48. கவிதை பாருங்கள்(photo,poem)

maruthu

எது அழகு!

 

கவியழகா! மொழியழகா!

குவியுமுன் திமிரழகா!

கவினுறு மொழி கைவந்ததென்றால்

தெவிட்டும் அகமதி குவிந்திடுமோ!

 

சீண்டும் அதை ஓட்டு!

தேண்டித் தூர விரட்டு!

பாண்டல் உய்ய விடாது!

தாண்டு   தூரத் தாண்டு!

 

அகம்பாவம் தொடும் கட்டம்

அருட் கயிறை வெட்டும்.

அமைதித் தூக்கம் அறுக்கும்.

அமைதிப் பாதை சிறப்பாம்.

 

(அகமதி – அகந்தை , ஆணவம், இறுமாப்பு.பாண்டல் – பழமை, பாசி பிடித்து நாறுதல்)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

30-3.2013.

rainbow line

 

Advertisements

268. உனக்கு நீயே நண்பன்

 

natpu

உனக்கு நீயே நண்பன்

 

உடன் சேர்ந்துறவாடலும்

உருகி அன்புதிர்த்தலும்

உரிமையுதவி வரவாகும்

உணர்வது கானல்நீராகும்.

 

உட்பற்றில்லா நேசம்

உணராமை நிலையில் நிற்கும்.

உலகு உறவு மாயையாம்

உணர்வின் உத்தரம் தெரியும்.

 

உதவி பெறுவார் உதறுவார்

உதவாத பிறரையும் உயர்த்துவார்.

உன்னத மனிதராய் நடிப்பார்.

உத்தரீயமாக்குவார் பிறரை இவர்.

 

உதவும் உறவு உதறிடும்

உதாசீனமிதயம் கிளறும்.

உடைந்தும் உயிர்க்கும் சக்தி

உன்னத நம்பிக்கை ஊன்றுகோலில்.

 

உறைந்த மனதார் உறவு

உறுதிப்பாடற்றதை உணர்ந்தால்

உளைதல்,உவர்த்தல் உதறலாம்.

உனக்கு நீயே நண்பன்.

 

(உளைதல் – மனம் வருந்துதல்)

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

26-3-2013

 

 

Nyt billede

 

 

47. கவிதை பாருங்கள்(photo,poem)

408546_341274539321678_1668172262_n[1]

 

 

 

(வாழ்க்கையொரு சதுரங்கம்

வாழ்ந்து பாரு சின்ன ரங்கம்.

வாழ்தல் தலைகீழானால் அசிங்கம்

வாழ்ந்திட வேண்டும்ஆதங்கம்.

 

அன்பால் ஆடும் அரங்கம்.

துன்பங்கள் தட்டும் மிருதங்கம்.

வன்பு தட்டும் சலதரங்கம்.

உன் பங்கிலுயர்வதே இராசாங்கம்.)

 

 

bar line

 

 

267. தித்திக்கும் முத்து.

Kolukkadai 093

தித்திக்கும் முத்து.

 

 

எனக்குள் நீ, நான்

உனக்குள், வேறல்ல நாம்.

ஓன்றோடொன்றாய் வெகு

ஓட்டியுறவாடும் இறுக்கம்.

இதழ் குவித்தெடுத்து

இதழ் கொடுக்கும் முத்து.

 

மனித இடைவெளி குறைத்தும்

மனித மனங்கள் நெருக்கும்

இனிதாய் இறுக்கங்கள் தளர்த்தும்

அனிதம் மாயங்கள் செய்யும்.

கனிதல், குனிதலில்லாதது

வனிதம் நிறை முத்து.

 

பித்தம் தணிக்கும் அத்திரம்

அத்தக நேசத்தின் அத்தர்.

நித்தமும் அலுக்காத உத்திரி.

சுத்தம் கூச்சு தரும்.

சுத்தம் பேணும் உறவின்

தித்திக்க ஒத்தும் சொத்து.

 

முத்தம் காயம் செய்யும்.

தத்தம் செய்யும் நேயம்.

தித்திக்கும் மெத்தை இதழின்

வித்தையாடும் மன்மத பாணம்.

மொத்தமும் ஏங்கச் செய்யும்.

சொத்தெனும் பூவில்லாத்தேன்.

 

 

(அனிதம் – எண்ணற்ற, கணக்கில்லாத. குனிதல் – முதிர்தல்.

வனிதம் – சிறப்பு, மேன்மை. அத்தக – அழகு பொருந்திய, அத்தகைய.

கூச்சு- புளகம். ஆத்திரம் – அம்பு. உத்திரி – அருச்சனை.)

 

 

 

 

பா ஆக்கம்   பா வானதி   வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

21-3-2013.

 

 

1139540gpr9bczcla

46. கவிதை பாருங்கள்(photo,poem)

மக்கும் வாழ்விலே நடிக்கும்
சிக்கல் மனங்களைப் படிக்கவும்
பக்குவ மனம் வேண்டும்.

மட்டித்தனத்துடன் தாளம்
தட்டவியலாது நாளும்.
கிட்ட நீங்குதல் சுகம்.

மதிப்போடு காலூன்றல்
நிதிப் பொதியேந்தல்
நீண்ட பயணம்போலாகும்.

72301_339195699529562_515060194_n[1]

http://www.youtube.com/watch?v=dGRe07U8zDA

இந்த முதலாவது வரிகளை சுப்புத் தாத்தா  இசையோடு பாடியுள்ளார்.
முகநூலில் தந்தார் நீங்களும் சுவையுங்கள்.
சுப்புத்தாத்தாவிற்கு மிக மிக நன்றி.

7016[1]---

ஆசிகம் காண முடியாத நிலையில்
பாசிகள் நிறைந்த பச்சைக் குளத்தில்
ஊசித் தூற்றலில் நினைந்த மலராள்
தூசிவிலக்கித் துலங்கினாள் வெயிலில்.

பா ஆக்கம்    பா வானதி    வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

18-3-2013

Nyt billede

33. திருமண வாழ்த்து.

திருமண வாழ்த்து.

 

” அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்  

பிறன் பழிப்பதில்லாயின் நன்று ”  (திருக்குறள்)

 

 

காதல் வானில் தூதாகிய தாரகைகளின்

காதல் தூது திருமணக் கூட்டிற்குள் சரணம்.

மோதலின்றிச் சாதல் வரை கூடல் இனிக்கூடல்!

ஈதல் எடுத்தலேயினி வாலிபக் கடைசித் துளிவரை.

காதல் வாழ்க ஆடல் பாடலுடன் நோதலின்றி.

 

சுனையென ஆசைகள்  இணைந்து முளைத்தது.

நனைந்த இதயங்கள் காதலாகிக் கனிந்தது.

முனைவர் விடுதலை மயிலாடுதுறை இளைஞனுக்கும்

முனைவர் உமாதேவி கோயம்புத்தார் மங்கைக்கும்

வினையாகிய காதல் திருமணக் கிரீடம் சூட்டுகிறது.

 

இனப்பற்றாளன் இனிய பண்பாளன் விடுதலை

தினம் பிறருக்கு உதவுவதில் பிரியமானவன்.

மனம் பெரியாரியலில் மூழ்கி நீந்துகிறான்.

தனம் இவன் ஈழத்தமிழரோடு இணைந்தவன்.

இனசனத்துடன்; 18-1-2013ல் திருமணம் கொள்கிறான்.

 

எங்களால் மறக்கவியலாத அன்புத் தோழனின்

மணநாளிது மனதார வாழ்த்துகிறோம் வாழ்க!

மங்கை உமாதேவியுடன் பதினாறும் பெறுக!

மங்கலமென்பது கணவனும் மனைவியும் இணைந்து

திங்கள் போல் ஒளிவீச உயர்ந்து வாழ்தலே!

 

 

வாழ்க! பல்லாண்டு வாழியவே!

ஓகுஸ் வாழ் தமிழ் மக்கள் டென்மார்க்.

9-1-2013

 

 

 

 

Invitation

P1040590

 

இந்தியாவில் நடந்த திருமணத்தில் வாசித்து கொடுக்கப்பட்டது.

16.3.2013ல் ஓர வரவேற்பில் மறுபடி என்னால் வாசிக்கப்பட்டது.

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

16-3-2013.

266. நிறைந்த வாழ்வு

486028_341252872657178_706644495_n

நிறைந்த வாழ்வு

 

வரவாகும் வாழ்க்கை, தரவுகளின் இணைப்பு

இரவு, கனவு, உரவு தரும்.

போராடா வாழ்வால் நீராடா இமைகள்

சீராட்டும் சாராம்சம் ஆராதனைக் குரியது.

 

துணையுடன் நடக்கும் இணையற்ற இலக்கு

அணைக்காத தனிமை பிணைக்காது நெருடலை.

வலியற்ற பாதையின் கிலியற்ற துயில்

கலி தீர்க்குமெனில் கெலிப்பு முதல்.

 

நிறை வாழ்வின் குறையற்ற கணக்கு

இறையாசி யோடினிதாய்த் துறை முகமெட்டும்.

பழக்கமான வாழ்வு, வழக்கு வாதமின்றி

முழிக்கும் வெற்றி! கிழக்கு வெளுக்கும்!.

 

(உரவு – வலிமை. கெலிப்பு –வெற்றி. முழிக்கும் – விழிக்கும்.)

 

 

பா ஆக்கம் பா வானதி

வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

14-3-2013

 

 

 

sunset

 

Previous Older Entries