2. இடைவேளையின் பின்னர் 2

cey6th-24th-march14 260

இடைவேளையின் பின்னர் 2

முதலில் உறவுகளை சந்தித்த மகிழ்வு.
பிறகு வியர்வை.
குளிரூட்டப்பட்ட நாடு போல டென்மார்க்.
இது நேர் எதிர்மாறு. ஆவியில் வேகவைப்பது போல உடல்.

தங்கை மகள் ” இந்தாங்கோ பெரியம்மா”.. என்று லமுனேற் செய்த ஒரு அட்டையைத் தந்தாள். அதை விசிறியாகப் பாவித்தேன். காற்றாடி சுற்றினாலும் அதை மீறி வியர்த்தது. திட்டமிட்டபடி முகநூல் நண்பர் திரு சிறி சிறீஸ்கந்தரஜா வீட்டிற்கு எனது தம்பியுடன் விஐயம் செய்தோம்.

மிகவும் இலட்சுமீகரமான அன்புடை தோற்றம் தந்த இவரது மனைவி மகளைக் கண்டு அளவளாவி வந்தோம்.
முகநூல் நண்பர் டாக்டர் முத்தையா கதிரவேற்பிள்ளை முருகானந்தம் (ஹாய் நலமா புளொ ஸ்பொட்.கொம்.) மிகவும் பரபரப்பாக நடமாடும் மனிதர் இவரை வீட்டில் ஆறுதலாகச் சந்திக்க முடியாது என்று இவரது வீட்டிற்கு செல்லாது கிளினிற்குச் சென்றோம். இவருடன் அளவளாவி. எனது 2 புத்தகங்களையும் கொடுத்தேன் .அவரும் தனது 3 புத்தகங்களை எனக்குத் தந்தார். நான் நின்ற 2 ஞாயிற்றுக் கிழமையும் இவரது ஆக்கம் – கட்டுரை – வீரகேசரி பத்திரிகையில் பார்த்தேன்.
மிகவும் அன்பான இளமைத் தோற்றம் கொண்ட இனியவர். நோயாளிகளை நிறுத்தி வைத்துத் தனது நேரத்தை எமக்குத் தந்தார். மிகவும் மகிழ்ந்தோம்
– மிக்க நன்றி. cey6th-24th-march14 051 cey6th-24th-march14 053 cey6th-24th-march14 054

பம்லப்பிட்டி கோயிலுக்குச் சென்றேன். இது நானாக நடந்து சென்றேன். போனவுடன் புறாக்கள் என்னைப் பறந்து வந்து சுற்றின. ஒருவேளை பக்தர்கள் பிரசாதம் போட்டுப் பழக்கியுள்ளனரோ!…சுற்றிப் பார்த்திட்டு ஒ!..உன்னிடம் .ஒன்றுமில்லையா எனக் கூட்டமாகப் பறந்து சென்றன…
கிளிக்கினேன். cey6th-24th-march14 110

ஆறுதலாக வணங்கிய பின் அமர்ந்திருந்து பார்த்த போது பச்சைப் பசேல் என கூரை மேலே தென்னை ஓலைகள் கண்ணையும், மனதையும் கவர்ந்தது. cey6th-24th-march14 111
புதிய கோயில் திறக்கவில்லை பூட்டியிருந்தது.
cey6th-24th-march14 274

அதையும் படம் எடுத்த பின் வீடு சென்றேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-3-2014

vilkku -2

13. பம்பரம் சுத்துதே!…

after malay12,214 006

பம்பரம் சுத்துதே!…

சுத்துதே சுத்துதே பம்பரம் சுத்துதே!
உத்துவேகத்தின் அழகு உத்துங்கமாகுதே!
பத்துதே பத்துதே பரமானந்தம் பத்துதே
எத்தனை மகிழ்வு பேரனை அணைக்குதே!
ஓத்துதல் போலவே இன்பம் தருகுதே
சித்துவித்தையாய்த் தோற்றம் தருகுதே!
(உத்துவேகம் – மிகவிரைவு. உத்துங்கம் – உயர்ச்சி.
ஓத்துதல் – தாளம் போடுதல். சித்துவித்தை – மாயவித்தை)
28-3-2014

after malay12,214 008
after malay12,214 012

1. இடைவேளையின் பின்னர்…..

cey6th-24th-march14 038
cey6th-24th-march14 039
இலங்கை தொடும் விமானம்.

இடைவேளையின் பின்னர்…..

நீண்ட நாட்களின் (2010ற்கு) பின்னர் இந்தப் பங்குனி 5 ம் திகதி 2014 இலங்கை பயணமானேன். 6ம் திகதி மாலை 3.30க்கு பண்டாரநாயக்கா விமான நிலையம் அடைந்தேன்.

இது ஆனந்தச் சுற்றுலா அல்ல. நோயுற்ற என் தங்கையைப் பார்க்கச் சென்றிருந்தேன். தாய்நாடு செல்லும் மகிழ்வு சிறிதளவும் அல்ல. பொதுவாக நான் சிறிது ஆடம்பரமாக ஆடையணிவேன். இம்முறை சிறிது அடக்கி வாசித்து என் செயல்கள் அங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாகச் சென்றிருந்தேன்.

மனதுள் அழுதழுது உங்களுடன் சாதாரணமாக ஆக்கங்கள் போட்டு உறவாடிய படி இங்கு இருந்தேன். அங்கு சென்றதும் அழுதுவிடுவேனோ என்று பயந்தபடி இருந்தேன். தங்கையின் சாதாரணமான முகம் எனக்குத் தைரியம் தந்தது.

இறைவன் அருளால் தேறிவரும் தங்கை. இதயத்திற்கு அமைதி தந்தது.

பயணம் நன்றாக அமைந்தது. காலநிலையோ மிக வெப்பமாக, அது தாங்க முடியாததாக இருந்தது.
இலங்கையில் பல தெருக்கள் மிக நவீனமயமாக்கப்பட்டு அழகாகக் காட்சி தந்தது.

இங்கிருந்து இஸ்தான்புல் சென்று விமானம் மாறி மாலைதீவு மாலேயில் தரித்துப் பின்னர் இலங்கை சென்றது புது அனுபவம்.
cey6th-24th-march14 032
cey6th-24th-march14 034
மாலை தீவு(மாலே)

பயண அலுப்பு இன்னும் தீரவில்லை. தங்கள் ஆக்கங்களிற்குக் கருத்திட சிறிது தாமதமாகும் மன்னிப்புடன் மீண்டும் தொடருவேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
26-3-2014

312. முத்தம்.

afte Malay12,214 062

முத்தம்.

பாசத்தின் நெருக்கம்.
நேசத்தின் நெருக்கம்.
நெருங்கும் முத்திரை.
சிருங்கார மோகத்திரை.

உணர்வு வாயிற்படி.
உடற்சங்கமப் படி.
ஓத்தியுமெடுக்கலாம்.
ஓன்றுக்குள் ஒன்றாகலாம்.

தேனாற்றில் நீந்தி
தேனையே அருந்தி
இதழ் குவிப்பில்
இதழ் சிவத்தல்.

உயிரின் ஊக்குவிப்பு.
உணர்வின் தேடல்.
உள்ளத்துக் காதல்
உடலிற்கு அரங்கேற்றம்.

காதலின் எரிசக்தி.
கொடுப்பதும் எடுப்பதும்
கொள்ளளவு சமமானால்
காவியத்திற் குயர்த்தும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2013.

 

another one:—

https://kovaikkothai.wordpress.com/2017/08/24/17-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/?fbclid=IwAR0KLygj5Im9FAdj7P7wrbB5b17FpEYF66ONSqcgQSwDyNg6Qnis_vB3KZg

 

 

27873_600