கண்ணதாசன் சான்றிதழ்-1 – 2

13558928_1724978974438068_4317683988860908749_o

 

 

சுடாத சூரியன்

மழை மேகம் கருமேகம்
குழை மூடியதாய் சூரியன்
அழைத்தாலும் வரான் ஒளிந்து
சுடாமல் இருந்தான் உள்ளே

***

மேற்கில் இங்கு அவன்
மேலாக மின்னுவான் வெப்பமே
அற்ற சுடாத சூரியனே
நம்பினால் நம்புங்கள் மெய்யே.

***

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

*****************************************

13559140_1725807611021871_764913633982672311_o

 

உழைப்பே உயர்வு.

***

மாய்ந்து உழைப்பவனிற்கு மதிப்புடை
வாய்ப்பு வாசலில் கோலமிடும்
பிறரை ஏய்த்து சோம்பலாக வாழ்பவன்
நல்லினிய வாய்ப்பைச் சாய்த்து மாய்வான்.
உழைப்ப இல்லாதவனை விரக்தியாம்
மனித மனத்தொல்லை விழுங்கும்.
வெறுப்பு, ஏமாற்றம் இயலாமை
கருப்புப் போர்வையிட்டுத் துரத்தும்.

***

மனித மனச் சூரியன் உழைப்பு!
தன் காலில் நிற்கும் ஆனந்த
ஒளி நிம்மதிக் கடற்காற்றாய்
வீட்டை நிறைக்குமொரு இன்ப வானவில்.
சமூக அந்தஸ்து நன்மதிப்பு
உழைப்பால் சந்தணமாய் மணம் வீசும்.
படிப்பால் உடலுழைப்பால் உயர்வு உறுதி.
உறுதியான மந்திரக்கோல் உழைப்பு.

***

பசியின்மை, பாழ் தனிமை வறுமையெனும்
கொடும் தூசிகள் உழைப்பவனை நெருங்காது.
உழைப்பின்றி உயிரை மாய்க்கும் உன்னத
இளைஞர் வேலை வாய்ப்பெனும் விடத்தால்
அழிவது வேதனை. சுயதொழில் முன்னேற்றம்
பயமற்ற நிறைவு தரும் சஞ்சீவி. கையிலெடுங்கள்!
நம்பிக்கை, துணிவு முயற்சியே
உலகவாழ்வின் உன்னத செங்கோல்!

***

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

silence

44. 49 வது திருமணநாள்

49th_wedding_anniversary_ruby_red_damask_w40hj_dinner_plate-rdbecdf939f6745049ca765f6cac494ed_z77n5_324

 

Jeyam Thangarajah

 

13731573_1049494541794177_7082070898194873549_n

மனம் நிறைந்த நன்றி சகோதரா.

_________________________________

 

திருமணநாள்
வாழ்த்துகள்

13754187_1760792864193003_8180616342907848497_n

பயணங்கள் தொடரட்டும் இணைந்து
பல்லாண்டு

பாவுக்கொரு பாவரசி பைந்தமிழ் சொல்லரசி
நாமணக்கும் பாக்கள் நாளும் தொடுக்கின்ற
வேதநாயகி வித்தகி மாயீழ மகராசி
தேகம்செழித் துவளமோடு இருவரும் வாழ்கவாழி

உறவுகள் நண்பர்கள்
வாழ்த்துதலில்
இணைந்து

இராகி

ஐயா மிக மிக மகிழ்ச்சி
மிக மிக நன்றி…..
இறையாசி நிறையட்டும்.

_______________________

வாழ்க பல்லாண்டு

இல்லறம் என்னும் நல்லறத்தில்
இணையோடு துணையாக பிணைந்து
இனிதான மணவாழ்வை சுகித்து
இறும்பூது கொள்கின்ற வேளை

கரும்பாக சுவைத்திட்டா நாட்கள்
கனியாகக் கிடைத்திட்ட மக்கள்
குழுமிடும் இன்பத்தின் வேளை
குவலயத்தின் உயர்வான சோலை

வாழ்கின்ற நாட்டிற்கும் வனப்பு
வளர்த்திட்ட தமிழிற்கும் சிறப்பு
வரலாற்றில் பதித்திட்ட களிப்பு
வாயார எந்நாளும் சிரிப்பு

வருகின்ற நாட்களிலும் நிறைத்து
வாழ்ந்திட வேண்டும் சிறந்து
வாயாரமனதார வாழ்த்தினை நிறைத்து
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு

கீத்தா பரமானந்தன்
21-07-16

மிக மிக மகிழ்ச்சி
மிக மிக நன்றி…..அன்பு சகோதரி   கீதா.
இறையாசி நிறையட்டும்.

 

lines-multi-color-483451

 

 

27. “கல்வித் தந்தை காமராசர்”

13690700_1731908173745148_5575063480280440550_n

 

கவியுலகப் பூஞ்சோலையின் 15-07-16 தினபோட்டிக் கவிதை ‪#‎கல்வித்‬தந்தை காமராசர்#—- இன்றைய போட்டி கவிதையின் வெற்றியாளர் கவிஞர்_# வேதா. இலங்காதிலகம்.# அவர்களுக்கும் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

சிறப்புச்சான்றிதழ் “கல்வித் தந்தை காமராசர்”

எளிமை நேர்மைக்குப் பெயரேந்திய ஏந்தல்.
ஏழைக்குப் பாடசாலை தந்த உன்னதர்.
ஏழைப் பங்காளனாம் விருதுநகர்காரர்.
சிவகாமி அம்மையார் குமாரசாமி நாடார் வாரிசு.

பெற்றோரிட்ட பெயர் காமாட்சி. அம்மாவின்
செல்லப் பெயர் ராசா. இரண்டும்
இணைத்து ஈற்றில் காமராசு ஆனது.
கல்வி கற்றிட வசதியில்லாச் சூழல்.

துணிக்கடை வேலை. தேசத் தலைவர்கள்
பேச்சுகளால் அரசியல் சுதந்திர போராட்டத்தில்
ஆர்வம். பதினாறு வயதில் காங்கிரசிலிணைவு.
போராட்டம் சிறைச்சாலை வாழ்வாய் வளர்ந்தது.

தேர்தலில் வென்றார். உன்னத நிலைக்குயர்ந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் காமராசர் காங்கிரசானது.
ஓன்பது ஆண்டு தமிழக முதல்வராயிருந்தார்.
பசிக்குப் பகலுணவு தந்தார் படிக்காதமேதை.

கதராடையுடன் போராடினார் கருப்பு காந்தியானர்.
தொழிற் பேட்டைகள் திறந்தார். பல
நீரணைகள் கட்டினார். விவசாயம் செழித்தது.
தமிழக ஆட்சியைப் பொற்காலம் ஆக்கினார்.

ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தைக்
கைவிட்டார் தென்னாட்டு காந்தியெனவும்
அழைக்கப் பட்ட கர்மவீரர் காரியக்காரர்.
பெருந்தலைவர் என்றும் அழைக்கப் பட்டார்.

இறந்தும் பாரதரத்னா விருது பெற்றார்.
மறத்தமிழனாக வரலாற்று ஏடுகளில் இவர்.
மதுரைப் பல்கலைக்கழகம் மதுரைக் காமராசர்
பல்கலைக்கழகமானது. கடற்கரையில் அவர் சிலை
இன்னும் பல……

வேதா. இலங்காதிலகம்.     டென்மார்க்

காமராசர்

முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராசர்
ஒன்புது ஆண்டுகள் அரசாண்டார். கருப்புகாந்தி
தென்னாட்டு காந்தி படிக்காத மேதை
வான்முட்டும் எளிமையான பச்சைத் தமிழர்.
இலவசக் கல்வி மதிய உணவீந்தார்.
உப்புச் சத்தியாக்கிரகம், சிறை கலந்த வாழ்வு
தரித்திரனாய் விருதுநகர்வீரர் தரணியாண்டார்.
ஆறுவரை படித்து ஆலைகள், அணைகள் செய்தார்.

2016

NADARS (3)

454. கொடுமை

 

IndiaTvaf999d_beat

 

கொடுமை

கிழிந்த ஆடையூடாகத் தெரியும் உடல்
பழிக்கும் பார்வை தெளிக்கும் காமம்
விழித்துப் பல்லிளிக்கும் சதை வெறி
முழிக்கும் சுயபசிக் கொடுமை வறுமை.
***
கிள்ளும் பசி தீர்க்க சில்லறை
அள்ளி வாங்கிக் கண்டவன் படுக்கை.
கொள்ளையாகும் இளமையின் வறுமை கொடுமை
பிள்ளைகள் பசியால் துடித்தல் கொடுமை
***
உடல் பலமிழக்க கொடிய நோய்கள்
கடலாய் உள்ளே புகுந்து வதைக்கும்.
கொள்ளைப் பிள்ளைகள் கருப்பையில் அழியும்
சிசு மரணக் கொலைகள் ஏராளம்.
***
பசியால் திருட்டு, பொய், சூது,
போதை, மதுவாம் குற்றங்கள் பெருகுதல்
கொடுமை! தீப்பெட்டியாய் அடுக்கு வீடுகள்
தொழிற்சாலைகள் ஏன் வறுமையை ஒளிக்காது!
***
பாலியல் என்னவென்று அறியாத குழந்தைக்கு
பாலியல் கொடுமை ஆறு வயதிலாம்!
பெரியவரே சிறுவருக்கு வீட்டில் இழைக்கும்
மிருகத்திற்கு நிகரான பாலியல் கொடுமை!
***
மனிதப் பாதுகாவலரே குழந்தைகள் பெண்களை
மானபங்கப் படுத்தும் கொடுமை வேலியே
பயிரை மேயும் சீரழிந்த கொடுமை
மனிதமிழந்த மனிதனின் சுயநலமோ இது!
***
ஒன்றா இரண்டா! சாதி வெறி
கௌரவக் கொலை, வரதட்சணை அதனால்
தட்சணை கேட்டல், பெற்றவர் கண்ணீர்,
மணமாகாத முதிர்கன்னிகளாகத் தொடரும் கொடுமைகள்.
***
கொடுமையாம் அநீதி, பாவம், தீமை
முரட்டுத் தன்மை, மனக்கோட்டம், வளைவென
கொடுமையே உலகை ஆள்கிறதோ! என்று
கொள்ளி வைப்பது எப்போது இக் கொடுமைக்கு!
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-7-20116
Unavngivet

4. கவியரங்கம் 4வது எத்தனம்

op

 

4-6-2016

 21வது கவியரங்கம் 4வது எத்தனம்

தமிழ் வணக்கம்.
திராவிட மொழிக் குடும்பத்து முதல் மொழியே
செம்மொழியே! உலகின் பதினெட்டாம் இடத்து மொழியே
மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபு கொண்ட மொழியே பணிவான வணக்கம்! என்னோடு கவியரங்க மொழி பேசத் துணையாகுவாய்.
கவியரங்கத் தலைமை வணக்கம்!
திருமதி நிர்மலா கிருஷ்ணமுர்த்தியின் தகைமைகளைப் போற்றி அவரது தலைமைக்கு நிறை வணக்கம் இனிய வாழ்த்துகளுடன் அன்பு நன்றியும். அருமையான தலைமையுரைக் கவிதை. மிக ரசித்தேன் நன்றி.
சபை வணக்கம்
நம் வித்தாரங்களைப் பொறுமையுடன் கேட்க ஆவலாகக் காத்திருக்கும் பல் துறை வித்தகராம் சபையோரே அன்பு வணக்கம்
நிலாமுற்ற நிர்வாகமே குழுவினரே உங்களிற்கும் வணக்கம்.
வசந்தமாக வரும் எனது துணைத் தலைப்பு வசந்த காலப்
பள்ளிக்காலம்.
——————————————–
மண்ணில் அகரமெழுதி, மனப்பாடம் செய்து
எண்ணி விரல்களோடு கணக்கு கலைகளும்
வண்ணக் கைவேலைகளோடு பழகிய பசுமைப்
பள்ளிக் காலமெனக்கு மூன்றரையிலிருந்து பதினாறுவரை.
திருக்குறள் மனனம் பேச்சுப் போட்டி
திருவுடை நடனம் சங்கீதம் விளையாட்டு
பெருமையுடன் வாழவைத்த பள்ளி இனிமை.
வருவதினிப் புலம் பெயர்ந்த பள்ளி.
நாற்பதகவையில் வேற்று மொழக்p கலாச்சாரம்
ஏற்றது டெனிஸ் மொழிப் பள்ளி.
முற்றாக மூன்று வருடங்கள் முடிய
பற்றுடன் புகுந்தது செமினாறியப் பள்ளி.
பாலர் பராமரிப்பு – நர்சரி ஆசிரியர்
பயின்றது மூன்று வருடங்கள் வியப்பில்!
பாலகாலமல்ல! திக்குத் தெரியாத காட்டில்.
புதிது படிப்பு, பயிற்சியார்வம் அத்தனையும்!
சுயமான சிந்தனை, கணிப்பு மாறுபட்டது.
சுகமாய் கட்டுரையானாலும் வேற்றுமையாய் தன்
சுயகோண விரிப்பு வாய்மூலம் – அறியாவுலகு
விரிந்தது, அருமை, அனுபவம் புதிது.
இன்னும் சொல்லலாம், நேரமில்லை, வரிக் கட்டுப்பாடு.
நன்றி வரிகள்.
—————————————-
அரிய இவ்வாய்ப்;பிற்கு, பொறுமையாய் கேட்ட அவையோருக்கு, நிர்வாகத்திற்கு, தலைமைக்கு அனைவருக்கும் மிக்க நன்றி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
4-6-20116.
purtyflwrsbr

453. தன்மானம்

July  2nd place

 

தன் மீதுடைய தன் மதிப்பு
தன்மானம் சுய கௌரவம் சுயமதிப்பு.
தன்மான நெஞ்சமென்றும் தாழ்விலா வானம்.
தன்னகத்து ஆளுமைத் தன்னம்பிக்கையே பலம்.
***
மனிதனோடொட்டிப் பிறந்தது தன்மான உணர்வு.
தனித்துவமானது மதிப்பானவுயிருக்குச் சமமான உணர்வு
இனிதானது இறுதி வரை உயிர்த்தெழுமுணர்வு.
இன்றியமையாத சிறப்புக் கொண்டது தன்மானம்.
***
சுயஅறிவு உயர்த்தல் சுய உழைப்பும்
சுயமதிப்பு பெருக்கும் சிறந்த சன்மானம்.
சுயமானம் பிறர் அனுதாபங்களை நிராகரிக்கும்.
தன்மானம் தீய செயல்களால் சுவீகரிக்கப்படும்.
***
மனிதனின் தன்மானம் பெறுமானம் மிக்கதென்று
மக்கா நகரப் புனிதத்திற்கு நிகராமென்று
மதித்து உவமித்தார் நபிகள் நாயகமன்று.
மரியாதையாய் தன்மானம் காத்து வாழ்வதுயர்வு.
***
தலையிலிருந்து விழுந்த மயிருக்கு ஒப்பாகிறார்
தன்மானம் இழப்பவர் என்கிறார் திருவள்ளுவர்.
தம் மானத்திற்காய் ஆதாம் ஏவாளர்
நாணம்  காத்து சுவனத்து இலையாடையணிந்தார்.
***
இனமானம் மொழியும் ஒருவன் தன்மானமே
தன்மானம் இல்லாதோன் நிலை நிர்வாணமே.
அவமானம் கொள்ள விரும்பாதது தன்மானமே.
தன்மானத்தனுக்கு வெற்றிப் படி துரோகமே.
***
வறியவன் தன்மானம் வெகு உயரம்
வரையறையற்ற இழப்புகளோடு பிணைந்த துயரம்.
வயிற்றுப் பிழைப்பாலிழக்கிறாள் பரத்தை தன்மானம்.
மதுவிற்கும் இலவசத்திற்கும் தன்மானம் அடமானம்.
***
தன்மானமிழந்து பிறரை வணங்குதல் அவமானம்.
தன்னை மதிக்காதவன் பின்னாலேகுதல் அவமானம்.
தன்மானம் விலை போனால் தலைமறைவாகிறார்.
தன்மானம் மலையேறினால் தற்கொலை செய்கிறார்.
***
தம் மதம் மாறுதல் பெருமவமானம்.
தாய் மதம் பேணல் அபிமானம்.
தாரள செல்வம் சேருகையில் பணிவும்
வறுமையில் பணியாமையும் தன்மான உணர்வு.
***
puthu