5. பெற்றோர் மாட்சி.

          

பெற்றோர் மாட்சி.

(லண்டன் தமிழ் வானொலியில் சனி, ஞாயிறில் பெற்றவருக்காக நடக்கும் நிகழ்வில் எழுதி வாசித்தவைகள்)
31-7-2005.
நெ
ஞ்சம் நிறைந்து கொஞ்சம் குறையாது
பிஞ்சு வயதிலிருந்து பஞ்சாக என்னைப் பாதுகாத்து
மஞ்சுக்குள் துயிலும் அம்மாவே! உன்
மஞ்சாடி குறையாத அன்பினை
மிஞ்சிட உலகில் ஏதுண்டு! இம்மியளவும்
நெஞ்சம் இதை மறவாது.

6-8-2005.
லிமை கொண்ட பெற்றோர் அன்பு தினம்
பொலிவு கொண்டெமை ஆட்கொள்ளும் அன்பு வனம்.
மெலிவு கொள்ளாத எம் பணிவு மந்திரம்
எளிமையாய் அவரை மகிழ்விக்கும் அதிகம்.

7.8.2005.
கொ
ஞ்சும் நெஞ்சு கொண்ட பெற்றவர்
தஞ்சம் நிறை தியாக சுரங்கங்கள்.
மிஞ்சும் சேவையில் வலது கரங்கள்.
வஞ்சமில்லாத பெற்றவர் பூவுலகத் தெய்வங்கள்.

13-8-2005.
ரம் தரும் இறைவன் பெண்களிற்கு
உரமாக காலத்திற்கும் பெற்றவர் அணைப்பை
நிரந்தரமாக்காது பாத்திரம் மாற்றி
தரம் மாற்றும் வாழ்வு சுபம் பெறுகின்றதா?

14-8-2005.
ள்ளம் முழுதும் கள்ளம் நிறையாது
தௌ;ளத் தெளிந்த பரிசுத்த அன்பை
பள்ளமின்றி அள்ளித் தருவதில்
எள்ளளவும் தயற்காது தாயுள்ளம்.

19-8-2005.
லகுக்கொரு வாரிசை உருவாக்கிக் கணமும்
விலகாது கண்ணிமையாதெமைக் காத்து,
திலகமாய் உலகில் திகழென்று பார்த்தல்
இலகுவான கடமையல்ல. பெற்றவர் மனம்
கிலமாகாது காத்தலெம் கடன்.  அவர்கள்
நலமாக நாம் பார்க்க வேண்டியவர்கள்.

20-8-2005.
தா
யே தனிப் பெரும் கருணையே!
தாயகமாக மனதில் தரிப்பவளே!
தயாள மனம் கொண்டவனாய்
தாங்கி அவளுக்குத் தாரமானவன் தந்தையே
!

27-8-2005.
ருகியே பாசத்தில் தம்மைத்
தருகின்ற பெற்றோரை மதித்தல்
அருகி வருதல் ஆரோக்கியமல்ல.
கருவோடு திருவானவர்களென உணர்தல்
பெருமைமிகு பணியாகும்.
துருவநட்சத்திரமாகவன்றோ அவர்கள் உயர்ந்தவர்கள்.

யுள் முழுவதும் ஆயாசமின்றி
ஆழமாக என் செயல்கள் நிலைக்கவும்
ஆழமான கருத்துகள் பேசவும்
ஆதிக்க ஆளுமையை எனக்குத் தந்த
ஆருயிர்ப் பெற்றொர் மிக ஆளுமையுடையவர்கள்
.

18-9-2005.
பூவாக மலர்ந்தாயே’  என்றென்னை அணைத்திருப்பார்கள்.
‘ பாவாக எம்முள்ளெ பாடுகிறாய்’  என:றிருப்பார்கள்.
சேயாக நான் பிறந்து இன்று சீராக வாழ்வதற்கு
தூய என் தந்தைக்கும் தாயிற்கும் வாழ்த்துகள்!
தேனாக உங்கள் நினைவு இனிக்க நாளும்
ஊனாக, உயிராக என்னுள் ஊறி மலர்ந்துள்ளீர்கள்.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                    

 

 
 

 

வேதாவின் மொழிகள். 2

 

வேதாவின் மொழிகள்.

சமூக நலன்.

சமூக நலன் எது, சமூக அழிப்பெதுவென
சமூகம் அறிய வேண்டியது முக்கியம்.

சிக்கலற்ற சமூகநலவாதி மகிழ்வோடு
மக்களுக்கு மாற்றத்தைத் தரமுடியும்.

ஒருவருக்கு சமூகநலமென்பது
மற்றவருக்குச் சமூகநலக் கேடாகலாம்.

குழுநிலையானதும், சுயமானதுமான   சுமுகமான
இயங்கு நிலை சமூகநலம்.

தன்னைவிடத் திறமைசாலி, புத்திசாலி
தரணியில் இல்லையென்பவன் சமூகநலவாதியல்ல.

சமூக நலமெனக் கூறியே பலர் மக்களுள்
சுமுகமாகச் சாக்கடை கலக்கிறார்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-4-2007.

                                             

4. மனம் செல் வழி.

ll1

மனம் செல் வழி.

ல்ல வளர்ப்பு, நல்ல பெற்றொர், நல்ல சூழல்
அமைந்த பிள்ளையின் மனம் செல் வழி
பெரும்பாலும் நன்றாகவே அமையும்.

ப்படிச் செய்! அப்படிச் செய்! என்று கட்டளையிடுவது
முரட்டுத்தனத்திற்கே பாதை காட்டும்.
நல்ல வகையான மனம் செல்வழி அதுவாகாது.

ன்றும் மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை.
வீட்டில் பெற்றவர் எவ் வழியோ அவ் வழியே
பிள்ளை மனம் செல் வழியாகிறது.

பிழையையும் சரியையும் எடுத்துக் கூறி, பிள்ளையின் மனம் செல் வழியில் விட்டுக் கண்காணிக்கலாம். மறுபடியும் பிழையானால் எடுத்துக் கூறி விளக்கினால் உணர்வு உள்ள பிள்ளை புரிந்து கொள்ளும்.

க்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
12-7-2006.

                      

வேதாவின் மொழிகள். 1

             

சிந்தனை முத்துகள்.

 தியாகம்.

தனது சுகம், ஆசைகளை
ஆகுதியாக்கும் யாகம் தியாகம்.

தியாகம் செய்தலுமொரு அர்த்தமுடனாகட்டும்
அபத்தமானவற்றிற்கு தியாகம் செய்வதில் அருத்தமில்லை.

முடிந்ததைத்தான் தியாகம் செய்யலாம். தன்னால்
முடியாததைத் தியாகமென்று கூறி அவதிப்படக்கூடாது.

 சத்தம்.

உன்மத்தம் பிடித்தோர் உருவாக்கும் சத்தம்
சித்தம் விரும்பாத இயக்க யுத்தம்.

துன்பம்.

துன்பம் மனிதனைத் தேடி வருவதில்லை.
துன்பத்தை மனிதனே தேடுகிறான்.

23-7-2007. வரிகள் வேதா.

 பச்சாதாபம்.

சுயபிரச்சனைகளுக்கு பிறரின் பச்சாதாபத்தை
எதிர்பார்க்காதீர்கள். அழுதாலும் பிள்ளை
அவளே பெறவேண்டுமென்பார்.

மொழி மாற்றம்.

கலங்காத மனதில் கலக்கமற்ற மொழியும்
விளங்காத உள்ளத்தில் வில்லங்க மொழியும் பிறக்கும்.

திமிர்.

திமிரினால் அடக்கம் அடங்கும்
திவ்விய அன்பு ஆத்திரத்தால் அழியும்.

நேர்மை.

வார்த்தைகளில்,  செயலில் நேர்மையென்பது
வாழ்வின் ஒளிகாட்டும் சுதந்திர வழி.

16-9-2007. வரிகள் வேதா.

பொறுமை.

பொறுமையென்பது சிரமமான பாதை.
பொறுப்பு என்பதும் அழுத்தமான பாரம்.
பொறுப்புள்ளவன் கடமையுணர்வுடன்
பொறுமையாக உயர் ஏணியேற
பொய்யின்றித் தொடர்வானானால்
பொன் வயலான வெற்றியை அடைவான்.

23-3.2006. வேதா.

 

                                       


3. பெற்றவர் மாட்சி வரிகள்.

 

    

இலண்டன் தமிழ் வானொலியில் எழுதி வாசித்தவை.

1.           முதன்முதலாய் விரல் பிடித்து
முதல்வராய் முன்னேற்றப் பாதையில்
முதன் மொழியாம் முத்தமிழை எமக்கு
முத்தம் முதலீடாகப் பதித்தவர்.
முதல் வர்க்கமிவர் எம் மனதில்.

2.           எமக்குள் மனிதம் நுழைத்து
ஏகபோக இராச்சியம் அமைத்து
எல்லவனாய் என்றும் ஒளிதரும்
நல்ல பெற்றவரன்பில் நனைதலின்பம்
 
3.            கனவில் அம்மா வந்தால்
மனதில் நிறைவு பெருகும்.
வானவில்லாய் முகம் மலரும்.
வாழ்வில் அந்த முகம் தானே
வாயார வாழ்த்துக் கூறும்.
வாழ்வில் பலரிதை அனுபவித்திருப்பாரோ!
 
4.            என்னைக் கருவறையில் அம்மாவும்
தன் மனஅறையில் அப்பாவும்
தினமும் தாலாட்டி வளர்த்தனர்.
பணிப்பெண் கைத்தொட்டிலில்
பலர் வாழ்கிறார். இந்நிலை
எனக்கு வராததற்கு  பெற்றவருக்கு நன்றி.

5           தாரம் எனும் பெண்மை
ஈரம் மிகுந்த தாய்மை.
பாரம் கருதாது உண்மை.
பாசமது சாயாது, ஓயாது.

6.          அலையலையாக என்றும்
நிலையாக வீசும் பாசத்தின்
வலை பெற்றவர்அன்பு.
தலை நிமிர்ந்து எம்மைத்
தகுதியாக வாழ வைக்கும்
தண்ணிலவு வட்டம் இவ்வன்பு.
மண்ணிலெம்மை நிலையூன்ற வைப்பது.

7.                     மூடரும் பெற்றவரன்பை முதலாக
வடமாகச் சுற்றினால் வளம் பெறுவார்.
சீடரானால் சீருடன் முத்தியடைவார்.
தொடரும் அன்பு விடமாகாது.

8.             என்றும் இன்ப நறுமணப் புகையாக
என்மனச் சிம்மாசனத்தில் வாசனையாக
என்னைச் சுற்றிப் படலமாகக் கவியும்
என் பெற்றவர் நினைவுகளென்றும்.
என் மனமன்றத்தில் இராசராகம்.
நின்று வாழும் நிலைத்த இன்பமது.

9.            வல்லமை பெருகும் பெற்றவரைப் பேணுங்கள்.
நல்லதாகப் பெறுவீர்கள் வெற்றி மாளிகை.

10.          ஆலம் விழுதாக நெஞ்சிலூன்றுவர்.
நூலெனும் உறவு ஏணியாக
பலமான தொடர்பிற்குப் பாலமாவார்.

11.     அடியளந்து ஆலயம் சுற்றி
மடியில் வந்துதித்த செல்வங்கள்
படியேறி, பண்பு, அறிவில்
முடிசூட வேண்டுமென்று
துடிப்போடு ஆர்வம் கொள்வார்
நடிப்பில்லா ஆவலுடன் பெற்றோர்.

12.     சன்மார்க்கம் கல்வி, சமயம்
சகல கலைகளையும் காலத்தில்
சம்பிரதாயப்படி ஊட்டுவார் பெற்றோர்.
சந்தணமாக எம்மனதில் மணக்கிறார்.
சங்கீதமாக இனிக்கும் பிறந்தவீடு
சன்னிதி, சிறப்பிலொரு இமயம்.

13.      ஆழம் ஆயுளற்றது, பெற்றவரன்பு.
சூழல், சுகம் பார்க்காத பொன் பூ.
வாழும் காலத்திலும் வீழும் போதினிலும்
நீளும் வாழ்வினிலும் உயிர் நீரோட்டமானது.

14.      தேகமிது பெற்றவர் தந்தது.
ஊகமில்லையிது அழிவது.
மேகமென அன்பு பொழிந்து
நோகுமெனப் பாதுகாத்து எமை
சோகம் அண்டாது காத்த
தியாக நெஞ்சுடையோர் பெற்றவர்.

15.      கருவறைக் கர்ப்பக்கிரகம், மனிதத்தின்
உருவறை.  தந்தையால் உருவாகும் அறை.
இருவரின்  பாச நிறைவை நாம்
கல்லறை செல்லும் வரை
மன அறையில் மதித்தப் பூசிப்போம்.

16.         ஆற்றல் மிகு பெற்றவர் அன்பை
நேற்றும், இன்றும், நாளையும்
ஏற்றமுடன் காற்றும் பேசும்.
அகில சீவன்களும் பெறும்
அளப்பரிய அன்பு, பண்பு
ஆதரவு தாய் மடியில்தானே!

17.      ஏழேழு சென்மங்கள் அல்ல
எழுந்துள்ள இந்த சென்மத்திலேயே
பழுதற்ற வாழ்வை மனதிலேற்றி
பெற்றவரை மதித்துத் தொழுதிடுங்கள்.
அவரை அழுதிடச் செய்யாதீர் பாரினிலே.

க்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-9-2010.

                           

 
 

 

80. நாளை நமதே.

 

நாளை நமதே.                     

 

நாளை நமதே என்று நினைக்கையில்
பாளை விரிவது பரவசப் புன்னகை.
ஆளை மயக்கும் ஆனந்த நிலை.

எத்தனை காலம்! எத்தனை துன்பம்!
எத்தனை உயிர்கள் மொத்தமாய் அழிவு!
அத்தனைக்கும் முடிவாயொரு பதில்.

வேளை வருமாவென்று ஏங்கிய மனதை
நாளை நமதென்று நினைக்கையில்
துளைப்பது பல நூறு கேள்விகள்.

அந்தரம் அவதியென அளவின்றி அனுபவித்தோம்.
சுதந்திரம் கிடைத்தால் ஒற்றுமையாயொரு
சுந்தர வாழ்வு கிடைக்குமா நமக்கு!

திடமான இன்பம் மக்களிற்கு மலருமா!
அடக்கு முறையா! அடிமை வாழ்வா!
தடக்கமில்லா சனநாயகம் மலருமா!

இன்று எமதாக இல்லாது இழக்கிறோம்.
நன்று காலாற, பிறந்த ஊரில்
நின்று சுவாசிக்க நாளை நமதாகட்டும்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-8.2008.

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலிக் கவிதை.)

 

                                    

79. நீதிதேவதை + துலாபாரம்.

*

நீதிதேவதை.

*

ஊதி எரியும் இனபேதம்
தீயாய் எமைச் சுடும் போது,
பீதியின்றி நாம் உலாவ
சோதி தருவாயெனும் நம்பிக்கையில்
வாதிட்டாலும் அநீதியே வெல்கிறது.
நீதியின் ஆதிதேவதை தான் நீ.
நாதியில்லா நீதிக்கொரு
நீதி வழங்கும் தேவதையானாலும்
சேதியின் உண்மை இது தான்.
நீதி பாதியிடங்களில் வீதீயில்,
கைதியாயன்றோ நீ.!

*

26-06-2008.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

http://www.vaarppu.com/padam_varikal.php?id=23

*

தமிழ் கவிதைப் பூங்கா 14-6-2016

நீதி தேவதை

நீதி தேவதைக்குக் கண்ணைக் கட்டி
நீ பார்க்காதே நாம் பண்ணும்
அநீதிகள் என்று பலர் செல்லும்
அநியாயப் பாதை நீயறிய மாட்டாயோ

*

எல்லாம் பணம் பாரபட்சம் என்று
பொல்லாமை அதிகரித்துத் தராசெனும் சமநிலை
இல்லாத நீதியே உலகின் இயக்கம்.
கல்லாக உன்னை பெயருக்கு நிறுத்தினார்.

*

என்று மாறும் இந்த நிலை.
நன்று உலகு தலைகீழாகும் கலை.
வென்று நீதி நிலை நிறுத்த
அன்று கொல்லும் ஒருவர் வரட்டும்.

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-6-2016.

*

No automatic alt text available.

                 

(கம்பன் கவிக்கூடம் )

துலாபாரம்.

*

நேர்மை நீதிச் செயல்கள் மனிதர்
பார்வைத் துலாபரத்தில் இல்லை, தூய
கூர்மை மன துலாபாரத்தில் கணிக்கிறோம்.
போர்வையற்றது, கோணாதது என்ற நம்பிக்கை.
யார் உண்மையாய் நடப்பாரென்பது கேள்வி
சார்கிறதே மனதும் கோணும் துலாபரமாய்.

*

கள்ளமற்று ஆதியில் மனித மனம்
கமலமென மழலையாக. சூதும் வாதும்
கற்றான். தேவையானது சடத் துலாபாரமும்.
பெற்றொரைக் கேள்வி கேட்கும் பிள்ளைகள்.
பெறுமதித் தமிழ் வரிகளிற்கும் துலாபாரம்.
பெருமதிப்பாளர் பக்கம் சாய்கிறதோ துலாபாரம்.!

*

நிலவிலும் களங்கமாம் எடை போடுகிறார்.
கலக்கமின்றி எண்ணங்கள் வடித்தாலும் கோல்
கவனமாய் பரிச்சயமானோர் பக்கம் தாழ்கிறது.
கனமில்லையாம் துலாபாரம் கரைக்குத் தள்ளுகிறது.
வரையற்ற பாதகக் கணக்கெடுப்பில் எடை
வஞ்சனையே செய்கிறது, மாற்றம் மீட்சியற்று.

*

எலுமிச்சம் பழத்தோலில் துலாபாரம் செய்து
அலுக்காமல் ஆடிய பால வயது.
இலுப்பைப் பூவை எடையிட்டது பசுமை.
கொலுவிருக்கும் கோமள நினைவில் மனசில்
கலாபமாய் ஆடி உலாவுது துலாபாரம்.
அளவிட முடியா ஆற்றலுடை நினைவுகளவை.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.
24.10.2016

*

                  

2. நந்தவன இனிமை…..

அன்னைக்கு…..

ந்த உறவிலும் இல்லை இணை
இந்த உலகிலொரு தனிப்பெருமை
நந்தவன இனிமை நல் தாய்மை.
வந்தித்துப் போற்றல் நம் உரிமை.

ந்தமில்லா அரிய முதல் நேசம்.
நந்தாவிளக்கு நல் தாய்பாசம்.
சந்தத்தோடு பாடுவோம் தாயின் பாசம்.
சிந்தச் சிறக்கும் எம் சுவாசம்.

வஸ்தைகளை மட்டும் தனக்குள்
ஆதரவுகளை எமக்காய் தந்தவள்.
சத்துக்களை மட்டும் எமக்குள்
சருகுகளைத் தானும் ஏந்துபவள்.

ன் சிறகின் கூடாரத்துள்
என் உயர்வை எண்ணியவள்.
என் சிறகின் கூடாரத்துள் – நானென்
கண்மணிகள் உயர்வை எண்ணுகிறேன்.

வாழையடி வாழையான உறவு.
தாய்மையடித் தாய்மையான தொடர்வு.
சுழலும் சக்கரமான வாழ்வு.
சுழன்று உய்த்திடுவோம் உயர்வு.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ்,  டென்மார்க்.
17-05-2008.

(இலண்டன் தமிழ் வானொலியில், ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In allaikal. com  8-5-2011    –      http://www.alaikal.com/news/?p=68828

T  –    8-1-2013.

 

                  

 

 

1. பெற்றோர் மாட்சி.

 

*

அப்பா அன்பு அப்பா.

*

வெற்றிக்கு அடிப்படை தந்த
சற்குணவாளன் என் அப்பா.
நற்தமிழ் காட்டி என்னை
பற்றுடன் அணைத்த அப்பா.
பாப்பாவாய் பருவப் பெண்ணாய்
கோப்பாக அறிவுட்டிய அப்பா.
தப்பில்லா நேர் வழியை
செப்பமாய்க் காட்டிய அப்பா.

துயரைத் துரும்பாக எடுத்து,
   அயர்வின்றி நாளும் எமக்காய்,
உயர்வுக்கு உழைத்து, அன்புப்
   பயிர் வளர்த்த அப்பா.
முதுமைப்படி உங்களை அழுத்தும்
   துன்பப்படி போதும் அப்பா.
அம்மாவடி சேர உங்களுக்கு
   அருள் தரவேண்டும் இறைவன்.
      

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-5-2006.

 (இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலையில் கவிதை நேரத்தில் என்னால் வாசிக்கப்பட்டது.)

*

கம்பன் கவிக் கூடம். கவிதை.

தந்தை போலாகுமா!

*

முந்தைப் பண்புகளையும் சேர்த்து மிளிர்த்தியவர்
சிந்தை எண்ணங்களை வைரமாய் செதுக்கியவர்.
விந்தை உலகில் பெருமுறவு என்
தந்தை போலாகுமா சொல் உறவே!

பக்தியைப் பாங்காய் ஒளிர்ததிய சமயவாளர்
சக்தியாய் விடாமுயற்சியை என்னுள் ஊன்றியவர்.
பக்குவமாய் கேட்பவைகளை ஆரத் தழுவி
அக்கறையாய் உணர்ந்து அன்பளிப்புச் செய்தவர்.

வசந்தக் காற்றில் குளிர் சுவாசமாய்
கசந்திடாது ஊக்கமூட்டும் உங்கள் நினைவுகள்
அசர்தலற்ற தெவிட்டாத அற்புத சஞ்சீவி.
பிசங்கலற்ற பரிசுத்து உறவன்றோ தந்தை.

நீங்கள் மேலுலகம் சென்றாலும் அன்பான
உங்கள் ஞாபகக் கிடக்கைகளெனக்கு வைரம்.
தங்கமான கிராமத்து ஞாபகச் சுரங்கள்
அங்கம் முழுதும் ஓடுவது அப்பாவாலன்றோ.

இளவேனிலாக இதயத்தில் அப்பா என்றும்.
அளவற்ற நினைவு வேர்களை ஊன்றியவர்.
தளம்பாத என்னுயர்வின் அத்திவாரம் வேறெவர்!
வளமுயரவுதவும் தாய் தந்தை போலாகுமா!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-11-2016

*

                  

                           

78. நம்பிக்கை விதை.

நம்பிக்கை விதை.            

ம்பிக்கை எனும் தூண்
‘நான்! என்னால் முடியும்’ – இது
ஊண்! உலக வாழ்விற்கு.!
பூண்! பூலோக  வாழ்விற்கு.

சாண்…..சாணாக  மனதில்
நாண் போன்று சுற்றும்
நாணயமான முத்திரை.
நாடி! எம் நடமாடலுக்கு.

சாக்கடை மனமானால்
சுத்தமாக்கி சன்னிதியாக்கலாம்.
சாம்பிராணியிட்டு நம்பிக்கையூன்றலாம்.
சரித்திரமாக்கலாம், சாதிக்கலாம்.

ல்ல அன்புள்ளத்தில்
நம்பிக்கை விதையுண்டு.
நாட்டிடு! நல்லாதரவோடு,
நானிலம் நந்தவனமாகும்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-8-2008.

(” இனிய நந்தவனம் ”  இதழில் வந்தது.2005.

இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

  • காற்றுவெளி சஞ்சிகையில் புரட்டாதி 2014ல் – நம்பிக்கை விதை- பிரசுரமானது.

 

                                


Previous Older Entries