28. வெற்றி தொற்றும் வேளை…(பாமாலிகை -காதல்)

 

வெற்றி தொற்றும் வேளை…

 

வெற்றி தொற்றும் வேளை
பற்றிப் படர்ந்து நடப்போம்.
காற்றைத் தோழியாய் ஏற்று
ஆற்றலைக் கேட்டுப் பெறுவோம்.

வாழ்வின் அர்த்தம் புரியாது
வாழ்ந்த காலம் போதும்.
வாழ்வை முழுதாய் அள்ளுவோம்.
வா வா அன்பே வா!

வாலிபக் காற்று வசந்தம்.
வாலிபம் முடியுமுன்னே
வாழ்வை முழுதாய் எடுப்போம்.
வளமாய் வாழ்வோம் வா!

எங்கோ நீயும் நானும்
இங்கே இப்படி இணைந்தோம்.
எங்கள் மழலை தரணியில்
உங்கு உண்ணப் போகிறது.

சந்ததி வளரும் தருணம்
பந்தம் இறுகும் பூரணம்.
சிந்திடும் உன்னழகு வதனம்
முந்தி என்னை இழுக்கிறதே!

மகிழ்ச்சியை மாலை கட்டி
மகிழ்ந்து அணிந்து பயணிப்போம்.
சோகத்தை மூட்டை கட்டி
சோடியாய்க் கடலில் எறிவோம்.

அயர்ச்சி என்ற சொல்லை
அறுதியாய் மறப்போம் துறப்போம்.
முயற்சி ஒன்றே துணையாய்
முன்னேறி உயரச் செல்வோம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-10-2011.

                             

32 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. பழனிவேல்
    அக் 22, 2011 @ 07:45:13

    “வாழ்வின் அர்த்தம் புரியாது
    வாழ்ந்த காலம் போதும்.”

    “சோகத்தை மூட்டை கட்டி
    சோடியாய்க் கடலில் எறிவோம்.”

    என்ற வரிகள் மிகவும் அருமை…

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 22, 2011 @ 12:52:45

      சகோதரர் பழனிவேல்..இது எனது கற்பனை கலந்த நிசம். உங்கள் ரசனை, வருகை, கருத்திடல் அனைத்தாலும் மகிழ்வடைந்தேன். மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  2. முனைவென்றி நா சுரேஷ்குமார்
    அக் 22, 2011 @ 08:04:47

    இது போன்ற பாடத் தோன்றும் கவிதையை இதுவரை தாங்கள் எங்கே ஒளித்து வைத்தீர்கள்? அருமை.

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 22, 2011 @ 12:56:37

      ஏதோ வந்தது எழுதினேன். ஒளிப்பது, இருப்பது ஏதுமில்லை. அவ்வப்போது வருவது எழுதுகோலால் குதிக்கும். மிக மகிழ்ச்சியும், நன்றியும் உங்கள் இனிய வருகைக்கும் ரசனைக்கும், பின்னூட்டத்திற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  3. umah
    அக் 22, 2011 @ 12:39:00

    அருமை !

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 22, 2011 @ 12:59:58

      உமா! உங்களையும் யாரெனப் புரியவில்லை. முகநூலில் முடிந்தால் இணையுங்களேன்! அருகிலேயே முக நூல் பட்ஜ் உள்ளது. உங்கள் கருத்து, ரசனை, வருகைக்கு மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும். இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  4. ramesh
    அக் 22, 2011 @ 13:17:15

    புரியாது வாழ்வதை விட புரிந்து முன்னேறி செல் எனும் அர்த்தம் தரும் அழகிய கவிதை ,அருமை சகோ.

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 22, 2011 @ 15:24:29

      அன்பான ரமேஷ் உமது அக்கறையான வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவனின் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  5. ramani
    அக் 22, 2011 @ 13:35:33

    அயர்ச்சி என்ற சொல்லை
    அறுதியாய் மறப்போம் துறப்போம்.
    முயற்சி ஒன்றே துணையாய்
    முன்னேறி உயரச் செல்வோம்.//

    அருமையான வரிகள்
    வார்த்தைகள் மிக இயல்பாக விழுந்து
    கவிதைக்கு அழகு சேர்க்கின்றன
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 22, 2011 @ 15:33:36

      அன்பின் சகோதரர் ரமணி, மிக மகழ்வடைந்தேன் உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும், சப்ஸ்கிறைப் செய்துள்ளீர்கள், அதற்கும் நன்றியைக் கூறுகிறேன். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  6. வசந்தா சந்திரன்.
    அக் 22, 2011 @ 13:42:14

    வாழ்வின் அர்த்தம் புரியாது
    வாழ்ந்த காலம் போதும்.
    வாழ்வை முழுதாய் அள்ளுவோம்.
    வா வா அன்பே வா!

    உண்மைதானே ,

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 22, 2011 @ 15:26:19

      மிக்க நன்றி வசந்தா. உமது அன்பான வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும். இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  7. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
    அக் 22, 2011 @ 16:04:51

    //அயர்ச்சி என்ற சொல்லை
    அறுதியாய் மறப்போம் துறப்போம்.
    முயற்சி ஒன்றே துணையாய்
    முன்னேறி உயரச் செல்வோம்…………
    பற்றிப் படர்ந்து நடப்போம்.வாருங்கள் ! வாருங்கள் !!

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 22, 2011 @ 18:45:44

      ஆமாம் பற்றிப் படர்ந்து நடப்போம். சகோதரா. உங்கள இனிய வருகைக்கும், கருத்திற்கும் மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும். தெய்வத்தின் ஆசி கிடைக்கட்டும்.

      மறுமொழி

  8. ஒப்பிலான் மு.பாலு
    அக் 22, 2011 @ 17:47:10

    வாழ்க்கையை ..வாழும் போது மகிழ்வாக ..என்றும் வாழ வேண்டும் என்பதை உங்கள் கவிதை அழகாக காட்டுகிறது ..அவசர காலமான இப்போதைய கால கட்டத்தில் ..சந்தோசம் என்பது தூரமாக சென்று கொண்டே இருப்பது போல ஒரு பிரமை ஏற்படத்தான் செய்கிறது ..வாழ்த்துக்கள் சகோதரி ..!

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 22, 2011 @ 18:49:21

      சச்தோசத்தைப்பற்றி மக்கள கவலைப் படுவதாகத் தெரியவில்லை. பணம், வேறும் சுயநலங்கள் தானே பெரிதாகத் தெரிகிறது பலருக்கு. முயற்சிப்போம், மகிழ்வாக வாழ. உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும் சகோதரா.

      மறுமொழி

  9. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
    அக் 22, 2011 @ 20:13:18

    “மகிழ்ச்சியை மாலை கட்டி
    மகிழ்ந்து அணிந்து பயணிப்போம்.
    சோகத்தை மூட்டை கட்டி
    சோடியாய்க் கடலில் எறிவோம்.””………………….ரொம்ப அழகான கவிதை ..!!

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 23, 2011 @ 07:43:59

      ராஜீவ்! மிக நீண்ட இடைவெளியின் பின் வந்துள்ளீர்கள். மிகுந்த மகிழ்வு கொண்டேன் இனிய கருத்திற்கும் சேர்த்து மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன். சப்ஸ்கிறைப் செய்துள்ளீர்கள். அதற்கும் நன்றியைக் கூறுகிறேன். இறை அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  10. மகேந்திரன்
    அக் 23, 2011 @ 01:59:41

    புணர்ச்சி விதிகளுடன்
    ஆகமம் வாசித்தது போல
    இருந்தது சகோதரி.
    அருமை.

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 23, 2011 @ 07:47:08

      அன்பான மகேந்திரன் உங்கள் வரிகள், வருகையால் மனம் மகிழ்வாக உள்ளது. மிகுந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

      மறுமொழி

  11. jaghamani
    அக் 23, 2011 @ 04:57:21

    அயர்ச்சி என்ற சொல்லை
    அறுதியாய் மறப்போம் துறப்போம்.
    முயற்சி ஒன்றே துணையாய்
    முன்னேறி உயரச் செல்வோம்.

    வெற்றி தொற்றும் அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்>

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 23, 2011 @ 07:52:41

      அன்பின் சகோதரி! வெற்றி தொற்றும் வேளைக்கு வந்து கருத்திட்டீர்கள். மிகுந்த மகிழ்வடைந்தேன் சகோதரி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

      மறுமொழி

  12. kathirmuruga
    அக் 23, 2011 @ 06:11:22

    வாழ்வில் நம்பிக்கையை வளர்க்கும் அருமையான வரிகள்.
    “..அயர்ச்சி என்ற சொல்லை
    அறுதியாய் மறப்போம் துறப்போம்.
    முயற்சி ஒன்றே துணையாய்
    முன்னேறி உயரச் செல்வோம்..”

    மறுமொழி

    • கோவை கவி
      அக் 23, 2011 @ 07:55:57

      இந்த நம்பிக்கை வரிகள் என் வாழ்வில் துணை செய்தது. இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் இது துணை செய்ய வேண்டும். உங்கள் இனிய வரவிற்கும், நல்ல வரிகளுக்கும் மிக மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

      மறுமொழி

  13. Kowsy
    அக் 23, 2011 @ 07:55:49

    பாடல் பாட ஏற்ற வரிகள். அழகாக வந்துவிழும் சொற்கள் அத்தனையும் நிறைந்து நிற்கும் கவிதை வரிகள் வாழ்த்துகள்

    மறுமொழி

  14. கவி அழகன் --
    அக் 23, 2011 @ 09:08:39

    வாழ்க்கை கவிதை புரிகிறது

    மறுமொழி

  15. Ambaladiyal
    அக் 24, 2011 @ 18:14:53

    என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ……..

    மறுமொழி

  16. yashothakanth
    ஜன 30, 2012 @ 19:03:15

    அருமை சகோதரியே ..ஒவ்வொரு காதல் கவிதையும் தேனாய் இனிக்கிறது ..வாழ்த்துக்கள் ..அன்புடன் யசோதா காந்த்

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி