நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (14)

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (14)

(பயண அனுபவங்களுடன், சரித்திரத் தகவல்களும் அமைந்தது)

நீஸ் நகரம் பிரான்சின் 5வது பெரிய நகரம். உலக மக்களைக் காந்தமாக இழுக்கும் நகரம்.  தேசப்படத்தில் நீஸ் நகரத்தை இங்கு காணுகிறீர்கள். படத்தில் கிளிக்கினால் பெரிதாகக் காணமுடியும்.

CrossroadsClassicalMed2010Map          

சிறந்த காலநிலை, கறுப்பு ஒலிவ் பழங்கள் இதை (cailettes) என்பார்கள், நல்ல காய்கறி, பழங்கள், பூக்கள், அழகிய கடற்கரை, சிறந்த வாடி வீடுகள் என்று பெயர் போன நகரம். இது மிகப் பழமை வாய்ந்த நகரம். 

(ஒலிவ் மரங்கள், தோட்டக் காட்சி.)———–(பூக்கடை)

   

400 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே mont boron  மலையடி வாரத்து லாசாட் (lazart) எனும் குகையில் மலையாடு, கலைமான், எருதுகள், யானைகளுடன் கூட்டாக, மனிதன் சுண்ணக்கல் ஆயுதங்களுடன் வாழ்ந்துள்ளான். 

(மவுண்ட் பறோன் மலையும், அங்கிருந்து நீஸ் கடற்கரையும், இறுதிப் படத்தில் மவுண்ட் பறோன் கடற்கரைக் காட்சியும் காண்கிறீர்கள்.)

  

ரேறா அமற்ரா (Tera amata) எனும் அருங்காட்சியகம் இதை அடையாளப் படுத்துகிறது. கி.மு 4வது நூற்றாண்டில் மாசிலாவில்(masilla)வில் இருந்த கிரேக்கர் இந்தக் காட்டுமிராண்டி மக்களு (baberians) டன் மோதி, மறக்க முடியாத வெற்றியைப் பெற்று  இந்த இடத்திற்கு நிக்கயா (Nikaia) எனும் பெயரைச் சூட்டினார்கள். இது கிரேக்கருக்கு முக்கிய இடமாகவும், இங்கு சில நூறு வியாபாரிகளே மாசிலாவின் அதிகாரத்தின் கீழே வாழ்ந்தார்கள்.

கி.பி 14ல் ரோமப் பேரரசு அதிகாரத்திற்கு வந்த போது சிமைஸ் cimiez மலையில் சிமினெலம் (cemenelam) எனும் பட்டினத்தைக் கட்டினார்கள்.  சிமைஸ் இப்போதும் நீசின் கால் வாசிப் பகுதியாக உள்ளது. 1543ல் துருக்கி இப் பட்டினத்தைப் பிடிக்க முயற்சித்துத் தோற்றுப் போனது. இதே வருடம் இங்கிலாந்து நீசைத் தாக்கிப்பிடித்து, நீசைத் தேசிய துறைமுகமாக்கியது. வியாபாரத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்தது. இப்படியாக அனைவரும்  நிக்கயாவுக்காக அடிபட்டனர். இது பெரிய கதை. மிகக் குறுக்கியே இங்கு தருகிறேன்.                         

1860ல் சாடினிய தேச அரசனும், நெப்போலியன்-2ம் ஒரு உடன்படிக்கை செய்தார்கள்.                 
இதன்படி நிக்கயா பிரான்சுக்கு கையளிக்கப் பட்டது. அப்போது தான் நீஸ் எனும் இன்றைய பெயரும் இந் நகரத்திற்குச் சூட்டப்பட்டது.

நீஸ் சர்வதேச விமான நிலையம் பிரான்சில் 2வது பெரிய விமான நிலையமாக உள்ளது. 4இலட்சம் மக்கள் இங்கு வாழுகிறார்கள். தொழிற்துறை, விஞ்ஞானம், தொழில்நுட்ப ஆய்வுகளில் சிறந்த இடமாக நீஸ் உள்ளது. மொன்ற் பறோன் (mont Baron) மலையிலிருந்து  நீஸ் கடற்கரைக் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது.( see picture )  எந்தப் பக்கம் நின்று கடற்கரையைப் பார்த்தாலும் கொள்ளை அழகு தான். அழகிய நீஸ் கடற்கரைக் காட்சித் தபால் அட்டைப் படங்கள் இங்கிருந்து தான் எடுத்ததோ எனும் எண்ணம் உருவாகும்.  

                                              

 டலில் குளிக்க முடியாதவருக்கு  குழாய் நீரில் குளிக்க வசதியும் உண்டு. தங்குமிட வசதிகள், உயர்தர வாடிவீட்டு வசதிகள் மிக அருமையானவை.

ரோமப் பேரரசு கட்டிய செமனல பட்டினமும் பார்த்தோம். இதன் புதிய பெயர் சிமியே எனப்படும். இரவு நேரமும் பகல் போல உயிருடையது.  நீசை விட்டுப் பிரிய மனமில்லைத் தான் இரண்டு இரவுகள் நீசில் தங்கினோம். எமது திட்டத்தின் பிரகாரம் நாம் வெளிக்கிட வேண்டும்.                                  

 18-8-06 காலை 9.00 மணிக்கு நாம் தங்கிய Busby hotel ஐ விட்டுப் புறப்பட்டோம்.
எந்தப் பக்கம் நோக்கிப் புறப்பட்டோம்?…………….

——–மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.———-

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-1-2007.

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Rajarajeswari jaghamani
    பிப் 26, 2013 @ 05:59:56

    எந்தப் பக்கம் நின்று கடற்கரையைப் பார்த்தாலும் கொள்ளை அழகு தான்.

    அழகான பயணப்பதிவுக்கு பாராட்டுக்கள்..

    மறுமொழி

  2. கோவை கவி
    மார்ச் 10, 2013 @ 10:08:07

    மிக்க நன்றி சகோதரி தங்கள் வரவு, கருத்திடலிற்கு.
    மிக மகிழ்ந்தேன்.
    ஆண்டவன் அருள் நிறையட்டும்

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி