18. 63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள்

63th kamal..

இலங்கை கொழும்பில் அமரரான என் தங்கையின் பிறந்த நாள் பிரார்த்தனையில்  இங்கிருந்து நானும்…29-6-2015 ல்….

63வது பிறந்த நாள் அமரர் கமலாம்பாள்

முகில் பூக்கள் படைசூழ்ந்த
அகில் புகையும் ஆர்மோனியங்களின்
திகிலற்ற இசையுள் நனைந்து
சுகித்திருப்பாய் மென் காற்றாக.
இன்றுன் அ,றுபத்தி மூன்றாமகவை
என்ன ஆச்சரியமொரு முறைNனும்
உன்னை நான்கு மாதங்களுள்
சின்னக் கனவாகவும் காணவில்லை.

அன்பெனும் கிரீடம் சூட்டி
இன்ப விருந்தோம்பல் செங்கோலெடுத்து
நன்மையான அறுபத்திரண்டு வருடங்கள்
மின்னலாய் ஒளிர்ந்து மறைந்தாய்
வாழ்வின் புரிதல், நியமங்களில்
ஆழ்ந்து உழலும் துன்பமில்லை.
பவள மல்லிகையாய், மயிலிறகாய்
பவளமாய் ஒளிர்கிறாய் சாந்தி!

இரவும் பகலும் உன்
தரமான அன்பு பச்சையமாகி
வரம் தரட்டும் எமக்கு
சரங்களாய் இறங்கட்டுமுன் ஆசிகள்!
எட்டிச் சிறகடித்துப் பறந்தாலும்
விட்டுப் பிரியாது நாளும்
தொட்டு விளையாடுகிறதுன் நேசம்.
பட்டொளியானவுன் அனுபவங்களிற்கு நன்றி.

வேதா. இலங்காதிலகம்.

131030473_1xjavil_1435400021

65. இரட்டைவால் குருவி

bird drango1

இரட்டைவால் குருவி

கரிக்குருவி, வலியன் குருவி,கரிச்சான்,

கருவாட்டு வாலி, ஆனைச்சாத்தன்,காரியெனும்

கறுப்பான பல பெயருடைய இரட்டைவால் குருவி

கண்டம் ஆசியா தாயகமான சிறுகுருவி

கீச்சுக் கீச்சு ராகமாய் உற்சாகச் சுரத்தில்               

கீதமிசைக்கும் அடர்த்தியற்ற காட்டில் வாழும்

வால் இரண்டாய்ப் பிளந்து ஆங்கில

’வி’  எழுத்துருவில் இருபத்தெட்டு செ.மீ. நீளம்

பயமற்றது, துணிச்சல், உரமுடை மனம்

பசுக்களின் மீதேறிச் சவாரி செய்யும்

பருந்து, காகம், கழுகுகளை ஓடஓட

பராக்கிரமமாய் விரட்டிக் கொத்தி எதிர்க்கும்!

எறும்புப் புற்றின் மீது அமருமாம்

எண்ணற்ற தன்னுடலின் உண்ணிப் பூச்சிகளையழிக்க!

எறும்புகள் வெளியாக்கும் பாஃமிக் அமிலத்தில்

எல்லாப் பூச்சிகளும் அழியுமாம்! வியப்பு!

(தொலைக்காட்சித் தொடராக ” இரட்டைவால் குருவி ” பார்த்த போதுஅதில் விவாகரத்துப் பெற்று 3 வருடத்தின் பின் சந்திக்கும் மாஜி தம்பதியினரிடை நடக்கும் மனப் போராட்டம் பற்றியதாக இருக்கும் போது கதாசிரியர் என்ன சிந்தையில் இரட்டைவால் குருவி என்று தலைப்பு வைத்திருப்பார் என்று ஆராய எண்ணி அது பற்றித் தேடினேன் என்னைப் போல் வேறும் பலருக்கு சிந்தை வந்திருக்குமோ  என்று எழுதியது.(தன் கூட்டு எல்லைக்குள் வரும் யாராயிருந்தாலும் எதிர்க்கும் குணமுடைய குருவி))

பா வானதி  வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

14-6-2015

stock-vector-cute-fun-and-colorful-simple-birds-with-lines-leaves-and-flourishes-perfect-wallpaper-or-border-79893292-oo

384. 13 படக்கவிதை

11267274_902111079853417_686643902_n

13 படக்கவிதை
1.   சாகசம் பண்ணிய பரவசம்!…

என்ன பண்ணுவாய்! என்ன பண்ணுவாய்!….
உன்னால் என்னைப் பிடிக்க முடியாதே!
முன்னும் பின்னும் தேடித் தேடி
என்னே ஒரு இடம் கண்டேன்!
தொட்டுப் பிடிக்கும் விளையாட்டில் என்னைக்
கிட்டே யாரும் நெருங்க முடியாதே!
சட்டென்று சொல்லுங்கள் வெற்றி எனக்கென்று
கிட்ட வருவேன்! அதுவரையிங்கு தான்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
23-5-2015.

2.  ஏகாடம் பண்ணாதீர்கள்!

நிகாசம் இல்லாத ஆனந்தம்!
மகாராசா போலவோ ஒரு
மகாவீரன் போல இங்கு
விகாசமான ஒரு சிம்மாசனம்!
ஆகா! சொன்னீர்களே எல்லோரும்
ஏறாதே முடியாது என்று!
ஏகாடம் பண்ணாதீர்கள் யாரையும்!
சகாயம் எமக்குத் துணிவொன்றே!

(ஏகாடம் – ஏளனம். விகாசம் – மலர்ச்சி.  நிகாசம் – உவமை.)

https://www.vallamai.com/?p=57906

பா ஆக்கம்.
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-5-2015.

3.  தகுதியைத் தக்க வைப்போம்!

எப்படியோ மேலே ஏறிவிட்டேன்
எப்படிக் கீழிறங்குவது இனி!
மேலே ஏறினால் நிலையக் 
கீழிறங்காமல் காப்பது எப்படி!
இலஞ்சம், ஊழல், சாதி,
மதபேதம், உயர்வு தாழ்வெனும்
சகதிக்குள் மீண்டும் குதிப்பதா!
தகுதியைத் தகவு ஆக்குவோம்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-5-2015

10275602_10205085709176197_8091329699660233275_o

383. சிந்தனைக்குரிய – கூடிணைக்குமிடம் நிரந்தரம்.

10609031_716498245161097_1832540875_n

படக்கவிதை 15

சிந்தனைக்குரிய…..

ஒரு பட்டுச் சேலை நெசவிற்கு
ஒரு 4000 – 5000 பட்டுக் கூடு
ஒரு புறம் கொலை, அழிவு, கொடுமை!
மறுபுறம் அழகிய ஆடை புதுமை!
பலர் சீவனம், வருவாய் பிழைப்பு!
எவர் பட்டை வேண்டாம் என்பார்!
சிலர் பட்டு அணிவதே இல்லை!
சிந்தனைக்குரிய சிறு கைத்தொழிலே!

https://www.vallamai.com/?p=58177

பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-5-2015.

Yellow-Roses-Frame-2zxDa-1W14z-print

11216346_840352649352269_429205382_n

படக்கவிதை 15
கூடிணைக்குமிடம் நிரந்தரம்.

திருவுடை பெருமை கொண்டது
ஒரு துணையோடு வாழ்வது.
ஆவலாய் ஆண்  குச்சிகளோடிறங்க
காவலர் மாறும் கட்டுதிட்டமாய்
கடமையேற்றுப் பெண் கூடிணைக்கும்.
இலகுவாக நீரில் நடக்க
இறகுகளற்ற நீண்ட கால்கள்.
கழுத்தை வளைத்துப் பறக்கும் நாரை.

அகண்ட உலகில் அரசாட்சி
விதண்டா வாதமில்லை விசாவின்றி
பனிக் காலத்தில் கர்மசிரத்தையாய்
தனிச் சுதந்திரமாய் திசையறிகருவியின்றிப்
புலம் பெயரும் மாபெரும்
புதிர் நிறை புள்ளினம்! ஐரோப்பாவில்
செவிவழிச் செய்தியாய் பிள்ளைச் 
செல்வம் காவி வரும் நாரை.

 

https://www.vallamai.com/?p=58133

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-6-2015.

nest

382. பழையன வேண்டாம்.

222932_213019808727129_100000573330162_764951_2265311_n

பழையன வேண்டாம்.

வாருங்கள் தமிழ்புரிக்குச் செல்வோம்!

வேருங்கள் சுய அறிவால்

சேருங்கள் தீந்தமிழ் வரிகள்.

எங்கும் வெளியிடாத ஓவியம்

எங்கும் பாடாத பாடல்

எங்கும் ஆடாத நடனம்

எங்கும் எழுதாத வரிகள்

எங்கும் தேவையாம் கொடுங்கள்!

தொல்காப்பியம் தண்டியலங்காரம் புலமைப்

பல் நூல்கள் புரட்டுங்கள்!

வல்லமையாய்ப் புதிதாய் வார்த்திடுங்கள்.

கல்லுதல் செய்தே வரைந்தவைகள்

எல்லாம் பழையன என்றால்

கொல்லையில் வீசுவதா சொல்லுங்கள்!

வள்ளுவன் பாரதியின் பழையவைகள்

ஊரதிரத்   தேரோடுது பாருங்கள்!

மல்லாட்டம் தமிழோடு போடுங்கள்!

கல்லாதாரும் கற்றவரும் விளங்க

வில்லவனாகிக் காதலையும் வரையுங்கள்.

வில்லங்கமின்றிக் கவி இலக்கணம்

நல்லங்கமாக்கி நெஞ்சக் கிண்ணத்தால்

துல்லியமாய் வெல்லமாய் ஊற்றுங்கள்!

எல்லோரும் மேதை என்பார்கள்!

சொல்வளம் பஞ்சமற்ற புலவராகுங்கள்!

(கல்லுதல்- தோண்டுதல். வில்லவன் – மன்மதன்)

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

22-5-2015

https://www.vallamai.com/?p=58184

rk8_divider1

95. கவிதை பாருங்கள் – வாசித்தலில் இன்பம் + தமிழ் சுகம்.

இப்பொதெல்லாம் எதை எடுத்தாலும் ஒளிப்படத்தில் காட்டுவதாக உள்ளது.
முகநூலைத் திறந்தாலும் எல்லாம் ஒளிப்படமாக உள்ளது.
எனக்கு வாசிப்பதில் மகிழ்வு. இப்படிக்காட்சிகளைப் பார்ப்பது குறைவு.
அதை நினைத்து எழுதியது.

uzhiappin-uyarvu1

abstract indian flute with peacock feather vector illustration

 

 

divider_172

381. இந்தப் பழைய கோலம்.

11261707_989688197738106_7670886054681074028_n

இந்தப் பழைய கோலம்.

சாய்ந்திருந்து நீ
சாய்ந்து பார்க்க
ஆய்ந்த மலர்களில்
காய்ந்திடாத மாலை
ஓய்ந்துன் தோள்களில்
ஒய்யாரமாய் ஆடுதலழகு!
மெய்யான மாக்கோலம்
செய்யுமுன் கோலமுமழகு!

தமிழ் கொஞ்சும்
தமிழணங்கே! பல
சிமிழ்களில் வண்ணம்
உமிழ்தலிற்காய் காத்திருப்பு
வினைத்திறனை, கலைத்திறனை
விரைவாக விசிறிடுவாய்!
வித்தையுன் விரல்களில்!
தத்தையே விகசிக்கட்டும்!

பழமை பேணல்
பழக இனிமை.
புழந்தமிழக்; கலை
பழகுதல் திறமை!
கோலமா கொண்டிணையும்
கோலக்கலை ஒரு
கோமள வினை.
கோர்த்திடுங்கள் வாழ்வோடு!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
12-6-2015

vector_146.cdr

19. ஆகாய விமானம்

mine 10 039

விமானி ஓட்டுவார் விமானி ஓட்டுவார் ஆகாய விமானம்
பைலட் ஓட்டுவார் பைலட் ஓட்டுவார் ஏறோப்பிளேன்


எஞ்சின் ஓடத் தொடங்கும் சத்தம் மெல்லக் கேட்கும்

காத்தாடி மெல்லச் சுளரும் விமானம் மெல்ல ஓடும்

வேகமாக ஓடும் தன் ஓடு பாதையில் ஓடும்.
வேகம் நன்கு கூட விமானம் மேலே ஏறும்

சில்லுகள் உள்ளே போகும் ஏறி ஏறி வானில்
உயர உயரப் பறக்கும் உயரப் பறந்து போகும்

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
12-6-2015

aeroplane-papers-1

64. சில்லெனும் நீரே

11230665_987693664604226_4092811496928505606_n

*

சில்லெனும் நீரே

*

நீலவானக் கடல் பின்னணியில்

சாலம் காட்டும் நீரே!

ஆலங்கட்டியாய் விழுவாய்

அரிசிப் பொரியாய் விழுவாய்

ஆக்கினையான பனிக்கட்டி ஆவாய்!

ஆனந்த உணர்வு தரும்

ஆயாசம் உடலில் தீர்க்கும்

ஆனந்தத் துளியாய் இப்போது!

*

மெத்தென முகத்தில் விழுந்து

புத்துணர்வு தரும் துளியே!

எத்துணை தண்மை உன்

சத்தான திரவத்தின் அற்புதம்!

களைத்த முகத்திற்குப் புது

களிப்புத் தரும் அமிர்தம்!

பசியில் நல் அமுதமாவாய்

ருசிக்கும் சில்லெனும் நீரே!

*

பள பளக்கும் நல் நீரை

சள சளவென நன்கு அடித்து

சில் சில்லெனக் குளிர பாலர்

முகத்தில் தெளித்து நனைவார்

பகிரங்கமாய், பரவசமாய் மகிழ்வார்.

பச்சை மண் குழைத்து

பல வகைப் பணியாரம் செய்வார்.

சேற்றிலே நன்கு அளைந்தாடுவார்.

*

பா ஆக்கம்   பா வானதி

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  25-5-2015

*

samme   Katu………enkum,

https://kovaikkavi.wordpress.com/2015/05/23/379-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/

*

blue-border-603769

33. அந்த மாமரம்

sathas-first-0071

அந்த மாமரம்

அந்த மாமரம் அன்று
சொந்த மாமரம் எமக்கு.
தந்த நிழற் குடையில்
குந்தப் பாய் விரித்த
முந்தை அனுபவம் இது
சந்தமாய் நெஞ்சில் பாயுது.
வாழ்வூக்கிய பால பருவ
வான் நோக்கிய மாமரம்.

புல் வெட்டிப் பசுந்தாக
கல் பொறுக்கிச் சுத்தமாக
சருகுகள் கூட்டி அள்ளி
ஒருமையாய் ஒரு மைதானமாக்கி
அருமையாய் அப்பா சகோதரங்களுடன்
ஒருத்து அனுபவித்த வசந்தம்
பெருமையான மாலைப் பொழுதுகள்
கருமையற்ற மனமினித்த காலங்கள்.

தேன் சுவையான மாம்பழம்
பென்னம் பெரிய மாம்பழம்
இன்று நினைத்தாலும் ஏக்கம்1
மாலைத் தென்றல் பெரும்
சாலையெனப் புகுந்து விளையாடி
வாலையாட்டிச் சாமரம் வீசியது
ஊஞ்சல் கட்டி ஆடி
உறவாடிய பசும் கொற்றக்குடை

பெரிய கல்லோ ஒரு
பெரிய வேரின் புடைப்பையோ
சிம்மாசனமாக்கிக் கூடி அமர்ந்து
சிரித்து ரசித்த ரசனை
சிந்தை நிறைந்து வழிகிறது
கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
குலவியவையை நெஞ்சம் மறக்காதது.
குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!

26-5-2015.

வேறு

அந்த நாள் ஞாபகம்.

எந்த நாளும் மறக்கவே மறக்காதது
அந்த நாள் இன்ப ஞாபகம்.
இந்த வாழ்விற்கு வளம் தரும்.
சந்தன அட்சய பாத்திரம் கிரியாவூக்கி

பெற்றோர் சகோதரர்களின் ஆசை அன்பு
பெருமையாய் நாம் வாழ்ந்த வீடு
அருமைத் தாய் நாடு அத்தனையும்
ஒரு புலம் பெயர்வு மறக்கடிக்குமா!

சிறு ஆணியடித்துக் கம்பு இணைத்து
சின்னத் தகரம் சில்லாகப் பொருத்தி
சிறு தள்ளு வண்டியாக உருட்டியது
சிற்றடி நடந்தது மறக்க முடியாதது.

அதிகாலை எழுந்து பின் வளவில்
அணில் கொறித்த மாங்காய்களை வெகு
ஆவலாய் அம்பலவி மாங்காய் மரத்தடியில்
ஆசையாய் பொறுக்கிக் கழுவி உண்டதினிமை.

பனைவளவில் அப்பாவுடன் ஆர்வமாய் சேர்ந்து
பனம் பாத்தியமைத்து பனங் கொட்டைகள்
பதித்துப் பல கதைகள் பேசியதும்
பசுமையானது மறக்காத அந்தநாள் ஞாபகம்.

19-7-2016

 

 

service_treespowerlines_transrightofway_med

Previous Older Entries