் விலகுவது.

உறுப்புகளின் அருமை உணர்த்தும் நோய்
உறவுகளின் பெறுமதி உயர்த்தும் நோய்
வாழ்வின் பெருமையை உணர்த்தும் நோய்.
வருகின்ற நாட்களை நேசிக்கும் நோய்.
பாயில் சாயும் கணத்திலும் மெய்;
பாடம் பல உணர்த்தும் நோய்.

நிதானம் வாழ்வில் அவசியம் என்று
நல் விதானம் அமைக்கும் நோய்.
ஆழ்கடலின் அடியில் அமிழ்ந்து
மூழ்கிடாதே விழி! என முழங்கி
வாழ்வெனும் தேரோட்டத்தை ஆட்ட
வீழ்கின்ற தடைக் கட்டை நோய்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
21.8.2001

Swirl divider v2

60. கவிதை பாருங்கள்(photo,poem)

1381795_753965061296495_562549258_n[1]bb


ரோசா ராசாவா!

பூக்களின் ராசா ரோசாவாம்!
ஆக்கியது யார் ராசாவாய்!
ஏக்க முருவாகிறது எனக்கும்.

ஊக்கம் எழுகிறது என்னுள்.
ஆக்கமகள் அமரும் தாமரை
பூக்களின் ராசாவாய் ஏனில்லை!

(ஆக்கமகள் – திருமகள்)
16-11-2013.

last line

32. மணல் விளையாட்டு.

vethri3 027aa

மணல் விளையாட்டு.

*

தணலென மன மகிழ்வு
மணல் விளையாட்டில் விரிவு.
மணல் அள்ளித் தூவல்
மணலில் பாதம் பதித்தல்
மணலில் கால் புதைத்தல்
மணலில் அளைதல், குழைத்தலாம்
மானாவாரி அனுபவம் மழலைக்கும்
மனிதருக்கும் மகோன்னத நன்மையாம்.

*

மணலில் குழியாக்கல், வரைதல்
மணலில் பொருள் ஒழித்தல்
மணலில் கிளிஞ்சல் தேடல்
மணலில் அச்சு பதித்தல்
மணலில் உருண்டு, புரளல்
மழலைக்கு மலைப்பின்றி மகத்தான
தோலில் நோயெதிர்ப்புச் சக்திக்கு
தோழனாகித் தோள் கொடுக்கும்.

*

(மானாவாரி – மழை பெய்து விளையும் விளைச்சல்)

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-11-2013.

643630yr2vtei28b

293. உடன் பிறப்புகள்.

1185311_549579678446598_1615863275_n

உடன் பிறப்புகள்.

உன்னத உறவென்று உலகில்
உன்னுதல், உணர்வோடு உருகும்
உடன் பிறப்புகள் என்பது
உடன்படும் வாழ்வின் உண்மை.

உயிராய் ஒட்டி உறவாட
உதவியவர் உயர்வான பெற்றோர்.
இரத்தக் கலப்பு பிரத்தியேகம்.
இரத்த சம்பந்தம் தெய்வீகம்.

வயிரமான புனித பந்தம்
பயிரான அத்திவார அடிநாத
உயர் நிலை, ஊடாடும்
உயிருள்ள காலம் வரை.

அங்கை மாணிக்கம், பவளம்
தங்கை தம்பியுடன் பிறப்புகள்.
நங்கூரமாவார் வாழ்வுக் கடலில்.
மங்காத மங்கலம் பங்கயம்!

சங்கடம் வாழ்வில் அணுகிடில்
பொங்கும் சஞ்சலம் கடல்.
தங்கு தடையற்ற இறையருள்
சங்கமமாகட்டும் பெரு நிதியமாய்.
(அங்கை – உள்ளங்கை. உன்னுதல் – நினைத்தல். பங்கயம் – தாமரை.
பிரத்தியேகம் – சிறப்பு.)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-11-2013.

2686814t0wzzlw0rl

12. துணிந்தவர்!……

vethri3 270

துணிந்தவர்!……

பிள்ளை வாசிப்பில் மிக ஆர்வமாக உள்ளார் என்று அவருக்கு படிக்க ஒரு மேசை கதிரை வாங்கினார்கள் பெற்றோர்.
அழகாக அமர்ந்திருந்து வாசிப்பார் அதாவது புத்தகம் புரட்டுவார், படங்கள் பார்ப்பார்.

ஒரு நாள் மங்கும் மாலைப் பொழுதில் தாயார் அருகிலுள்ள சமையல் அறையில் நின்ற போது. இவர் இருக்கையறையிலிருந்து அம்மா…அம்மாவென்று ஆர்வமாக அழைத்த சத்தம் கேட்டு தாயார் ஓடி வந்து பார்த்த போது, தனது படிக்கும் மேசையில் இவர் ஏறி நின்று கூத்தாடுகிறார்.
தாயார் அதிர்ச்சியடைந்து விட்டார். இனி அவரைத் தனியே சிறிது நேரம் கூட விடக் கூடாது (அதாவது கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்)
என்பது தெரிந்தது.
கதிரையில் ஏறி மேசை மேல் எறிவிட்டார்.

காலையில் பெற்றோருக்கு முன்னதாக ஆறு மணியளவில் எழுகிறார். அவராக சிறிது நேரம் விளையாட பெற்றோர் எழுந்து வருவார்கள். இப்போது இந்த மேசையைக் கீழே படுக்கப் போட்டு விட்டே இரவு படுக்கப் போகிறார்கள்.
காலையில் தனியே விளையாடும் போது மேசையில் ஏறி விழுந்தால் என்ன செய்வது!……ம்…ம்…..

பேரன் வெற்றியோடு நாம்.

கன்னப் பசுந்தில் உன்
கன்னற் சிரிப்பில்
கவிழ்க்கிறாய் எம்மை.
பற்கள் தெரியாப் புன்னகைப்
பகடை உருட்டித் தாயமாய்
பரிபூரண இன்பம் சிதறுகிறாய்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-11-2013.

line3

21. இரண்டு எண்ணுவோம்.

number2mathcount

இரண்டு எண்ணுவோம்.

இரண்டு ஒன்றுகள்
இரண்டாகிறது சேர்ந்து.
முரண்டு பண்ணாது
இரண்டு எண்ணுவோம்.
உருண்டு பார்க்கிறது
இரண்டு கண்கள் (இனிதாயின்று இரண்டு எண்ணுவோம்.)

புரண்டு மூடும்
இரண்டு இமைகள்.
திரண்ட உடம்பில்
இரண்டு புருவங்கள்.
இரண்டு கன்னங்கள்.
இரண்டு காதுகள். (இனிதாயின்று இரண்டு எண்ணுவோம்.)

மிரண்டால் அணைக்க
இரண்டு கைகள்.
இரண்டெட்டு நடைக்கு
இரண்டு கால்கள்.
இரண்டு பேரிணைவு பெற்றோர்.
இரண்டிரண்டாய் எண்ணுவோம். (இரண்டு ஒன்றுகள் இரண்டாகிறது சேர்ந்து.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-11-2013.

3367133-263573-vintage-digits-and-numbers-set-with-decorations

11. தமிழில் குறும்பூ!…!……

mine 187

தமிழில் குறும்பூ!…!……

தமிழில் ஆண்பால் பெண்பால் என்று
அப்பப்பா – அப்பம்மா.
தாத்தா –பாட்டி
என வழங்குகிறது அனைவரும் அறிவர்.

குளப்பம் வராது தவிர்க்கச் செய்த ஏற்பாடாக
எங்கள் பேரனுக்கு அப்பப்பா, அப்பம்மா என்று எங்களை அழைக்கப் பழக்கினோம்.
தாயாரின் பெற்றோரைத் தாத்தா பாட்டி என்று அழைப்பார்.
நன்றாக என் கணவரை அப்பப்பா என்று அன்பொழுக அழைப்பார். அப்பம்மா என்பது சிறிது குறைவு தான், ஆனால் கணவரிலும் பார்க்க நன்கு என்னோடு பழகுவார். காரணம் அவரோடு நான் பழகுவது அதிக நேரம் தான்.
இப்படியிருக்க திடீரென ஒரு நாள் என்னை தாத்தி என்று அழைத்தார். எங்களிற்கு ஆச்சரியமான ஆச்சரியம்!
யாரும் சொல்லியும் கொடுக்கவில்லை. என்னைப் பார்த்து என்னைக் கூப்பிடுகிறார் தாத்தி என்று.
எங்கள் அனைவருக்கும் சிரிப்பான சிரிப்பு.
சமாளித்துக் கொண்டு சரி இப்போது கூப்பிடுங்கள் வளர மாறலாம் என்று விட்டு விட்டோம்.
நான் கூறுவது என்னவென்றால் அப்பம்மா கவிதை எழுதுகிறார் பேரனும் நன்கு இயற்றப் பழகுகிறார் என்று.
ஆகையால் அவர் கவிதை எழுதுகிறார் என்பேன்.
பின்னே என்ன!…தானாகவே ஒரு சொல் புதிதாகப் பெண் பாலில் தாத்தி…..என்று!

இது எப்பூடியிருக்கூ…..!!!!!!!!!………

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-11-2013.

straight line

one_partridge[1]-niram

(பேரனுடன் நான் பாடும் பாடல்.
வடிவாகக் கவனிப்பார்.
சிலவேளை உனக்கு வேற வேலையில்லைப் பாடு என்பது போல விளையாடுவார்.
நான் அவர் காதில் அதை விழுத்த வேண்டுமென்று பாடி முடிப்பேன்.
அவர் காதில் விழுத்துவார்)

ஒன்று எண்ணுவோம்

ஒன்று ஒன்று
ஒன்று என்று
இன்று எண்ணுவோம்
நன்று எண்ணுவோம்.

தலை ஒன்று
நெற்றி ஒன்று
மூக்கு ஒன்று
நாடி ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்)

வாய் ஒன்று
கழுத்து ஒன்று.
வயிறு ஒன்று
முதுகு ஒன்று (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.)

அப்பா ஒன்று.
அம்மா ஒன்று.
வெற்றி ஒன்று.
பற்றுவோம் தொடர்ந்து. (ஒன்று என்று இன்று எண்ணுவோம்.).

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-10-13.

baby-items

Previous Older Entries