16. அப்பாவாய் நீயிரு!…

  (படம்:- நன்றி –  இந்திய சஞ்சிகைக்கு)

 

அப்பாவாய் நீயிரு!…

ச்சிதனை முகர்வாய்! – என்
அச்சம் ஓடி மறையுதம்மா
உச்சமான நம்பிக்கை
மிச்சம் வளருதம்மா.

நின்னைத் துணை கொண்டால் – ஒரு
நிமிடமும் பேரின்பம் தானம்மா.
சின்னஞ்சிறு  வெறுப்பும்
மின்னலாய் ஒளியுதம்மா.

மெச்சிடும் உன்னுறவு – எனக்கு
துச்சமே இல்லையம்மா.
அச்சச்சோ தூரப் போகாதே
அச்சா அம்மா நீயே.

ப்போதும் பகலில் – எனக்கு
அப்பாவைக் காணா ஏக்கம்.
எப்படி எடுத்துரைப்பேன்
அப்பாவின் பிரிவுத் துயர்!

செப்புவேன் ஒன்றுனக்கு
தப்பாய் எடுக்காதேயம்மா.
அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா!

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-3-2012.

(உண்மைச் சம்பவம் கவிதையாக.)

 

                                

 

40 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. cpsenthilkumar
    மார்ச் 10, 2012 @ 08:09:17

    நீங்க வோர்டு பிரஸ்சா? இப்போதான் பார்க்கறேன்..

    ஓவியம் அழகு

    கவிதை ஓக்கே

    மறுமொழி

  2. சத்ரியன்
    மார்ச் 10, 2012 @ 08:30:08

    ஏக்கம் கனக்கும் கவிதை.

    மறுமொழி

  3. ஸாதிகா
    மார்ச் 10, 2012 @ 09:13:35

    ஓவியம் விழிகளையும்,கவிதை கருத்தினையும் வெகுவாய் கவர்ந்தன சகோ வேதா இலங்காதிலகம்.

    மறுமொழி

    • கோவை கவி
      மார்ச் 10, 2012 @ 13:49:59

      அன்பின் சகோதரி மிக மிக மகிழ்வு கொண்டேன். நன்றியும் கூட தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  4. சென்னை பித்தன்
    மார்ச் 10, 2012 @ 10:23:57

    தந்தையுமானவள்!அருமை சகோ

    மறுமொழி

    • கோவை கவி
      மார்ச் 10, 2012 @ 13:53:24

      தந்தையுமானவளாக இருத்தல் சிரமம் தான். இது பிள்ளையின் நப்பாசை தானே. தங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும் ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  5. hotlinksin.com
    மார்ச் 10, 2012 @ 10:28:05

    கவிதை அருமை…

    மறுமொழி

  6. வே.நடனசபாபதி
    மார்ச் 10, 2012 @ 10:54:00

    // அப்பா வரும் வரையெனக்கு
    அப்பாவாய் நீயிரு அம்மா//

    தாயுமானவரைப்பற்றி தெரியும் நமக்கு. தந்தையுமானவரைப்பற்றி அருமையாய் கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

    மறுமொழி

  7. கோவை கவி
    மார்ச் 10, 2012 @ 11:09:49

    R Thevathi Rajan likes this..

    Dinesh Paneer Das
    Graphic & Web Designer viewed this…

    மறுமொழி

  8. jaghamani
    மார்ச் 10, 2012 @ 13:46:44

    செப்புவேன் ஒன்றுனக்கு
    தப்பாய் எடுக்காதேயம்மா.
    அப்பா வரும் வரையெனக்கு
    அப்பாவாய் நீயிரு அம்மா!

    தந்தையின் இடம் தனி இடம்…

    தாயால் நிரப்பமுடிகிறதா பார்ப்போம்..

    மறுமொழி

    • கோவை கவி
      மார்ச் 10, 2012 @ 13:57:08

      சகோதரி தந்தையின் இடம் தனியிடம் தான். இது பிள்ளையின் ஆசை தானே!. உங்கள் கருத்திடலிற்கு மிக மிக நன்றியுடன் மிக மகிழ்ச்சியும். ஆண்டன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  9. Dr.M.K.Muruganandan
    மார்ச் 10, 2012 @ 15:50:53

    “அச்சச்சோ தூரப் போகாதே
    அச்சா அம்மா நீயே…”
    எஞ்சியிருக்கும் ஒரே உறவை
    நெஞ்சார நெருங்கும்
    வாய் மொழி அபாரம்.

    மறுமொழி

  10. கோவை கவி
    மார்ச் 10, 2012 @ 16:11:28

    தங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும் ஐயா. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

    மறுமொழி

  11. duraidaniel
    மார்ச் 10, 2012 @ 19:51:59

    அருமை. பாசக் கவிதை. நேசக் கவிதை. உணர்வுகள் வருடும் அருமையான வரிகள். வாழ்த்துக்கள் சகோதரம்.

    -செப்புவேன் ஒன்றுனக்கு
    தப்பாய் எடுக்காதேயம்மா.
    அப்பா வரும் வரையெனக்கு
    அப்பாவாய் நீயிரு அம்மா!-

    – அழகான வரிகள். அந்த தந்தை மதிப்புக்குரியவர்.

    மறுமொழி

    • கோவை கவி
      மார்ச் 10, 2012 @ 19:59:09

      எத்தனை குடும்பங்களில் இப்படித் துன்பங்கள் உள்ளது சகோதரா. அப்படி ஒன்றே இது.
      மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் உங்கள் இனிய வருகைக்கும் கருத்திடலிற்கும்..இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  12. ramani
    மார்ச் 11, 2012 @ 00:40:38

    தாயின் மீது குழந்தைவைத்துள்ள பாசம் குறித்து
    சொல்லப்பட்ட அளவு தந்தை மீது கொண்டுள்ள நேசத்தை
    கவிதைகளோ இலக்கியங்களோ அவ்வளவு சொன்னதில்லை
    தங்களது வித்தியாசமான சிந்தனையும்
    மிக நேர்த்தியாகச் சொல்லிப் போனவிதமும்
    மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

  13. b.ganesh
    மார்ச் 11, 2012 @ 00:58:36

    தந்தையிடம் சில சமயங்களி்ல தாய்மையைக் காண முடிவதைப் ‌போல தாய்மையிடம் தந்தைமையைத் தேட விழைந்த குழந்தையின் ஏக்கக் கவிதை வெகு அருமை சகோதரி!

    மறுமொழி

    • கோவை கவி
      மார்ச் 11, 2012 @ 08:11:35

      ஏக்கக் கவிதையின் கருத்திடலிற்கும் இனிய வருகைக்கும் மிகுந்த நன்றியும், மகிழ்வும் சகோதரா.
      தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  14. rathnavelnatarajan
    மார்ச் 11, 2012 @ 05:14:33

    அருமையான கவிதை.
    வாழ்த்துகள்.

    மறுமொழி

    • கோவை கவி
      மார்ச் 11, 2012 @ 08:14:08

      மிக நன்றியும், மகிழ்ச்சியும் ஐயா தங்கள் கருத்திடலிற்கும் இனிய வருகைக்கும்.
      மிகவும் அருத்தமுடையது எனக்கு இது.
      ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  15. மகேந்திரன்
    மார்ச் 11, 2012 @ 15:48:24

    தாய்மையிடம் ஒரு
    தந்தையின் குணத்தை காண
    விழையும் ஒரு அற்புதக் கவிதை
    சகோதரி…

    மறுமொழி

    • கோவை கவி
      மார்ச் 11, 2012 @ 16:09:29

      அன்பின் சகோதரா மகேந்திரன் தங்கள் இனிய வருகைக்கும் கருத்திடலிற்கும் மிகுந்த நன்றியும், மகிழ்வும்.
      தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  16. கோவை கவி
    மார்ச் 11, 2012 @ 18:26:39

    Selva Venkat likes this../ SentDinesh Paneer Das, Graphic & Web Designer ..like this.

    Gunavathi Pachayapan likes this../ Sasi Krish, Annamalai University like this.

    Hani Maas, Zahira College, Kalmunai like this. /R Thevathi Rajan, Annamalai University, Chidambaram like this. / வித்யாசாகர் குவைத் likes this..

    மறுமொழி

  17. கீதமஞ்சரி
    மார்ச் 12, 2012 @ 01:13:15

    பெண்மையில் மறைந்திருக்கும் ஆண்மையை வெளிக்கொணர முயலும் மழலையின் ஏக்கம் மனம் நெகிழ்க்கிறது. அழகான கவிதை. பாராட்டுகள்.

    மறுமொழி

  18. பழனிவேல்
    மார்ச் 12, 2012 @ 03:53:41

    “செப்புவேன் ஒன்றுனக்கு
    தப்பாய் எடுக்காதேயம்மா.
    அப்பா வரும் வரையெனக்கு
    அப்பாவாய் நீயிரு அம்மா!”

    அப்பா அப்பாதான்…
    அம்மா அம்மாதான்…
    அழகு கவிதை.

    மறுமொழி

  19. கோவை கவி
    மார்ச் 12, 2012 @ 07:14:15

    ”…அப்பா அப்பாதான்…
    அம்மா அம்மாதான்…
    அழகு கவிதை…”
    இது உண்மை தான் பிள்ளை மனமல்லோ அல்லாடுகிறது.
    சகோதரா உமது அன்பான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

    மறுமொழி

  20. pathmasri
    மார்ச் 12, 2012 @ 18:47:05

    நீண்ட நாட்களின் பின் நான் உங்கள் தளத்தில்….. நல்ல வரிகள் .எனக்கு மிகவும் பிஎத்துள்ளது..
    “செப்புவேன் ஒன்றுனக்கு
    தப்பாய் எடுக்காதேயம்மா.
    அப்பா வரும் வரையெனக்கு
    அப்பாவாய் நீயிரு அம்மா!”
    ப்ரியமுடன்…
    -சிரபுரத்தான்-

    மறுமொழி

    • கோவை கவி
      மார்ச் 13, 2012 @ 07:41:28

      ஓ!…எவ்வளவு நாளின் பின். மிக மிக மகிழ்ச்சி சகோதரா. காலம் ஓடிக் கொண்டே உள்ளது. நாமும் மாற்றங்களுடன் ஓடுகிறோம். எது எப்படியானாலும் வந்தீர்களே! கருத்திட்டீர்கனே! நன்றி!..நன்றி.! இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  21. tharshi
    மார்ச் 13, 2012 @ 07:10:05

    செப்புவேன் ஒன்றுனக்கு
    தப்பாய் எடுக்காதேயம்மா.
    அப்பா வரும் வரையெனக்கு
    அப்பாவாய் நீயிரு அம்மா!

    எப்படிச் சொல்வதென்றே… தெரியவில்லை…அழகான வரிகளுடன் அழகான கவிதை

    மறுமொழி

  22. கோமதி அரசு
    மார்ச் 14, 2012 @ 11:48:00

    செப்புவேன் ஒன்றுனக்கு
    தப்பாய் எடுக்காதேயம்மா.
    அப்பா வரும் வரையெனக்கு
    அப்பாவாய் நீயிரு அம்மா!//

    அருமையான வரிகள்.
    அருமையான பாசக் கவிதை.
    ஒவியம் அன்பை அழகாய் வெளிப்படுத்துகிறது.

    மறுமொழி

  23. கீதமஞ்சரி
    மார்ச் 17, 2012 @ 23:44:35

    தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_18.html

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக