112. முதுமை.

 

 

 

முதுமை.     

 

முதுமை காலத்தின் தூது .
பொதுமைப் பருவம் உயிர்களுக்கு
உடற்பயிற்சியுடன் கொழுப்பற்ற
உணவு நலம் பேணுவோருக்கு
முதுமையும் இளமையான மகிமை.
சுமையற்ற பெருமை, அருமை.

முதுமையாம் கொடும் விலங்கிட்டு
கைதாக்குகிறது காலம் உயிர்களை.
பதுமையாகி சிலர் அசைவில்
புதுமையற்று வாழும் காலம்.
இது பூ தூவி வரவேற்கும்
தோதுடை மைதானம் அல்ல.

முதுமை மனச்சாட்சி பரிசுத்தமானது.
இளமை மிடுக்குத் தவறுகளை
முதுமையில் எண்ணி   மறுகுவார்.
அருமை நாயன்மார், சித்தர்
ஆழ்வார் பாடல்கள், உரைகளை
ஆழ்ந்து மீண்டும் மீண்டும் படிப்பார்.

அனுபவம்  கிரீடமிடும் நரையாக.
அன்பு பொதுவுடைமைச் சிந்தனையாக
ஒதுங்கும் சாதுவான, ஆரோக்கிய
முதுமை பேரறிவுப் பசுமை.
முதுமை வாழ்க்கையின் பத்மாசனம்
ஆதரவாய் அணையுங்கள் முதுமையை.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-10-2009.

முதுமை தலைப்பில் இதன் கருவையொட்டிய இன்னொரு கவிதை இணைப்பு இது.

https://kovaikkavi.wordpress.com/2011/03/26/238-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/

 

(ரி.ஆர்.ரி தமிழ்ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்கட்டது.)

(4-9-2012 செவ்வாயக் கிழமை மாலை ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் கவிதை பாடுவோம் நிகழ்வில் (19.00-20.00) மறுபடியும் இக்கவிதை என்னால் வாசிக்கப் பட்டது.) 

 

 

                                 

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  பிப் 17, 2016 @ 10:14:05

  Ratha Mariyaratnam, Kannadasan Subbiah, Kavithai Siragukal KMeena and 5 others like this.
  Comments

  Kannadasan Subbiah :- அருமை சகோதரி
  Kannadasan Subbiah’s photo.

  Vetha Langathilakam :- மிகுந்த மகிழ்வு நன்றி.

  மறுமொழி

 2. கோவை கவி
  பிப் 17, 2016 @ 10:15:34

  Bala Chander :- அருமை!

  மான் என்றான்;
  மயில் என்றான்..
  மயக்கினான் என்னை!

  மணக்கோலம்
  தந்தான்…
  மனைவியாக்கினான்!

  அவனால் சுகம்
  ஏதுமில்லை எனக்கு…
  பிள்ளைகளோ பத்து!

  விட்டுப் போவதில்லை…
  சத்தியமே எனக்கவன்
  செய்திருந்தான்!

  ஆனாலும்
  போய்விட்டானே
  என்னைவிட்டு!

  கிழவனை நானா
  விடுவேன்…
  கொம்பாகக் கையில்!
  7-11-2015

  Kannadasan Subbiah :- அருமை

  Vetha Langathilakam :- மிகுந்த மகிழ்வு நன்றி.
  7-11-2015

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 17, 2016 @ 10:16:52

  Pisupati Subramanyam :- கொடிது கொடிது , இளமையில் தனிமை ,
  அதனினும் கொடிது இளமையில் வறுமை
  கொடிது கொடிது, முதுமையில் நலமின்மை
  அதனினும் கொடிது முதுமையில் சோர்வு மனப் பான்மை ! …>>>…P.S.
  17 hrs 17-2-16

  Vetha Langathilakam :- மிகுந்த மகிழ்வு நன்றி.

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 17, 2016 @ 10:18:31

  Ratha Mariyaratnam :- அருமை சகோதரி
  Like · Reply · 17 hrs

  Vetha Langathilakam :- மிகுந்த மகிழ்வு நன்றி.

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 18, 2016 @ 13:23:44

  Maniyin Paakkal :- சிறப்பான வரிகள். சொல்லாடல் அருமை
  October 2, 2015 at 1:50pm

  Vetha Langathilakam :- உறவே மிகுந்த மகிழ்வுடன்
  மனமார்ந்த நன்றி கருத்திடலிற்கு.
  18-2-16

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 18, 2016 @ 13:24:37

  நக்கீரன் மகள் :- அருமையான வரிகள்
  October 2, 2015 at 2:56pm

  Vetha Langathilakam :- உறவே மிகுந்த மகிழ்வுடன்
  மனமார்ந்த நன்றி கருத்திடலிற்கு.
  3 minutes ago 18-2-16

  மறுமொழி

 7. கோவை கவி
  பிப் 18, 2016 @ 14:08:34

  Kanagaretnam Muralitharan :- அருமை
  18-2-16

  Vetha Langathilakam :- உறவே மிகுந்த மகிழ்வுடன்
  மனமார்ந்த நன்றி கருத்திடலிற்கு.
  18-2-16

  மறுமொழி

 8. கோவை கவி
  நவ் 07, 2017 @ 09:44:19

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: