283. உள் முகம் அதிசயம்!!!!…

408519_342176865898112_89041423_n

உள் முகம் அதிசயம்!!!!…

 

 

தாகம் தீவிர அறிவுத் தாகம்.

மோகம் நிறை தமிழின் தாகம்.

தாகம் தணியாத அன்புத் தாகம்.

நாகம் போன்றது பணத்தின் தாகம்.

 

பாகம் பாகமாய் பலவகைத் தாகம்

பாகம் பிரிக்கு மெத்தனை ராகம்!

தேகம் தேயச் சாவு வரையும்

தாக வேகத் தவிப்பி லுலகம்.

 

ஏகமா யிவை எதிரொலிக்கும் வேகம்

மேகம் தொடவும் பாதாளம் வரையும்

சோகம், இன்பம் தொடர் முயற்சியாய்

ஊகம், உறுதியாய் உயரும் வரைக்கும்!

 

அயராத வரைக்கு  மதற்கு அப்பாலும்

உயரம் தொடவும் அடுத்தொரு தாகம்

யுகயுகமாய்ப் பல ராகம் மனிதனுள்

புகும் தாக உள்முகம் அதிசயம்!

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

28-8-2005.      

 

4.2006 இனிய நந்தவனம் இதழில் பிரசுரமானது.

 

 

pink-swirl-divider-1

52. நித்திய நிரந்தரங்கள்.

bullock_cart

நித்திய நிரந்தரங்கள்.

 

 

விடிகாலை ஓசை ஆரவாரங்கள்

          துடிப்பான புலர்தல் அலங்காரங்கள்

புதுக்காலை இயற்கை அலாரங்கள்.

           எக்காலையு மிவைகள் நிரந்தரங்கள்.

மாட்டு வண்டிச் சப்தம்,

            ஆட்டும் சலங்கைச் சப்தம்,

ஓட்டும் வேகக்  குலுங்கல்

             கேட்டுத் தூக்கம் அலுக்கும்.

 

ஓடிடும் முதற் பேருந்து

             ஊடும் பெருமூச்சு விருந்து.

ஆலயமணியின் காலை ஆலாபனை

             ஆன்மாவின் ஆலிங்கன அருச்சனை!

மாமரத்துக் குடை முன்றில்

              சாமரம் வீசும் இளந்தென்றல்

பாசுரமாக்கும் சுகம் என்றும்.

              நாதசுரமாக்கும் புதுக்காலை மன்றில்.

 

இலுப்பைக்கனி மாங்கனிகளை வெளவால்

              பழுக்கக்கொத்தும் பாங்கின் எக்காளம்,

கிளுகிளுத்த கும்மாளம்  மௌனத்திரை

              கிழிக்கும் ரௌம்மிய இசைத் தட்டாய்!

சேவல் கூவும் இராகமுலகை

               ஏவல் செய்வது காலையிளமை!

சேவல் காலைக்காவற் பறவை!

               மேவுமிவை அதிகாலைப் பெருமை!

 

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

17-1- 2003-   ரி.ஆர். ரி தமிழ்அலையில்

2006   இலண்டன் தமிழ் வானொலியில்

 

(முன்றில் – வீட்டின் முன்புறம்.  முன்றில் – வாயில் முற்றம்.)

 

M 1

 

 

51. அதிகம் சிரிக்கிறான் ஆதவன்.

vector drawing

அதிகம் சிரிக்கிறான் ஆதவன்.

 

 

கதிரவன் கதிர் விரித்து

அதிகம் சிரிக்கிறா னருமையிது.

எதிர் கொள்வோ ரனைவரும்

அதிரசமுண்பதாயப்; பெரும்

குதிகொள்கிறார் குதிரை நடையில்.

 

பனியில் நனைந்து உணர்வுகள்

பனிக்கட்டியாகு மனுபவம் தினமும்

டெனிஸ் வாழ்வில் காண்பதால்

முனிவு தவிர்க்கிறது மனதில்

இனிக்கும் காதிரவன் கதிர்.

 

நல்ல கோடை வந்ததாம்

பொல்லாப் பனிக்காலம்

நில்லாது வருவ துறுதியாம்!

சொல்லாமற் சொல்கிறார் சோதிடம்

எல்லவன் கதிர் விரிக்கட்டும்!

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

23-8-2013.

 

(குதிரைநடை – கம்பீர நடை, பெருமிதநடை. எல்லவன் – சூரியன்.   முனிவு – சினம்)

 

 

 

 

0032

 

 

57. கவிதை பாருங்கள்(photo,poem)

kukai- 2

இதயக் குகைகள் தான் எத்தனை வகை!
உதயமாகும் மிகை எண்ணங்கள் தொகை
உதிக்கும் பகை, நகை, வகை
உலக வாழ்விற்கு ஊறுகாய்ச் சுவை.

vallena

 

19. சிறுவர் பாடல் வரிகள்.

summer13 082

குதிரை ஆட்டம்.

ஆடுங்கோ ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ!

சிரித்து ஆடுங்கோ

சிவப்புக் குதிரை

மரக் குதிரை  (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ

முன்னும் சாய்ந்து

பின்னும் சாய்ந்து

இன்னும் வேகமாய்

உன்னி உன்னி ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ

குதிரை ஆடுங்கோ. (ஆடுங்கோ)

 

வண்ணத்திப் பூச்சி     

 

      வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி
      எண்ணிப் பார்! எண்ணிப் பார்!
      வண்ணம் பலவே வண்ணம் பலவே
      எண்ணம் கிளறுது!  எண்ணம் கிளறுது!…”’  

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-7-2013

baby-items

50. சிந்தும் முத்தம்…

550081_341251529323979_775776062_n

சிந்தும் முத்தம்…

இந்திர நீல முழுமை இரவில்

சந்திர முத்தம் ஆகாய நுதலில்.

சுந்தரக் கதிரவன் பகல் முழுவதில்

அந்தர முத்தம் ஆகாயம் பூமியில்.

அந்தி பகலில் தாரகைத் தேவதைகள்

தந்த முத்தம் எந்தச் சந்தில்!

காந்தப் பூமி உருண்டு சுழன்று

பாந்தமாய் முத்தம் வாங்கிச் செல்லுதோ!

இயந்திர சரசம் மாநிலம் முழுதும்

தந்திர சரசம் மானுடம் முழுதும்

உந்திக் குதித்து இதயக் கேந்திரத்தில்

குந்துதே இந்த மனச் (உணர்வுச்) சிந்து.

விந்தையெனக் கெந்து மிந்த உந்தல்

சந்தமோ வெறும் மந்தமோ அறியேன்.

விந்தைச் சிந்தையில் சிந்திய பந்தல்

பிந்தாது குந்தட்டும் மனப் பொந்திலே.

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

14-8-2013.

12720-22coloured

 

18. பெண்ணெ உன் பங்கு பெரிது!.

423031_441831402543770_1633728792_n

பெண்ணெ உன் பங்கு பெரிது!.

 

மாசிலாப் பெண்ணே! உன்னை
மாற்று பண்புடை மனுசியாக
மானுடர் வியக்கவொரு முறையேனும்
மாறு மனிதநேய மனுசியாக!
கண்மணிப் பெண்ணெ! காட்டு
கருணைப் பெண்மை இவள்
கடமைப் பெண் இவளெனக்
கரிசனையா யென்றும்  காட்டு!.

 

சுந்தரப் பெண்ணே! பலவீன

சந்தர்ப்பத்தில் கீழே சாய்வது

நவீனப் பெண்மை அல்ல!

நேர்மை உறுதியுட னடியெடு!

சுதந்திரப் பாதையில் உன்

சுந்தரப் பாதம் நடந்தால்

தளிர்களின் மென் பாதமும்

தளர்வின்றிப் பின் தொடருமே!

 

மலர்ப் பெண்ணெ! மறவாதே!

பசியில் உணவிடுவோன் பெரியோன்

பசி  தீர்ந்திடினும் என்றும்

பகுத்தறிவில் நீ பசியடையாதே!

மரகதப் பெண்ணே! ஊனங்களை

மனதிலிருந்து வேரோடு அகற்று!

மங்கையரினப் பெருமையை நீ

மாநிலதிற்குப் பறைசாற்ற மறக்காதே!

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-2-2005.

 

 

floral-divider_9_lg236

 

56. கவிதை பாருங்கள்(photo,poem)

nillavaaka

 

வார்த்தைகளால் நன்கு போர்த்தினாலும்
வார்த்தைகளால் சுவர் எழுப்பினாலும்
யதார்த்தங்கள் வியர்த்தமாவதில்லை.
பிரார்த்தனை செய்த நிலவாக விழிக்கும்.

 

336318_10151010610124362_1551411334_o[1]

 

 

 

humming-bird

 

 

 

28. என் கணனி அனுபவம்.

imagesCAOS1GEL

என் கணனி அனுபவம்.

 

ஆரம்பத்தில் கவிதைகளைத் தமிழில் பாமினியில் எழுதி ரி.ஆர்.ரி தமிழ்,  அலை, இலண்டன் தமிழ் வானொலிக்கு மின்னஞ்சலில் அனுப்பியபடி இருந்தேன்.
தமிழ் எழுத்துக்களை (பாமினி வேறும் தமிழ் எழுத்துகளை) எமது நகரத்து நண்பர் ஒருவர் பதிந்து தந்தார். இவருக்கு நன்றி.

கணனியில் இணையத் தளங்கள் பார்ப்பது, கவிதைகள், செய்தி வாசிப்பது என்று காலம் போனது. இதைக் கணவரும் செய்வார். 3 புத்தகங்கள் வெளியிட்டதும் கையெழுத்துப் பிரதிகளை அனுப்பித் தான்.
ஆனால் புத்தகங்களை மக்களிடம் பரப்புவதில் சிரமம் இருந்தது. இணையத்தளம் திறக்கலாம் என்று எண்ணம் உதித்தது. இளம் நண்பர்களிற்கு வந்து உதவி செய்ய நேரமே இல்லை. உதவி கேட்டால் மளமளவென செய்தனர் அதைக் காட்டித் தரும் உதவி மனமில்லை.

நானாகவே வேட்பிரஸ் – புளோக் விவரங்களை வாசித்து அறிந்து  வேட் பிரஸ்ல் புகுந்தேன். எனது மருமகள் முகப்புச் செய்வதில் முதன் முதலில் உதவினாள்.
பின்னர் சகோதரர் எழுத்தாளர், கவிஞர் வித்தியாசாகர் அதைத் தமிழாக்கி        ” வேதாவின் வலை ”..யென்று எழுதுங்கள் என்றேன் – எழுதினார்.
” தமிழ் பேசி தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம் ” என்றது அவரது வசனமே.
இவருக்கு மனமார்ந்த நன்றி.

இன்னும் மேலும் உதவிகள் அவ்வப்போது நண்பர்களிடம் கேட்டு செய்தேன். கணவர் இதில் ஆர்வமில்லை.
டேனிஸ் மொழியில் கணனி அடிப்படைக் கல்வி ஒரு கிழமை எடுத்தேன். மவுஸ் பிடிப்பதே ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது.

தமிழ் எழுத்தை யூனிக்கோட்டிற்கு மாற்றுவதில் சுவிஸ் நண்பர் எழுத்தாளர் செய்தியாளர் கவிஞர் ஏ.ஜே.ஞானேந்திரன் வீட்டிற்கு வந்த போது ” இப்படி இருங்கள்” என்று கணனியில் உட்கார வைத்துக் கேட்டு அறிந்து கொண்டேன். எழுத்துருமாற்றியைப் பாவிக்கிறேன். இது எனக்குச் சுகமாக உள்ளது. ஏஜேஜிக்கும் மிகுந்த நன்றி.

600க்கும் மேற்பட்ட கவிதைகள் வலையில் பல தலைப்புகளில் பாமாலிகை (பாக்களின் மாலை) என்று இட்டுள்ளேன். தமிழ் மணத் தொடர்பு சிறிது காலமாகவே உள்ளது. வேறும் தமிழ்வெளி.  தமிழ் 10, இன்ட்லி, வலைப்பூக்கள் என்றும் இணைக்கிறேன்.
ஆரம்பத்தில் மேசைக் கணனியாக இருந்தது. இப்போது மடிக்கணனியாக உள்ளது. திடீரென செத்துப் போகும் மேசைக் கணனி. காரணம் வைரஸ் மெயில்களைத் திறப்பது. இவைகளைப் பார்த்துத் திறப்பது, தவிர்ப்பது என்பதும் கூடக் காலப் போக்கில்; அனுபவப் படிப்பாகப் தான் படிக்க முடிந்தது.

இவைகளை நிர்த்தாட்சணயமாக அழிக்க இப்போது நன்கு பழகியுள்ளேன்.
வலை திறந்து 3 வருடங்கள் முடிந்து விட்டது. இன்னும் பல எனது பேரனிடம் படிக்கலாம் என்று எண்ணுகிறேன்.
எக்சீலில் கணக்கு எழுதுவது, வங்கி அலுவல்கள் போன்றவை எனது கணவர் செய்வார்.
இன்னும் பல படிக்க உள்ளது. பார்ப்போம்.

சகோதரர் தமிழ் இளங்கோ இத் தொடர் பதிவை எழுதக் கேட்டதற்கு மிகுந்த நன்றி. சுவைபட எழுத முடியவில்லை.

இத் தொடர் பதிவை எழுத சகோதரி இளமதியை  http://ilayanila16.blogspot.de/அழைக்கிறேன்.
சகோதரி ஸாதிகாவை http://shadiqah.blogspot.dk/search?updated-min=2013-01-01T00:00:00%2B05:30&updated-max=2014-01-01T00:00:00%2B05:30&max-results=20 அழைக்கிறேன்..

http://hainallama.blogspot.dk/  டாக்டர் முருகானந்தம் அவர்களை அழைக்கிறேன்.

3  பேர் போதுமென்று நினைக்கிறேன்.

 

அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

 

 

Swirl divider v2

55. கவிதை பாருங்கள்(photo,poem)

2275037-air-bubble-background-ll

மரண பயம்.

 

பாழ் அனுபவ அதிருப்தியில்

பாத்தியதையானது வாழ்வென்று

ஆழ்ந்த உலக ஆசையில்

தாழ்ந்து வெளியேற முடியா

ஆழத்தில் மனித ஆன்மா.

ஊழ்வினையன்றி வேறேது!

 

 

இரணம் தருமுலக வாழ்வில்

பரணம் என்று பலரும்

சரணமடைவது இறைவனாயினும்

மரணம் உறுதி நித்தியம்.

மரணத்தைத் திரணம் என்று

தரணத்தில் வாழப் பழகு.

2-8-2013 —–

 

 

 

black divider