309. தலைமை.

 

1476125_481315021988994_1470005105_n

*

தலைமை

*

தலைமையென்பது சதுரங்க ஆட்டம்.
தலைவன் மட்டுமே காய்கள் நகர்த்துவான்.
தலையை மீறிக் காய்கள் நகர்ந்திடின்
தலைகீழாகத் தலையெழுத்து மாறும்.
அழுக்கு மனமில்லாத் தலைமை
வழுக்கும் மனமற்ற தலைமை
ஒழுக்க இதயத்து அஞ்சாமை
பழுத்த ஆய்வுள்ளம் தலைமைத் தேவை.

*

நிறுவன நிர்வாகம் தலைவன் சொந்தம்.
மருவிலாக் கூட்டுறவு ஊழியர் பந்தம்.
குலையாத குழுநிலைக் கூட்டுறவுப் பணி
விலையற்ற உயர்வை எட்டும் ஏணி.
தலைவன் செயலைத் தானெடுக்கும் ஊழியன்
நிலைக்கும் சனநாயகக் கூட்டுறவையழிப்பான்.
அதிகாரத் துர்பிரயோகம் அவத்தைக் கலக்கம்.
அதன்விதியை மாற்றும் நிர்வாக ஒழுக்கம்.

*

சட்டம் அமைந்து நிலைக்கும் பிரவாகம்
திட்டம் அமைத்த ஒழுக்க நிர்வாகம்.
மேலான நிர்ணயம் தலைவன் சாற்றுவான்
கீழ்படியும் ஊழியன் தலைவனடியொற்றுவான்.
இருக்குமிடத்தில் யாவும் இருந்துவிட்டால்
பெருகிடும் நிறுவன ஆய்வுத் தேட்டங்கள்.
                                   மெருகிடும் நிர்வாக இயக்கத்தின் தரங்கள்.                                          அருகிடும் சார்பான புகழ்மிகு வரங்கள்.
வாழ்க நிர்வாகம்! வளர்க ஊழியர் பண்பு!

*

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-01-2010.

*

11497627-vintage-dividers-and-borders-set-for-ornate-and-decoration

9 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கோவை கவி
    பிப் 20, 2014 @ 09:24:20

    இலண்டன் ரைம் வானொலி பொதுத் தலைப்புக் கவிதை-வியாழன்- 28-6-2003.
    காற்றுவெளி – சஞ்சிகைக்கு – முல்லை அமுதனுக்கு 20-1-2010

    அங்கு பதிக்கப் பட்டதற்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.
    இங்கு வரவு, கருத்திடல் மிக மகிழ்ச்சி, நன்றியும் உரித்தாகுக.

    மறுமொழி

  2. கோவை கவி
    பிப் 20, 2014 @ 09:25:53

    அன்பு மகே!.. விவரமான கருத்தையிட்டு மகிழ்ந்தேன்.
    மிகுந்த நன்றி.

    மறுமொழி

  3. கோவை கவி
    பிப் 20, 2014 @ 09:27:24

    அன்பு ரூபன்!.. இரசனையான கருத்தையிட்டு மகிழ்ந்தேன்.
    மிகுந்த நன்றி.

    மறுமொழி

  4. கோவை கவி
    பிப் 20, 2014 @ 09:28:01

    அன்பு D.D!.. இரசனையான கருத்தையிட்டு மகிழ்ந்தேன்.
    மிகுந்த நன்றி.

    மறுமொழி

  5. கோவை கவி
    பிப் 20, 2014 @ 09:28:55

    Ramani sir!….விவரமான கருத்தையிட்டு மகிழ்ந்தேன்.
    மிகுந்த நன்றி.

    மறுமொழி

  6. கோவை கவி
    பிப் 20, 2014 @ 09:29:38

    Dear sir….இரசனையான கருத்தையிட்டு மகிழ்ந்தேன்.
    மிகுந்த நன்றி.

    மறுமொழி

  7. கோவை கவி
    பிப் 20, 2014 @ 09:30:14

    Dear sis விவரமான கருத்தையிட்டு மகிழ்ந்தேன்.
    மிகுந்த நன்றி.

    மறுமொழி

  8. கோவை கவி
    பிப் 20, 2014 @ 09:30:55

    Dear sis Iniya!….விவரமான கருத்தையிட்டு மகிழ்ந்தேன்.
    மிகுந்த நன்றி.

    மறுமொழி

  9. கோவை கவி
    பிப் 20, 2014 @ 09:31:25

    D.D மிகுந்த நன்றி.

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக