16. சிந்தனையில் ஒரு சிந்தனை…( வேதாவின் மொழிகள்.)

சிந்தனையில் ஒரு சிந்தனை…

(இது ஆறு வருடங்களின் முன் 16.10.2005ல் இலண்டன் தமிழ் வானொலியில் புதன் கிழமை இலக்கிய நேரத்தில் ஒலிபரப்பாகிய ஒரு ஆக்கம்)

ஆடம்பர சலவைக் கற்தரையில் நடப்பது போல இலேசாகவும், இதமாகவும், பாலும் பழமும் உண்பது போல இனிமையாகவும் வாழ்வு செல்லும் போது, திடீரென கண்ணாடி மீது கல் வீழ்வது போல, கரடு முரடுக் கற்களில் நடப்பது போல, நெஞ்சில் வலிக்கும் உணர்வு தரும் அனுபவமோ, அல்லது பாகற்காய்ச் சுவை போன்ற கசப்பு அனுபவங்கள் வாழ்வில் எதிர்பாராது வருகின்றது.
அவரவர் மனதிடத்திற்கு ஏற்ப நிலைமையை உள் வாங்கலும் அதன் பிரதிபலிப்புகளும் பலவாறாகத் நடக்கின்றன.
கிடைக்கின்ற கசப்பு அனுபவங்கள் காயங்களைத் தந்தாலும், சில நிகழ்வு வாழ்வில் பலரை திருந்தி நடக்க வழி வகுக்கிறது.  அல்லது சில நிகழ்வு ஒதுங்கிச் செல்லும் உணர்வைத் தருகிறது. பலவீன மனதாளரைச் சில நிகழ்வு திக்குமுக்காட வைத்து செயலிழக்கச் செய்கிறது
சிலர் எதுவுமே நடக்கவில்லை என்ற பாவனையில், அவைகளைச் சிறு தூசியாக எண்ணிக் கொண்டு, தத்துவ வரிகளை வீசிக் கொண்டு மனதிடமாக நிகழ்வை உள் வாங்குதலும் நடக்கிறது.
எனக்கு இந்த சிந்தனையை கீழே நான் தரும் சிந்தனையே தந்தது.

இராமகிருஷ பரமஹம்சர் ஒரு ஊரிலே உபதேசம் செய்த போது அந்த ஊர்ப் போக்கிரி ஒருவன் அவர் முன்னிலையில் வந்து அவரைத் தாறுமாறாகத் திட்டினானாம். பரமஹம்சர் கோபமடைவார் என்று சீடர்கள் எதிர்பார்த்த போது, அவர் சிரித்தபடி ஒரு கேள்வியை அந்தர் போக்கிரியிடம் விடுத்தார்.
”அப்பனே! உனக்கு ஒருவர் பரிசு கொடுக்கிறார், அதை நீ ஏற்க மறுக்கிறாய், அப்போது அந்தப் பரிசு யாருக்குச் சொந்தம்? ”
”இதில் என்ன சந்தேகம்? பரிசு கொடுக்க முன் வந்தவனுக்குத் தான் சொந்தம் ” என்றானாம் போக்கிரி.
பரமஹம்சரும் ”பேஷ்! ரெம்ப சரியாகச் சொன்னாய். இப்போது நீ எனக்குக் கொடுத்த திட்டுகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. ஆதலால் இது யாருக்குப் போய்ச் சேர வேண்டும்  என்பதை நான் சொல்லவா வேண்டும்?” என்று கேட்டாராம்.
போக்கிரி பதில் பேசாது தலை குனிந்து கொண்டானாம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-9-2011.

23 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. தமிழ்த்தோட்டம்
    செப் 28, 2011 @ 07:00:23

    http://www.tamilthottam.in/t20379-topic நமது தோட்டத்திலும் பூத்துள்ளது

    மறுமொழி

  2. முனைவர் இரா.குணசீலன்
    செப் 28, 2011 @ 07:09:35

    அவரவர் மனதிடத்திற்கு ஏற்ப நிலைமையை உள் வாங்கலும் அதன் பிரதிபலிப்புகளும் பலவாறாகத் நடக்கின்றன.

    அருமையான பகிர்வு..

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 28, 2011 @ 20:18:42

      உங்கள் இனிய வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும்மிக மகிழ்வும், நன்றியும் உரித்தாகுக. ஆணடவன் அருள் நிறையட்டும்.

      மறுமொழி

  3. வசந்தா சந்திரன்.
    செப் 28, 2011 @ 07:18:52

    இராமகிருஷ பரமஹம்சர் ஒரு ஊரிலே உபதேசம் செய்த போது அந்த ஊர்ப் போக்கிரி ஒருவன் அவர் முன்னிலையில் வந்து அவரைத் தாறுமாறாகத் திட்டினானாம். பரமஹம்சர் கோபமடைவார் என்று சீடர்கள் எதிர்பார்த்த போது, அவர் சிரித்தபடி ஒரு கேள்வியை அந்தர் போக்கிரியிடம் விடுத்தார்.
    ”அப்பனே! உனக்கு ஒருவர் பரிசு கொடுக்கிறார், அதை நீ ஏற்க மறுக்கிறாய், அப்போது அந்தப் பரிசு யாருக்குச் சொந்தம்? ”
    ”இதில் என்ன சந்தேகம்? பரிசு கொடுக்க முன் வந்தவனுக்குத் தான் சொந்தம் ” என்றானாம் போக்கிரி.
    பரமஹம்சரும் ”பேஷ்! ரெம்ப சரியாகச் சொன்னாய். இப்போது நீ எனக்குக் கொடுத்த திட்டுகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. ஆதலால் இது யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதை நான் சொல்லவா வேண்டும்?” என்று கேட்டாராம்.
    போக்கிரி பதில் பேசாது தலை குனிந்து கொண்டானாம்.

    தன் திட்டு
    தனக்குத்தானே,அருமை இந்த சிந்தனையை படித்தறிந்தாதல் திருந்துவார்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 28, 2011 @ 20:22:00

      ”…தன் திட்டு
      தனக்குத்தானே,அருமை இந்த சிந்தனையை படித்தறிந்தாதல் திருந்துவார்கள்…”
      நல்ல வரிகள் சகோதரி. உங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக நன்றியும் மகிழ்ச்சியும். எல்லாம் வல்ல இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  4. கவி அழகன் --
    செப் 28, 2011 @ 09:27:56

    அருமையான பிரயோசனமான பதிவு

    மறுமொழி

  5. சத்ரியன்
    செப் 28, 2011 @ 11:26:22

    சிந்தனைச் சிதறல் அருமை.

    மறுமொழி

  6. ramani
    செப் 28, 2011 @ 11:37:19

    எத்தனை காலம் ஆனால் தங்கம் தங்கம்தான்
    2005 இல் வாசிக்கப் பட்ட பதிவாயினும்
    எக்காலத்திற்கும் ஏற்றதாக உள்ளது
    உங்கள் பதிவு
    அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 28, 2011 @ 20:28:29

      அடியில் இருந்த கோப்பு வெளி வந்தது. வாசித்தால் பொருத்தமாக இருந்தது. எழுதி ஏற்றினேன். உங்கள் இனிய வருகைக்கும், கருத்திற்கும் மிக நன்றியும் மகிழ்ச்சியும். தெய்வ அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  7. SUJATHA
    செப் 28, 2011 @ 12:19:38

    வாழ்க்கையின் அனுபவ சிந்தனைகளை அழகாக எடுத்துரைத்து
    ராமகிருஷ்ணரின் கதை விளக்கமும் படிப்பனவாக எடுத்துக்காட்டியமை அருமை….கற்றுக்கொள்வோம். பாராட்டுக்கள் ”வேதா”

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 28, 2011 @ 20:30:43

      அன்பின் சுஜாதா! மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் உமது இனிய வரவிற்கும், பின்னூட்டத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  8. ரெவெரி
    செப் 28, 2011 @ 15:43:22

    அனுபவ சிந்தனை…அருமையான பதிவு…வாழ்த்துக்கள்

    மறுமொழி

  9. nathnaveln
    செப் 28, 2011 @ 16:28:56

    அருமை அம்மா.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  10. பிரபுவின்
    செப் 29, 2011 @ 03:51:42

    நல்ல சிந்தனை.இராமகிருஷ பரமஹம்சர் அவர்களின் உபதேசம் நன்றாக அமைந்தது.வாழ்த்துக்கள் சகோதரி.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 29, 2011 @ 06:53:48

      ஓ!…பிரபு!…நீண்ட நாட்களின் பின்…!!!! நீர் வருகிறீரே அதற்கு நன்றி. மிக மகிழ்ச்சியும் கூட. கருத்திற்கும் நன்றி. என் ஆக்கங்களுக்குப் பிள்ளையார் சுழியாகக் கருத்துகள் தந்த முதல் சகோதரன் நீர் அல்லாவா? நலமாக வாழவேண்டும். இறை அருள் கிட்டட்டும் பிரபு.

      மறுமொழி

  11. Rajarajeswari
    செப் 30, 2011 @ 04:36:04

    பரமஹம்சரும் ”பேஷ்! ரெம்ப சரியாகச் சொன்னாய். இப்போது நீ எனக்குக் கொடுத்த திட்டுகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. ஆதலால் இது யாருக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதை நான் சொல்லவா வேண்டும்?” என்று கேட்டாராம்.
    போக்கிரி பதில் பேசாது தலை குனிந்து கொண்டானாம்.

    அருமையான சிந்தனை பகிர்வுக்கும் துளியின் சிறப்பான படத்த்ற்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      செப் 30, 2011 @ 06:48:57

      மிக்க நன்றி சகோதரி. உங்கள் இனிய பிரசன்னத்திற்கும், பின்னூட்டத்திற்கும் அன்பான நன்றியும், மகிழ்வையும் கூறுகிறேன். இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  12. மகேந்திரன்
    செப் 30, 2011 @ 07:21:39

    இன் சொற்களால் சாட வந்ததையே
    சாடிவிடும் உளவியல் பதிவு.
    பதிவு நன்று.

    மறுமொழி

  13. கோவை கவி
    செப் 30, 2011 @ 15:42:43

    மிக்க நன்றி மகேந்திரன். உமது இனிய வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க மகிழ்ச்சி.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

    மறுமொழி

வசந்தா சந்திரன். -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி