வாழ்வியற் குறள்+தாழிசை. 12

 

 வாழ்வியற் குறட்டாழிசை. 12.

சோம்பலின் ஆட்சி.

 

தீயெனும் முயற்சியைச் சோம்பல் போர்த்தி
நீறு பூத்த நெருப்பாக்குகிறது.

மூதேவி ஆதரிப்பாள் சோம்பேறியின் இடத்தை.
சீதேவி ஆதரிப்பாள் முயற்சியாளனை.

தீம்புடை சோம்பலால் நண்பன் பகைவனாகிறான்.
பேடியாகி எதிரியிடம் தோல்வியுறுவான்.

மெத்த சோம்பலின் சொந்தக்காரன் உலகில்
மொத்த நோய்களின் குத்தகைக்காரன்.

முயற்சியாளரை உலகு ஏற்கும், சோம்பலுடைய
அயர்ச்சியாளரை ஒதுக்கி விடும்.

சோம்பேறி இருட்டில் சுருண்டு கிடப்பான்.
அம்பலத்திலும் ஆட மாட்டான்.

புவனத்தை மறக்கடிக்கும் நோய்களாம் கவலையீனம்,
கவனயீனத்தினாதி காரணம் சோம்பலே.

ளுமைக்குள் தன் சோம்பலைக் கொள்பவன்
ஆளும் தகுதி உடையவன்.

சோம்பலெனும் சாம்பல் துடைத்தவனிற்கு எங்கும்
தாம்பூல வரவேற்பு உண்டு.

ம்பல் பூத்ததான அழகுடை நந்தவனம்
சோம்பல் அழித்தோன் மனது.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-8-2011.

In Anthimaalai web site:-    http://anthimaalai.blogspot.com/2011/09/12.html

  

                         

 

 

பெற்றோர் மாட்சி. 36.

 

 

பெற்றோர் மாட்சி. 36

10-1-2009.
கடமைகள் என்று பணிகளை
உடைமைகள் ஆக்கி இயங்குவதே
மடைமையற்ற வாழ்வென்று பெற்றோர்
வடமெனப் பிடித்தெமை வளர்த்தனர்.
படமாய் அவற்றையழகு படுத்தலே
திடமான சொத்தாம் எம் கடமை.

27-12-2008
எண்ணங்களால் நமக்கு நன்மை சேர்த்து,
திண்ணமாய் பிறருக்கும் தீங்கு செய்யாது,
வண்ணமான சிந்தனை பரவிடு…
என்ற சூழலில் வளர்த்து
விண்ணேகிய பெற்றோரின் குணநலன்கள்
தினமும் விரிகிறது மனதில்
வானவில் வண்ணங்களாக.

20-12-2008.
ஊக்கமும் ஆக்க உணர்வுக்கும்
நீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.
நீண்டு தொடர்கிறதிதுவென் பிள்ளைகளுடாக.
ஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்
ஊக்கமாகும் எம் பிள்ளைகளுக்கு.
காக்கும் இச்செயல் எமது நம்பிக்கையை.

6-12-2008.
தித்திப்பான தமிழைப் படிக்க
கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, காரம்
துவர்ப்பாயும் தூண்டினர் பெற்றோர்.
அறுசுவையாகத் தமிழையின்று  அனுபவிக்கிறோம்.

23-11-2008.
பிறந்தேன். பிறந்து சுயமான திறமையில்,
பிறரோடு கலந்த கூட்டிணைவில், நிறம்
பெற்று வாழ வழி காட்டிய சிறந்த
பெற்றவரை எண்ணி,  வாழ்வதற்காகவே
நான் வளர்ந்தேன்- உயர்ந்தேன்-
இப்புவியில் பிறந்தேன்.

22-11-2008.
நம்பிக்கை பெற்றவரில் கொண்டு நாமும்,
எம்மை நம்பி மனமிணைத்துப் பெற்றவரும்
வாழ்கிறோம். தம்படி கூட நம்பிக்கையிழந்தால்
தரணி வாழ்வு அர்த்தமின்றிப் போகும்.
தம் வழிகாட்டலில் எம் நம்பிக்கையை
பெற்றவர் வளர்க்க வேண்டும்
சிறந்த தன்னம்பிக்கையாக!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
வலையேற்றம்:- 28-8-2011

தம்படி –  அணா நாணயத்தில் 12ல் ஒரு பாகமாகிய பை (பழைய நாணய முறையில்). a pie equal to a twelfth of an anna ( under the old coinage)

 

 

                         
 

 

204. வெட்கக் குமிழிகள். (பாமாலிகை (கதம்பம்)

 

 (படத்தைக் கிளிக் பண்ணினால் குமிழிகள் அசைகின்றன.)

வெட்கக் குமிழிகள்.

நேற்று நீ அவனை ஒதுக்கினாய்!
காற்று அவனுக்கு வீசுகிறது இனிதாய்…
ஏற்றமிகு நட்பின் இராகம் புரியாது
வேற்று மனிதனாய் ஒதுக்கினாய்! தீது!

ஊரின்றி, உறவின்றி உதித்திட்ட நேசம்
சீரியதாய் இதயத்தில் கலக்கவில்லையோ!
இது போல் ஏமாற்றுதல் பழக்கமோ!
எதுவும் தோன்றவில்லையோ உனக்கு!

உத்தம அன்பு காட்டில் மழையானது.
சத்தமின்றிக் காரியமாற்றும் ஒரு
மொத்த சுயநலப் பிறவி என்று
சித்தத்தில் தோன்றலையே முன்னமவனுக்கு.

ஒற்றுமை செயலில் இன்றி அவனிடம்
பெற்ற உதவிகள் மறந்தாய்! ஒதுக்கினாய்!
சற்றுத் தெளிவாயொரு கணம் சிந்தி!
தொற்றிடும் இது உன் வாரிசிற்கும்!

அன்பு கொடுத்து அன்பு பெறுதலே
இன்ப வாழ்க்கையை வாசித்தல். உன்னகம்
அன்பு கொடுத்து அலட்சியம் செய்தலே
அகராதியென வெட்கக் குமிழிகள் இடுகிறது….

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-8-2011.

 

                              

28. கவிதை பாருங்கள்(photo,poem)

 

                        

26. பைங்கொடியே உன் சுவாசத்தோடு…(.பா மாலிகை (காதல்

 

பைங்கொடியே உன் சுவாசத்தோடு….

 

மைகொண்ட விழி மலர
மையல் கொண்ட மனமசைய
தையலே! உன் மொழியாலே
தைரியமே தினம் கைகாரியே!

ண்ணேந்தும் துயில் மறந்து
கருத்தேந்தி நிதம் நினைந்து
காதற் சாரல் தூவிடுதே!
காவிரியாகி மோதிடுதே!

வாலிபக் காதல் வசீகரத்தாலே
வயதில் வாசனை வீசுதே!
வாலாயமாகி விழுந்ததினாலே
காதல் போர்க்களமாகிறதே!

ளமை விருந்தால் வென்றிட
இதயம் தேடிப் போராடுதே.
இனியெதற்குப் போர்க்களம்!
இதய நிழலில் இளைப்பாறுவோம்!

பைந்தொடியே! உன் சுவாசத்தோடு
கையேந்தி நடை பயில்வோம்!
கைரேகை அழியும் வரை
வையகத்திலாடுவோம் பைங்கிளியே!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-8-2011

 

                           
 

203. மை….மை…..வறுமை (பாமாலிகை (கதம்பம்)

மை….மை…..வறுமை

ல்லாமை தரும் நிலைமை
வறுமை! பெரும் கொடுமை!
வெறுமை! இதிலில்லை பெருமை!
உண்மை உழைப்பு வறுமை
வராமை காக்கும்! முயலாமை
இயலாமை இணைதலே வறுமை.

னிமை ஒரு வகை வறுமை.
இனிமை வார்த்தை பேசாமை,
அன்பின்மை வேண்டாத வறுமை.
அறியாமை, அறிய மனமில்லாமை,
ஈயாமை, ஆதரவு இல்லாமை,
உண்மை பேசாமையும் வறுமை.

மை போன்றிவை கருமைத்
தன்மை கொண்டு மேன்மை,
பெருமை அழிக்கும் உண்மை.
செழுமை அழிக்குமிச் சிறுமை
வராமை காத்தல் வலிமை.
வறுமை தடுத்தல் மேன்மை.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-8-2011.

another poem:-   

வறுமை

1.
பணம் இல்லாமை மட்டுமல்ல வறுமை
குணம் நற்பழக்கம் இல்லாமையும் வறுமை.
உணவு, உடை, இடமின்மை வறுமை.
டேன்மார்க்கில் வறுமை ஒழிப்பு உண்டு.
2.
இந்தத் திட்டம் இந்தியாவின் வறுமை
ஓழிப்பிற்குப் பயனாக்கி அங்கு வறுமை
இல்லாது ஒழிக்க வேண்டும். வறுமை
பல குற்றங்களுயர்த்திடுமொரு கொடுமை வறுமை.
3.
வறுமையாம் இல்லாமை, ஏழ்மை கொடுமை
ஆதிகாலம் தொட்டு வறுமை துன்பமே.
இருப்போர் ஈந்தால் வறுமை அழியும்.
தீயின் நாக்கிற்கு இல்லை வறுமை.
4.
மனித நாவிற்கும் வறுமை இல்லையாம்.
பெண்மை காத்திட உலகிற்கு வறுமை.
தன்னம்பிக்கை இல்லாதவன் நிலையும் வறுமை.
சொற்களால் கூறவியலா உணர்வு வறுமை.
5.
ஐப்பசி பதினேழு வறுமையொழிப்பு நாள்.
” கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை”
ஒளவையார் சொன்னார் அறிவு வறுமைக்கு.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 19-8-16

Samme heading another poem  :—- https://kovaikkavi.wordpress.com/2010/09/18/80-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/

In Tamil authors.com- This poem :-  http://www.tamilauthors.com/03/444.html

  

                            

வாழ்வியற் குறள்+தாழிசை. 11 (குழந்தைச் செல்வம்)

Art byVetha.

வாழ்வியற் குறட்டாழிசை. 11

குழந்தைச் செல்வம்.

 

குழந்தைச் செல்வத்தை மக்கள் இளமைக்
காலத்தில் பெறுதல் ஆரோக்கியம்.

குறையற்ற குழந்தைச் செல்வத்தை எமது
குறையற்ற உடல் உற்பத்தியாக்குகிறது.

குழந்தையைப் பெற்றால் மட்டும் போதாது
குறைவறப் பராமரித்தல் அவசியம்.

உலகிலேயே இனிய இசை  தம்
மக்கள் மழலைச் சொற்களே.

உலகத்துத் துன்பங்களை  ஒரு மழலை
உதிர்க்கும் புன்னகையில் மறக்கலாம்.

சின்னக் கைகளின், கால்களின் அபிநயத்திற்கு
என்ன விலையும் கொடுக்கலாம்.

நல்ல பிள்ளைகள் பெற்றவருக்கும், பெற்றவர்
நல்லவரானால் பிள்ளைகளுக்கும் பொக்கிஷமே.

உலகிலேயே பெரிய துன்பம் பிள்ளைகள்
உருப்படாது உருவாகுதல் என்பது.

குழந்தைச் செல்வம் நவீன உலகில்
குழப்பமுடைய  செல்வமாம் சிலருக்கு.

குற்றமற்ற பளிங்கு மனதால் தெய்வத்திற்கு
குழந்தையை சமன் படுத்துகிறோம்.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-8-2011.

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/09/11.html

  

 

                                  

 
 

வேதாவின் மொழிகள்.. 15

 

வேதாவின் மொழிகள். 15

வரி.  16-10-2004.

ள்ளங்கை வரியில் சிலர் வாழ்க்கை வரியைக் கூறுகின்றனர். சித்திர வரிகளிலும், அதன் நிறங்களிலும் சிலர் மனவரியைக் கூறுகின்றனர். கண்களால் காதல் வரி கூறாமல் கூறுவர். காதல் வரியை இன்னொருவன் முத்த வரியில் காட்டுவான். கடித வரியில் காட்டுவான் அடுத்தொருவன். கானல் வரி பாடுவான் செம்படவன்.

குத்து அறியும் தன்மை கொண்ட நாம் கோயிலில் அருச்சனைக்கும், பிரசாதம் வாங்கலுக்கும் வரிசை தவறி கும்பலாக இடிபடுவது போலன்றி, வானத்தில் பறவைகள் வரிசையாக அழகாகப் பறக்கின்றன – உயர்திணை, அஃறிணை வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.

ன்னம் (சோறு) இல்லையென்று ஊரில் அழுபவர் ஒரு புறம். அன்னம் (சோறு) உண்ணவே அந்நியப் படுவது புலம் பெயர்வின் மறுபுறம்.  அந்நிய உணவுக் கவர்ச்சி இது.

26-7-2004
குழந்தைகள் மனதில் நன்கு பாய் விரிக்க மெல்லென தமிழைப் பாய்ச்சுங்கள். பசுமரத்தாணியாகப் பாய்ச்சுங்கள்.

ன்றிணைப்பின்   சாரம்  சம்சாரம்.    அன்பின்சாரம்,   அறிவின் ஈரம், அமைதியின் ஆரம்   பூணவேண்டும் சம்சாரம்.

விடாமுயற்சியாளன் நிறைய சாதிப்பான்.சோம்பேறி இதை நினைக்கவே மாட்டான்.
வாலிப வயதினர் தலை காலியாக இருந்தால்   சாத்தான் புகுந்திடுவான். பொறுப்புகள் கடமைகளை அவர்களிடம் ஒப்படையுங்கள்.   காலியாகத் திரியவும் நேரம் அமையாது.

ற்செயல், நற்பண்பால் சமூகத்தில் நமது நிலைப்பாட்டை ஒரு நல்ல நிலையில் நிலை நிறுத்த முடியும். நிலை குலைந்த வாழ்வு நமது நற்பெயரை   நிலை  நாட்ட   மாட்டாது.

புகைத்தலால் ஈரல் குலை கருகுதலும், உடல் சுகாதாரம் குலைதலும் நிதர்சனமாகியும், பலர் தமது உயிருக்கு வாழ்ந்தபடி, தாமே கொள்ளி வைப்பது தான் வியப்பிலும் வியப்பு!

ஆதவன்.(சூரியன்)    2-5-2006.

தவனின் கடமையுணர்வு, விடாமுயற்சி ஒரு
மாதவத்திலும் நற்பயன் தரும்

நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
ஆதவனாய்ப் பயன் தரும்.

பிரதிபலன்  கருதாத கொடையாளி ஆதவன்.
பிரதியுபகாரம் வேண்டுபவன் மனிதன்.

றைந்தாலும் பேசப்படுவாய் ஆதவனாய்..நீ
நிறைந்த அன்பைக் கொடு.

றிக்கும் நாற்பது பாகை ஆதவமும்
தெறிக்கும் நாற்றமுடைய வார்த்தையும் சமம்.

ல்லவை ஆதவன் பொற்கதிராகும் அல்லாதவை
கதிர் மறைக்கும் கருமேகம்.

18-2-2006.
பிள்ளைகளை அடித்து ஏசி வளர்த்தது அன்று. பிழைகளை எடுத்துக் கூறி, பயனை விளக்குவது இன்று.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-8-2011.

 

                           

 

25. அன்றூவின் 18. ( பா மாலிகை (வாழ்த்துப்பா, )

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
2011.

                         

24. அனுராம் பத்து வயது. வாழ்த்து.(பா மாலிகை (வாழ்த்துப்பா,)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-7-2011.

                 

Previous Older Entries