
4. பயணம். மலேசியா. 14
போராளிகள் அடையாளச் சிலை பார்த்தோம். அந்த இடத்தைச் சுற்றியுள்ளவை பாராளுமன்றத் தொடர் மாடி வீடுகள்.
கோலாலம்பூர் நகரம் கிளங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. மலேசிய மொழியில் குவாலாலும்பூர் என்பது ” கலங்கிய சங்கமம்” என்ற கருத்துடையது.
வெள்ளீயச் சுரங்கங்கள் அமைக்க மலாய் மன்னனால் சீன தொழிலாளர்கள் இங்கு தருவிக்கப்பட்டனர். இவர்கள் கொம்பக் ஆறும், கிளாங் ஆறும் கலக்குமிடத்தில் (இங்கு) தங்கினார்கள். ஆரம்பத்தில் தென்னங் கீற்றுகளாலான இவர்கள் இடங்கள் பின்னர் செங்கற்களாலான கட்டிடமாக ஆகியது. செங்கல்லுகள் ஓடுகளாலான கட்டிடங்களிற்குச் செங்கற் சூளைகள் அமைந்த இடமே சிலங்கூரில் பிறிக் பீஃல்ட்(Brik field) என்று கூறும் லிட்டில் இந்தியாப் பகுதியாக அமைந்தது. வெள்ளீயச் சுரங்கங்களே பின்பு வணிக மையங்களாக மாறி எல்லை நகரமாக உருவெடுத்தது.
ஏன் இந்தச் சிறு அறிமுகம் என்று யோசித்தீர்களா!
அடுத்த நாள் கோலாலும்பூர் மத்திய சந்தை பார்க்கலாம் என்று சாந்தியும் தீலீபனும் (மகன் – மருமகள்) கூட்டிப் போனார்கள். வாகனம் நிறுத்திய இடத்தின் எதிர்ப்புறம் தெருவைக் கடந்து சிறிது தூரம் நடக்க சந்தை வருகிறது. கடக்க முன்னர் இதில் ஒரு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் நின்று பார்த்தால் கிளங் ஆறும் கொம்பக் ஆறும் சேரும் இடம் தெரிகிறது. முதலாவது படம் பாருங்கள். பாலத்தால் இறங்கி ஆற்றோடு ஒரு பக்கமாக நடந்து

சந்தையை அடைந்தோம். நான் பின்னாலே வந்து படம் எடுத்தேன்.
google photo.
குட்டிக் குட்டி சதுரங்களாக பெட்டிக் கடை என்று கூறலாம் (மாதம் 3000யிரம் றிங்ஙெட் வாடகையாம்) மலேசிய கைப்பணி, கலாச்சாரப் பொருட்கள் அத்தனையும் வாங்கலாம்.
ஒரு குதூகலம் தரும் இடமாக இருந்தது. நான் இப்போதைய நவீனமான பெரிய மோதிரம் 3 வாங்கினேன்.

வித்தியாசமான நிற கற்கள் பதித்தவை. சீன, இந்திய என்று பல வகைக் கடைத் தொகுதிகள் உள்ளன.
மேல் மாடியிலும் கடைகள் உள்ளன.
சுற்றி முடிய சென்டுல் (cendul ) மலேசிய பிரபல குளிர் பானம், இங்கும் சாந்திக்கு வேணுமென்று பார்த்தோம்.

தேங்காய் பால், மண்ணிறச் சீனி, ஐஸ், ஜெலி கலந்த கலவை. பெரிய ஐஸ் கட்டிகளை அரத்தினால் வெட்டிப் போட்டு மிக்சியில் அடித்துத் தருகின்றனர்.
பிளாஸ்ரிக் உறையில் போட்டுத் தருகின்றனர். உறிஞ்சியினால் அப்படியே உறிஞ்சிக் குடிக்க வேண்டியது தான். பழைய கட்டிடங்களும், நவீன கட்டிடங்களின் கலவையை
old and new building in the samme place.
இந்தப் படத்தில் காணலாம். கீழே இருக்கும் படம் மத்திய சந்தை ஒரு காட்சி வெளியிலிருந்து பார்க்க.
நாளை வேறு இடம் செல்வோம்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-11-2012.

0.000000
0.000000