வாழ்வியற் குறள்+தாழிசை. 12

 

 வாழ்வியற் குறட்டாழிசை. 12.

சோம்பலின் ஆட்சி.

 

தீயெனும் முயற்சியைச் சோம்பல் போர்த்தி
நீறு பூத்த நெருப்பாக்குகிறது.

மூதேவி ஆதரிப்பாள் சோம்பேறியின் இடத்தை.
சீதேவி ஆதரிப்பாள் முயற்சியாளனை.

தீம்புடை சோம்பலால் நண்பன் பகைவனாகிறான்.
பேடியாகி எதிரியிடம் தோல்வியுறுவான்.

மெத்த சோம்பலின் சொந்தக்காரன் உலகில்
மொத்த நோய்களின் குத்தகைக்காரன்.

முயற்சியாளரை உலகு ஏற்கும், சோம்பலுடைய
அயர்ச்சியாளரை ஒதுக்கி விடும்.

சோம்பேறி இருட்டில் சுருண்டு கிடப்பான்.
அம்பலத்திலும் ஆட மாட்டான்.

புவனத்தை மறக்கடிக்கும் நோய்களாம் கவலையீனம்,
கவனயீனத்தினாதி காரணம் சோம்பலே.

ளுமைக்குள் தன் சோம்பலைக் கொள்பவன்
ஆளும் தகுதி உடையவன்.

சோம்பலெனும் சாம்பல் துடைத்தவனிற்கு எங்கும்
தாம்பூல வரவேற்பு உண்டு.

ம்பல் பூத்ததான அழகுடை நந்தவனம்
சோம்பல் அழித்தோன் மனது.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-8-2011.

In Anthimaalai web site:-    http://anthimaalai.blogspot.com/2011/09/12.html

  

                         

 

 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. மகேந்திரன்
    ஆக 31, 2011 @ 05:12:13

    //ஆம்பல் பூத்ததான அழகுடை நந்தவனம்
    சோம்பல் அழித்தோன் மனது.//

    //தீம்புடை சோம்பலால் நண்பன் பகைவனாகிறான்.
    பேடியாகி எதிரியிடம் தோல்வியுறுவான்.//

    எனக்குப் பிடித்த குறள்கள்
    அருமைப் புனைவு சகோதரி.

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 31, 2011 @ 06:57:53

      ஹாய்! சகோதரா! மகேந்திரன்! முதல் கருத்துப் பூவாணம்….மகிழ்ச்சி! சந்தோசம்.!…பல கூறலாம்…நன்றி சகோதரா! உங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்திற்கும். வாழ்க! நலமுடன். இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  2. jaghamani
    ஆக 31, 2011 @ 05:27:18

    சோம்பலெனும் சாம்பல் துடைத்தவனிற்கு எங்கும்
    தாம்பூல வரவேற்பு உண்டு.//

    சோம்பலென்னும் சாம்பல் துடைத்து
    அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழவைக்கும்
    குறட்பாக்களின் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 31, 2011 @ 17:42:32

      சகோதரி ராஐராஜேஸ்வரி உங்கள் ஊக்கம் தரும் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது. வலைக்கு வருகை தந்தமைக்கும் மிக்க நன்றியம்மா. இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  3. vinothiny pathmanathan
    ஆக 31, 2011 @ 06:08:31

    சோம்பல் எனும் தலைப்பில் உருவான இந்த வாழ்வியல் குறளைப் படித்த பின் என் சோம்பல் கூட வெட்கப்பட்டு எங்கோ பறந்தோடி விட்டது .மிகவும் அருமை .பாராட்டுக்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 31, 2011 @ 17:45:52

      விநோதினி காலையில் உமது கருத்து பார்த்தேன். மாலையில் தான் பதிலிட முடிந்தது. மிக்க மகிழ்ச்சி உங்கள் சோம்பலை விரட்டியதற்கு. ஊக்கம் தரும் கருத்திடலிற்கும் மிகுந்த நன்றி விநோ.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  4. ramani
    ஆக 31, 2011 @ 08:26:28

    சோம்பல் குறித்த தங்கள் வாழ்வியல் குறள்
    அருமையிலும் அருமை
    நேர்மறை எண்ணங்களைச் சொல்லுகையில்
    எதிர்மறை எண்ணங்கள் மறைந்து போவதுபோல
    எதிர்மறை சோம்பல் குறித்த தங்கள் கவிதையைப்
    படித்ததும் வினோதினி பத்மனாபன் அவர்கள்
    குறிப்பிட்டிருப்பதைப்போல மனம் சுறுசுறுப்பு
    அடைந்தது நிஜம்
    தரமான பதிவு.தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 31, 2011 @ 17:52:04

      மனதை சுறுசுறுப்பாக்கியது நல்ல விளைவு சகோதரரே! என் எழுத்தின் பயனை அடைந்தேன் என்று மகிழ்ச்சி. உங்கள் அன்பான வருகைக்கும், ஊக்கம் தரும் கருத்திற்கும் மிக்க நன்றியைக் கூறுகிறேன். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  5. nathnavel
    ஆக 31, 2011 @ 08:27:39

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 31, 2011 @ 17:54:13

      நன்றி ஐயா! நன்றி! உங்கள் அன்பான வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக மிக மகிழ்ச்சியும் நன்றியும். இறைவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  6. polurdhayanithi
    ஆக 31, 2011 @ 09:38:49

    நல்ல ஆக்கம். புதிய நல்ல முயற்சி. படைப்புகள் இந்த குமுகத்திற்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என என்னுகிறவள் இடுகைக்கு பாராட்டுகள் நன்றி .

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 31, 2011 @ 17:59:27

      அருமை ஐயா! மனசார்ந்த கருத்து. மிக மகிழ்வடைந்தேன் ஐயா!. உங்கள் வருகையும் கருத்தும் புத்துணர்வு தருகிறது. மேலும் சிறப்பாகச் செய்யும் ஊக்கம் தருகிறது. நன்றி. நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  7. http://reverienreality.blogspot.com/
    ஆக 31, 2011 @ 15:49:01

    மகளுக்கு பரிசளித்த திருக்குறள் புத்தகத்தை மறுபடி படிக்கத்தொடங்கினேன் நேற்று…
    இனி ஒரு குறளாவது என் ஒவ்வொரு பதிவிலும் இணைக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டே காலையில் நான்….
    உங்கள் பதிவு…குறள் தாங்கி…வாழ்த்துக்கள் சகோதரி…

    மறுமொழி

    • கோவை கவி
      ஆக 31, 2011 @ 20:11:58

      அன்புச் சகோதரர் ரெவேரி மிக்க மகிழ்ச்சி எல்லோரையும் திருக்குறளை நினைக்க வைத்ததற்கு. இது போல உங்கள் அன்பான வருகைக்கும் ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உலகளந்தவன் ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  8. sambathkumar.B
    செப் 01, 2011 @ 15:52:32

    //மெத்த சோம்பலின் சொந்தக்காரன் உலகில்
    மொத்த நோய்களின் குத்தகைக்காரன்.//

    அருமையான வரிகள்

    அருமையான பகிர்வு..

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 01, 2011 @ 19:10:37

      அன்புச் சகோதரா! திரு சம்பத்குமார்! மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  9. ரமேஷ்
    செப் 02, 2011 @ 07:35:56

    சோம்பலை விட்டொழி , சுறுசுறுப்பை பெற்றிடு என்பதை
    சொல்லும் குரள் அருமை சகோதரி

    பகிர்வுக்கு நன்றி

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 02, 2011 @ 08:52:53

      அன்பின் சகோதரா ரமேஷ்! உமது அன்பான பின்னூட்டத்திற்கும், வரவிற்கும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். மிகுந்த நன்றியும் உரித்தாகுக ரமேஷ்! தெய்வத்தின் அருள் கிடைக்கட்டும்.

      மறுமொழி

  10. மஞ்சுபாஷிணி
    செப் 03, 2011 @ 05:44:00

    இரண்டே அடிகளில் அருமையான கருத்துகள் வேதாம்மா…

    வாழ்க்கைக்கு தேவையான சிந்தனை வரிகள்……

    அசத்தல் குறளுக்கு என் அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் வேதாம்மா….

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 04, 2011 @ 13:24:44

      அன்புடன் மஞ்சும்மா! உங்கள் கருத்து, வருகை அனைத்திற்கும். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  11. palanivels
    செப் 16, 2011 @ 06:41:59

    ///ஆம்பல் பூத்ததான அழகுடை நந்தவனம்
    சோம்பல் அழித்தோன் மனது./// எத்துணை கவித்துமான வரிகள். உண்மையை உவமையோட அளித்தவிதம் அருமை.. ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய அருமையான வரிகள்.. வாழ்த்துக்களும். பாராட்டுகளும்..!!

    மறுமொழி

jaghamani -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி