12. ஈ..அடிச்சான் கொப்பி……

 

 

..அடிச்சான் கொப்பி……

 

கண்களை மூடினால் உலகே இருண்டதாக எண்ணும் பூனையாக இன்றி சரண் யார் எது செய்தாலும் அதையே தானும் செய்து முடிக்கும் கெட்ட குணம் கொண்டவனாக இருக்கிறான். ஆனால் இவன் மிகத் திறமைசாலி. தன் சுய சிந்தனையில் மிக நல்ல சிறந்த செயல்களைச் செய்யலாம்.
 

இது சரணின் மகன் சாந்தனுக்குப் பிடிக்கவேயில்லை. மற்றவனைப் பார்த்து செய்வதை  ‘ஈ அடிச்சான் கொப்பி’  என்று கூறும் வழக்கம் உண்டு.

 

ஒருவன் மற்றவனைப் பார்த்து எழுதினானாம்.  இரவு, முதலில் எழுதியவன் எழுதும் போது பூச்சி ஒன்றும் அதில் விழுந்து இறந்து விட்டதாம் அப்படியே கொப்பியை மூடிவிட்டான். பூச்சியும் செத்து எழுத்தோடு ஒட்டுப்பட்டு விட்டது. பார்த்து எழுதியவன் அதே போல பூச்சியையும் தேடி தனது எழுத்தோடு ஒட்டி விட்டானாம். (ஈ அடிச்சான் கொப்பிக்கு வழங்கும் கதை இது).

 ‘என்னப்பா! நீங்கள்! ..அதே போல ஏன் செய்ய வேண்டும்?..’ என்று தடுத்தாலும் சரண் கேட்பதேயில்லை.

சரண் பொறாமைத் தினவெடுத்து, ஆற்றாமை, பொறாமைச் செங்கதிர்ப் பரப்பலில் வெந்து போகிறான். பிறர் செய்வதை அப்படியே தானும் செய்து மனம் ஆறுகிறான், தன் திறமையை உணராது.
இதை எண்ணி எண்ணி சாந்தன் வெட்கக் குமிழிகளில் தன்னை அமிழ்த்துகிறான்.

பெற்றவரின் நல்ல செயல்களைப் பிள்ளைகள் பின்பற்ற வேண்டும். இங்கு பெற்றவர் செயலால் குறுகிவிடுகிறான் சாந்தன்.

‘…அப்பா! உங்கள் திறமை சிறந்தது. உங்களால் முடியும். புதிது புதிதாக ஏதாவது செய்யுங்களப்பா!…கண்ணன் மாமா, சுந்தர் மாமா செய்வதையே நீங்களும் செய்ய வேண்டாமப்பா!..’ என்று ஓதியபடியுள்ளான் அப்பா மாறுவார் என்ற நம்பிக்கையில்…….

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-2-2011.     

In Anthimaalai web site:-    http://anthimaalai.blogspot.com/2011/12/blog-post_05.html 

 

                            

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. கோவை பாலா
    பிப் 20, 2011 @ 11:41:06

    பதிவுகள் ரசிக்கும்படி அருமையாக உள்ளன. தொடருங்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      பிப் 20, 2011 @ 16:20:46

      மிக்க நன்றி சகோதரரே! பின்னூட்டம் தந்ததற்கும் நன்றி நேரமிருக்கும் போது விஐயம் செய்யுங்கள். இவைகள் தானே எனக்கு உற்சாக பானம்.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக