77. மனிதநேய வழி…

 

 

மனிதநேய வழி… 

வாழ்க்கைத் தொடர்வண்டிப் பயணத்தின்
நீள்கையில், இணைவு பிரிவின் இயல்போடு
நகை சிந்தும் வதனம், பகையற்ற மனம்
மிகை நம்பிக்கை, அன்புப் பொதியில் கவனம்.

சாதக எதிர்நோக்குப் பயணமிது
பாதகப் பள்ளங்களிங்கு எதிர்பாராதது.
மோதல்கள் மந்தைகளின் தரமானது.
வேதனைகள், மனிதமிங்கு நழுவுவது.

மனிதனாய்  வாழ முயன்றிடும் கொள்கையில்
மனிதனை மனிதன் மதிக்காத தொற்றுகள்,
மனிதநேய முரண்பாட்டுப் பற்றைகள்,
மனிதனாய் நிலைக்க நெருடும் முட்கற்றைகள்.

பண்பற்றவர் படியேறி உயர்வதும்
பண்புள்ளவர்  கீழ் நோக்கித் தாழ்வதும்
சுயநல வெள்ளச் சுழியின்  சுழலில்
மயக்கங்கள், அவலங்கள், மனிதனாய் வாழ.

புனிதமாய் வாழ எண்ணும் பெற்றியில்
இனிய காலடியில் இடறும் கற்களுள்
மனிதனாய் வாழ வழியினைக் காண வேண்டும்.
மனிதநேய வழியாயது சிறக்கவேண்டும்.

 

( பெற்றி – இயல்பு, தன்மை )
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-7-2007.

ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் 16-9-2007.
இலண்டன் தமிழ் வானொலியில் 16.9.2003.
இலண்டன் சுடரொழி சஞ்சிகையில் 16-9-2003
தமிழ் தோட்டம்  –  வெளியான கவிதை இது.

 

                    

 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கோவை கவி
    ஆக 05, 2015 @ 07:37:31

    You, Sankar Neethimanickam, Sivakami Sivakami, Raj Kumar and 11 others like this.

    Kannan Sadhasivam :- மனிதநேய வழியாயது சிறக்க வேண்டும்…
    4-8-2015

    Prema Rajaratnam:- மனிதனை மனிதன் மதிக்காத தொற்றுகள்,,,
    4-8-2015

    Vetha Langathilakam:- அன்பின் கண்ணன்.எஸ: பிரேமா மிக மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
    மனமார்ந்த நன்றி. 5-8-2015

    மறுமொழி

  2. கோவை கவி
    ஆக 05, 2015 @ 12:11:55

    மறையூர் மு.பொ.மணியின் பாக்கள் :-
    பண்பற்றவர் படியேறி உயர்வதும்
    பண்புள்ளவர் கீழ் நோக்கித் தாழ்வதும்
    சுயநல வெள்ளச் சுழியின் சுழலில்…மயக்கங்கள், அவலங்கள்,/சிறப்பான வரிகள்
    5-8-2015

    Vetha Langathilakam :-
    மிக மகிழ்ச்சி Many கருத்திற்கு.
    மனமார்ந்த நன்றி.
    8-2015

    இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி :-
    நல்ல சிந்தனை வைர வரிகள்

    மனிதனை மனிதன் ஏய்த்து வாழ்வது…மனித நேயம் அழிவிற்குக் காரணம்
    5-8-2015

    Vetha Langathilakam :-
    மிக மகிழ்ச்சி ஐயா கருத்திற்கு.
    மனமார்ந்த நன்றி..8/2015

    மறுமொழி

  3. கோவை கவி
    ஆக 30, 2015 @ 19:11:21

    Sujatha Anton :- புனிதமாய் வாழ எண்ணும் பெற்றியில்

    இனிய காலடியில் இடறும் கற்களுள்

    மனிதனாய் வாழ வழியினைக் காண வேண்டும்.

    மனிதநேய வழியாயது சிறக்கவேண்டும்
    நிறைவான கருத்துமிக்க தமிழ். வாசிக்கும்போது அருமை…
    வாழ்க தமிழ்.!!!!
    August 7 – 2015 at 8:17pm · Unlike · 1

    Vetha Langathilakam:- கருத்திற்கு.
    மனமார்ந்த நன்றி.. Sujatha.

    மறுமொழி

  4. கோவை கவி
    ஜன 19, 2016 @ 17:24:38

    கவிஞர் அஸ்மின் :- இப்பா சிறப்பா இருக்குதப்பா ஒவ்வொரு வார்த்தையும் அப்பப்பா….அழகப்பா மனசெங்கும் அடிக்குதப்பா….
    March 21, 2010 at 7:25am · Like

    Vetha Langathilakam :- Thank you so murch. Have a nice sunday!

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக