21. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 21

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 21

இது 21 வது அங்கம்.
இதன் தொடர்ச்சி இரண்டு மூன்று அங்கங்கள் எனது மூன்றாவது வலையில் பதிந்துள்ளேன்
பாருங்கள் அதன் இணைப்பும் தருகிறேன்.)

https://kovaikkothai.blogspot.com/search?q=23)

காலையில் உணவை முடித்துக் கொண்டு 11 மணிக்கு கிறே கவுண்ட் பேருந்து எடுத்தோம்.

IMG_0875[1]

IMG_0876[1]
வழியில்  பாருங்கோ     ஐகியா கடை பிறிஸ்பேணிலும் உள்ளது.

IMG_0882[1]

IMG_0884[1].jpg

சாரதி வரிசையல்லாத மற்ற வரிசையில்வ ழமை போல முதலிருக்கை
படம் எடுக்க வசதியாக பிடித்து அமர்ந்தோம்.  அருமையான காட்சிகளும்  நினைக்க முடியாத கட்டிடங்களின் அழகும் கண்கள் பறித்தன.

IMG_0898[1]

கோல்டன் பீச்  தங்கக் கடற்கரை நெருங்கவே  பாதியளவு தூரத்தில் கட்டணம் செலுத்தி குழந்தைகளிற்குரிய விளையாட்டிடம் நீர்  விளையாட்டு   என்று தெருவில் தெரியத் தொடங்கின

IMG_0899[1]

IMG_0897[1]

IMG_0901[1]

IMG_0902[1]

..கிட்ட வந்திட்டோம்.

IMG_0912[1]

IMG_0916[1]

இத்துடன் இந்த அங்கம் முடித்து அங்கம் 22ல் சந்திப்போம்

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்29-4-2017

Bridge-and-Trail-36-x-12

https://kovaikkothai.blogspot.com/2019/02/42-22_17.html

இந்த இணைப்பில் தொடர்ந்து 3 அங்கங்களுடன் இந்தப் பயணக் கட்டுரை முடிவடைகிறது.

Thank you

20. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (20)

( இக் கட்டுரையின் இறுதி இரண்டு மூன்று அங்கங்கள்
எனது மூன்றாவது வலையில்
இந்த இணைப்பில் தொடருகிறது.  link —  https://www.blogger.com/blog/post/edit/546090815677939599/6394356207580821651)   

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 20

நகர் வலத்தில் அடுத்து கிங்ஸ் எட்வேட் பார்க்கிற்கு முன்னால் ஒரு கலை வடிவம்.

IMG_0757[1]

  என்னவென்று டென்மார்க் வந்த பின்பு ஆராய்ந்தேன். 1983ல் வடிவமைத்தது. இத்தாலிய ஆனல்ட் போமோரா என்பவர் செய்தார். எக்ஸ்போ 88ல் பாவித்த கலை வேலைப்பாடுகள்.. எக்ஸ்போ முடிய இங்கு கொண்டு வந்து வைத்துள்ளனர்.
பிராமிட் பவர் வட்ட உருவம்.

king edward-3
ஆம்பிஷன் செவ்வக உயரம் லா மெசின். குந்து செவ்வகம் கணிப்பு காசண்ட்ரா என்ற விளக்கம் இருந்தது எனக்கு ஒன்றும் புரியவில்லை.   படங்களைத் தருகிறேன் பாருங்கள்.

Unavngivet

king edward- 4

king edward -2
ரூவங் கிராமத்தின் வாயிலருகாமையால் போனோம்.

IMG_0780[1]

எல்லா வசதிகளும் அடங்கிய இடம்     இது.   பெரிய ஷொப்பிங் சென்ரர். பாக் என்று அனைத்துமே உண்டு.

IMG_0783[1]
பிறிஸ்பேண் ஆறு ஒரு ஓரம் காண்கிறீர்கள்.

வில்லியம் யொலி, மெறிவேல் என்று இரு பாலங்கள் கண்டோம்.
வில்லியம் யொலி முதலில் கிறே ஸ்றீற்பாலம் என்று அழைக்கப்பட்டு பின்னர்
வில்லியம் யொலி ஆனது 1955ல். வில்லியம் யொலி முதலாவது லோட் மேஐர் ஆவர். 72 மீட்டர் கொண்ட இரும்பு வளைவுகள் மூன்றினால் ஆக்கப்பட்டது. பாலம் 500 மீட்டர் நீளமுடையது.

IMG_0799[1]

IMG_0800[1]

17_The_William_Jolly_Bridge

 கூகிள் படமும் பாருங்கள். இரு பாலமும் ஒரே பார்வையில் தெரிகிறது (மெறிவேல். யொலி)

2251261025_fef0270293_b

அருகில் மெறிவேல் பாலம் தெரிகிறது. இரட்டை வரிசை புகையிரத பாதைப் பாலம். 1978ல் திறக்கப்பட்டது. 877 மீட்டர் நீளமானது.

IMG_0806[1]

 கூகிள் படமும் பாருங்கள்.

IMG_0809[1]
 கலாச்சார நிலையம்.

IMG_0811[1]

google

Griffith-Campus-Gold-Coast
   பல்கலைக்கழகம் பார்க்கறீர்கள்.பென்னம் பெரிய கழகம் கட்டிடங்கள் நூல்நிலையம் என்று அனைத்தும் வார்த்தையால் சொல்ல முடியாத பிரமாண்டம் உலக பிரபலம். கூகிளில் சென்று பாருங்கள் பிறிஸபேர்ண் or gold coast என்று எழுத வேண்டும்.

IMG_0818[1]

IMG_0816[1]
 கோடை வீடு பார்க்கிறீர்கள்.

IMG_0823[1]

இம்மாம் பெரிய    கட்டிடம்.

IMG_0827[1]
சைனா ரவுண் மோலைத் தாண்டினோம்.

வூல் வேத்ஸ் எனும் பெரிய சூப்பர் மாக்கெட் சென்று இரவு உணது தேடினோம். சரிவரவில்லை.

IMG_0835[1]

 கலை வடிவங்கள் பாருங்கள்.

IMG_0843[1].jpg

IMG_0838[1]
கோவிந்தா வெஜிடேரியன் கடையில் சோறு வாங்கிக்கொண்டோம்   இரவு     உணவுக்கு.    

IMG_1070[1].jpg

இப்போது நாளைக் காலையில் தங்க கடற்கரை செல்ல பேருந்துக்கு டிக்கட் வாங்கினோம். அங்கு செல்ல ஒரு மணி பதினைந்து நிமிட ஓட்டமே.
பிறகு வாடிவீட்டிற்குச்     சென்று குளித்து சாப்பிட்டு   நாளைய ஆயத்தங்களைச் செய்து நன்கு சயனித்தோம்.

இத்துடன் அடுத்த பதிவை அங்கம் 21ல் பார்ப்போம்.

அன்புடன் வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

Bridge-and-Trail-36-x-12

19. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 19.

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 19.

கடந்த    வாரம்    போட்ட  இன்டியன்    ஒடிசி  கடை படம் கூகிளில் தான் எடுத்தேன். மேயர் மிக பரந்த மால். படங்கள் எடுத்தோம். இவர் ‘ கமராவைத் தா! ‘ என்றார்.’ அதில் போய் நில்’ என்று படம் எடுத்தார் ஒரு ஓவியத்தை.

IMG_0712[1]
பின்பு சிட்டி வலம் போவோம் என்று டிக்கட் வாங்குமிடம் தேடினோம். பட்டினத்து நடக்கும் வீதியில் அது இருந்ததை விசாரித்து அறிந்தோம். தகவல் நிலையம் டிக்கட் வாங்குகிறார் கணவர். நான் படம் எடுக்கிறேன்.info – visiters center

IMG_0715[1].jpg-k

IMG_0717[1]

IMG_0718[1]
கணவர்     எப்போதாவது  அபூர்வமாக ‘ நில்லு நான் படம் எடுக்கிறேன் உன்னை ‘ என்பார்.

‘ இதை எடு ‘ என்றார் கணவர். மரத்தில் செய்த ஒரு கலை வேலைப்பாடு.

IMG_0720[1]
( நாம் பிறிஸ்பேர்ண்க்கு வந்தது. தங்கக் கடற்கரை செல்வதற்காகவே.)
முதலில் பிறிஸ்பேர்ண் பற்றி சிறிது பார்ப்போம்.

குவீன்ஸ்லாந்து மாநிலத்து தென் கிழக்கு ,மூலையில் இந்த நகரம் உள்ளது. இது தாழ்வான பிறிஸ்பேர்ண் நதியின் வெள்ளச் சமவெளியில் உள்ளது. இந்த நதி வளைந்து நெளிந்துள்ள நகரம். படம் பாருங்கள் நதி பாம்பு போல உள்ளது.

900px-BrisbaneRiver02_gobeirne-edit1
1823ல் கவர்ணர் தொமஸ் பிறிஸ்பேர்ண் இந்த நதிக்குப் பெயரிட்டார். அவுஸ்திரேலிய 3வது பெரிய நகரம் குவீன்ஸ்லாந்தில் மிகப் பெரிய நகரம். 1788ல் தை மாதம் 26ம் திகதி நியூசவுத்வேல்ஸ்ல் சிட்னி அருகே பிரிட்டிசார் முதல் காலனி நிறுவினார்கள். இதுவே அவுஸ்திரேலிய தேசியதினமாகக் கொண்டாடப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப் படும் நாடு. சர்வ தேச விமான நிலையம், கப்பல்துறை, விரிந்த சாலைகள் அனைத்தும் உள்ள 12 மாதங்களும் நீலவானம் பார்க்கும் நாடு. இங்கு தான் கோல்ட் கோஸ்ட், ஷண் ஷைண் என அழகுக் கடற்கரைகள் உள்ளன. கரையோரமாகவே மிக மிக உயரமான கட்டிடங்கள் இங்கும் உள்ளன.
இன்பிஃனிட்டிவ் கட்டிடம் 81 மாடிகள் கொண்ட 249 மீட்டர் உயரமானது.

IMG_0683[1]

 சோலியெல் – நீல நிறம். 243 மீட்டர் உயரமானது.

IMG_0678[1]
 மெறிட்டேன அபாட்மென்ட் 80 மாடி கொண்டது.எமது வாடிவீட்டுக்கு முன்னால்

29368840

தெரியும்.IMG_0699[1]

எமறேட்ஸ் கட்டிடம்

IMG_0728[1]
அடிலெய்ட் வீதியில் நகர மண்டப வாசல் இதில் உள்ளது.

IMG_0732[1]
 நகர மண்டபம்…

IMG_0730[1]
 கெயின்ட் பெஃறீஸ் சில்லு உலக எக்ஸ்போ 88 – 20ம் ஆண்டிற்காகவும,; குவீன்ஸ்லாந்து 150வது நினைவு நாளுக்காகவும் 2008ல் நிறுவியது. பாக்லாண்ட்ஸ் வட கரையில் நிறுவியது. 60 மீட்டர், 197 அடி உயரம். ஒரு சுற்று 12 நிமிடம் கொண்டதாம்.

IMG_0735[1]
உயர் மாடிகளில் கண்ணாடிகள் உடைந்து விழும் நிலையானால் இப்படி மறைப்புகள் போடுவார்களாம் .

IMG_0744[1].

IMG_0745[1]
முதுகுப் பையுடன் பயணமாவோர்தங்குமிடம் சில்

IMG_0768[1]
சாதாரணவீடுகள்

IMG_0770[1]
ஸ்ரேடியம்

IMG_0771[1]
கிளப்.

IMG_0774[1]

மிகுதியை அடுத்த பதிவில் 20ல் காண்போம்.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.  14-3-2017

 

kangaroosunset2-gif-oo

 

 

18. (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).

 

105845

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 18

 

ஐரோப்பாவில் சுரங்கப் பாதையூடாகப் பல தடவை பயணித்துள்ளோம் ஒரே நேர்சீரான பாதை . சுரங்கத்தினூடாகப் புகுந்து வெளியே வருவோம். மெல்பேர்ணில் சுரங்கப் பாதை கிளை பிரிந்து இரண்டாக வேறு வேறு இடங்களால் வெளியேறும் நிலையைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.” ஓ! சுரங்கத்தினுள்ளேயே பாதை இரண்டாகிறதா! ‘ என்று.

பெரும் பாதைகளில் தகவல்கள் மேலே போடுவார்கள்.
¨ சிரியுங்கள்! சிரிப்ப ஒரு சிறந்த மாத்திரை!” என்று சிட்னிப் பாதையில் வாசித்தோம். சிரித்தோம்.
” ஒரு தொலைபேசி அழைப்பு தவறிவிட்டதா! யாரும் கொலை செய்து விடமாட்டார்கள்!”…என்றும் இருந்தது. நாசுக்காக சாரத்தியத்தில் நீங்கள் கவனமெடுங்கள் என்கிறார்கள்.
முற் பகல் 11.25க்கு பிறிஸ்பேர்ண் வந்து இறங்கினோம்.

img_06561

img_06591

கமெராவில் 1.15 பகல் என்று தெரிகிறது. நாம் நேரம் செட் பண்ணவில்லை. தவறாக இருக்கலாம்.
ஒரு புது இடத்திற்கு வந்ததும் எப்படி தங்கும் வாடி வீட்டிற்குச் செல்வது!…. தூரமா கிட்டவா!…., பேருந்து எப்படி எடுப்பது!… என்று பல கேள்விகள் மனதில் குடையும். தங்கும் வாடிவீட்டுப் பதிவுப் பேப்பரைக் கையில் வைத்துக் கொண்டு மெல்ல தயங்கி விமான நிலையக் கட்டிடத்தால் வெளியே நடந்து வர, சீருடை அணிந்த ஒரு பெண் அதிகாரி ஐ எழுத்துடைய ( இன்போஃமேசன்) ஆடை அணிந்தவர் என்ன என்பது போலப் பார்த்தார். முகவரியைக் காட்டி இங்கு போக வேண்டும் என்றோம். வெளியே வந்து அதோ அந்த வரிசையில் சென்று நில்லுங்கள் அறிவீர்கள் என்றார்.

img_06631
நாம் அங்கு போனோம் கணவர் தான் அத்தனையும் பேசினார் நான் பயணப் பொதிகளைப் பார்த்தபடி விலகி நின்றேன். நாம் போகும் இடத்திற்கு வாகனம் ஒழுங்கு செய்யும் நிலையம் அது. படத்தில் காணலாம்.

img_06601
இவர் பேசும் போது திரும்ப விமான நிலையம் வருவது எப்படி என்று பேசியுள்ளார் அதற்கும் சேர்த்து வாகனம் பதிவு பண்ணியானது. காத்திருந்தால் அவர்கள் வந்து ஏற்றிச் செல்வார்கள் என்று அதற்குரிய இடத்தில் நின்றோம் – உட்கார்ந்திருந்தோம். ஒரே பாதையில் செல்லும் பயணிகளாக 2-3 பேருடன் பயணித்தோம்.
அதுவும் ஒரு நகர வலமாகவே இருந்தது. அதாவது சுற்றுலா போலவே இருந்தது. அப்போதே பிறிஸ்பேர்ண் படங்கள் எடுக்கத் தொடங்கி விட்டேன். அவ்வளவு அழகாக வெட்ட வெளியும்

img_06661

வானுயர் கட்டிடங்களுமாக இருந்தது.  வீடுகள்   தோற்றம்

img_06731

img_06761

வீடுகளிலும் பார்க்க வாகனம் தரிக்கும் இடங்கள் அதிகமோ என்று சிந்திக்க வைத்தது. parking place building…
வாடிவீடு வர அப்படிப் போய் அப்படித் திரும்புங்கள் உங்கள் வாடி வீடு தெரியும் என்று இறக்கி விட்டார் சாரதி. அதே போல 21ம் திகதி குறித்த நேரத்திற்கு இந்த இடத்தில் வந்து நில்லுங்கள் விமான நிலையம் போக என்றும் நினைவு படுத்தி விட்டார் அது மகிழ்வாகவும் ஒரு ஆறுதலாகவும் இருந்தது.
வாடி வீட்டிற்குச் சென்றோம். 
19-9-2016 பிறிஸ்பேர்ணில் சிட்டி எட்ஜ் வாடி வீட்டில் சென்று பொதிகளை வைத்து விட்டு வெளியே கிளம்பினோம்.

img_10771

img_10762

வேண்டிய நேரம் இருந்தது.
பசித்தது ஏதாவது சாப்பிடுவோம் என்று தேடினால் மேயர் மாலுக்குள்

IMG_0710[1].jpg

img_07111

img_07011

img_07021

img_07041

img_07061

இந்திய சாப்பாட்டுக்கடை இருக்கு என்றார்கள். போய் தேடினோம். இன்டியன் ஒடிசி என்று சாப்பாட்டுக் கடையில் மசாலா தோசை சொல்லி சாப்பிட்டோம். பெரிய ருசி என்று இல்லை. ஓ.கே பரவாயில்லை.

indian

மிகுதியைபதிவு 19ல் காணுங்கள்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 22-2–2017

 

divider_172

17.அவுஸ்திரேலிய ( கங்காரு நாட்டுப் ) பயணம் – 17

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 17

img_04831

img_04841

வரும் போது சிட்னி முருகன் கோயிலையும் பார்த்து வந்தோம் இறங்கி உள்ளே செல்லவில்லை. வீடு வந்தோம்.
கணவர் கூறினார் அவுஸ்திரேலியா வந்து கங்காரு பார்க்கவில்லையே என்று. நீல மலைக்கும் போகலாம் என்று சீலன் கூறினார் இறுதியில் நாளை கங்காரு பார்ப்பது என்று முடிவானது.

img_05111

இரவுணவு முடிய இரு முகன் – (விக்ரம்) தர்மதுரை – (சேதுபதியும) பார்த்தோம். எல்லாம் பிடித்தது.
அடுத்த நாள் சீலனும் சின்ன மகளும் நாமும் ” பெஃதர் டால் ” எனுமிடம் போய் மிருகங்கள் பார்த்தோம்.

img_05241

அதாவது அவுஸ்திரேலியாவில் உள்ள மிருகங்கள். அன்றைய நாள் ஒரே மழைத்தூற்றலாக இருந்தது. குடையுடனே நடந்தோம்.
1700 வகை பாலூட்டிகள், பறவைகள் அங்கு உள்ளனவாம். கங்காருவுக்கு உணவூட்டலாம், கோலாவை சந்திக்கலாம், குசுனி, உணவுகள் உண்டு. காலை 9 முதல் மாலை 5 மணி வரை உள்ளே இருக்கலாம் என்று தகவல் உள்ளது.
படங்களைப் பாருங்கள்.

img_05351

img_05301

img_05311
63 வகை கங்காரு உள்ளதாம் கங்காரு சாணி நல்ல உரமாம். கங்காரு முட்டை இடுவதாம் குட்டி போடுவது அல்ல. கங்காரு மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுமாம். 5 வருடம் மட்டுமே வாழுமாம். கங்காருவின் முட்டை உடைந்து பெரிய புழுக்கள் போன்று குஞ்சுகள் ஊர்ந்து தாயின் வயிற்றுப் பையுள் ஏறுமாம். அங்கேயே பால் குடித்து தாயின் உடல் சூட்டில் வளர்திடுமாம். பின்பு துள்ளிப் பாய்ந்து உலாவிடுமாம்.

கப்டன் குக் கங்காருவை முதலில் பார்த்து அது என்ன என்று பழங்குடியினரைக் கேட்டாராம். நீ பேசுவது புரியவில்லை என்று தமது மொழியில் (கங்காரு) பதில் கூறினார்களாம். அதையே குக் மிருகத்தின் பெயரெனக் குறித்துக் கொண்டாராம்.

img_05471

img_05961

img_06001

img_06061

img_06071

img_06041

img_06031

Next KOALA  தூங்கும் போது பந்து போல இருக்கும்

koala

img_05391

img_05421

கோலா மரத்தில்  இருக்கிறது.

img_05651

img_05641

img_05701

img_05671

img_05741

img_05731

கறுப்புப் பண்டி பார்த்தோம்

img_05821

img_05931

அவுஸ்திரேலிய  தேசியப் பறவை ஈமு

img_05911

 
அது ஒரு மழை நாள். கங்காரு பார்த்து வந்து அமர்ந்திருந்தோம். சீலனின் தம்பியார் வந்திருந்தார் அவர் எங்களை அழைத்தார் நீலமலைக்குச் செல்வோம் வாருங்கள் என்று. எனது கணவர் காலையில்  ” பெதர் லாண்ட் ”  சுற்றி வந்ததால் பிறகும் மாலையும் மழை தூறியபடி உள்ளதால் பஞ்சிப்பட்டு இயலாது என்று கூறி விட்டார். எனக்கு விருப்பமானாலும் நான் மௌனமாகவே இருந்தேன். சீலனின் தம்பியின் நல்ல மனதை மதிக்கிறேன். இன்றும் நீலமலை பார்க்காதது எனக்கு ஏக்கமாகவே உள்ளது.
சிட்னி வாசம் முடிந்தது.
அடுத்த நாள் 19ம் திகதி காலையே வெளிக்கிட்டோம் விமானம் 10 மணிக்கு பிறிஸ்பேர்ண் பயணம். சீலன் விமான நிலையம் வந்து எம்மை பயணம் அனுப்பி வைத்தார். வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட பின் பேருந்தில் மாறி விமான நிலையம் சென்றோம்.
மறுபடியும் அந்தப் பெரிய அசத்தும் பாலத்தினூடாகவே பயணித்தோம்.

img_06251

மிகுதியை அடுத்த பதிவு 18ல் காணுவோம்.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 10-2-2017

 

2144764y0c9u25lsh

16. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் –16

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 16

கின்னஸ் ன்படி உலகின் அகலப் பாலம், உருக்குப் பாலம், உயரப் பாலம். உலகின் 4வது நீள வளைவுப் பாலம் இதுவாகும்.

img_03481
1815ல் பிரான்சிஸ் கிறின்வே என்பவரால் திட்டமிடப்பட்டதாம். 1924ல் கட்டுமானப் பணி. ( பெரிய கதை இருக்கு. தமிழில் சிட்னி துறைமுகப் பாலம் என்று விக்கிபீடியாவில் சென்று வாசியுங்கள். அதன் இணைப்புகளையும் அழுத்தி படங்களையும் பாருங்கள் பாலத்தின் மேலும் நடக்கலாம்.) இதற்காகவே பலர் பணம் கட்டி பயிற்சியுடன் ஏறுகிறார்கள்.

img_03641

1400 தொழிலாளர்கள் 8 ஆண்டு கால வேலை. 42 மில்லியன் பவுண்ஸ் செலவு. 1932ல் மார்ச் 19 நியூசவுத்வேல்ஸ் முதல்வர் ஜோன்லாங் திறந்து வைத்தாராம். 8 வாகனச்சாலைகள், 2 தொடருந்துத் தடங்கள் உள்ளன. 1950ல் டிராம் சேவை நிறுத்தப்பட்டதாம். பாலத்தின் வயது 84. டெலிபோன் மணி பாடலில் வரும் பாலம்.
6 மில்லியன் ஆணிகள், 53000 டன் உருக்கும் பாவித்தனராம். நீளம் 1149 மீட்டர் (3770 அடி) அகலம் 49 மீட்டர். (161 அடி) உயரம் 139 மீட்டர் (456 அடி).
வரவும் போகவும் என்று நாம் இரண்டு தடவை இப் பாலத்தினூடாகப் பயணித்தோம்.

சிட்னி நகர் வலத்தின் போது 3 விதமான மரங்கள் ஒரு காட்சிக்குள் அடங்கிய இயற்கை

img_02891

கொக்கோகோலாவின் அரசாட்சி in sydny

img_03181

மியூசியம் கட்டிடம் சிட்னி   நடுப் பட்டினத்தில்.

img_02921

ஒர் அழகிய நீரூற்று 

img_03201

El Alamein Memorial Fountain @ Kings Cross

This award-winning war memorial was completed in 1961 by an Australian-born architect, Bob Woodward. It was built in honor of the soldiers who sacrificed their lives in 1942 battles at El Alamein, Egypt during World War II. The fountain is located at the corner of Darlinghurst Road and Macley Street.
ஒரு கப்பல்    நிற்கும் காட்சி
img_03261
ஓப்பராவின் பக்கப்பாட்டுக் காட்சிகள்  2 
img_03861
img_03901
சரி இனி நிகழ்வுகளைப் பார்ப்போம்.
அடுத்த நாள் 17ம் திகதி பகலுணவுக்கு எனது சித்தப்பா வீட்டிற்கு அழைத்திருந்தனர். ஆம் அப்பாவின் சகோதரர் கந்தையா. சித்தப்பா, சித்தி கொழும்பு, இலங்கையில் காலமானவர்கள்.
kandiaha peri
 சித்தப்பா யாழ் நாச்சிமார் கோவிலடியில் வசந்தா பிறிண்டேர்ஸ்  என்று சேலைகளுக்கு பிறிண்ட் பண்ணும் தொழிற்சாலை வைத்திருந்தார். பின்னர் பிள்ளைகள் இதைப் பார்க்க.  பின்னர் அவர்களும் அவுஸ்திரேலியா சென்று குடியேறினார்கள்.
இவர்களில் 5 பிள்ளைகள் சிட்னியில் வசிக்கின்றனர் அவரவர் சொந்தக் குடும்பத்துடன். அனைவரும் ஒருவர் வீட்டில் உணவருந்தும் திட்டம். எப்படியும் 50 வருடங்களின் மேலாக ஒருவரையொருவர் சந்திக்கவில்லை. எல்லோரும் சிறுவர்கள் அன்று. 
நன்கு கலந்துறவாடி மகிழ்ந்தோம். இனிய பொழுது அது.
மாலை வரும் வழியில் இன்னொரு பெரியம்மாவின் தங்கை மகன் வீடுக்கு தேநீருக்குச் சென்று மகிழ்ந்து உறவாடி வந்தோம்.

மிகுதியை அடுத்த பதிவு 17ல் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  24- 1- 2017

bridge-andopara

15- அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் –15.

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 15

16ம் திகதி சிட்னியில் ஷம்மி வீடு போய் ஆறுதலாகப் பேசி உணவருந்தி கபாலி படமும் பார்த்தோம். கபாலி படம் எனக்குப் பிடித்தது.
இவர் என்னிடம் கூறினார் நாம் பிறிஸ்பேர்ண் போவதைக் கைவிடுவோம், 18 மணித்தியாலம் பேருந்தில் ஓடமுடியாது என்று. சரி நானும் அடம் பிடிக்கவில்லை. காரணம் அவரது உடல் சுகத்தையும் கவனிக்க வேண்டும் என்பதால். சுகமாகத் தான் உள்ளார் ஆயினும் தேவையற்ற சிரமம் ஏன் என்றே.
நன்கு படுத்துத் தூங்கி எழுந்தோம். காலையில் புத்துணர்வாக எழுந்ததும் இவர் கூறினார் நாம் விமானத்தில் பிறிஸ்பேர்ண் செல்வோம் என்று. நான் கூறினேன் “சரி சீலனுடன் கலந்து விமான டிக்கட் பதிவு செய்யும் போது ஹோட்டலும் பதிவு செய்து போவோம் ”   என்று.

என்ன இப்போது தானே சிட்னி வந்தோம் அதற்குள்   பிறிஸ்பேணா என்று நினைக்கிறீர்களா!…….

…….திட்டமய்யா…. திட்டம் !….பிறீ பிளான்!….


காலையுணவு முடித்து சீலனும் இவரும் அமர்ந்து விமான டிக்கட், வாடிவீடு கணனியில் பதிவு செய்தனர்.

img_04251

பிறிஸ்பேணுக்கு விமானம் ஒன்றேகால் மணி நேரப் பயணம் தான்.
சரி இனி சிட்னி பற்றிப்…பார்ப்போம்…..

பொதுநலவாய அவுஸ்திரேலியா என அழைக்கப்படும் உலகின் மிகப் பெரிய தீவு அவுஸ்திரேலியா என்பர். அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் சிட்னி, நியூசவுத்வேல்ஸ் மாநிலத் தலைநகரம். 1788ல் ஆர்த்தர் பிலிப் என்ற பிரித்தானியர் இந்த நகரத்தை அமைத்தாராம். அவன் தான் குற்றவாளிகளை அங்கு குடியேற்றியவன். 4 கோடி மக்கள் வசிக்கிறார்களாம். முப்பதாயிரம் ஆண்டுகளிற்கு முன்னிருந்து இங்கு பழங்குடியினர் வசிக்கின்றனராம்.

2000  மாம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் நடந்ததால் நிறைய முன்னேற்றங்கள் நடந்ததுள்ளது. பரமாட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது.  

parramatta

ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் பிரிட்டிஷ் மாலுமிகள் முதலில் வந்திறங்கி அவுஸ்திரேலியாவைக் கண்டறிந்தது.
படத்தில் ஒரு புள்ளி போலத் தெரியும் சிட்னி நிறைய வளைவுகள் கொண்ட நீர்கரையோடு உள்ளது. படத்தில் பாருங்கள். எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

cidny-hourber-png-1

கடலுக்குள் பெரிய மலை நீள்வது போலவே சிட்னி இயற்கைத் துறைமுகம் உள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடையாளமான ஓப்பரா மண்டபத்தோடு சிட்னி துறைமுக வளைவுப் பாலமும் பிரதானமானது. சிட்னி மத்திய பகுதியும் வடக்கு சிட்னியையும் இணைக்கும், துறைமுகத்தின் குறுக்கே அமைந்த உருக்கினாலான பாலம். கோர்ட்டுக் கொழுவி ( coat hanger) என்று மக்களால் அழைக்கப் படுவது.

img_02601

முதலில் சுற்றுலாப் பேருந்தில் சிட்னி துறைமுகப் பாலத்தின் அருகாமையால்,

img_02621

பல கோணத்தில் வாகனம் சுழன்று சுழன்று வந்த போதே எக்கச்சக்கப் படங்கள் தட்டினேன்.

 

வியப்பான வியப்பு! அதன் தோற்றத்தால்.! எங்கோ ஒரு தூரத்தில் பார்த்த பாலத்தின் இவ்வளவு அருகோடு போவோம் என நினைக்கவே இல்லை.   (முன்னே தூரத்தில் ஓப்பரா வும் தெரிகிறது)

img_02591

பிரமாண்டம் என்றால் பிரமாண்டம் தான்! …….

எவன் கட்டினான்!….. எப்படிக் கட்டினான்!….. என்று ஆச்சரியம்!!…..
சீலனுடன் வரும் போது பாலத்தில் வந்தோம் என்று முன்பு எழுதியிருந்தேனே. இந்தப் பாலத்தினூடு தான் பயணித்தோம்.  (பாலத்திற்கூடாக-  புகையிரதம் போகப் போகிறது.)

img_06231

பெருமை அல்லவா! பிறகு தான் அவர் கூறினார் அதனூடாகத்தான் வந்தீர்கள் என்று.
பாலம் பற்றி மிகுதியை அடுத்த பதிவு 16ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 1-2017

 

sydny-habour

 

14. (அவுஸ்திரேலிய -கங்காரு நாட்டுப் பயணம்). (14)

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 14.

இவருடைய இந்தக் கட்டிடத்தின் கப்பற் பாய்களை நினைவுபடுத்தும் கூரையைக் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார்.
இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார்.  ஆனால் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு   புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட    நியூ சவுத் வேல்ஸின் அரசாங்கம்    உட்சனுக்கான கொடுப்பனவுகளைத் திடீரென நிறுத்தியது. 1966 இல்இ அவர் நிறைவு பெறாத கட்டிடத்தையும் விட்டுவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டது. எனினும் சிட்னி ஒப்பேரா மாளிகை   1973ல் கட்டி முடிக்கப்பட்டது. இது உலகில் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும்.
மார்ச் 2003 இல்இ ஒப்பேரா மண்டபம் தொடர்பில் அட்சனின் வேலைகளுக்காக   சிட்னி பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

is

அட்சன்உடல்நலக் குறைவு காரணமாக ஆஸ்திரேலியா வர முடியாமையினால் அவரது மகன் அட்சனின் சார்பில் இந்த விருதை ஏற்றுக்கொண்டார்.
மேலதிக இணைப்பாக இந்தத் தகவல் தந்தேன்.

கடந்த  பதிவின் பென்னலோங் அருகு பச்சை வண்ணம் தேசிய பூங்காவாகும். சில படங்கள்.

img_03041

img_03051

img_03061

img_03091

img_04091

IMG_0411[1].jpg
நஷனல் பூங்காவிலிருந்து தேசிய பூங்காவிலிருந்து பார்க்கும் சிப்பி, சோகி உரு ஒப்பரா அரங்கு (மாளிகை) கூகிள் படம்.

royal_botanic_gardens_sydney_2150b_jpg_original

sydney-opera-house-royal-botanic-gardens-cbd-and-circular-quay-sydney-bbj6wd

d903979f7d3fa6bb3a68f10ff8601be6

Last 6   pics – google….
ஓப்பரா பார்த்து முடித்ததும் சிட்னி புனையிரத நிலைய அருகில் பேருந்து ஏறிய இடத்திற்கே மறுபடி வந்து சேர்ந்தோம்.

600_433088626
அதே புகையிரத நிலையக் கட்டிட மூலையில் இருந்த நூடில்ஸ் கடையில் சுடச்சுட நூடில்ஸ் சாப்பிட்டோம். அவுஸ்திரேலியா வந்து முதன் முதலில் நூடில்ஸ் சாப்பிட்டது இங்கு தான். ஐரோப்பாவில் சுற்றினால் சைவ உணவுக் காரியான எனக்கு நூடில்ஸ் தவிர பெரும்பாலும் வேறு கதியே இல்லாமல் இருக்கும். நாம் சாப்பிட்ட அந்தக் கடையை கூகிளில் பாருங்கள்.

corner-noodels

சரி இனி பாதுகாக்கப் பாரம் கொடுத்த எமது பொதிகளை எடுப்போம் என்று அருகிலிருந்த பேருந்துக் கந்தோரினுள் சென்று எடுக்கவும் எங்களைக் கூட்டிப் போக இன்பசீலனும் வந்திட்டார். மூவருமாக புகைவண்டியில் (ரெயினில்) போகும் போது ( பிலபலமான பாலத்தினூடாகச் செல்கிறோம். இது பற்றிப் பின்னால் விவரிப்பேன், நினைவில் வைத்திருங்கள். இப்படிப் போகும் போது எனக்கும் புரியவில்லை, பின்பு தான் புரிந்தது) தங்கை மகளும் ஷம்மி (ஷர்மிளா) நடுவில் ஏறி எம்முடன் இணைந்தார். பிறகு இறங்கி பேருந்தில் ஏறினோம். பிறகு இறங்கி அவர்கள் காரில் மாறி வீடு சென்றோம். 3 சுரங்கப் பாதையூடாகப் பேருந்து பயணித்தது. தூங்கி எழும்பலாம். கதைகள் வாசிக்கலாம். அப்படி ஒரு உணர்வாக இருந்தது. சாப்பிட்டதும் பேருந்துப் பயணம். தூக்கம் சுளற்றி அடித்தது.
எவ்வளவு தூரம் நாளும் பயணித்து சென்ரலுக்கு வந்து வேலை செய்கிறார்கள்.
நாட்டுப் புறத்தில் வேலை செய்தால் ஊதியம் குறைவு.
நல்ல சம்பளத்திற்காக நாளும் பாடு.
ஷம்மி கொழும்பில் வங்கியில் வேலை செய்தாள். இரண்டு அழகான மாநிறமான பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை. நாம் இங்கு வந்த பின்பே ஆண் குழந்தை பிறந்தது.. சின்னவள் நடந்தால் நான் ”..அஞ்சலி..அஞ்சலி.. ” என்று பாடுவேன். அப்படியே நடப்பாள் அழகாக வாயையும் அப்படியே வைத்து…. இல்லாவிடில் தக்காளிப் பழங்கள் என்பேன். இதை எழுதும் போது ஆவல் மிகுதியால் அவர்களோடு தொலைபேசி எடுத்து பேசிவிட்டே தொடருகிறேன்.
மிகுதியை அடுத்த பதிவு 15 ல் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்    3- 1-2017

 

opera-hall-inside

 

13.(அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (13)

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 13

img_01591-jpg-pp

சிட்னி சென்டர் பாயிண்ட் கோபுரம்  1981இல்  ஆயிரம் அடி உயரத்தில் தகவல் தொடர்புக்கு எனக் கட்டப்பட்டது. 279 மீட்டர் உயரமானது. சிட்னியின் மிக உயரமான கட்டடம் இது. டெலிவிசன் ரவர்,  சிட்னி ரவர் ஐ (eye)  என்றும் பலரால் அறியப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பத்து லட்சம் பயணியர் வந்து செல்கின்றனர். கோபுரத்தின் எட்டாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடித் தளத்திலிருந்து சிட்னி நகரின் அழகைக் கண்டு மகிழலாமாம். முதலிரு படத்திலும் தூரத்தில் காணும் சிட்னி கோபுரம்   கிட்டவாக 3வது படத்தில்

img_02111

img_03031
நகர் வலத்தில் ஓவ்வொரு வானுயர் கட்டடம் பார்த்ததும் திறந்த இரட்டைத் தட்டு பேருந்து மேற்பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் கட்டிடத்தையே கையுள் எடுப்பது போல பாயாத குறையாக படங்களை எடுத்துத் தள்ளினோம். ஆவல் !.ஆவலாக
அடுத்து முறே ஆறும் டார்லிங் நதியும் கலக்கும் பேசின் தான் டார்லிங் காபர். ஷம்மி சொன்னா தான் அதற்குக் கிட்டவே வேலை செய்வதாக. லோங் கோவ், குக்கில் பே என்று இருந்தது  1826வரை. தேசாதிபதி றல்ப் டார்லிங் வந்து டார்லிங் காபர் என்று பெயர் மாற்றினாராம்.
இது டார்லிங் காபர் பின்புறம். ( கூரை வளைவைக் கவனியுங்கள். பின்பும் காணுவீர்கள்)

img_02071

img_02171

தெரு வளைந்து வளைந்து அங்கேயே சுற்றியது...

img_02201

காமன்வெல்த் வங்கி இடம் காண்கிறீர்கள்

தீப்பெட்டி உருவமாகத் தெரியும் வீடுகள் காபர் கூரை வளைவு முன்புறம்

img_02231.

img_02301
மாலை 16.30 க்கே என் தங்கை மகளின் கணவருக்கு வேலை முடியும். அதன் பின்பே எங்களைக் கூட்டிப் போக வருவதாகக் பேசியிருந்தோம். அதற்கிடையில் பேருந்தில் நாம் சுற்றும் போது டார்லிங் காபர் தாண்டியதும்

அங்கேயே சுற்றிச் சுளரும் வளைவுப் பாதை பிரபல சிட்னிப் பாலம் காண்கிறீர்கள் 

img_02491

பாலத்தின் கீழே

img_02631

ஒபேரா அரங்கம் வரும் போது

img_02641

அருகில் நஷனல் பார்க். (தேசிய பூங்கா)

img_02731

இங்கு  (opara) இறங்குவோம் என்று இறங்கிச் சுற்றிப் பார்த்து படங்கள் எடுத்தோம். இது என் கணவர் ஆர்வமாகக் கூறி இறங்கிய இடம். முன்பு படங்களில் ஒப்பரா பார்க்கும் போது இதைப் பார்ப்போமா என்று எண்ணியது உண்டு. இன்று ஆசை தீர நடமாடினோம்.

சிட்னி துறைமுகம்,   வளைவுப் பாலம்,    ஓப்பரா மண்டபம் அனைத்தும் இணைந்த   இடம்.

img_03521

img_03531

Right side  opera

img_03611

img_03451

img_03671

img_03681

img_03731

img_03771
இப்போது ஓப்பரா மண்டபம், மாளிகை அல்லது ஒப்பரா அரங்கம் பற்றி சிறிது பார்ப்போம்.
ஜாக்சன் துறைமுகம் எனும் 82 வயது சிட்னி துறைமுகத்தில் பென்னிலோங் என்ற முனையில் இது அமைந்துள்ளது.   google photo

royalbotanicgardens3

img_03691
20ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தனித்துவமான கட்டிடங்களில் ஒன்று. யோன் அட்சன் என்ற டென்மார்க் கட்டிடக் கலைஞர் 1957ல் வரை படம் கீறி 1959ல் அடிக்கல் நாட்டி கட்ட ஆரம்பித்த ஓப்பரா அரங்கம் 1973-10-20ல் ராணி எலிசபெத் திறந்து வைத்தார். கட்டடம் கட்டத் தேவைப்பட்ட நிதியைக் குலுக்கல் முறையில் பொதுமக்களிடமிருந்து பெற்றனர். ஆண்டுக்கு இருபது இலட்சம் பார்வையாளர்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலம் இது. ஆண்டுக்கு 3000 கச்சேரிகள் நடக்கின்றதாம். ஆண்டுக்கு 7 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனராம்.  அவுஸ்திரேலியாவின் பிரபல அடையளமாக இது விளங்குகிறது.
இது ஒரு தொடர் கொங்கிறீட் குண்டு வடிவத்தில் அமைந்துள்ளதாம். 2194 கொங்கிறீட் தூண்கள், 10 இலட்சம் ஓடுகள் கூரைமேல் தாமரை மாதிரி மலர்ந்த கோலம் அல்லது சிப்பிகளால் செய்த உருவமாக உள்ளது. 2 மில்லியன் ரசிகர்களின் இசை உறைவிடமாக இருக்கிறதாம். இது ஒரு விவரணச் சிறு தொகுப்பு.

Monday ,10 Jun 2013

ஜோர்ன் உட்சன் (Jørn Utzon, ஏப்ரல் 10, 1918 – நவம்பர் 29, 2008)  ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகனில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு கப்பற் பொறியியலாளராவார். 1957 ஆம் ஆண்டில்  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைப்பதற்கான போட்டியில் முதற்பரிசு பெற்றார்.

(ஓப்பராவுக்கும்   பாலத்திற்கும்   இடைப்பட்ட   துறைமுக  குடா அனைத்தும் இறுதிப்  படத்தில் காண்கிறீர்கள்.)
அடுத்த பதிவு 14ல் மிகுதியை அறிவோம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11- 2016

 

cropped-sydneyharbourbridgepd

12.(அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).12

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 12

பேருந்துக் கந்தோரில் பயணச் சீட்டு வாங்குமிடம் அருகில் சிட்னிக்குச் செல்லும் பேருந்தும் தயாராகி நின்றதால் காலையுணவு முடிக்க முதலே இவர் அவதிப்பட்டு 8 மணிக்கே போவோம் என்று பயணச் சீட்டை வாங்கி விட்டார். பேருந்து புறப்படப் போகிறது.

jolimont-centre

தேநீர் பேருந்தில் குடிக்க முடியாது. மேசையில் வைத்திட்டு வாகனம் ஏறியது தான். பாண் முதலே வாங்கியதால் உறையுள் இருந்தது. என்னிடம் எப்போதும் தண்ணீர் இருக்கும். சரி என்று புறப்பட்டாச்சு.
இரவு 9 மணிக்:குப் போவது என்று கூறி விட்டு இப்போது காலையில் பேருந்தைப் பார்த்ததும் இது என்ன காலைத் தேநீர் கூடக் குடிக்காமல்! என்று கோபமாக இருந்தது. அவர் இனிப்பு இன்றித் தேநீரை அப்படியே குடிப்பார்…குடித்திட்டார். எனக்கு முடியாது. பால் இனிப்பு எல்லாம் தேவை. அது தான் வாங்கிய தேநீரையும் அப்படியே வைத்திட்டு வாகனத்தில் ஏறியாச்சு...

cidny
சிட்னி பயணத்திலும் பேருந்தில் அதே முதல் வரிசை இடம், படம் பிடிக்க வசதியாக…”கிறே கவுண்ட்” எனும் பேருந்தில் வந்தோம். இப்போது ” முறாறி சாட்டர் கோச்” என்பதில் பயணமாகிறோம்.
பிறகென்ன!… நடுவில், கொண்டு வந்த பாண் சாப்பிட்டுத் தண்ணீரைக் குடித்தது தான்.
கன்பரா சிட்னிப் பாதை புல் வெளிகள் தான் ஆனாலும் கற்பாறைகளை வெட்டிய பாதைகளாக சில இடங்களில் இருந்தது.

img_01281

img_01341

img_01311

தெருவில் கறுப்புத் தார் இன்றி வெள்ளை நிறமாக சீமெந்து போல பூசி இருந்தது

1-48

ஆச்சரியமான ஆச்சரியம்!!… ஏன்!…..ஏன் ! என்று தலையுள் குடைந்தது. புரியவில்லை. இருவருமே இது பற்றிப் பேசிய படி பயணித்தோம்.
பின்னர் உறவினர் ஒருவர் வீடு போன போது மாப்பிள்ளை சொன்னார் ” உங்கள் கேள்வியை இங்கு கேளுங்கள் இவர் சரியான ஆள் என்று” தெரு வேலை சம்பந்தமான துறையில் பரிச்சயமானவர் நமட்டுச் சிரிப்புடன் சொன்ன தகவல் வெள்ளை பூச்சுப் பூசினால் 20 வருடங்களுக்கும் மேலாக பாதையைப் பாதுகாக்கத் தேவையில்லையாம், மற்றது அங்கு பனி பெய்வது மலைப் பகுதியில் தானாம். இங்கு டென்மார்க்கில் தானே பனி வந்து பாதைகளை அரித்து நாசமாக்கும் செலவும் அதிகரிக்கும்.

சிட்னி விமான நிலையத்திலும் நாம் பயணமான பேருந்து நின்றது ஆட்களை ஏற்ற. (சிட்னியில் முதலாவதாக விமான நிலையம் பார்த்தோம்)

img_01521

img_01471

img_01531
11.30க்கு சிட்னி புகையிரத நிலையத்தின் அருகில், எடி அவென்யூவில் இறங்கினோம். (எடி அவென்யூ முன்பக்கக் காட்சி. மற்றது பின் பக்கக் காட்சி))

img_01621

img_01721

img_01701

பேருந்துக் கந்தோருள் சென்று அடுத்து சிட்னியிலிருந்து பிறிஸ்பேர்ண் செல்லும் நிலைமைகளை ஆராய்ந்;தோம்.

img_01731

13 மணித்தியாலம் என்று நாம் போட்ட கணக்கு பேருந்திற்கு 18 மணித்தியாலங்கள் எடுக்கும் என்பது உற்சாகம் தருவதாக இல்லை. அது பற்றிப் பின்பு யோசிக்கலாம் என்று சிற்றியைச் சுற்ற பயணச் சீட்டு வாங்கினோம்.

img_01681

(இது புகையிரத நிலைய மேற்பகுதி)
ஆளுக்கொரு பயணப் பொதி கையிலிருந்தது. அதைப் பாதுகாத்துத் தர அங்கேயே  (டிக்கட் வாங்கிய இடத்திலேயே) இடமுண்டு. பணம் கட்டி ஒப்படைத்தோம். பேருந்தில் ஏறிச் சுற்றினோம்.

”ஸ்கை கார்டின்” ஆகாயப் பூந்தோட்டம் என உள்ளது.

img_01801

img_01791

இந்தப் படம் போலவும் வேறு மாதிரிகளிலும் உண்டு. கூகிளில் பாருங்கள். (சென்ரல் பாக் அல்லது ஸ்கை கார்டின்  australia  Sydny என்று )  மிக வியப்பாக  இருக்கும்.
பிறாமா றோட் என்று நீண்ட தூரம்

img_01841

கடற்கரை தான் சுற்றிச் சுற்றி தெரு செல்கிறது.

img_01871

img_01891

 

தெருவில் மஞ்சள் நிற கலை வேலைப்பாடு ஒன்று கண்டு படம் எடுத்தேன் மேல் பகுதி பாதி தான் தெரிந்தது.

img_02221

 

டென்மார்க் வந்து ஆராய்ந்து   முழுப்படமும்   எடுத்தேன்.  மஞ்சள் நிறத்தில் கலை உருவ வேலைப்பாட்டு நாளுக்குத் தெருவில் வைக்க செய்ததாம். மிக அழகு.

darling-harbour-yellow

Google photo

மிகுதியை அடுத்த பதிவு 13ல் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-12 2016.

 

kangaroosunset2-gif-oo

 

 

Previous Older Entries