53. தாதான்மியக் காதலுரு…..

11075315_10205201894081371_1963618067_nதாதான்மியக் காதலுரு…..

தாஜ்மகால் காதலுக்கு என்ற

தாக்கமோ காதல் சிலை!

தலையாம் மலையுச்சியில் தவம்!

தாதான்மியக் காதல் உரு!

 

இயற்கையை ரசிக்கும் உள்ளம்

இணைவிழி இணை மனத்தோற்றம்

இதுவன்றோ காதல் என்ற

இன்னுயர் உதாரணக் கல்லுரு.

 

ஊனுயிராய் உலவிக் கலக்கும்

ஊன்றுகோல்! அன்பு ஊற்று!

உன்னதம்! காதல் இறைமை!

இத்தேடல் பிரபஞ்ச  மயக்கம்!

 

இவ்வாடல் உலக இயக்கம்!

காதலியல் ஒழுக்கம் தரும்

காதல் செய்யுங்கள் மனுகுல 

காந்தி! மாசு அறுக்கும்!

(தாதான்மியம் – ஒன்று பட்டிருக்கை)

https://www.vallamai.com/?p=55640

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்  

23.3.2015

இரண்டாவது வரிகள்-

உயில் விருந்து.

”…உலகத் தொல்லைகள் வேண்டாம் வா 

உச்சிமீதமர்ந்து காற்று ஊடாடாது இணைவோம்

உறைந்து போவோம் இன்பக் காதலில்

ஊர் சுற்றுவோர் கண்களிற்கு விருந்தாவோம்…”

உயில் எழுதி பணமும் வைத்த

உல்லாசப் பயண மலையேறும் சோடியின்

உருவச் சிலையிது உருவாக்கியவர் வாழ்க!

உவப்பான அற்புதச் சிற்ப விருந்து!

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

24-3-2015

பாராட்டுப் பெற்ற வரிகள் காண இணைப்பு….இதோ!…

http://www.vallamai.com/?p=55903

Center-Divider

93. தவறு

rainbow-wood-colours-wallpaper-ll

தவறுகள் பற்றி சில வரிகள்

9931287-page-rule-assortment-yy

367. எங்கே போகிறது

atman_self_realization

எங்கே போகிறது

வாழ்வு முடிந்திட எம்மைத் தொடர்வதொரு
ஆழ்வெளி வாழ்வா! எங்கு போகிறோம்!
சூழ் நிலவும் சூனிய வெளியுமா!
வீழ் இறகாகி விண்ணில் வலமோ!
உடலின் ஆன்மா கடலாவி போன்றதோ!
சடலம் எரியும், சாசுவதம் ஆன்மாவோ!
உடலம் தேடி மறுபடி அடைக்கலமோ!
சுடல் என்பது ஆன்மாவிற் கில்லையோ!

உடலைப் பிரிய விரும்பாத ஆன்மா
கடலைத் திடலை எப்படித் தாண்டும்!
படலையாக மனமா! ஆன்மா நடலையிடுமே!
ஆன்ம விடுதலையொரு காத்திர விடுதலை
நேத்திர நீர் வடிய முறையான
சாத்திரப்படி கோத்திர வழிப்படி எம்
ஆத்தும சாந்திக்காய் ஏத்தும் அமைதிப்படி
ஆன்ம சேத்திர விடுதலை எனலாமோ!

(நடலை- அசைவு)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
25-3-2015

இதே மாதிரியில் எனது இன்னொரு ஆக்கம்.
இணைப்பு இதோ!….

230. ஆத்மா

Navagraha_Set.296235533-640x300

40. எழுதுகோல் எடு!

 

1111A copy

எழுதுகோல் எடு!

ஆ வரைந்து மொழியறிந்த காலம்

பூ வரைந்து ரசித்ததொரு காலம்

பா வரைந்து திளைப்பதிக் காலம்.

ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.

எழுதுகோல் எடுத்திடு!எழுதுவோம் கவி.

பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி

கழுவிட வழிகள் பலவாய்க் குவி!

நழுவிடாதே நடுவோம் நற் கவி!

 

தேட்டம் தொடர்! பாட்டை வடி!

நாட்டமுடன் பல இதழ்கள் படி!

வாட்டம் தொலை! வாழ்வின் படி 

ஆட்டம் காணாது இறுகப் பிடி!

வல்லமையாய் மொழிக் கடலுள் ஆழ்ந்து

நல்ல பாக்கள் பல குவித்து

வல்லாங்கு அறிவில் திறன் கலந்து

வெல்ல வேண்டும் வெற்றியை அணைத்து.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

21-3-2015

pathivukal.com

 

92. கவிதை பாருங்கள் – வா தமிழ் பேசலாம்+ நான் விண்ணளந்து.

15688224-Рама-из-глаз-перо-Павлина-на-белом-фоне77

தமிழில் எழுத்துப் பிழைகள் முகநூலில்….
மனம் வேதனையாக இருக்கும் .
அதை எண்ணி எழுதியது.

10482315_1522406734676771_1630941226490303735_nn

9931287-page-rule-assortment-v

39. தமிழ் கடலில் சுழியோடல்…

Tamil_News_436256051064

தமிழ் கடலில் சுழியோடல்…

கவிதை சிலவேளை பினாத்தல் ஆகிறதோ!

சதைப் பிடிப்பெனும் அருத்தமில்லாப் புலமையற்று

கதைப்பதாகித் தனக்குள் பூஞ்சையான ஊதுகுழலின்

விதைப்பாகிறதோ, பித்தன் மொழியை அலசுதலாக!

கவிதையைக் கருத்தாழப் பதிதல் அறிவாகி

உவிதலற்று உயிராய் மலர்ந்து மணக்கிறது.

பூவிதையாய் ஆழப் பதிவாய் மகிழ்வு தருகிறது.

பாவிதை குளம்பிய மனதிற்கு  வடிகாலாகிறது.

அருவியெனக் குளிர்வித்துச் சிலிர்க்கும்

வரிகள்மருவி வாழ்வுடன் மொழியில் இணைகிறது.

கருவியாய் நம்பிக்கை விதை தூவுகிறது.

ஒரு கணத்தில் வார்த்தையின் சுழற்சி

பெரு மாற்றமுருவாக்குகிறது மனதை வருடி.

புருவம் உயர்த்தலில் புது மெட்டவிழ்கிறது.

கரு புரள்கிறது புத்தலை திரண்டு

ஒரு கவிதையிலிருந்து இன்னொன்று பிறக்கிறது.

 

கவிதையிலிருந்து இன்னொரு கவிதை பிறத்தலே

கவிதையின் புனிதப் பின்னலின் தாக்கம்.

கவிதையின் வெற்றி மொழித் தீட்டல்.

கவிச் சொல்லாளுமைக்கு ஆயுள் நீட்டம்.

புவியில் நிலைநிற்கும் வரிகள் எமக்கு.

பவித்திரப் பாதை காட்டுதல் தெளிவு.

கை நழுவும் கண்ணாடிக் குவளையன்றி

கைநிறையத் தமிழ் முத்திற்கு மூழ்கலாம்.

பா ஆக்கம்

பாவானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

16-3-2015

pT5ooLeec-i

24. பசுவின் பால். (சிறுவர் பாடல்)

collage paal...

பசுவின் பால். (சிறுவர் பாடல்)

பால் பால் பால் இனிக்கும்

பால் எனக்குப் பிடிக்கும் – தினம்

பாசமாய்ப்  பெற்றோர் தரும் நல்ல

பால் ஒரு சத்துணவாம்.          (பால்…)

 

பசும்புல்  குழைகள் உண்டு எமக்குப்  

பசு தரும் பால் – நம்

பசி தீர்க்கும் பால். ஏழையும்

பணக்காரனும் விரும்பிக் குடிப்பார்.   (பால்…)

 

வெகு சுவையான  பால் . இது

வெள்ளை நிறப் பால் – நாம் 

வெறுக்காது பால் குடித்தால் பிள்ளைகள்

வெகு பலசாலி ஆகலாமாம்.        (பால்…)

பாலைக் காய்ச்சியும் குடிப்பார் சிலர்

பச்சையாகவும் குடிப்பார். நான் விருப்போடு

பால் பழம் உண்பேன் நன்றாகப்

படித்துப் பெரியவன் ஆகுவேன்.        (பால்…)

 

பா ஆக்கம்  

பா வானதி வேதா. இலங்காதிலகம்

.டென்மார்க்.

15-3-2015.

643630yr2vtei28b

23. கொக்….கொக்…..சேவல்

samila-s.naseeru-head1

collage cock

கொக்…..கொக்…கொக்

கொக்கரக்கோச் சேவல் – அழகுக்

கொண்டை உள்ள சேவலுன்

கொக்கரக்கோ உலகை எழுப்புகிறதே (கொக்…)

 

கொள்ளையழகு இறகும் வாலும்

கொற்றவனாய் உன்னைக் காட்டும்.

கொக் கொக் கொக்காம்

கொக்கியால் கோழியை வளைக்கிறாய். (கொக்..)

 

கொண்டைச் சேவல் கொக்கரக்கோ

கொல்லையில் நின்று கூவுவாய்

கொக்கரக்கோ கொடியை ஏற்றி

கொக்கரித்து  நாள் தொடக்கிறாய்  (கொக்..)

 

வெள்ளை, கறுப்பு சேவல்

கொள்ளையிடும் கலப்பு நிறம் 

உள்ளம் கவரும் கொக்கரக்கோ

உள்ளபடி ஒன்று தான்   (கொக்..)

 

பா ஆக்கம் – பா வானதி

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.  

13-3-2015

1424422_773891019303899_1021719375_n99

366. தத்துவம்.

down border-1

அகத்தியல் கொட்டும்
சத்திய உரை
முத்திய உரை தத்துவமே.
அகத்தியல் (உள்ளத்தின் இயல்பு)

blackwith-colour

365. வாழ்வினால் உயர்வு

Ants-1

வாழ்வினால் உயர்வு

பருவ விரிப்பினால்
எழுந்த பூரிப்பினால்
உறவு வரிப்பினால்
அன்பு சிரித்ததால்
ஆசை தரித்தது.

கல்வித் திட்டத்தினால்
சேர்ந்த கட்டத்தினால்
இணைந்த வட்டத்தினால்
புதுத்திட்டம்; உயர்ந்ததால்
ஒரு பட்டம் வந்தது.

விரித்த வாழ்க்கையால்
வரித்த இடப்பெயர்வால்
தரித்த குழப்பத்தால்
வாழ்வைச் சமாளித்ததால்
முன்னேற்றம் வந்தது.

நினைவினால் எழுந்த
தினவினால் மிகுந்த
கனவினால் புகுந்த
முனைவினால் ஞானச்
செறிவு உயர்ந்தது.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-3-2015.

2zxDa-118FY-1

sts.com’s photo

BrownieLadder-1

Previous Older Entries