301. என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு!

1546420_10202398591993447_1523777342_n

என்னைக் கவர்ந்த
எங்கள் பனை வளவிற்குள்
சிறு வயதில் கண்டு ரசித்த பூச்சியிது.
இன்னும் இரத்தச் சிவப்பாக இருக்கும்.
நினைவு பின்னைய கவிதையானது.
http://noolaham.net/project/20/1931/1931.pdf ( page 38 .39 )

enna peyar

DecorativeLine1-2

28 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Venkat
    ஜன 05, 2014 @ 14:27:15

    அருமையான கவிதை.

    இந்த வண்ணத்தில் இப்பூச்சியை பார்த்ததில்லை…..

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 05, 2014 @ 14:50:35

      இது உண்மையில் இரத்தச் சிவப்பு நிறப்பூச்சி.
      நான் இரத்த சிவப்பு அடித்துப் பார்த்தேன்
      அதன் அழகு காட்டும் முடிகள் வளைவு நெளிவுகள் மறைகிறது.
      விட்டு விட்டேன்.
      சகோதரா வெங்கட் கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.
      இறையாசி நிறையட்டும்

      மறுமொழி

  2. ramani
    ஜன 05, 2014 @ 14:34:13

    அற்புதமான கவிதைக்கும்
    முன்னூறாவது பதிவிற்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 05, 2014 @ 14:43:20

      ஐயா Ramani sir. பாமாலிகை கதம்பம் என்ற தலைப்பில் மட்டும் 300.
      மொத்தம் 939 வலையில் வெளியிடப் பட்டது.
      கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.
      இறையாசி நிறையட்டும்

      மறுமொழி

  3. வை. கோபாலகிருஷ்ணன்
    ஜன 05, 2014 @ 14:41:45

    பூச்சியை மட்டுமே பார்த்தேன்.

    தங்கள் கவிதையை நான் சுத்தமாகப் படிக்கவில்லை.

    படிக்க முயற்சிக்கவும் இல்லை.

    இதற்கு நான் ‘தேன் மிட்டாய்ப்பூச்சி’ என்று பெயரிட்டு மகிழ்கிறேன்.

    தங்களின் 300வது பதிவுக்கு என் நல்வாழ்த்துகள்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 05, 2014 @ 14:47:12

      எனக்குத் தெரியுமய்யா…அது தான் இணைப்பு தந்துள்ளேன்
      அதில் 38ம் பக்கம் பாருங்கள். http://noolaham.net/project/20/1931/1931.pdf
      எனது முழுப் புத்தகமும் அதில் உள்ளது. பிடிஎப்ஃ ஆக.
      கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.
      இறையாசி நிறையட்டும்

      மறுமொழி

  4. தி தமிழ் இளங்கோ
    ஜன 05, 2014 @ 16:50:42

    புகைப்படத்தை க்ளிக் செய்து, பெரிதாக்கி படிக்கும்போது மூல நூலைப் படிக்கும் உணர்வே வந்தது. பொதுவாக எட்டுக்கால் பூச்சி என்றே அழைப்போம். தமிழ்நாட்டில் நாங்கள் வசிக்கும் பகுதிகளில் மஞ்சள் நிற எட்டுக்கால் பூச்சிகள்தான் அதிகம். நீங்கள் சொல்லும் தம்பலப் பூச்சிகளை எங்கள் கிராமத்து தோப்புகளில் பார்த்து இருக்கிறேன். படம், கவிதை பகிர்வுக்கு நன்றி!

    தம்பலப்பூச்சி – மிருதுவான மேற்பகுதியோடு சிவப்பு நிறத்தில் காணப்படும் ஒருவகை சிறிய பூச்சி. Cochineal insect மழைக் காலமென்றால் தம்பலப் பூச்சிகளெல்லாம் வந்துவிடும் ( நன்றி :
    க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி)

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 05, 2014 @ 19:18:11

      நூலின் பதிவு இணைப்பு தந்துள்ளேன்.
      கிளிக்கினால் 102 கவிதைகள் உண்டு.
      கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.
      இறையாசி நிறையட்டும்

      மறுமொழி

  5. கோமதிஅரசு
    ஜன 06, 2014 @ 00:57:59

    சிறு வயதில் தீப்பெட்டி பெட்டியில் வைத்துக் கொண்டு பள்ளியில் எல்லோரிடமும் காட்டி அதன் மேனியை தொட்டுப் பார்த்து மகிழ்ந்த காலம் நினைவு வருகிறது. பட்டுப்பூச்சி அதன் பெயர்.வெல்வட் மாதிரி அதன் உடல் இருக்கும்.
    உங்கள் கவிதையும் அதை சொல்கிறது.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    ஜன 06, 2014 @ 03:15:15

    வணக்கம்
    சகோதரி

    தங்களின் கவிதை தொகுப்பை பார்த்தேன் மிக அருமையான கவிதைகள். மேலும் பல படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்
    ஒரு வித்தியாசமான பூச்சி..சிலந்திவகை என்று நினைகிறேன்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 06, 2014 @ 06:45:32

      ரூபன் இதன் பெயர் தம்பலப்பூச்சி. சகோதரர் இளங்கோ இங்கு கருத்துத் தற்துள்ளார் பாருங்கள்.
      அவருக்கும் நன்றி. Rupan கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.
      இறையாசி நிறையட்டும்

      மறுமொழி

  7. திண்டுக்கல் தனபாலன்
    ஜன 06, 2014 @ 04:14:47

    சிவப்பு நிறப்பூச்சி அழகு… கவிதை வரிகள் மிகவும் அருமை சகோதரி… 300-வது பதிவிற்கும் வாழ்த்துக்கள்…

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 06, 2014 @ 06:41:48

      பாமாலிகை கதம்பம் என்ற தலைப்பில் மட்டும் 300. There are so many headings with poem.
      மொத்தம் 939 Pathivu வலையில் வெளியிடப் பட்டது D.D.
      கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.
      இறையாசி நிறையட்டும்

      மறுமொழி

  8. Rajarajeswari jaghamani
    ஜன 06, 2014 @ 04:16:26

    300 வது பதிவுக்கு வாழ்த்துகள்..!

    பட்டு வெல்வெட் பூச்சி வண்ணமயமாய் அழகுகாட்டுகிறது..!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 06, 2014 @ 06:40:40

      பாமாலிகை கதம்பம் என்ற தலைப்பில் மட்டும் 300. There are so many headings with poem.
      மொத்தம் 939 Pathivu வலையில் வெளியிடப் பட்டது.
      கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.
      இறையாசி நிறையட்டும்

      மறுமொழி

  9. Dr.M.K.Muruganandan
    ஜன 07, 2014 @ 15:48:21

    யாழ்ப்பாணத்தில் எங்கள் பக்கத்தில் தம்பலப்பூச்சி என்போம். பட்டுப் பூச்சி என்றும் சிலர் சொல்லுவார்கள்.
    நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் மழையைக் கண்டால் வளவு முழுவதும் ஓடித் திரியும்
    அண்மையில் மழைகாலத்தில் ஊர் சென்ற போது காண்பது அருமையாகிவிட்டது. ஓரிரண்டைக் கண்டேன்
    அதை ஞாபகப்படுத்திய இளமை நினைவுக் கவிதை அருமை
    பாராட்டுக்கள்

    மறுமொழி

  10. வை. கோபாலகிருஷ்ணன்
    ஜன 08, 2014 @ 10:43:33

    மறுமொழி
    கோவை கவி
    ஜன 05, 2014 @ 14:47:12

    //அதில் 38ம் பக்கம் பாருங்கள். http://noolaham.net/project/20/1931/1931.pdf
    எனது முழுப் புத்தகமும் அதில் உள்ளது. //

    பார்த்தேன். மிக்க நன்றி.

    ஆயிரம் கவிதைகளையல்லவா நெருங்க உள்ளீர்கள். பாராட்டுக்கள். சாதனைக்கு வாழ்த்துகள்.

    .

    மறுமொழி

    • கோவை கவி
      ஜன 17, 2014 @ 07:00:19

      ஐயா! பிரிவுகள் என்றதின் கீழ் மொத்தப் பதிவுகள், இவை ஆன்மிகம், சிறுகட்டுரை தொலைத்தவை எத்தனையோ, கவிதைகள் என்று பல பிரிவுகளில் எழுதியவையே. தனியே கவிதைகள் மட்டும் அல்ல…..ஐயா.
      கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.
      இறையாசி நிறையட்டும்

      மறுமொழி

  11. maathevi
    ஜன 08, 2014 @ 14:49:58

    தம்பலப்பூச்சி . என்றுஅழைப்போம்.

    தொட்டுப்பார்த்தால் மெத்தென்று இருக்கும் சிறுவயதில் தொட்டு பார்ப்போம். புல்லுக்காணிகளில் நிறைய ஓடித்திரியும்.

    மறுமொழி

  12. கோவை கவி
    ஜன 17, 2014 @ 07:05:59

    கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.
    இறையாசி நிறையட்டும்

    மறுமொழி

  13. திண்டுக்கல் தனபாலன்
    ஜன 18, 2014 @ 12:19:50

    வணக்கம்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…

    வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_18.html) சென்று பார்க்கவும்… நன்றி…

    மறுமொழி

  14. வெற்றிவேல்
    பிப் 21, 2014 @ 14:58:47

    இதற்கு பட்டுப் பூச்சி என்று எங்கள் கிராமத்தில் அழைப்போம்….

    மறுமொழி

  15. கோவை கவி
    பிப் 25, 2014 @ 07:29:54

    கருத்திடலிற்கு நன்றியும் மகிழ்வும்.V.V.
    இறையாசி நிறையட்டும்

    மறுமொழி

  16. கோவை கவி
    ஜன 05, 2018 @ 11:43:11

    Tharsini Kanagasabai :- கவிதை அழகு…இப்போதெல்லாம் இந்த பூச்சியை காண்பதே கிடையாது…
    கம்பளிப் பூச்சி என்றுதான் நாம் சொல்வதுண்டு
    6 January 2014 at 11:14

    Vetha Langathilakam தம்பலப்பூச்சி இதன் பெயர்.
    என்வலைக்கு செல்லுங்கள் இங்கே விளக்கமுண்டு – திரு இளங்கோ அவர்கள்.
    6 January 2014 at 11:36

    மறுமொழி

  17. கோவை கவி
    ஜன 05, 2018 @ 11:44:33

    Vetha Langathilakam :- என்னைக் கவர்ந்த எங்கள் பனை வளவிற்குள் சிறு வயதில் கண்டு ரசித்த பூச்சியிது. இன்னும் இரத்தச் சிவப்பாக இருக்கும். நினைவு பின்னைய கவிதையானது.
    5 January 2014 at 10:19

    கோபால் கண்ணன் வெல்வெட் பூச்சி-ன்னு தான் சொல்வோம்.
    5 January 2014 at 10:34

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக