299. ஒளியுறு 2014

2014-new-year

ஒளியுறு 2014

இனிதென்று ஒளியுறு
இரண்டாயிரத்துப் பதினான்கு
இணைந்தாட வருகிறது.
இகலோகம் சிறக்கட்டும்.

இசைவாணர் இசையெழுப்ப
இசைவோடு மதுக்குவளைகள்
இணைந்து நெருங்க
இணையட்டும் புத்தாண்டு.

பனியில்லாப் புத்தாண்டு
கனிவோடு வருகிறது.
குனிவில்லா வாழ்வு
இனிதாய் மலரட்டும்

தமிழ் அந்தகாரத்தில்
அமிழாது சுந்தரமாகித்
தமிழரின் சொத்தாக்கும்
அழகான புத்தாண்டாகட்டும்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-12-2013.

images 2356

298. நன்னூறு இலக்கியம் பிறக்கட்டும்.

319057_477008075676539_1370189906_n-d

நன்னூறு இலக்கியம் பிறக்கட்டும்.

பாற்கட லமுதம் கலந்து
பாவினில் சுவை குழைத்து
பாகம் பாகமாய் இணைத்து
பாவாணர் முன்னமர்ந்து
பாங்கி நீயும் சுவைத்து
பாடலாய்ப் பாட வைத்து
பாருக்குச் சொல்லென இணைத்து
வாவென அழைத்தேனிங்கு.

பன்னூறு பாக்கள் முனைந்து
பண்ணுகிறார் காதல் கலந்து.
இன்னூறும் பல்சுவை நிறைந்து
நன்னூறு இலக்கியம் பிறந்து
கண்ணேறுபடாது வரைந்து
பெண்ணாகத் தனியே உயர்ந்து
விண்ணேறும் புகழ் படர்ந்து
நண்ணுதல் நலம் பெருக்கும்.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-12-2013

imagesCAGJ44D2

உயிரெழுத்துப் பா வாணம் – 1

12

உயிரெழுத்துப் பா வாணம் – 1

அன்பு அணைப்பு ஆன்ம பலம்.
ஆங்கார ஆகுலம் ஆலகாலவிடம்.
இணங்கிடாது இடைஞ்சல் மனம்.
ஈரணத்தில் ஈவிரக்கம் ஏது!
உறுதிப்பாடு உறுமுதல் அல்ல.
ஊட்டமற்ற மனம் அலையும்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-12-20013

images 2356

297. இனிய நத்தார் வாழ்த்து.

tree- xmas-123

(ஓளி வெள்ளம் அணியாய் அலங்கரிக்க
களி கொள்ளும் மனமதைக் காண
வளியெங்கும் நத்தார் பலகார சுகந்தம்
எளியவர் யேசுபாலன் அவதரித்த நன்நாள்.

உறவுள்ளோர் கலந்து றவாடிக் களிக்க
உறவற்றோர் வேதனையில் துவண்டு வருந்த
உள்ளவனும் ஏழையுமி ணைந்து மகிழ்ந்து
உறவாடும் நத்தார் இனிய வாழ்த்துகள்!)

இனிய நத்தார் வாழ்த்து.

நத்தார் பெருநாள் ஆனந்தம் குவிய
சித்தத்தில் அத்தர் வாசனை கவிய
எத்தர்களும் மொத்தமாய் மகிழ்ந்து குவிய
காத்திருந்த காலம் வேகமாய் வந்தது.

கடை வீதி கலகலக்கும் கொள்வனவு
மடை திரளும் பரிசுப் பொதிகளும்
படை திரளும் இனிப்புப் பண்டங்களும்
இடைவெளி யில்லா மக்கள் நெருக்கம்.

வெள்ளை டெனிஸ் நத்தார் நம்பிக்கை
கொள்ளை போனது பெரும் அவநம்பிக்கை
பிள்ளை மகிழ்வு திருநாள் மகிழ்வு.
கிள்ளையாய்ப் பொழியுமின்ப நத்தார் வாழ்த்து.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-12-2013

007_gltrcmasgarlbowsrt8988999911

46. மீன்காரி.

meenkati-22

மீன்காரி.

அள்ளிச் சொருகிய கொண்டைக்காரி
வெள்ளித் தண்டைக் கொலுசுக்காரி.
வள்ளி நீ வருகையிலென்
உள்ள முருகுதடி மீன்காரி.

சாடும் கிண்டல் பேச்சிலே
ஊடும் உதட்டுச் சுளி(ழி)ப்பிலே
ஆடும் காதணி அழகிலே
கூடுதடி உன்னழகு உண்மையிலே.

ஒல்லி உடம்புக்காரி நடையில்
மெல்லிய அசைவு இடையில்
அல்லும் பகலும் ஓயாது
மல்லுக்கட்டுதடி என் மனசு.

மீன் நாற்றம் உன்னைச்
சீ என்று சொல்லும்.
தூர விலகென வில்லை
பாராட்டும் உன் அழகு.

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
21-12-2013.

animated-gifs-aquariums-04

22. விரல்கள் பத்து.

73th b'day 076

விரல்கள் பத்து.

கைகள் இரண்டு – அதில்
விரல்கள் பத்து – இதில்
பெரு விரல் அழுத்தும்!
சுட்டு விரல் சுட்டும்!…(கைகள்)

நடுவிரல் மிகப் பெரிதாம்.
மோதிர விரலில் மோதிரமாம்.
சின்ன விரல் கடைக்குட்டியாம்.
விரல்களையறிந்தார் வெற்றியாம். (கைகளை)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
16-12-2013.

baby-items

54. மழைக் கவிதை

rain-28

*

மழைக் கவிதை

*

நீர் கொண்ட மேகம் பெரும்
போர் செய்யச் செய்ய
வாளும் வேலும் உரசலின் கடுமையோ
மூளும் மின்னல் தெறிப்பு!

*

மானம் ரோசம் பீறித் தானோ
வானம் பெரிதாய் அழுவது!
உன்னாலும் நிறுத்த முடியாததென்றும்
என்னாலும் முடியாதது மழை.

*

பிரபஞ்சம் நனைத்து மணகரைத்து
அரசாங்கம் நடத்தும் மழை.
மனம் நனைத்து வயல் நனைத்துத்
தனம் தரும் மழை.

*

தடல் மேலொரு கவிதையொரு
திடல் மேலொரு கவிதை.
இலை மேலொரு கவிதை நற்
கலை இம்மழைக்கவிதை.

*

பா ஆக்கம்
வேதா. இலங்காதிலகம்
14-12-2013.

*

கோடை மழை.

*

கோடை மழை பாலைவனச் சோலை.
குளிர்கழி (ஐஸ்) சுவைக்கும் உணர்வு நிலை.
பிரிந்த காதலர் சேரும் நிலை
பட்டினியாளனுக்கு எச்சிலிலையும் கோடை மழை.

*

தாயைப் பிரிந்த மழலைக்கு வரவாம்
தாயின் அணைப்பு கோடை மழையாம்.
விளைந்த வயலிற்குச் சொரியும் குளிர்மைக்
கோடை மழை கொடுமையிலும் கொடுமை.

*

வெப்பத்தில் பொழியும் மழை நோய்களை
செப்பமாய் காவி வரும் தொல்லை.
குளங்களின் நீர் மட்டம் உயரும்.
வளங்கள் பெருக நல் வாய்ப்பாகும்

*

வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
15-5-2016.

*

In FB:

Samme  karu…rain  –     another poem mine –        https://kovaikkavi.wordpress.com/2011/11/05/16-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/

another   samme  :-     https://kovaikkavi.wordpress.com/2010/07/25/24-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/   

16161859-

16 கூவிடுவாய் குயிலே!

sb[1]

*

கூவிடுவாய் குயிலே!            ( பாரதி பற்றிய  – 2வது)

*

மார்கழி பதினொன்று சுப்பிரமணியபாரதியின்
பிறந்த நாளிது நீ அறிவாயா
குயிலே! நீ அறிவாயா!

பனுவல்ககளின் மனு அவன்- உலக
பாவலர்களின் கனவு அவன்- குயிலே
பாவலர்களின் கனவு அவன்.

அவன் பாட்டுத் திறன் தமிழுலகை
பாலித்திடுவது பார்த்தாயா குயிலே!
பாலித்திடுவது பார்த்தாயா!

காயிலே இனிப்பு கனியிலே இனிப்பல்ல
காலமுழுதுமவன் பாடலினிப்பு –குயிலே
காலமுழுதுமவன் பாடலினிப்பு.

கருநீலத்து வயிரத்துளி பாரதிகவியெமை
கட்டும் மொழிச்சுடர் -குயிலே
கட்டும் மொழிச்சுடர் தான்.

பெண்விடுதலை எழுச்சிக் குரலெடுத்து
பெண்மையை வாழ்த்திய கவியவன் – குயிலே
பெண்மையை வாழ்த்திய கவியவன்.

இன்று புதிதாயெத்தனை பாரதிகள்
நன்று பல கவிகள் புனைகிறார் -குயிலே
நல்ல பல கவிகள் புனைகிறார்.

இன்று மகாகவியை நினைத்து கௌரவிப்போம்
குயிலே நீயும் எம்மோடு
தீங்குரலில் கூவிடுவாய்.

கவியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-12.2003.

வேறு

சுட்டும் விழிச்சுடரே…..

சுட்டும் விழிச்சுடரால் தீர்க்கமாய் உன்
கட்டும் தமிழ்க் கதிரின் ஆளுமையை
எட்டுத் திக்கும் கொட்டிய எட்டயபுரத்தானே!
கட்டுப்படாது பலர் இங்கு கட்டறுந்துள்ளனர்.

கெட்டு அழிந்ததால் இனியெம் வருங்காலப்
பட்டுத் தமிழ்ப் பாலகரையாவது உன்
பாட்டுத் திறத்தாலே பாலித்திட வேண்டுமென்று
வீட்டுக்கொரு தமிழனும் திட்டமிட வேண்டும்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-12.2017.

*

வா ரதி இன்று 

பாரதி நாள்!

பாராளும் கவி

ஏராளம் தந்தான்!

வேராழம் ஊன்றினான்.

தாராளமாய் வாழ்த்துவோம்

December 11, 2014

*

 

12965393-se

63. கவிதை பாருங்கள்(photo,poem)

bbb

மொழிக் கர்வம்

துண்டிகைக் கொடி மொழி!
தெண்டிரை மொழி அகழ்ந்தும்
மண்டிலத்துப் பண்டிதனென்றும்
பண்டிதம் பாவலாம், முன்னர்
இண்டிடுக்கில் மொழி விதைக்காது
கண்டிதம், கிண்டுதல் சண்டித்தனம்.

மொழிக் கர்வ மயக்கம்
அழிதகை, அழிமதி முயக்கம்.
எழில் வளர்ச்சித் தடிப்பம்.
செழிப்பு தடை இயக்கம்
இழித்துரைக்கும் துணிபு தரும்.

(துண்டிகை –கொப்பூழ். தெண்டிரை – கடல்.
மண்டிலத்து –வட்டம், தொகுதி. கண்டிதம் – கண்டிப்பு.
அழிதகை – தகுதிக் கேடு. அழிமதி – கெடுமதி.
கழிபடர் -மிகு துன்பம்)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
9-12-2013

divider4

296. நினைவூர்…..

uur

நினைவூர்…..

நினைவூரில் நின்று மனவூரில் வரையும்
நித்திலவூர்ச் சித்திரங்கள் முயற்சியில் நிலைக்கும்.
கனவூர்க் கற்பனைகள் வினையூரில் ஊன்றும்
நிரந்தரவூர் மிதித்து உயர் சித்திரங்களாகும்.

உறவூர் காணத் தினமேங்கு´முள்ளம்
உறங்காவூர்ப் பறவையாகாது அக்கறையூர் செல்லும்.
கவலையூர் விலகிக் கருத்துடை சிகரவூர்
தொடுமூர் இயலாமை அசதியற்ற ஊக்கவூர்.

நட்பூரில் இணைந்தும் நெருங்காது விலகி
நடிப்பூர் நகர்தல் நன்மையற்ற நடத்தை.
கெட்டவூரையும் கெட்டித்தனமாய்த் தட்டித் தாலாட்டும்
தொட்டிலூர்த் தொண்டு சிறப்புத் திருத்தம்.

பசுமையூராம் பாசவூர் சில மனம்.
பஞ்சவூர் பாசமுதிர்க்க சில மனம்.
பட்டூரேகும் நட்பு பாழாகி யொரு
கெட்டூரேகும் தலைவிதி பாவம், சோகம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-12-2013.

Keefers_Dividers441

Previous Older Entries