140. முதலாளித்துவத்தின் சுரண்டல்.

முதலாளித்துவத்தின் சுரண்டல்.

இரைப்பைச் சுவரை அரிக்கும்
சுரப்பிகள் போன்று இதயமற்று
அட்டை, உண்ணியாய் மெலிந்தோரைத்
திட்டமிட்டு உறிஞ்சுவார்
மட்டமான முதலாளிகள்.
எட்டிக் காயாகும் முதலாளிகள்,
தொழிற் கண்ணியம் பேணாத
முதலாளிகள், சமூகப் புற்றுநோய்கள்.

உலகமெங்கும் பரந்து
சுலபமாய் வட்டமேசையிட்டுக்
கலகம் உருவாக்கும் காரணி
முதலாளித்துவத்தின் சுரண்டல்.
முதலாளியின்றேல் தொழிலாளியில்லை.
தொழிலாளியின்றேல் முதலாளியில்லை.
எழுதாத உதட்டு  வரியிது.
முழுதான உண்மையிது.

ஆற்றாமை  பொறாமை நன்கு
அரித்தெடுக்கும் தொழிலாளியும்
முதலாளி வளர்ச்சியைத் தாங்காது
பொங்குவான் மிகப் பொருமுவான்.
வண்டிற் சில்லு – கடையாணி
போன்றது தான் உலகில்
முதலாளிஇ தொழிலாளி உறவும்.
விலகாத இவர்கள் போராட்டமும்.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-12-2010.

http://www.vaarppu.com/padam_varikal.php?id=63

T 18-11-2014

                            

7 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கலாம் காதிர்
    டிசம்பர் 17, 2010 @ 19:34:09

    சிவப்புச் சிந்தனயில் சிவப்புச் சித்திரம்

    மறுமொழி

  2. vathiri .c. raveendran.
    மே 01, 2011 @ 12:21:40

    உங்கள் கவிதை பார்த்தேன்.ரசித்தேன்.முதலாளிஇருப்பதால்தான்தொழிலாளியும்
    உள்ளான் என்றகருத்து உண்மை.அருமையாக புரியும்படியாக சொல்லியுள்ளீர்கள்.
    இன்று மேதின ஊர்வலத்தில் நடுத்தர மக்கள் வந்துபாதையில்நின்று போகும் வழி
    தெரியாது திக்குமுக்காடினர்.இதிலும் முதலாளித்துவத்தின் வழிகாட்டல் கோணலா
    -கவே செல்கிறது.மேதினம் பாட்டாளிக்கே என்பதைநீங்களும் உறுதிப்படுத்தியுள்
    ளீர்கள்.

    மறுமொழி

  3. SUJATHA
    மே 01, 2011 @ 20:13:06

    அரித்தெடுக்கும் தொழிலாளியும்
    முதலாளி வளர்ச்சியைத் தாங்காது
    பொங்குவான் மிகப் பொருமுவான்.
    முதலாளித்துவம் இருக்கும் வரை கூலித்தொழிலாளி என்றுமே கை
    ஏந்தும் பிச்சைக்காரன் தான். அருமை ”வேத”

    மறுமொழி

  4. கோவை கவி
    ஜூன் 29, 2018 @ 09:19:36

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி