6. யார் குரலிது!.

cho11-2014 070

யார் குரலிது!

இனிக்கும் நான்குமாத மழலை மொட்டுறவு
இந்திரவில் (வானவில்) ஒரு பூலோக சொர்க்கம்!
இவ்வுலக பந்தத்தால் இறுக்கமாய் உருவாகும்
இணையற்ற புனித நேசப் பிணைப்பு!
அமிர்தத் தாய்ப்பால் சுவைக்கிறான் எம்
அரிய இரண்டாம் பேரன் சோழன்.
சுதந்திரமாய்ச் சுவைத்த வேளை நான்
சுகம் விசாரிக்க உள் நுழைந்தேன்.

என் குரலோசை கேட்டதும் யாரிது!
என்னம்மா அப்பா தவிர்ந்த குரலிது!
எங்கிருந்து வருகிறது! ஆவல்! ஆர்வம்!
பரபரப்பு சுட்டிப்பயல் ஞானக் குழந்தைக்கு!
பால் குடிப்பதை உடன் நிறுத்தினான்.
பக்கமெல்லாம் தலை திருப்பித் தேடினான்.
பார்த்திட முன்னின்றேன் ‘ஹாய்!’ கூறி.
பரவசமாய்ச் சிரித்தென் கரத்துள் வந்தான்.

குழந்தை மழலைப் பிதற்றல் பூவாளிக்
குளிப்பாட்டல், குளிர்கழிச் (ஐஸ்கிறீம்) சுவையமுதம்!
மந்திரப் பழம், இந்திரப் பழம்
சந்திரப் பழமான விநோத இன்பம்!
சடுதியாய் எழுந்தென் குரல் தேடிய
சோழன் வந்துவந்து போனானென் மனதில்!
நாள் முழுதுமவன் லீலா விநோதத்தை
நானுமிவரும் சொல்லிச்சொல்லிக் களித்தோம்! அற்புதம்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-2-2015.

baby-items

5. விரல்களை ஏன் யார் தந்தார்!..!…

cho11.2014 010cho11.2014 013

விரல்களை ஏன் யார் தந்தார்!..!…

கரங்கள் பறவையாய்ச் சிறகு விரித்தது
கால்கள் மிதிவண்டி போல மிதித்தது.

எல்லாம் முதல் மூன்று மாதத்திலே

வல்லவனாகிறேன் முத்திங்கள் முடிய.

 

வில்லாய்க் கரங்களை இன்று இணைப்பேன்

விரல்களைத் தொடுதல், சூப்புதல் சுவை!

விரல்கள் பத்தும் பின்னுதல் புதுமை!

விரல்களையேன் யார் தந்தார்!

 

முயற்சி முழுமையான என் முயற்சி!

முழுநேர வேலை இன்றெனக்கு இது!

மல்லாத்தல் மாறியிப்போ பக்கம் திரும்புகிறேன்.

எல்லா மகத்துவமும் முலைப்பாலுக்கே!…

 

முதல் நத்தார் 2014 சோழனிற்கு

முழு மனதாய் அப்பம்மா எனக்கு

தனது தொப்பி அணிவித்து படமெடுக்க

மனது வைத்தார் அப்பப்பா.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

7-12-2014

baby-items

4. குழந்தைத் தூக்கம்….

smiling_newborn_baby_girl_tenafly_newborn_photographer-ll

குழந்தைகள் நிம்மதியாகத் தூங்கும் போது அமைதியாக அருகிலிருந்து பார்த்து ரசித்த காட்சி கவிதையாக..
நமது இரண்டாவது பேரன் சோழா தூங்கும் போது நான் ரசித்தது.
திடீரென தூக்கத்தில் அழுவினம். நான் கூறுவேன்
உன்னைக் கிணற்றில் போட்டு விடுவேன் என்று தேவதை மிரட்டுகிறாளோ என்று.
வீட்டில் சிரிப்பார்கள்…மருமகள் விழுந்து விழுந்து சிரிப்பா..
அந்த மாதிரி வீரிட்டுக் கத்துவார்கள்.
அது போலச் சிரிப்பதும் அற்புதம் தான்.

அவர்கள் உணர்வுகள், நரம்புகளின் தொழிற்பாடில் கண்சிமிட்டுவது ஒவ்வொரு கண்ணாக மாறி மாறிச் செய்வதும் சிரிப்பும் ஒவ்வொரு பக்கமாகச் விரிப்பதும் அழகு தான்.
இதோ ரசியுங்கள் என்னைப் போல…
படம் கூகிள் படம்.

குழந்தைத் தூக்கம்….

னவெனும் மாயா உலகில்
தினமும் பாதி நாளில்
மனமாரத் துயின்று உலவுகிறேன்.
எனது நித்திரை யுலகின்
கனவுத் தேவதையே வருவாய்!
உனதும் எனதுமான உலகிது
கண்சிமிட்டும் விண்மீன் பூங்காவில்
எண்ணிக் கொண்டு உலாவுவோம்!

ண்சிமிட்டி விளையாடுவோம்! என்னருகாய்
சின்ன தேவதையே வா!
முதலொரு கண்சிமிட்டு! அப்படியே
மாறி மறு கண்சிமிட்டுவோம்!
ம்….இனிப் போதும்!
சிரிப்புகள்; சிந்துவோம்!…. வா!
சிரிப்போம்!… சத்தமிடாமல் சிரிப்போம்!
ம்ம்….போதும்!…போதும்!

பூந்தோட்டம் போவோமா!..வா!…
கடற்கரை செல்வோமா!…ஏய்!
என்னைத் தனியே விட்டு
எங்கே போகிறாய்! ஏன்
என்னை அழ வைக்கிறாய்!
உன் விளையாட்டு இதுதானா!
நான் உன்னோடு கோபம்!
போ! ஓடிப்போ!….அம்மா!……(அழுகை)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-11-2014

t85402-blue-spk-half-20p

3. சிறு மழலை வினையூக்கம்.

chola-1 086

சிறு குழந்தைகள் ஒரு மாதக் குழந்தை பசிக்கு அழும்.
சிறுநீரால் நனைந்தவுடன் அழும். தூக்கம் வர அழும்.
உயிரெடுக்கும் அழுகை…ஏதோ பூச்சி கடித்தது போல.
இந்தத் தேவைகள் நிறைவடைய அமைதிச் சிரிப்பு. ஆனந்த விளையாட்டு.
மூத்த பேரன் வெற்றி வளர்ந்து வேற மாதிரி விளையாட்டு. இப்போது இரண்டாவது பேரன் சோழாவின் ரசனை இது.

சிறு மழலை வினையூக்கம்.

உங்கு உண்ணவும்
உச்சா போனாலும்
கண்ணயரவும் காட்டும்
கடிகாரம் அழுகையழுகை.
உயிரெடுக்கும் அழுகை- (அதன் அருத்தம்)
உடனே செய்!
உரியதைச்செய்!
உனக்குத் திருப்புவேனிதை!

”..சின்ன மூக்கு!
சின்னக் கைகள்!..”.
சொன்னார் வெற்றி.
வெற்றிரசனையொரு பக்கம்
சோழா ரசிப்பின்று.
இறுக்கியணைத்தால் மூடுமிமை.
இடைப்பஞ்சு அகற்ற
இதமான விளையாட்டு.

ஒருமாத நிறைவு
அருமை முறுவல்.
மன்மதச் சிரிப்பு!
என்ன விந்தை!
சின்னத் தேவதையழைப்போ!
என்ன காதலது!
மின்னுமுலக இணைப்பன்றோ
சின்ன மழலை வினையூக்கம்!

பா ஆக்கம் பா வானதி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

30-10-2014

baby-items

2. உயிரோவியம்

viral

உயிரோவியம்

உயிர்த் துடிப்புடை உயர் எழிலோவியம்.
உலக அழுக்குப் பாசி படராத
உன்னத உணர்வசையும் இசை ராகம்.
உலக நிலாமுற்றத்தி லுறவாட உகந்ததாய்
உதிரும் கர்ப்பநிலை மென் சருமம்
உரிதல், வளர்தல் வனப்புடை பூரிப்பு.
உறக்கம் உங்கு உண்ணுதல் தன்வினையாகி
உயிர்ப்புடை புத்தெழில் தருதல் விந்தை!

ஓலி நர்த்தனங்களை இன் கவிதையாக
பொலிவு உன்னிப்பாய் உள்ளெடுக்கும் நளினம்!
அம்மா அப்பா குரல் பரிச்சயம்
அம்மம்மா!..இது என்ன புதியதென்று
செம்மை அவதானம் எம் குரலொலியால்.
ஓவ்வொரு அசைவும் மென்னலையாக மனதைக்
கவ்வி சாரலாய், நீரோடையாய் உணர்வை
வவ்வுதல் (பற்றுதல்) உன்னத மழலை இன்பம்.

பொத்திய கரங்களுள் போதிய தன்னம்பிக்கை
மொத்தமாய்ப் பொதிந்தது மறைவான செய்தியோ!
மொத்த இயக்கங்கள் முழுதாக முதிர்வடைய
வித்தைகள் காட்டுவேன் வியந்திடச் செய்வேன்
சித்திகள் பெற்றிடச் சிறப்பாய் முயலுவேனென
முத்துக்களாய்ச் சிந்தும் தெய்வீக மொழியோ!
உத்தமப் பேரர்கள் சோழா, வெற்றியும்
வித்தக உலகில் வெற்றிகள் குவிக்கட்டும்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
11-10-2014

643630yr2vtei28b

சோழா 1

Birthday-Border-6

சோழா.

தோழனாய் உடன்பிறப்பாய் வெற்றிக்கு
சோழா அன்புத் தம்பி
வேழம் அருந்திய இன்பம்
வாழ்த்துடையெம் இரண்டாவது பேரன்.

எங்கள் மகனின் இரண்டாவது
தங்க மகன் சோழா.
மங்களமாய் சாந்தி பெற்ற
சிங்கன் வெற்றிச் சோழா.

பரந்து விரிந்த சோழ
இராச்சியம் பதினாறு நூற்றாண்டு.
இராஐராஐ சோழன், இராஜேந்திர
சோழனல்ல வெற்றித் தம்பியிவன்.

மும்முடிச் சோழனல்ல
எம் பேரன் சோழா.
சம்பத்துகள் நிறைந்து சுகத்தோடு
கம்பீரமாய் வாழ்க! வாழ்க!

( வேழம் . கரும்பு. சம்பத்து – செல்வம், பொன்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-9-2014

images 2356