4. பயணம் – மலேசியா 15. ( இறுதி அங்கம்)

malaysia- 1 393

4. பயணம் –  மலேசியா 15. ( இறுதி அங்கம்)

 

சாந்தியின் அம்மா ஒழுங்கு படுத்தினார் நாங்கள் லிட்டில் இந்தியா பார்ப்போம் என்று. நான் முன்பு குறிப்பட்டுள்ளேன் நிறைய செங்கல்லுச் சூளைகள் இருந்ததால் அது பிறிக் பீஃல்ட் என்றும் அதுவே லிட்டில் இந்தியா என்றும் வந்ததாக.

malaysia- 1 394

வேலை செய்ய இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைத் தருவித்து இருப்பிடமும் கொடுத்தனர்.  அப்படி ஆதியில் வந்தவர்களே  லிட்டில் இந்தியாவில்  இந்தியர்கள்  என  அழைக்கப் படுபவர்கள்.

அதே போலவே முன்னர் இலங்கைத் தமிழரும் வருவிக்கப்பட்டனர்.

இந்திய உணவு வண்ண நிற அலங்கார வளைவுகள் என நவீன லிட்டில் இந்தியா காட்சி தருகிறது. சும்மா சுற்றிப் பார்த்தோம். ஒரு துணிக் கடையுள் புகுந்தோம். தீபாவளிக்கு முன்னும் பின்னுமான நேரமது. டென்மார்க்கில் டெனிஸ் மயமாக இருப்பதால் தீபாவளி அலங்காரங்கள் தேவலோகம் போல இருந்தது.

படத்தில் இவைகளைக் காண்கிறீர்கள். அந்த அலங்கார வளைவு அழகாகவே இருந்தது.

மலேசியாவில் அடுத்த விசேடம் எங்கும் தெருவில் பூமரங்கள் செடிகளாக வைத்து அழகு படுத்தியுள்ளது விசேடம். உதாரணமாக இரு படங்கள் போட்டுள்ளேன்.

malaysia- 1 404

malaysia- 1 403

இரவுச் சாப்பாடும் அங்கேயே சாப்பிட்டோம்.

malaysia- 1 397

(லிட்டில் இந்தியா அலங்கார வளைவுகளுக்கிடையில் இருந்த பூந்தொட்டிகள்.

அடுத்து சிங்கள மகாவிகாரை பார்த்தோம்.

malaysia- 1 381

லிட்டில் இந்தியா சுற்று வட்டத்திலேயே இது இருக்கிறது.

This is google photo in day light.   buddhist_temple_vesak

கடந்த 50 வருடமாக இது நடக்கிறதாம். ஒரு போதி மரத்தடியில் 12 பிள்ளைகளுடன் தூண்டுதலற்ற தன்னிச்சையான ஆசிரியர்களுடன் ஆரம்பமானதாம். – this is also google photo

MahaVihara1-300x224

கோவில் அத்துடன் சிங்களப் பாடசாலையும் சேர்ந்து நடக்கிறதாம்.

malaysia- 1 383

தேரவாட புத்த மதம் இலங்கை போன்றது.
இன்று பாடசாலையில் 20 வகுப்புகளும், 1300 பிள்ளைகளுடன் நடக்கிறதாம்.

இத்துடன் எமது பயணவிவரிப்புகள் முடிவடைகிறது.
எனது படங்கள் இரவுக் காட்சியாக உள்ளது.

நாம் இங்கு சுற்ற மலாக்கா வந்ததுடன் மகளும் துணைவரும்
கமரூன் கை லாண்ட்ஸ்க்கு (Cameron highlands   ) சென்றுவிட்டனர். -தேயிலைத் தோட்டப் பகுதி.
257வது ஆக்கம் ” இன்னிசைச் சந்தம் பெருகட்டும்” படம் அங்கு எடுத்த படமே. இணைப்பு தருகிறேன்.  https://kovaikkavi.wordpress.com/2012/12/08/257-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%9f/
என்னோடு 15 அங்கமாகப் பயணித்த அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்.

இறையாசி இருந்தால் இன்னோரு பயணக் கதை தொடரலாம்.

 

நன்றி. வணக்கம்.

 

 

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-12-2012.

malaysia- 1 388

20 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. ramani
    டிசம்பர் 22, 2012 @ 22:54:30

    ஒவ்வொரு பதிவிலும் நாங்களும் உங்களுடன்
    பயணித்த அனுபவத்தைப் பெற்றோம்
    படங்களும் விளக்கங்களும் மிக மிக அருமை
    மிக்க நன்றி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 25, 2012 @ 13:28:12

      ”..பயணித்த அனுபவத்தைப் பெற்றோம்
      படங்களும் விளக்கங்களும் மிக மிக அருமை..”

      தங்கள் கருத்திடலிற்கு மிக மகிழ்வும் நன்றியும்.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  2. PKandaswamy
    டிசம்பர் 22, 2012 @ 23:01:19

    தொடர் அருமையாக இருந்தது. மிக்க நன்றி.

    மறுமொழி

  3. சேக்கனா M. நிஜாம்
    டிசம்பர் 23, 2012 @ 00:21:57

    பலமுறை நான் சென்றிருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு செல்லவில்லை

    நேரில் சென்றது போல் உள்ளது

    வாழ்த்துகள்…

    மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 23, 2012 @ 07:45:13

      மிக நன்றி சகோதரா.
      தங்கள் வரவும் கருத்திடலும் மகிழ்வு தந்தது.
      ஆண்டவனருள் நிறையட்டும்.

      மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 25, 2012 @ 13:29:25

      ”..பலமுறை நான் சென்றிருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களுக்கு செல்லவில்லை

      நேரில் சென்றது போல் உள்ளது..”

      தங்கள் கருத்திடலிற்கு மிக மகிழ்வும் நன்றியும்.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  4. நாடோடி
    டிசம்பர் 23, 2012 @ 01:46:33

    வேலை செய்ய இந்தியாவிலிருந்து தொழிலாளர்களைத் தருவித்து இருப்பிடமும் கொடுத்தனர். அப்படி ஆதியில் வந்தவர்களே அங்கு இந்தியர் – வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் ஆண்ட ‘கடாரம்’ கண்ட பூமி இது. அப்போதே கால் பதித்து இது சுவர்ணபூமி என விதை போட்டாவர்கள் தமிழர்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 23, 2012 @ 07:42:49

      ஆம சகோதரா நானும் சுவர்ணபூமி பெயர் அறிந்துள்ளேன். (தாய்லாந்தில் ஓரு விமான நிலையத்தின் பெயரும் சுவர்ணபூமி.)
      அது தாய்லாந்தைக் குறிப்பிட்டதாக அந்தப் பணயக்கட்டுரையில் குறிப்பிட்டதாக நினைவு.
      ஆயினும் மொத்தமாக தாய்லாந்துடன் சேர்ந்து நிலப்பரப்பு இதுவானதால் உங்கள் தகவலும் சரியாக இருக்கலாம்.
      ஆனால் லிட்டில் இந்தியா மக்கள் அதாவது அங்கு குடியேறியவர்கள் அப்படி வந்தவர்களாக இருக்கலாம் கூகிள் தகவலே இது.
      நன்றியும் மகிழ்வும் சகோதரா தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
      இறையாசி நிறையட்டும்.

      மறுமொழி

  5. sujatha anton
    டிசம்பர் 23, 2012 @ 07:12:33

    புகைப்படங்களுடன் மலேசியப்பயணம் அருமை. புகைப்படங்கள்
    நம்மையும் பயணத்தில் ஐக்கியமாக்கிவிட்டன. அதிலும் தொடர்ந்து
    கட்டுரையை இறுதிப்பயணத்தில் முடித்தவிதமும் அருமை. நன்றிகளுடன் வாழ்த்துக்கள்!!!!!! ”கவிதாயினி வேதா’

    மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 25, 2012 @ 13:30:30

      ”..கட்டுரையை இறுதிப்பயணத்தில் முடித்தவிதமும் அருமை..”

      தங்கள் கருத்திடலிற்கு மிக மகிழ்வும் நன்றியும்.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  6. ranjani135
    டிசம்பர் 23, 2012 @ 10:19:52

    உட்கார்ந்த இடத்திலேயே மலேசியாவைச் சுற்றிப் பார்த்துவிட்டேன், சகோதரி!
    படங்களும், விளக்கங்களும் மிகச் சிறப்பு!

    மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 25, 2012 @ 13:31:24

      ”..உட்கார்ந்த இடத்திலேயே மலேசியாவைச் சுற்றிப் பார்த்துவிட்டேன், சகோதரி!
      படங்களும், விளக்கங்களும் மிகச் சிறப்பு!..”

      தங்கள் கருத்திடலிற்கு மிக மகிழ்வும் நன்றியும்.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  7. Dr.M.K.Muruganandan
    டிசம்பர் 23, 2012 @ 13:39:59

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    நத்தார் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    மறுமொழி

  8. Maniraj
    டிசம்பர் 23, 2012 @ 15:11:48

    அருமையான பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    மறுமொழி

  9. Mageswari Periasamy
    டிசம்பர் 24, 2012 @ 06:32:13

    தங்களின் மலேசியப் பயணம் இனிதாகவும், சுகமானதாகவும் அமைந்ததை அறிந்து மகிழ்வடைந்தேன். தங்கள் அனுபவங்களை சுவை பட விவரித்திருந்தீர்கள். அருமை. மீண்டும் வாருங்கள். நாம் சந்திக்கலாம்.

    மறுமொழி

    • கோவை கவி
      டிசம்பர் 25, 2012 @ 13:34:00

      –..தங்கள் அனுபவங்களை சுவை பட விவரித்திருந்தீர்கள். அருமை. மீண்டும் வாருங்கள். ..”

      தங்கள் கருத்திடலிற்கு மிக மகிழ்வும் நன்றியும்.
      ஆண்டவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக