1. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் –

IMG_0075[1].jpg

சரவிளக்கு....

சேராத சொற்கள்
சீரற்ற சொற்கள்
நேரற்ற கற்கள்
நிரப்பிய சுவரில்
உரசி முட்டுதலிலும்
பரந்த இயற்கையோடு
கரம் கோர்க்கும்
வரமெனும் சுற்றுலா
சரவிளக்காகும் மனதிற்கு.
சுரம்பாடும் நினைவுகள்
நிரவிடும் உறவோடு
பரவசம் பரம்பொருளாகும்.
பரணி பாடும் பயண அனுபவங்கள்.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 28-9-2016

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 1

இலங்கை போகலாமா என்று பேசியபடி இருந்தோம். அவுஸ்திரேலியாவில் தங்கை மகனின் திருமணம் 2016 புரட்டாதி 11 என்று இருந்த போது தமிழில் அழைப்பிதழ் எழுதித் தரும்படி அங்கிருந்து வேண்டுகோள் வந்தது. எழுதி அனுப்பும் போது திருமணத்திற்குப் போகலாமா என்று சிந்தனை ஓடியது. அத்துடன் தங்கை காலமானதால் தெத்தம் பண்ண வேண்டியும் நேரலாம் என்று எண்ணினோம்
மிக நீண்ட தூரமும் பல மணி நேரமும் எடுக்கும் பயணமான
அவுஸ்திரேலியாப் பயணம் செய்ய 69ம் 75 வயதுமான நாங்கள் மிக யோசித்தோம் .பிள்ளைகளும் யோசித்தார்கள். புரட்டாதி 11 2016ல் என் தங்கை மகனின் திருமணத்திற்கு மெல்பேர்ண் செல்வது என முடிவெடுத்தோம்.

எனக்கு மிகவும் பிடிக்காத விடயம் பயணத்திற்குப் பெட்டி அடுக்குவது. அடுக்கும் பொருள்களின் பட்டியல் எழுதி வைத்துள்ளேன்.

இலண்டனிலிருந்து மகள் கேட்டபடி இருந்தாள் பெட்டி அடுக்கியாச்சா அடுக்கியாச்சா என்று. பயணம் அனுப்ப அவவும் வந்து சேர்ந்தார் டென்மார்க்கிற்கு.
6ம் திகதி பயணமாக ஆயத்தங்கள் செய்தோம். பயணத்தில் கால் வீக்கம் ஏற்படாமல் இருக்க ஒரு வித இறுக்கமான காலுறை அணியும்படி ஒரு டெனிஷ் பெண்மணி அறிவுரை கூறினார். அதை விட எழுந்து நடத்தல் கால்களை நீட்டி மடக்கிக் கொள்ளல் என்பது தெரிந்த விடயமே.

stroperunnamed-13

பயணங்கள் செய்த எமது மருமகள் சாந்தி தானாகவே யோசித்து அந்தக் காலுறைகளை எங்கள் இருவருக்கும் வாங்கித் தந்தார். உண்மையில் விலை கூடியது எங்கோ மலிவு விலை என்று வாங்கினார்.
மகள் இலண்டனில் இருந்து வந்திருந்தார். காற்றடைக்கும் கழுத்தைச் சுற்றும் உறைகளை வாங்கித் தந்தார். ஒழுங்காக நித்திரை கொண்டு போய் வாருங்கள் என்று.
6ம் திகதி பகல் பதினொரு மணிக்கு பயணமானோம் – வீட்டிலிருந்து. பிள்ளைகள் இருவரும் டென்மார்க் பில்லூண்ட் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.

unnamed-14 unnamed-12

மாலை மூன்றே முக்காலிற்கு விமானம். முதலில் பெட்டிகளை மெல்பேர்ண்ல் தரும்படி ஒப்படைத்தது ஒரு நிம்மதி. மகிழ்வுடன் முதலில்; டென்மார்க்கிலிருந்து பேர்லின் 1½ மணி நேரப் பயணம்.
அங்கிருந்து அபுதாபி 6மணி நேரப் பயணம். காத்திருப்பும் சில மணி நேரங்கள் தான்.
அடுத்த பதிவு இரண்டில் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2016-புரட்டாதி 30.

 

aeroplane-papers-1

45. பிரதீபன் சாந்தினி திருமண வாழ்த்து

அவுஸ்திரேலியாவில்

நடந்த எனது தங்கைமகனின்
திருமண வாழ்த்துக் கவிதை.

 

14441116_10209308492766519_2894897132698471475_n

 

 பிரதீபன் சாந்தினி   திருமண வாழ்த்து

” அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று” (குறள் – 49)

நாடு விட்டு நாட்டில் திருமணம்
ஊர் விட்டு ஊரில் திருமணம்
உறவுகளுக்குள் நிச்சயிக்கும் திருமணம்
இது சொர்க்கத்தில் நிச்சயிக்கும் திருமணம்
இதை விரும்புவார் பலரும். பிரதீபன்
சாந்தினியின் நேசமும்  இங்கு இன்று
மங்கல நாண் பூட்டும் அங்கீகாரம்..
உயிரோடு உயிராய் பூவோடு நாராயிணைந்து
பயிராகட்டும் நேசம் வெகு உயர்வாய்.
கோர்த்திடும் காதல் நர்த்தனம் சேர்க்கட்டும்
புத்துணர்வுக் கீர்த்தனம். ர்ப்பணமாக்கும் அன்பு
சமர்ப்பணமாக்கட்டும் அடுத்த தலைமுறையை.
எம் தங்கை மகன் வாழ்வு தரணியில்
சிறக்கட்டும். வையத்தில் வாழ்வாங்கு வாழுங்கள்!
ஊனுயிராய் உலவிக் கலக்கும் ஊற்று
ஊன்றுகோல் அன்பு நாற்று செழிக்கட்டும். —

வாழ்த்துவோர்:-பெரியப்பா பெரியம்மா (இலங்காதிலகம் வேதா) அண்ணன் திலீபன் குடும்பம் டென்மார்க், அக்கா லாவண்யா குடும்பம் இலண்டன். சதா மாமா குடும்பம், ரமணன் குடும்பம் இலங்கை. 11-9-2016.

blackwith-colour