445. திண்ணை

thinnai

 

திண்ணை

***

திண்ணை மரபு வீடுகளில் உள்ளது.
கண்ணை முடிச் சாயும் மேடையிது.
திண்ணைப் பள்ளிக் கூடம், பஞ்சாயத்து
கண்ணைத் திறக்கும் மேடை, குந்து.
***
நீண்ட பயணக்காரர், வழிப்போக்கரும் தங்கி
உண்டு ஆறிப் பயணம் தொடருவார்.
மீண்டு இரவுத் தங்கலிற்கும் பயனாகும்.
திண்டாடும் பிரச்சனைகளிற்கு நீதிமன்றமும் ஆனது.
***
திண்ணை தூங்கிகளும் ஊரில் இருந்தனர்.
பெண்கள் கொக்கான் வெட்டு விளையாடவும்
பண்டைய சோழியாடுதல், தாயம் போடவும்
திண்ணை பழம் பெருமை வாய்ந்தது.
***
படுக்கை, இருக்கை, அரட்டை அரங்கமாய்
பாலகருக்கு பாடம் புகட்ட வசதியாகவும்
பழம் பெருமை வாய்ந்த திண்ணையின்று
படத்தில் மட்டும் காணும் சொர்க்கம்.
***
ஒன்றரை அடி உயரத்தில் வெளியே
வாசலுடன் சேர்ந்தது. பொது குந்து.
உள்ளே உறவுகளுடன் ஒட்டி யுறவாடும:
அள்ளியணைக்கும் அழகு, பழைய சோபா.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-3-2016
vector_146.cdr

444. மனிதாபிமானம்.

11949468_878866778861210_5900385909451589937_n

மனிதாபிமானம்.

***

புனிதமுடை அன்பு, தன் மதிப்பு
புகழுடை அறிவு, உள்ளக் களிப்பு
வனிதமுடை பாசம், பற்று, உயரெண்ணம்.
மனிதனின் அபிமானம் நன் மதிப்பு
இனிய நன்மையுடை மனிதாபிமான உணர்வு.
அனிதமான உயிர்களிற்குப் பலன் குவிவு.
கனிவு கருணையால் நிகழும் பகிர்வு.
கனியாத மனதில் முதிராது கனிவு.
***
அழும் குழந்தைக்கு அன்பு அணைப்பு.
விழும் மனிதருக்கு ஆதரவு இணைப்பு.
ஆழ்ந்திடும் மக்களுக்குக் கொம்பாகப் பிணைப்பு.
சூழும் துன்பங்கள் துடைக்கும் நினைப்பு.
அகதியாக வந்தோருக்கு ஆதரவு தந்தது.
அன்பாக இருப்பிடம் மொழியுறவு தந்தது.
அபிமானம் எம்மில் வைத்த டென்மார்க்கது
அளவற்றது என்றும் எம் நன்றியது.
***
அன்னை திரேசா, இளவரசி டயானா
அன்ன பலர் உன்னத இடமெடுத்தார்.
இன்னும் புலம் பெயர் மக்களின் இன்னமுத
மனிதாபிமானத்தால் ஏராளமான மக்கள்
இலங்கையிலும் மறுவாழ்வு பெற்று உயர்கிறார்.
உலகமே மனிதாபிமானத்தால் சிறந்து உயிர்க்கிறது.
மனிதம் வன்முறையை, குண்டை மறந்து
மனிதநேயம் பெருக்கிச் சிறந்து வாழட்டும்.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-2-2016.
Active
blue-line

74. பூக்கடை

 

download

 

 

பூக்கடை

***

பூக்கடை வாசத்தில் இழுக்க
பூவாய் மனம் மலரும்.
பூங்கணைக்கு மயங்காதார் யாருளர்.
பூங்காற்றும் நெஞ்சு நிறைக்கும்.
***
பா கட்ட மனமெண்ணும்
வாவென்று மனம் அழைக்கும்.
ஆகாட்டி மனம் ரசிக்கும்.
தூவென்று யார் வெறுப்பார்!.
***
பூமாலை கட்டி அதைப்
பூணாரம் ஆக்கலாம். நீ
பூவாய் மணப்பாய் பூரிப்பாய்
பூவழகி பூவாடைக்காரி நீயே!
***
பூ விற்கும் கை
பூ மணம் வீசி
பூவையின் மணம் ஊரையிழுக்கும்.
பூவாய் பணம் பெருகும்.
***
பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-3-2016
lotus-border

443.அன்பிற்கு ஏது வேலி.

10399845_974702962621176_2179188504190133056_n

 

12804748_961164633975958_2972149221401254194_n

 

Muthupet Maranிலாமுற்றம் (கவிதைகளுக்கான தேடல்) வணக்கம் கவி உறவுகளே நிலாமுற்றத்தின் வெள்ளி முத்திரை பெறுகிறார் கவிதாயினி Vetha Langathilakamஅவர்கள். அவருக்கு நம் வாழ்த்துகள்.

நிலாமுற்றம் கவிதை

அன்பிற்கு ஏது வேலி.

***

பாகனின் அன்பில் மயங்கி
பாலகியைத் தும்பிக்கையில் தாங்கி
பாகாயிளகி பாசத்தில் கிறங்கி
ஆகா! அன்பிற்கேது வேலி!
***
பூவாய்த் தாங்கும் துணையும்
பூரிக்கும் பிள்ளைகள் அன்பும்
பூவாய் மலரும் பேரரும்
பூரண வேலியற்ற அன்பு.
***
அள்ளியெடுக்கும் தமிழ் பாலிங்கு
துள்ளியோடும் பெரு நதி.
கொள்ளையிடும் பொதிகைத் தமிழன்பு
தள்ளியோடா வேலியற்ற அன்பு.
***
அன்பிற்குக் கோபம், அதிகாரம்,
வன்முறை ஆகாத வேலியே!
அன்பிற்கு அன்பு, பாசம்
என்றுமே வெலியில்லையே!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 1
0-3-2016.
Balloon Border-b

442. இளவேனிலே வா!

2512_10200423865136381_923791103_n

இளவேனிலே வா!

***

கசந்த பனிக்காலம் மறைந்து இனிய
வசந்தருது இதம் தரும் பசுமை
வசந்த காலம் இளவேனிலாம், சித்திரை
வரும் பின் வைகாசி வரை.
கனவுகள் பலவற்றின் திறவு கோல்.
கனதியாகும் வறுமை தழுவும் மக்களிற்கு
கலக்கும் அதிஷ்டத்தோடு நல்வரவாகட்டும்!
கந்தைத் துணி மாற்றும் புதுவருடமே!
***
புத்தாடை புதுப் பொங்கல் பலகாரம்
புத்திர செல்வங்கள் உறவுகளோடு நாம்
சித்தமினிக்கக் கொண்டாடும் சித்திரையே வருக!
சிறப்பகள் பல கொண்டு வருகவே!
முற்றத்தில் பொங்கல் சூரிய வழிபாடு
சுற்றங்களிடம் புதிதாகச் செல்லல், அவர்கள்
குற்றமின்றி எம்மிடம் வருகையென மாதம்
முற்றும் கலகலப்பு! கோலாகலச் சித்திரையே!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
1-4-2016

சித்திரையே வா

தத்தரிகிட தத்தரிகிட துன்முகியே
தத்தளிக்கும் நம் மக்கள்
தித்தரிகிட தித்திக்க வாழ
சித்திரையே சிறக்க வா.

அத்தமிக்காமல் நம்முரிமை நிலைக்க
அத்தியாயம் புதிதாயெழுதி உன்
முத்திரை பதிக்க வா
முத்தமிழும் சிறக்க வா.

உத்தம உழவர் சிறக்க
முத்தான இயற்கை செழிக்க
பித்தன் திருடன் பயமழிந்த
உத்தம வாழ்வு தா.

கெட்ட சிந்தனை மனிதரை
திட்டமாய்த் திருத்த வா
கட்டான அன்பில் திளைக்க
இட்டமுடன் சித்திரையே வா

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
14-4-2016

 
karthikai oli- 2b

105. மன அலை

1381316_575433609178654_1443090284_n.jj

 

மன அலை
நன்கு தெளிவாக உள்ளதால் வரிகளை எழுதவில்லை.

 

bordertrans-kk

441. மழலை மொழி

1917450_981247128633426_1896086170684920730_n

 

 

அழலை – தொண்டைக் கரகரப்பு. குழவி – கைக் குழந்தை. மிழலை – மழலைச்சொல். குழவு – இளமை.)

***
அழலை இன்றிக் குயிலினிமையில்
மழலைப் பேரன் சோழாவின்
குழவி மொழியை மறுபடி
மிழலையாய் நடித்து மகிழ்வோம்.
படுக்கையிலும் நடக்கையிலும் நாம்
எடுத்துக் கூறி மகிழ்வோம்.
எடுப்பாவார், இதயம் நரைக்கார்
எழில்குழவும் மழலை மொழியால்.
***
அத்தத்தா என்று வாயில்
தத்தத்தாவென உமிழ்நிர் வடிய
எத்திக்கும் துண்டு துண்டான
தித்திக்கும் கவிதை மழலை.
பொன்னுருகி வடியும் சிங்காரம்
சின்ன உதடு சிந்தும் கவிக்கு
கன்னித் தமிழிலும் அர்த்தமில்லை.
என்ன விலையுமற்ற இறைமொழி.
***
பா ஆக்கம் பா வானதி வேதா.
இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-3-2016
1424422_773891019303899_1021719375_n99