4. பயணம் – மலேசியா 15. ( இறுதி அங்கம்)

malaysia- 1 393

4. பயணம் –  மலேசியா 15. ( இறுதி அங்கம்)

 

சாந்தியின் அம்மா ஒழுங்கு படுத்தினார் நாங்கள் லிட்டில் இந்தியா பார்ப்போம் என்று. நான் முன்பு குறிப்பட்டுள்ளேன் நிறைய செங்கல்லுச் சூளைகள் இருந்ததால் அது பிறிக் பீஃல்ட் என்றும் அதுவே லிட்டில் இந்தியா என்றும் வந்ததாக.

malaysia- 1 394

வேலை செய்ய இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைத் தருவித்து இருப்பிடமும் கொடுத்தனர்.  அப்படி ஆதியில் வந்தவர்களே  லிட்டில் இந்தியாவில்  இந்தியர்கள்  என  அழைக்கப் படுபவர்கள்.

அதே போலவே முன்னர் இலங்கைத் தமிழரும் வருவிக்கப்பட்டனர்.

இந்திய உணவு வண்ண நிற அலங்கார வளைவுகள் என நவீன லிட்டில் இந்தியா காட்சி தருகிறது. சும்மா சுற்றிப் பார்த்தோம். ஒரு துணிக் கடையுள் புகுந்தோம். தீபாவளிக்கு முன்னும் பின்னுமான நேரமது. டென்மார்க்கில் டெனிஸ் மயமாக இருப்பதால் தீபாவளி அலங்காரங்கள் தேவலோகம் போல இருந்தது.

படத்தில் இவைகளைக் காண்கிறீர்கள். அந்த அலங்கார வளைவு அழகாகவே இருந்தது.

மலேசியாவில் அடுத்த விசேடம் எங்கும் தெருவில் பூமரங்கள் செடிகளாக வைத்து அழகு படுத்தியுள்ளது விசேடம். உதாரணமாக இரு படங்கள் போட்டுள்ளேன்.

malaysia- 1 404

malaysia- 1 403

இரவுச் சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டோம்.

malaysia- 1 397

(லிட்டில் இந்தியா அலங்கார வளைவுகளுக்கிடையில் இருந்த பூந்தொட்டிகள்.

அடுத்து சிங்கள மகாவிகாரை பார்த்தோம்.

malaysia- 1 381

லிட்டில் இந்தியா சுற்று வட்டத்திலேயே இது இருக்கிறது.

This is google photo in day light.   buddhist_temple_vesak

கடந்த 50 வருடமாக இது நடக்கிறதாம். ஒரு போதி மரத்தடியில் 12 பிள்ளைகளுடன் தூண்டுதலற்ற தன்னிச்சையான ஆசிரியர்களுடன் ஆரம்பமானதாம். – this is also google photo

MahaVihara1-300x224

கோவில் அத்துடன் சிங்களப் பாடசாலையும் சேர்ந்து நடக்கிறதாம்.

malaysia- 1 383

தேரவாட புத்த மதம் இலங்கை போன்றது.
இன்று பாடசாலையில் 20 வகுப்புகளும், 1300 பிள்ளைகளுடன் நடக்கிறதாம்.

இத்துடன் எமது பயணவிவரிப்புகள் முடிவடைகிறது.
எனது படங்கள் இரவுக் காட்சியாக உள்ளது.

நாம் இங்கு சுற்ற மலாக்கா வந்ததுடன் மகளும் துணைவரும்
கமரூன் கை லாண்ட்ஸ்க்கு (Cameron highlands   ) சென்றுவிட்டனர். -தேயிலைத் தோட்டப் பகுதி.
257வது ஆக்கம் ” இன்னிசைச் சந்தம் பெருகட்டும்” படம் அங்கு எடுத்த படமே. இணைப்பு தருகிறேன்.  https://kovaikkavi.wordpress.com/2012/12/08/257-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%9f/
என்னோடு 15 அங்கமாகப் பயணித்த அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.

இறையாசி இருந்தால் இன்னோரு பயணக் கதை தொடரலாம்.

 

நன்றி. வணக்கம்.

 

 

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-12-2012.

malaysia- 1 388

4. பயணம். மலேசியா. 14

4. பயணம். மலேசியா. 14

 

போராளிகள் அடையாளச் சிலை பார்த்தோம். அந்த இடத்தைச் சுற்றியுள்ளவை பாராளுமன்றத் தொடர் மாடி வீடுகள்.

கோலாலம்பூர் நகரம் கிளங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. மலேசிய மொழியில் குவாலாலும்பூர் என்பது ” கலங்கிய சங்கமம்” என்ற கருத்துடையது.

வெள்ளீயச் சுரங்கங்கள் அமைக்க மலாய் மன்னனால் சீன தொழிலாளர்கள் இங்கு தருவிக்கப்பட்டனர். இவர்கள் கொம்பக் ஆறும், கிளாங் ஆறும் கலக்குமிடத்தில் (இங்கு) தங்கினார்கள். ஆரம்பத்தில் தென்னங் கீற்றுகளாலான இவர்கள் இடங்கள் பின்னர் செங்கற்களாலான கட்டிடமாக ஆகியது. செங்கல்லுகள் ஓடுகளாலான கட்டிடங்களிற்குச்  செங்கற் சூளைகள் அமைந்த இடமே சிலங்கூரில்  பிறிக் பீஃல்ட்(Brik field)  என்று கூறும் லிட்டில் இந்தியாப் பகுதியாக அமைந்தது.  வெள்ளீயச் சுரங்கங்களே பின்பு வணிக மையங்களாக மாறி எல்லை நகரமாக உருவெடுத்தது.

ஏன் இந்தச் சிறு அறிமுகம் என்று யோசித்தீர்களா!

அடுத்த நாள் கோலாலும்பூர் மத்திய சந்தை பார்க்கலாம் என்று சாந்தியும் தீலீபனும் (மகன் – மருமகள்) கூட்டிப் போனார்கள். வாகனம் நிறுத்திய இடத்தின் எதிர்ப்புறம் தெருவைக் கடந்து சிறிது தூரம் நடக்க சந்தை வருகிறது. கடக்க முன்னர் இதில் ஒரு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் நின்று பார்த்தால் கிளங் ஆறும் கொம்பக் ஆறும் சேரும் இடம் தெரிகிறது. முதலாவது படம் பாருங்கள். பாலத்தால் இறங்கி ஆற்றோடு ஒரு பக்கமாக நடந்து

சந்தையை அடைந்தோம். நான் பின்னாலே வந்து படம் எடுத்தேன்.

 google photo.
குட்டிக் குட்டி சதுரங்களாக பெட்டிக் கடை என்று கூறலாம் (மாதம் 3000யிரம் றிங்ஙெட் வாடகையாம்) மலேசிய கைப்பணி, கலாச்சாரப் பொருட்கள் அத்தனையும் வாங்கலாம்.

ஒரு குதூகலம் தரும் இடமாக இருந்தது. நான் இப்போதைய நவீனமான பெரிய மோதிரம் 3 வாங்கினேன்.

வித்தியாசமான நிற கற்கள் பதித்தவை.  சீன,  இந்திய என்று பல வகைக் கடைத் தொகுதிகள் உள்ளன.
மேல் மாடியிலும் கடைகள் உள்ளன.
சுற்றி முடிய சென்டுல் (cendul   )  மலேசிய பிரபல குளிர் பானம், இங்கும் சாந்திக்கு வேணுமென்று பார்த்தோம்.

தேங்காய் பால், மண்ணிறச் சீனி, ஐஸ், ஜெலி கலந்த கலவை. பெரிய ஐஸ் கட்டிகளை அரத்தினால் வெட்டிப் போட்டு மிக்சியில் அடித்துத் தருகின்றனர். 

பிளாஸ்ரிக் உறையில் போட்டுத் தருகின்றனர். உறிஞ்சியினால் அப்படியே உறிஞ்சிக் குடிக்க வேண்டியது தான். பழைய கட்டிடங்களும், நவீன கட்டிடங்களின் கலவையை

old and new building  in the samme place.

இந்தப் படத்தில் காணலாம்.   கீழே இருக்கும் படம் மத்திய சந்தை ஒரு காட்சி வெளியிலிருந்து பார்க்க.

நாளை வேறு இடம் செல்வோம்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-11-2012.

4. பயணம் மலேசியா 13.

national monument 

 

4. பயணம் மலேசியா 13.

 

மலேசியா போக முதலே கூகிளில் மேய்ந்து ஓரளவு எதை எதைப் பார்ப்புது என்று  ஒரு பட்டியல் போட்டிருந்தோம். அதன்படி தேசிய நினைவுச் சின்னமான( national monument   ) போராளிகள் நினைவுச் சின்னம் பார்க்கப் புறப்பட்டோம்.

45 நிமிடமளவு வாகன ஓட்டம் மருமகள் சாந்தி தனது வாகனத்திலேயே கூட்டிச் சென்றார் – மகனோடுமாகச் சென்றோம்.

உள்ளே செல்லும் பாதை..

சுதந்திரப் போரில் இறந்தவர்கள் – யப்பான் முற்றுகை  இரண்டாம் உலகப் போருடன், மற்றும் உள்ளகப் பிரச்சனைகளாக  1948 -1960 காலப்பகுதியில் 11 ஆயிரம் பேர் இறந்தனராம். இவர்கள் நினைவாகக் கட்டப்பட்டது.

முதல் படத்துப் படிகளால் ஏறிச் செல்ல இந்த வெளியுடன்  இந்தக் கட்டிடம்.

உலகத்திலேயே உயரமான குழுநிலை உருவச்சிலைகள், வெண்கலத்தில் செய்யப்பட்டது. 15 மீட்டர் உயரம் (49.21அடி) 7 ஆயுதம் ஏந்திய போர்வீரர் நிற்பது போல. (வரைகலை designed by Australian sculptor Felix de Weldon . இவரே யு.எஸ்.ஏ யில் உள்ள  war memorial   க்கும் பொறுப்பானவர்.    )

இதனருகிலேயே நினைவுத் தூபியும் உள்ளது.
மலேசியப் பிரதம மந்திரிதுங்கு அப்துல் ரக்மான் 1960ல் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்ற போது வேஜீனியாவில கட்டப்பட்ட போர் நினைவுச் சின்னத்தைப் பார்த்து அதில் மனம் கவரப்பட்டு லேக் கார்டெனுக்கு (lake garden) எதிர்ப்புறமாக 1966ல் இந்த உருவச் சிலைகளைக்கட்டி முடித்தனர்.

வருடத்தில் ஆடி 31ல் போராளிகள் நாள் ( warrior’s day   ) என்று அன்று பிரதம மந்திரி மிலிட்டரி தலைவர்கள், போலிசார் இறந்த வீரர்களிற்காக மாலையிட்டு மரியாதை செய்வார்கள்.

ஒவ்வொரு புறக் காட்சி.

இதன் எதிர் புறமாக லேக் கார்டின் உள்ளது. இதன் ஆதிப் பெயர் பப்ளிக் கார்டின். பின்னரே இந்தப் பெயரை 2011 ஆனி மாதத்தில் வைத்தனர்.
மிகப்பரந்த இடப்பரப்பை நிரப்பும்  இப் பிரதேசத்தில் வண்ணத்திப்பூச்சி, மான், ஒர்க்கிட் மலர்கள் என தனித் தனியாகப் பிரத்தியேகப் பிரிவுகள் உள்ளது. நாம் இதனூடாக வாகனத்தில் ஓடியே வந்தோம் உள்ளே சென்று பார்க்கவில்லை.

நீங்கள் லேக் கார்டின் என்று கூகிளில் படப் பகுதியை அழுத்தினால் பிரமாதமான படங்களைக் காணலாம். வியப்புடையது.

இங்கு உணவுடன் சென்று அமர்ந்து முழு நாளையே கழிக்கலாம். சாந்தி தனது சகோதரிகளின் பிள்ளைகளைக் கூட்டி வந்து நாளைக் கழிப்பதாகக் கூறினார்.
நமது கண்டி மலைப்பிரதேசம் போல மிக குளுகுளுவாக இருந்தது.

அங்கம் 14 ல்  வேறு பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-11-2012

தெருவைக் கடந்து வாகனத் தரிப்பிடம் செலலுகிறோம்.

4. பயணம் மலேசியா. 12

மலேசியாவின் பிரபல பழம் டுறியான் (durian)

4. பயணம் மலேசியா. 12

மலாக்கா போகும் வழியில் மலேசியாவின் மிகப் பிரபலமான டுறியான் (durian   ) பழத்தை ருசி பாருங்கள் என்று பாதையோரக் கடையில் நிறுத்தினார் சாரதி. வாகனத்தில் வைத்து விற்பனை நடந்தது. பார்வைக்குப் பெரிய சீதாப் பழம் போல தோற்றம். ஒரு கிலோ பழம் 15 றிங்ஙெட். அதை வாங்கி 5 பேரும் பிரித்துச் சாப்பிட்டோம். அவர்களே எல்லாம் வெட்டித் தந்தனர்.  சுவையாகவே இருந்தது.

மலாக்கா ஆற்றில் படகுப் பவனி.
சுமார் 10க்கும் மேற் பட்ட மேம்பாலங்கள்,
வித விதமான பெயர்கள். ஸ்பைஸ் கார்டின் (spice garden ), த பைறட் பார்க் (The pirate  park ), பழைய பேருந்துத் தரிப்புப் பாலம் (old bus station bridge), யாவா கிராமம் (Jawa village), வாட்டர் மில் (water mill) லக்சுமணன் தெரு, என்று பல பெயர்கள் உள்ள பாலத்திற்கூடாக படகு பயணிக்கும்.

மலாக்கா சரித்திரம், அந்தந்த இடத்தின் சிறப்பு என்று ஒரு ஒலிப் பதிவு நாடா ஓடியபடி உள்ளது. இது துறைமுகம், இது மீன் கடை, இது அழகு நிலையம் என்று கூறியபடி வருகிறது.

படகுப் பவனி முடிய பக்கத்துக் கடை வீதிக்கு வந்தோம்.

அலங்கரித்த சைக்கிள் றிக்சாக்கள் வரிசையாக நின்று எம்மை வா..வா என பிடுங்கியபடி உள்ளனர். 20 றிங்ஙெட்டுக்கு மலாக்கா பட்டணத்தை சுற்றிக் காட்டுவார்கள். இதை நாம் மிகவாகக் கணக்கெடுக்க வில்லை.

ஆனால் மகளும் துணைவரும் போய் வந்தனர்.

நான் இப்போ மிகவும் வருந்துகிறேன் ஏன் இதில் போய் சுற்றிப் பார்க்காது தவற விட்டோம் என்று. மகள் எம்மோடு மிகவும் வாதாடினாள், மனத்தாபப்பட்டாள் வாருங்கள் என்று.
அதாவது பரமேஸ்வரா ஒதுங்கி இருந்த மரம், வேறும் பல சரித்திர முக்கியத்துவமான இடங்களெல்லாம் பார்த்து வந்துள்ளனர்.

  எனவே சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த றிக்சா சுற்றுப் பயணம் மிக முக்கியத்துவமானது.
அனைவரும் அனுபவித்து முக்கிய இடங்களைப் பார்க்க வேண்டியது.

இதற்கு மேலும் அங்கு நின்றால் மிக இருட்டி விடும் என்று அன்றைய உலாவை முடித்து நமது தங்கும் வாடி வீட்டிற்குத் திரும்பினோம்.

போகும் வழியில் மலேசிய பிரபலமான குளிர் பானம் ” சென்டுல் ” (sendol )

ருசித்துப் பாருங்கள் என்று  நிறுத்தினார். ஐஸ், தேங்காய்ப் பால், மண்ணிறச் சீனி, ஜெலி கலந்த கலவை. எனக்குப் பிடிக்கவில்லை. சாரதி விழுந்து விழுந்து ருசித்தார்.

சரியாக இரவு ஒன்பது மணிக்கு அறைக்கு வந்தோம்.

அடுத்த நாள்……

மிகுதியை அங்கம் 13ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.  
ஓகுஸ், டென்மார்க்.
26-10-2012.

4. பயணம். மலேசியா. 11

(தயார் நிலையில் படகு)

4. பயணம்.  மலேசியா.  11

1401ம் ஆண்டில் ஸ்ரீ விஜய இராச்சியமென்ற சுமத்திராவை விட்டு வெளியேறிய இந்து அரசன் பரமேஸ்வரா சிங்கப்பூரை வந்தடைந்தான் அங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்ற போது மலாக்காவைக் கண்டு பிடித்தானாம். முஜபகிட் (யாவா நடுப்பகுதி) தாக்குதலின் போது, போர் நடந்த போது தப்பி ஓடி வந்து ஒளிந்த போது தான் இது கண்டு பிடிக்கப் பட்டது.

பரமேஸ்வரா ஒரு மரநிழலில் ஒதுங்கி வாழ்ந்தானாம். அந்த மரத்தின் பெயரே மலாக்கா (melaka ). வேட்டையாடி இளைப்பாற ஒரு மர நிழலில் பரமேஸ்வரா ஒதுங்கினான். இவனது வேட்டை நாய் சருகுமானுடன் சண்டை பிடித்தது. தன்னைப் பாதுகாக்க சருகு மான் வேட்டை நாயை அருகிலிருந்த ஆற்றில் தள்ளி விட்டது. நாய் ஆற்றில் மல்லாக்க விழுந்தது. பெலவான் பலவீனமானவனைத் தாக்குவான் என்ற உண்மையை இதிலிருந்த அறிந்தான். சருகுமானின் தைரியம் இவனைக் கவர்ந்தது. அந்த இடத்து இயற்கை அமைப்பும் அவனைக் கவர்ந்தது. தனக்கு பாதுகாப்பாக இருந்த இடத்து மரப் பெயர் மலாக்கா. நாய் மல்லாக்க விழுந்தது. இவ்விடத்திற்கு மலாக்கா என்ற பெயரை வைத்தான், என்ற ஒரு கதையும் உள்ளது.

தன்னைப் பலப்படுத்தும் அவசியத்தை உணர்ந்தான். ஒரு இராச்சியத்தைக் கட்டி அமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்பட்டான்.

15ம் நூற்றாண்டில் இது மலே மக்களின் மீன்பிடி நகரமாக இருந்ததாம். பரமேஸ்வரா இதை மிகப் பெரிய தேசியத் தறைமுகமாக்கினான். அரேபியா, சீனா, இந்தியா, ஐரோப்பாவூடாக பட்டு, பலசரக்கு வாசனைத் திரவியங்கள், தங்கம், பீங்கான் ஏற்றுமதி இறக்குமதி ஆகியது.

1414ல் பரமேஸ்வரா இறந்தான். இவன் இந்துவானாலும் பின்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவினான். மலாக்காவின் முதன் முதல் சுல்தான் இவனே.

இது மலாக்கா பற்றிய சிறு தகவல்.

மலேசியாவின் 3வது நிலை மாவட்டம் இது.  உலக கப்பல் துறையாகி, கப்பல்கள் இளைப்பாற, சந்தைப் பரப்பு என்று உதவுகிறது.

நாம் முதலில் கடல் சார்ந்த காட்சிச் சாலையாக போர்த்துக்கீசியக் கப்பல் மெலாக்காக் கரையில் தாழ்ந்த கப்பல் ஒன்றைப் பார்த்தோம்.

மலாக்கா கிழக்கின் பேரரசாக இருந்த சரித்திர காலப் பொன்னான நினைவாக இது உள்ளது. மக்கள் ஏறி உள்ளே சென்றும் பார்க்கிறார்கள்.

பின்னர் மலாக்கா ஆற்றில் (இது பழைய பட்டினத்தினூடாகக் குறுகலாக ஓடும் ஆறு). முன்பு சிகரெட் ஓப்பியெம் ஏற்றி இறக்க பிரிட்டிஷ்சார் திறந்த பாதையாம். இன்று பழைய நினைவு, சுற்றுலாத்துறையாக உள்ளது.

(இந்த வழியாக வந்தே படகில் ஏறுகிறோம்.)

நாமிதில் பயணித்தோம்.( Melaka river cruise   )பெரியவர்களுக்கு 20 றிங்ஙெட் அனுமதிக் கட்டணம்.முக்கால் மணி நேரத்திற்கும் மேலான நேரம். எடுக்கிறது. எங்கு வேண்டுமானாலும் இறங்கி அடுத்த படகில் ஏறி வரலாம். காலை 9.00 திலிருந்து மாலை 11.30 வரை சுற்றலாம்.

(பல படகுகள் நிற்கும் காட்சி.)

கையில் அனுமதிச் சீட்டு வைத்திருக்க வேண்டும். கிழக்கின் வெனிஸ் (venice of east    )என்று கூறப்படுகிறது.

இப்படகில் திருமணம் கூட நடப்பதுண்டாம்.

ஒவ்வொரு இடத்திலும் மேம்பாலத்திற்குப் பெயர் உண்டு.

மிகுதியை அடுத்த 12ல் பார்ப்போம்.

 

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
– 10-2012.

                                                                                                        

4.பயணம் மலேசியா 10.

 

4.பயணம் மலேசியா 10.

பத்து மலைக்கோவிலில் இருந்து சுமார் மாலை ஏழு மணியளவில் வீடு திரும்ப ஆயத்தமானோம்.

கடந்த முறை மலாக்கா செல்ல ஆசைப்பட்டும் அது நடக்க வில்லை. யோகூர் சென்றோம்.
இந்த முறை மலாக்கா செல்ல வாடகை வாகனத்திற்கு 400 றிங்ஙெட் எடுத்தனர். அடுத்த நாள் காலை 9 மணிக்கு பயணப்பட்டோம். வழியில் முதலில் ஒரு உல்லாசப் பயணத் தகவல் நிலையத்தில்

சில புத்தகங்கள் தகவல்கள் எடுத்துக் கொண்டு போனோம்.
நெடுஞ்சாலை வீதி மருங்கிலும் பாம் தோட்டங்கள்,

பார்வைக்கு தென்னைத் தோட்டங்கள், அல்லது பேரீச்சம் மரங்கள் போல  பசுமையாக இருந்தன. படத்தில் இதைக் காண்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் அழகுக்கு அழகான மரங்கள் நட்டு

பாதை, கடையோரங்கள் எல்லாம் அழகு படுத்தி வைக்கிறார்கள் மாதிரிக்கு இதைப் பாருங்கள். (பின்னும் வரும்) மருமகள் சாந்தி கூட ” அன்ரி இப்படி அழகு படுத்துவது இங்கு விசேடம் படம் எடுங்கள்!”  என்றார்.
முதலில் பகல் ஒன்று முப்பது போல அபஃமோசா றிசோட் (Afamosa  resort    ) எனும் பறவைகள் விலங்குகள் காப்பகம் அல்லது வன விலங்குப் பூங்காவிற்குச் சென்றோம்.

520 கெக்ரார் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது.  பல விதமான் உல்லாச பொழுது போக்குகள் உண்டு. ( கவ்போய் உலகம், ( cow boy world ) தண்ணீர் உலகம் ( water world   ) போன்று.
நிறைய உல்லாசப் பயணிகள் வாகனம் வாகனமாக வந்து இறங்கிப் போய் வந்த வண்ணமே இருந்தனர்.
குறிக்கப் பட்ட நேரத்திற்கு சாரதியும், உதவியாளரும் வர கம்பிகளால் திறந்த கூடாக

அடைத்த லொறியில் எங்களை (சுமார் 15 – 20 பேர்) ஏற்றிக் கொண்டு மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்கி வாகனம் ஓடியது. சுமத்திராப் புலி,

யானை, வரிக்குதிரை,

ஆபிரிக்கப் பறவைகள், பாம்பு, காண்டா மிருகம், பசு, ஆடு, மான்,

பன்றி, பிளமிங்கோ, மந்திகள்  என்று 1000 மிருகங்கள் 159 ஏக்கரில்  உள்ளன. 

வாகனம் ஓட ஓடப்  புகைப் படங்களும் எடுத்தோம். பாருங்கள்.
பகலுணவு அங்கேயே வாங்கும் வசதி இருந்தது. வாங்கிச் சாப்பிட்டோம். சாப்பிடும் போது ஆபிரிக்கப் பறவைகள் கிட்டக் கிட்ட வந்து பழகின.

இவை முடிய மலாக்கா சென்ரர் அதாவது நடுப்பகுதிக்கு வந்தோம்.
மலாக்கா ஆசியாவின் பழைய பட்டினம். சுமத்திரா,மலேசியாவின் இடையே ஒரு போத்தலின் கழுத்துப் போன்ற மலாக்கா ஜலசந்தி மிகவும் பெயர் பெற்ற துறைமுகம். பங்களா தேஷ் – யாவாக் கடலின் ஜலசந்தி இது.

1511ல் மலாக்கா சுல்தானை வென்று போர்த்துக்கீசிய துறைமுகமாக இருந்தது. த போட்ரா டி சன்ரியாகோ (The porte de Santiago) என்று அழைக்கப் பட்டது. மிளகு, ஏலம், கறுவா கராம்பு போன்று வாசனைச் திரவியச் சரக்குகளை ஏற்றி  இறக்க போர்த்துகீசம், கோவா, சீனா போன்ற இடங்களிற்கு கப்பல் வழிப்பாதைக்கு உதவியாக இருந்தது.

1641ல்டச்சுக்காரர் வசமானது. பின்னர் 19ம் நூற்றாண்டில் பிரிட்டசார் வசமானது.  பின்பு நெப்போலியன் பிரான்ஸ், பின்னர் சிங்கப்பூரைக் கண்ட சேர் ஸ்ரம்பேஃட் றபெஃல்ஸ் (Sir Stamford Raffels) மலாக்கா வந்தார். 1810ல் த சேவைவிங் கேட் ஒப்ஃ அபாஃமோசா போர்த்துக்கிஸ் போட் இன் மலாக்காவை( The surviving gate of the Afmosa Portuguese port in Malacca)    ) அழியாது மிச்சப் படுத்தினாராம்.

அங்கம் 11 ல் மிகுதியைப் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-9-2012.


 

4. பயணம் – மலேசியா. 9.

சிறீ சுப்பிரமணிய ஆலய பூசை.

 

4. பயணம் – மலேசியா. 9.

மினேறாவின் தாமரை உருவ நீர் பொங்கும் வழியால் சுமார் 4 மணியளவில் வெளியேறினோம்.

அடுத்து பத்து Baktu caves temple)  குகைக்கோவில் பார்க்க.

எமக்கு இது இரண்டாவது விஜயம். இங்கும் நாம் முதல் தடவை சென்றிருந்தோம்.  மகளவைக்குத் தான் இது புதிய இடம்.

இது கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சுண்ணக்கற்களால் உருவான குகை. 3 குகைகளில் – கோயில் இருக்கும் குகையே பெரியது.

சிங்கப்பூரில் பிறந்த கே.தம்புசாமிப்பிள்ளை  எனும் வியாபாரியே இதைக் கண்டு பிடித்தவராம். இன்று சிறீ சுப்பிரமணிய ஆலயமாக உள்ளது. 113 வருடப் பழைமை வாய்ந்த கோயில்.
272 படிகள் ஏறிப் போக வேண்டும்.

நிலமட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. நிதானமாக மூச்சு விட்டு நின்று நின்று இளைப்பாறி நாம் மேலே ஏறினோம்.
மலை ஏறி மேலே வந்ததும்


இதிலிருந்து குகைக்குப் போக கீழே படிக்கட்டுகள். இதிலேயே கடைகள் ஆரம்பிக்கிறது காண்கிறீர்கள்.

வெயிலில் நடந்து வந்து களைப்பானால் குகை உள்ளே போக,  சில்லென்று இருக்கும்.
படிக்கட்டுகள் இருந்தாலும் – கோயிலை அடைய – 160 மலைப் பாதைகள் உள்ளதாம்.
1890களில் கரடு முரடான மலைப்பாதையே இருந்ததாம். 1920ல் மரப் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டதாம்.

படிகள் தூரத்தில் தெரிகிறது.

பாதையெல்லாம் குரங்குகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அலைபவை. கையில் இருப்பதைக் கூடப் பறிப்பார்கள். உங்கள் அருச்சனைப் பொருட்களை சும்மா தட்டில் ஏந்திப் போனால் குரங்குகள் பறித்து விடும். ஒரு உறையில் போட்டு எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.

கோவில் முன்பு 42.7 மீட்டர் உயரமான முருகன் சிலை உள்ளது. இந்தியச் சிற்பிகளும், மலேசியாச் சிற்பிகளும் சேர்ந்து அமைத்த சிலையாம்
உலகிலேயே உள்ள உயரமான முருகன் சிலை இதுவாம். நாம் முன்பு போன போது இது இருக்கவில்லை. இதன் இடது புறத்திலுள்ள குகையில் இந்துக் கடவுள் உருவங்கள் வண்ணத்தில் உள்ளதாம். இதை மியூசியம் குகை என்பார்.
இன்னொரு குகை மின்சாரப் பாவனைக்கு பாவிக்கிறார்களாம்.

மிக அற்புதமான குகைக் காட்சி. அதிசயம் என்றும் கூறலாம்.

நிறையப் புறாக்கள் வருகிறது. எனக்கு அதனுள் நின்று படம் எடுப்பது பிடிக்கும்.


எனது பயணக்கதை வரிசைகளில் முதலாவது பயணம் – அங்கம் 18ல் படங்களுடன் விவரங்கள் உள்ளன. படங்கள் அளவில் சிறியதாகப் போட்டுள்ளேன். அதை அழுத்தினால், அதன் பெரிய உருவம் காணலாம். அதன் லிங்க் (இணைப்பு) தருகிறேன் விரும்பியவர்கள் வாசிக்கலாம்.

https://kovaikkavi.wordpress.com/2010/10/02/18/

தை மாசியில் 3 நாட்கள் தைப்பூசத் திருவிழா உலகப் பிரபலம்.

நானும்  இவரும் வயதானவர்களாகவும், மகளும் துணைவரும் இளையவர்களாகச் சென்றிருந்தோம். கோயில் குருக்கள் மகளவையைப் பார்த்து அதிகமாக விவரங்கள் கூறி (பூஜை புனஸ்காரம், அருச்சனை, மின்னஞ்சல் என்று) பலவாறாகப் போசினார். ஒரு வேளை மகளின் துணைவர்  ஆங்கிலேயர் என்பதாலோ தெரியவில்லை. வெளியே வந்து மகள் கூறினா ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் வயதானவர்களாக இருந்தும் உங்களை அலட்சியம் பண்ணி ஏன் இப்படி எம்மோடு கதைத்தாரோ, பணம் கறப்பதற்கோ தெரியாது என்று வியந்தனர்.  நாம் சிரிப்பதைத் தவிர வேறு என்ன பண்ண முடியும்.!

கூகிளில் படப் பகுதியில் குகை பெயரை அழுத்துங்கள், கண்கொள்ளாக் காட்சி காண்பீர்கள். இவைகள் உலகில் பார்க்க வேண்டியவை.

படியிலிருந்து  எதிரே தெரியும் மலேசியாவின் காட்சியை இறுதியாகக் காண்கிறீர்கள். மிகுதியை அங்கம் 10ல் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-9-2912.

4. பயணம் மலேசியா. 8

 

4. பயணம் மலேசியா.  8

 

இரட்டைக் கோபுர அடிப்பாகத்தில் அமைந்த சூர்யா பல் பொருள் அங்காடியில் (கீழே) சாப்பிட்ட பின்பு நாம் கோலாலம்பூர் மினேறா தொலைத் தொடர்புக் கோபுரம் பார்க்கக் கிளம்பினோம்.

இவைகள் கிட்டக் கிட்ட உள்ள இடங்கள் தான்.

கே. ஏல் கோபுரம் என்று கூறப்படும்  மினேறா (Menara) கோலாலம்பூர் கோபுரம். மலேசியா நாட்டின் அடையாளச் சின்னமும் தான்.

இது புக்கிட் நனாஸ் ( Bukit Nanas   ) பைன் அப்பிள் மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. 1991ல் 3 பிரிவுகளாகக் கட்ட ஆரம்பித்தனர். 421 மீட்டர் உயரம். (1,381 அடி).  1995ல் முழுவதும் கட்டி முடிக்கப் பட்டதாம். 1996ல் உத்தியோக பூர்வமாகத் திறக்கப் பட்டதாம்.

இந்த விவரங்கள் படத்துடன் ஒரு அறையில் விளக்கமாக எழுதப்பட்டு வாசிக்கும் வசதியுடன் உள்ளது. மகளும் துணைவரும் பார்க்கும் போது 2 படங்கள் எடுத்தேன், பாருங்கள். 

மண் கிளறிக் கிண்டியெடுத்ததிலிருந்குக் சகல வேலைகளும் விவரமாகத் தந்துள்ளனர் படங்களுடன்.

உலகிலேயே 7வது உயரத் தொலைத் தொடர்புப் பரிவர்த்தனை நிலையமாகக் கணக்கிடப் பட்டுள்ளது மினேறா கோலாலம்பூர் கோபுரம். உச்சியில் சுளரும் உணவகம் உள்ளது.

google photo.

அங்கு செல்ல உயர்த்தி (லிப்ட்) உள்ளது. 54 செக்கன்டில் மேலே போகலாமாம். கீழே வர 52 செக்கன்ட் எடுக்குமாம். அனுமதிக் கட்டணத்துடன் செல்ல முடியும்.

நேரப் பற்றாக் குறையால் நாம் மேலே ஏறவில்லை. மேலே ஏறினால் கவனிக்கும் (கிரகிக்கும்) தளம் (observation    ) இந்தப் படத்தில் உள்ளது தான்.

( இது கூகிள் படம்.)

இங்கு செல்பவர்கள் மேலேயும் ஏறிப் பார்க்க வேண்டும், தொலை நோக்குப் பிரமாண்டமான மலேசியக் காட்சியாகும். –  இது  இரவுக் காட்சியாக கூகிள் படம் இறுதிப் படமாகப் போடுகிறேன்.

இதன் படிக்கட்டுகளில் (2058 படிகளாம்) மேலேறிச் செல்வதற்கு வருடா வருடம் போட்டி நடத்துவார்களாம். இசுலாமிய ரம்ளான் மாதப் பிறைகள் காணும் (காணோக்கி) வானோக்கியாகவும் இக் கோபுரம் பயன் படுகிறதாம்.
இதன் சமீபமாகவே பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரமும் உள்ளது. விண்வெளியை அடையாளப் படுத்தும் சின்னமாக இது பெட்ரோனாஸ் கோபுரத்துடன் போட்டி போடுகிறதாம்.

இக்கோபுர தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான நினைவுப் பொருட் கடைகள்,

நிர்வாகக் கந்தோர், இஸ்லாம் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பழைய வீடுகள்,

கட்டிடங்கள் என்று மாதிரியாக காட்சிக்கு உள்ளது.

(ஓலை வீடு, தட்டி வீடுகளான பழைய பாணிகளைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.)

146 மீட்டர் நீளமான பாதசாரிகள் நடந்து பார்க்க உள்ள இடத்திலே இவைகள் உள்ளன.

அழகான தாமரை உருவில் நீர் பொங்குவது என்று உள்ளன.

அழுகு தான். படங்களைப் பாருங்கள்.

(முடிந்தளவு படங்கள் எடுத்தேன். கீழிருக்கும் கூகிள் படத்தில் பெட்ரோனாஸ் கோபுரமும், மினேறா கோபுரமும் ஒருங்கு சேரத் தெரிகிறது. இரவுக்காட்சி.))

மிகுதியை அங்கம் 9ல் காணுவோம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-9-2012.

 


 

4. பயணம் மலேசியா -7

google photo.

 

4. பயணம் மலேசியா – 7

கடந்த அங்கத்தில் சைபர் யெயா குளம் பற்றிக் கூறினேன், புத்ரா ஜெயாவில் புத்ரா ஜெயா குளம் என்றும் கூறப்படுவது.

(சகோதரி மகேஸ்வரி பெரியசாமி புத்ரா ஜெயா என்ற உச்சரிப்பைக் கூறியிருந்தார்)

உண்மையில் சைபர் ஜெயா எனும் ஒரு பட்டினமே அங்கு உள்ளது. (செபங், செலங்கூர் மாவட்டத்தில்). இது மலேசியாவின் சிலிக்கோன் பள்ளத் தாக்கு(silicon vally of Malaysia    ) என்று அழைக்கப் படுகிறது. 750 சதுர கிலோ மீட்டர்(300 சதுர மைல்) இதன் அளவு.  மல்டி மீடியா சுப்பர் கொறிடோர் (multy   media super corridor  –   MSC ) என்று அழைக்கப்படுகிறது. இனி இங்கு வருவோம்.

மலேசிய அரச மாளிகை பார்த்த பின்பு ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற தேவை வந்தது. சுற்றிச் சுற்றி கோலாலம்பூர் சிட்டி சென்ரருக்கு வந்தோம். சுற்றிச் சுற்றி வரும் போது

my photo.

ஒவ்வொரு வட்டமாக பெட்றோனாஸ் இரட்டைக் கோபுரத்தை நெருங்கினோம்.

my photo.

வானம் மிகத் தெளிவாகவும், எமது இலங்கைக் காலநிலை போல  வெயிலும் இருந்தது.

நெருங்க நெருங்க 3 கட்டத்தில் இரட்டைக் கோபுரத்தை வாகனத்தில் இருந்தபடி படம் எடுத்தேன்.

my photo.

பாருங்கள்.

கடந்த தடவை இரட்டைக் கோபுரத்திற்கு அருகில் உள்ள புல்வெளியில் நின்று பார்த்தோம். அது தான் காதல் காட்சிகள்  சினிமாவில் எடுக்கும் புல்வெளி.

இந்த முறை இரட்டைக் கோபுரத்தின் அடிப்பாகத்தில்.

our photo.

6 மாடிக்கட்டிடம். சூரியா கேஎல்சிசி பல் பொருள் அங்காடி உள்ளது.

இரட்டைக் கோபுர அடிப்பாகத்தில் நிற்கிறோம் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. நானும், மகளும் – துணைவரும் உள்ளே புகுந்ததும் சாலையில் (hall) படங்கள் எடுத்தோம்.

our photo.

our photo.

என் கணவர் மறுத்தார். உள்ளே கந்தோர் வாசலில் ” இங்கே திரும்புங்கோ!” என்று ஒரு படம் தட்டினேன்.

my photo.

இங்கு தான் அதிகாலை 3 மணிக்கே தூங்காமல் வந்திருந்து. நாளும் 150 நுழைவு அனுமதிச் சீட்டு (டிக்கட்ஸ்) இலவசமாக தருவினமாம், நாளும் 1700 பேர் உள் நுழைய அனுமதி உண்டாம் – இரட்டைக் கோபுரம் மேலே ஏறிப் பார்க்க.

ஆனால் 9 மணியளவில்தான் மேலே ஏற முடியுமாம்.

1998ல் சீசர் பெல்லி எனும் கட்டிடக் கலைஞனால் இது கட்டி முடிக்கப்பட்டதாம். துருப்பிடிக்காத உருக்கும் கண்ணாடியும் கொண்டு கட்டப்பட்டதாம்.

இதை நேரில் பார்க்க அழகாக, அருமையாக உள்ளது. ஏதோ இந்திர லோகம் போல தோன்றுகிறது கட்டிட தோற்றம்.

88 மாடிகள் கொண்டது இரட்டைக் கோபுரம். 42வது மாடியில் (170வது மீட்டரில்) இரு கோபுரத்தையும் இணைக்கும் ஆகாயப் பாலம் உள்ளது. (     )

இனி சூரியா சொப்பிங் சென்ரர் பற்றிப் பார்ப்போம். இதற்கு கூகிள் படங்களே தரப்போகிறேன்.

google photo.

முதலே கூறியது போல 6 மாடிக்கட்டிடம். 3 பெரிய அங்காடிகள் உள்ளதாம்.

google photo.

அருகருகே  மீன்களின் காட்சியகம், (எல்லாம் நடக்கும் தூரங்களிலேயே உள்ளதாம்).
3வது மாடியில் கலையரங்கு , சினிமா தியேட்டர் 12 திரைகளுடன், 2400 இருக்கைகளுடன் உள்ளதாம்.

goole photo.

கீழே வாகனத் தரிப்பிடமும் உள்ளதாம்.
அடித்தளம் 2வது தட்டில் உணவகம். இங்குதான் சென்று சாப்பிட்டோம்.
சாப்பிட்டு முடிய சுற்றிப் பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு விலகினோம்.

அங்கம் 8ல் மிகுதியைப் பார்ப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-8-2012.

                          

4. பயணம் – மலேசியா. 6

google photo
Seri  Wawasan cable suspension bridge.

4. பயணம் – மலேசியா. 6

கடந்த அங்கத்தில் இஸ்லாமிய கோவிலுக்கு முன் மகளவையும் நாங்களும் படம் எடுத்தது பார்த்தீர்கள். அதன் அடுத்த தோற்றம் சிறிது தூரமாக உள்ள கூகிள் படம் பாருங்கள்!

google photo

இதில் இந்தப் பெண்மணி நடக்கும் பாதை வழியாக இப்படியே கீழே நடந்து சென்று வாகனங்கள் நிறுத்திய இடத்தினூடாக

வலது புறப் படிகளில் இறங்கினால்  சைபர் யெயா (ciber jeya lake) குளம் வரும்.
இதில் படகுச் சவாரி செய்யலாம். ஆனால் பயணம் 45 நிமிடங்களுக்கு மேல் வருமாம். சாரதி எங்களிற்கு அங்கு செலவழிக்கத் தந்தது ஒரு மணி நேரமே. மதிலோடு ஓரமாகப் போய்ப் பார்த்து படங்களை எடுத்தோம்.


இங்கு 9 பாலங்கள் இருந்ததாக வாசித்தேன். இதில் குளத்தினூடாக சிறீ வாவாசன் கேபிள் சஸ்பென்சன் பாலம்(Seri Wawasan cable  suspensan bridge  )தூரத்தில் காணத் கூடியதாக இருந்தது.

பார்க்க மிக வித்தியாசமாக அழகாகவும் தெரிந்தது. (உண்மையில் இதெல்லாம் பாலத்தினூடாகச் சென்று கிட்டப் பார்த்து ரசிக்க வேண்டியது. ஒரு முழு நாளை அங்கு நாம் கழி(ளி)த்திருக்கலாம்)

இப்பாலம் – பயணிக்கும் ஒரு கப்பலின் தோற்றம் போலத் தெரியும்.

google.photo.

நடை பாதை, சைக்கிள் பாதையென 3 ஒழுங்கைகள் கொண்டதாம். 2003ல் கட்டி முடிக்கப்பட்டதாம். நீளம் 0.15 மைல்கள்.  கேபிள்களினால் உருவாக்கப்பட்டது. மிக மிக அழகு. நிச்சயம் நீங்கள் கூகிள் படத்தில் ஆங்கிலத்தில் பாலப் பெயரை அழுத்திப் பாருங்கள் அற்புதம்!அசந்து விடுவீர்கள்! மயில் போலவும் தோன்றும்! (நானே அசந்து விட்டேனே!) இதுவும் நிச்சயம் இந்திய சினிமாவில் காதல் காட்சியில் வந்த பாலம் தான்.

மறுபடியும் படிகளால் ஏறி

மேலே போய் புட்ற யெயா சதுக்கத்தில் நின்று (எதைப் படம் எடுப்பது எதை விடுவது என்று புரியாத தடுமாற்றம்.

அழகு! அற்புதம் தான்! அனைத்தும்)சுற்றிப் பார்த்து விட்டு அடுத்தாக

மலேசிய அரச மாளிகையை (இஸ்ரானா நிகர       )ஒரு பார்வை பார்க்கலாம் என்று புறப்பட்டோம். முதற் தடவை போன போது நாங்கள் பார்த்திட்டோம். மகளவை பார்க்கட்டும் என்று சேர்ந்து சென்றோம்.

உள்ளே போக முடியாது. வாயில் காவலர், தூரத்து மாளிகை, சுற்றி வர புல்வெளி பூங்கா நீரூற்று என்று பார்க்க முடியும். எக்கச்சக்க உல்லாசாப் பயணிகள் பெரிய பேருந்துகளில் வந்து இறங்கி படமெடுத்த படியுள்ளனர்.

 

நாமும் அதையே செய்தோம்.
காவலர் வெள்ளையும், பிரித்தானிய காவலரின் உடை மாதிரியும் அணிந்துள்ளனர். கடமை கால்நடையாகவும், குதிரையிலும்.

அரசமைப்பு இராசாக்களின் கீழ் உள்ளது. யோகூர், கெடா, கெலந்தீன், நிகிறி, பகாங் (இந்த மாநிலத்தில் எனது அப்பப்பா- முருகேசு.சுவாமிநாதர்  ஒரு ஆங்கிலப் பாடசாலையைத் தொடங்கி ஆசிரியராக இருந்து அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்து 1908ம் வருடம் இலங்கை திரும்பியவர்.இப்போது அது பெரிய ஆங்கிலப் பாடசாலையாக உள்ளது.) பெறாக், பேலிஸ், செலங்கூர், செம்பிலான், ரெறெங்கனு என்று 9 பிரிவாகவும்,

4 சுதந்திர நிர்வாகமாக

– மலாக்கா, பினாங், போர்ணியோவின் பகுதி சபா, சரவாக் என்றும், 

5 வருடத்திற்கொருமுறை பிரதம மந்திரியைத் தெரிவு செய்கிறார்கள். அரசனே பிரதானமாகவும் பிரதம மந்திரியுடன் சேர்ந்து மந்திரி சபையை அமைக்கிறார்.

மிகுதியை அங்கம் 7ல் பார்ப்போம்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-8-2012.

புட்ற யெயா சதுக்கம்

                                 

 
 

Previous Older Entries