பாராட்டு விழா- 2015. (10)

நாம் மண்டபத்தின் உள்ளே நுழைய ”செந்தமிழான எங்கள் தமிழ் மொழியே’ ” பாடல் ஒலித்தது. செயற்கைப் பூக்கள் தூவ / சீருடையில் வாலிபர்கள் எமைப் பின் தொடர்ந்தனர். .மண்டபம் நிறைந்த மக்கள் அனைவரும் எழுந்து நிற்க, நாம் நடக்க எனக்குக் கண்கள் குளமாகி விட்டது. மிக சிரமப்பட்டு என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். அது மறக்க முடியாத தருணம்.!!!…………..

entry

மேலும் சில பாராட்டுகள் 

kampan-barathy.png-B

*

kaviri-m-a1

 

ஓயாது செய்த தமிழ்ப் பணிக்கு
ஓகூஸ் தமிழர் ஒன்றிணயத்தில் விழா _நீவீர்
பாயாத இடமுமில்லை தமிழ் அருவி போல்
சேயாகி நாம் நிற்க தாயாகி தமிழ் அன்னை
வடிவாகி அன்று முதல் இன்றுவரை பணிசெய்தீர்

தொடாத கருவில்லை கையாளாத வார்த்தையில்லை
விடா முயற்சியோடு சிறாருக்கும் கவி தொடுத்தீர்
கடாரம் தாண்டி டென்மார்க்கிலும் தமிழை வளர்த்தீர்
அடாத தடை வரினும் விடாமல் தமிழ்த் தொண்டு செய்தீர்

அனுபவம் தந்த முதிர்ச்சியாய்ப் பழுத்த கவிதைகள்
ஆழ்ந்த கருத்துக்கள் அசைபோடும் நினைவுகள்
இலக்கணச் சுத்தமாய் இலக்கிய வடிவாய்
அனைவரும் பயன்பெறும் விதத்தில்

வாழ்த்த எந்தத் தகுதியுமில்லை
வாழ்த்தி வணங்குகின்றேன்
வாழ்க நின் புகழ்
வாழ்க நின் தமிழ்த் தொண்டு

ராதா மரியரத்தினம்
04.05.15

Image may contain: 1 person
Vetha Langathilakam:-    உங்கள் வாழ்த்திற்கு என் அன்பான நன்றி உரித்தாகுக ராதா.மிக்க மகிழ்ச்சி ராதா..
Kannadasan Subbiah
Kannadasan Subbiah வளர்க
வாழ்க
நற்புகழாய்
மேலும் பல
வெற்றிப் படிகளேறி
நல்வாழ்த்துகள்
Vetha Langathilakam
 

london tamilt

london- 2

Vetha. Langathilakm

Denmark

31-5-2015

butterfly-2

379. பட்டுக்கோட்டையார் பாடல்கள்

paddu

அமீரகம் ” தமிழ்த் தேர் ”  க்கு எழுதியது.

புகைப்படப் பிரதிக்கு கவிஞை நாகினிக்கு மனமார்ந்த நன்றி.

 பட்டுக்கோட்டையார் பாடல்கள்

பட்டி தொட்டிகளிலும் பரவலாய்

பட்டுக்கோட்டையார் பாடல்கள் துள்ளல்.

கட்டுக் கோப்பாக்கினார் ஜீவபாரதியார்.

பொதுவுடைமை கொண்ட வரிகள்

பண்பாட்டு உணர்வுப் பாடல்கள்

சமுதாய  உணர்வுக் கோலங்கள்

சமுதாய  உணர்வுக் குரல்களாக

அமுதாக வெளியான வரிகள்.

இருபத்தொன்பது வருட வாழ்வு.

இருப்பதெல்லாம் பொதுவானால் மனிதனுக்குப்

பதுக்கும் வேலையும் இருக்காதென்றார்.

பாரதிதாசன் நேசர் அவரை

ஆராதித்த வரிகள் சமைத்தார்.

பாரதியாரையும் நேசித்தார் அவரின் 

பேரதிகம் பெற்ற வரிகளையும்

நேரடியாகத் தன் வரிகளோடிணைத்தார்.

தமிழ் மீதழியாக் காதலால்

அமிழ்து அறிவின் உயர்ச்சியென்றார்.

திருக்குறள் கருத்து, ஒளவையார்

அரும் கருத்துச் சாரமுமிணைத்தார்.

சிவமயம் எழுதுவது போன்று

வாழ்க பாரதிதாசன் என்றெழுதினாராம்.

விவசாயக் குடும்பத்தார் இயற்கையை,

விவசாயத்தை, காதலையும் கன்னலாயெழுதினார்.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

27.4-2015

45

94. அபலைப் பெண்ணுக்காய் + உத்தரியம் ஏன் நழுவியது.

இதுவுமொரு நினைவேந்தலே அபலைப் பெண்ணுக்காய்

1235011_311243022350157_1834512128_n-k

புங்குடு தீவில் ஒரு அபலைப் பெண்ணுக்கு நேர்ந்த கதியை வாசித்திருப்பீர்கள்.
அதனால் எழுந்த கவிதை.

salvai-tt

உத்தம் பாகவதர் போலன்றோ

உத்தரியம் தோளுக்கணி செய்தது.

உத்தரியம் ஏன் நழுவியது!

அத்தரை வழுக்கியதோ அன்றி

மத்தாப்பு வெடித்து வெடித்து

சித்தசலனத்தில் தேகம் தடுமாறியதோ!

வித்தகம் விக்கித்துச் சொத்தையானதோ!

நத்தாசை, பித்தம் தெளியாதோ!

 

(நத்தாசை – பேராசை)

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

25-5-2015

filigree-divider_5_lg

55. காதல் தேன் குடிக்கும் இணை…

11063893_982928191747440_4112471955561398157_n

காதல் தேன் குடிக்கும் இணை…

மான் நீர் குடிக்கக் காதல்
தேன் குடிக்கும் இணையை அப்படி
ஒயிலாகப் பார்க்கும் அழகுப் பறவை
மயிலே நீயும் துணை தேடுகிறாயா!

என் நிலை மறந்து உன்னில்
நான் சாய நீ எங்கே
உன் சிந்தையைச் செலுத்துகிறாய் கண்ணா!
என்னிடம் இறங்கி வா கண்ணா!

குளிரோடை இன்பத்தில் பசும் சோலைக்
குளுமையில் யாருமற்ற இத் தனிமையில்
பச்சைக் கிளிகள் போல் பல
பசுமைக் கதைகள் பேசுவோம் கண்ணா.

கண்ணன் ராதையோ முருகன் வள்ளியோ
கண்ணிறைந்த காதலுடன் மயங்கும் தேவதையே
எண்ணிறைந்து பேசும் வட்டக் கருவிழியாளே!
எண்ணுவோம் சற்றே பொறு நட்சத்திரங்களை….

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-5-2015.

blackwith-colour

63. பூகம்பம்

south-asia

பூகம்பம்

ஆதி மௌரிய குப்த

இராச்சியத்தின் கீழாக இருந்த

இமாலய இராச்சியம் என்ற

நேபாளம் இன்று கிலியுள்!

ஏழை புத்த நாடன்று!

முப்பத்தெட்டு விகித வறுமை

காட்மண்டு தலைநகர் கொண்டு

காத்திரமான பாதிப்பு பூகம்பம்!

பூமிக்கடி அழுத்தம் அதிகரித்துப்

பூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)

புவி நடுங்கப் பூகம்பமென்கிறோம்!

மூவித நில நடுக்கம்

சாதாரண முறை, மேற்தள்ளல்

முறை, சமாந்தர அசைவென

மானுட வாழ்வைப் பாதித்து

பல்லுயிர் அழிவுச் சேதமாகிறது.

சாதாரணமாகக் கூறும் பூகம்பம்

பல்லுயிர் காவு கொண்டது

பாரிய சேதம் சோகம்!

பன்னாட்டு உதவிகள் விரைகின்றன

ஓன்பது மாடித் தரஹரா

கோபுரம் ஒன்றுமில்லாது சரிந்தது

சோதனைகள், சோகம் விலகட்டும்

சோதிக்கும்  இயற்கை அமைதியாகட்டும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-5-2015

Center-Divider

62. நளிர் நளினம் (குளிர் நீர்)

Tamil-Daily-News-Paper_21454584599

*

நளிர் நளினம் (குளிர் நீர்)

*

பளிங்கு பளிங்கு கண்ணாடி

பளிங்கு பளிங்கு படிகம்

வெளிப்படை! உயிர் காக்கும்!

நளினம் தண்ணீர் – தெளிநீர்

தெளிப்பு சீவன்கள் கொழிப்பு!

நளினமின்றி உயிருலகு இல்லை

துளி பட்டாலும் துளிர்க்கும்

நளிவுடை நளிர் திரவம்

*

ஆறு, கடல், குளத்தில்

பீறும் மழையாயும், குட்டையிலும்

ஊறும் பஞ்சபூதத்தில் ஒன்று

சேறு, குற்றம் களையும்

மீறும் தீ அணைக்கும்

வீறு கொண்டு பாயும்

நீருக்குச் சிறை பனி

நீராவி குளிர, திரவம்

*

அசுத்தம் சிறுநீர்  உப்புநீர்

அருமைப் பதநீர் தேனீர்

அழுதால் கண்ணீர் சுடுநீர்

பித்தநீர் மஞ்சள் நீர்

இளநீர் குடிநீர்  பலவகை

நீர் பூமியில் 71விகிதம்

நிறமற்ற புதுமை தனித்தன்மை

திறமைப் பயன் மின்சாரம்!

*

 

பா ஆக்கம்

 பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

15-5-2015

*

samme  katu  enkum:-   

https://kovaikkavi.wordpress.com/2015/06/10/63-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87/

*

*

divider_130

377 . ஊடகவியலாளர் நடுநிலைவாதிகளா!

Untitled59

ஊடகவியலாளர் நடுநிலைவாதிகளா!

***

ஊடுருவி சமூகத்தின் ஊத்தை

ஊழல் இன்பம் அனைத்தும்

ஊதும் ஒரு பொதுநலவாதி

ஊடகவியலாளன் ஒரு நடுநிலைவாதி.

ஊதுகுழலன்ன அவன் ஊடகத்தால்

ஊதுதலே  அவன் தொழில்

ஊடல் கொள்ளான், விலகான்

ஊழியமே அவன் முத்திரை.

***

 

பென்னம் பெரிய பொதுநலம்

அன்னவமன்ன மன நிலையும்

அன்னக்காவடி அற்ற சிந்தையும்

அன்பு, காதல், நேசமாம்

இன்ன பல பொதுமையாளர்

சின்னத்தன நினைவால் தடைப்படார்.

ஒன்னார் நிலை வளர்க்கார்.

இன்னணம் எல்லோரும் இருப்பாரா!

***

தயாள நோக்கு அழித்து

வியாபார சிந்தை பெருத்து

மயான மனம் வளர்த்து

சுயாதிபதியாய் நியாயம் இழப்பதற்கு

வியாக்கியானம் தேவையன்று எங்கும்

வியாபிக்கும் நோய் இது.

தியாகம், நற்குணம் தேவையா!

தீரனாய் வாழ்தல் போதுமா!

***

(அன்னவம் – கடல்.  அன்னக்காவடி – வறுமை. ஓன்னார் – பகைவர்.  இன்னணம். இவ்விதம். சுயாதிபதி – தனியாட்சி செலுத்துபவன்.) 

 பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

9-5-2015.

 

vector_146.cdr

9. பாராட்டு விழா- 2015.

திருவாளர் நடிக விநோதன் T. யோகராஜாவின்

வாழ்த்துக் கவிதை.

இக்கவிக்காய் இந்தக் கவியொரு கவி காவிவந்தேன்
கம்பனல்ல, நான் காசி ஆனந்தனல்ல,
தெம்பு தரும் குறள் தந்த திருவள்ளுவன் அல்ல,
கண்ணதாசனும் அல்ல நானொரு வம்பன்.
கருவாட்டுக் கறிக்குள்ளே கத்தரிக்காயிடுவது போல்
தெருவோரம் படுத்த என்னைத் திடீரென இழுத்து வந்தார்
நடக்கும் போது என் நினைவில் நடிப்பு
கவிதைகளில் எனக்கு நல் விருப்பு
அதனால் தான் எனக்கின்று அழைப்பு
பூக்கூடையாய் மணம் வீசும் புத்தியுள்ளோர் சபைதனிலே
சாக்கடைக்கு ஏனளித்தார் சந்தர்ப்பம்!
சாக்கடை நீரையும் இச் சமுத்திரம் சேர்க்கும்.

வெள்ளை மயிர்கள் வேர்வையெனும் பெயரில்
கண்ணீர் வடிக்கின்றன
கள்வர் தங்களைக் கறுப்பால் மறைக்கிறார்களே என்று
உடல் வெள்ளையானால் விருப்பு
மயிர் வெள்ளையானால் வெறுப்பு
எனக்கும் கறுப்பைப் பிடிக்கும் அதனால் தான்
காதலித்தேன் கரம் பிடித்தேன்
கலைஞன் என்றெண்ணிக் காதலித்தாள்
கயவன் எனைக் கண்டாள் கலங்குகிறாள்
முகத்தையும் மூக்கையும் தான் பார்த்தாள்
அகத்தைப் பார்க்காமலே அகப்பட்டுக் கொண்டாள்
கலை கலையென்று செல்வத்தைக் கரைத்து விட்டாயே
வாழ்க்கையில் உயர வழியென்னவென்று கேட்டாள்
பிரிந்திரு இல்லையேல் பென்சனெடு, பிள்ளைக் காசு
டபிள் என்றேன். நோயின்றிப் பென்சன் கேட்க
நோகாதா மனம் என்றாள் வாயோடு சேர்ந்த
வலுவான நடிப்பும் போதும் என்றேன்.
நாடறிந்த நடிகனுக்கு முடியாதா என்றாள்.
பாத்திரங்கள் பல சுமந்தும், பென்சன் எடுக்கும்
சூத்திரத்தை மட்டுமெவனும் சொல்லவில்லை என்றேன்.
வேலையே நன்றென்றாள் விட்டு விட்டேன்.
பேதை பிழைக்கத் தெரியாதவள்.
உழைத்துத் திளைப்பது நடக்கும் காரியமா!
இத்தனையும் சிரிப்புக்காய், இனிச் சகோதரியின் சிந்தைக்காய்.

அவையோரின் வாழத்;தோடு அமர்ந்திருக்கும் கவியே
அளப்பரிய மகிழ்ச்சி அடியேனுக்கு
அடுப்பூதும் மங்கையர்க்கு அவையேன் என்றெண்ணித்
தடுத்தோரின் சொல்லைத் தகர்த்தெறிந்தாய்
ஊருறங்கும் நோத்திலிலுன் பேனா எழுந்து நின்று
சீர் கவிதை தந்ததனால் உன்கின்று சிம்மாசனம்!
கழுத்துக்கணி சேர்க்கும் காரிகைகள் மத்தியில் நீ
எழுத்துக்கு அணி சேர்த்து ஏற்றம் பெற்றாய்!
திலகம் உன் நெற்றியில் இட்டது
திலகம்! ஆதனால் கலகம் இல்லாத வாழ்க்கை!
எதுகை போல் கணவன் இருப்பதால் தானே
பதுமையே நீயும் மோனை பெறுகிறாய்!
சீர் கொண்ட வாழ்வாலே சிறப்புப் பெறுகிறாய்!
அடி வைத்தாய் மக்கள் மேல் அன்பு வைத்தாய் -உன்தமிழின்
பிடிப்பால் அவரும் பின் தொடர்ந்தார்.
ஆண்களிற்கு வராத கற்பனைகள் அணங்குகளிற்கு வருவதனால்
பெண்களைத் தான் பொன்னுக்கும் பிடிக்குமோ!
கார் ஓட்டும் போதும் சமூகத்தின் காரோட்டும் சிந்தனை
தான் உனக்கு அதனால் தான்
”தலை நிமிர்ந்திடு தமிழ்ப் பெண்ணே1” என்றாய்
தாங்க முடியாத பாரத்தில் தாலிக்கொடி போட்டுத்
தலை குனிவதற்கு நாங்களா பொறுப்பு!
முன்பு தாலியே பெண்களிற்கு வேலி என்றார்
இன்று உயிர் காலியாவதற்கும் தாலியே காரணம்!

வேலை, வீடு, குழந்தைகள், குட்டிகள்
சாலையில் நெரிசல் எத்தனை சங்கடம்!
குடிகாரக் கணவனென்றால் கும்பிடு போட வேண்டும்!
பேய் போல மனைவி வாய்த்தால் வீட்டிலே
அடி வாங்கி, வெளியிலே நடிக்க வேண்டும்!
இத்தனைக்கும் மத்தியிலும் ஏனோ தானோவென்று
எழுதாமல் பேனை பிடிக்க வேண்டும்!
எத்தனை சிரமம் எழுத்தாளருக்கு!

அன்புச் சகோதரியே!
பாவை உன் பாவைப் படித்தேன்! உன்
நோவையும் எழுதினாய் சிலதுக்கு ” நோ வே” என்றும் எழுதினாய்!
கற்ற தமிழே கவியாக வந்தது.
கொற்றவனும் பணிவது கற்றவனைத் தானென்று
மற்றோர்க்குச் சொல்ல மனதால் நினைத்தாய்!
வெறும் கதைகள் பேசாதே வேதாவே! – மேலும்
அருங் கவிகள் தந்து இன்பத்தில் ஆழ்த்து!
நினைத்ததை முடிக்கும் நெஞ்சம் கொண்டவளே! –உன் கைகள்
இனித்திடும் கவிகளை எழுதிக் குவிக்கட்டும்!
கதியில்லாத் தமிழர்க்கு உன் கரங்கள்
கவிகளால் விதி எழுதட்டும்! நீ வாழ்க!

நடிக விநோதன் திரு. T. யோகராஜா.-
டென்மார்க்.
2-5-2015

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll
.

376. வணங்கி வாழலாம்!

வணங்கி வாழலாம்!

***

பூவினை ஒன்றொன்றாய் மாலையில் தொடுத்துப்

பாவினைப் பண்ணாகப் பாடித் தொழுது

என்வினை தீர இறையை வணங்கி

வாழ்வினையொரு சுப வினையாக்குதல் நோக்கு!

***

 

அன்பினைப் பெற அருகினில் நெருங்கி

அறிவினை வளர்க்க ஆய்வினை நகர்த்தி

உயர்வினைத் தாருமெனப் பாவினை ஆக்கத்

தேய்வினை எண்ணாது அறிவினைத் தீட்டலாம்!

***

 

தீங்கினைப் பாங்காக விலக்கி நம்முள்

தேங்கிட நல்லவை நிறைத்துத் திருப்தியாய்

ஓங்காரனை, காங்கேயனை ஓயாது துதித்துப்

பூங்காவென வாழ்வைப் பயமின்றித் தேடலாம்!

***

 

குயவனைக் குவலயம் அமைத்த குருபரனின்

தயவினைத் வேண்டித் தலைவணங்கி

அருளினைத் தாருமென அன்பினைக் கொட்டி

ஊழ்வினை, பாவவினை உதறிட வணங்கலாம்!

***

 

பா வானதி வேதா. இலங்காதிலகம்

டென்மார்க்.
17-5-2015

2683852taf9ikr3qe

375. விவசாயி

11150617_400694890114515_6992720442038008192_n

11209716_400692350114769_6683254834279473000_n

தடாகம் கலை இலக்கிய வட்டம்

May 4 at 9:17pm ·  

இம் மாதம் (மார்ச் )நடைபெற்ற கவிதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்று”(கவியூற்று பட்டத்தையும் )சான்றிதழையும் பெறுகின்றார் பாவானதி வேதா. இலங்காதிலகம்.அவருக்கு தடாகத்தின் வாழ்த்துக்கள்

 

விவசாயி

உழவுத் தொழிலாளி, கமக்காரன், விவசாயி

தொழும் நிலையாளன், கிழமான தொழிலிது.

பயிர், பசளை, நீரிவன் மூச்சு.

பயிர் குனிந்து பார்த்தல், வானம்

நிமிர்ந்து பார்த்தல் இவன் சுப்ரபாதம்.

நிலச் சாகுபடி கால்நடை வளர்ப்பாளன்.

வருணன் கருணை, அருணன் கதிர்

வரப்பிரசாதம், பொய்த்தால் அழுவான் கண்கூடு.

அயர்ந்திடான், அரையிருளில் ஆரம்பிக்கும் வியர்வை.

உயிராகிறான், வேராகிறானுலகிற்கு ஏர் பூட்டியாக.

ஏரோட்டி உலகைச் சீராட்டுமாதி விவசாயி  

நாட்டின் முதுகெலும்பாகி உணவு தருகிறான்.

ஏர்கட்டி வயல் உழுது வரப்பில்

ஏற்றபடி நடந்து நாற்று நடல்

பயிர் வளர்ச்சி கண்டு மகிழல்

உயிர் ஊட்டும் நிகழ்வு இவனுக்கு.

வீணில் உண்டு களிக்காத கருமவீரன்.

விவசாயி இவன் சுகவாசி இல்லை.

தன் காலில் நிற்கும் உழவன்(விவசாயி)

அரசன் நிலைக்கு உயர்வது யதார்த்தம்.

சமூக பொருளாதார மாற்றம் நாகரீகத்திற்கு

வெகுவாக உதவுகிறான். உலக சூனியமழிக்கிறான்.

மரங்கள் வெட்டி மாடிகள் கட்டி

மகத்தான விவசாயத்தின் சிரம் சாய்க்கிறார்.

 

உழவுத் தொழிலை நாளும் வணங்குவோம்.

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

7-4.2015

தடாகம் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி.

வேறு

விவசாயம் எங்கள் வயலில்….

பாடசாலை செல்லும் வழி
பாதையோர வயலில் புல்லு
பாலர்கள் விளையாடுமொரு காலம்.
பார்த்தால் ஏர் பூட்டுவார்

மழை வந்து சேறாகும்
நெல் விதை தூவுவார்.
குருவிகளிற்கும் தாராள உணவு.
நல் முளையாக வளரும்.

வளர்ந்து பயிராகப் பெண்கள்
களை பிடுங:குவார்கள் காலத்தில்
கதிர் வெளியாகும், அப்பா
கதிர் நெல்லு வெட்டுவார்.
இறப்பில் கட்டுவார், காயும்.
கதிரறுத்துச் சூடு மிதித்து
நெல் வீடு வரும்.
விதை நெல் பெட்டகத்துள்.

பாதுகாக்கப் படும் நெல்மூட்டைகள்
வருடம் முழுக்க உணவாகும்.
இறப்பில் காய்ந்த கதிர்நெல்
தைப் பொங்கலிற்கு அரிசியாகும்.

தைப்பொங்கல் சூரியனிற்கு நன்றி
கைமேற் பலனான என்
பாலவயதுக் காட்சியிது அப்பா
வயற்காணிகளால் தன்னைக் கமக்காரனென்பார்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-4-2015.

10275602_10205085709176197_8091329699660233275_o

Previous Older Entries