36. நல்லவருக்கு ஏன் மரணம்!!!!

29879_1472263123261_4018299_n

நல்லவருக்கு ஏன் மரணம்!!!!

இயற்கையாக நிகழ்வது மரணம்.
கெட்டவர்கள் மரணித்தால் இது ஒரு சம்பவம். நல்லவர்கள், சிந்தனையாளர்கள் மரணித்தால் அது பெரும் பாதிப்பு. மனதைக் கசக்கியெடுக்கிறது.
அநியாயக்காரர்கள், துவேசக்காரர்கள், நீதியை அவமதிப்பவர்கள், பொய்யாக வாழ்பவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து நல்லவருக்கும், நாட்டிற்கும் துரோகம் செய்யும் போது நல்லவர்கள் ஏன் விரைவில் மரணிக்கிறார்கள் என்று மனம் வெதும்புகிறது.
நல்லர்களிற்குக் கிடைக்கும் இறுதி அஞ்சலிகள் மரியாதைகளாவது கெட்டவனைத் திருத்தாதா! திருந்த ஒரு வழி சமைக்காதா எனும் நப்பாசை எழுகிறது.
மணித்தியாலக் கணக்காக தனது பாதுகாப்பிற்காக நின்ற காவலாளியைத் தொடர்பு சாதனத்தால் தொடர்பு கொண்டு அவரை ஆசனத்தில் அமரவைக்க விரும்பிய தலைவன் வாழும் உலகில் தான் வெள்ளை வான் கலாச்சாரம் பின்பற்றும் தலைவர்களும் வாழ்கிறார்கள்.
எல்லோருக்கும் சிவப்பு இரத்தம் தான் ஓடகிறது. குணங்களில் தான் எத்தனை பேதங்கள்.
கெட்ட பெற்றோர் கூட தம் பிள்ளை நல்லவனாக வருவதையே விரும்புகிறார்கள். வளரும் பிள்ளைகள் அன்னை தந்தையின் குணங்களையும் வாழும் சூழல் தாக்கங்களாலும் பல குணாதிசயங்களில் உருவாகின்றனர்.
நல்ல பிள்ளைகளை பெற்றோர் உருவாக்க முயல வேண்டும்.
ஏன் எல்லோரும் நல்லவராகவே உருவாக உருவாக்க முடியாது!
நல்ல சிந்தனை செயல் கொண்டவர்களால் நல்ல வீடு உருவாகிறது.
நல்ல வீடுகளினால் நல்ல கிராமங்கள் உருவாகிறது.
நல்ல கிராமங்களால் நல்ல நாடு உருவாகிறது.
ஏன் எல்லோரும் நல்லவராக முடியாது!.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
29-7-2015.

lines-a

25. டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். (15-10-1931—27-7-2015)

1506516_340117702778936_7427974958756135061_n

டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். (15-10-1931—27-7-2015)

இந்திய ஏவுகணை நாயகன், தமிழ்
இலக்கிய ஆர்வலன், பன்முக விஞ்ஞானி
இந்தியா வல்லரசாகக் கனவு கண்டார்.
இராமேஸ்வரத்தில் உதித்த முத்து கலாம்.
இந்திய அறிவியல் நட்சத்திரம், வீணையும்
இசைக்கும் இசை ஆர்வலர் மரணமற்றவர்.
மகத்துவர், மக்களின் ஜனாதிபதியானவருடல் மறைந்தது.
மனிதருள் மாணிக்கத்திற்கு ஆத்ம அஞ்சலி.

பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா இன்னும்
பத்விபூஷன் என்று எண்ணற்ற விருதாளர்.
படகு சொந்தக்காரன் மரைக்காயர் தந்தையார்.
ஜைனுலாப்தீன் – ஆஷியம்மாவின் திருப்புதல்வன்.
சைவ உணவுக்கார இசுலாமியர், உலகமறை
திருக்குறளின் அடியொற்றி நடந்த பிரம்மச்சாரி.
திருவே அறிவென உலகோரை ஊக்கியவர்.
நெருப்பின் சிறகுகளிவர் ஆங்கிலச் சுயசரிதை.

மாமேதை, கனவுகள் காணுங்களென்று நினைவாகினார்.
மார்க்கம் காட்டி இளையோர் சிந்தனைகள்
தீர்க்கமாக மாணவர் குழாமுடன் கலந்தவர்.
பார் போற்றும் விஞ்ஞானி கவிஞருமாவார்.
நாட்டுக்காகத் தனையீந்த நற் சிந்தனையாளர்.
அறிவியல் தொழில் நுட்பத்தை நல்ல
நெறியோடு காதலித்த இந்தியத் துருவநட்சத்திரம்.
அறிவால் அறிமுகம் அறிவுறுத்திய அறிஞன்.

சாந்தி சாந்தி

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-7-2015.

11817266_915548441817403_3094461405612453494_n

anjali-2

388. சாவோலை உறுதி….

11425292_850420451678822_1064748056_n

18  பட வரிகள்
சாவோலை உறுதி….

காவோலை விழ குருத்தோலை துளிர்த்தலாய்
சாவோலை உறுதி பிறப்போலை வந்தால்
தீர்வோலை இதுவெனத் தீட்டிய விதியைப்
பாரேன் படமெனக் காட்டுதிங்கு.

எம் கண் பறிக்கும் நீலமேகம்
தன் வண்ணப் பின்ணனி மயக்க
தலை நீட்டும் இலைக் கொத்து
நிலையற்றது வாழ்வு என்கிறது.

விலையற்ற பெரும் தத்துவ உண்மை
தலைக்கு எடுப்பார் எவர்! அழியும்
கலையே வாழ்வெனும் அரிய ஞானம்
நிலைநிறுத்தினால் வாழ்வு சுலபம்!

வரியாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
27-6-2015

https://www.vallamai.com/?p=59154

lines-d

387. கரகாட்டம்.

draft_lens5290312module152668042photo_13-1

1. கரகாட்டம்.

வரமிகு மாரியம்மன் வழிபாட்டுக் கலையாம்
உரமான தமிழர் பாரம்பரிய ஆட்டம்
கரகாட்டம் பெண்கள் ஆடும் கலை.
கரகம் பூக்குடம், செம்பு, கும்பம்,
கமண்டலம், நீர்க்குடமெனப் பல பெயர்கள்.
கரகம் தலையில் வைத்து ஆடல்.
கரங்களால் குடம் பிடிக்காமல் ஆடல்.
கரகம் குடக்கூத்து சங்க இலக்கியத்தில்.

தொழில்முறைக் கரகம், ஆட்டக் கரகம்,
தெய்வவழிபாட்டுக்கரகம், சக்திக் கரகம்.
மண்ணால் செய்வது தோண்டிக் கரகம்
பித்தளையால் செய்வது செம்புக் கரகமாம்.
ஆடும் கலையிது சமநிலை (balance) பேணல்.
ஆடலின் இசை நையாண்டி மேளம்.
ஆடுகிறார் பெரிய சிறு உடுக்கிசைக்கும்
கூடும் செண்டை, சத்துக் குழல் பறையிசைக்கும்.

ஆட்டக் கரகம் அமைப்பு அலங்காரத்தால்
தோண்டிக் கரகம், செப்புக் கரகம்
அடுக்குக் கரகம் என்ற பிரிவுகளாகியது.
சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் குவக்கூத்து ஆட்டமென்கிறார்.
சிந்தை கவரும் ஆடை அணிகளால்
மொந்தைக் கள்ளுண்டதாய் மக்கள் மயங்கும்
முந்தைக் கரகாட்டம் மறைவது துயரம்.
விந்தையல்ல ஆண்களும் பெண்ணாடையோடு ஆடுகிறார்கள்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
11-7-2015

2- கரகாட்டம்.

கரகாட்டம் எனும் புனிதக்கலை
கரகரக்கும் ஆட்டமாய் கவிதையலை.
நரகமென முகம் சுழிக்க
விரக ஆட்டமாய் விவரிப்பு.
இரவாட்டம் போல ஓருவித
சிரகம் (வண்டு) ஊர்கின்ற நிலை.
நரகல் வாழ்விற்குச் சமம்.
பிரகாசம் இல்லா நிலை

மரகதமாய் மின்னும் கலையை
மரங்கொத்தியாய் காமம் கொத்த
விரகனாக (திறமையாளனாக) விரசமாக விவரிக்கிறான்.
விலகட்டம் மாயை! உண்மை
விசாலமாகட்டும்! பக்தி பெருகட்டும்!
தரகாட்டம் பண ஆட்டம்
முரவு கெட்ட மறையட்டும்!
மரபாட்டம் சக்தியோடு உயரட்டும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
12-7-2015.

 

கரகாட்டம்

தொழில்முறைக் கரகம் ஆட்டக் கரகமடி
தெய்வவழிபாட்டுக் கரகம் சக்திக் கரகமடி
மண்ணால் செய்வது தோண்டிக் கரகமடி
பித்தளையால் செய்வது செம்புக் கரகமடி
ஆடும் கலையிது சமநிலை பேணலடி
ஆடலின் இசை நையாண்டி மேளமடி.
ஆடுகிறார் பெரிய சிறு உடுக்கிசைக்கும்
கூடும் செண்டை சத்துக் குழல் பறையிசைக்கும்.

***

கரகாட்டம் பண ஆட்டம் பக்தியாட்டமடி
கரகாட்டம் ஒரு புனிதக் கலையடி
மரகதமாய் மின்னும் கலையைச் சிலர்
மரங்கொத்தியாய் காமம் கொத்தச் செய்கிறாரடி.
சிந்தை கவரும் ஆடை அணிகளால்
மொந்தைக் கள்ளுண்டதாய் மக்கள் மயங்கும்
முந்தைக் கரகாட்டம் மறைவது துயரமடி.
விந்தையல்ல ஆண்களும் பெண்ணாடையோடு ஆடுகிறாரே.

***
31-10-2016.

2 majil

24. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல் 1+2

s1

1. எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்

அசைந்தாடும்தென்றலின் பயணம் இவரிசை.
திசையின்றி உலகெங்கும் பரவிய பேரருவி.
இசைக் கொளரவம் நீராரும் கடலுடுத்தி..
நசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.

சங்கீதம்! இங்கிதமுடை சுவர சாரதி.
அங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,
மங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.
சங்கீத இராசாங்கம் 1945 – 2015வரை.

இசைப்படியமைவு ” பணம் ” என். எஸ். கிருஷ்ணன்
இசைக்கருவி மூன்றுடன் தாழையாம் பூமுடித்து.
இசைக்கருவி முன்னூறுடன் எங்கே நிம்மதி.
இவரிசைமன்னன் பேரருவி, மெல்லிசை மன்னன்.

மனயங்காத் சுப்பிரமணியம் விசுவநாதன் ஐயா
கேரளா பாலக்காட்டு மகாஇசைப்பிறப்பு 24-6-1928.
சரளமாய் 1200 படங்களிற்கு மேலிசையிட்டார்.
பிரவாளயிசையதிபதி உயிர் மறைவு 14.7.2015.

(பிரவாளம் – பவளம்.)

வரிகளாக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-7-2015

2 எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்

முருக பக்தர் எம்.எஸ்.வி
வறுமையிலிருந்து பெருமை பெற்றார்.
வெறுமையறு நிறைவிசை சமைத்தார்.
பெருமையுடை துணைவி ஜானகியம்மாள்.
கல்விச்சாலைசெல்லாத இசைமேதை.
கண்ணகியிலிருந்து பத்துப் படநடிகர்.
கடும் வயோதிபத் துன்பமேக(ஏகல்)
கண்மூடினார் அமைதி கொள்ளட்டும்.

எண்பத்தேழு வருடங:களில் எத்தனையிசை!
எகிப்து இசை பட்டத்துராணி
மெக்சிக்கன் இசை முத்தமிடும் நேரமெப்போ
ரஷ்ய இசை கண்போன போக்கிலே
லத்தீன் இசை யார் அந்தநிலவு
யப்பானிசை பன்சாயி காதல்பறவைகள்
பெர்சியன் இசை நினைத்தேன் வந்தாய்!
பெருமை!..இனிமை!..தமிழே!….

வரிகளாக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
15-7-2015

anjali-2

66. நிசாரியின் (சூரியன்) வீரியம்.

summer heat02

நிசாரியின் (சூரியன்) வீரியம்.

குளிருது குளிருது என்றுகுடங்குதலானோம்.

 குனிய நிமிர உடல் நோவானோம்.

 நிமிர்ந்து நிம்மதி கொள்வாய் என்று

 நிசாரி தன் கிரணங்களை வீசினான்

 கஞ்சத்தனம் காட்டாது அதி பரிவை

 வஞ்சகம் இன்றிக் காட்டுதல் கொடுமை

 அஞ்சுகிறார் மக்கள் அலறுகிறார் வெப்பத்தால்

விஞ்சுதலாய் வெக்கையில் வியர்வை வழிகிறது

கோடை வேண்டும் கோடை வேண்டுமென்றோம்

கோரிக்கை கோரமாகித் துடிக்கிறோம் இன்று

மரங்களின் கீழ் மக்கள். பறவை

மரங்கொத்தியாய் முயற்சி, நிழல் தேடி.

குளியல் இரண்டு மூன்று முறை

எளிதான பருத்தி உடைத் தேர்வு

களித்திட கடல் தேடி ஓடல்.

புளித்திடாத குறையாக வெயில்..வெயில்..

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

5-7-2015

10275602_10205085709176197_8091329699660233275_o

41. இணையத் தமிழே இனி..

surfing-the-internet

இணையத் தமிழே இனி..

*

சுணையற்று உறைந்தவர்மணை விட்டெழுகிறார்!

அணைகிறார் தமிழ் ஆய்வு செய்கிறார்!

புணையாக்கி இணையத் தமிழுள் நீந்துகிறார்!

இணைந்து ஆர்வமாய்ப் பின்னுகிறார்! விதைக்கிறார்!

இணையற்ற ஏணியிது தமிழ் வானிற்கு

பணையுடை பாட்டரும் காணாத சுரபி

பிணையும் எழுத்துப் பிழைகள் பாசி

கணைச் சூடாகாது வெல்லல் வாசி

*

தூசி நிறை இதயக்கமலத்தைப் பலர்

பாசி படர்ந்த கிணறாக ஆக்குகிறார்

ஆசியுடைத் தமிழடிகள் ஒளி ஈர்த்து

வாசிக்கிறாராதித் தமிழ்ச் சங்க நூல்களை

பூசித்துக் கூடித் தமிழ் எழுதுகிறார்

கூசித் தம் மொழிக்கு உயிரூட்டுகிறார்

நேசித்துப் புனிதமாய் இலக்கணம் படிக்கிறார்.

யாசிக்காத இணையத் தமிழே! அற்புதம்!

*

கட்டுரை, சரித்திரம், ஆராய்வு, புவியியல்,

கொட்டிய கலைகள், சமயம், அரசியல்

எட்டாதது எதுவுமில்லை, யோகா, விளையாட்டென

சொட்டும் நல்லறிவு, நல்லுணர்வு பெறுமதியாய்

தொட்டிட்டால் வித்தகங்கள் அள்ளலாம் வெள்ளமாய்!

தட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்!

எட்டும் இணையத் தமிழே இனி

கொட்டும் முரசு வெள்ளிடை மலை!

*

(மணை – அமரும் பலகை, சிறு பீடம்.   புணை – தெப்பம்.

பணை – பெருமை.  கணைச் சூடு – நோய் வகை   சுணை – சுரணை, அறிவு, கூர்மை)

*

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

12-5-2015.

computer or connection

386. உவப்பானது வாழ்வு

11038927_10204300568889732_4145562627728076659_n

உவப்பானது வாழ்வு

குவலயம் நிறை இயற்கை.

தவமாய் அமையும் வாழ்க்கை

அவமற்ற உயர் வாய்ப்பை

அவலமாக்குவது விந்தையிலும் விந்தை.

கவலை உதிரும் இறகு!

சவமெனக் கைவிடு! சிரி!

உவப்பான வாழ்வில் துன்பத்தை

துவளாது நெற்றியில் பூசுவதேன்!

சவலைச் சிந்தனைகள் பேசி

உவமைகளும் கூறி ஊதி 

சவர்காரமாய் நுரைக்க வீசி

கவருகிறார் மானுட அமைதியை

வறட்சியற்ற மனக் குளத்தில்

திறனாய்க் கல்லெறிந்து கலக்குதலால்

இறப்பு மனவருவி வளையோசைகள்.

சிறக்கவையுங்கள் சந்தோச ஒத்திகையை.

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

4-6-2015

padaku

385. காட்சிக்கு நான்கு குருவி + மந்த தோற்றம்

11356062_847745791946288_1022635255_n

படவரி   17
1. காட்சிக்கு நான்கு குருவி

ஏழு நிறப் பிரிகை எனலாம்
ஏன் இன்னும் அதிகமும் எனலாம்
குச்சிலாம்பிலொரு பிரபஞ்ச நீர்த் தொட்டிலோ!
உச்சி வேளையல்ல ஊருறங்கப் போகிறது.

ஆரம்ப ஓவிய வகுப்பில் நான்
ஆறுதலாக வண்ணம் பூசியது முப்பிரிவு
நிலம், நீர்; வானம் – இங்கு
நிறைவாக நான்கு குருவி வரையலாம்!

வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-6-2015

2. மந்த தோற்றம்

வெண் சீருடை கழுவ
கண்ணன் மாயனின் வண்ணமாம்
கண் பறிக்கும் நீலப்பொடியை
எண்ணிக் கலக்கியது யாராகும்!
           –அன்றி –
விண்முகில் இங்கு சடுதியாய்
மண்ணில் தெரியும் மாயை!
திண்ணமோ இது நானறியேன்! 
கண்ணின் எண்ண மயக்கமோ!
            – ஒன்று –
இந்தப் பூனையும் பாலருந்துமோவென
மந்த தோற்றத்திலுறங்கும் கடலே!
மொத்த உலகுயிர்களைச் சுருட்டி
கத்தி ஆக்ரோசமான சுனாமியாவதும்
               – நீ தானே! – 

https://www.vallamai.com/?p=58919

வரிகளாக்கம்  வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
19-6-2015

chainborder