30. பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.

 

பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.

 

எப்படி வெளியே பிள்ளைகள் காயப்படுகிறார்கள்!

பாலர் பாடசாலையில்  வெளியே உலா செல்லும் நாட்களில் தெருக்களைக் கடக்கும் போது, சன நெரிசலிற் புகும் போது, குழுநிலையில் சிறுவர்கள் ஒருவருடன் ஒருவர் கைகளைக் கோர்த்து, சோடி சோடியாக இடையில் பெரியவர்களுடனும் நடக்க வேண்டும்.

எல்லோரும் சோடி சோடியாகக் கை பிடித்து நிற்க இறுதியாக 3 வயதுடைய ஒரு ஆசியப் பெண் குழந்தையும், ஒரு டெனிஸ் ஆண் குழந்தையும் எஞ்சி நின்றனர்.
”கையைக் கோர்த்திடு” என்றேன்…பெண் குழந்தையிடம்.
மாட்டேன் என்று மறுத்தாள்.
” இப்படி உலாப் போகும் போது சிறு பிள்ளைகள் கை பிடிக்க வேணும் என்ற வழக்கத்தை மறந்து விட்டாயா?..” என்றேன்.
”நான் ஆண் பிள்ளைகள் கையைப் பிடிக்க மாட்டேன்!”…என்று அடம் பிடித்தாள்.
” ஏன்” என்ற போதும் (இக் கேள்வியை மிக மன நோவுடனேயே நான் கேட்டேன்)
”மாட்டேன்…மாட்டேன்”… என்றாள்.
பின்பு நானும் சேர்ந்து அவளோடு கை பிடித்து நடந்தோம்.
எமது வற்புறுத்தலால் அவளது கண்கள் கலங்கி விட்டன. அழுதாள். அவளது நிலைமை எனக்கு விளங்கியது.

பின்னொரு தடவை – வேறொரு நாள் சைக்கிளோடி விளையாடிய போது, ஒரு ஆபிரிக்க ஆண்பிள்ளை 4 வயதுடையவன் எனக்கு பெண் பிள்ளையோடு சைக்கிளில் இரட்டையாக, சமமாக உட்கார முடியாது என்றான்.
”ஏன்” என்றேன்.

” ஆண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்., பெண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்.” என்று அடித்துக் கூறினான்.
”..யார் கூறியது?…” என்றேன்.
”…அம்மா..கூறினார் ” என்றான். (நானும் ஒரு ஆசியப் பெண் ஆனாலும், ஐரோப்பியக் கலாச்சாரப் பாலர் பாடசாலை ஆசிரியையாகப் பயிற்றப் பட்டு ஐரோப்பியரோடு வேலை செய்தவள். புலம் பெயர்ந்த பிள்ளைகள் நிலை இது.)

இது தான் கலாச்சார இடிபாடு.

வீட்டில் கூறும் பிற நாட்டுக் கலாச்சாரப் புத்திமதிகள் பிள்ளைகளிடம் வேலை செய்கிறது. ஆனால் அது இங்கு (ஐரோப்பியக் கலாச்சாரத்தில்) வெளியில் எடுபடாது.

ஆணும் பெண்ணும் கலந்து பழகி விளையாட வேண்டும். அவர்கள் கலந்து பழகி விளையாட நாமோ தடை செய்வதில்லை, ஊக்குவிக்கிறோம். இது எமது தொழில்.

புலம் பெயர்ந்த பிள்ளைகளிற்கு கூறும் புத்திமதியின் விதம் பிழையானது என்பது எனது கருத்து ஆணும் பெண்ணும் சேர்வதே கூடாது என்று கூறி  சேரும் ஆவலைப் பெற்றோர் மறைமுகமாகத் தூண்டுகின்றனரோ என்று தோன்றுகிறது.
நன்கு விளக்கமாக இது கூறப் படல் வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பிள்ளைகளிற்கு உங்கள் முழு அன்பை, ஆதரவைக் கொடுப்பதே.

எப்படி வெளியே அடிபடுகிறார்கள் பார்த்தீர்களா?

கிளப், பாடசாலை, ஓய்வு நேரப் பாடசாலைகளில் இதை விட நிலைமைகள் வேறு. டிஸ்கோ, சேர்ந்து பயணங்கள் போய் இரவு தங்குதல் என்று பல. இதில் பயணத்திற்குக் கொண்டு போகும் பொருட்களின் நினைவுப் பட்டியலில் கருத்தடை உறையும் ஒரு பொருளாகப் பாடசாலையால் எழுதப் பட்டிருக்கும்!

இவைகளைப் புரிந்து கொண்டு அணையுங்கள்! இல்லாவிடில் உடைந்து விடுவார்கள் பார்த்தீர்களா!

எவ்விடயமானாலும் பக்குவமாகக் கூறிட வேண்டும்!

கவனியுங்கள்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2004.

(இது இலண்டன் தமிழ் வானொலி ” ஓடி விளையாடு பாப்பா”  நிகழ்வில் 5-9-2004 ல் எழுதி வாசிக்கப்பட்டது.)

(ஒரு மழை நாளில் சைக்கிளோடும் விளையாட்டு…)

 

                                    

Advertisements

32. கவிதை பாருங்கள்

 

இடம் கண்டு நீரோட
தடம் கண்டு வேரோடு!
புடம் போட நீயாடு!

அடம் கொண்டு வாடாது
படம் கண்டு பாராட்ட
திடம் கொண்டு போராடு!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
26-6-2012.

 

                                    

 

                                      

 

31. கவிதை பாருங்கள்.

 

ஆசை, பேராசை தப்போசை.
மாசு கிளப்பும் நப்பாசை.

ஆசை, ஆவல் பொறுமையின்மை
ஆத்திரம் கிளப்பும் கந்தகம்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-6-2012.

 

                                 

241. புத்தம் புது உலகம் வேண்டும்.

 

புத்தம் புது உலகம் வேண்டும்.

 

 

புத்தம் புது உலகம் வேண்டும்.
நித்தம் மகிழ் வாழ்வு வேண்டும்
சித்தம் குளம்பிய பல மனிதருக்கு
உத்தம வாழ்வு சுகப்பட வேண்டும்.

 

பகைவன் நண்பனின்றிப் பகலவன் ஒளிர்வதாய்,
பாகுபாடு இன்றிப் பால்நிலா காய்வதாய்,
பிறர் நலம் கருதும் சிந்தனை வேண்டும்.
சுயநல நோக்குகள் மறைய வேண்டும்.

 

பங்கமுடை பாழான மனித நோக்கு
சிங்கம் சிறு மிருக நோக்கு
எங்கும் இல்லா மனிதம் வேண்டும்.
ஏமாற்றுவோரும், ஏமாறுவோரும் இல்லாதொழிய வேண்டும்.

 

பகட்டு கௌரவம், போலி வாழ்வை
திகட்டாது அணைக்கும் பொய்யான சென்மங்கள்
திருவுளம் மாறப் பாதைகள் பல
திறந்திட வழியொன்று வேண்டும்.

 

பணத் தீயில் குளிர் காயும்
மனம் மதிக்கா மனித உயிரைக்
கனம் பண்ணா தொதுக்க வேண்டும்.
பிணமாகப் பிறர் மதிக்க வேண்டும்.

 

தேனிதழ்ச் செவ்வாய் மங்கையரை
திருமணம் தென்றலாய்த் தழுவிட வேண்டும்.
திருமணம் என்பது தீப்பந்தமானால்
ஒருமனதாக நீர் விட வேண்டும்.

 

மறுமண சுகந்தம் நுகரா மாதரும்
மறுபடி யொருமுறை நினைத்திட வேண்டும்.
மனமகிழ் வாழ்வை மனம் மாறி உலகில்
மறுக்காதேற்கும் புத்துலகாக வேண்டும்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-2-2002

(12-2-2002ல: ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் கவிதை பாடுவோம் நிகழ்வில் ஒலி பரப்பானது.)

 

                                 

 

 

 

 

29. உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது!

 

உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது!

 

படுக்கையில் நித்திரை கொள்வதும், அழுவதும், பால் குடிப்பதுமாக இருந்த பிறந்த குழந்தை, தனது தொடர்புக் கணையாக அழுகையைப் பாவித்த குழந்தை, முதன் முதலில் தனது முகத்துத் தசை நார்கள் விரிந்து,

சிரிக்க ஆரம்பிக்கிறது.

இரண்டாவது தொடர் கணையாகச் சிரிப்பது, புன்முறுவல் பூப்பது அதன் வளர்ச்சியின் ஒரு முன்னேற்றம்.

நீங்களும் கண் தொடர்பை நன்கு பேணிக் கொண்டு குழந்தையுடன் பேசுங்கள். அம்மா அப்பாவாகிய நீங்கள் சிரிக்கச் சிரிக்கக் குழந்தையும் சிரித்துத் தன் திறனை வளர்க்கும்.

மிகச் சிறு குழச்தைக்கு இது பொருந்தும்.

” உம் ” என்று முகத்தைத் தூக்கி வைத்துத் திரிவது பிள்ளைகளைப் பாதிக்கும். சிரியுங்கள். புன்னகையுங்கள் இது வீணாகி விடாது.

பெற்றவரை மாதிரியாக வைத்தே பிள்ளைகள் வளருகிறார்கள். ஆகவே உங்கள் சிரிப்பு என்றுமே வீணாகாது.

சிரிப்பு முக்கியமானது. உங்கள் குழந்தைக்கு அந்தச் சிரிப்புக் கொடுக்கும் செய்தியாவது, நானும் நீயும் ஒன்று, எனக்கு நீ உனக்கு நானனெனும் செய்தியே, நாம் நெருக்கமானவர்கள் என்று கூறுகிறது.

அது போலவே தான் அழுகையும் அமைகிறது. மனிதர்களின் கவனிப்பை  அழுகையும் இழுக்கிறது.

அதுவே குழந்தைக்குத் தேவையானதுமாகிறது.

பல விடயங்களில் மனிதரைக் குரங்குடன் ஒப்பிடுவோம். ஆனால் இந்தச் சிரிப்பில் மட்டும் அது ஒத்து வருவதில்லை. பிறந்த குழந்தையும் சிரிக்கிறது.

அம்மா அப்பாவின் தொடர்பு நழுவுகிறதோ! அதைத் தெரிவிப்பதும் சிரிப்புத் தான்.
ஒரு மாய மந்திரக் கயிறாக மழலைச் சிரிப்பு எம்மை இழுக்கிறது.

எத்தனை கோடியையும் அச் சிரிப்பிற்கு ஈடாகக் கொடுக்கலாம். பிள்ளையை விட்டு விலக மனமின்றி அணைக்கிறோம்.
இந்த அணைப்பையே குழந்தை கேட்கிறது.

ஏன் சிறு குழந்தை சிரிக்கிறது என்றால் நீங்கள் என்னோடு அருகிலேயே இருங்கள் என்று மேல் மனுச் செய்கிறதாம்.

உங்கள் குழந்தையை விளங்கிக் கொள்கிறீர்களா!

சிரியுங்கள்! பல சிறப்பு உருவாகும்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-8-2004.

 

                                     

 

240. காலம்.

 

காலம்.

 

சுற்றும் பூமி தன்னைச் சுற்றிட
ஓற்றை நாட் கணக்குக் கண்டார்.
சுற்றல் சூரியனையும் சேர்த்து என்றாகிட
முற்றுப் பெறுவது ஒரு வருடமென்றார்.
கற்ற உலகறிவாற் கணக்கிட்டாரன்று
நிற்காத காலப் புலர்வு மலர்ந்தது.

கலவன் ஒளி நிரந்தரக் கதிர்.
பாரிய பூமிச் சுற்றலால் இராப்பகல்.
மாரி, கோடை, இலையுதிர் வசந்தம்
பெயரானது அன்று பருவ காலங்களாய்.
இறந்த, நிகழ், எதிர் காலமாய்க்
காலக் கோலப் பாலம் கட்டினர்.

ழலை, இளமை, முதுமை யென்ற
மனித வாழ்வுப் பருவ காலங்கள்.
போர், புயல், அமைதிக் காலம்
தேர், திருவிழா, விரத காலம்
கோளாம் சனி, ராகு, கேதுவென
நாளும் சுளன்று மாறும் காலம்.

காலம் செய்வது கருத்தானவர் செய்யார்.
கால நேரக் கனிவிற்குக் காத்திருத்தல்
காலமறிந்த செயற்பாடு பொன்.
காலத்து மாற்றங்கள் தேவையின் அவசியம்.
இலக்கியம், சரித்திர விவரண எழுத்துகள்
துலக்கமாய் விளங்கும் காலப் பதிவாக.

லி காலம், களிப்புக் காலம்
ஆமாவாசை, பௌர்ணமி, ஆரம்பம், முடிவென
காலம் கணிக்கக் காரணங்கள் பல.
மூலமானது பிறப்பு, இறப்புக் கணிப்பு.
காலத்தே பயிர் செய்து பயனாக்கி
ஞாலத்தில் வாழ்வுக் காலத்தில் நீந்துவோம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-6-2012.

(19-6-2012ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியின் மாலை (19.00-20.00) கவிதை பாடும் நேரத்தில் இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.)

 

 

                                       

 

 

 

 

33. சொற்களிற்கு நோகுமோ!…

 

சொற்களிற்கு நோகுமோ!..

 

னாக்காணும் இரவிலே
நானா உன் கனவிலே!
ஏனோ பதில் தராமலே
வீணே மௌனம் அன்பே

நான் மட்டுமா நெஞ்சில்!
பொன் நிலா ஒளியில்
உன் பதில் வராமல்
தேன் பொழியுமா மனதில்!

து என்ன தேடலோ
புதுப் போதை நாடலோ!
பொதுக் காதல் ஆடலோ
மதுக் காதல் ஊடலோ!

ற்றெடுக்கும் காதல்
காற்றடைத்த பந்தாயென்னை
மாற்றுகிறது சுக சுகமாய்
ஏற்றுகிறது எங்கோ எங்கோ…

துளிர்க்கும் அன்பு நிலை
வெளிச்சக் காதல் நிலை.
கட்டிப் போடும் வலை
வெட்ட முடியாக் கலை.

யிர்ச் சக்தி தருவதால்
பெரும் சக்தி காதல்
அணுசக்தியாய்த் துளைத்தால்
என் சக்தி என்னாவதோ!

ற்களிலே பாதம் நோகும்
சொற்களிற்கு நோகுமென்றோ
நிற்கின்றாய் பதிலின்றி!
அற்புதக் காதல் மாயமிதோ!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-6-2010.

 

 

                                                   
 

 

Previous Older Entries