20. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (20)

 

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 20

 

நகர் வலத்தில் அடுத்து கிங்ஸ் எட்வேட் பார்க்கிற்கு முன்னால் ஒரு கலை வடிவம்.

IMG_0757[1]

  என்னவென்று டென்மார்க் வந்த பின்பு ஆராய்ந்தேன். 1983ல் வடிவமைத்தது. இத்தாலிய ஆனல்ட் போமோரா என்பவர் செய்தார். எக்ஸ்போ 88ல் பாவித்த கலை வேலைப்பாடுகள்.. எக்ஸ்போ முடிய இங்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்.
பிராமிட் பவர் வட்ட உருவம்.

king edward-3
ஆம்பிஷன் செவ்வக உயரம் லா மெசின். குந்து செவ்வகம் கணிப்பு காசண்ட்ரா என்ற விளக்கம் இருந்தது எனக்கு ஒன்றும் புரியவில்லை.   படங்களைத் தருகிறேன் பாருங்கள்.

Unavngivet

king edward- 4

king edward -2
ரூவங் கிராமத்தின் வாயிலருகாமையால் போனோம்.

IMG_0780[1]

எல்லா வசதிகளும் அடங்கிய இடம்     இது.   பெரிய ஷொப்பிங் சென்ரர். பாக் என்று அனைத்துமே உண்டு.

IMG_0783[1]
பிறிஸ்பேண் ஆறு ஒரு ஓரம் காண்கிறீர்கள்.

வில்லியம் யொலி, மெறிவேல் என்று இரு பாலங்கள் கண்டோம்.
வில்லியம் யொலி முதலில் கிறே ஸ்றீற்பாலம் என்று அழைக்கப்பட்டு பின்னர்
வில்லியம் யொலி ஆனது 1955ல். வில்லியம் யொலி முதலாவது லோட் மேஐர் ஆவர். 72 மீட்டர் கொண்ட இரும்பு வளைவுகள் மூன்றினால் ஆக்கப்பட்டது. பாலம் 500 மீட்டர் நீளமுடையது.

IMG_0799[1]

IMG_0800[1]

17_The_William_Jolly_Bridge

 கூகிள் படமும் பாருங்கள். இரு பாலமும் ஒரே பார்வையில் தெரிகிறது (மெறிவேல். யொலி)

2251261025_fef0270293_b

அருகில் மெறிவேல் பாலம் தெரிகிறது. இரட்டை வரிசை புகையிரத பாதைப் பாலம். 1978ல் திறக்கப்பட்டது. 877 மீட்டர் நீளமானது.

IMG_0806[1]

 கூகிள் படமும் பாருங்கள்.

IMG_0809[1]
 கலாச்சார நிலையம்.

IMG_0811[1]

google

Griffith-Campus-Gold-Coast
   பல்கலைக்கழகம் பார்க்கறீர்கள்.பென்னம் பெரிய கழகம் கட்டிடங்கள் நூல்நிலையம் என்று அனைத்தும் வார்த்தையால் சொல்ல முடியாத பிரமாண்டம் உலக பிரபலம். கூகிளில் சென்று பாருங்கள் பிறிஸபேர்ண் or gold coast என்று எழுத வேண்டும்.

IMG_0818[1]

IMG_0816[1]
 கோடை வீடு பார்க்கிறீர்கள்.

IMG_0823[1]

இம்மாம் பெரிய    கட்டிடம்.

IMG_0827[1]
சைனா ரவுண் மோலைத் தாண்டினோம்.

வூல் வேத்ஸ் எனும் பெரிய சூப்பர் மாக்கெட் சென்று இரவு உணது தேடினோம். சரிவரவில்லை.

IMG_0835[1]

 கலை வடிவங்கள் பாருங்கள்.

IMG_0843[1].jpg

IMG_0838[1]
கோவிந்தா வெஜிடேரியன் கடையில் சோறு வாங்கிக்கொண்டோம்   இரவு     உணவுக்கு.    

IMG_1070[1].jpg

இப்போது நாளைக் காலையில் தங்க கடற்கரை செல்ல பேருந்துக்கு டிக்கட் வாங்கினோம். அங்கு செல்ல ஒரு மணி பதினைந்து நிமிட ஓட்டமே.
பிறகு வாடிவீட்டிற்குச்     சென்று குளித்து சாப்பிட்டு   நாளைய ஆயத்தங்களைச் செய்து நன்கு சயனித்தோம்.

இத்துடன் அடுத்த பதிவை அங்கம் 21ல் பார்ப்போம்.

அன்புடன் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

 

Bridge-and-Trail-36-x-12

Advertisements

4. சான்றிதழ்கள்(முதலெழுத்து – இ- கவிதை. )

amirthan 21-2-17 Ena

*

ஓ! மிகுந்த மகிழ்ச்சி!எனது பெயரில் இந்த சான்றிதழ் காண்கையில்.
அமிர்தம் குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.
கலந்து கொண்ட கவிஞர் கூட்டத்திற்கும் –
சான்றிதழ் பெற்றோருக்கும் மகிழ்வுடன் வாழ்த்துகள்..————படம் பார்த்து முதலெழுத்து – இ- கவிதை.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 20-2-2017

*

முதலெழுத்து – இ- கவிதை.

*

இருநிதிக் கிழவன் குபேரனாக நாம்
இங்கித நிலாவும் மரங்களுமுடைய செலவந்தர்.
இரஞ்சன பௌர்ணமியில் தருக்களின் காதல்
இணை பறவைகளும் வாழ்த்தும் இசைவுடைய
இன்னிசையாகிறதோ! இதில் வசமாகா இனமெதுவோ!
இந்திரவிழா போன்று கிளர்ச்சி தரும்
இலக்கண, இலட்சண, இன்ப வெளிச்சம்.
இயற்கை இரசனை ஆனந்தம் இது.
*

ena...ena...

22. பா மாலிகை (அஞ்சலிப் பா )

Face book  தமிழமுது கவிச்சாரல் மற்றும் தமிழமுது தேன்சாரல் குழுமங்களின் தலைமை நிர்வாகி பூங்காவனம் இரவீந்திரன் அம்மா அவர்களின் கணவர் இன்று இயற்கையெய்தினார். .

அவர் கணவரின் மறைவை முன்னிட்டு இரங்கல்  வரிகள்.

anchali - poonga

*

பிரியமுள்ள சகோதரி!

உலகமாம் காட்டுப் பாதையில்
வலக்கையாகிய உறவு நழுவல்
இலகு அல்ல இன்ப
இலயம் தவறும் இசையே.
மறைதல் எல்லோருக்கும் ஆனது.
மனமதை ஏற்று உறுதியாய்
மலைப்பற்ற பயணம் தொடர்தல்
மனதோடு மல்லாட்டம் தான்.

தெய்வத்தை இறுகப் பற்றும்
தேவதை தாங்கள் சிறிது
தேவை காலமே தேறிட.
தேனினுமினிய தமிழும் உறவாய்த்
தோள் கொடுக்கும். அறிவெனும்
தேசுடை கருவியுமுண்டு. ‘உரனென்னும்
தோட்டியான் ஓரைந்தும் காப்பான்.
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து ‘

சாந்தி!…சாந்தி!…சாந்தி!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 25-3-2017.

*

poongavanam

*

 

10645017_728439903878023_3880273020971776344_n

484. 5. குறுங்கவிதைகள் (13, 14,15)

13413066_1782090002077246_6719568626088052063_n

*

குறுங்கவிதைகள்

*

13

தொபுக்கடீரென்று அப்பா நீருள் குதித்தார்
தாங்க முடியாத சிரிப்பு பிள்ளைக்கு
என்ன ஒரு தெய்வீகச் சிரிப்பு
அதுவும் அம்மா போல வயிறழுத்தி
ஆகா!..இன்னொருக்கால் குதியுங்கோ அப்பா!
17-6-2016

*

poo

14.

29-6-16—இடை ஒடியாதோ பூக்களின் பாரத்தில்!
கூந்தலுக்குள் என்ன வைத்துக் கடத்துகிறாய்!..-
புன்னகையை மறைக்க மல்லிகை முக்காடோ! (பின்னோடோ)

*

IMG_3973.jpg-3.jpg-yy

*

15.

வரமான உலகில் வளமான தமிழை
வரம்பின்றி வாசி! அன்றேல் ஊமையாகு!
மடமையாக இருப்பதிலும் அறிவாளியாகு!
மனம் அழகை ரசிக்காவிடில் சிலையாகு!

 

Vetha.Langathilakam

Denmark-24-3-2017

*

*

1149328vh07ofmens

3. சான்றிதழ்கள்..(ஆ – வன்னா)

amitham 13-2-17aavanna

*

ஓ! அமிர்தம் குழுவினரே மிக்க மகிழ்ச்சி.
அனைவருக்கும் இனிப்பான நன்றிகள்.
பங்கு கொண்ட கவிஞர்களிற்கும் வெற்றியைக்
கைப்பற்றிய எல்லோருக்கும் நல: வாழ்த்துகள்..————————— வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-2-2017

ஆக்கிரமித்த போதைப் பொருள் மயக்கமோ!
ஆயிழைகளைப் புனர்வாழ்வு நிலையத்திற்கெடுத்துச் செல்லுங்களேன்!
ஆதங்கம் கொண்டு விதியெனும் மரத்தடியில்
ஆனந்தமற்று வேர்களில் சாய்வது பரிதாபம்!

ஆழிவித்து (முத்து) மனதின் ஆளுகை நம்மிடம்
ஆகாயத்தின் ஆவேசச் சுழற்சியாய் எழுங்கள்!
ஆழித்தீயாய் எழுந்து இக்கதிக்கு உங்களை
ஆளாக்கியவரைப் புடமிடுங்கள்! புதுயுகம் செய்யுங்கள்!

*

green line-2

 

67. பா மாலிகை (காதல்_தேவன்_விருது)

*
*
காதலர் தினக் கவிதைப் போட்டியில் #காதல்_தேவன்_விருது பெறும் காதற்பாவலர் Vetha Langathilakam அவர்களை இங்கே நடுவர் Sumathi Sumathi Shankar அவர்களோடு #காதல்_தேவன்_விருது பெறும் பாவலரகள்
மற்றும் விருதினை வடிவமைத்த பாவலர் குமார் சுவாமிநாதன் அவர்களோடு
காதல் தேவன் விருது 14.2.17-15.2.17

வேதா இலங்கா திலகம் Vetha Langathilakam   

வாழ்த்துவதில் மகிழ்வு கொள்ளும் நம்ம அமுதசுரபி நிர்வாகத்தினர்.
*
Kaathal thevan-22-3-17amutham
*

ஒ!…….காதல் தேவனா!…..
காதல் தேவி என்றால் நல்லாயிருக்குமே….
சரி பரவாயில்லை.. சிரிப்பு சிரிப்பாக வருகிறது..
உங்களுக்குப் பரிசாக எனது வலையில்
65 காதல் கவிதைகளை வாசியுங்கள் என்று கூறுகிறேன்.
மனமார்ந்த நன்றி. இதோ இணைப்பு……..https://kovaikkavi.wordpress.com/…/———————… கவிதை 14-2-2017
வேதா. இலங்காதிலகம்., டென்மார்க்.

*

காதலன்றி உலகிலை

கள்ளுறும் மலராக துள்ளும் இரகசிய மனம்
உள்ளுற மகிழ்ந்து அழைக்கிறது ஓடி வா!
வள்ளுவன் கூறிய மூன்றாம் பாலும் இதுதான்.
உள்ளம் உணர்ந்து உவந்த காதலும் இதுதான்.
உருவத்தில் ஒன்றான இலக்கியக் காதலும் இதுதான்.
ஆதாம் ஏவாள், அனார்கலி சலீமும் கண்டு
ஆராதித்த அந்த அற்புதக் காதலும் இதுதான்!
ஆனந்தத் தேனெனும் அமுதக் காதலும் இதுதான்!
ஆடிப் பெருக்காய் அனுதினமும் பரிமாறலாம் வா!
கூடிக் குலாவிக் குதூகலிக்கலாம் வா! வா!.

*

heartborder

 

 

 

2. முதலெழுத்து கவிதை

amirtham 5-2-17aana

முதலெழுத்து கவிதை

*

அகரமாகும் அன்னையாய் உலகில் நீயே
அகவொளித் திரியும் தைலமும் அன்பே.
அண்டமெல்லாம் பாச ஒளி வீசுபவளே
அப்பாவோடு இணைந்து உலகை ஆக்குகிறாய்.
அண்ணா, தங்கை, சகோதர உறவுகள்
அற்புதமாய்ப் படைத்து அகநிலையுறுதி தருபவளே.
அகலாத தாய்மையாம் மனவிதழ் கொண்டவளே.
அசுரனும்  மனமுருகுவான் அம்மா என்றால்

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 6-2-2017

Swirl divider v2

Previous Older Entries