308. தொடர் கதை……

butterfly girl

தொடர் கதை……

துன்பநிலை வாழ்வில் தானாக வருவதில்லை,
அந்த நிலை வாழ்வில் நாமாகத் தொடும் எல்லை.
சொந்த மனதில் சோதனை விரக்தி நிறைந்தால்
சிறுமனம் திரிந்து எரிந்து புகையும்.
பொறுமைக் குணம் பற்றி முற்றாக அணைந்தால்
நாம் தூங்க நல்ஞானம் தூங்குவதால்,
ஆம் என்று சோகம் தானாய்ப் புகுதலே.
ஆன்ம தவம், தர்மநெறி நீறு பூப்பதால்
ஆன்மாவின் ஆழ் அமைதி அவிந்து போதலே.
ஆழ்ந்து பார்த்தால் அதுவுமொரு தொடர் கதையே.

புh ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-2-2004.

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

Advertisements

307. ஆழமறியாமலே….

canada_01

ஆழமறியாமலே….

மாய வார்த்தைகள் மாறும் சிரிப்பின்
சாயம் விளங்காது சமரச மனமென்று
சான்றோர் அவரென்று சாதிக்க வேண்டினால்
சந்தனம் பூசுவதாய்ச் சகதியும் பூசுப்படும்.

பச்சைக் கிளி காணும் பூனையின்
இச்சையின் ஆழம் மச்சவெறி நோக்கு.
மெச்சும் மனிதமன ஆழமுமிப்படியே
உச்ச நிலையற்ற மனிதமன நோக்கே.

பின்னணி மறைத்து பிட்டுக்கு மண்சுமந்து
பிரம்படி பெற்றார் பரமன் உலகறியும்.
முன் வினைகளறியாது மூக்குடைபடுவதும்
முழு ஆழமறியாத கால்நனைப்புத் தான்.

ஆழமறியாமலே ஆற்றி லிறங்கி மூழ்குவதும்
ஆழமறிந்து நீந்தி வெளி வருதலும்
ஆழ்மனசு அனுமதித்த சுய தீர்மானமே.
ஆழமறியாமலே ஒதுங்குதலும் அவரவர் தீர்மானமே.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-1-2006.

16161859-ab

306. விண்ணும் வயப்படும்

1524960_808322755860725_543878358_n

விண்ணும் வயப்படும்

மொழியின் தேடலின் விரிவு அருத்தமாகும்
வழியும் இன்பம்அமைதி வசமாகும்.
எதுகை மோனை சந்தம் சீரிலும்
மதுகைப் பாவின் வரிகள் வசப்படும்.

இசைந்த தாளம் இனிய குரலிலும்
அசையும் இசை அரிதாய் வசப்படும்.
துள்ளி ஓடும் அருவி தடைகளையும்
தள்ளியுருட்டித் தன் பாதையை வசப்படுத்தும்.

கருணை வசப்படும் தர்ம மனதில.;
கல்வி வசப்படும் கூரிய மதியில்.
காதல் வசப்படும் அன்பு நெஞ்சில்.
வாழ்வு வசப்படும் எத்தனையோ வழியில்.

வீரிய முயற்சி கூரிய நோக்கில்
சீரிய கருத்து நேரிய நடையில்.
காரிருள் கலைய வானம் வசப்படும்.
பாரில் ஓரிடம் தானே நிசப்படும்.

அன்பு, மரியாதை, அணைப்பு, உள்வாங்கல்
இன்ப உலகை இதமாய் வசப்படுத்தும்.
மகத்துவ மனிதம் ஆறு அறிவானால்
மகத்துவங்கள் பலரிடம் வசப்படவில்லையே!

நின்று இளைப்பாற ஒரு மனிதன்!
சென்று கரை சேர இன்னொருவன்
ஊன்று கோலாக மற்றொருவனாகில்
என்றும் எளிதில் வானம் வசப்படாது.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-2-2006.

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-3

305. பக்குவ மனது.

644273_543540262367989_1305973671_n

பக்குவ மனது.

அனுபவத்தோடு அறிவு பிறக்கும்.
அகங்காரமழிந்து அன்பு தவழும்.
அறங்கள் கூடுமென்றால் மனிதம்
சிறந்ததைத் தினமும் கைப்பற்றலாம்.
உறவாடும் வழியில் குறளியாடும்
உறுத்தல்கள் முற்றாக அழிக்கலாம்.

சங்கீத மனதின் அபசுரம்
சங்கடமாக்கும் சுப சுரத்தை.
சந்தேகசுரம் கீதம் சிதைக்கும்,
சுகதேக சுகம் பகைக்கும்.
நம்பிக்கை கீதம் ஆரோகணிக்கட்டும்!
அவநம்பிக்கை நாதம் அவரோகணிக்கட்டும்!

பிரேமையானவன் பிரேமை தேடுவான்.
பிரச்சனையானவன் பிரச்சனை தேடுவான்.
பிரயோசனப் பொழுது நற்பிரசாதமாகும்.
பிரதிக்னையோடு பக்குவம் பெறலாம்.
பிரயோசன வாழ்வின் பிரார்த்தனைகள்
பிரவாகமாகி நற்பலன் பெறட்டும்.

விலங்கிலிருந்து விடை கொடுக்க
கலங்குபவனுக்குக் கைகொடுக்க
பலவீனனுக்குப் பலம் கொடுக்க
பக்குவ மனது அடியெடுக்கும்.
பக்குவமனப் பதறாத நிதானம்
சிக்கலின் போதும் சிதறாத விதானம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-3-2003.

2686814t0wzzlw0rl

304. தனித்தன்மை பலம்.

kalai

தனித்தன்மை பலம்.

எனக்கொரு நிறம் குணம் மணம்
எனது மனம் மகிழ் நந்தவனம்!
எனக்கது நிறைவு அரிய இன்பம்.
உனது நிறம் மணம் குணம்
உனது மனம் நிறை பூங்காவனம்.
எனக்கு மனம் கவர் நீலம் பிடிக்கும்
உனக்கு உவப்பான செம்மை நிறம்
எனது மனதுக்கும் செம்மை பிடிக்கும்.

எனது நீலத்தில் சிவப்பைக் கலந்தால்
புது நிறமாகக் கத்தரி பிறக்கும்.
உனது சிவந்த தனித்தன்மை மறையும்.
எனது நீலத் தனித்தன்மை குறையும்.
நமது தனித்தன்மை நமது பலம்.
நமது பலத்தைப் பலவீனமாக்குவதா!
மனிதத் தன்மை பிரகாசப் பக்கம்.
மறைந்த நிலைமை மங்கிய பக்கம்.

தானாய்ப் பழுக்கும் பழச்சுவை இனிப்பு.
தட்டிப் பறித்தலில் இல்லை சிறப்பு.
சுதந்திரச் சிந்தனைச் செயற்பாடு இனிப்பு
சுதந்திரத்தில் பிறரது தலையீடு வெறுப்பு.
நான் நானாக இருத்தல் இசைவு.
நீ நீயாக இருத்தல் புனைவு.
நானோ நீயோ பிரம்மா தானோ!
அவரவர் படைப்பும் தனித்தன்மை சொல்லும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-2-2004.

stock-photo-flower-line-for-border-and-frame-different-version-in-my-portfolio-11545657

35. பிறந்தநாள் வாழ்த்து.

383414_321118664626114_100001839485166_774790_2054111666_n-z

ரி.ஆர்.ரி பிறந்தநாள் வாழ்த்து.

முதுபெரும் ரி.ஆர்.ரி ஒலிபரப்பு
புது 17ம்வருடக் கால் வைப்பு.
பொதுவாக உன்னை வாழ்த்தும் பூரிப்பு
இது எனக்கொரு நல்ல வாய்ப்பு!

சகோதரன் இராஜேந்திரம் டென்மார்க் நேரம்
சுயேந்திரன் வணக்கம் தமிழ் அலை நேரம்
ஐரோப்பியவலம் டென்மார்க் தகவல் நேரம்
பொதுக் கருத்தான நேயர் கடித நேரம்

இதுவாக என்னேறு படிகளாகிக் கவிதையுள்
மெதுவாக என்னை இழுத்துத் தமிழுள்
மதுவாகிப் போதையூட்டிய தமி;ழொலி பரப்பு
பொது சேவையிலும் முன்னேறியது பொறுப்பு.

மருவிய தமிழ்க் களமிது நற்சேவை
அரும் தளமிது என்னுயர்வுனக்கு உரிமை!
பெருமை சேர்த்த சாளரம் வியூகன்
உரிமையாய் இன்னும் எண்ணற்ற பலர்

தர்சன், மோகன், பிலிப்தேவா, ராஜா
தோழர் ரதியெனப் பலர் தூண்களாய்த்
தாங்கிய அறிவிப்பாளர், சேவையாளர் நேயர்களிற்கு
பொங்கும் மங்கல வாழ்த்துகள் ரி.ஆர்.ரி வாழ்க! வளர்க!

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-1-2014

chainborder

303. தைப் பொங்கல்.

imagesCAHTU674-,,

தைப் பொங்கல்.

பொங்கற் பானையில் வண்ணம் வரைந்து
தொங்கிட மாவிலை சுற்றிக் கட்டி
எங்கும் சுற்றி முற்றம் பெருக்க
எந்தன் வளையல் ”கிளுங்” ஙெனக் குலுங்கும்.

முற்றத்தில் மஞ்சள் நீர் தெளித்தும்
முழுமதியாய்க் கோமயம் அழகுடன் மெழுகுவோம்.
மாக்கோலம் இட்டதும், மூன்று கற்களடுப்பாகும்.
மகிழ்வோடு அப்பா பொங்கற் பானையேற்றுவார்.

பால் பொங்கி வழியும், அப்பா
பானையி லிடுவார் பச்சரிசி பயறு.
பக்குவமாக, சர்க்கரை, கசுக்கொட்டை, முந்திரிகை
பாசமாய்க் கலந்திட அம்மா தருவார்.

கதிரோனுக்குப் படையலினைப் பெற்றோ ரிடுவர்
கருத்தாய் சகேதரர்கள் தேவாரம் பாடுவோம்.
கன்னற் பொங்கல் சுவைத்து, உறவினரிடம்
களிப்பாய்க் கூட்டமாய் உலாச் செல்வோம்.

ஈழத்தில் வந்த எம்மூர்ப் பொங்கலிது.
ஈங்கண் இங்கிது இணையப் பொங்கலோ!
ஈழத்தில் நடக்கட்டும் நியாயங்கள் என்றும்
ஈசனும் பொங்குவான் எம்மோடு சேர்ந்து.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
12-1-2014.

(ஈங்கண் – இவ்விடம்)

1506999_653097511421002_435142777_n

Previous Older Entries