40. Nykøbing .F – நிக்கூபிங் பஃல்ஸ்ரர்.

Nykøbing .F – நிக்கூபிங் பஃல்ஸ்ரர்.

3 பெரிய தீவுக்கூட்டம் டென்மார்க்.
அதனுள்ளும் பல குட்டித் தீவுகள்.
இதைக்கொஞ்சம் காட்ட இந்த இரு படங்களும்.
Nykøbing .F – நிக்கூபிங் பஃல்ஸ்ரர்.
dk-kort-alle-klubber
smaalandsfarvandet-rundt-km-336-gif-2
28-1-2017  காலை எட்டேகால் மணிக்கு நானும் கணவரும் புறப்பட்டோம் .
இரவு 9 மணக்கு வீடு வந்தோம் – காரில் பயணம்.
நிக்கூபிங் பஃல்ஸ்ரருக்குப் போனோம்.
காலநிலை 4 பாகை வெப்பம் என்று இருந்தது.  காலைச்சூரியன் அழகாகப் பார்க்கலாம் கண்கூசாமல். காலை 8.30 மணி.
nykob-2
369 கிலோ மீற்றர் பயணம் செய்ய வேண்டும். காலையுணவு முடித்து வெளிக்கிட்டோம். உறைநிலைப் பனியும் வாகன நெரிசலும்வாகனம் ஓட சிறிது சிரமமாக இருந்தது. காலையில் போகும் போது இப்படி இருந்தது.
nykob-1
nykob-18
nykob-19

nykob-21

.பியூன் தீவக்கு ஊடாகப் போவதானால்
பெஃறி எடுக்க வேண்டும். இது நேரப்படி செய்ய வேண்டும்.
அதனால் எமது வசதிப்படி பயணிக்கலாம் என்று
லீல பெல்ட (யூலண்ட் பிஃயூன் இடைப்பட்ட பாலம்)
2 புகையிரதப் பாதையும் 3 மகிழுந்துப் பாதையும் உண்டு.
1700 மீற்றர் நீளம்.

Little Belt Bridge, also known as the Little Belt, is a six-lane highway bridge between Jutland and Funen, built in the period from 1965 to 1970 and inaugurated on October 21 the same year. The architect was Orla Mølgaard-Nielsen.

The bridge is 1,700 meters long, 33.3 meters wide and has a free span of about 600 meters. Navigational clearance is 44 meters. Navigational clearance for the Little Belt is conditional on the old Little Belt that has a vertical clearance of 33 meters. Under the bridge is held annually Rock under the bridge, the largest one-day festival.)

nyko-9
nykob-10
Google photo
lille-baelt
பின்னர் 18 கிலோ மீட்டா நீள ஸ்ரோவ பெல்ட்
பிஃயூன் தீவு ஷேலாண்ட்தீவுக்குப் போய் அதிலிருந்து
நிக்கூபிங்க்கு கார் ஓடினோம்.
Great Belt Fixed Link is a combined bridge and tunnel link intended for railway and motor traffic crossing the Great Belt and connecting Funen and Zealand. The railroad opened on 1 June 1997 and the road link opened on 14 June 1998. Wikipedia
Address: Great Belt Bridge, 4220 Korsor
Height: 254 m
Opened: June 14, 1998
This is   google photo
big-baelt
nykob-24
nykob-26
nykob-27
nykob-31
போகும் போது சூரியன் என் கண் முன்னாலே அடித்தது.
nykob-3
வாகனம் மாறி ஓடத் தொடங்க காரினது சூரிய மறைப்பு ( ஷேட்)
எனக்கு உதவவில்லை.கண் கூசியது. நான் இருக்கையின் முன் பக்கம் நகர்ந்து
தலையை அண்ணாந்து பார்த்து சூரியக் கூச்சத்தைத் தவிர்த்து ஓட்டினேன்.
இவருக்கு அதைப் பார்க்க ஏதோ போல இருந்திருக்கு.’ இது என்ன!’ என்றார்
‘ கண் கூசுதே’ என்றேன். ‘காரை நிறுத்து நான் ஓடுகிறேன்’ என்று பிடுங்கிவிட்டார்.
nykob-34
nykob-32
எனது பெரியம்மா மகள் குடும்பமாக அங்கு வசிக்கிறார் .
அவரது மூத்த மகன் இலங்கை சென்று திருமணம் செய்தார்.
அவரது மனைவி வந்திட்டார்.   புதுப்  பொண்ணு மாப்பிள்ளையை
சந்திக்கச் சென்றிருந்தோம்.
nyko-7
nykob-35
nykob-37
                                                                                        nykob-36
divider_130

474. “கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு”

 

2-8-janu-17

“கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு”

வில்லில் இருந்து விடுபட்ட கணையாம்
கல்லும் (வன்)சொல்லும் ஒரே வினையம்.
சொல்லிற்கு உறுதி சிறந்த பல்லு.
பல்லு போனால் போகும் சொல்லு.
அன்பான சொல் சடுதியாய் முகிழ்த்தும்
இன்பிக்கும் இசையோடு பிணைதல் போலும்
அன்ன பல சூட்சும தாக்கங்;களாக்கும்.
வன்சொல் புதைக்க முடியாத கல்.
***

பொன்னகரம் அழைத்தேகும் அமைதிச் சொல்
அன்புப் பெருவெளி நகர்த்தும் சொல்
புன்னகைப் பூந்தளிர் தெளிக்கும் பூவனம்.
ஆன்மிகக் கடை திறக்கும் ஆலிங்கனம்.
” தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு ” திருக்குறளே
பாவினார் திருவள்ளுவர். உதட்டால் உதிர்ப்பார்
பாவியர் முள்ளான சொல் உள்ளாறாதது.

***

ஐம்புலன்களை வென்ற குற்றமற்றவர் ஐசுவரியமாய்
ஐயமின்றி இன்னமுதச் சொல்லை உமிழ்வார்.
ஆணவம் பொறுமையற்றவர் சினமோங்க ஏந்துவார்
ஆயுதமாகப் பிறரைக் காயமாக்கும் கல்
கல்லு விட்டால் நொறுங்கும் கண்ணாடி
சில்லு சில்லாக ஆகிடும் யன்னல்
மினா பள்ளத்தாக்கிலும் விடுகிறார் கல்லு.
கல் கவணெறிந்தால் குருவியும் நில்லாது.
***

நிதானம் இழந்து தன்னைக் காக்க
சூதானமற்ற சொற்கள் மனிதன் ஆயுதமாகும்.
ஆதனமாய் கருதும் உயிர் மொழிச்
சொல் கல்லாக, கூர் அம்பாக.
நெஞ்சச் சுவரில் அறையப்படும் வன்சொல்
பஞ்சல்ல இருள் போர்த்தும் சொல்.
வஞ்சகச் சொல் பொல்லாதது பாறாங்கல்.
சொல் விடாதோர் மௌனி, மதியூகி மட்டி.
***

சொல்லைக் கூட்டாக விட்டாலும், பல்லு
பல்லாகப் பிரித்தாலும் கருத்துகள் மாறுபடும்.
சொல்லெறிதல் அஞ்சல் ஓட்டமாகவும் தொடரும்.
அல்லல் தருமளவு பெரிதாகவும் நீளும்.
சுகமாய்ப் புரண்டு விழும் சொல்
அகத்தில் வெள்ளிக் கொலுசாகக் குலுங்கும்.
இகத்தில் நல்ல சொல்லை விட்டு
சுகமுடை உலகத்தை நாளும் சமைப்போம்.
***

வேதா. இலங்காதிலகம்   ஓகுஸ் டென்மார்க்.  2016- decem

493789nfy8xzi1n4

473. எங்கள் வீட்டுப் பிள்ளை முரட்டுக் காளை

25-1-17

16114744_1785330851731958_2122737506830711464_n-jpg2

எங்கள் வீட்டுப் பிள்ளை முரட்டுக் காளை

 

சல்லிக்கட்டு – ஏறுதழுவுதல் வீரம்
சொல்லும் பொங்கலோடிணைந்த விளையாட்டு.
சல்லிக் காசு முடிப்பு கொம்பிலே.
வல்லமையாய் மாட்டையணைப்பவனுக்கு முடிப்பு கையிலே.

***

முல்லை நிலத்து ஆயர் மகளிர்
வெல்லும் மஞ்சு விரட்டு ஆடவனுக்கு
கல்யாண மாலை சூட்டி வாழ்ந்திடுவாள்.
சல்லிக்கட்டிற்கு எதிர்ப்பும் ஆதரவும் உண்டு.

***

பண்பாட்டு அடையாளமிது தமிழருக்கு.
திண்டாட்டம் மக்களுக்கும் காளைகளுக்குமென்றும்.
ஆண்டாண்டாய் நிபந்தனைகள், வழக்கு நீதிமன்றம்
இவ்வாண்டு சல்லிக்கட்டுத் தடையுடைக்க.

***

சனப் போராட்டம் உலகெங்கும்
சொல்லி எடுக்கிறார். உடலிற்கும்,
தொல்லையின்றி மனதிற்கும் காயமற்ற தீர்வாகட்டும்.
வெல்லட்டும் தமிழின மானம்.

**

முரட்டுக் காளை எங்கள் வீட்டுப் பிள்ளையை
விரட்டி அடக்கும் அனுமதியை
புரட்டிடாது தந்திட அகிம்சை நிறைத்தும்மை
மிரட்டுகிறார் அறத்திற்குத் தலை வணங்குங்கள்.

***

samme Jallikattu:  in this  enaippu:-    https://kovaikkavi.wordpress.com/2017/01/21/470-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9/

 

 

convacation

16. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் –16

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 16

கின்னஸ் ன்படி உலகின் அகலப் பாலம், உருக்குப் பாலம், உயரப் பாலம். உலகின் 4வது நீள வளைவுப் பாலம் இதுவாகும்.

img_03481
1815ல் பிரான்சிஸ் கிறின்வே என்பவரால் திட்டமிடப்பட்டதாம். 1924ல் கட்டுமானப் பணி. ( பெரிய கதை இருக்கு. தமிழில் சிட்னி துறைமுகப் பாலம் என்று விக்கிபீடியாவில் சென்று வாசியுங்கள். அதன் இணைப்புகளையும் அழுத்தி படங்களையும் பாருங்கள் பாலத்தின் மேலும் நடக்கலாம்.) இதற்காகவே பலர் பணம் கட்டி பயிற்சியுடன் ஏறுகிறார்கள்.

img_03641

1400 தொழிலாளர்கள் 8 ஆண்டு கால வேலை. 42 மில்லியன் பவுண்ஸ் செலவு. 1932ல் மார்ச் 19 நியூசவுத்வேல்ஸ் முதல்வர் ஜோன்லாங் திறந்து வைத்தாராம். 8 வாகனச்சாலைகள், 2 தொடருந்துத் தடங்கள் உள்ளன. 1950ல் டிராம் சேவை நிறுத்தப்பட்டதாம். பாலத்தின் வயது 84. டெலிபோன் மணி பாடலில் வரும் பாலம்.
6 மில்லியன் ஆணிகள், 53000 டன் உருக்கும் பாவித்தனராம். நீளம் 1149 மீட்டர் (3770 அடி) அகலம் 49 மீட்டர். (161 அடி) உயரம் 139 மீட்டர் (456 அடி).
வரவும் போகவும் என்று நாம் இரண்டு தடவை இப் பாலத்தினூடாகப் பயணித்தோம்.

சிட்னி நகர் வலத்தின் போது 3 விதமான மரங்கள் ஒரு காட்சிக்குள் அடங்கிய இயற்கை

img_02891

கொக்கோகோலாவின் அரசாட்சி in sydny

img_03181

மியூசியம் கட்டிடம் சிட்னி   நடுப் பட்டினத்தில்.

img_02921

ஒர் அழகிய நீரூற்று 

img_03201

El Alamein Memorial Fountain @ Kings Cross

This award-winning war memorial was completed in 1961 by an Australian-born architect, Bob Woodward. It was built in honor of the soldiers who sacrificed their lives in 1942 battles at El Alamein, Egypt during World War II. The fountain is located at the corner of Darlinghurst Road and Macley Street.
ஒரு கப்பல்    நிற்கும் காட்சி
img_03261
ஓப்பராவின் பக்கப்பாட்டுக் காட்சிகள்  2 
img_03861
img_03901
சரி இனி நிகழ்வுகளைப் பார்ப்போம்.
அடுத்த நாள் 17ம் திகதி பகலுணவுக்கு எனது சித்தப்பா வீட்டிற்கு அழைத்திருந்தனர். ஆம் அப்பாவின் சகோதரர் கந்தையா. சித்தப்பா, சித்தி கொழும்பு, இலங்கையில் காலமானவர்கள்.
kandiaha peri
 சித்தப்பா யாழ் நாச்சிமார் கோவிலடியில் வசந்தா பிறிண்டேர்ஸ்  என்று சேலைகளுக்கு பிறிண்ட் பண்ணும் தொழிற்சாலை வைத்திருந்தார். பின்னர் பிள்ளைகள் இதைப் பார்க்க.  பின்னர் அவர்களும் அவுஸ்திரேலியா சென்று குடியேறினார்கள்.
இவர்களில் 5 பிள்ளைகள் சிட்னியில் வசிக்கின்றனர் அவரவர் சொந்தக் குடும்பத்துடன். அனைவரும் ஒருவர் வீட்டில் உணவருந்தும் திட்டம். எப்படியும் 50 வருடங்களின் மேலாக ஒருவரையொருவர் சந்திக்கவில்லை. எல்லோரும் சிறுவர்கள் அன்று. 
நன்கு கலந்துறவாடி மகிழ்ந்தோம். இனிய பொழுது அது.
மாலை வரும் வழியில் இன்னொரு பெரியம்மாவின் தங்கை மகன் வீடுக்கு தேநீருக்குச் சென்று மகிழ்ந்து உறவாடி வந்தோம்.

மிகுதியை அடுத்த பதிவு 17ல் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  24- 1- 2017

bridge-andopara

472. சேற்றில் அப்பிள் விளையாது!

471. வருக தை மகளே வழியெல்லாம் பூப்பூக்க

korg_thai_news

 

வருக தை மகளே வழியெல்லாம் பூப்பூக்க

 

(அணர்தல் – மேல் நோக்கியெழுதல். இணர்தல் . விரிதல்)

 

பயறு, பச்சரிசி, சர்க்கரை, பாலோடு
உயர்ந்த நெய்யும், ஏலரிசி, கராம்பும்
நயமாகப் பொடித்து நன்றாகக் கலப்போம்.
 செயமாகப் பால் சோறு பொங்கலிடுவோம்.

***

சிறப்பாக சூரியனுக்கு நன்றி கூறுவோம்.
உறவினரிடம் சென்றும் அவரையும் அழைத்தும்
திறப்போம் புதிய தையிற்காய் வரவேற்போம்.
துறப்போம் துன்பங்களை துரிதமாகத் தூய்மையாவோம்.

***

உணர்வோடு தமிழும் உண்மையும் வளர்க!
அணர்தல் மட்டுமே உலகை அழகாக்குக!
இணர்தல் உழவரின் வாழ்வாய் ஆகுக!
கொணர்தல் புதிதாய் பழையன பின்னாகுக!

***

வருக தைமகளே வழியெல்லாம் பூப்பூக்க
உருக தமிழினிமையில் சாரல் சொரிக!
கருக கொடுமைகள் பொய்கள் ஒழிக!
தருக நற்பலன்கள் மனிதர் வாழ்வெல்லாமோங்க!

***

 12-1-2017

 

புதிய தையில் பொங்கும் மனதில்
பதியும் ஒரு புது உணர்வில்
எதிலும் ஒரு எதிர்பார்ப்பில்
உதிக்கும் எம் சமாதானமென
மதிக்கும் நல் மனதுடன்
உதிக்கட்டும் தைப்பொங்கல்.
திறக்கட்டும் ஈழச் சமாதானம்
திருவுடன் தையில் பொங்குவோம்.

22-12-2004

 

 

pongal-1

470. நல்ல முடிவு வருமென

17jalli_942596749

நல்ல முடிவு வருமென …

***

சல்லிப் பொதி கொம்பிலே கட்டி
மல்லுக்கட்டி எருதை அடக்கி பொதியெடுக்கும்
தொல்லுலகின் ஆதி வீர விளையாட்டு.
நல்லுலகின் கலாச்சார விளையாட்டு ஏறுதழுவுதல்.

***

தடை உடைக்க தமிழ் உலகம்
படை எடுத்து பகட்டின்றிக் கூடி
பகல் இரவு பயம் தயக்கமின்ற
பக்குவமாய் தம் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்

***

மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டிற்கு உலகிலுச்சம்.
யாதவர்களின்(ஆயர்) மரபுவழிக் குல விளையாட்டிது.
காளையின் கொம்பு பிடிப்பவன் வீரன்.
காளையின் வால் பிடிப்பவன் தாழ்ந்தவன்.

***

பழந்தமிழ் இ.லக்கியம், சிந்துவெளி நாகரிகம்
பிழையற சான்று கூறுகிறது சல்லிக்கட்டிற்கு
கலித்தொகை முல்லைக்கலியில் ஏழு பாடல் கூறுகிறது.
கி.மு இரண்டாயிரம் ஆண்டுக் கலாச்சாரமிது.

***

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்..20-1-2017.

(இவை பற்றி போட்டிக்கு எழுதிய கவிதைபோட்டி முடிய வரும்)

samme  jallikattu in this enaippu:-  

https://kovaikkavi.wordpress.com/2017/01/27/472-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE/

bul

5. நான் பெற்ற விருதுகள்

16143394_1720147201633975_7424036024872574412_o

நான்  பெற்ற  விருதுகள் தொடர்ச்சி…..

1. கவியூற்று
2.கவினெழி
3.கவியருவி
4.கவிச்சிகரம்.
5.சிந்தனைச் சிற்பி
6.ஆறுமுகநாவலர் விருது.
7.கவிமலை.
8.கவிவேந்தர்.

9. கவித்தாமரை

எல்லோருக்கும் மனமார்ந்த   நன்றிகள்.

கவியுலகப் பூஞ்சோலையின் பொங்கல் விருதுகள் கண்டேன்.
இன்று இன்ப அதிர்ச்சியாக இந்தப் பட்டம்   

கவிவேந்தர்.

கிடைத்தது.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 19-1-2017

*

echick-1

469. ஏனிந்த விடப்பரீட்சை!

 

16002878_1784343118497398_1761639343492554117_n

paaram

ஏனிந்த விடப்பரீட்சை!

(பைரவம் – அச்சம்.)

 

மைதானத்தில் செய்ய வேண்டிய சாகசமிது
மைல்கல் பாதையில் செய்வது ஆபத்து.
கையாளும் போக்கு வரவுப் பயணத்தில்
வைக்கும் விதிமீறும் விடப் பரீட்சையிது.
தைரியமுடை வறுமையின் ஓயாத முயற்சி.
பைரவமற்ற வினைத் தவம் எனலாம்.

***

அளவோடு காவிச் செல்லல் நன்றே.
விளங்காது இப்படிக் காவுதல் தவறே.
வளமீயும் உடல் உழைப்புத் தேவையே.
தளமாவது உன் உடல் ஆரோக்கியமே.
களங்கமிது பாதசாரிகளைக் குளப்பும் செயல்
களிப்புடையோட்டம் உந்துருளி! உனதுயிர் பத்திரம்!

***

நன்றாகத் தலை நிமிர்த்திடவியலா நிலை
பின்னால் பார்க்கக் கண்ணாடி உதவுமா!
என்றாலும் இத்தனை பேராசை கூடாது.
சின்னதான ஒரு தட்டுதல் கூட
பொன்னான உயிருக்கு உலை வைக்கும்.
பென்னம் பெரிய சவாலிது வாழ்வதற்கு.

***

விதிமுறையான உழைப்பே நிம்மதி.!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 14-1-2017

 

card31

 

 

468. பழசானாலும் புத்தகங்கள் பதுமநிதி.

book-store

படவரி 52. (வல்லமை)

பழசானாலும் புத்தகங்கள் பதுமநிதி.

(  பதுமநிதி – குபேரனின் ஒன்பது நிதியுள் ஒன்று)

வேண்டாமென்று வீசுவோர் பலர் அதை
வேண்டுமென்று தேடுவோர் பலர் அதை
தோண்டி எடுக்கட்டுமென்ற தாராள மனதில்
தோராயமாய் விற்கிறார் இங்கு இவர்.
பாதையோரப் புத்தக அகமானாலும் தரம்
போதையெனும் அறிவு பெற வரம்.
கீதையும் பெரும் காதைகளும் மலிவாகி
பாதையாகும் அறிவுச் சுடர் ஏற்ற.

***

அழகோ அலங்கோலமோ அறிவிற்கேது தரம்!
பழையதோ புதியதோ அறிவு மொழியுரம்.
புழகிய அறிவுச் சாரற் குளிப்பாம்
புத்தக வனத்துக் கருத்துணர்வுப் பொக்கிசம்.
வாசிப்பு அருகிடும் காலத்தில் புதையலாய்
நேசித்து அறிவூற்றில் நீந்திப் பயனடைவார்.
புத்தகப் பக்கத்தில் ஒளிரும் முத்துக்கள்
சத்தை உணராதவன் செத்தவன் ஆகிறான்.

***

பாம்புப் புற்று போன்ற அடுக்கில்
தோம்பு, தோட்டக்கலை, தொல்காப்பியம் ஈறாக
கூம்பகம், கூட்டுறவு, கூத்துப் பாட்டென
வேம்போ இனிப்போ அத்தனையும் தேடலாம்.
பதுக்கிடு! என்றும் பழசென்று வீசாதே!
பதுமநிதி போன்றது பன்முக நூல்கள்.
மதுரவாக்கு பழைய நூல்களும் வளர்க்கும்
பொதுவான நல்லறிவு! தேடிப் படி!

***

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-2-2016.

*

வாசிப்பு  பற்றி இங்கும்  (இந்த இணைப்பிலும்) உண்டு

https://kovaikkavi.wordpress.com/2013/07/13/28-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/

*

https://kovaikkavi.wordpress.com/2017/04/25/492-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

*

div138

Previous Older Entries