25. கேட்டாளே ஒரு கேள்வி!

12647144_10207411651706678_3673732541357235223_n

கேட்டாளே ஒரு கேள்வி!

***

சும்மா இருப்பதல்ல ஓய்வு காலம்!
சுகமான கனவுகள் நிறைவேற்றும் காலம்
சுதந்திர மனம், ஆரோக்கிய உடல்
சுறுசுறுப்பு அனுபவம் சுயமாய் இயங்குதல்.
உடற் பயிற்சி, உகந்த வெளியுலா,
உணர்வின் மனச்சுளுக்கு எடுக்கப் பல
உற்சாகம் தரும் நூல்கள் வாசிப்பு
உள்ளம் மகிழ உறவுகளின் கூட்டுறவு.
***
அச்சச்சோ நேரம் போதவில்லையேயெனும் போது
உச்சக் கேள்வியொன்று பக்கம் விழுந்தது.
” என்ன வீட்டிலிருந்து சமையல் செய்கிறீர்களா?
என்ன உடல் பருத்து விட்டதா?”
விரியும் தமிழும் நானுமொரு பக்கம்
தெரியாதா என் தமிழ் பற்றி இவளுக்கு!
புரியாது சமைக்கப் பிறந்தவள் என்கிறாளே!
சிரிப்புத்தான் வந்ததிவள் கேள்வியால் எனக்கு!
***
ஓய்வூதியம் எடுத்த பின்னும் மனிதன்
ஓய்வதில்லை. ஓடியாடிய உடல் ஓயாது.
ஓயந்திருத்தல் என்பதும் மனதுக்கும் இல்லை.
ஓடை போன்று ஓடுவதே வாழ்வு!
பல வகையாக வாழும் விதம் உண்டு
கலகலப்பான வாழ்க்கை விதம் ஒன்று
நலமற்ற கறாரான வாழ்வு வேறு.
விலகுங்கள் என் வழி வேறு!
(வேறு)
குமையும் பெண் மனங்களே!
அமைந்த வாழ்வை அற்புதமாக்குங்கள்!
சமையலே வாழ்வு அல்ல!
சமையல் சிறு பாகமே!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-1-2016.
purple line  one

24. ஒத்தையிலே நிக்கிறியே!

950431_Mujer_Silueta

 

ஒத்தையிலே நிக்கிறியே!

***

அத்தை மகளே நீ

சொத்தையாகப் போக மாட்டாய்

நத்தை ஓட்டுக்குள் இருப்பதாய்

நித்தமும் எண்ணாதே நித்திலமே

வித்துவம் பல கற்றிடு

அத்தமிக்க மாட்டாய் நீ

அத்தர் வாசனை அறிவாகட்டும்.

சித்திரமே நீ ஒளிர்வாய்.

***
அத்தாணி மண்டபம் ஏறலாம்
அத்துவானம் ஆக மாட்டாய்
உத்தமர் உன்னைத் தேடுவார்
உத்தியோகமும் உன்னைச் சேரும்
நித்திய நிலவு ஆகுவாய்
சித்தம் நிறையும், வழியும்
பித்தம் பயம் தெளியும்
ஒத்தையிலே நிற்கமாட்டாய் நீ
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-4-2016
green-synthesizer

23. தாயும் தாரமும்

12803283_1004734142940773_4283166069184925070_n

 

தாரமென விதைக்கும் விதை
தாயென உருவாவது கதை.
சாரமிகு அனுபவ உபயமாய்
தாரமே தளிர்க்கிறாள் தாயாக.
தாரம் தாயெனும் பெண்கள்
ஆரம் வாழ்வினிரு கண்கள்.
கருவேந்தும் உவக சீவன்கள்
உருவாகிறார் அன்புத் தாயாய்.
***
பிறந்தகத்து முத்து தாரமாகிறாள்
புகுந்தகத்தில் கருவேந்தித் தாயாகிறாள்.
உடலளித்த தாரம் தாய்மைக்
கடலாகிறாள் தாய்மை வரத்தால்.
இல்லற வட்டத்தின் ஆரம்பம்
நல்லறமாக்க வரும் தாரம்
பல்லறமாகிறது முடிவுரை தாயாய்.
வல்லாண்மையானது தாயும் தாரமும்.
***
மகனைப் பிரசவிக்கும் தாய்
மகனை தத்துக் கொடுக்கிறாள்
செகம் போற்றுமொரு ஆணை
நிகரில்லாத் தந்தையாக்குகிறாள்
தாரம். தாரம் காதலின்றி வரண்டால்
கோரம் வாழ்வு பாலைவனம்.
ஈரம், காரம், சாரமிகு
தாரம் தாயும் வரங்கள்.
***
( வல்லாண்மை – பேராற்றல் )
lines-a

22. தாய்மை

familt21

தாய்மை

ஆய்மையற்ற தூய உறவு
ஆய்பவன் அறிவிலி உறவு
ஒய்தலற்றது தாய்மைத் திறவு
மாய்தலற்ற புனிதத் தரவு

மதுர சஞ்சீவி வரவு
உதரத்திலிருந்து எழுந்த  உறவு
உலகில் யாரெவரோ வருவார்
உன்னத தாய்மைக்கு ஈடேது!

துளியுதிரத் தொடர்பு அப்பா
களியுடன் கருவிலுருண்டு செப்பமாய்
தொப்புள் கொடியாற் பிணைந்து
பாரிற்குத் தந்தாள் அம்மாவென்றோம்.

உழைப்பு, ஊக்கம்,உதிரமாய்
உணர்ந்து, உயிராய், அன்பாய்
உவந்த தாய்மைக்கு நாம்
உயர்வாய்க் கொடுக்கலாம் நற்பெயரை.

உருகியோடும் பனியாறாய்
பெருகும் அன்பு பேராறாய்
தரும் தாய்மை அகண்டது.
பெருமாதரவான கைப்பிடி இது.

கருவறை தொடங்கிக் கல்லறையீறாக
சில்லறையின்றிப் பெறும் தூயது
நல்லறமாகவிது வாய்த்திட்டால் வாழ்வு
பல்லறமான ஒரு பாரிணாமம்.

(திறவு – வாயில், வழி என்ற கருத்தாக)
2-10-2015

12140589_927622443985277_5668174396968589711_n

*

தாய்மை.

*

நெஞ்சத்து வேரில் எழும் தாய்மைச் சுடர்
கிஞ்சித்தும் வெறொன்றுடன் ஒப்பாகாத புனிதச் சுடர்.
மொத்த மனிதத்தின் தனிவசந்தம் தாயினம்.
முத்துகள் பிரசவிக்கும் உயர் சிப்பி தாயினம்.

காலம் காலமாய் விழுது விடும் தூய்மை
நீளம் நீளமாய்த் தொடர்ந்து வரும் தாய்மை.
நெஞ்சில் சந்தனம் கரைக்கும் உயர் தாய்மை
தஞ்சம் தரும் தனித்துவ அன்பு தாய்மை.

என்மனவானில் இனிய இராகம் இசைப்பவள்
என் அப்பாவுடன் இணையக் கை கோர்த்தவள்
நன் மானிட நெஞ்சப் போர்வை கொண்டவள்.
உன்னத வாழ்வை வாசிக்க மொழி தந்தவள்.

பிறக்க வைத்தாயு; உலகில் உருவாய் என்னை
சிறக்க வாழ வைத்தாய் தினமும் என்னை
மறக்காது உன் நினைவு நானிருக்கும் வரை
புறக்கணிக்க இயலாத புனித உறவு தாய்மை.

30-10-2005
இலண்டன் தமிழ் வானொலியில் – சிஐ தொலைக்காட்சியிலும்
நான் தொலைபேசியூடாக வாசித்தேன்.

*

தமிழ் கவிதைப் பூங்கா அமுதசுரபி
*

Signal light   nest  (bird pic)

*

தாய்மை

*
தாய்மை எதற்கும் துணிந்தது உதாரணமாக
தாற்பரியம் புரியாது சமிக்ஞை விளக்கில்
தன் கூடமைத்துக் குடும்பம் நடத்துவது.
*

என்னே பரிவு! என்னே தாய்மை!
ஆவலுடன் அலகு விரிக்கும் குஞ்சுகள்.
உயிரனைத்திற்கும் கரிசனைத் தாய்மை ஒன்றே.
*

சிறகசைக்கும் வரையீயும் பரிவும் பாசமும்.
புயலடிக்காது காக்கட்டும்! போக்குவரவுச்
சட்டமும் சிறிது பொறுமை காக்கட்டும்!
*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
22-6-2016
*

Samme  katu  enkum :-    

https://kovaikkavi.wordpress.com/2017/02/14/476-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/

*

Bar%20Golden%20Rings

21. ஓன்றுக்கு ஒன்று.

TwoLorenzOrbits

 ஓன்றுக்கு ஒன்று.

 

ஒரு விதிக்குள் அடங்கல் என்று

இரு புனித நதிகளின் சங்கமமென்று

பெரும் உடல்நல முடிவிதுவென்று

உருவான எழுதாத சட்டமன்று.

 

பதித்தனர் திலமிடும் வார்த்தைகள்

ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கொருத்தி.

திருத்தச் செயலுடையோருடன் பொருத்தம்.

விருத்தியுளப் பங்காளியுடன் மிகப்பொருத்தம்.

 

உருத்து உண்டொரு நல்லுரிமைக்கு.

யாருக்கு வெறுப்பு, மறுப்புமில்லை.

சேருமிரு பொருந்திய மனங்களிற்கு

ஒருவனிற்கு ஒருத்தி, ஒருத்திக்கொருவன்.

 

வருத்தம் தினம் தரும் வன்முறையாளருடன்

திருத்தவியலாத ஒரு மனச்சீக்காளியுடன்

பொருத்தமற்ற பொல்லாத பங்காளியுடன்

அருத்தமில்லா அமில வார்த்தையிது.

 

 

பா ஆக்கம் பா வானதி  வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

22-8-2005

divider1

20. அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ!

536276_450646624964029_1236563118_n

 

 

 

அலங்காரப் பதுமையோ அறிவுச் சுடரோ!

உளம் திறந்து பழகாமல்

உணர்வுகள் உள்ளே உறைந்திட

உதட்டை இறுக மூடுபவளே!

உதட்டுச் சாயமிட்டு மறைப்பவளே!

உனது திறமை வீணே

உறைபனி யாகிறது தானே!

உறைந்து போவதில் என்ன

உல்லாசம் உனக்குப் பெண்ணெ!

முழுதாய் நாலு வார்த்தை பெற

மூடிய உதட்டைத் திற!

ஆர்வம் நிறை விழிகளால்

அகலத் திறந்து பார்!

சேலைக் கேற்ற மாலை

மாலைக் கேற்ற காதணி

வேளைக் கேற்ற தலையலங்காரம்

விலையோ அளவற்றவுன் திறமைக்கு!

அலங்காரப் பதுமை யல்ல

அறிவுச்சுடர் நீ! – பிறர்

அகவிதழ் திறக்கச் செய்!

அறிவெனும் அகல் விளக்கையேற்று!

சிறுமைப் படுத்திச் சீண்டுவோரை

சிந்திக்கச் செய் பெண்ணே!

சிந்தனையை ஓட விட்டு

சிலிர்த்து எழு பெண்ணே!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

2-12-2001.

தமிழ்சேவை ஓல்போ ஆண்டு ஒன்று- வான்பதி –
இதழில் பிரசுரமானது..

 

 

 

  BR533

19. யார்..யார்! + இருமனம் இணையும்திருமணம்.

imagesCA4VP6VF

*

யார்..யார்!……..

*

யார் கண்டு பிடித்தார் கல்யாண பந்தம்!

வேர் கொண்டு சுயம் அழித்து

தூர் பசளையாகும் பிரதான

ஓரிணைப்பு குடும்ப மரத்தில்.

*

கரைந்து நாளும் கரைந்து

விரைந்து வீட்டைப் பேணி

அரைந்து பெண்ணானவள் தன்னை

அழிப்பது தான் திருமணமோ!

*

வெயிலில் உருகும் பனியாய்

எல்லைகள் வகுத்தலாலே எழுகிறது

பொல்லாத தொல்லைகள் பெண்ணுலகில்.

இல்லை!…யார் இணைத்தாரிதை!

*

கலைந் தோடிய கனவுகளால்

கண்ணீரில் வரையும் வரிகள்

காணாமல் போய் நல்

கனவுகள் உயிர்க்க வேண்டும்!

*

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.   2012.

*****

கம்பன் கவிக்கூடம் கவிதை

இருமனம் இணையும்திருமணம்.

*

இருமனம் இணையும் திருமணம்
பெரும் புனிதம்
அரும் உறவதன் பெருமை
அருகி வருகிறது.
அருவருப்புடை அடக்கு முறை
பெருந் தொல்லையாகிறது.

*

திருமணம் என்றால் விலகுவோரும்
இருமனம் இணையாமலதன்
உருவிழத்தலுமின்று வெகு சாதாரணம்.
உருகுதலென்பது அன்பிலில்லை..
உருவும் உரிமைகளால் தொலைகிறது
எருவெனும் காதல்.

*

எருக்கம் பூவாகிறது பிரியம்.
ஒருமைப் பாடழிகிறது.
ஒரு மனப்படும் வசந்தமே
ஒருங்கிணையும் வாழ்வாகும்.
திருமண வாழ்வின் கருமுகில்
கருவம், சுயநலம்.

*

கரும்பாம் மன்னிக்கும் மனம்
கருணைச் சாரலாகும்
இரும்பு மனம் இளகுதல்
திருமணத்தின் சாதகம்
கருங்கலமான உறவு மிகக்
கருத்தாய் காத்திடணும்.

*

அருமைச் சுகாதாரம் திருமணம்.
கருமணியாய்க் காக்கலாம்.
குரு சந்திர யோகம்
இருமனமிணையும் திருமணம்.
குருகுல வாசமாயும் காக்கலாம்
குழந்தைகள் வாழ்வுக்காக.

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 2112-2016

*

திருமணம்

திரு நிறைந்து சுகாதாரமாய்
திருக்காப்புடன் குறையின்றி வாழ்வதுவாய்
திருமணம் புகுந்தது கட்டுப்பாடாய்
ஒரு தாலி கட்டுவதாய்.
திருட்டி விழுந்தது போலாச்சு
திருத்தமற்று மதிப்பு இழந்தாச்சு.
*
திருமணச் சட்டம் தூசியாச்சு
ஒருமன எண்ணம் காணாமலாச்சு
திருவாசகமாய் திருமண வாழ்வை
ஒருவாசகமாய் வாழுமொரு மனதாளர்
அருமையாய் போற்றி வாழ்வோர்
பெருவாழ்வு வாழுவோருமுளர்.
*
திருவோடு ஏந்துவதாய் நீதிமன்றத்தில்
திருவமுதாக விவாகரத்தை வேண்டுவோர்
திருத்தம் சிறப்பென்று மறுமணத்தை
விருப்போடு தேடுகிறார் விதியென்று.
திருமணப் புனிதம் போற்றுதல்
அருமை நினைவு காத்திடுங்கள்.
*
பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 6-3-2016
*

DB-02

 

18. பெண்ணெ உன் பங்கு பெரிது!.

423031_441831402543770_1633728792_n

பெண்ணெ உன் பங்கு பெரிது!.

 

மாசிலாப் பெண்ணே! உன்னை
மாற்று பண்புடை மனுசியாக
மானுடர் வியக்கவொரு முறையேனும்
மாறு மனிதநேய மனுசியாக!
கண்மணிப் பெண்ணெ! காட்டு
கருணைப் பெண்மை இவள்
கடமைப் பெண் இவளெனக்
கரிசனையா யென்றும்  காட்டு!.

 

சுந்தரப் பெண்ணே! பலவீன

சந்தர்ப்பத்தில் கீழே சாய்வது

நவீனப் பெண்மை அல்ல!

நேர்மை உறுதியுட னடியெடு!

சுதந்திரப் பாதையில் உன்

சுந்தரப் பாதம் நடந்தால்

தளிர்களின் மென் பாதமும்

தளர்வின்றிப் பின் தொடருமே!

 

மலர்ப் பெண்ணெ! மறவாதே!

பசியில் உணவிடுவோன் பெரியோன்

பசி  தீர்ந்திடினும் என்றும்

பகுத்தறிவில் நீ பசியடையாதே!

மரகதப் பெண்ணே! ஊனங்களை

மனதிலிருந்து வேரோடு அகற்று!

மங்கையரினப் பெருமையை நீ

மாநிலதிற்குப் பறைசாற்ற மறக்காதே!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-2-2005.

 

 

floral-divider_9_lg236

 

17. மண்ணும் சிறப்புறும்!….

258303_1923879933886_393596_o

எல்லோருக்கும்   இனிய    மகளிர் தின   வாழ்த்து.

 

 

மண்ணும் சிறப்புறும்!….

 

கண்களின் சங்கமத்தில்

பெண்ணோடு வாழ்ந்திட

பொன்னில் தாலியிட்டு

மண்ணில் திருமணம்.

 

வென்று இல்லறத்தை

நன்று நடத்திட

தோன்றாப் புரிந்துணர்வு

ஊன்றாத தொல்லை.

 

பண்பு இழப்பதினால்

இன்பம் இல்லாது

அன்பையீந்து பெண்

துன்பம் பெறுவதேன்!

 

சாதம் வடித்தாலும்

வேதம் படிக்கலாம்

கீதம் படிக்கலாம்.

வாதம் புரியலாம்.

 

தங்கக் கூண்டினில்

மங்காதே பெண்ணே!

பொங்கி எழுந்திடு!

ஓங்கிடும் புகழ்!

 

பெண்ணை மதித்திட்டால்

நண்ணும் நன்மைகள்.

எண்ணுங்கள் கண்ணியமாய்!

மண்ணும் சிறப்புறும்!

7-3-2013.

இனிய நந்தவனம் பங்குனி 2005ல் பிரசுரமானது.

3-3-2004
(ரிஆர்ரி வானொலி பெண்கள் நேரத்திற்கு ரதி கோபாலசிங்கத்திற்கு அனுப்பி.
வெளியானது)

 

1139540gpr9bczcla

 

16. மனித நேயப் பகிர்வு.

love

T:  5-2-2013

மனித நேயப் பகிர்வு.

*

பூ சூட்டினார் பெற்றோர்.

பூரிப்பு நீயும் சூட்டினாய்.

பூங்கணையானது வாலிபத்தில்.

பூரண மனித நேயனொருவனிடம்

பூவை மதித்து வாங்கலாம்.

*

ரும் பொட்டிட்டாள் அம்மா

அரும் குங்குமம் உன்னால்.

பெரும் சொத்தென உன்னையும்

அரும் புதையலாய் என்னையும்

கருதிட மனித நேயம் தேவை.

*

ன்று கண்ணான பெற்றோர்

பொன் தந்தார். பின்பு

பொன்னால் தாலி. மயங்கலாம்.

கண்ணாக ஒருவரையொருவர்

எண்ணுபவன் துணையமைந்தால்.

*

தாலி பெற்றால் நினைத்திடு

வேலி இருவருக்கும் அதுவென்று!

கூலியான மனிதநேயப் பகிர்வால்

தாலி ஆலி ஆகாது.

தாலி அடிமை விலங்காகாது!

*

டுமை அடிமை விலங்கு!

கொடுமை மனிதநேய மிடிமை!

நெடுமையாய் ஒருவரையொருவர்

கொடுமையின்றி மதிக்கும் மனிதம்

நடுகை மனம் தேவை!

*

ருவரையொருவர் மிதிக்காது

தரும் மனிதநேயப் பகிர்வது

அரும் சுதந்திரப்  பூங்காவது.

பெருமை உலக வாழ்விற்கும்.

திருமண வாழ்வும் கௌரவமாகும்.

*

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ்,  டென்மார்க்.

28-1-2013.

(ஆலி – தேள்.   பூங்கனை – மன்மதபாணம்.  நெடுமை – பெருமை, ஆழம்.   மிடி – வறுமை.)

*

bar line

Previous Older Entries