6. கவிதைக்குப் பொய்யழகு.1

விதைக்குப் பொய்யழகு.

ஆதிகாலப் புராணங்கள் காவியங்கள்,
மனித வாழ்க்கை முறை, போர் முறை, சில அறங்கள், கூட்டு வாழ்வு முறை ஆகியவற்றை எடுத்துக் கூறவே காவியங்களாகப் பரிணாமம் பெற்றது.
 

பழைய கதைகளையே இன்னும் புரட்டுகிறோம். புதியவைளைப் பேசுங்களேன் என்கிறீர்களா? பேசலாம்.. கோவலன் மாதவிக்குப் பதிலாக கிளின்ரன் மோனிக்கா, பின்லாடன் பற்றியெல்லாம் பேசலாம்.

யானைப் பாதங்கள் போன்ற காற்சட்டை புதிய பாணியாக வர, காலோடு இறுக்கமான காற்சட்டைகளை இளையவர்கள் ‘சீ! இது சுத்த கர்நாடகம்! ‘ என்று தூர வீசுகின்றனர். பின்பு ஐந்து, பத்து வருடங்கள் செல்ல, காலோடு ஒட்டிய காற்சட்டை நவீனமாக வர, யானைப் பாதம் கொண்ட காற்சட்டையை ‘ சீ! இது சுத்த கர்நாடகம்!’..என்று தூரத்தே தள்ளுகிறோம்.

 

இது போலவே வாழ்வு முறைகளையும் அவரவர் மனோ பாவப்படி ஒதுக்குவதும், எடுப்பதும், பழிப்பதும், புகழ்வதுமாக உள்ளோம்.

எல்லாக் கருத்துக்கும் வரவேற்புக் கொடுத்து, விரும்பியவர்கள் விரும்பியதைப் பின் பற்றும் சுதந்திரம் மேற்கு நாட்டவர் மனநிலை. எம்மவர்கள் இது ஏன், அது ஏன் என்று இடித்துக் கூறுவார்கள். இது தான் பேதம்.

கண்ணுக்கு மையழகு! கவிதைக்குப் பொய்யழகு!

வால்மீகி இராமாயணம், கம்பராமாயாணம் என இரண்டு வகை. இது தவிர இந்தியில் துளசிதாசர் இயற்றினார். இன்னும் பலர் எழுதியிருப்பார்கள். வால்மீகியினது ஆதிகாவியம். கம்பர் தன் கற்பனைத் திறமையால் புதுக் காப்பியமாக வரைந்துள்ளார்.

வாலிக்கு அங்கதன் என்ற மகன் பற்றி வால்மீகி சொல்லாதவற்றைக் கம்பர் புதிதாகப் படைத்துள்ளார். வாலி இறக்கும் போது மகன் அங்கதனை இராமரிடம் ஒப்படைத்து அவனைக் காத்து அருள் புரியும்படி கேட்கிறான். அவனை அடைக்கலமாக ஏற்றதற்கு அடையாளமாக தன் உடைவாளை ராமர் அங்கதனிடம் கொடுக்கிறார். அதிலிருந்து இராமன் பக்கத்தில் உடைவாளுடன் நிற்பதை அங்கதன் தன் கடமையாகக் கொள்கிறான். முடிசூட்டு விழாவிலும் ‘ அங்கதன் உடைவாள் ஏந்த ‘ என்று கம்பன் பாடியுள்ளார். வாலி இறக்க அவன் மனைவி தாரையை சுக்கிரீவன் மனைவியாக ஆக்கினான், என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறது.

கம்பரோ தனது கதையில் அவளை சிறப்புப் பெண்ணாக்கி, சுக்கிரீவனைப் பிழை விடாதவான் ஆக்குகிறார். தாரை பூச்சூடாது மங்கல ஆபரணம் அணியாது சோகமாய் விதவை வாழ்வு வாழ்வதாகக் கூறிப் பெண் குலம் தாரையைப் போற்றும் வண்ணம் எழுதியுள்ளார். கவிதைக்குப் பொய்யழகான இன்னும் பல பொய்களை எழுதலாம் நேரம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

கம்பர்.

 

ஆக்கம் வேதா இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-11-2005.

In Anthimaalai web site:-       http://anthimaalai.blogspot.com/2011/08/1_27.html

 

                          

Advertisements

5. தமிழ் இலக்கிய வரலாறு பற்றி சில….(படித்ததில் பிடித்தது.)

 

தமிழ் இலக்கிய வரலாறு பற்றி சில….(படித்ததில் பிடித்தது.)

ந்திய நாடு முழுதும் மிகப் பழைய காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி (proto Dravidian) என்று கூறுவர்.

ட கிழக்குக் கணவாய் வழியாகத் துரானியரும், வட மேற்குக் கணவாய் வழியாக ஆரியரும் வந்து வட இந்தியாவில் இருந்த மக்களோடு கலந்து ஒன்றானார்கள். அப்போதும் இந்தப் பழந்திராவிட மொழி பல வகையான மாறுதடைந்தது.

பிராகிருதம் பாளி முதலிய மொழிகள் தோன்றின. ஆனாலும் சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன. அந்த மொழிகளைப் பேசிய மக்கள் மற்றவர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்த காரணத்தால் நெடுங்காலமாக அவை திராவிட மொழிகளாகவே

ங்கங்கே நின்று விட்டன. இப்படிப் பல வகை மொழிகள் இன்றும் உள்ளன.
இந்தியாவின் வட மேற்கே பலுசிஸ்தானத்தில் ஒரு சாரார் பேசும் மொழி பிரகூய்(Brahui  ). இந்த மொழியில் திராவிட மொழிக் கூறுகள் மிகவாக உள்ளன. இரட்(இரண்டு) முசிட்(மூன்று) முதலான எண் பெயர்களும், மூன்று இடப் பெயர்கள்(personal pronouns) வாக்கிய அமைப்பு (syntax ) வேறு சில இயல்புகளும் பிரகூய் மொழியில் இன்னும் தமிழ் போல இருப்பதைக் கண்டு பல அறிஞர் வியப்படைகின்றனர்.

ட இந்திய மொழிகள் பலவற்றிற்கும், தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில்(syntax) இன்று வரை ஒற்றுமை இருந்த வருவதற்குக் காரணம், மிகப் பழைய கால ஒருமைப்பாடேயாகும ஆரியர்கள் பலுசிஸ்தான் வழியாக வந்து இந்தியாவில் குடிபுகுந்த பிறகும் பிரகூய் மொழி தனித்தே இருந்து வந்தது.

பிராகிருதம் பாலியின் செல்வாக்கு அதிகரிக்க, ஆட்சி  வேறுபாடு, மலை ஆறுகளின்  எல்லை வரையறைகளால் பழைய திராவிட  மொழிப் பேச்சு வழக்கு இடத்துக்கிடம் மாறுபட்டது, வேற்றுமை வளர்ந்தது. இதனால் தெற்கே இருந்தவர் பேசிய மொழி தமிழ் என வேறுபட்டது. திருப்பதி மலைக்கு வடக்கே வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தெலுங்கு என வந்தது. மைசூர்ப் பகுதி மக்கள் பேசிய திராவிட மொழி கன்னடம் என்றானது. தென் மேற்கே கேரளத்தார் இருந்த இடத்து மொழி மலையாளம் என வளர்ந்தது.

ந்த நான்கு திராவிடமொழிகளுக்குள் இன்னும் தெளிவான ஒற்றுமைக் கூறுகள் உண்டு. ஏறக்குறைய ஐந்தாயிரம் சொற்களும், இன்னும் இலக்கணக் கூறுகள் பலவும் ஒன்றாக உள்ளன. இவை நான்கு மொழிகளுக்குள்  நெடுங்காலமாக இலக்கிய வளர்ச்சி பெற்று வளர்ந்த மொழி தமிழ். இந்த மொழிகளைக் குறிக்கும்  திராவிடம் எனும் சொல் பிற்காலத்திலேயே ஏற்பட்டது. இது தமிழ் என்ற சொல்லின் திரிபே ஆகும்.

மிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட – திரபிட –திரவிட இப்படித் திரிந்துபட்டது ஆகும்.
திராவிடர் வட மேற்குக் கணவாய் முதல் வங்காளம் வரை பரவி பழந்திராவிட மொழி பேசினார்கள். ஒரு காலத்தில் கன்னடத்தைக் கருநாட்டுத் தமிழ் என்றும், துளுமொழியைத் துளு நாட்டுத் தமிழ் என்றும், மலையாளத்தை மலை நாட்டுத் தமிழ் என்றும் சிலர் குறிப்பிட்டதுண்டு.  ஆனால் இன்று திராவிடம் என்பது அந்த மொழிகள் தனித் தனியாகப் பிரிவதற்க முன் இருந்த பழைய நிலையைக் குறிப்பதற்கும், இவை ஒரு இனம் என்று கூறி அவ்வினத்தைக் குறிப்பதற்குமுரிய சொல்லாகப் பயன் படுகிறது.

வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
25-11-2005.

( டில்லி சாகித்திய அகதாமி வேண்டுகோளின் படி பேராசிரியர் டாகடர் மு. வரதராசனார் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூலில் இருந்து எடுத்தது.)

 

10. அனுபவக் குறிப்பு.

  

 

னுபவக் குறிப்பு.

 

பிள்ளைகள் பொருட்கள் போல வாகனங்களில் ஏற்றி இறக்கப்படுவதிலும் பார்க்க, அவர்களை நடக்க, துவிச்சக்கர வண்டி ஓட்ட விடவேண்டும். தமது கால்களை, உடலைப் பாவிக்க அனுமதிக்க வேண்டும்.

ஒரு தாய்க்கு ஒரு கைக் குழந்தையும், நடக்கக் கஷ்டப்படும் ஒரு பிள்ளையும் இருந்தால், பிள்ளை வைத்துத் தள்ளும் வண்டிலில் சிறு குழந்தையையும், நடக்கக் கஷ்டப்படும் முதற் பிள்ளைக்கு, நின்று கொண்டு போக, ஒரு தொங்கும் வண்டியும் தள்ளு வண்டிலில் இணைத்து, பெற்றோர் அதைத் தள்ளிக் கொண்டு போகிறார்கள்.
 

இது மிகவும் ஆரோக்கியமற்றது. சுகாதாரமற்றது. நடக்கும் குழந்தையை நாம் முடமாக்குகிறோம்.

இப்படிப் பொம்மையாக வளர்க்கும், வளரும்  பிள்ளைகள், தமது பதின்ம வயதில் (teenage ல்) இருதய நோயோ, 2வது நிலை நீரிழிவு நோயோ, வயதுக்கு மீறிய எடை பெறும் நிலையோ உருவாகிறது.

சுறு சுறுப்பின்றி இருப்பதற்கு அதிகரித்த எடையும், தொலைக்காட்சி, கணனி போன்ற அதீத பாவனையும் இன்னொரு காரணமாகிறது. இதே நேரம் சுகாதாரமற்ற கொறிக்கும் உணவும் ஆரோக்கியமற்றதாகிறது.

உதாரணமாக:- கோலா, சிப்ஸ், கொழுப்புகள் கொண்ட, கலோறிகள் அற்ற அதிவேக உணவுகள் (ஃபாஸ்ட் ஃபூட்fast food) ஆகும்.

உடல் பருமனான பிள்ளைக்கு சமூகத்திலும் மதிப்புக் குறைந்து காணப்படும். இவர்கள் பிறரால் வித்தியாசமாக நோக்கப்படுகிறார்கள். அதனால் பெற்றவர் முதலில் சுறு சுறுப்பு, மகிழ்வானவராகி, பிள்ளையையும் அது நெருங்கச் செய்ய வேண்டும்.

எம்மைப் பார்த்தே எமது பிள்ளைகள் அனைத்தையும் பழகுகிறார்கள். அதற்கு நாம் சிறந்த முன் மாதிரியாக வேண்டும்.

நீங்கள் விளையாட்டு வீரர்களாகத் தேவையில்லை. வீட்டில் உடற் பயிற்சி செய்தாலே பிள்ளைகளுக்கு அது தொற்றிவிடும்.

அசையுங்கள் உங்கள் உடலை! அசையுங்கள் உங்கள் அங்கங்களை அசையுங்கள்! அதைப் பிள்ளையும் பார்த்துச் செய்திடும்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-4-2006.

 

              

Advertisements

(நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (26.) இறுதி அங்கம்.

(நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (26.) இறுதி அங்கம்.

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்தது)

வெப்பமான காலநிலையில் பிறந்து, வளர்ந்து, இங்கு வந்து 25 வருடங்கள் இந்தக் குளிரான காலநிலைக்குப்  பழக்கமாகினோம்.                                                         

ரோமாபுரியின் வெப்பமான காலநிலை என் கணவருக்கு ஒத்து வரவில்லை என்பது எனக்குத் தெரிந்தது. எதையும் வாய்விட்டுக் கூறி மற்றவர்கள் உட்பட என்னையும் தொல்லைப் படுத்தும் ரகமானவர் அல்ல என் கணவர். அதற்கேற்றபடி நான் புரிந்து நடந்து கொள்வேன். எனது கணவர் கஷ்டப்படுவதும் வேர்த்து விறு விறுப்பதையும் பார்த்ததும், நாமிருவரும் மாறி மாறி வாகனம் ஓடி சுகமாக, பத்திரமாக டென்மார்க் வரவேண்டும் என்ற எண்ணம் எனக்;கு மேலோங்கியது. அதுவும் நீண்ட தூர வாகன ஓட்டம்.                                           

மது பயணத் திட்டத்தின் அடுத்த குறி இத்தாலி நாப்போலியாக இருந்தது. அங்கு சென்று கப்றி எனும் தீவுக்கும் செல்வது திட்டமாக இருந்தது.    போகமுடியாத ஏக்கம் தந்த கப்றி தீவின் அழகைப்பாருங்கள்.

          

நாப்போலி போகும் எண்ணத்தைப் பலவந்தமாகக் கைவிடப் பண்ணினேன். கணவர் விருப்பம் 50க்கு 50 ஆகத் தான் இருந்தார். ரோமில் அன்று இரவு தங்கி, காலையில் பயணித்து ஒரு இரவை வீணாக்காது அன்று மாலையே டென்மார்க் திரும்புவோம் என்று, வத்திக்கான் திருத்தலமருகில் தங்கிய ஸ்ரார் ஹோட்டலைக் காலி பண்ணினோம். உடனேயே டென்மார்க் புறப்படும் பயணத்தைத் தொடங்கினோம்.

முடிந்தளவு வாகனம் ஓடியபடி தெருவோர வாடி வீடுகளாகப் பார்த்தபடி சென்றோம். தெருவோரமாக வசதியாக வாடிவீடு வர, உள்ளே சென்று கேட்டோம். இடம் இருந்தது. விலை மலிவாகவும்  இருந்தது ஆச்சரியம். அங்கு இரவு தங்கி நல்ல தூக்கம் கொண்டோம். காலையுணவை முடித்து பயணத்தைத் தொடர்ந்தோம்.                                                                 

2001 கி.லோமீட்டர் காட்டினார் நவீன பார்த்தசாரதியார் அங்கிருந்து நமது ஓகுஸ் நகர் போகும் தூரமென்று.

தில் என்ன திறில் என்றால் நவீன பார்த்தசாரதியார் எந்தப் பாதையை எமக்குக் காட்டுவார் என்பது தான். பொதுவாக பிரதான பாதையையே எப்போதும் தெரிவு செய்வார்.

நாம்  FIRENZA  போகும் வரை எதுபாதையெனத் தெரிய வராது. அதிலிருந்து பாதை பிரியும் போது தான் தெரியும்.

றுதியில் ஒஸ்றி;யாவுக்கு ஊடாகத்தான் நவீனபார்த்தசாரதியார் பாதை காட்டினார். நல்ல மலைநாடு தானே ஒஸ்றியா!
வ்வொரு குகைப் பாதைகளும் சுமார் 2254 மீட்டர் நீளமாகவும், ஆகக் கூடியது 3418 மீட்டர்  நீளமாகவும் இருந்தது. இவைகள் பென்னம் பெரிய மலையைக் குடைந்த குகைப் பாதைகள் தான்.

திராட்சைத் தோட்டங்கள் இரு மருங்கும். அதனுடாக தெருவானது செல்கிறது. அசல் தேயிலைத் தோட்டம் போல படிகள்  படிகளாக திராட்சைத் தோட்டங்கள். அதாவது திராட்சைப் பந்தல்கள் அந்த அழகைத் தந்தன. 

 

10 வயதுப் பிள்ளை எட்டிப் பறிக்கும் அளவு தான் திராட்சைக் கொடிகளின் உயரம். ஊரில் நாம் பார்த்தது, ஒரு பெரிய மனிதன் அளவு உயரமான திராட்சைப் பந்தல் தானே! இடையிடையே வைன் தொழிற் சாலைகள்.

Bologna, Modena, Verona< Montova   எனும் நகரங்களுடாக ஓடினோம்.

வெரோனா மலைத் தொடர் ஒரே கல்லு மலைத் தொடராக இருந்தது.

றொவேறிற்ரோ எனும் மலைக் குன்றில் ஒரு கோட்டை இருந்தது தெரிந்தது. ஒரே மலை மலைக் காட்சிகள தான். மிகவும் கண்ணைக் கவர்ந்தது அதன் எழில். குளிர்மையாகவும் இருந்தது. கண் முன்னாலே எதிரில், இரு பக்கமுமாக மலைகள் தான்.

         

ஸ்றியாவைப் பார்த்த பிறகு, இப்போது ஒஸ்றியா தான் மிக அழகான இடமாகத் தெரிந்தது. vils எனும் கிராமத்தில் உடைத்த  கல்லுகள் மின்சாரக் கம்பியூடாக ஒரு மலையிலிருந்து மறு பகுதி மலைக்கு தானியங்கியாகச் செல்வது தெரிந்தது.

Brenner  எனும் நகரம் மிக அழகாகத் தெரிந்தது.

  

21-8-06 திங்கள இரவு ஒஸ்றி யில் ஒரு வாடிவீட்டில் தங்கினோம். நிம்மதியான இரவு,

காலை எழுந்து யன்னலைத் திறந்தால் அழகான பென்னம் பெரிய மலை கண் முன்னால். அழகான ஒரு வாடிவீடும் தான். காலை 9 மணிக்கு அங்கிருந்து பயணமாகிப் புறப்பட்டோம்.

10.20 க்கு nஐர்மனி வந்துவிட்டோம்.  aalan-westhausen  யேர்மனியிலும் நீண்ட நேரத்தின் பின் ஒரு சுரங்கப் பாதை ஒஸ்றியாவில் கண்டது போலக் கண்டோம். முஞ்சனுடாக 22-8-06 சுகமாக டென்மார்க் வந்தடைந்தோம்

ரோம் தாண்டியதும் கணவரும் சுறு சுறுப்பாக வந்திட்டார். காரணம் அந்த ரோம் நகர  வெப்பக் காலநிலை மாறியது தான் காரணம்.

ல்ல ஒரு பயணமாக இது அமைந்தது. அதை உங்களுடன் பகிர்ந்தது இன்னும் மகிழ்வு தான். இலண்டன் தமிழ் வானொலியூடாக எனது குரலில் இதை கிழமை தோறும் வாசித்திருந்தேன். நிலையத்திற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

விரைவில் தாய்லாந்துப் பயண விவரணம் எனது வலையில் தொடரும் இதுவும் இதே வானொலியில் வாசிக்கப்பட்டது தான்.

 வணக்கம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-4-2007.                 

 

Advertisements

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (25)

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (25)

 (பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)


லகத்திலேயே முதன் முதலில் சீசர் தான், தனது உருவச்சிலையை தனது இராசதானியில் தனக்கு அமைக்க அனுமதி கொடுத்தானாம்.

வெற்றியை அடையாளப்படுத்தும் புன்னகையுடன் சக்தி மிகுந்த ஒரு குதிரையில் அமர்ந்த யூலியஸ் சீசர், கீழே ஒரு பாபேரியன் ஒடுங்கி நிற்பது போலவும் சிலை அமைக்கப்பட்டது. கவசம், ஆயுதங்களின்றி அழிவுகளல்ல, ஆக்கம் கொண்டு வருபவனாகச் சிலை இருந்தது.

(Ceaser in horse.)

ந்தச் சிலையே பிற்காலத்தில் மற்றைய அரசர்களின் சிலை ஆக்கங்களுக்கு முன் மாதிரியாக இருந்ததாம். இதே போல கொன்ஸ்தாந்தைனின் சிலையும் அமைக்கப்பட்டது.

வ்வப்போது ஒவ்வொரு அரசர்களும் பல பெயர்களில்  ரோமாவில் இராசதானிகள் அமைத்தார்கள். ரோமானியம் எனும் புகழ் பெற்ற இராசதானியும் மலைகளுக்கிடையில் உள்ள பள்ளத்தாக்கில் தான் முன்பு அமைந்திருந்ததாம். அது முன்பு ஒரு அடக்கத்தலமாகவும் இருந்த இடமாம்.

நாம் யூலியஸ்சீசர் வாழ்ந்த இடிந்த வீட்டையும் பார்த்தோம்.
அவனது குதிரைச் சிலை எங்கே என்று தெரியவில்லை. சாதாரணமாக அரச உடையில் தனது வீட்டிற்குக் கிட்ட பெரிய தெருவோரமாக, சீசர் நிற்கும் உருவச் சிலையுடன் நின்று ஒரு படம் எடுத்தேன்.

  

மாலை வரை சுற்றிப் பார்த்தோம்.

மிக வெப்பமாக இருந்தது காலநிலை.                                        

மிகப் பரந்த இடம். நடக்க நடக்கப், பழைய ரோம நகரமாகவே இருந்தது.

(பழைய ரோம நகர படங்கள் முதல் அங்கத்தில் பார்க்கலாம். படத்தில் ”கிளிக்” பண்ணினால் பெரிதாகக் காணலாம்.)

பிரமாண்டமான இடிந்த கட்டிடங்களானாலும் பார்க்க அலுப்பு வரவேயில்லை. அவ்வளவு சனக் கூட்டம். உல்லாசப் பேருந்தே தேவை யில்லைப் போல இருந்தது நடந்த போது.  

கொன்ஸ்தாந்தைனின் சிலை.

 

 நான் முன்பு வத்திக்கானோடு சேர்ந்த தகவலாகக் கூறினேனோ தெரியவில்லை ரோமில் சுமார் 400 தேவாலயங்கள் இருக்கிறதாம். இந்த இடிந்த இடங்களிலும் தேவாலயங்களும் இருந்தது.

டுத்து ஒரு தகவலாக இத்தாலியில் சூரிய சக்தியைப் பாவிக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக தெருவோரங்களில் தொலைக் காட்சி போன்று சதுர தகடுகள் கம்பு போன்று நட்டு, அதில் பொருத்தியுள்ளனர். அடிக்கடி இது பெரும் தெருவோடு காட்சியாக இருந்தது. இது என்ன என்று முதலில் ஆச்சரியமாகத் தான் பார்த்தோம். பின்னர் அதை ஊகிக்க முடிந்தது

அடுத்த அங்கத்துடன் இந்தப் பயண விவரணம் முடிவடைகிறது.

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.

23-4-2007.

 

 

 

                                                                    

Advertisements

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். (24)

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். (24)

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)

ருவன் என் வலது மணிக்கட்டை, அதாவது எனது கையை இறுகப் பிடித்தான்.

டனே..  “”  hej! what are you doing? “” என்று நான் சத்தமாகக் குரலை உயர்த்தினேன். அவன் வேகமாக நகர்ந்து 100 மீட்டர் என்னைத் தாண்டி விட்டான். நான் பின்புறமாக் திரும்பியே சத்தமிட்டேன். அவன் முகத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. ஒரு சீன நாட்டுத் தடியன் போன்று, பின்புறம் தெரிந்தது. கட்டைக் காற்சட்டையுடன் மிக வேகமாகச் சென்றான். பேசாமல் பார்த்தபடி, “´இங்கே பாருங்கோ! அவன் என் கையை இறுகப் பிடித்தானப்பா!””  என்றேன்.

ன் கையைப் பார்த்தேன். என் மணிக்கூடு கையில் இருந்தது. நான் எனது வலது கையில் தான் மணிக்கூடு கட்டுவது வழமை. ஏன் அவன் கையைப் பிடித்தான்,  நிச்சயமாக எனது மணிக்கூட்டை உருவிடத்தான் அவன் முயற்சித்தான் என்பது புரிந்தது. காரணம் நாம் நின்று கதைக்கவோ அவனைக் காணவோ இல்லையே! கணவர் “” அவன் மணிக்கூடை பிடுங்கத்தான் பார்த்திருப்பான்””   என்றார்.  “”நல்ல வேளை எந்தத் தங்க நகையுமின்றி ஊர் சுற்ற வந்தது எவ்வளவு நிம்மதி “”  என்றேன் நான்.

பின் டென்மார்க் வந்த பின்பு என் சிநேகிதியுடன் “”  ரோம் போய் வந்தோம்”” என்று போது, “” ஏதும் களவு கொடுக்க வில்லையா? அங்கு சரியான களவாம் “” என்று கேட்டார்.

நாம் அப்படியே நடந்து பழைய ரோம நகரத்தைக் கால் ஓயும் வரை பார்த்தோம்.

       

சுற்றுலா வழிகாட்டியை அமர்த்தினால் தனியே போக, குழுவாகப் போக என்று பல வித ரகத்தில் வழிகாட்டிகளின்  பணத்தின் விகிதம் உள்ளது. இந்த நிலை கொலேசியத்திலும், எல்லா இடத்திலும் இருந்தது.

யூலியஸ் சீசர், கிளியோபட்ரா போல ஆடையணிந்து வாள் கேடயங்களுடன், ஆதிகால உடையில் ஆங்காங்கே வேடமிட்டு நிற்கிறார்கள். அவர்களுடன் நின்று படம் எடுத்தால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டும். எனது கணவர் ஆசைப்பட்டு இரு வேடதாரிகளுடன் நின்று, என்னைப் படம் எடுக்க வேண்டினார்.  

                                                   

ழைய ரோம நகரம் இடிந்த நிலையில் பாழடைந்து தான், ஆனால் ஏராளமான உல்லாசப் பயணிகள் ஒவ்வொரு வழிகாட்டிகளுடன், விரும்பிய மொழிகளில் கூட்டம் கூட்டமாகக் குழுமிச் சென்ற காட்சி   யே! யே!… என்றே இருந்தது.                                                                                           

ரி! நாம் இனி ரோமாபுரி பற்றிச் சிறிது பார்ப்போம்.

ரோமாபுரியின் ஆரம்பம் கிறிஸ்துவிற்கு முன் 31ல் ஒகஸ்தஸ் காலத்திலிருந்து உதயமாகி, சுமார் 500 வருடங்கள் நிலைத்திருந்ததாம். 44ல் யூலியம் என்றும் யூலீ என்றும் யூலியஸ் சீசரினால் அடித்தளமிடப்பட்டது.

க்காலம் பொருளாதாரத்தில் மிக உயர்வாக இருந்ததாம். கட்டிடக் கலையின் எழுச்சியின் அடையாளமாகவும், உலகத்தின் நடு மையமாகவும் அன்று ரோம இராஐஸ்தானம் இருந்ததாம். கொலேசியமும்,  அதைச் சூழ்ந்த பிரதேசமும் ரோமர்களின் பிரதான நகரமாக, இராஐதானியாக விளங்கியது.

பெரும் திரளான மக்களின் கலை, கலாச்சாரம், மதம், நீதி, வியாபாரம், அரண்மனைகள், கோயில்கள், பிரசங்க மேடைகள் என வியாபித்த பெரும் நகரமாக இது விளங்கியது. ஆக ரோமாபுரி நிறுவுவதற்கு ஒகஸ்தசும், யூலியஸ் சீசரும் மிகப் பிரதானமானவர்களாக இருந்தார்கள்.     

தொடரும்.                    

வேதா. இலங்காதிலகம்., 
ஓகுஸ்,  டென்மார்க்.
16-4-2007.                                                      

Advertisements

19. காதல் வாழ்க!

 

 

காதல் வாழ்க!

 

இராஐகுமாரா! இராஐகுமாரா! உன்
இராச்சியத்து ராணி இவதானென்று
இரகசியம் உடைந்தது! பரகசியம்
இனிய திருமண அறிமுகம்!

இவன் திறமைக்குக் காமன்
கவண் விட்டது யார்!
எவள் வருவாளோ இவனுக்கு!
எவளைத் தேர்ந்து எடுப்பானோ!
இவன் நோக்குங்கால் ஒரு நாள்
அவள் நிலம் நோக்கினாளோ!
அவள் நோக்காத வேளை
இவன் நோக்கி வளைத்தானோ!
இவனுக்கு ஏற்ற ராணியோ!
இவனுக்கு ஏணியாயிருப்பாளோ!
இப்படி நூறு கேள்விகள்!
செப்பமாய் அவிழ்ந்தது புதிர்!

காதற் கற்பனை வளர்ச்சிக்கு
கல்யாண உற்சவங்கள் முற்றுப்புள்ளி.
வஸந்தெனும் இளங்குமரன் இனி
வளமாக உயர்ந்து மனிதனாக வாழ்க!
இனியென்ன! இந்த இணைப்பு
காற்று இடையோடா இணைப்பாகட்டும்!
நீங்கிடில் சுட்டும், இம்மடந்தையுறவு
நெருங்கிடில் குளிராகட்டும்.

காலத்தோடிணைந்து வாழ்ந்து
ஆலமரமாய்ப் படர்ந்து
அறுகு போல் வேரூன்றி வாழ்க!
அனைத்து எண்ணங்களும் ஈடேறுக!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
26-1-2011.

In anthimaali web site:-     http://anthimaalai.blogspot.com/2012/01/blog-post_393.html

                    

Advertisements

Previous Older Entries